ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label சப்தரிஷி மண்டலம். Show all posts
Showing posts with label சப்தரிஷி மண்டலம். Show all posts

June 5, 2026

“சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம்…” என்ற இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும்

“சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம்…” என்ற இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும்


நம் உடலான இந்தப் பிரபஞ்சத்தை உயிர் இயக்குகிறது. இதற்குள் எத்தனையோ கோடி அணுக்கள் இருக்கிறது.
1.அதிலே தீமை என்ற உணர்வு வளராது
2.அதே தீமையான உணர்வுகளை ஊக்கச் சக்தியாகக் கொடுக்கும் இரையாக…” நாம் மாற்றிக் கொள்தல் வேண்டும்.
 
தீமை என்ற உணர்வுகளைக் குறைத்து நல்ல அணுக்களைக் கூட்டும் போது தீமையான அணுக்கள் குறைகிறது. ஆகவே நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வைப் பெருக்க வேண்டும்.
 
இந்த உடலை விட்டு எந்த நிமிடம் நாம் போவோம் என்று சொல்லவே முடியாது. ஆகவே அந்த அருளைப் பற்றுடன் பற்றினால் இந்த வாழ்க்கையில் வரும் மற்றது அனைத்தும் பற்றற்றதாக மாறும்.
 
இதற்கு முன்னாடி நமக்குத் தெரியாது. தெரிந்து கொண்ட பின்
1.நாம் இந்த உடலை விட்டுச் செல்லும் போது நம் உணர்வுக்கே தெரியும்.
2.நாம் சப்தரிஷி மண்டலம் அடையப் போகிறோம் என்று…!
3.இந்த உணர்வுகள் தன்னாலேயே வரும் எங்கே செல்கிறோம்…” என்று நிச்சயம் தெரியும்.
 
காட்டிற்குள் சென்று எத்தனையோ அனுபவங்களைப் பெற்று அறிந்து கொண்டு வந்தேன். நீங்கள் எல்லோரும் அந்த உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று வீடு தேடி வந்து சொல்கின்றேன்.
 
உங்களுடன் ஒன்றித்தான் நானும் வாழ்கின்றேன். நான் பெரியவன் என்று சொல்லவில்லை. யார் பெரியவர் யார் சிறியவர் என்று சொல்ல வரவில்லை
 
உயர்ந்த ஞானத்தை வளர்த்துக் கொண்டால் அதுவே பேரருள் என்ற அழியாச் சொத்தாக வளர்க்க முடியும் அந்தச் சக்தியை அனைவரும் பெற வேண்டும்.
 
ஆகவே
1.ஒருவருக்கொருவர் அன்பை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
2.அரவணைக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
3.இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்
4.வரும் தீமைகளை அகற்றும் வலிமை நாம் பெற வேண்டும்
5.அதையெல்லாம் வளர்த்துக் காட்டி நாம் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.
 
நம் குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றார். அவருடைய அருளைப் பெற்று அந்தச் சக்திகளை எளிதில் பெறலாம். இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணலாம் ஒளியான நிலையை அடையலாம். அந்த நிலை பெறுவதற்குத் தான் உபதேசிக்கின்றோம்.
 
ஆகவே அனைவரும் பேரன்பைப் பெருகி எல்லோருடைய மனதும் ஒன்றாகி எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…!” என்ற உணர்வை வளர்ப்போம்.
 
1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்
2.உலக மக்களைக் காக்கும் உணர்வுகளை நமக்குள் விளைய வைப்போம்.
3.நம்மையும் காப்போம் உலக மக்களையும் காப்போம்.
 
விஞ்ஞான அறிவினால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையை நாம் பெறுவோம்.
1.உலக மக்கள் அனைவருக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்தியை… அந்தப் பாதுகாக்கும் நிலையைச் செயல்படுத்துவோம்.

March 10, 2026

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்


இன்று மதப்போர்…” என்ற நிலைகள் உலகம் முழுவதற்குமே இயக்கிக் கொண்டுள்ளது.
 
ஒரு நாடு தன்னிடம் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் “லேசர் கதிரியக்கத்தால் அடுத்த நாட்டின் ஆழத்தை அறிந்து கொண்டு அவனைத் தொலைக்க முடியும் என்று எண்ணுகின்றான். ஆனால் அந்த நாடோ
1.நீ கண்டுபிடித்து வைத்திருக்கும் நிலையைக்  காட்டிலும் வலிமையானது எண்னிடம் உண்டு..
2.நான் சாகும் போது நீயும் சாவாய் என்ற நிலைகள் கொண்டு இறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை.
3.தன் கௌரவத்தைக் காக்க நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன் உன்னை மடியச் செய்வேன்
4.உன்னை மடியச் செய்த பின்பு தான் நான் இறப்பேன் என்ற மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும்ரவி
5.மனிதன் என்ற சிந்தனை இழந்து மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த மார்க்கங்களைத் தடைப்படுத்தி
6.மனிதனுக்கு மனிதன் கொன்று அதை ரசிக்கும் உணர்வே இன்று வந்துவிட்டது.
 
இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
 
ஆனால் நான் இதைப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இது எனக்குத் தெரியவே தெரியாது…!
 
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அந்த மகரிஷிகள் கண்டறிந்த மெய் உணர்வுகள் மக்கள் அனைவருக்கும் அது எட்ட வேண்டும் என்று சொன்னார்.
 
உலகில் ஏற்படும் அந்தத் தீமைகளிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற நிலைகள் கொண்டு இந்த ஸ்தாபனத்தை (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்) யாம் அமைத்த்து அவரின் உணர்வின் செயலே…! என்னால் அது முடியாது.
 
அவர்களின் இயக்கத்தால் தான் இது அனைத்துமே உருபெற்றது பொருள்கள் எப்படி வந்தது…? என்று நமக்கும் தெரியாது. ஒருக்கிணைந்த உணர்வின் செயலாக்கங்கள் கொண்டுதான் இதை அமைக்கவும் முடிந்தது.
 
குரு அருள் அதன் வழி தான் வழிபடுகின்றது.
 
1.நாம் அனைவரும் நம் குருவின் அருள் துணை கொண்டு எந்த மதத்திலும் சிக்காது
2.இன பேதமோ மொழி பேதமோ அரசியல் பேமோ இல்லாது உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்த்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதே தலையாயக் கடமை ஆகும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் நம்முடைய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.
 
தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சான நிலைகளைச் சேர்த்துக் கொண்ட அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த நஞ்சுகளை அந்த ஒளிக் கடலிலே கரைத்து உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாக அவர்களை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.
 
1.அவர்கள் முன் சென்றால் அவர்களின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற முடியும்.
2.நமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக உபதேசித்தது.
 
உலகில் உள்ள ஒவ்வொருவரையும் காத்திட வேண்டுமென்றால் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை…” நாம் முதலில் பெற வேண்டும்.
 
இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமை தனக்குள் பதியாது தடுக்க வேண்டும்.
 
அப்படித் தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது ங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என் சொல்லால் கேட்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும் அவர்களும் பொருள் காணும் நிலை பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
 
இதை எல்லாம் எண்ண வேண்டும் என்றாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி பெற வேண்டும்.
2.இல்லை என்றால் இது வெறும் சொல்லாகத்தான் அமையும்.

February 28, 2026

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”


காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நாம் எடுத்து வளர்க்கின்றோம். அதே சமயத்தில் குல வழிகளில் தான் (முன்னோர்கள்) நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.
 
கூட்டுத் தியானங்களின் மூலமாக எல்லோருடைய எண்ணங்களும் பதிந்து இருப்பதால் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்கின்றோம்.
 
1.இந்த வலுவைச் சேர்த்துக் கொண்ட பின் முன்னோர்கள் ஆன்மாக்களின் முகப்பில் இந்தச் சக்தியை இணைக்கின்றோம்.
2.காரணம் அவருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றது… அவரின் எண்ணங்கள் கலந்தே உறவாடுகின்றோம்.
3.அதன் துணை கொண்டு அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் அலைவரிசையை வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் இன்று கண்டுணர்கின்றார்கள் அதைக் கவர்கின்றார்கள்.
 
வெறும் ராக்கெட்டை முதலிலே விண்ணுக்கு அனுப்பி ஒவ்வொரு கோளுடைய சுழற்சிகளையும் அதனுடைய திசைகளையும் எடுத்துக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றார்கள்.
 
அப்படிப் பதிவு செய்து கொண்ட பின் அதை வைத்துக் கொண்டு அடுத்து அந்தக் கோளுக்கு ராக்கெட்டை அனுப்புகின்றார்கள். கோளின் உணர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
1.ராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின் கம்ப்யூட்டர் பதிவு செய்த உணர்வின் மோதலில் திசை திருப்பி அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கிறது.
 
அங்கே சென்றாலும் உள்ளே விழுந்து விடாதபடி அந்தக் கோளின் வட்டப்பாதையை நிர்ணயிக்கின்றார்கள். அந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு வட்டப் பாதையில் சுழலும்படிச் செய்கின்றார்கள்… தரையில் இருந்து கொண்டே…!
 
அதே போல்…
1.மெய் ஞானிகள் உணர்வை எடுத்து நமக்குள் அதைப் பெருக்கி
2.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களில் அதை இணைத்து
3.அங்கே செல்ல வேண்டும் என்று உந்தித் தள்ளும் பொழுது அந்த இடம் போய்ச் சேருகின்றது.
 
உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது… சுட்டுப் பொசுக்குகின்றது. ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி அமைத்தவர்கள்.
 
உயிருடன் ஒன்றியிருக்கும் உடல் பெறும் உணர்வுகள் கறுக்கப்படுகிறது. நமக்குள் அறிவு என்ற ஒளி இருக்கின்றது. அப்பொழுது அந்தச் சப்தரிஷி  மண்டல ஒளி வட்டத்தில் சுழலத் தொடங்குகின்றனர்.
 
கணவனோ மனைவியோ முதலிலே யார் பிரிந்தாலும் அங்கே அனுப்புகின்றோம். உதாரணமாக மனைவி அங்கே செல்கிறது. உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மா அங்கே அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று கணவன் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.
 
அங்கே மனைவி இணைந்து கொண்ட நிலையில்
1.இவர் அடிக்கடி இதை எண்ணண்ண உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் சென்றடைவார்கள்.
2.இந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக அங்கே இழுத்துச் செல்லும்.
 
அதைப் பெருக்குவதற்காகத் தான் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் அங்கே அனுப்ப முடியாது… விண் செல்ல முடியாது.
 
மனைவி முன் சென்ற நிலையில் கணவன் அதை எண்ண எண்ண எப்பொழுது பிரிந்தாலும் அங்கே சென்று இணைந்து விடுகின்றார்கள்.
 
முதலில் அவர்களை அனுப்பி விடுகின்றோம் உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றது. அங்கே இணைந்த பின் அவர் உணர்வு இங்கே இருக்கின்றது
1.அந்த ஒளியின் உணர்வை இங்கே பெருக்குகின்றோம்.
2.அடுத்து வேறு ஒன்றும் தேவையில்லை…. உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் கணவன் ஆன்மா சென்றடையும்.
 
நண்பன் மீது பாசமாக இருக்கின்றோம். நன்மை செய்தேன்… இப்பொழுது விட்டு விட்டுச் செல்கின்றேனே…! என்று எண்ணினால் உடலுடன் இருக்கும் நண்பர் உடலுக்குள் தான் ந்த ஆன்மா புகும்.
 
முந்தி நாம் யாரையும் விண் செலுத்தப் பழகவில்லை. இப்பொழுது அந்த ஞானிகள் காட்டி வழியிலே உடலை விட்டுப் பிரிந்தவர்களை அங்கே இணைக்கச் சொல்கிறோம்.
 
சப்தரிஷிகள் என்பவர்கள் பிறவா நிலை அடைந்தவர்கள். ஆக அந்தக் காலத்தில் விண் சென்வர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது.
1.சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாது கோடிக்கணக்கானோர் அங்கே மின்னிக் கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்று அடைந்தவர்கள் என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.
 
இந்தச் சூரிய குடும்பம் அழிந்தாலும் பிற மண்டலங்களிலிருந்து அவர்கள் சக்தி பெற்றதால் எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற நிலையில்… என்றும் பதினாறு என்று அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடியவர்கள்.
 
இந்த எல்லையில் இருந்து அந்த ஆற்றலை வளர்த்தவர்கள். இப்பொழுது எப்படி இங்கே இந்தச் சூரிய குடும்பத்தில் அவர்கள் வட திசையில் சுழன்று கொண்டு வருகின்றார்களோ அந்த வட்டத்தில் இருந்தே தையெல்லாம் வளர்த்துக் கொள்கின்றார்கள்.
 
ஆக மனிதனாக பிறந்து தனித்தன்மை வாய்ந்ததாக அந்த நிலை அடைகின்றார்கள்.
 
அகண்ட பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது தான். பல கோடி ஆண்டுகளாகச் சுழல்வது தான். முதலில் அணுவாகிக் கோளாகி நட்சத்திரமாகி சூரியன் ஆகின்றது. பின் நட்சத்திரமாகி கோளாக வளர்ந்த நிலைகள் பல.
 
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும்
2.அந்தச் சப்தரிஷிகள் வேறு சூரியக் குடும்பங்களுக்குச் சென்று அழியாத நிலைகள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
 
ஒரு சூரியக் குடும்பமே எத்தனையோ கோடி மையில் பரப்பளவு கொண்டது. இது போல 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்தே துணை கொண்டே அவை வாழ்கின்றது.
 
இந்த 2000 சூரியக் குடும்பங்களும் வேறு 2000 சூரியக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு வாழ்கின்றது. இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனாக உருவானவன் ஒளியாக மாற்றிய பின் தனித்தன்மையாகப் பிரிகின்றது. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் போகின்றது.
 
ஆனால் இந்த எல்லையில் இருக்கின்றார்கள். என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அனைவரும் அடைய வேண்டும்.ப்படி அடையவில்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.
 
1.நம் முன்னோர்கள் பலரை இப்பொழுது அங்கே அனுப்பியிருக்கின்றோம்.
2.அந்த நிலையில் நாம் உடலை விட்டு பிரிந்து சென்றால் யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாமும் அங்கே சென்றடைய முடியும்.
 
அடிக்கடி காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை ஏற்றிக் கொண்டு மூதாதையரின் ஆன்மாக்கள் அங்கே அழியா ஒளிச்சரீரரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
 
அந்த உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக அங்கே தான் நம்மையும் அழைத்துச் செல்லுமே தவிர இங்கே இருக்க விடாது.
 
தை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்…! ஆக முதலில் அந்தத் தொடர்பு வேண்டும். அதற்குத்தான் கூட்டுத் தியானங்களில் ஒன்று சேர்ந்து அந்த ஆன்மாக்களை அங்கே விண்ணுக்குச் செலுத்தச் சொல்கின்றோம்.
1.இங்கே எப்படி ஐக்கியமாகச் செயல்படுகின்றோமோ
2.அதே போல் அங்கே சப்தரிஷி மண்டலத்திலும் ஐக்கியமாகின்றது.

December 28, 2025

விண்ணுலகில் "ஒளிச் சரீரமாக வாழும் நிலை" எப்படிப்பட்டது…?

விண்ணுலகில் "ஒளிச் சரீரமாக வாழும் நிலை" எப்படிப்பட்டது…?

நமது பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. ரேவதி நட்சத்திரத்திலிருந்தும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்தும் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் தன் உணவுக்காக அவைகளை எடுத்துக் கொள்கிறது. டைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனின் மாற்றங்கள் ஆகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிக வலிமை பெற்றது… ஆண்பால். ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்கின்றதோ அதைப்போல ஒதுங்கிச் செல்லும் நிலைகள் பெற்றது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள்.

இருப்பினும்... இதன் உணர்வின் அழுத்தம் அதிகமான பின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வலைகள் விலகிச் செல்கிறது. விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆவியின் தன்மை ஊடுருவி விட்டால் சுழற்சியாகி... வேகம் அதிகமாகின்றது.

சுழற்சியின் வேகம் அதிகமாகும் பொழுது இதன் அருகிலே வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து இரண்டும் மோதி விடுகின்றது.

இப்படி மோதி விட்டால்
1.ஆண் பெண் என்ற உணர்வுகளில் ரேவதி நட்சத்திரத்தின் உண்ர்வுகள் அதிகமானால் பெண்பாலை உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமானால் ஆண்பாலை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஆகவே… ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் உயிரிலே இயக்குகின்றது.

அதைப் போல் இந்த அருள் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒத்த உணர்வு கொண்டு இயக்கினால் "எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது...”
1.இங்கிருந்து நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொன்று தான்…!

திலே தெளிவாக்கி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடலில் பெற்ற பின் ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாக மாறுகின்றது. து தான் சிருஷ்டித்துக் கொண்டது என்று சொல்வது.


தீமைகளை... கைமைகளை... நஞ்சினைத் தனக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் மனித உடலில் பெற்றதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்கின்றோம்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் இணைப்புடன் வாழ்ந்தால்
2.பூமியில் நண்பர்கள்... உறவினர்கள்... என்று இருந்தாலும் அதை அறிந்து கொள்ளும் நிலை இல்லை.
3.ஆனால் ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும்.
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து துருவ நட்சத்திரத்தில் உணர்வைக் கவர்ந்து வாழும் தன்மை வருகிறது.

நமது பிரபஞ்சம் பிற நிலைகளிலிருந்து எடுத்தாலும் சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப் போலத் தான் சப்தரிஷி மண்டலங்களில் நாம் இருக்கப்படும் பொழுது "மனிதனுக்கு மனிதன்...” அறிந்திடும் நிலை வராது.

இருளை அகற்றிடும் வலிமை பெறும்... ஏழாவது ஒளி நிலை பெறும். அதை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் பகைமைகளை அகற்றிச் சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது. தான் சிருஷ்டித்து கொண்டது தான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றிய அனைவரும் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி... சப்தரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்…! ன்று பொருள்... உணர்வின் ஒளி அலைகள் கொண்டு.

வேப்ப மரத்தின் கசப்பை நாம் நுகர்ந்தால் ஓய்... வெளியே வருகின்றது. ரோஜாப் பூவின்ணத்தை நுகர்ந்தால் ஆகா..கா... என்று இணைந்து செயல்படும் உணர்வுகள் வருகின்றது.

அதைப் போல் நாம் ஒளிச் சரீரம் பெற்று விண்ணிலே வாழும் நிலைகளில்
1.தற்கு மாறான உணர்வுகள் அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்து விட்டுத் தன் உணர்வினை ஒளி என்று தான் உருவாக்கும்.
2.அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.
3.துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வுகள் வரும் போது அதைப் பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும்.
4.விண் சென்ற பின் தன் நண்பன் என்று அறியாது.

ஆக அப்படி அறியக்கூடிய பருவம் வந்தால் மனித நிலைக்குத்தான் வரவேண்டும்.

விண் சென்ற நிலையில்… என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ட்டி ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும். ஒளிக்குள் ஒளியாகும் பொழுது அகத்தின் ஒளியாகும் பொழுது இருளை வெல்லும் தன்மையும் நஞ்சை வெல்லும் தன்மையும் பெறுமே தவிர "அதற்குப் பின் இங்கே (பூமிக்குள்) வர முடியாது...”

என்றும் ஏகாந்த நிலையாக... எதுவுமே பகைமை இல்லாத நிலையும் பகைமையை மாற்றி அமைக்கும் சக்தியை இந்த மனித உடலில் பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். து தான் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி சப்தரிஷி - சிருஷ்டித்துக் கொண்டது.

கணவன் உயிராக இருந்தாலும் அதற்குள்ளும் பெண்பால் உணர்வுகள் உண்டு. மனைவி என்ற நிலையில் இருந்தாலும் அந்த உயிரில் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

செடி கொடி கல்லானாலும் மலையானாலும் இதைப் போன்று நட்சத்திரத்தின் உணர்வுகள் எது கலவையானதோ அதற்குத்தக்க வளர்ச்சி இருக்கும்.

பெண்பால் உணர்வுகள் அதிகமானால் மலைகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதும் ஆண்பால் உணர்வுகள் இருந்தால் வளர்ச்சி கம்மியாக இருப்பதும் உண்டு.

வெறும் ண்பால் என்ற உணர்வு வரப்படும் போது தன் இனத்தை விருத்தி செய்துர்க்க முடியாது.

அதே போல் பப்பாளி மரத்தில் ஆண்பால் என்ற உணர்வுகள் செல்லும் பொழுது தான் பெண் பப்பாளி தன் இனத்தை விருத்தி செய்யும் வித்துக்களை உருவாக்குகின்றது. ஆண்பால் என்ற அந்த பப்பாளி மரம் இல்லை என்றால் அந்த அமிலம் படவில்லை என்றால் பப்பாளி மரத்தின் வளர்ச்சி குன்றும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதன் உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது நம் உயிர் அங்கே பகைமை என்ற நிலை இல்லாது ஒருக்கிணைந்த நிலைகளில் வாழ முடியும்.

1.கைமையற்ற நிலைகள் கொண்டு என்றும் ஒளியாக வாழ...
2.ஒன்று சேர்த்த இயக்கத்தை நமக்குள் உயிர் என்ற நிலை இருக்கும் போது
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தனுசுகோடி.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கி நீக்கி வந்தது... கோடிக்கரை. ஆகவே அந்த உடல் பெறும் உணர்வுகள் சிவ தனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின்ரீரம் பெற்ற அந்த உணர்வினை நமக்குள் பெருக்கி விட்டால் தனுசுகோடி. தீமைகளை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி
1.உயிரைப் போன்ற உணர்வு ஒன்றாக்கப்படும் பொழுது
2."ஒன்றென்ற நிலைகள் இயக்குவது தான்... தனுசுகோடி...” என்று கூறப்படுகின்றது.

பகைமைகளை அகற்றி அருள் உணர்வைக் கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது... கணவன் மனைவியாக அதை உருவாக்கப்படும் போது சப்தரிஷி.

இருளை அகற்றி நல்ல உணர்வினைச் சேர்க்கும் தன்மை… அதாவது "விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது...” என்பதனை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.