ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label உணர்வின் இயக்கம். Show all posts
Showing posts with label உணர்வின் இயக்கம். Show all posts

April 27, 2026

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்


விஞ்ஞான உலகில் இருக்கின்றோம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை உருவாக்குகின்றனர்.
 
உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த உணர்ச்சிகள் (துதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.
 
அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.
 
நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.
 
இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.
 
1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம் புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்… அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத சிந்தனைகள் வரும்.
3.ஏன் எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.
 
காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…” ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.
 
விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின் அதிர்வு ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும் பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.
 
இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி சோர்வடைகின்றோம் காண முடியவில்லை.
 
ஜோதிடம் ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.
 
அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை வைத்துச் சொல்லலாம்.
 
ஆனால் கஷ்டங்களையும் குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.
 
இருந்தாலும்… இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில் அதைக் காட்டுகின்றார்கள்.
 
1.நாம் வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது… உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்..
 
உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள் வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள் பகைமையாகாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.
 
மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல் வேண்டும்.
 
அதாவது நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் பாதுகாப்புக் கவசமாக நாம் அமைத்திட வேண்டும்.

April 15, 2026

உணர்வின் "சில மாறுபட்ட இயக்கங்களை" அறிந்து கொள்வது நல்லது

உணர்வின் "சில மாறுபட்ட இயக்கங்களை" அறிந்து கொள்வது நல்லது

 

உயிரின் இயக்கத்தை அறிந்து அதை எப்படி மதிக்க வேண்டும்…? என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை காடு மேடலாம் அலையச் செய்து எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து அறியும் படி செய்தார்.

அதே சமயத்தில் நகருக்குள் வந்த பின் இங்கே எத்தனையோ வேதனை வருகிறது.

ஒருவனுக்கு உடல் எல்லாம் ரணமாக இருக்கின்றது ஆனால் உணவுக்காக வேண்டி "ஐயா பசிக்கிறது...” என்று உடலை வளர்க்கப் பிச்சை கேட்கின்றான்
1.ஆனால் வேதனை தெரிவதில்லை.
2.வசதி உள்ளவர்கள் நமக்கு உடலில் வேதனையானால் நம்மால் ஒரு இஞ்ச் கூட நம்மால் நகர முடியவில்லை.

ஆனால் வேதனையானாலும் கூட பசிக்குச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு அவன் எப்படிப் பிச்சை எடுக்கச் செல்கிறான்…?

1.ஆகாரத்தின் மீது எண்ணம் இருக்கப்படும் பொழுது வேதனை குறைகின்றது.
2.ஆனால் ஆகாரம் கிடைத்த பின்பு வேதனையை ஜாஸ்தியாக உணர்கின்றான்.

முதலில் உணவு வேண்டும் என்பதற்காகத் தேடிச் செல்கின்றான். அதை தேடிச் சென்று "உணவைப் பெறும் வரையிலும் ஆர்வம் இருக்கின்றது..” உட்கொண்டு பசி தீர்ந்தபின் எவ்வளவு வேதனைப்படுகின்றான்…?

உடலை வளர்க்க விரும்புகின்றான். அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின் இந்த உணர்ச்சிகள் எப்படி அறியச் செய்கின்றது…?

இதை அறியும் உணர்வுகள் உனக்குள் நுகர்ந்து கொண்ட பின் என்ன ஆகிறது…? என்பதையும் காட்டுகின்றார். இதெல்லாம் எதற்காக அனுபவம் கொடுக்கிறார்…?

என்னிடம் பழகி இருக்கிறீர்கள்.
1.உங்களுக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.வெறுப்படைந்த பின் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்படையச் செய்வது எது…?
3.அதே சமயத்தில் அதை எல்லாம் எப்படி நீக்குவது…? என்பதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

இத்தனையும் நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டு வந்தேன்.

உயர்ந்த சக்தியை உங்களிடம் சொல்லி அதை ஏங்கிப் பெறும்படி செய்து வளர்த்து அந்தத் தீமையை நீக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

நான் வந்து உங்களுக்கு அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்ல வரவில்லை.

திட்டியவனைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வு பதிவாகின்றது. அது எப்படி மீண்டும் மீண்டும் இயக்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் "எல்லாமே சந்தர்ப்பம்...” என்பதை நீங்கள் உணர முடியும்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்ததும் சந்தர்ப்பம்தான். தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வைச் சுவாசித்த பின்
1.அது அணுக்களாக மாறி உடலில் மாற்றமாகி உணர்வுகள் மாறி குணங்கள் மாறி செயல்கள் மாறி
2.இது எல்லாம் எப்படி மாறி வந்தது…? என்பதைத் தெரிந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.நாம் போகும் வழியினைச் சீராக்கி அதன் வழி வளர்ச்சி பெற ஏதுவாகும்.

February 2, 2026

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”


நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே பிறர் செய்யும் தீமைகளைக் கண்டுணரும்போது உணரத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். உணர்ந்தபின் அதை நீக்கிடல் வேண்டும்.
 
அதாவது
1.தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
2.ஆனால் தெரிந்த உணர்வுகள் உடலிலே இணைத்திடக் கூடாது... அதை நீக்கிடல் வேண்டும்.
3.தீமைகள் எதுவோ அவைகளை நீக்கிநன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கபூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.
 
இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால் காரத்தின் ஏக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக…” மாற்றுகின்றது.
 
னால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படுபோது சுவை மிக்கதாக…” மாற்றுகின்றது.
 
இதே போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும் பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள்படும் வேதனையைப் பார்த்துச் சொல்லால் கேட்டுணர்ந்தால் உணர்ந்த அச்சக்தியை நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.
 
உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீய வினையாகச் செயல்படும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.
 
1.நாம் எவ்வாறு தீமையைக் கேட்டறிந்து அதிலிருந்து விடுபட உதவி செய்கின்றோமோ இதைப்போல
2.நாம் தீமையான உணர்வுகளைக் கேட்டுணர்ந்தபின் அடுத்தகணம்
3.நமக்கு முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் கவர்ந்து
4.நமக்குள் தீமையை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

January 29, 2026

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்


ஒருவருடைய செயலைப் பார்த்து மோசமானவர்…” என்று அவரை நினைக்கின்றோம் அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்த பின் நாமும் அதை போன்ற செயலைச் செய்ய தொடங்கி விடுகின்றோம்.
 
நம்மை அறியாமலே அது இயக்கும்…!
1.நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம்.
2.ஆனால் தவறு செய்கின்றான்…” என்று எண்ணியவுடன் அந்தத் தவறின் இயக்கம் நம்மை இயக்கி விடுகின்றது.
 
அதை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகி விடுகிறது.
 
அந்தத் தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றோம். எண்ணியவுடனே அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.
 
நாம் பல விதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். அதிலே வேதனைப்படும் சொல்களைக் கேட்டவுடன் ந்த உணர்வுகள் உந்திய பின் அதைச் சுவாசித்து நம் உடல் சோர்வடைந்து விடுகின்றது. வேதனையான அணுக்கள் வளர்ந்து விடுகின்றது.
1.இரண்டு நாளைக்கு இந்த உணர்வுகள் சேர்த்தால்
2.இரத்த நாளங்களில் இது கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.
 
நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது. காற்று மண்டலத்தில் எப்படிக் கலக்கின்றதோ இதைப் போன்று தான் ரத்தத்தில் கலக்கப்படுகிறது.
 
இரத்தம் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணவை எடுத்துச் செல்கின்றது. அதில் இருக்கும் உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.
 
நாம் நுகர்ந்தது உயிரிலேவியின் தன்மை அடைந்த பின் நம் உடலில் ரத்தத்தில் கலந்த பின் இந்த ணர்வின் தன்மை கொண்டு செயலாகிறது.
 
நாம் உணவாக உட்கொள்ளும் போது அதிலே நீரைப் பிரித்து விட்டு அதில் இருக்கக்கூடிய சத்தை ரத்தமாக மாற்றுகின்றது நம் உடல் உறுப்புக்கள்.
 
ரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அணுக்களின் ஆகாரம் அதன் வழியில் பெறப்படுகிறது. நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டாலும் நல்ல உணர்வை எண்ணினால் நல்ல அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கிறது.
 
அதே சமயத்தில் நல்ல உணவை உட்கொண்டாலும்
1.வேதனையான உணர்வைச் சுவாசித்தால் இந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆன பின்
2.வேதனை உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது நல்ல உணவையே உட்கொள்ள முடியாதபடி ஒதுக்கிவிடும்.
 
ஏனென்றால்
1.நாம் எண்ணும் உணர்வுகளை உயிர் அதை அணுக்களாக மாற்றுவதும்
2.உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

January 11, 2026

“நல்லது… கெட்டது…” பற்றிய உண்மை நிலை

“நல்லது… கெட்டது…” பற்றிய உண்மை நிலை


உதாரணமாக ஒருவர் தன் மகன் மீது பாசமாகப் பிரியமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
 
அவருடைய மகன் தீய பழக்க வழக்கங்களைக் கொண்டவனாக இருந்தாலும் அவன் மீது  பாசம்   வைத்திருந்ததால் அவன்  எந்தத் தவறு செய்திருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
 
அதே சமயத்தில் அவருடைய இரண்டாவது மகன் நல்லவனாக இருப்பான். தந்தையே தவறு செய்திருந்தாலும் தவறு என்ற வகையில் மகன் தந்தையை வெறுக்கும் பொழுது தந்தையும் அவன் மீது வெறுப்பைக் காட்டுவார்.
 
இவன் அயோக்கியன்…!” நம்மையே குற்றம் சாட்டுகின்றானே இவன்  மோசமானவன்அப்பனையே   எதிர்க்கிறான் பார்…! என்று தந்தை மகனையே வெறுக்கத் தொடங்கிவிடுவார். அவன் நல்லதையே செய்தாலும் அவனைக் குற்றவாளி…” என்று தான் எண்ணுவார்.
 
ஆனால் முதல் மகன் தவறு செய்கின்றான். தவறு செய்தாலும் மகனே நீ நல்லவன்டா…!என்று அவனை ஆதரிப்பார்.
 
ஏனெனில் இந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றிக் கொள்ளும்.
 
மற்றவர்கள் முதல் மகன் செய்த தவறுகளைக் குற்றங்களாக அவன் தந்தையிடம் கூறினாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல்இவன் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டான்நல்லவன்என்று சொல்வார்.
 
ஆனால் இரண்டாவது மகனைப் பார்த்து அயோக்கியன் இவன் தவறு செய்வான்என்றுதான் கூறுவார். 
 
முதல் மகன் மீது பாசம் அதிகமாக இருப்பதால் அவன் செய்த தப்பை ஏற்றுக் கொண்டாலும் தப்பு இல்லைஎன்று தான் அவருக்குச் சொல்ல வரும்.
 
இது இயற்கையின் செயலாக்கங்கள்…! 
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின்  உணர்வை  நம்முடன் இணைக்கப்படும் பொழுது
2.அதே  உணர்வின் தன்மை நமக்குள் செயல்படுகின்றது.
 
அதாவது… தம் பையனைக் கண் கொண்டு பார்த்து
1.அவன் தப்புச் செய்திருந்தாலும் கூட அவனை நல்லவன் என்று எண்ணும் பொழுது
2.அந்த உணர்வு கொண்டு அவருக்குள் படமாக்கி அவனை அவரிடத்தில் நல்லவனாக்குகின்றது.
 
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்என்று உரைக்கப்பட்டது.
 
தந்தை செய்த தவறுகளையெல்லாம் முதல் மகனும் செய்து வருவான். இந்த நஞ்சின் உணர்வின் தன்மை அவருக்குள் வளரப்படும் பொழுது அது அவரிடத்தில் கடும் நோயாக விளைகின்றது.
 
ஆனால் அந்த சமயத்தில் தந்தைக்கு உதவ வேண்டிய முதல் மகனோ
1.தந்தையால் நல்ல பிள்ளை என்று பாராட்டு பெற்றவன் கடும் நோயில் தவிக்கும் தந்தையைப் பார்த்து
2.நீ செய்த செயல்களுக்கு நீ அனுபவிக்கின்றாய்நான் என்ன செய்யட்டும்…?என்று சொல்வான்.
 
நல்ல பிள்ளை என்று எவனைச் சொன்னாரோ அவனைப் பார்த்துஅடேய்… பாவி…!என்று தந்தை தம் மகனைப் பார்த்துச் சொல்லும் நிலை பின் நாட்களில் வரும். இதை நாம் பார்க்கலாம்.
 
சில குடும்பங்களில் உணர்வின் இயக்கங்கள் இப்படி இருக்கின்றது…! 
 
1.எந்த உணர்வுகளைக் காந்தம் (உயிரில் உள்ள காந்தமும் – உடல் அணுக்களின் காந்தமும்) கவர்ந்து தன்னிடத்தில் இணைக்கின்றதோ
2.அதனின் இயக்கமாகத்தான் அது இயக்கும்வேறொன்றையும் இயக்காது. 
 
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

January 7, 2026

எதிர் நிலையான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?

எதிர் நிலையான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?


நம் குடும்பத்தில் எதிர்பாராத நிலைகள் வரும் பொழுது ஒருவர் வெறுப்படைந்து வேதனைப்படும் செயலைச் செய்வார். அவரை நாம் உற்றுப் பார்த்தபின் உணர்வை நுகர்ந்து அறிவோம்.
 
இப்படிச் செய்கின்றானே!” என்ற நிலை வந்துவிடும். அது வந்தபின் சுத்தப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது.
 
அந்த மாதிரிச் செய்கின்றானென்றால்
1.உடனே நம் குரு காட்டிய முறைப்படிஈஸ்வராஎன்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
சுத்தப்படுத்தவில்லை என்றால்… அவர் செய்யும் தவறான உணர்வு நம் உயிரில் பட்டு உடல் முழுவதும் பரவுகின்றது. நம் ரத்தங்களில் முழுவதும் கவரப்படுகின்றது.
 
ரத்தங்களில் கலந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைநல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.
 
ரத்தத்திலுள்ள உணர்வுகளை நல்ல அணுக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
1.அப்படி ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது கொதிப்பென்ற நிலைகள் வருகின்றது.
2.வெறுப்பென்ற நிலைகள் வரும் பொழுது நமக்கு ஒரு விதமான நடுக்கம் வரும்.
3.ஏனென்றால் அந்த அணுக்களுக்குச் சரியான ஆகாரம் இல்லையென்றால் அது பதறும்… நமக்குப் பதட்டம் வரும்.
 
அப்படி நடுக்கம் வரும் பொழுது சிறிதேனும் அந்த அணுக்களில் சேர்ந்து விட்டால் அந்த உணர்வுகள் இணைந்து கொள்ளும். அடுத்து தவறு செய்யும் உணர்வுகளை நுகர்ந்து அது வளர்ந்துவிடும்.
 
1.நல்ல அணுக்களின் மலங்களால் உருவானதுதான் நம் உறுப்புகள்... அப்பொழுது உறுப்பின் வளர்ச்சி குறைகின்றது. 
2.அதுவும் சேர்ந்து அந்த அணுக்களின் தன்மையும் சேர்ந்து ஒன்றுக்கொன்று போர் முறை செய்து வலி…” எடுக்கின்றது.
 
நாம் தப்பு செய்யவில்லை. ஒருவருக்கொருவர் சண்டையிடும் உணர்வை நுகர்ந்தோமென்றால் இந்த நிலையாகின்றது.
 
அதே சமயத்தில் இந்த வெறுப்பின் உணர்வு கொண்டு வீட்டுக்கு வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமது ஆன்மாவில் அதிகமாகப் பெருகியிருக்கும்.
 
வீட்டில் சின்னக் குழந்தை ஒரு பாத்திரத்தைப் போட்டால் போதும்…! அல்லது குழந்தை ஏதாவது சத்தம் போட்டுப் பேசினால் போதும்.
 
இது எதிர் நிலை ஆகும்.
 
மனைவியைப் பார்த்து
1.பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார்…! என்று வெறுப்பான நிலைகளில் பேசச் சொல்லும்.
2.சில நேரங்களில் வீட்டில் ஏதாவது நடந்தால் உங்களை அறியாமலே கோபித்துக் கொள்வீர்கள்.
 
இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கின்றோம்…?
 
நாம் நுகர்ந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. அப்படி இயக்கும் அந்த உணர்வை யாம் கொடுத்த அருள் சக்தி கொண்டு ஆயுள் மெம்பர் அனைவரும் அந்த நிமிடமே புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று நம் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும். 
 
இரத்தத்தில் கலந்தபின் அவர்கள் இருவருமே பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
1.அந்த உணர்வின் உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் சேர்க்கும் பொழுது அவன் சண்டை போட்ட உணர்வைத் தணிக்கின்றது.
2.அவன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வு கலக்கின்றது.
3.உணர்வின் தன்மையை உயிர் உருவாக்குகின்றது… கருவாகின்றது… நம் இரத்தத்தில் சுழல ஆரம்பிக்கின்றது.
4.இது நம் அணுக்களுடன் சேரும் பொழுது நமக்கு ஒத்த நிலையாக மாறுகின்றது.
 
இந்த மாதிரி எல்லாவற்றையும் மாற்றிப் பழக வேண்டும்.
 
சாமி கும்பிட்டேன் தியானமிருந்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்று சொல்லக் கூடாது. பிறருடைய கஷ்டங்களைக் கேட்டுவிட்டுச் சுத்தப்படுத்தாமல் இருந்தால் என்ன செய்வது?
 
சட்டையில் அழுக்குப்பட்டால் துவைத்துக் கொள்கின்றோம். ஒரு நாற்றமான பொருள் சட்டையில் பட்டால் உடனடியாக துவைத்துக் கொள்கின்றோம். அது போன்று வெறுப்பென்ற நிலைகளை உடனே சுத்தப்படுத்தியாக வேண்டும்.
 
எந்த நிலையிலும் எந்தச் சூழ்நிலையிலும் பிறருடைய தவறை நாம் பார்த்து விட்டால் அந்த உணர்வுகள் நம்மிடம் வந்த பின் தான்…தவறு செய்கின்றான்…” என்று அறிகின்றோம். 
 
அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி
1.நம்மை அறியாமலேயே இப்படிச் செய்கின்றான்…” என்று சொல்ல வைக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் இப்படிப் பேச வைக்கின்றது… இதை நாம் தடைப்படுத்த வேண்டும்.
 
அந்த நேரத்தில்ஈஸ்வராஎன்று நம் உயிரை எண்ணி நம் உடலுக்குள் போகாமல் தடைப்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், என்று எண்ணிக் கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
 
பின் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். நல்ல ஒழுக்கமுள்ளவனாக வரவேண்டும். பண்புடன் நடந்து கொள்ளும், சக்தி பெற வேண்டும் எ\ன்று எண்ண வேண்டும்.
 
இந்த உணர்வு நம் உடலுக்குள் இரத்தத்திலுள்ள அவன் உணர்வைத் தணிக்கின்றது.
1.ஆக தியானமென்றால் நாம் கடும் தவமிருந்து எல்லாச் சக்தியும் பெறுவதல்ல.
2.ஒவ்வொரு நிமிடமும் நாம் அந்த அருள் சக்தி பெற வேண்டும். நல்ல குணங்கள் வரவேண்டும் என்று தியானித்து
3.வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

November 15, 2025

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்


நாம் சும்மா இருக்கின்றோம் அப்போது ஒருவரைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பார்த்தவுடனே…
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நமக்குள் நினைவோட்டங்கள் திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.
2.ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கிருக்கும் பொருள்கள் எப்படித் தெரிய வருகின்றதோ இது போன்று
3.இந்த உணர்வின் ஓட்டங்கள் வரும் இன்னது தான் என்று…!
4.காரணம் ஞானிகள் உணர்வு நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை உணர முடியும்.
 
நாம் இங்கே தொழிலில் இருப்போம்… ஆனால் இது இரண்டையும் பிரித்துக் காட்டும் பொழுது நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்ட உடனே எழுத்து வடிவிற்கு வேண்டிய நிலையில் நமக்கு வேண்டிய அந்த பாஷை இந்தியோ தமிழோ ஆங்கிலமோ பிரித்துக் கொடுக்கின்றார்கள்.
 
அந்த அழுத்த உணர்வுக்குச் (COMMAND) சென்றவுடன் அதனதன் நிலைகளில் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.
 
இதைப் போன்று தான் நமது உயிர் சூரியன் காந்த சக்தி கவர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) மாற்றுகின்றது.
1.மாற்றியவுடன் அதனுடைய பிரிவு அளவுகோல் எதுவோ
2.அதற்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்கும்.
 
நம்முடைய உயிரின் வேலை காந்தத்தை இழுக்கின்றது. அதிலே வந்த அந்த உணர்வு நம் அழுத்தம் எதுவாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்தாற் போல் எலக்ட்ரானிக்காக மாற்றும்.
 
மாற்றி அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது
1.அதனுடைய இன இயக்கங்கள் அந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்கிக் காட்டும்.
2.அதற்குத் தகுந்த சிந்தனையும் அதற்குண்டான செயல்களையும் நமக்குள் இயக்கும்.
 
கம்ப்யூட்டரில் மின்சாரத்தை மையமாக வைத்து உணர்வின் செல்களுக்கு எலக்ட்ரானிக்காக இந்த மாற்ற உணர்வுகளைக் கொடுக்கின்றார்கள். கடிகாரத்தில் பார்க்கலாம் அந்தந்தக் கால பருவம் வந்தபின் அதை நமக்கு (அலாரம்) அறிவுறுத்துகின்றது.
 
அதில் இருக்கக்கூடிய பேட்டரி செல்கள் இந்த வேலையைச் செய்கின்றது அதில் எதை ஆணையிட்டு வைத்திருக்கின்றோமோ அதன் உணர்வின் கருக்களை மாற்றி மாற்றி அளவுகோல் பிரகாரம் இயக்கும்.
 
ஆனால் சிறிதளவு அதிலே நீர் பட்டு விட்டால் அளவுகள் மாறிவிடும் அதனின் இயக்கமே மாற்றமாகிவிடும். நீரில் உள்ள காந்தப்புலன் அதை அழிக்கும் திறன் கொண்டது.
 
நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் வலு செல்கள் எப்படி இருக்கின்றதோ அதன் இயக்கமாக உடலை இயக்குகின்றது.
 
விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரானிக் இயந்திரத்தை இயக்குகின்றது. யக்கிய நிலையோடு விஞ்ஞானம் சரி. அதில் வளர்ச்சி பெற முடியாது தேய்வு தான் உண்டு. ஆனால்… மெய்ஞான அறிவுப்படி
1.உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் இயக்கப்படி நம்மை இயக்கும்.
2.இயற்கையின் நிலைகள் கொண்டு இந்த உணர்வின் அணுக்களை வளர்ச்சி பெறும் தன்மை பெற்றது
3.இதில் எந்தெந்தத் தன்மையோ அதனதன் அளவுகோல் கூடக் கூட அணுக்களின் உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே வரும்.
 
அதனுடைய முடிவு எதை எடுத்து உருவாக்கியதோ அந்த உணர்வுக்கொப்ப செல்களை மாற்றி உருவத்தையே உயிர் மாற்றிவிடும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!