ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label மகரிஷிகளுடன் பேசுங்கள். Show all posts
Showing posts with label மகரிஷிகளுடன் பேசுங்கள். Show all posts

April 21, 2026

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்


ஞானத்தின் வழித்தொடரை நமக்குள் விளைய வைத்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தகைய கடும் நஞ்சாக இருப்பினும்
2.அது தன்னை அணுகாது அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.
 
அப்படி ஆனவர்கள்தான் இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள். இந்தப் பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள்.
 
இந்தப் பிரபஞ்சம் செயலிழந்தாலும் இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டுத் தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.
 
ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.
2.இந்த அகண்ட பேரண்டத்தில் இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு.
3.மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
 
மனிதனின்  நிலைகள் நாம் இன்று அதிலே இணைந்தால்தான் நல்லது.
 
பேரண்டம் முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது, ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து உயிரணுக்களாக விளைந்து.
 
உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து உணர்வின் தன்மை உடல் பெற்று
1.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.
3.இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்
4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத்  தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள்தான் மகரிஷிகள்.
 
ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.
 
நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாப்பு நிலையைப் பிளக்காது அதிலே இந்த மகரிஷிகளின் உணர்வுடன் பாதுகாக்கும் அரணாக நாம் அமைத்திடல் வேண்டும். 
 
நமக்குள் நம் ஆறாவது அறிவை இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது மற்ற தீமைகள் நமக்குள் படர்ந்திடாது
1.அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும்அமைக்க முடியும்.
2.த்தகைய நிலைகளைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
3.விண்ணின் ஆற்றலைக் காண அந்த உணர்வைப் பெற
4.அவர் அருளியதைப் பெறும் பாக்கியத்தை  நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.
 
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். நம்மால் நிச்சயம் முடியும். எமது அருளாசிகள்…!

March 2, 2026

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்


அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் ராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.
 
1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.
 
அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.
 
பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… ருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.
 
அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.
 
பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.
 
உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.
 
ராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.
 
தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதிறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!
 
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.
 
1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!
 
யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞாப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.
 
பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.
 
எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

February 8, 2026

ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்

ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்


ஞானிகள் மகரிஷிகள் நஞ்சினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் விளைய வைத்துத் தீமைகளைப் பிளந்திடும் சக்தியாக இந்த மனித உடலில் இருந்து தான் அவன் பெற்றான். அந்த நிலை நமக்குள்ளும் உண்டு.
 
நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் குணங்களுக்குள் தைக் கலந்து இணைக்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.
 
சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கண்டுணர்ந்து தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக விளைந்து அதனின் செயலாக்கமாக வருவது போல்
1.மகரிஷிகளின் ணர்வின் சத்தை உங்களுடன் இணைத்து
2.அந்த இணைத்த சக்தி கொண்டு சப்தரிஷிகளின் இயக்கமாக அதை மாற்றும்.
3.உருப்பெற்ற நிலையாக உங்களைச் சப்தரிஷிகளாக ஆக்குவது.
4.சப்தரிஷி மண்டலங்களாக அவர்களுடன் இணையும் பொழுது எதனையும் வென்றிடும் நிலைகள் வருகின்றது.
 
நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் அதுவும் மடிந்திடும் சமயம் வரும் அத்தகைய நிலை அதற்கு உண்டு. அதனுடைய வயது முதிர்ச்சி அடையும் பொழுது மடிந்திடும் நிலையே வருகின்றது.
 
காரணம் இதற்கு உறுதுணையாக இருந்த நட்சத்திரங்கள் தனது தனது நிலைகள் விளையச் செய்யும் பொழுது இதற்குக் கிடைக்கும் உணவு தடைப்பட்டால் சூரியன் ஒளி மங்கும் பின் இருள் சூழும்.
 
இது கரைந்து இதனின் உணர்வுகள் திக்கற்று இதனுடன் விளைந்த கோள்கள் அனைத்தும் திசை மாறிச் சென்று விடும்.
 
அப்படிக் கரைந்து வந்த ஒரு கோள்… அது ஓடிவரும் பாதையில் ஊடுருவி நம் வியாழன் கோளில் கோளுக்குள் பாய்ந்து அதனின் சுழற்சி வட்டத்தில் கரைந்தது (சுமார் 30 வருடங்களுக்கு முன்).
 
 இதைப் போல பேரண்டத்தில் விளைந்த மற்ற கோள்கள் திசை மாறி வந்து விட்டால் சூரியன் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பூமியை இடைப்பட்டால் இந்தப் பாறைகள் பூமியில் விழுந்து விடும்…. விழுந்தால் பூமி சுக்கு நூறாக ஆகிவிடும்.
 
இருப்பினும் பூமியின் சுழற்சி வேகத்திற்குள் கரைந்த வெப்பம் போக மிச்சங்கள் அதற்குள் கரைந்து விடும். கரைந்தது போல மீதி இருக்கும் நிலைகள் பூமியிலே சாற்றிவிடும்.
 
1.இதைப் போன்று பிற சூரிய குடும்பங்களில் ஏற்படும் விபத்துக்கள் ஏராளம் ஏராளம்.
2.பேரண்டம் 2000 சூரியக் குடும்பம் என்றால் அதில் வீழ்ச்சி அடையும் பல சூரியன்களும் உண்டு.
3.அதிலிருந்து திசை மாறி வரும் கோள்கள் எதனின் பிடிப்பும் இல்லாது நகர்ந்து வரும் போது அதனின் வேகத் துடிப்புகள் இருக்கும்.
4.தனின் ஈர்ப்பின் துணையிலிருந்ததோ ந்தக் காந்தப் புலனறிவு இல்லை என்றால் அது தன் சக்தியை இழந்து விடும்.
 
இதைக் கண்டுணர்ந்துதான் ஞானிகள் ஓசோன் திரை என்ற நிலையில் எந்தத் தீமையும் தன்னைத் தாக்கிடாத நிலைகள் கொண்டு பாதுகாப்புக் கவசமாக அமைத்தார்கள்.
 
அது தான் விநாயகர் சதுர்த்தி…!
 
நாம் கேட்டுணர்ந்த மற்ற மனிதர்களின் நஞ்சின் உணர்வுகள் பதிவானாலும் அந்தப் பதிவின் ஈர்ப்பைத் தடைப்படுத்திட வேண்டும்.
 
மனிதரிலிருந்து வெளிப்பட்ட பிறரை அழிக்க வேண்டும் என்று எண்ணிய உணர்வுகளோ… பழி தீர்க்கும் உணர்வுகளாக ஒருவருக்கொருவர் விளைந்து வந்ததோ அதையெல்லாம் அகற்றிடும் நிலையாத் தடைப்படுத்தும் நந்நாள் தான் விநாயகர் சதுர்த்தி.
 
ஆகவே… மற்ற மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பின் நிலைகளைத் தடைப்டுத்திட வேண்டும்.
 
வ்வாறு எல்லோரும் நிறுத்திவிட்டால்
1.அத்தகைய உணர்வலைகள் இங்கிருந்து விலகி… திக்கற்றுச் சென்று…
2.பூமியின் சுழற்சி வட்டத்தில் இருக்கக்கூடிய கடலின் ஈர்ப்புக்குள் சிக்கி
3.நமக்குள் பதிவான பகைமை உணர்வுளை மனிதனை வீழ்த்திடச் செய்யும் ந்தச் சக்திகள் கடலுக்குள் அமிழ்த்தி அங்கே பொசுங்கிவிடும்.
 
நாமும்… நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தம் ஆகும்.

February 1, 2026

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”


ஒரு வாடிய செடிக்கு எப்படி உரம் இடுகின்றோமோ அதைப் போலத் தான்
1.அந்த மகரிஷிகளின் உரச் சத்தை
2.அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வினை உங்களுக்குள் உரமாக இணையச் செய்கின்றோம்.
 
சாதாரணமானதல்ல…! அகண்ட அண்டத்தின் விரிவான நிலையை அறிந்த ஞானி தனக்குள் அதை தெளியச் செய்து அந்த உணர்வால்  உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான் கல்கி.
 
அந்த நிலையை நாம் அனைவரும் பெற முடியும். அதை நாம் எல்லையாக வைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
 
1.உங்கள் வாழ்க்கையில் வாடிய உணர்வுகள் எத்தனையோ எத்தனையோ…!
2.அப்படிப்பட்ட நிலையில்… கோடிக்கணக்கான குணங்கள் உங்களுக்குள் இருப்பினும்
3.அவை எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உங்களுக்குள் நினைவுபடுத்தி
4.அதை அண்டத்துடன் பேரண்டத்துடன் இணைத்து
5.மனிதனான நாம் அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் இணைத்து இணைத்து
6.அவ்வாறு இணையும் தன்மையைத் தனக்குள் பெருக்கப்படும் பொழுது தான் அது வலுப் பெறும்.
 
ஒவ்வொரு செடிகளுக்கும் அதற்குண்டான உரத்தை இடுவது போன்று தான் அருள் ஞானிகளுடைய உணர்வுகளை மிகச் சக்தி வாய்ந்த உரமாக உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.
 
இந்த உணர்வின் துணை கொண்டு என்றும் அருள் ஞான உணர்வின் தன்மை கொண்டு இருளைப் பிளந்து பொருள் காணும் பொறிகள்…” உங்களிடத்தில் உருவாக வேண்டும் என்பதற்குத்தான் இதை இணைத்து இணைத்துத் தொடர்ந்து இணையச் செய்கின்றேன்.
 
காரணம்இந்த உடலில் யாரும் நீண்ட நாள் இருப்பது இல்லை. யாரும் இருந்தது இல்லை. ஆனால் நீண்ட நாள் என்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
1.இந்த உடலை வைத்துத் தான் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
2.விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டுள்ளார்கள்.
3.பேரானந்த பெரு நிலை என்ற நிலையில் முழுமை அடைந்தவர்கள் அவர்கள்.
4.நாம் அனைவரும் அதைப் பெற வேண்டும்.
 
மனிதனான பின் தீமையை நீக்கி விட்டு தனக்குகந்ததாக பல பொருள்களை உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள் தான் நாம். இதையெல்லாம் உங்களுடன் இணைத்து இணைத்துப் பேசுகின்றேன். மெய் ஞானிகளின் உணர்வுகளை அறிந்து கொண்டால் போதும்.
 
மெய்ஞானி உயிருடன் ஒன்றி என்றுமே அழியாத நிலை கொண்டான்…!
 
ஆஅனால் விஞ்ஞானியோ இந்த உடலுக்காக வேண்டி சகல சொர்க்கத்தையும் கொடுத்தான். பேரின்பத்தைக் கொடுக்கக்கூடிய நிலைகளுக்கும் அந்த விஞ்ஞான அறிவு வந்தாலும்… அது உடலுடன் சரி.
 
உடல் மடிந்த பின் எத்தகைய அறிவு கொண்டாலும் பூதகணமாக இயங்கி இன்னொரு மனித உடலுக்குள் கொண்டு போய் பேயாக உருவாக்கும் நிலையே வருகின்றது.
 
எந்த மனித உடலில் எந்த வேதனையைக் கடைசியிலே வளர்த்துக் கொண்டானோ எதனைக் கொண்டு அழிக்கத் துணிந்தானோ அந்த உணர்வுகள்  மனித உடலில் விளைந்து சிறிது கோபம் வந்தால் போதும்.
 
என்ன வாழ்க்கை…? என்று உடலை அழிக்கச் செய்து விடுகின்றது. மற்றவனை எப்படி அழிக்க வேண்டும்…! என்று வருகின்றது.
 
கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதித்தாலும் அனைவரையும் அழித்துக் காலி பண்ணுகின்றேன் பார்…! இந்த ஊரை அழிக்கின்றேன் அனைத்தையும் உருக்குலையச் செய்கின்றேன்…! என்ற உணர்வு தான் விஞ்ஞானத்தினால் இன்று வருகின்றது.
 
அதையெல்லாம் மாற்றி
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பருகிப் பருகி
2.வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் திறனை உரமாக ஊடடுவதற்குத் தான் இந்த உபதேசமே…!.
 
வீண் என்ற பேச்சு இல்லை விரயமாகும் தன்மை இல்லை…!
 
அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தார்களோ அந்த மகரிஷிகளின் சக்தியை உங்களுக்குள் இணைத்து இணைத்து இணைத்து…” இந்த இணைப்பின் வலு கொண்டு உரமாக்கி விட்டால்
1,எண்ணத்தால் வளரும் பருவம் வந்து விட்டால்உங்கள் நினைவின் ஆற்றல் அகண்ட அண்டத்திற்கு வருகின்றது.
2.பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.
 
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான நிலைகள் இருப்பினும்
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்கள் ஏங்கிடும் உணர்விற்குள் இணைத்து
2.அதை உற்று நோக்கி அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்வது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.
 
அதைத்தான் தொடர்ந்து யாம் செய்து கொண்டு வருகின்றோம்.

January 16, 2026

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

ஞானிகள் ஒவ்வொருவரும் சாதாரண மனிதனையே தேடி வருகின்றனர்

நாம் இன்று எவ்வாறு கோயிலுக்கோ ஞானியரையோ தேடிச் செல்கின்றோமோ அதைப் போல ஞானியர் ஒவ்வொருவரும் சாதாரண மக்களைத் தேடி வருகின்றனர்.
 
அவர்கள் அவ்வாறு வருவதனுடைய உட்போருளே
1.ஒரு மனிதன் எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றானோ அந்தத் துன்பத்தை நீக்கி
2.அந்தத் துன்பத்தை உருவாக்கிய அந்தக் காரமான தீய உணர்வின் சக்தியை விலக்கச் செய்து
3.ஆற்றல்மிக்க உள் உணர்விலே தோன்றிய நல்ல உணர்வின் அணுவின் ஆற்றலை அவர்களிடம் உருவாக்கச் செய்வதற்குத்தான்.
 
உதாரணமாககருணைக் கிழங்கு விஷத்தின் தன்மை கொண்டிருந்தாலும் அதிலுள்ள விஷத்தை நீக்கிய பின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு நம் சரீரத்திற்குள் சத்தாக ஆகின்றது.
 
அதைப் போன்று அரிசி உருவாவதற்கு அந்த உமியே பிரதானமாகின்றது. இவ்வாறு கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும் அதே ஆற்றல் உடலுக்குள் சென்று விட்டால் தீயதை விளைவிக்கும்.
 
கடுமையான அந்தச் சுவாசத்தைச் சுவாசித்தாலும் நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் கலந்து விடுகின்றது.
 
நெல்லின் உமியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக் கூடிய அரிசியை நாம் எவ்வாறு பெற்றோமோ அதைப் போன்று அந்த மகரிஷிகள்
1.விஷத்தின் ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய இயக்கும்…”
2.அந்த உணர்வின் ஆற்றலைச் சுவாசிப்பதற்குத்தான் அவர்கள் பெற்று
3.அவர்கள் பெற்ற அந்த உண்மையினுடைய நிலைகளை மனிதன் உடலிலே செலுத்தி
4.அங்கே துன்புறுத்தும் உணர்வலைகளை நீக்கினார்கள்.
 
ஏனென்றால் அந்த உடலுக்குள் தான் துன்புறுத்தும் உணர்வான அணுக்கள் விளைகின்றது. அந்த விளைந்த அணுவின் தன்மையை அதை நீக்குவதற்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியினை
1.யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ அவர் உடலிலே
2.அந்தச் சுவாசத்தைப் பாய்ச்சி உணரச் செய்தார்கள்.
 
அங்கே இருக்கக்கூடிய துன்பத்தின் உணர்வலைகளை நெல்லின் உமியை நீக்கி அரிசியை எடுப்பது போன்று
1.மனித உடலுக்குள் துன்புறுத்திக் கொண்டிருக்கும் அந்தத் துன்பத்தை நீக்கி (உமியை நீக்குவது போன்று)
2.நல்ல வித்தான சத்தை அங்கே உருவாக்கினார்கள் மகரிஷிகள்.
 
உதாரணமாகதங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடன் அதிலே கலந்திருக்கக் கூடிய பித்தளை மற்ற மட்டமான சரக்குகள் எல்லாம்  ஆவியாக மாறுகின்றது.
 
அதைப் போல மகரிஷிகள் அவர்கள் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு
1.ஒரு மனிதன் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய சுவாசத்திலே
2.”இவர்கள் பெற்ற ஆற்றலைச் செலுத்தி…” அங்கே இன்புறச் செய்கின்றார்கள்.
 
அவ்வாறு அவர்களை இன்புறச் செய்து அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கச் செய்து அந்த உடலிலிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வலைகளை இவர்கள் சுவாசித்து தன் உடலிலே ஆற்றல் மிக்க  சக்திகளாகப்  பெற்றார்கள்.
 
ஆகவே…
1.அந்த மகரிஷிகளைப் போன்றே நாமும் விஷத்தை அடக்கி அதை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி… அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

October 25, 2025

“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்

“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்


இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் எத்தனையோ பேரைப் பார்க்க நேருகின்றது… சந்திக்க நேர்கிறது. அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று நாம் தவம் இருக்க வேண்டும்.
 
என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நான் பார்ப்போருக்கெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
 
என் பையன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில்
1.கஷ்டத்தை நினைத்துச் சொன்னீர்கள் என்றால் முதலில் இந்தக் கஷ்டம் வரும்.
2.இது கலந்த உடனே மீண்டும் ந்த நினைவைத் தான் தூண்டும்.
 
ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார் என்றால்…
1.அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.விஷத்துடன் கலந்து மீண்டும் அவன் செய்தது தான் நினைவுக்கு வரும்.
 
ஆகவே அதை நாம் மறக்க
1.மகரிஷிகள் அருள் சக்திகளை முதலிலே எண்ணி எடுத்து
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் என்னைப் பார்ப்போருக்கெல்லாம்
3.நான் நினைப்பவர்களுக்கெல்லாம் என்னை நினைப்பவர்களுக்கெல்லாம்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் ப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.
 
ஏனென்றால் நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.
 
எனக்கு எந்தெந்த சக்திகளைக் குருநாதர் எப்படிக் கொடுத்தாரோ அந்த முறைப்படித் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
 
முன்பெல்லாம் சிறுகச் சிறுகச் சொல்லி நினைவாற்றலை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது
1.து அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒருமித்த நிலைகளாக நினைவாற்றல் கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் குரு அருளால் மகரிஷியின் அருள் ஒளியைப் பெற்று இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் நிலைகளாக அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
 
ஆலயத்திற்குச் சென்றாலும் அல்லது மற்ற குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அங்கே நாம் களைத்துப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போய் அமர்ந்த உடனே அந்தக் களைப்பால் “உஸ்ஸ்ஸ்… அப்பா…!” என்ற பெருமூச்சாகச் சோர்வின் தன்மையை வெளிவிடுகின்றோம்.
 
அப்பொழுது அந்த நேரத்தில் அந்த இடத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து
2.இந்த இடம் முழுவதும் அந்தச் சக்தி பட வேண்டும்.
3.இந்தக் குடும்பங்கள் முழுவதும் மகிழ்ச்சி படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
 
எந்த நோயாளியைப் பார்க்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
காலையில் எழுந்திருக்கும் பொழுதும் மற்ற அலுவல்களுக்குச் செல்லும் பொழுதும் தொழில் செய்யும் பொழுதும் இரவு படுக்கப் போகும் முன்பும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
 
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.
 
தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அங்கே மகிழ்ந்த நிலை உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள். எந்தத் தொழில் செய்தாலும் இதைப் போல் நினைவில் கொள்ளுங்கள்.
 
1.உணவு உட்கொள்ளும் பொழுதும் அந்த உணவுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி படர்ந்து
2.அந்த உணவு எனக்குள் “உடல் நலம் பெறும் சக்தியாகப் பெருக வேண்டும்…” என்று எண்ணுங்கள்.
 
மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கேட்க நேர்ந்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.
 
1.நம்மை யார் துன்புறுத்தினாலும் அவர்களுடைய உணர்வு நமக்குள் பதிவாகாதபடி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு
3.என்னைப் பார்ப்பவருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்
4.என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
5.எல்லோரும் போற்றும் நிலையாக அவர் வளர வேண்டும் என்று எண்ணத்தைப் பரப்புங்கள்.
 
உடலில் உபாதைகள் எது இருந்தாலும் அந்த உபாதைகளை எல்லாம் மறந்து விடுங்கள்…!
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.புருவ த்தியில் எண்ணி உணர்வுகளை உடலுக்குள் கொண்டு போங்கள்.
2.உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
 
நம் இன்னொன்றையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து குடும்பத்தில் கர்ப்பமற்றிருக்கும் காலங்களில் தத்துவங்களைப் போதித்தும்
1.விண்ணுலக ஆற்றலை… அந்த அகஸ்தியன் கண்டறிந்த உணர்வைச் சிலரும்
2.வியாசகர் காட்டிய தன்மையைச் சிலரும் கருவிலே வளரும் குழந்தையிடத்தில் உருவாக்கினார்கள்…”
 
பண்டைய காலத்தில் இவ்வாறு வளர்ந்தவர்கள் அனைவரும் தவயோகிகளாகவும் பெரும் ரிஷிகளாகவும் உருவாக்கப்பட்டு…” அந்தக் குழந்தைகள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அதை வளர்த்த தாய் தந்தையர் பிறவா நிலை அடையவும் அதுவே காரணமாக அமைந்தது.
 
தன்னால் முடியவில்லை என்றாலும் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட சக்தியை அன்று உருவாக்கினார்கள்.
 
1.இதைப் போன்ற கலாச்சாரத்தை நாமும் நம் குடும்பத்தில் கொண்டு வந்து
2.ருள் ஞானிகளை உருவாக்கி அவர்கள் துணையால் நாமும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
3.இனி வரக்கூடிய எதிர்கால சந்ததியினரும் அந்த வழியிலேயே வளரும்படி நாம் செய்தல் வேண்டும்.
 
ஆகவே
1.நம் குரு காட்டிய வழிகளில் அவர் ஆற்றலை நமக்குள் பெற்று
2.எல்லோருக்கும் மகிழ்ந்திடும் நிலைகள் பெற நாம் தியானிப்போம்
3.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.

June 25, 2025

சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்

சிறிதளவு பேரையாவது உண்மைகளை உணரச் செய்து உலகைக் காக்கும் சக்திகளாக உங்களை வளர்க்க வேண்டும் என்பதே எம்முடைய நோக்கம்


கருப்பை இல்லை… அதனால் குழந்தைப் பாக்கியம் இல்லை என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில் கணவன் மனைவியாக எம்மிடம் வந்து “எங்களுக்குக் குழந்தை வேண்டும்” என்று கேட்டார்கள். யாம் ஆசீர்வாதம் கொடுத்த பின் குழந்தை கிடைத்தது.
1.அதைப் பற்றிப் பெருமைப்பட்டார்கள்.
2.ஆனால் அதற்குப்பின் சாமியைத் திரும்பி பார்த்தார்களா…? என்றால் இல்லை.
3.ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னிடம் வந்து எதையும் கேட்கவில்லை.
 
ஒரு முறை வீட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பின் எம்மைச் சந்திக்கவும் இல்லை.
 
அப்பொழுது ம்முடைய அருள் உபதேசங்கள் எல்லாம் என்ன…?
 
உங்கள் எண்ணம் தான் உங்களுக்குள் (அந்த உணர்வுக்குள் குழந்தை கருவாகி) எப்படிப் பதிவாகின்றது…? அதனால் நான் செய்தேன் என்று எண்ண வேண்டியதில்லை என்று அவர்களுக்கு உணர்த்தினோம்.
 
ஆக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சாமி செய்கிறார் என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கின்றது…?” நம் எண்ணத்தால் தானே உருவாகின்றது என்று…!
 
1.எண்ணத்தின் உணர்வு கொண்டு உயிர் என்ன செய்கிறது…? என்று யாம் சொல்கின்றோம்.
2.அதற்குண்டான ஒரு நல்ல கருவை ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
3.ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்தப் பருவம் வர வேண்டும் அல்லவா.
 
பின் இதை எதற்காகச் (அவர்களுக்கு) செய்தோம்…?
 
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது அந்த இணக்கங்கள் நல் வழியை உயர்த்தும்
2.இது என் குருநாதர் எனக்குச் சொன்னது…!
 
போற்ற வேண்டும் என்று நான் செய்தேன் என்றால் தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். நல்லவைகள் மறைந்து கொண்டுதான் இருக்கும்.
1.அனுபவரீதியிலே கொண்டு வருவதற்குத் தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
2.சிறிதளவு பேராவது இந்த உண்மைகளை உணர்ந்தால் தெளிவாக இருக்கும்.
 
ஒரு நோயாளி தன் நோயைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் இதே உணர்வுகள் தான் எல்லோருக்கும் இயக்கப்பட்டு அந்த நோய் தான் மற்றவருக்கும் பரவுகின்றது.
 
ஆனால் அருள் ஒளியைப் பெற்று நல்லதாகும் பொழுது இதே வாக்கினை நீங்கள் சொன்னீர்கள் என்றால் உங்கள் வார்த்தைகளைக் கேட்டால் தீமைகளை அது அகற்றும்.
 
விளம்பரம் செய்யாததின் நோக்கங்கள் என்ன…? என்றால்
1.ஆசையை ஊட்டி விட்டோம் என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதை குறிக்கோளாக வைத்து வந்தார்களோ அது தான் கிடைக்கும்.
3.அதன்படி கிடைத்து வந்தாலும் அதைப் பாதுகாக்கும் சக்தி இழந்து விடுகின்றார்கள்.
 
சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…! யாம் கொடுக்கும் அருள் சக்திகளைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் வளர்ப்பதில்லை
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதுமில்லை.
 
ஆரம்பத்திலிருந்து இதைத்தான் நாம் தெளிவாக சொல்லிக் கொண்டு வருகின்றோம் எத்தனையோ பேர்களை குருநாதர் காட்டிய வழியிலே நாம் தபோவனத்தில் பார்த்திருக்கின்றோம் அல்லவா…!
 
ஆகவே அந்த அசுத்த உணர்வு எப்படிப் போகின்றது…? அதனுடைய தாக்கத்திலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? து மிகவும் முக்கியமானது.
 
ஓசோன் திரை கிழியப்பட்டு எந்தெந்தப் பகுதியில் அதன் வழி விஷத் தன்மைகள் வருகிறதோ அங்கே அது பரவுகின்றது. ஆனால் ஒரே இடத்தில் நிற்காது.
 
விஷத்தன்மைகள் பூமிக்குள் பரவினாலும் தன் இனத்தைச் சேர்த்து ஒரு குவியலாக வரும். குறிப்பிட்ட இடத்தில் தான் சுழன்று கொண்டிருக்கும் எல்லா இடத்திலும் வராது.
 
அப்பொழுது இந்த ஊரையும் தெருவையும் நாம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
அருள் ஒளி பெற வேண்டும் என்று” எல்லோரும்
1.ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் பரவச் செய்து இந்த அலைகளைப் பரப்பி விட்டீர்கள் என்றால்
2.இந்த உணர்வு பரவிய பின் அந்த விஷத்தன்மைகளை இது விக்கி விட்டு விடும்.
3.இந்த ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்டு நிற்கும்.
 
தைச் செய்வதற்கு தானே யாம் திரும்பத் திரும்ப இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.