ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label விஷத்தின் ஆற்றல். Show all posts
Showing posts with label விஷத்தின் ஆற்றல். Show all posts

June 12, 2026

துருவ நட்சத்திரத்தின் இயல்பு

துருவ நட்சத்திரத்தின் இயல்பு


மனிதனாகப் பிறந்து வளர்ச்சி பெற்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறிதொரு தீமைகளையோ பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளையோ வேதனை உணர்வுகளையோ எடுத்துக் கொண்டால் உடலில் அது விளைந்து விஷமான அணுக்களாகப் பெருகுகின்றது…”
 
அதனால் இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்று விடுகின்றது.
 
ஆக இந்த உயிர் எத்தகைய விஷத்தின் தன்மையைச் சேமித்து வைத்ததோ இதைப் போல விஷத்தைக் கொண்டு ஜீரணித்து வாழக்கூடிய உயிரினங்களுக்கு அழைத்துச் சென்று விடும்.
 
1.மாடு ஆடு யானை எல்லா உயிரினங்களிலும் பார்க்கலாம் நாமும் சரி பித்தப்பை என்பது கடுமையான விஷம்.
2.பழுவிலிருந்து எல்லா வகையிலும் எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
3.அந்தப் பித்தம் சிறிதளவு மனித உடலில் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தி குறையும்…”
 
ஒரு சிலர் பித்தப்பையை எடுத்தே வாழ்வார்கள். சேமிக்கும் தன்மை கொண்டு வடிகட்டும் நிலை… அதாவது இரத்தத்திலிருந்து மீண்டும் பித்த சுரப்பிகள் சேமிக்கும் நிலை இல்லை என்றால் அது நம் உடலிலேயே கவர்ந்து கொள்ளும்.
1.ஆனால் பித்தப் பையில் கல் உருவாவதால் தான் அதை நீக்குகிறார்கள்.
2.காரணம் அந்த நஞ்சு உறைந்து கல்லாகிறது.
 
ஆனால் விஷத்தை அதிகமாக எடுக்கும் பாம்பினங்களுக்கோ அதிலே உறைந்து நாகரத்தினமாக மாறுகிறது. இதே போல் பித்தப்பை உள்ள மற்ற உயிரினங்களிலும் இது போல் விஷத்தின் சேமிப்பு அதிகமானால் அந்தக் கற்கள் வைரக் கல்லாக மாறும்.
 
பித்தம் அதிகரிக்கும் போது அந்த உணர்வுகளைச் சேமிக்க என்று ஒரு தனிப் பை இருக்கும்.
1.பாம்பினங்களுக்கு வைரக்கல்லாக மாறுகின்றது.
2.அந்த விஷம் ஒடுங்கி ஒளியாக மாறுகின்றது
 
ஏனென்றால் விஷம் தாக்கித் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு ஒளியாகின்றது. இது இயற்கையின் நியதிகள். இதைப் போன்று விஷத்தின் ஆற்றல்…” மிகச் சக்தி வாய்ந்தது.
 
இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்றால் புழுவில் இருந்து மனிதனாக நாம் வளர்ச்சி பெற்று வந்த நிலையை இந்த சரித்திரத்தை சிறிதளவாவது இந்த மனித உடலில் ஏற்றுக் கொண்டு அதை நீக்குவதற்குத் தான்…!
 
ஆக இதையெல்லாம் நீக்கியவன் யார்…?
 
அகஸ்தியன் என்று பின் கூறும் அந்த ஞானி இந்த நஞ்சை எல்லாம் மாற்றி அமைத்து
1.கணவன் மனைவி இருவரும் ஒன்றாகி அந்த விஷத்தை அடக்கி
2.ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.உங்களை அதனுடன் இணைத்துக் கொண்டு வரப்படும் பொழுது
4.“உங்கள் உடலில் உள்ள அணுக்களும்…” நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்ச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்ளும்.
 
குருநாதர் இப்படித்தான் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் சொல்லிக்
1.கடைசியில் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் கொண்டு வருவார்.
2.அதைத்தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

November 21, 2024

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?


அக்ரிகல்ச்சரில் விவசாய நிலங்களில் களைகள் முளைத்தால் களைக் கொல்லிகளைப் போடுவார்கள். முதலிலே உழுகும் பொழுது களைக்கொல்லிகளை மண்ணிலே தெளித்து விட்டால் அந்தக்ளைகளுக்குக் கிடைக்கும் சக்திகளைக் குறைத்து விடுகின்றது.
 
ஆனால் அதே சமயத்தில் களைக்கு வரும் விஷம் வேறு பயிரினங்களுக்கு வரும் விஷம் வேறு. இதை மாற்றி அமைத்துத் தடுக்கும் சக்தி கொடுக்கப்படும் பொழுது விஷத்தின் ஆற்றலை அதிகமாகக் கொடுத்துப் பயிரினங்களை வளர்க்கச் செய்கின்றனர்.
 
பயிரினங்களில் விஷத்தன்மைகளைப் போட்டு வித்துக்களை வளர்க்கப்படும் பொழுது
1.களைகளை அடக்குகின்றது… பயிரைக் காக்கின்றது ஆனால் திலே விளைந்த வித்துக்களில் என்ன செய்கிறது…?
2.விஷம் கலந்த வித்துக்களாக உருவாகின்றது
3.மனிதன் இதைச் சுவாசித்து உணவாக உட்கொள்ளும் பொழுது விஷத்தின் தன்மை ரத்தத்திலே கலந்து
4.உடலில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது.
 
யிரைக் காக்க விஞ்ஞானத்தின் மூலம் மருந்துகளை உபயோகப்படுத்துகின்றான். ஆனால் அதே சமயத்தில் மனிதனுக்குள் இந்த நிலை ஆகிவிடுகின்றது.
 
இதே போல பருத்திச் செடிகளில் தண்டுப்புழு என்று உருவாகும். அதைக் கொல்வதற்காகப் பல விஷங்களை இடுகின்றனர் ஆனால் இப்படிப் போடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை பருத்திகளிலே கலந்து விடுகின்றது.
 
அப்படி விஷத்தின் தன்மை தோய்ந்தபின் அதைடையாக உருவாக்கும் நிலைகளில்
1.அந்த ஆடைகளை நாம் அணிந்தால் அந்த விஷத்தினைக் கவரும் நிலையாகின்றது
2.நம்மை அறியாதபடி உடலிலே பல நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.
 
ஆடைகளிலே விஷத்தன்மை கொண்ட பல கலர்களை இடுகின்றனர். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் அது எத்தகைய விமோ காற்றிலே அந்த விஷத்தின் தன்மை ஆவியாகப் பரவிச் செல்வதை ழுத்து நம் சுவாசத்திற்கு கொண்டாருகின்றது.
 
நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று ரத்தங்களிலே கலக்கப்பட்டு உடலில் விஷத்தன்மையாக பரவுகின்றது.
 
சிலர் கருப்பு நீம் இதைப் போன்ற நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து சுவாசித்தார்கள் என்றால்
1.அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்
2.மனநோய் பிடித்த மாதிரி அடிக்கடி சஞ்சலமாகக் கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.
 
அந்த ஆடைகளில் இருக்கக்கூடிய நிலைகள் இவ்வாறு செய்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு அந்த ஆடை தான் பிடிக்கும். வெண்மையான ஆடையாக இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது.
 
விஷம் கொண்ட நிறங்களாகச் சேர்க்கப்படும் பொழுது அந்த நிறத்தை உருவாக்கும் ஆவியின் தன்மை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது
 
நம் உடலில் ஆடையாக அணிந்த நிலையில் காந்த்த்தால் ஈர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றி விடுகின்றது. சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வலைகள் ரத்தத்தில் கலந்து உடலிலே பெருகத் தொடங்குகின்றது.
 
அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சேலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள் நல்ல சேலைகளை ஒதுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த உணர்வு பெற்றபின் அதே உடைகளைத் தான் எடுப்போம் அந்த உணர்வுக்கொப்பதான் அது செயல்படுகின்றது.
 
கடந்த காலங்களில் அன்றைய ஞானிகள் இயற்கையின் உணர்வின் தன்மையை தாவர இனங்களில் இருந்து
1.விஷத்தை நீக்கும் தாவர இனங்களாக
2.ஒன்றுடன் ஒன்று இணைந்தால் விஷத்தினை நீக்கும் தன்மை பெற்று ஆடைகளுக்கு நிறத்தைக் கொடுத்தார்கள்.
 
தாவர இனங்களின் விஷத்தின் தன்மை
1.அந்த மணத்தைக் கண்ட பின் யானையோ, புலியோ நரியோ கொசுவோ அவைகள் விலகிச் செல்கின்றனவோ
2.அதைப் போன்ற நிலைகளை ஆடைகளிலே கலந்துவிட்டால் “விஷத் தன்மை கொண்ட கொசுக்கள் நம் அருகில் வருவதில்லை…”
 
ஏனென்றால் அனுபவரீதியிலே அந்தப் பச்சிலைகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வினைக் கலக்கச் செய்து சாயத்தை உடையிலே ஏற்றுவார்கள்.
 
இதே போன்று பண்டைய கால ஆலயங்களிலே பார்த்தோம் என்றால் பச்சிலைகளைக் கொண்டுதான் அங்கே வர்ணங்களைத் தீட்டியிருப்பார்கள். அதிலே கெமிக்கல் கலந்த சாயங்கள் கிடையாது.
 
கடந்த கால கோவில்களில் இதைப் போல வர்ணங்களைத் தீட்டப்படும் பொழுது அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை பதிவாகின்றது.
 
1.அந்தப் பச்சிலை விஷத்தின் தன்மைகளை எப்படி நீக்கியதோ அதைப் போல அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆன பின்
2.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை நீக்கிடும் உணர்வைச் சுவாசித்து அதைக் கவரும் சக்தியாக நம் உடலில் உருவாகின்றது.
 
இது எல்லாம் மெய் ஞானிகள் செய்த நிலைகள்.
 
பண்டைய கால கோவில்களுக்கும் இன்றைய ஆலயங்களுக்கும் இந்த வித்தியாசங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
 
இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…? விஞ்ஞானம் வளர வளர ஞ்ஞானமாக வாழ்கின்றோம்.
1.ஆனால் மெய்ஞானத்தால் ஞ்ஞானம் அகற்றப்படுகின்றது.
2.இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்

April 29, 2024

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைக் குறைத்துக் குறைத்து… குறைத்துக் குறைத்து… விஷத்தை நீக்கிடும் உடலாக (மனிதன்) இந்த உயிரால்தான் நாம் பெற்றோம்.

அதாவது… ஒவ்வொரு உடலிலும் நுகர்ந்ததை உயிர் உருவாக்கியது
1.உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கியது
2.நஞ்சினை நீக்கிடும் உடலாக மனிதனாக உருப்பெற்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றிவிட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இருப்பினும் அதிகமான நஞ்சினை சேர்க்கப்படும் பொழுது குறைந்த நீரை வைத்து அதைச் சுத்தப்படுத்த முடியுமா…? என்றால் முடியாது.
1.அதிக அளவில் எடுக்கும் இந்த உணர்வுகள்
2.நஞ்சினை நீக்கும் சக்தி நமக்குப் போதுமானதாக இல்லை.

இந்த உடல் நஞ்சினை நீக்கும் ஆற்றலாகப் பெற்றாலும்… இந்த உடலில் இருந்து வரக்கூடிய மணம் நஞ்சு என்றும் அறிந்து கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதற்குப் பெயர் கார்த்திகேயா என்று தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றலைத் தெரிந்தும்… உணர்ந்தும்… நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலில்
1.நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் அது வெளிப்படும் பொழுது
2.புறத்திலிருந்து வரும் ஒரு வேதனைப்படும் உணர்வை இதனுடன் கலக்கப்படும் பொழுது
3.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் இருந்தாலும் நஞ்சு கொண்ட (வேதனையை) உணர்வினை நுகரப்படும் பொழுது நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைகின்றது.
4.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைந்தால்… நஞ்சினை வளர்த்திடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இருந்தாலும் மனிதனாக ஆனபின் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது… “அகஸ்தியன் - துருவ நட்சத்திரமாக ஆனது…”

கருவிலே அவன் இருக்கப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் தாவர இனங்களை எல்லாம் அகஸ்தியனின் தாய் தன் உடலிலே பூசிக் கொண்டு… நஞ்சு கொண்ட விலங்குகளிலிருந்து காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றது.

அப்போது… தாய் நுகர்ந்த அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைக் கருவிலிருக்கும் அந்த அகஸ்தியன் என்ற சிசுவும் பெறுகின்றது.
1.அவன் பிறந்த பின் நஞ்சினை வென்றிடும் சக்தி பெறுகின்றான்
2.நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்கின்றன்
3.நஞ்சின் இயக்கச் சக்தியை உணர்கின்றான்.

நஞ்சினை மற்ற பொருள்களுடன் சேர்த்த பின்… அதிலே எந்தெந்த மணம் இருக்கின்றதோ அதை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்பதை “அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் காணுகின்றான்.
1.நஞ்சு இல்லாத தாவர இனம் இல்லை
2.நஞ்சு இல்லாத கோள்கள் இல்லை
3.நஞ்சு இல்லாத அணுக்கள் இல்லை என்ற நிலைகளையும் அறிகின்றான்.

நஞ்சின் அளவுகோல் அதிகரிக்கப்படும் பொழுது… அது ஒரு பொருளை அதிக வீரியமாக மாற்றி விடுகின்றது.

நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது மிளகாயில் காரம் அதிகரிக்கிறது… நஞ்சின் தன்மை அதிகரிக்கும் பொழுது கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது. எப்பொருளில் இந்த நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்த கசப்பான உணர்ச்சிகளை ஊட்டும் வலிமை பெறுகின்றது.

நெல் வகைகளை எடுத்துக் கொண்டால் அதிலே நஞ்சின் இயக்கச் சக்தி குறைவு. ஆகவே உணர்வின் தன்மை அதற்குள் சுவைமிக்கதாக… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் நிலைகள் அங்கே விளைகின்றது.
1.இப்படி… சாந்தம் கொண்ட உணர்வுகளில் நஞ்சு கலந்தால்
2.நஞ்சினைக் குறைக்கும் நிலைகளில் தாவர இனங்களும் விளைகின்றது.

இந்த உண்மையின் உணர்வுகளை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான் அகஸ்தியன்.

தாய் கருவில் இருந்து வெளிவந்த பின்…
1.அவன் உடல் இவனிடம் நஞ்சு வராதபடி
2.”அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம்” அந்த நஞ்சையே வென்றிடும் சக்தியாக பெறுகின்றது.

“இவனின்று வெளிப்படும் உணர்வுகளோ” மற்ற நஞ்சின் தன்மை வந்தாலும் தனக்குள் அருகில் வராதபடி பாதுகாத்துக் கொள்கிறது. இந்த உணர்வின் துணை கொண்டு உலகில் நஞ்சின் இயக்க உணர்வை முழுமையாக அறிந்தான்.

உலகம் எப்படி இயங்குகிறது…? என்று அதனின் வலுவின் தன்மை அறியும் சந்தர்ப்பம் அவனுக்குள் உருவானது. அப்படி உருப்பெற்ற உணர்வு தான்
1.வானுலகில் இருந்து வரும் மின்னலாக இருந்தாலும்… அதைக் காட்டிலும் இடி மின்னலாக இருந்தாலும்
2.அவன் உற்று நோக்கினால் அது எல்லாம் அவனுக்குள் ஒடுங்குகின்றது
3.ஒடுங்கும் போது உணர்வின் ஒளியின் கதிராக அவனுக்குள் வளரும் தன்மை வருகின்றது.

ஐந்து வயதிற்குள் இதை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான்.

வானுலக இயக்க உணர்வு… நஞ்சின் மோதலால் ஏற்படும் (விஷக்கதிரியக்கத்தால் ஏற்படும்) மின் அணுக்களின் தாக்குதல் தான் மின்னல்…!

அந்த விஷத்தின் மோதலினால் அணுக்கள் பரவலாகச் சிதறும் போது மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.அந்தக் கோளின் சக்தியை இயக்கச் சக்தியாக அதற்குள் வலுவூட்டி
2.எதனுடன் எந்த உணர்வின் சத்து கலந்ததோ அதிலே இது கலந்த பின்
3.அந்த உணர்வினை இயக்கும் சக்தியாக மாறுகின்றது என்பதனை அகஸ்தியன் உணர்கின்றான்.

ஏனென்றால் அவனுக்குள் ஒரு மின்னணுவின் தாக்குதல் வரப்படும் பொழுது… அதை அடக்கி அந்த உணர்வின் சத்தை உணரும் பருவம் பெறுகின்றான்.

மின்னல் தாக்கப்படும் பொழுது தாவர இனங்கள் கருகுகின்றது மற்ற பொருள்களும் கரைகின்றது. அது விஷம் கொண்டது
1.ஒன்றுடன் ஒன்று அந்தக் கதிரியக்கப் பொறிகள் தாக்குவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்… அது இவனுக்குள் அடங்கும் சக்தி வருகின்றது.
2.நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் உற்று நோக்கி அதன் உணர்வின் இயக்கங்களை அறிகின்றான்

அப்பொழுதுதான் “துருவன்” என்று அவனுக்கு காரணப்பெயர் வருகிறது.

April 1, 2024

விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றும் “நீலகண்டனாக நாம் ஆகவேண்டும்”

விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றும் “நீலகண்டனாக நாம் ஆகவேண்டும்”

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று...
அறிவை அறிவால் அறிதலே நன்று...!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது...! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்...!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்...
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு...
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து...
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது...!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்... உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது...!”

ஓ...ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ...ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி... “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளி காந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்...! (நீலகண்டா...! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்).

July 4, 2023

வேதனை வந்த பின் நம்மால் நல்லதைச் சிந்திக்கவே முடிவதில்லை… ஏன்…?

கீதையிலே சொல்லப்பட்ட உண்மை “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” எந்தக் குணத்தை நீ சுவாசிக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!”

உதாரணமாக… மாம்பழம் வேண்டும் என்று எண்ணும் பொழுது அதைத் தேடிச் செல்கிறோம். அதைச் சுவாசித்துக் கடைக்குச் சென்று அதை வாங்கும்படி செய்கின்றது. வாங்கிய பின் அதை ரசித்துச் சாப்பிடுகின்றோம். “மாம்பழம் வேண்டும் என்கிற போது இவ்வாறு செய்கிறோம்…”

அதைப் போல் மூஷிகவாகனா…! ஒருவர் குற்றம் செய்கிறார் என்று பார்த்த பின் அவரை உதைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்… அந்த உணர்வை எண்ணும் போது சுவாசிக்கின்றேன்.
1.அதே உணர்வு கொண்டு கம்பையோ மற்ற ஒரு ஆயுதத்தையோ எடுத்து அவனை அடிக்க வேண்டும் என்று செல்கின்றேன்.
2.ஆனால் இங்கே மாம்பழம் வாங்க வேண்டும் என்றால் கூடையை எடுத்துச் சென்று அதை வாங்கிச் சாப்பிடுகின்றோம்
3.அதனால் தான் நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய் என்று கீதையில் சொல்லப்பட்டது.

இன்றைய செயல் நாளைய சரீரம்…! இதற்கு முன் நல்லதைப் பெற வேண்டும் என்று எத்தனையோ சரீரங்களில் எடுத்தது பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக உருவாக்கியது.

“வராக மூர்த்தி…” என்று காட்டியது போன்று முந்தி நாம் பன்றியாக இருக்கும் பொழுது கெட்டதை எண்ணாது… நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்துள்ள நல்ல பருப்பைச் சுவாசித்து… அதை உணவாக எடுத்து வளர்ந்து மனிதனாகக் கொண்டு வந்தது.

ஆக மனிதனாக வளர்ந்து வரும் போது உடலில் உள்ள நாற்றத்தைச் சிறுக சிறுக அப்புறப்படுத்திவிட்டு
1.நல்லதைச் சிந்தித்து…
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய சக்தியாக
3.நல்ல உடலை மனிதனாகப் பெற்றிருக்கின்றோம்..

நல்ல சுவைமிக்க உணவை உட்கொண்டாலும் நம்முடைய மலம் நாற்றமாகின்றது.

ஆடு மாடு மற்றும் மிருகங்கள் கெட்டதைச் (விஷமானதை) சாப்பிட்டாலும் அந்தக் கெட்டதை உடலாக மாற்றுகின்றது ஆனால் நல்லதை மலமாக மாற்றி விடுகின்றது… அது நாற்றமாவதில்லை… நல்லதைத்தான் அது கழிக்கின்றது

வராக மூர்த்தி என்று அதனால் தான் பன்றித் தலையைப் போட்டு மனித உடலாகக் காட்டி இருக்கின்றார்கள்.

பன்றியாக இருக்கும் போது நாற்றத்தை நினைக்கவில்லை. அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்த்து… நல்ல சுவாசத்தை எடுத்து நல்ல பருப்பை எடுத்தது.

அதிலே சேர்த்துக் கொண்ட அந்தச் சத்து தான்… படிப்படியாக… படிப்படியாகக் கெட்டதை நீக்கி… மனிதனாக இன்று வளர்ந்து இருக்கின்றோம். நாம் சாப்பிடுவது… நினைக்கிறது அதில் உள்ள விஷத்தை எல்லாம் கழிக்கின்றது மனித உடல்

ஆனால் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்…?

என் பையன் நல்லவனாக வேண்டும் என்று ஒரு தடவை நினைக்கின்றோம் ஆனால் சேட்டை செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே… என்று வேதனைப்படுகின்றோம்.
1.இதைப் பல முறை எண்ணுகின்றோம்.
2.இப்படிப் பல முறை தியானம் செய்தால் என்ன ஆகும்…? வேதனை தான் விளையும்.

வியாபாரத்தில் ஒருவருக்குக் கடனாக கொடுக்கின்றோம். கடனைக் கொடுத்த பின்பு நான் கொடுத்தேன்… அவன் திருப்பிக் கொடுக்கவில்லை… நான் கொடுத்தேன் கொடுக்கவில்லை… கொடுக்கவில்லை… என்று இப்படிப் பண்ணுகின்றார்களே இப்படிப் பண்ணுகின்றார்களே…! என்று வேதனையைத்தான் வளர்க்கின்றோம்.
1.ஒரு தடவை நல்லது செய்கின்றோம்.
2.ஆனால் பல தடவை வேதனையைத்தான் வளர்க்கின்றோம்… வேதனை தான் உடலுக்குள் வளர்கின்றது,

இதை மாற்ற முடிகிறதா…? நல்லதைச் சிந்திக்க முடியாதபடி போய் விடுகின்றது அதைத் தான் தியானம் பண்ணுகின்றோம். இதைப் போன்ற உணர்வின் தன்மைகள் எல்லாம் விஷம்.

விஷம் (வேதனை) அதிகமாகும் பொழுது…
1.அந்த விஷத்தை உடல் கழிக்க முடியாதபடி இரத்தத்துடன் கலந்து எல்லாமே நஞ்சாக மாற்றி விடுகின்றது.
2.கழிக்கக்கூடிய திறனை இழந்து விட்டால் எல்லாம் நஞ்சாகி நல்ல குணங்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலில் நஞ்சை அதிகமாகச் சேர்த்தால் நஞ்சின் வாசனை உயிராத்மாவில் அதிகமாகி… எவ்வளவு அளவுகோல் கொண்டு அதைச் சேர்த்திருக்கின்றோமோ மிருகங்களில் எந்த நஞ்சு இருக்கிறதோ அங்கே தான் போகும். அது “லபக்…” என்று நம் உயிராத்மாவை இழுத்துக் கொள்ளும்.

அங்கே தான் நாம் பிறப்போம். அதை உறுதியாக்க முடியும்… மனிதனாகப் பிறப்பது உறுதி இல்லை.

ஆனால் நாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
1.ஞானிகள் கண்ட வழியில் சென்றால் தான் துன்பத்தைத் (நஞ்சை) துடைக்க முடியும்… உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.
2.இதைத் தவிர வேறு வழி இல்லை.

May 5, 2022

விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது...!

எத்தனையோ கோடி விதமான விஷ உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு நிலை உண்டு.

உதாரணமாக ஒரு நல்ல மருந்து இருக்கிறது… சுக்கு மிளகு திப்பிலி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.அதற்கு வீரிய சக்தி ஊட்ட வேண்டும் என்றால்
2.ஒரு விஷம் கலந்த செடியின் சத்தை இதனுடன் இணைக்க வேண்டும்.

அப்போது தான் சுக்கு திப்பிலியின் உணர்வுகளுக்குள் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவப்பட்டு அதற்குண்டான வீரிய உணர்வுகளை அது உருவாக்கும்.

ஆக விஷத் தாவரத்தை அதனுடன் இணைத்தால் தான் அந்த மருந்திற்கே சக்தி உண்டு. இதன் உணர்வு இப்படிச் செயல்படுவது போன்று தான் வைத்தியரீதியிலும் இதைச் செய்கின்றோம்.

பொதுவாக… இயற்கையின் அணுவின் தன்மையும் இதே போன்று தான் செயல்படுத்துகின்றது.
1.சூரியனிலிருந்து வெளிப்படுவது வெப்பம் காந்தம் என்று இருந்தாலும்
2.அதிலிருந்து பிரிந்து சென்ற விஷம் இதனுடன் மீண்டும் இணைந்தால் விஷம் இயக்கச் சக்தியாகவும்
3.அதனுடன் எந்தப் பொருள் இணைகின்றதோ அந்தச் சத்தின் மணத்தை வெளிப்படுத்தும் சக்தியாகவும் பெறுகின்றது.
4.இந்த விஷம் இல்லை என்றால் அந்த மணத்தை நாம் அறியும் தன்மை இழந்துவிடுகின்றோம் (நம்மால் அறிய முடியாது).

சில செடிகளில் விஷத்தின் தன்மை குறைந்திருந்தால் அந்த மணத்தை அறியும் தன்மையும் குறைவாகத் தான் இருக்கும்.

நல்ல மலர் இருப்பினும் அதில் உள்ள விஷத்தின் அளவுகோல் எதுவோ அதற்குத்தக்க அந்த மணத்தை விரிவடையச் செய்கிறது. விஷம் குறைந்தால் அந்த மலருக்கு மணத்தின் தன்மை வெளிப்படுத்தும் நிலைகளும் குறையும்.

ஆகவே விஷம் இல்லை என்றால் எதையுமே இயக்க முடியாது...!

அதற்குத் தான் பிரகலாதன் கதையைக் காட்டி இரண்யன் எனக்கு எதிலுமே இறப்பில்லை…! என்று சொல்வதாக… காற்றிலும் சரி… மழையிலும் சரி… நீரிலும் சரி… நெருப்பிலும் சரி… எனக்கு இறப்பு இல்லை என்று. விஷ்ணுவிடம் வரம் கேட்டுக் கொண்டான் என்று காட்டுகின்றனர்.

ஒரு பொருளின் தன்மையை நாம் நெருப்பில் இட்டுக் கொளுத்தினால் அல்லது வேக வைத்தால் அதில் உள்ள விஷம் பிரிந்து சென்றுவிடுகின்றது. ஆனால் இறப்பதில்லை.

இதைப் போல்
1.நம் உயிரும் நெருப்பில் பட்டால் இறப்பதில்லை
2.உயிருக்குள் இருக்கும் விஷமே துடிப்பின் இயக்கத்திற்குக் காரணமாகிறது
3.உயிர் இயங்க இந்த விஷமே மூலமாகின்றது.

ஒரு செடியில் இருக்கும் விஷத்தின் தன்மையே அதைப் பாதுகாக்கும் நிலையாக மற்ற செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது இது வீரிய சக்தி கொண்டு தள்ளிவிடும்… அல்லது நகர்ந்து ஓடும்.

ஆனால் அதே சமயத்தில் இன்னொரு வீரிய சத்தின் தன்மை இதனுடன் மோதி விட்டால் அது சுழலும். இவ்வாறு
1.சந்தர்ப்பத்தால் இணைவதும்
2.நகர்வதும்
3.இணைவதும்
4.உருமாறுவதும் என்ற நிலையில்
5.காற்று மண்டலங்களில் தாவர இனங்கள் மாறுபடும் நிலைகள் வருகின்றது.

தாவர இனங்கள் எப்படி மாற்றம் அடைகின்றதோ அதைப் போன்று தான் மனிதர்களான நமக்குள்ளும் எதிர்மறையான நிலைகள் வரும் போது நம் எண்ணங்களும் உணர்வுகளும் அதற்குத் தக்க இயக்கங்களும் மாறுகிறது.

உடலில் அணுக்களும் மாற்றமாகிறது. அதனால் உடலில் சில உபத்திரவங்களும் வருகிறது.

ஆனால் நஞ்சை வென்ற அகஸ்தியன்… துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் நாமும் அவனைப் போன்று விஷத்தை அடக்கி ஒளியாக மாற்றலாம்… நாமும் அழியா நிலையான ஒளிச் சரீரம் பெறலாம்.

அத்தகைய தகுதி ஏற்படுத்தும் நிலைகளுக்குத் தான் இதைப் பதிவு செய்கிறோம்.

August 27, 2021

“தனக்கு இறப்பே வரக்கூடாது...” என்று இரண்யன் வரம் வாங்கிக் கொண்டான் என்றால் அதனின் உட்பொருள் என்ன...?

 

நாம் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் தன் அருகில் இருக்கக்கூடிய பொருளை எல்லாம் அது காணச் செய்கின்றது.

இதைப் போன்றுதான் நமது உயிர் நமக்குள் ஒளியாக (வெளிச்சமாக) இருக்கின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தைத் தன் ஒளி கொண்டு அந்த உணரவின் குணத்தையும் மணத்தையும் நமக்குள் உணர்த்துகின்றது.. அறியச் செய்கிறது.

அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலைகள் அறியச் செய்கின்றது.

உயிர் நமக்குள் தீபமாக… சுடராக இருந்து நாம் எதை எண்ணுகின்றோமோ... அப்பொருளை நுகர்ந்த உணர்வின் துணை கொண்டு “அந்த உணர்ச்சியை ஊட்டி...”
1.உணர்வால் நம்மை அறியச் செய்கிறது
2,மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் என்ற நினைவுக்குக் கொண்டு வரும் நந்நாள்தான் தீப ஒளித் திருநாள்.

ஒரு அசுரன் இந்த உலகில் உள்ள மக்களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டுள்ளான். கிருஷ்ண பரமாத்மா கண்ணனாக உலகத்தில் தோன்றி அந்த அசுரனை வதம் செய்து வென்றான் என்று ஒரு சாரார் சொல்கின்றார்கள்... சாஸ்திரங்களிலும் இது காட்டப்பட்டுள்ளது.

முருகன் வழியில் எடுத்துக் கண்டால் அசுர சக்திகளை அகற்றி சூரபத்மனைக் கொன்று குவித்தான் என்றும் காவியங்கள் உண்டு. ஆனால்
1.அந்தக் காவியங்களில் தப்பில்லை.
1.அதில் உள்ள மூலக் கருத்தினைத் தான் நாம் தவறாகக் கருத்தில் கொண்டு வாழ்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.

காரணம் சூரியனை இயக்குவதும் அந்த விஷம் (நஞ்சு) தான். ..!

விஷத்தின் தாக்குதல் இல்லை என்றால் சுழற்சியின் வேகம் இல்லை. ஆனால் சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது நஞ்சினைப் பிளந்து ஒளியின் தன்மையாகப் பெறுகின்றது.

அதாவது…
1.சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது
2.அந்த வெப்பத்தின் நிலைகள் தாங்காது நஞ்சு பிரிந்து விடுகிறது
3.இருந்தாலும் அந்த நஞ்சினால் தான் வெப்பமாக ஆனது.

அதே போலத் தான் நமது உயிரின் துடிப்பிற்கு காரணமே இந்த நஞ்சு தான். நஞ்சின் இயக்கம் இல்லை என்றால் உயிரின் இயக்கமும் இல்லை.

உதாரணமாக ஒரு ரோஜாப்பூ இருக்கிறதென்றால் அதிலிருந்து வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நறுமணமாக இருக்கின்றது. ஆனாலும் அந்த மணத்தை வீசச் செய்வது உணர்த்துவது அதில் உள்ள விஷம் தான்.

சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தம் அல்ட்ரா வயலட் அந்த நஞ்சைக் கவர்ந்துதான் பூமிக்குள் வருகின்றது.
1.எதைக் காந்தம் இழுக்கின்றதோ அது மோதும் வேகத்தில் அங்கே வெப்பம் ஆகின்றது.
2.ஆனால் வெப்பமாகும் பொழுது இரண்டறக் கலக்கின்றது
3.கலந்த பின் அந்த விஷமே அதனின் மணத்தைப் பளீர்... என்று வீசச் செய்கின்றது

ஆகவே இந்த நஞ்சு இல்லை என்றால் உலகம் இல்லை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஒருவனுக்கு கோபம் வருகிறது. கோபத்தால் அவன் தவறு செய்கிறான். நாம் பார்க்கின்றோம்... அவன் தவறு செய்கின்றான் என்ற உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது...!

தவறு என்று உணர்கின்றோம்... அப்பொழுது கோபம் வருகின்றது. கோபத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அவன் செய்தது தவறு என்று வரப்படும்போது
1.அங்கே இதே நஞ்சு தான் அவனைத் தவறு செய்ய வைக்கின்றது
2.அவனில் விளைந்த அந்தத் தவறை நாம் நுகரப்படும் பொழுது
3.நம் நல்ல குணத்தை இழக்கச் செய்து நம்மையும் தவறு செய்ய வைக்கின்றது.

அதனால்தான் இரண்யன்
1.எதிலேயுமே எனக்கு இறப்பு இல்லை...
2.என்னுடைய செயல்கள் எனக்கு வலு ஜாஸ்தி என்று சொல்கிறான்.

இதை எல்லாம் மகா ஞானிகள் இயற்கை எப்படி வளர்கிறது...? என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

July 4, 2020

தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்


ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் கசப்பான மணத்தைக் கண்டவுடன் ரோஜாப் பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றது. ஓடும் போது ஒரு விஷத் தன்மையான தாவரத்திலிருந்து வரும் மணத்திற்குள் மோதியவுடன் தடுக்கப்பட்டு அங்கே சுழலத் தொடங்குகிறது.  

ஏனென்றால்...
1.விஷமே இயக்கமாக ஆனது...
2.”தடுத்து நிறுத்துவதற்கும்... இணைப்பதற்கும்” அந்த விஷமே முக்கியமானது.

உதாரணமாக நோய்க்கு மருந்து கொடுக்கும் போது அதிலே கலக்கப்பட்ட விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி வேகமாகச் செல்கிறது.

1.நோயை உருவாக்கும் அணுக்களுக்குள் மோதி எதிர்நிலையாகி
2.அங்கே சுழலின் நிலைகள் கொண்டு நல்ல மருந்தினை அங்கே செலுத்தி
3.அந்த நோயிற்குக் காரணமான அணுக்களை அங்கே மாற்றுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இவ்வாறு செயல்படுத்துகின்றனர்.

போன் டி.பி. (BONE T.B.) வந்துவிட்டால் அதற்கென்ற எதிர்மறையான மருந்துகளை உடலிலே செலுத்தி நோயுற்றவரின் உடலுக்குள் புதுக் கிருமிகளை ஏற்படுத்துகின்றனர்.

ஏனென்றால் அந்த டி.பி.யை உருவாக்கும் அணுக்கள் நல்ல உடலில் உருவான எலும்புக்குள் இருந்து கொண்டு அங்கிருக்கும் ஊனை உணவாக உட்கொள்கிறது. இதனுடைய மலங்கள் பட்டவுடன் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பையே முழுவதாக உருகச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்கின்றது டி.பி. அணுக்கள்.

அதே சமயத்தில் அதற்கு எதிர்மறையான மருந்தினை இஞ்செக்சன் செய்யும் பொழுது எதிர்மறையான அணுக்களை உருவாக்கி. எலும்பை உருக்கும் அணுக்களை இது உணவாக எடுக்கின்றது.

உதாரணமாக மனிதனுடைய மலம் வெளியிடும்பொழுது அதிலே நாற்றம் அதிகமாகின்றது. அந்த மலத்துடன் குதிரைச் சாணத்தைக் கலந்தவுடனே அதிலே புதுப் புழு உற்பத்தியாகின்றது. அந்தப் புழுக்கள் மலத்தை எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு வெறும் நீராக மாற்றுகின்றது.

இதைப் போலத்தான் எலும்புருக்கி நோயைக் குறைக்க மருந்தினைக் கொடுக்கும் போது அது எதிர்மறையான கிருமிகளை உற்பத்தி செய்கிறது. ஆனால் அதனுடன் மிருக நிலைகள் கொண்ட சத்தினையும் பவுடராக்கி மாத்திரையாகக் கொடுப்பார்கள்.

இந்த மருந்தினுடைய மலங்கள் வெளிவிடும் போது டி.பி. அணுக்களுக்கு எதிர்நிலையாகின்றது. அதை உணவாக எடுக்கின்றது. நோயை உருவாக்கும் அணுக்கள் செயலிழக்கின்றது. இது விஞ்ஞான அறிவு.

இதைப் போன்றுதான் அந்த மெய் ஞானியினுடைய உணர்வுகளை தியானத்தின் மூலம் எடுத்து வலுவாக வளர்த்துக் கொண்டால்
1.நம்மை  நைத்துக் கொண்டிருக்கும் தீமையான உணர்வுகளை (நஞ்சினை) வென்றிடும்
2.அந்த எதிர்மறையான உணர்வுகளை நமக்குள் உற்பத்தி செய்யும்.

“இதை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்...”

எதற்காகச் சொல்கிறோம் என்றால்... மனிதனின் வாழ்க்கையில் நாம் அறியாமல் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சதா வேதனைப்படச் செய்யும் நிலைகள் ஆகும் போது அந்தத் தீமைகளையும் துன்பங்களையும் அடக்கிட வேண்டும் என்பதற்குத் தான்..

இன்றைய விஞ்ஞான அறிவு... மருந்தின் மூலம் டி.பி. அணுக்களின் வீரியத்தைத் தணிக்க மருந்தினைக் கொடுத்து அது இடும் மலத்தால் நம் உடல் அழியா வண்ணம் டி.பி. அணுக்களை எப்படி மடியச் செய்கின்றனரோ... அதே போல்
1.இன்றைய உலக நிலையில் காற்றில் பரவி வரும் விஷத் தன்மைகள் நமக்குள் உருவாகாதபடி
2.தடுக்க வேண்டும்... தடுக்க முடியும்...! என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

நல்லது என்று எண்ணி அந்த உணர்வின் ஆற்றலால் எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் பிறருடைய தீமையின் நிலைகள் நமக்குள் வந்தவுடனே அது எதிர்நிலையான கிருமிகளாக உடலுக்குள் உருவாகின்றது.

பின் அது மன நோயாகி உடல் நோயாகி இந்த மனித வாழ்க்கையையே நலிந்திடச் செய்யும் நிலையாக வந்து விடுகின்றது.

இத்தகைய தீமைகளை வென்றிடத் தான் அந்த அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெறும்படி செய்கிறோம். அந்த ஞானிகளின் உணர்வுகளை வளர்க்கப்படும்போது இதனின் ஆற்றல் பெருகப் பெருக உங்களை நைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தீமைகள் அகலும்.

ஆகவே நீங்கள் நன்மை செய்யும் போது அறியாது உட்புகுந்த அந்தத் தீமைகள் குறையச் செய்வதற்கே இந்த உபதேசம்.

அந்த மெய் ஞானிகள் எப்படி நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினரோ அதைப் போல உங்களுக்குள் அது விளைய வேண்டும்.

நீங்கள் சிரமப்பட்டு... துயரப்பட்டு... உங்களை வேதனைப்படச் செய்து கொண்டிருக்கும் இந்த உணர்வினை அடக்கி.. உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்டும் நிலைகளுக்கே இதைச் சொல்கிறேன்.

நீங்கள் இதன்படி செயல்பட்டு “மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்று சொல்லும் போது அதை நான் (ஞானகுரு) கேட்டால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது.

அந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நீங்கள் எல்லோரும் ஆக வேண்டுமென்று நான் எண்ணுகின்றேன்.

குருநாதர் கொடுத்த வாக்கின்படி நான் அதை எனக்குள் விளைய வைத்து இந்த சொல்லின் வாக்கால் உங்களுக்குள் விளையச் செய்கின்றேன்.

இதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்...! என்று கண்ணன் சொல்வதாகக்க் காவியங்கள் உண்டு.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ
2.இதே கண் அந்த உணர்வால் தாக்கப்பட்டு... உணர்வின் தன்மை நுகரப்பட்டு
3.அதனின் நிலைகளையே அதுவாக மாற்றுகின்றது.

அதாவது...
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது அதன் உணர்வு எனக்குள் நல்லதாக விளைகின்றது
2.அந்தச் சொல்லின் உணர்வு கொண்டு உங்களுக்குள் நன்மை செய்யும் உணர்வாக இயக்கினாலும்
3.அந்த உணர்வின் தன்மை எனக்குள் மகிழ்ந்த உணர்வாக விளைகின்றது.

இந்த வழியினைத் தான் குருநாதர் என்னைச் செயல்படுத்தச் சொன்னார்.

June 30, 2020

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன...?


பாம்பு ஒரு தவளையைக் கொத்தி அதிலே தன் விஷத்தைப் பாய்ச்சி விழுங்கி அதனை உணவாக உட்கொள்கின்றது.

இதே போன்று தான் வலுக்கொண்ட நிலைகள் கொண்டோர் பிறர் துன்பப்படுவதைக் கண்டு சிலர் ரசிப்பார்கள். யாரொருவர் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கின்றார்களோ அது எல்லாம் பாம்பு நஞ்சைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குவது போன்றது தான்.

ஏனென்றால் நஞ்சின் தன்மை கொண்டு அதை விழுங்கி இருந்தாலும் நஞ்சு என்பது சாகாக்கலை கொண்டது.
1.அதாவது எதிலே எப்படிச் சென்றாலும் அந்த நஞ்சை வீழ்த்திட உங்களால் ஆகாது
2.எதனுடன் கலந்தாலும் நஞ்சின் தன்மை அது அடக்கும் சக்தியாகத் தான் வரும்.

உதாரணமாக ஒரு குடம் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டால் அதைப் பிரித்திட முடியாது.  அந்த ஒரு குடம் பாலையும் தன் இனத்தால் நஞ்சாக மாற்றி அதைச் சாகாக்கலையாக ஆக்கிவிடும். ஆனால் அதே சமயம்
1.நஞ்சு கலந்த அந்த ஒரு குடம் பாலுக்குள் பல ஆயிரம் குடம் பாலை விடும்போது
2.இதனின் சக்தி ஓங்கி நஞ்சின் தன்மை சிறுத்து அது ஆக்கச் சக்தியான வலுவை ஊட்டும்.

நோய்களை நீக்க மருந்தை உட்கொண்டாலும் அதற்குள் வீரியத் துடிப்பான நஞ்சைக் கலக்கித் தான் உங்களுக்குள் நோயினை நீக்கக் கொடுப்பார்கள்.

ஓர் உணர்வின் சக்தி கொண்டு நமக்குள் நோயாக ஆனாலும் அந்த நோயினை நீக்கிட அந்த மருந்துக்குள் நஞ்சினைப் பாய்ச்சி
1.நோயை எதிர்த்திடும் இந்த உணர்வின் மணத்தால்
2.நஞ்சு வீரிய உணர்வு கொண்டு செல்லும்போது “அது ஊடுருவி”
3.எங்கே வேதனை உணர்வு இருக்கின்றதோ அதனின் செயலை இந்த மணம் ஊடுருவி வேகமாகச் சென்று அதை அடக்கும்.

வைத்திய ரீதியிலே விஞ்ஞான அறிவு கொண்டாலும் இப்படித்தான் செயல்படுத்துகின்றார்கள்.

உதாரணமாக சர்க்கரை வியாதி அதிகமாக இருக்கின்றது என்றால் இன்சுலினை இஞ்செக்ஷன் செய்து அந்தச் சர்க்கரைச் சத்தை அடக்கிடும் உணர்வாகச் செய்வார்கள்.

சிறுகச் சிறுக இது ஒரு பழக்கமாக்கி விட்டால் இந்த இன்சுலின் இல்லையென்றால் அடுத்து நீங்கள் எந்த மருந்து போட்டாலும் அது ஆகாது.

பின்... நமக்குள் அது மாற்ற முடியாத நிலைகளும் ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் நமக்கு நாமே குத்திக் கொண்டு அதைக் குறைத்திடும் நிலைகள் வரும்.

முதலில் சிறுகச் சர்க்கரைச் சத்தாகத் தான் வரும். அதை அடக்க சிறிதளவு மருந்தைக் கொடுப்பார்கள். இதை உட்கொண்டாலும் சிறுகச் சிறுகச் சேர்க்க சர்க்கரை மருந்தின் அளவு கூடும்.

கடைசியில் முடியாத நிலைகளில் எல்லாம் சேர்ந்து நரம்புகள் தளர்ச்சி ஆகும். நாம் எடுக்கும் உணர்வின் நிலையில் சர்க்கரையை ஜீரணிக்க முடியாத நிலைகள் ஆகும்.

தளர்ச்சியானபின் இதனுடைய நிலைகள் துவண்டு விடும்.  இந்த நிலை வரும் போது தான் இன்சுலினை இஞ்செக்சனாகக் கொடுப்பார்கள்.

அதுவும்  நாளடைவில் கூடிக் கூடி வீரிய உணர்வு கொண்டு நம் உடலில் இரத்தத்தில் வரும் அசுத்தங்களை வடிகட்டும் கிட்னி... கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை வருகின்றது

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

மனிதனாக நல்ல முறையில் வாழ வேண்டுமென்று தான் எல்லாம் செய்கின்றோம். இத்தகைய நோய் வந்த பின் நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நோயின் வீரியத்தை மாற்றிக் கொள்கின்றோம்.

இருந்தாலும் உடலில் சேர்த்துக் கொண்ட நஞ்சின் தன்மை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து விடுகின்றது.
1.நான் நல்லதைச் செய்தேன்... எனக்கு இப்படி வந்துவிட்டதே
2.இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்... இப்படி ஆகிவிட்டதே என்ற நிலை வருகின்றது.

அதுமட்டுமல்ல.. உடல் மிகவும் நலிவடைந்து வரப்படும்போது நம்மிடம் கடன் வாங்கியன் பணத்தைச் சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால்... அடப்பாவி...! என்று அவன் மேல் எண்ணத்தை பதிவு செய்து
1.நான் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன்..
2.எனக்குப் பணம் தரமாட்டேன் என்கின்றானே என்ற நிலையில் அவன் உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலைவிட்டு சென்றபின் அவன் உடலுக்குள் நாம் செல்வதற்குத் தயாராகி விடுகின்றோம்.

இதே வேதனை உணர்வுகள் வீரியமாகி இந்த உடலை விட்டு நாம் அங்கே சென்றபின் அந்த உடலுக்குள் போனபின் இதே இன்சுலினை அங்கே குத்தும்படியாக அங்கேயும் இதே சர்க்கரை நோயாகி விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இந்த உடலுக்குப் பின் நம் நிலை என்ன...? என்று சிந்தித்து அதன் வழி மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

May 16, 2020

நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்”


கொசுத் தொல்லையாக இருக்கின்றது..! என்று கொசுக்களை எல்லாம் கொல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது எத்தகைய வேதனைப்படுகின்றதோ அந்த வேதனை உணர்வுகள் கொசுவின் உயிரான்மாவுடன் கலக்கின்றது.

“கொன்று விட்டோம்...!” என்று நாம் எண்ணும் போது எந்த எண்ணம் கொண்டு கொன்றோமோ கொசுவின் உயிர்கள் நம் உடலுக்குள் வருகின்றது.

உதாரணமாக ஒரு கொசு நம் மீது அமர்ந்து அது இரத்தத்தை குடிக்கும் போது உற்றுப் பார்த்து “அதை நசுக்க வேண்டும்...” என்று மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம் கை கொண்டு அடிப்பதற்கு முன்னாடி அந்தக் கொசு பறந்துவிடும். மனிதனை ஒத்த அறிவு அதற்கு இல்லை என்றாலும்
1.மனிதனின் அறிவின் ஞானத்தைப் பெற்ற “இரத்தத்தை” (மனித உணர்வுகள் கலந்த) அது புசிக்கும் போது
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதற்குள் அந்த உயிர் அதை இயக்கிக் காட்டும்
3.ஆகவே அது தப்பித்துக் கொள்ளும்... இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

கொசு நம்மைக் கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தால் நமக்குள் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றது. ஆயிரம் கொசுக்களை நாம் நசுக்குகின்றோம் அல்லது கொல்கிறோம் என்றால் அந்தத் தடிப்புகள் உடல் முழுவதும் நிச்சயம் வரும்.

சில பேர் அமாவாசை அன்று உடலெல்லாம் தடிப்பு வருகின்றது... மேல் எல்லாம் அரிப்பு வருகின்றது என்று கூடச் சொல்வார்கள். இது எல்லாம் இறந்த அந்தக் கொசுக்களின் நஞ்சு கலந்த நிலைகள் உடலுக்குள் சென்ற நிலையில் இயற்கையின் செயலாக அப்படி உருப்பெறும்.

யானையின் தோல் மிகவும் முரடானது. ஈட்டியால் குத்தினாலும் உடம்புக்குள் இறங்குவது கொஞ்சம் கடினம். ஊசியால் குத்தினாலும் ஊசி வளையுமே தவிர ஊசிக்கு வலு இல்லை என்று கூடச் சொல்லலாம். யானையின் தோலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.

ஆனால் கொசுவைக் கையால் நசுக்கி விட்டால் அதனுடைய உருவத்தையே நாம் காண முடியாது. அப்படி நசுக்கப்படும் நிலை பெற்றாலும் “தனது மூக்கால்...” ஊசி போல யானையின் தோலுக்குள் ஊடுருவி அதனின் இரத்தத்தைக் குடித்துவிடும்.

கொசுவிற்கு அவ்வளவு பெரிய வலு உண்டு...!

கொசுவின் முகத் துவாரத்தில் இருக்கும் நஞ்சின் தன்மையை அது பாய்ச்சியபின் அந்த யானையின் தோல் விலகுகின்றது. கொசு தன் முகவாயை உள் செலுத்துகின்றது.

உள் செலுத்தி அது தன் மணத்தால் இரத்த நாளங்கள் ஓடும் பாகத்தை நுகர்ந்தறிந்து அந்த இரத்தத்தைக் குடிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் யானைக்குத் தான் வலு என்று. யானையைக் காட்டிலும் கொசு மிகச் சிறிதாக இருப்பினும் அதனுடைய வலுவைக் காட்டிலும் அதைப் பிளந்து அது உணவாக உட்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. கொசுவை எளிதில் மதிக்க வேண்டாம்...!

ஒரு சமயம் காட்டிற்குள் கொசு தாக்காமல் இருப்பதற்காக சில உணர்வலைகளைப் பரப்பச் செய்தார் குருநாதர். அப்பொழுது என் அருகில் கொசுக்கள் வரவில்லை.

காட்டுக் கொசுவிற்கு வலிமை ஜாஸ்தி. மற்ற மிருகங்களின் இரத்தத்தைக் குடித்துப் பழகி இருப்பதனால் மனிதனக் கடித்தால் மிகக் கடுமையான வேதனைகள் வரும்.

குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். முதலிலே அவர் சில் அலைகளைப் பாய்ச்சி விட்டார். அதனால் நான் படுத்து உறங்கும்போது அந்தக் கொசுக்கள் கடிக்காதபடி ஆனந்தமாகத் தூங்கினேன்.

சிறிது நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்...? அவர் செயலைக் காட்டி விட்டார்...!
1.கொசுக்கள் வராதபடி செய்த அலைகளை எடுத்து விட்டார்.
2.எல்லாக் கொசுக்களும் ஏகக் காலத்தில் என்னைக் கடிக்கத் தொடங்குகின்றது.

என் இரத்தத்தைப் பூராமே அது குடிக்கின்றது. என் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து விட்டது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை. கல்லை வைத்துத் தேய்க்கின்றேன்.

இரத்தம் ஒழுகினாலும் தேய்க்கத் தேய்க்க அதன் மேல் ஆனந்தம் வருகின்றது. அரிப்பின் தன்மை தாங்காது நகத்தால் சுரண்டினாலும் அதற்கு அவ்வளவு ஆனந்தம் வருகின்றது.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கிறார்...! நீ வலு பெற்றவனாக இருக்கின்றாய்.. இருந்தாலும் அந்தக் கொசுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது என்று பார்...!

அதே சமயம் அதை எல்லாம் நீ தேய்த்துக் கொல்லும்போது அதனுடன் கலந்த விஷத்தின் உணர்வின் தன்மை உன் உடலுக்குள் எவ்வாறு புகுகின்றது...?

உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தபின் அதுவும் (கொசுவின் உயிர்) கலந்து அது குடி கொண்டு இருக்கும் காலத்தில் இன் இரத்தத்தைத் தனதாக மாற்றி... அது எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது...? என்று காட்டுகின்றார்.

ஒரு தட்டாம்பூச்சி தன் உடலில் விளையும் கருவின் தன்மையை அது மற்ற தாவர இனங்களில் இட்டுவிட்டால் அதனின் சத்தை இது நுகர்ந்து அதனின் உணர்வின் செயலாகப் பட்டாம் பூச்சியாக அது விளையும்.

1.தாவர இனத்தின் சத்தை எடுத்து அந்தப் பூச்சி உருவாவது போல...
2.நம் உடலுக்குள் வந்த இந்தக் கொசுவின் உயிரான்மா
3.அது எத்தகைய நிலையைச் செயல்படுத்தி தன் உணர்வின் நிலைகளை பரப்பி
3.இரத்தத்தையே மாற்றி அது அதன் உணவாக எப்படி எடுத்துக் கொள்கின்றது...? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உணர்வின் தன்மை மாற்றம் அடையும் போது கொசு மனிதனுக்குள் மனிதனாக உருப்பெறும் அணுவாக மாறுகின்றது.

முதலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றது. தன் உணவைத் தேடுகின்றது. நம் உடலில் உள்ள உணர்வின் தன்மை அதனின் உணர்வுகள் மாற்றமடைந்து மனிதனில் உருவாகும் கருவாக மாறுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...!