ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2018

வயதான சிலருடைய ஆன்மா பிரியவில்லை என்றால் அது பிரிவதற்காக வேண்டி என்ன செய்வார்கள்...?

ஒரு எலியைப் பூனை பார்த்த பின் இதைக் கொன்று புசிக்க எண்ணுகின்றது. இந்த உணர்வின் நினைவலைகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்து இருக்கின்றது.

ஆனால் எலி பூனையைப் பார்த்தபின்
1.இந்த உணர்வின் தன்மை பதிவாக்கிக் கொண்டால்
2.பூனையின் நினைவே இதற்குள் வரும்.

இது அதிகமாகப் பெருக்கியபின் பூனையைக் கண்டு அஞ்சி ஓடும் நிலை வரும்.
1.பின் பூனையின் உணர்வுகள் அதிகமானபின்
2.ஓடும் நிலையில் இருந்து சுலபமாக சிக்கிக் கொள்ளும்.

அப்போது அந்த உணர்வின் தன்மை சிக்கிக் கொண்ட பின் அந்த எலி இதற்கு இரையாகின்றது. இந்தப் பூனையின் உணர்வுகள் எலியின் உணர்வுக்குள் இரையாகி அது கணங்களுக்கு அதிபதியாகிப் பூனையின் உடலுக்குள் சென்று பூனையாகப் பிறக்கின்றது.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியாகி வந்தது.

இதைப் போல அது வெளியிட்ட உணர்வுகளும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து எலி எண்ணும் போதெல்லாம் பூனையின் உணர்வை இதற்குள் வளர்க்கின்றது.

பூனை இதை எண்ணும் போதெல்லாம் இந்த வாசனையை நுகர்ந்து அதற்குள் தனித்து இரைக்காக வேண்டித் தேடிச் செல்கின்றது.

எதையெல்லாம் உணவாக உட்கொண்டு வந்ததோ இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலை வளர்த்துக் கொள்ளுகின்றது.

பூனையோ தன்னைக் காட்டிலும் ஒரு நாய் துரத்தினால் இந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்து அந்த உணர்வின் தன்மையை இரையாக்கியபின் நாயின் நினைவே அதற்குள் வளர்க்கின்றது.

அந்த நாய் இதைத் தேடி வந்ததென்றால் உணர்வின் தன்மை கொண்டு அதே உணர்வை எடுத்து இந்தப் பூனை நாயாகப் பிறக்கின்றது.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்து வந்தோம்.

ஆனாலும் ஒவ்வொரு சரீரத்திலும் அதன் உணர்வின் தன்மை எது பதிவு செய்து கொண்டதோ அதே தான்.

மனிதராக வாழும் நாம் இந்த வாழ்க்கையில் நாயைப் பார்த்துப் பயந்த பின் நாயைப் பற்றி அதிகமாக எண்ணி வந்தால் அந்த நாயின் தன்மை நமக்குள் இரையாகி அந்த உணர்வின் செயலாகிவிடும்.

1.நம் உயிர் அதைத்தான் படைக்கும்.
2.சாகப் போகும் போது நாய் குரைக்கின்ற மாதிரி… “ஐயோ நாய் வருகின்றது என்னைத் துரத்துகின்றது..” என்று சொல்வார்கள்.
3.கடைசியில் இந்த ஆன்மா நாயிடம் தான் போகும்.

அதே மாதிரி ஆட்டை ரசித்து சாப்பிட்டிருப்பார்கள். அந்த உணர்வுகள் அதிகமாகிய பின் கடைசிக் காலத்தில் அந்தக் கறியின் நினைவு இருக்கும்…!
1.சீக்கிரம் வெளியில் வராது.
2.அந்த நினைப்பிலயே இருக்கும். சொல்ல வராது.

அடுத்தாற்போல அந்த சொந்தம் பந்தமெல்லாம் சேர்ந்தவர்கள் என்ன செய்வார்கள்?
1.அவர் கறி ஜாஸ்தி சாப்பிட்டார்
2.அதைக் கொஞ்சம் வேக வைத்து வைத்தால் சீக்கிரம் உயிர் பிரிந்துவிடும் என்பார்கள்.
3.தெரிந்தோ தெரியாமலோ இதைச் சொல்வார்கள்.

அந்த வாசனையைக் கண்டவுடனே இந்த உடலை விட்டு பிரியும் ஆன்மா வெளியில் வந்து விடும். அப்போது ஆடு எங்கே இருக்கின்றதோ அங்கு போய்ச் சேரும்.

இதற்குத்தான் விநாயகருக்கு முன் எலியைப் போட்டு "மூஷிக வாகனா.." என்று காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

நீ எதையெல்லாம் சுவாசிக்கின்றயோ அது வினையாகி வினைக்கு நாயகனாக கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் அதன் கீழ்
1.எதனை நீ அதிகமாக உருவாக்குகின்றாயோ
2.அதன் உருவையே உருவாக்கிவிடும் உன்னுடைய உயிர்.

நம் பற்று ஞானிகள் காட்டிய வழியில் இருந்தால் விண் செல்லலாம். அப்படி இல்லை என்றால் இந்தப் பூமிக்குள் மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலையாகச் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டியது தான்...!