ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label நல்லதைக் காக்கும் சக்தி. Show all posts
Showing posts with label நல்லதைக் காக்கும் சக்தி. Show all posts

July 13, 2026

இரு உன்னைப் பார்க்கிறேன்… தொலைத்து விடுவேன்…! என்று சொல்வதன் பின் விளைவு

இரு உன்னைப் பார்க்கிறேன்… தொலைத்து விடுவேன்…! என்று சொல்வதன் பின் விளைவு


குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றோம்.
 
எம்மை எத்தனையோ நிலைகள் கொண்டு பல பேர் சந்திக்க வருகின்றார்கள். அப்படி வருகின்றவர்களில்
1.நோய் உள்ளவர்களுக்கு யாம் ஆசீர்வதித்து உங்களுக்கு இப்பொழுது நோய் இல்லை நீங்கள் போங்கள்…! என்று சொன்னால்
2.“நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்…” என்கிறார்கள்.
 
இனி நோயெல்லாம் நீங்கிப் போகும் என்று யாம் அவர்களிடம் சொன்னால் இல்லைங்கஎன் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! என்று சொல்கின்றார்கள்.
 
தபோவனத்தில் ஒரு சமயம் ஒரு அம்மா எம்மிடம் இதைப் போன்று கேட்டுக் கொண்டிருந்தது. பின் எம்மிடம் நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. என் வீட்டிற்குப் போனால் பழையபடித் தொல்லையாக இருக்கின்றது என்றார்கள்.
 
யாம் அவரிடம் நீங்கள் வீட்டுக்குப் போனாலும் இதே போன்றே ஆத்ம சுத்தி செய்து, “நோய் இல்லைஎன்று நல்லதாக எண்ணுங்கள் என்று சொல்கிறோம்.
 
ஆனால் என் வீட்டுக்குப் போனால்என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டு விடுகின்றார்கள்.
 
நோய் இல்லை நீங்கள் போங்கள்…! என்ற நல்ல வாக்கினைக் கொடுத்துத் தியானத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னால் அதைக் கேட்பார் யாரும் இல்லை.
 
சாமிக்கென்ன தெரியும்? நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும் என்கிறார்கள்.
 
ஆனால்
1.இவர்களைத் திட்டுபவர்களை மட்டும் மனதில் எண்ணி
2.“இரு உன்னைப் பார்க்கிறேன்உன் குடும்பத்தைத் தொலைத்துக் கட்டுகிறேன்…!” என்று அதை இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள்.
 
அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால்
1.இவர்கள் எண்ணிய உணர்வுகள் உடலுக்குள் புகுந்து
2.இவர்கள் உடலையே தொலைத்துக் கட்டுகிறது என்பதை மறந்து விடுகின்றார்கள்.
 
சில வீடுகளில் பாருங்கள். கொஞ்சம் சுருக்…” என்று சொன்னால் இவனை விட்டு விடுவதா? இவன் எப்படிப் பேசுகிறான் பார்…! என்று வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள். நீ இப்படிப் போய்விடுவாய்அந்த மாதிரிப் போய் விடுவாய்…! என்று பேசுவார்கள்.
 
அப்படிப் பேசுபவர்களிடத்தில் பார்த்தோம் என்றால் உடல் வலி கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி மூட்டு வலி கால் வலி எல்லா வலியும் இருக்கும். - இது பேசிவர்களுக்கு.
 
இதையெல்லாம் பேசாமல் வேடிக்கையாகப் பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவுடனே இப்படிப் பேசுகின்றார்களே பாவி…! என்று சண்டை போடுபவர்களைப் பார்த்துப் பொல்லாதவர்களை எண்ணுவது.
 
அதே சமயத்தில் நல்லவர்களைப் பார்த்து இப்படி இருக்கின்றதே இங்கே இரக்கமும் அங்கே ஆத்திரமும் இரண்டும் எடுத்து விடுகின்றோம். இது வந்தவுடன் அம்மம்மா.. வயிறு எல்லாம் எரியுதே…! என்பார்கள். அவர்களுக்கு இந்த நோய் வரும்.
 
நாம் நல்லவர்கள்தான். ஆனால் என்ன செய்கிறார்கள்…?’ என்று பார்க்கும் பொழுது என் குடலை முட்டுதே எப்படியோ ஆகின்றதே? நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே? நான் வணங்கும் தெய்வமும், இப்படிச் செய்கின்றதே…! என்று இதைத்தான் எடுத்து, நமக்குள் கூட்டிக் கொள்கின்றோமே தவிர தெய்வம் எங்கு இருக்கின்றது? எந்த ரூபத்தில் இருக்கின்றது…? என்பதனை மகா ஞானிகள் காட்டியதை உணரும் பக்குவம் இல்லை.
 
இதனை வியாசக பகவான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
 
1.நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தை உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.
2.“…” என்று எண்ணிய உணர்வின் சத்து ம்…” என உடலாகச் சிவனாக ஆக்குகின்றது.
 
இதுவே ஓம் நமச் சிவாய நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்து இறையாகி அந்த உணர்வின் சத்து இறையாகி இறைவனாகுகின்றது. அந்த இறையின் சக்தி நமது உடலுக்குள் இணையப்படும் பொழுது, இறையாகி இறைவன் ஆகி நமக்குள் செயலாக்கும் பொழுது தெய்வமாகின்றது.
 
நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அந்தக் குணங்களே தெய்வமாக நின்று நம்மைச் செயல்படுத்துகின்றது.
 
கோப குணம் என்பது காளி…” கோப உணர்வுகள் நாம் எண்ணியதைக் காத்திடும் நிலையும் நமக்குள் ஆத்திரத்தையும் அவனைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்! என்ற உணர்வையும் எடுக்கின்றது.
 
நாம் தொலைத்துக் கட்டுகிறேன் என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நமது நல்ல குணத்தை நமக்குள்ளே தொலைத்துக் கட்டி அந்தக் காளியின் ரூபமாக நமக்குள் கொதிப்படைந்து இரத்தக் கொதிப்பாக மாற்றி என்னால் முடியவில்லையே தலை சுற்றுகிறதே…” என்ற நிலை வருகிறது.
 
கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்! என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
 
1.நம் குரு காட்டிய அருள் வழியில் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி
2.நம் உயிரான ஈசனை மதித்து எல்லோருடைய உயிரையும் ஈசனாக மதித்து அருள் வழியில் வாழ்வோம்.
3.என்றும் உயிரோடு ஒன்றி அவனுடன் இணைந்து அவனாக மாறிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை எல்லோரும் அடைவோம்.  
 
எமது அருளாசிகள்.

May 20, 2026

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

 

1.சக்தி இருக்கின்றது என்ற நிலையில் "நான்..." என்ற திமிர் வந்தால் அது முதலில் உன்னை அடக்கிவிடும்...
2.உன் நல்ல குணங்களை அது கொன்று விடும் என்று குரு சொல்கின்றார்.

இதே போன்று எம்மைப் பார்ப்போரும் ஒரு சிலர் சாமி நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அது தான் உங்களுக்குள் விளையும்.

ஆனால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நான் எண்ணும்போது எனக்குள் அது நல்லதாக விளைகின்றது.

சில பேர் நினைப்பார்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது... எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றார். ஆனால் சாமியை இத்தனை தூரம் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருக்கின்றார் என்று நினைத்தால் கெடுதலுக்கு அல்ல.
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதித்து விடக்கூடாது.
2.அவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.
3.அவரவர் எடுக்கும் உணர்வுகளுக்கு அவரவர் உயிரே தண்டனை கொடுக்கின்றது. நாம் ஏன் தண்டனை கொடுப்பானேன்...?

நாம் விலகிச் சென்று விட்டால் பாதகம் இல்லை.

வெள்ளம் வருகின்றது... வீட்டை அடித்துச் சென்று விடும் என்றால் வீட்டுப் பக்கம் வராமல் மறித்து வேறு பக்கம் திசை திருப்பி விடலாம். கரையைப் போட்டுக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் கட்டிடத்தைச் சாய்த்து விடும்.

1.இது போன்று ஒரு உணர்வின் தன்மை நம்மைப் பாதிக்கிறது என்றால் அது நம் மீது மோதாதபடி திசை திருப்ப வேண்டும்.
2.இத்தனை பழக்கமும் வேண்டி இருக்கின்றது.

குளத்திலே தண்ணீர் முழுவதும் நிறைந்துவிட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு என்ன செய்கின்றார்கள்...? அந்த இடத்திலே மணலை மூடடைகளாகக் கட்டி மொத்தமாகப் போட்டால் அந்தத் தண்ணீரை ஓரளவுக்கு நாம் தடுக்க முடியும். அடுக்கடுக்காக மேலே போடப் போட வலுவாகி விடுகிறது. தண்ணீர் மேலே ஏறி வருவதில்லை.

இந்தத் தந்திரம் இல்லை என்றால் வேறு எந்தப் பொருளைப் போட்டாலும் தண்ணீர் அரித்துக் கொண்டு சென்று விடும். கற்றுக் கொண்டவர்கள் இந்த நிலையைச் செயல்படுத்துகின்றார்.

இதைத்தான் மெய்ஞானியான நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஒருவன் வேதனைப்படுகிறான் என்று காணுகின்றோம் சக்தி இருந்தாலும் அதைக் கொண்டு தாக்கினோம் என்றால் நம்முடைய நல்ல நிலைகள் சிதைந்து விடும்

ஏனென்றால் நல்லது கெட்டது எப்படி நடக்கிறது...? என்று இயற்கையில் அனுபவபூர்வமாக எல்லாவற்றையும் தெரியும்படி செய்தார்.
1.சக்தி கொடுப்பார்.
2.ஆனால் அதைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் இப்படி இருக்கிறது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவர் மீது நாம் கோபப்பட்டு "அவரைத் தொலைந்து போக வேண்டும்..." என்று சொல்லலாம். சந்தோஷமும் படலாம். ஆனால் அந்தச் சந்தோஷம் உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களைத் தொலைத்து விடும்.

சந்தோஷத்தை ஊட்ட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

1.மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து இருளை நாடாதபடி தடுத்துப் பழகினால் என்றும் பேரருள் பேரோளியைப் பெறலாம்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

August 6, 2025

“இரக்கப்பட்டு ஊருக்கெல்லாம் உதவி செய்தாலும்…” நலிவடைந்து விட்டால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்

“இரக்கப்பட்டு ஊருக்கெல்லாம் உதவி செய்தாலும்…” நலிவடைந்து விட்டால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்


குருநாதர் சொன்னது:-
வாழ்க்கையில் நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறுகளை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இக்கப்பட்டோ அதற்காகப் பரிவு கொண்டோ அதை நீ ஏங்கிச் சுவாசித்து
2.உன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்தாலும் அவர்களைக் காத்திட நீ பொருளைக் கொடுத்து உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் விஷத்தின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் பின் விளைவு எப்படி இருக்கும்…?
4.முதலில் புகழ் கிடைக்கும் பேர் கிடைக்கும்இரக்கமானவர்… நல்லவர் என்று போற்றுவார்கள்.
5.ஆனால் கடைசியில் நீ நலிந்து போகும் பொழுது யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்…”
6.நல்லதைச் செய்தேனே…! என்று வேதனையான குரலைத் தான் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டி வருமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.
 
இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் மனித உடலை வெறுக்கும் நிலை வந்து மீண்டும் மனித இனத்தின் கூட்டிற்குள் சென்றாலும் ந்த உடலையும் அழித்துவிட்டு வேதனையின் விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின் ரிணாம வளர்ச்சியில் விஷத்தைத் தாங்கிடும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சென்று அங்கே தான் அடுத்த உடல் பெற முடியும்.
 
இதை எல்லாம் குருநாதர் இயற்கையின் செயல்கள் என்று காட்டினார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின்பு தான் (மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து) உங்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
 
ஆக… நன்மை செய்த நிலைகளில் அந்த நல்லவர்களைக் காத்திட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
ஒவ்வொரு கூட்டு தியானத்திலும் இணைந்து கொண்டு அங்கே கலந்து கொண்ட அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் குடும்பத்திலே மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும். அவர் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும். அவர்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெற வேண்டும். என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தினால்
1.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வலுவாகின்றது.
2.இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது.
3.உங்கள் வாக்கின் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது.
4.இதை இந்த வாழ்க்கையில் பொறுமையாக இருந்து செயல்படுத்துதல் வேண்டும்.
 
வயலிலே காய்கறிகளின் விதைகளைப் போடுகின்றோம். அப்படிப் போட்டவுடனே அதைச் சமைக்க முடியாது.தைப் பக்குவமாக விளைய வைத்து ஒருவர் பறிப்பர். அதை இன்னோருவர் எடுத்துக் கொண்டு போய் கடையில் வியாபாரம் செய்வார்.
 
நாம் கடைக்குச் சென்று அதை வாங்க வேண்டும். அதற்குப் பின் அதைச் சமைத்துப் பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக்கி அப்புறம் தான் நாம் உணவாக உட்கொள்ள முடியும்.
 
இதைப் போன்று தான் க்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுவது போன்று தான் நாம் எண்ணியதைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.
 
மெய் ஞானிகள் அருள் சக்திகளை நாம் பெற்று அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை வளர்த்துக் கொள்வதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.
 
1.நீங்கள் எண்ணியவுடன் அந்த மெய் ஞானிகளின் ஆற்றலைக் கிடைக்கச் செய்கின்றோம்.
2.ண்ணி எடுத்த பின் உங்கள் உடலுக்குள் வரும் துன்ப நிலைகளை நீக்கி நல்வினைகளை நீங்கள் கூட்டிக் கொள்ள முடியும்.
 
மாங்காய் புளிப்பாக இருப்பது கனியாகும் பொழுது அது சுவை ஆகின்றது. அதிலிருந்து அந்த மாவித்தாக வருகின்றது. அந்த வித்தினை நாம் நிலத்திலே ஊன்றினோம் என்றால் மரமாக அது மீண்டும் முளைக்கின்றது.
 
நம் உயிர் ஆரம்ப நிலைகளில் வித்தாக உருவாகி மற்ற செடி கொடிகளாக உருவாகி மரமாகி பூவாகி பிஞ்சாகி காயாகிக் கனியாகின்றது. பல உயிரினங்களாக நாம் இருக்கும் பொழுது அது மரமாகி… மனிதனாகும் பொழுது பூவாகி பிஞ்சாகி அந்தப் பிஞ்சின் தன்மையிலிருந்து காயான நிலையில் இருக்கின்றோம்.
 
1.இந்தக் காயின் தன்மையில் இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றும் பொழுது
2.உயிருடன் ஒன்றிய கனியாக முழுமை பெறுகின்றது கனிந்து விட்டது…!
3.உயிர் எப்படியோ அதைப் போன்று உணர்வுகள் ளியாகும் பொழுது நிலையான சரீரம் பெறுகின்றோம்.
 
அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற்ற மெய் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்வதற்குத் தான் திரும்பவும் ஒரு ரவுண்டு உங்களுக்குள் வந்து நினைவின் செல்களில் பதியச் செய்கின்றேன்.
 
அதை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டு எண்ணும் பொழுது காற்றில் பதிந்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் எளிதில் பெற முடிகின்றது. “அருள் ஞானிகளாக நீங்களும் வளர முடிகிறது…”

April 26, 2025

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

நன்மைகள் பல செய்யத் துணிவோம்


உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..
 
ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர் விழுகாமல் இருப்பதற்காகச் சொல்கின்றோம்.
 
ஒருத்தர் குளிக்கப் போகின்றார். ந்த இடத்தில் டுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால் அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.
 
சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…? 
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது‌ அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.
 
அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.
 
அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.
 
அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.
 
இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.
 
வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள்  எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.
 
அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
 
இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.
 
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

December 28, 2024

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

தீயதில் இருந்து நல் முத்தைஎடுக்கும் வழி
 
உலக வாழ்க்கைபந்தகர்மகாரியங்கள் நடத்திட
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
 
எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடிவிழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாகஅமைக்க வேண்டும்.
 
1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல்
2.தீயதில் இருந்து தான் நல் முத்தைஎடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.
 
மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்தஅலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.
 
ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் - இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.
 
இத்தகைய நிலை பெற  வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?
 
அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் நடைபோடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களைஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.
 
ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.
 
ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாகக் காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவிசுவாசம்… “இவற்றின் இணைப்புஇந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.
 
அது மட்டுமல்ல…!
 
1.“சிவம்என்ற அமிலமும்..
2.“சக்திஎன்ற ஈர்ப்பும்
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த ஆண் பெண் அமில உணர்வுவளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்