எமது குருநாதர்
தன் உடலை விட்டு வெளியிலே செல்லப்படும் பொழுது
1.அவர் உயிராத்மா
எப்படி ஒளியானது
2.இந்த உடல்
எப்படி ஒளியாக மாறியது என்பதை நேரடியாகக் காட்டினார்.
அதை யாம் (ஞானகுரு) கண்டுணர்ந்தோம்.
அதை அவர் நேரடியாகக் காட்டிய முறை கொண்டு யாம் கற்றுணர்ந்ததை நீகளும் பெறவேண்டும் என்ற ஆசையினாலே
தான் இதைச் சொல்கின்றோம்.
எமது குருநாதர்
அவர் எப்படி அந்த ஒளியின் தன்மை பெற்றாரோ அந்தக் குருவின் தன்மை எல்லோருடைய உள்ளங்களிலும்
வளர்ந்து உங்களுக்குள் இருள் நீங்கி ஒளி பெறும் அந்த சக்தி பெறவேண்டும் என்று வேண்டுகின்றேன்.
உங்கள் சங்கடங்கள்
நீங்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை வைத்து
உங்களுடைய துன்பத்தைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உடலிலே
அனைத்தையும் ஒளியாக மாற்றி உங்கள் பேச்சும் மூச்சும் புனிதம் பெற்று அதைக் கேட்போர் துன்பங்களும் நீங்கி உயர்ந்த எண்ணங்கள் தோற்றுவிக்கும் சக்தியாக வளர வேண்டும்
என்று வேண்டுகிறேன்.
ஆகவே மெய் ஒளியை
உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பௌர்ணமி அன்று
கூட்டுத் தியானங்கள் அமைத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிராத்மாக்களை
சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யுங்கள்.
1.இப்படி அவர்களை
இணைக்கச் செய்தால்
2.அவர்கள்
முன் செல்ல நாம் பின்னால் செல்ல முடியும்.
3.கூட்டுத் தியானத்தில்
நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் உந்திச் செலுத்தப்படும் பொழுது எளிதில் விண்
செல்கின்றார்கள்.
மூதாதையர்கள் நமக்காக
இன்னல்பட்டுத் துன்பப்பட்ட அந்த உயிராத்மாக்களை இன்னொரு உடல் பெறாத நிலைகளை நாம் தடுப்பதற்கும், அந்த மெய்
ஒளியை அவர்கள் பெறச் செய்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
இதைக் கேட்டுணர்ந்த
அனைவருக்கும்
1.மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவரின் அருளாசி என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து
2.நல் வழி
காட்டும் சக்தியாக உங்களுக்குள் அமைந்து
3.மகரிஷிகளின்
அருள் ஒளி பெறும் சக்தியாக வளர வேண்டும் என்றும்,
4.”அதுவே
குருவாக நின்று...!” வளரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.