ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts
Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts

April 3, 2026

தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை

தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை


விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து பூஜித்துப் பின் கடலில் கரைக்கின்றோம்.
 
இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து
1.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.எல்லாக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
`3.எங்கள் பகைமைகள் அழிய வேண்டும்என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது
4.நம் உடலிலும் நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.
 
ஒரு மரம் எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.
 
ஆனால் அதனுடைய வேரை அறுத்து விட்டால்…” அது நீரைக் கவரும் திறனை இழந்து தன் ஜீவ சக்தியை இழந்து தன் இனத்தைக் கவரும் தன்மையையும் அது இழந்து விடுகின்றது.
 
இதைப் போன்றுதான் நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து
1.அதனின் நினைவாற்றல் வராதபடி தடுத்து நிறுத்தும் நிலையாக
2.மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.
 
இவ்வாறு தடைப்பட்டபின் நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள் நகர்ந்து கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.
 
அப்பொழுதுதான் இந்தப் பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.
 
1.ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் ஓரினம்.
2.நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்.
3.நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம்.
4.நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ
5.வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.
 
ஆகநமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து நமது வாழ்க்கையில் நல்ல குணங்களைச் சுதந்திரமாக்க அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிட வேண்டும்.
 
அரசியல் மத இன மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு நமது நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாகச் செயல்படச் செய்ய வேண்டும்.
 
அவ்வாறு செயல்பட்டுத் தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில் நம்மிடத்தில் உருவாக்க வேண்டும். இதைச் செய்தோமானால் பேருலகத்தையும் படைக்க முடியும்.
 
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதைப் படைக்கும் திறன் பெற்றது நமது உயிர்.
2.ஆகவே உயிரை ஈசனாக மதித்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.
 
நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள் நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அதனைக் கடலுக்குத் துரத்தியடிக்க வேண்டும்.
 
ஏனென்றால் தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால் அது வேறு வழி இல்லாது இறுதியில் கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும்.
 
1.இவ்வாறு இனி தீய உணர்வுகளுக்கு இங்கு இடமில்லை என்று செய்வோம். 
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம்.
3.அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம்… மத இன மொழி அரசியல் பேதங்களை அகற்றுவோம்.
4.அனைவரும் ஒன்றுபட்டு வாழ எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போம்.
5.இவ்வுலகில் அமைதி படர்ந்து அனைவரும் பிறவா நிலை எனும் நிலைஎய்த வேண்டும் என்று எண்ணி நாம் தவமிருப்போம்.
 
இதன் வழியில் மகரிஷிகளின் அருள் வழியைப் பின்பற்றிச் செயலாக்கி வரும் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

January 13, 2026

சதுர்த்தி

சதுர்த்தி


சதுர்த்தி என்றால் நிறுத்துதல்…” என்று பொருள். ஒரு தவறு நடக்கின்றது என்று பார்த்து என்ன… ஏது…? என்று அதை நுகர்கிறோம் என்றால் உடலுக்குள் அணுவாக உருவாகதபடி அதை நிறுத்திப் பழக வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்தி விட வேண்டும்.
 
1.இந்த ரத்தம் தான் உடலில் உள்ள எல்லா உறுப்புகள் முழுவதும் சுற்றி வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் முன்னக்கூடியே செலுத்த வேண்டும்.
 
ஒவ்வொரு அணுவின் முகப்பிலும் அந்தக் காந்தப்புலன் இருக்கும். இதன் துணை கொண்டு அங்கே எண்ணப்படும் பொழுது ரத்தத்தில் இந்தச் சக்தி கலக்கின்றது.
 
உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் ரத்தத்தின் வழி தான் உணவை எடுத்து வாழ்கிறது.
1.காற்றில் இருக்கும் தன் இனமான சத்தைச் செடி கொடிகள் எப்படி எடுத்துக் கொள்கிறதோ
2.தே மாதிரி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் இரத்தத்தின் வழி தன் உணவை எடுத்துக் கொள்கின்றது.
 
இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் முன்னக்கூடியே அந்த அணுக்களுக்குச் செலுத்தி விடுகின்றோம்.
 
நாம் முதலில் நுகர்ந்த தீமை சிறிதளவு தான் உள்ளே சென்றிருக்கும். அதே சமயத்தில்
1.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லும் பொழுது
2.முதலில் புருவ மத்தியில் தடுத்தது போல உள்ளேயும் நாம் தடுத்துக் கொள்கின்றோம்.
 
அதற்குப்பின் கண் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கருமணி தான் நாம் பார்ப்பதையெல்லாம் படமாகப் பதிவாக்குகின்றது.
 
அதனுடன் இணைந்த நிலையில் தான் நரம்பு மண்டலம் உள்ளது அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
 
நாம் சுவாசிக்கும் உணர்வின் செய்திகள் கண் கருமணி வழி… அதனுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் வழி தான் எல்லா அணுக்களுக்கும் செல்கின்றது.
 
1.அந்தக் கண் கருமணியுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் முழுவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி இணைக்க வேண்டும்.
 
இந்தப் பயிற்சியை எல்லோரும் நீங்கள் எடுக்க முடியும். ஒன்றும் சிரமம் இல்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திரும்ப எண்ணுகின்றோம் அதே போல இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் தீமை நமக்குள் வராது தடுக்க முடியும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து… அதை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
இதை நீங்கள் செய்து பழகுங்கள்தீமைகள் வராதபடி நாம் தடுக்கின்றோம்… அது தான் விநாயகர் சதுர்த்தி.
 
ஒவ்வொரு நிம்டமும் நாம் நுகர்வது உடலுக்குள் வினையாகின்றது. ஆனால் தீயவினை உருவாக்காதபடி அதை நாம் நிறுத்திப் பழக வேண்டும்.
 
நாம் யாரும் தவறு செய்யவில்லை. அறியாமல் தான் அத்தகைய உணர்வுகள் தீயவினைகள் நம் உடலுக்குள் நுழைந்து எத்தனையோ கலாட்டா செய்கின்றது.
 
அதை நாம் தடுத்துப் பழக வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. சுண்ணாம்புச் சத்தை எல்லாம் எடுத்து எலும்பாக மாற்றிக் கொள்கின்றது. அதற்குள் இருக்கக்கூடிய அணுக்கள் ஆகாரமாக எடுக்கிறது.
 
ஆனால் வேதனை அதிகமானால் அந்த விஷம் எலும்பை உருவாக்கிய அணுக்களை உணவாக எடுக்கத் தொடங்குகிறது. டி.பி. என்று சொல்வார்கள்.
 
அந்த விஷமான உணர்வுகள் எலும்புகளைத் தாக்கி விடாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு இணைத்து விட வேண்டும்.
 
இவ்வாறு
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களிலும் நாம் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைச் சேர்த்து
2.தீமைகள் புகாத வண்ணம் ஒரு அடைப்பாக அணைப்பாக நாம் போட்டுக் கொள்ள வேண்டும்.

November 25, 2025

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”


விநாயகர் சதுர்த்தி அன்று அருள் மகரிஷிகள் உணர்வுகளை நாம் அனைவருமே நமக்குள் எடுத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
 
ஆனால் ஏற்கனவே எண்ணத்தால் நுகர்ந்த பிற தீமையான உணர்வுகள் அணுக்களாக இருக்கின்றது. அதைத் தடைப்படுத்தி விட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அது பாட்டுக்கே விலகிப் போய்க் கொண்டே இருக்கும்.
 
இந்தப் பூமியின் சுழற்சியின் தன்மையில் கடலின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கடல் பக்கத்திலே இருந்து பாருங்கள். அருகில் சென்றோம் என்றால் நம்மை உள்ளே இழுக்கும். அலைகள் மாறி மாறி வரும் பொழுது மோதி மறுபடியும் உள்ளே தனக்குள் இழுக்கும்.
 
இதைப் போன்று இந்த உணர்வின் தன்மை எந்தெந்த மனிதர் பால் எண்ணி எடுத்து வைத்திருக்கின்றோமோ அது வளர்ந்த பின் அந்த உணர்வுகள் எதிலும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கும் பக்கம் செல்லாது. அங்கே சென்றால் செவுட்டில் அடித்த மாதிரி அடித்து விலக்கித் தள்ளிவிடும்.
 
மரம் செடி கொடி அவைகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாகத் தோன்றி வளர்ந்து வந்தது. ஆனால் தீமையான உணர்வுகள் கலந்து மனிதனுக்குள் விளைந்தது. ஆகையினால் மனிதனால் உருவாக்கிய தீமையான அலைகள் தாவரங்கள் அருகே அங்கே போகாது போக முடியாது.
 
விண்ணிலே சூரிய குடும்பத்தில் உருவான கோள்கள் சூரியனின் பிடிப்பில் இல்லை என்றால் திசை மாறிச் சென்று எங்கே போய் மடிகின்றது என்று சொல்ல முடியாது. பெரிய சுழல் இருக்கும்அதிலே கரைந்து விடும்.
 
இதைப் போன்று தான் சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் பெரிய கடல்அது பூமியில் முதலிலே உருவானது. அதிலே கரைந்து தனக்குள் கரைத்து மீண்டும் வெளிப்படுத்தும்.
 
இதே போல தான் மனிதர்கள் ஈர்க்காத உணர்வுகள் கடலின் ஈர்ப்புக்குள் சென்று மூழ்கிவிடும். இதை உணர்த்துவதற்குத் தான் சதுர்த்தி என்று உருவாக்கப்பட்டு தீமை செய்யும் உணர்வுகளை இப்படித்தான் கரைக்க வேண்டும் என்று சிலையைப் புறத்தில் காட்டி மக்களுக்குள் விளைந்த தீமையான வினைகளை பிறர் பால் பற்று கொண்டு எண்ணி எடுத்த உணர்வுகளைத் தனக்குள் பதிவாக்காதபடி அவர்களை நலமாக்க வேண்டும் என்ற உணர்வினை எடுத்துப் பகைமை உணர்வுகள் இங்கே நிற்காது அப்புறப்படுத்த வேண்டும்.
 
இங்கே யாரும் எடுக்கவில்லை நாமும் எடுக்கவில்லை அவர்களும் எடுக்கவில்லை என்றால் நாம் வாழும் இடத்திலே அது நிற்காது.
 
விநாயகர் சதுர்த்தி அன்று உலக மக்கள் அனைவருமே இது போன்று அருள் உணர்வுகளை ஏகோபித்த நிலையில் எடுத்துப் பகைமை உணர்வுகளை இழுக்கவில்லை என்றால் இது எல்லாம் ஒதுங்கி கடலுக்குள் சென்று அமிழ்ந்துவிடும்.
 
அதாவது ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்ளவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. அப்பொழுது அந்த உணர்வுகள் அது பாட்டுக்கே நகர்ந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கிவிடும்.
 
விநாயகர் சதுர்த்தி என்றால் தீமைகளை நிறுத்து…! உனக்குள் தீமையின் வளர்ச்சியைத் தடைபடுத்து அதைக் கரைத்து விடு…! சாஸ்திரப்படி இது உண்மை.

August 26, 2025

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்


நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகி விடுகின்றது. (வினை வித்து)
 
ஆனாலும் நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.
 
1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.
 
இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம்.
 
அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும் போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.
 
1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும் போது அரங்கநாதன்…”
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது ஆண்டாள்…”
 
இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.
 
ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.
 
இதைப் போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.
 
மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.
 
1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாகி விடுகின்றது.
 
ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
 
பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
 
அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.
 
கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.
 
நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரிஎல்லாருக்கும் உதவி செய்தேன்எல்லாம் செய்தேன்
2.“ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.
 
உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும் போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகி விடுகின்றது.
 
1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
2.அந்த நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும்
3.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
4.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
5.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.
 
ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.
 
பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்த பின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.
 
 நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத் தான் விநாயகர் சதுர்த்தி என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
 
சதுர்த்தி என்றால் நிறுத்திஎன்று பொருள்.
 
1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல் நிறுத்தி”
2.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து அதை வினையாக்கி
3."ஞானக்கனியாக" நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம். 

July 13, 2023

விண்ணில் கோள்கள் கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்கப் பழக வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் பிணிகளில் இருந்து விடுபட வேண்டும் மெய்ப்பொருளுடன் ஒன்ற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அவர்களுக்கு அங்கே பாய்ச்ச வேண்டும்.

அதே சமயத்தில் சந்தர்ப்பவசத்தால் ஒருவருக்கொருவர் பகைமைகள் யார் யாரிடமெல்லாம் உண்டானதோ
1.அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.அவர்கள் நலமாக வாழ வேண்டும்
4.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் பெற வேண்டும் என்று நாம் அவர்களை நினைக்க வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் நம்மை அறியாது புகுந்த தீய வினைகளுக்கு உணவு கொடுக்காதபடி இப்படி எண்ணி ஒதுக்கிவிட வேண்டும். இதே போன்று அவர்களும் எண்ண வேண்டும்.

இப்படி இருவருமே பகைமை ஊட்டும் உணர்வுகளை இழுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை என்றால் அது விலகி அப்பால் சென்று விடும்.

நம் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால்
1.சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் கோள்கள் சுழன்று கொண்டிருக்கிறது…
2.காந்த ஈர்ப்பு வட்டத்திலே தான் அது சுற்றி வருகின்றது
3.ஆனால் சூரியனின் ஈர்ப்பின் (காந்தம்) நிலைகள் இழந்து விட்டால் கோள்கள் எங்கோ ஓடிச் சென்று விடும்.
4.ஆரம்பத்தில் எந்த சூரியனை மையம் கொண்டு சுழற்சி நிலைகள் பெற்றதோ அதன் ஈர்ப்புக்குள் சென்று கரைந்து விடும்

ஒரு பிரபஞ்சத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் இருக்கின்றது
1.அதனுடைய அடிப்படை வரிசையிலே “சுழல் போன்று” ஒன்று (BLACK HOLE) உண்டு.
2.சூரியனின் சக்தி முடிந்தபின் (முதுமை அடைந்த பின்) அந்தச் சுழலுக்குள் ஈர்க்கப்பட்டு
3.தனது இனத்தைக் கவர்ந்து மீண்டும் கலக்கி பிரபஞ்சத்தில் பறக்கச் செய்யும்.
4.மற்ற இனத்திற்கு இதை உணவாகக் கொடுத்து அதை வளரச் செய்யும்.

இது இயற்கையின் சில நியதிகள்.

இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். நீ கோள் என்றும் நினைக்கின்றாய் சூரியன் என்றும் நினைக்கின்றாய் அதுவும் கோள்தான் அதனின் கடைசி நிலைன் இப்படி ஆகும் என்றார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் விண்ணிலே கரைவது போல் மண்ணுலகில் வரும் தீமைகளை நாம் கரைக்க வேண்டும்.

அதைத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தீமைகளை அகன்று செல்லச் செய்யும் நிலையாக அதைக் கரைக்கும் (கடலில்) நிலையாக “விநாயகர் சதுர்த்தி” என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நம் எண்ணத்தால் எடுத்தது அணுக்களாக விளைந்திருக்கின்றது. அதனின் ஈர்ப்பாக… அந்த இழுக்கும் சக்தி இல்லாதபடி நாம் தடைப்படுத்தி பட்டால் அது இந்த பூமியின் சுழற்சியின் தன்மையில் விலகிப் போய்க்கொண்டே இருக்கும்.

உதாரணமாக கடல் அருகிலே சென்றால் அது அப்படியே இழுக்கும். அலைகள் மோதி மறுபடியும் தனக்குள் இழுக்கும். உள்ளே இழுக்கும் பொழுது எல்லாவற்றையும் இழுத்து உள்ளே கொண்டு செல்லும்.

இதைப் போன்று எந்தெந்த மனிதன் பால் நாம் உணர்வின் தன்மை எடுத்து வைத்திருக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை படர்ந்த பின் எதற்கும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கிற பக்கம் செல்ல முடியாது. அது செவிட்டில் அறைந்தது போன்று அடித்துத் தள்ளிவிடும்.

மரம் செடி கொடிகளுடைய சத்து தான் மனிதனுக்குள் எண்ணங்களாக வந்தது இருந்தாலும் பிற தீமையின் உணர்வுகள் கலந்து அது வேறு சுவை கொண்ட நிலையாக மாற்றியது

ஆகையினால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீய வினைகள் அதாவது அந்தத் தீமையின் அலைகள் இங்கே போகாது.

விண்ணின் நிலைகளில் சூரியனின் பிடிப்பில்லை என்றால் அதன் ஈர்ப்பில் உள்ள கோள்கள் எங்கே போய் மடிகிறதோ சொல்ல முடியாது அதைப் போன்று
1.சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் தான் பெரும் கடல்… அது முதலில் உருவானது
2.கடல் அதைத் தனக்குள் எடுத்துக் கரைத்து மீண்டும் அது வெளிப்படும்.
3.அதாவது மனிதர்கள் ஒதுக்கித் தள்ளிய தீய வினைகள் கடலின் ஈர்ப்புக்குள் சென்று அது மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் காவியத்தில் கருத்தினைச் சொல்லி விநாயகர் சதுர்த்தி…! களிமண்ணில் சிலையாகச் செய்து தீமைகளைக் கரைத்திடும் நிலையாகக் கடலில் கரைப்பதாகக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.

தனக்குள் உறைந்த தீய வினைகளை பிறர் மேல் கொண்ட பகைமைகளைக் கரைக்கச் சொன்னார்கள்.

1.நாம் பார்க்கும் எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று
2.அந்தப் பகைமைகளுக்கு இங்கே இடம் இல்லாதபடி செயல்படுத்த வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் இப்படிச் செயல்படுத்தும் பொழுது தீமைகள் இங்கே இருக்காது… தீமைகள் கரைக்கப்படுகின்றது.

ஞானிகள் காட்டிய வழியிலே… சாஸ்திரப்படி இது பேருண்மை.

January 8, 2023

இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்… சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை ஆற்றிலே கரைக்கின்றோம்… ஏன்…?

களிமண்ணால் விநாயகர் சிலையைச் செய்து… பின் அதைப் பூஜித்து ஒன்பது நாட்கள் கழித்து ஆற்றிலே கொண்டு போய்க் கரைத்து விடுவார்கள்.

ஏனென்றால் களிமண்ணால் விநாயகர் சிலையைச் செய்து... அதை வைத்துப் பூஜித்து விட்டுக் கடைசியில் நீரிலே கரைக்க வேண்டும். இது தான் விநாயகர் சதுர்த்தி என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக... சதுர்த்தி என்றாலே “என்ன...?” என்று புரியாத நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.
1.மனித வாழ்க்கையில் இனி பிறவியில்லா நிலை அடையும் கடைசி நிலை தான் விநாயகர் சதுர்த்தி என்பது
2.தீமைகள் நமக்குள் எவை இருப்பினும் அவைகளை நீக்கி நாம் நமது ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவது தான் இந்த நிலை.

ஒரு பருப்பை (மண்ணிலே விளைந்ததை) வேக வைத்தால் அது மீண்டும் முளைக்குமா...? வேக வைத்த பொருள் ஒரு போதும் முளைக்காது.

மனிதனாக நாம் வளர்ந்து வந்த நிலைகளிலில் நம் உடலிலே எத்தனையோ விதமான தீய வினைகள் உண்டு.
1.அந்தத் தீயவினைகளை நமக்குள் வளர்க்காது தடுப்பது எப்படி...?
2.தீமைகள் விளையாது தடுக்க வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்...?
3.என்ன செய்தால் நம் உடலில் இருக்கும் தீவினைகள் வளராது தடுக்க முடியும்...? என்று
4.அதை எல்லாம் நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்...? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்து நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நாங்கள் பார்த்த குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் அவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் சொன்னால் என்ன ஆகும்...?

1.சூரியன் இந்த தீய வினைகளை எல்லாம் இழுத்துக் கொண்டு ஓடியே போய்விடும்
2.பரமாத்மா (காற்று மண்டலம்) தூய்மை அடைந்து விடும்… நம் ஆன்மா சுத்தமாகும்… நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் சுத்தமாகும்.

ஒரு வருடம் முழுவதும் நாம் பிறருடைய குறைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் அதை நம் உடலிலிருந்து கரைத்திடல் வேண்டும்.

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் உருவத்தை உருவாக்கி… தான் வளர்ந்த நிலையை நினைவில் கொண்டு… அறியாது சேர்ந்த தீமைகளைக் கரைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சாஸ்திரங்களில் இது உண்மை…!

எப்படிக் களிமண்ணில் செய்து நாம் கடலில் கொண்டு கரைக்கின்றோமோ இதே போல மனிதனின் உடலில் விளைந்த இந்தத் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.
1.அதாவது சிலையை அங்கே கரைப்பது போல்
2.மீண்டும் மீண்டும் நாம் இந்தப் பூமியில் இன்னொரு உடல் பெறாதபடி
3.உடல் பெறும் உணர்வுகளைக் (உடலை) கரைக்க வேண்டும்.

விநாயகர் சிலையைக் கரைக்கின்றோம். இறந்தார்கள் என்றால் சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கின்றோம்.
1.ஆனால் உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றோமா…?
2.வேகா நிலை அடைய முற்படுகின்றோமா…?

சாதாரண மக்களும் தீமையிலிருந்து விடுபடுவதற்கு… உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கு இவ்வளவு அழகான நிலைகளில் ஞானிகள் நமக்கு வடித்துக் கொடுத்திருக்கிறார்கள். “நாம் யாராவது அந்த ஞானிகளை மதிக்கின்றோமா...?”

June 19, 2021

அன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்... சமுதாயமும் சீராகும்...!

 

பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ குழந்தைகளை அனுப்புகிறோம் என்றால் ஆயிரக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்... டாக்டருக்கோ இஞ்சினியருக்கோ என்றால் இலட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்.

தாய் தந்தையர்கள் எப்படியோ அந்தப் பணத்தைக் கட்டிப் படிக்க வைத்து “பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்...” என்ற நிலையில் வீடு வாசல் எல்லாம் வைத்துச் சம்பாரித்து வைத்திருந்தாலும் அதை ஒத்திக்குக் கொடுத்தோ அல்லது விற்றோ தன் பிள்ளைகளை வளர்க்க விரும்புகின்றார்கள்.

ஆனால் டாக்டருக்குப் படிக்கப் போகும் போது பெயிலாகி விட்டான் என்றால் ஐயோ... இவ்வளவு பணம் கொடுத்துப் படிக்க வைத்தேனே... இந்த மாதிரி ஆகி விட்டானே...! தாய் தந்தை வேதனைப்படுகிறார்கள்.

இருபது இலட்சம் ஐம்பது இலட்சம் கொடுத்து டாக்டர் படிப்புக்குச் சேர்த்த பின் தன் பையன் உயர்ந்தவனாக இருப்பான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான் நன்றாகச் சம்பாரிப்பான் என்று தாய் தந்தையர் நினைக்கின்றார்கள்.

1.ஆனால் அவன் அங்கே கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் சுற்றுவதும்
2.அங்கே எதாவது பிரச்சினை என்றால் ஸ்ட்ரைக் செய்வதும்
3.அங்கே நல்ல ஒழுக்கங்கள் இல்லாதபடி என்னென்ன கெட்ட பழக்கங்கள் வளர வேண்டுமோ
4.அதை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து விடுவான்.

பல இலட்சம் கொடுத்துப் படிக்கப் போவோர் நல்ல பழக்கங்கள் அங்கே பெரும்பகுதி இருப்பதில்லை. தன் விருபத்தின்படி அங்கே நடப்பதும் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய்...? என்று தட்டிக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்...? அறிவு கெட்டதனமாகக் கேட்கிறாய்..? என்று தாய் தந்தையரைக் கேட்பதற்கு வந்துவிடுகின்றனர்.

இப்படித் தான் தாய் தந்தையரை ஏசவும் பேசவும் போன்ற நிலைகளுக்குப் பிள்ளைகள் ஆளாக்குகின்றனர். ஆனால் இதைக் கண்டு வேதனைப்பட்டு இறந்து போன பிற்பாடு அவர்கள் ஆன்மா எங்கே போகும்...?

விஷத்தின் தன்மை எல்லை கடந்து சென்று பாம்பாகவோ தேளாகவோ தான் பிறக்க நேரும்.

1.என் பையன் இப்படிச் செய்துவிட்டானே... பேசுகின்றானே...! என்ற
2.சாப அலைகளுடன் அந்த எண்ண அலைகளப் பரப்பினால்
3.பையன் டாக்டராக ஆனாலும் கைராசி டாக்டராக இருக்க முடியாது...
4.அவன் பார்க்கும் வைத்தியங்களும் சீராக வராது.. பின் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் தாய் தந்தையரின் “அருள் வாக்கு” இல்லை என்றால் அதைத் தெளிவாகச் செயல்படுத்த முடியாது.

ஒரு இஞ்சினியருக்குப் படிக்க வைக்க எத்தனையோ இலஞ்சம் கொடுத்து அல்லும் பகலும் பாடுபட்டு பட்டினியாக இருந்து இஞ்சினியராகப் படிக்க வைத்த பின் பையன் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வார்.

ஆனால் அதே சமயத்தில் தன் உணர்வின் தன்மையைச் சீராக்காதபடித் தன்னுடைய இஷ்டத்திற்குப் பல நிலைகளைச் செய்வார்.

அதைக் கண்டு தாய் தந்தையர் வேதனைப்படும் போது இந்தத் தீய வினைகள் இவருக்குள் சேர்ந்து அதே தீய வினையால அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை கூட வருகிறது.

1.தன் பையனை எண்ணி வேதனையைச் சேர்த்து உடல் உணர்வுகள் அனைத்திலும் நஞ்சு கலந்து
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த நஞ்சையே அங்கேயும் உருவாக்கி
3.புகுந்த உடலையும் நோயாக்கி அவரையும் விழுத்தாட்டி விடும்.

எந்தப் பையன் தாய் தந்தையருக்குத் துரோகம் செய்தானோ... சொன்னபடி கேட்கவில்லையோ... அதே எண்ணத்தில் போனால் பையன் உடலுக்குள் ஆன்மா போய்விடும்.

அல்லது... குடும்பத்தில் பையன் திருமணமாகிப் போனாலும்
1.“இப்படிச் செய்கின்றானே...” என்ற எண்ணத்தில் தாய் தந்தையர் ஆன்மா பிரிந்தால்
2.அந்த உணர்வுகள் பாய்ந்து... எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பையனை வாழ விடாத நிலைகள் ஆக்கிவிடும்.

அல்லது... பையன் திருமணமான பின் சம்பாரித்துச் செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பமுற்றிருக்கும் போது அவன் தாய் தந்தையர் எங்களை எப்படி எல்லாம் செய்தாய்...! இடைஞ்சல் செய்துவிட்டு இன்று இப்படி இருக்கின்றாயே...! என்று எண்ணினால் போதும்

1.கர்ப்பமுற்ற தாய்க்கு இந்த உணர்வுகள் சாடப்படும் போது
2.அந்தக் குழந்தைகளின் நிலை சூனியமாகிவிடும்... அறிவற்றதாகவும் வளர்வதைக் காணலாம்.

இதைப் போல் மனிதர்களுக்குள் ஒன்றுக்கொன்று சந்தர்ப்பபேதத்தால் ஏற்படும் நிலைகளால் பல தீய விளைவுகளாகி அவர்கள் எதிர்காலமே இருள் சூழ்ந்த நிலைகளாகி மனித நினைவே இழந்திடும் நிலை வருகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று வைத்தார்கள் ஞானிகள். பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று “அருள் ஞானம் பெற வேண்டும்...” என்று தாய் தந்தையர் அன்றைக்கு எண்ண வேண்டும்.

தன் பிள்ளைகள் “இப்படி இருக்கிறார்களே... உன்னை நான் வணங்கினேனே...!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே
1.பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்...?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் மேலே சொன்ன பகைமைகள் உண்டானாலும்
1.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
2.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

1.களிமண்ணால் செய்த விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்...!

ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தீய வினைகளைக் கரைக்கலாம்.

March 20, 2019

நம்முடைய முன்னோர்கள் சொன்ன முறைப்படி தீய வினைகளை நாம் கரைக்கின்றோமோ...?


விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் செய்த விநாயகரை வைத்துத்தான் கும்பிடுகின்றோம். அதைப் பார்த்தால் அன்றைக்கு நல்லா கிராக்கியாக இருக்கும்.

மாலையைப் போடுகிறோம். ஆடம்பரப் படுத்துகின்றோம். வாழை மரத்தை வைக்கின்றோம். மஞ்சள் கும்பம் வைக்கின்றோம் இனிப்பை வைக்கின்றோம். கரும்பை வைக்கின்றோம்.

எல்லாவற்றையும் வைத்துச் சமைக்கின்றோம். பூஜை செய்கிறோம். ஆடுகிறோம் பாடுகிறோம். கடைசியில் அந்த விநாயகரைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைக்கின்றோம்.

1.ஞானிகள் சொன்ன தத்துவம் வேறு. நாம் சொல்வது வேறு.
2.எல்லாம் கும்பிட்ட பின் களிமண்ணில் செய்த அந்த விநாயகரைக் கடலில் கொண்டு போய் கரைத்து விடுகிறோம்.
3.ஏன் எதற்கு என்று சிந்திக்கின்றோமா...?

விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதிகாலையில் நாம் என்ன செய்ய வேண்டும்..? துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக  நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

காலையில் விழித்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். மனைவியும் தன் கணவருக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலு பெறச் செய்ய வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் யாரை எல்லாம் சந்தித்தோமோ பேசினோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும். அங்கே அருள் ஒளி படர வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிப் பகைமை உணர்வை நமக்குள் நுழையாத படி முதலில் இதைச் செய்ய வேண்டும்.

நம் பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று அருள் ஞானம் பெற வேண்டும் என்று அன்றைக்கு எண்ண வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு விநாயகர் சதுர்த்தி தினத்திலேயும் “இப்படி இருக்கிறார்களே... உன்னை நான் வணங்கினேனே...!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் நமக்குள் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

அன்றைக்குத் தினத்தில் பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்...?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

1.குடும்பத்தில் சந்தர்ப்பத்தில் பகைமைகள் உண்டானாலும்
2.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
3.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

ஞானிகள் விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்...!