ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2018

வேலை செய்யும் இடத்தில் பொறுப்பில்லாது இருப்பவர்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை

ஒரு சிலர் வெளியிலே விளையாடுவது போல வேலை செய்யும் இடத்திலும் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள்.

கம்பெனிக்குள் இருவர் விளையாடுவதை நாம் கண் கொண்டு  பார்க்கப்படும் பொழுது நம் உணர்வுக்கும் அவர் செயலுக்கும் மாறுபட்ட நிலைகள் நடக்கப்படும் பொழுது அவர் உடலில் விளைந்த அந்தப் பொறுப்பற்ற செயல்களின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அவர்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் உடலிலிருந்து வரக்கூடிதை நம் கண் கவர்ந்து நம்மைச் சுவாசிக்க வைக்கிறது. சுவாசிக்கும் பொழுது
1.பொறுப்புடன் வேலை பார்க்கும் நிலைக்கும்
2.பொறுப்பற்ற நிலையில் அவர்கள் செயல்படுவதற்கும்
3.இரண்டு நிலைகளாக நம் உயிருக்குள் கலந்து
4.”பொறுப்பற்ற செயல்களைச் செய்கின்றார்களே…!” என்று
5.ஊழ்வினையாக வித்தாகநமக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் பொறுப்புடன் இருக்கும் நமக்கு அவர்கள் செயல்களைப் பொறுக்க முடியாது இப்படிச் செய்கின்றார்களே.,.!” என்ற வேதனை நம்மை அறியாமலே வருகின்றது.

இப்படி வேதனைப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வுடன் இந்த வேதனை உணர்வுகள் இரண்டறக் கலந்து விடுகின்றது.

வேதனை நம் நல்ல குணத்துடன் கலந்த பின் அடுத்து நாம் முகத்தைச் சுளித்து வேலை பார்க்கும் இடத்தில்இப்படி விளையாடுகிறீர்களே…?” என்று கேட்கின்றோம்.

பதிலுக்கு அவர்… “நீ என்ன பெரிய ஆளா…! என்னைக் குறை கூறுவதற்கு…?” என்று சொல்வார்.

எதிர் நிலையான உணர்வுகள் இப்படி இயக்கப்படும் பொழுது சிந்தித்துப் பதில் சொல்ல முடியாத நிலையில் இந்தச் சந்தர்ப்பம் ஒருவருக்கொருவர் வெறுப்பாகி பழி தீர்க்கும் உணர்வுகளாகஇருவர் உடலிலும் பதிவாகிவிடுன்றது.

அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக் காட்டும் நிலைகள் வந்தவுடன்
1.அவர்கள் கண்ணின் பார்வையே
2.வேறு தினுசாக மாறுபட்டு விடுகின்றது.

என்ன…! இவன் இப்படிப் பார்க்கிறான்…!” என்று பொறுப்புடன் உள்ளவர் கவனிக்கும் பொழுது மீண்டும் இவருடைய கொதிப்பு அதிகமாகி சுவாசித்த உணர்வுகள் சிந்திக்கும் திறன் அற்றுக் கோபத்தின் எல்லை கடந்த நிலை ஆகிவிடுகின்றது.

கோபமான உணர்வுகள் தோன்றியவுடனே கார உணர்ச்சியாகி நம்மிடமிருந்து வெளிப்படும் சொல் அதைக் கேட்பவருக்கும் எரிச்சலூட்டும் நிலையாக வந்து விடுகின்றது.

ஒரு மிளகாயை நம் உடல் மீது தேய்த்தால் அது எப்படி எரிச்சலூட்டுகின்றதோ அது போல் அவர்கள் செய்யும் தவறான உணர்வுகள் நம் கோப உணர்ச்சிகளைத் தூண்டி காரமான உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து எரிச்சலூட்டும் உணர்வுகள் விளைந்து விடுகின்றது.

ஒரு பலகாரம் சுடும் பொழுது ஏதாவது கை தவறி காரம் அதிகமாகப் பட்டுவிட்டால் பலகாரத்தில் காரம் அதிகமாகி உஷ்உஷ்…” என்று ஊதிச் சாப்பிடுவோம். பலகாரத்தை வெறுக்கும் நிலைகள் வரும்.

அதைப் போல் அவர்களுடைய பொறுப்பற்ற செயல்கள் நமக்குள் வந்து
1.அவனைக் கவனித்துப் பார்க்கும் பார்வையால்
2.இவன் ஏன் நம்மை இப்படிப் பார்க்கிறான் என்ற நிலைகள் அங்கே விளைந்து
3.அவர்கள் சொல்லிலும் சில தடுமாற்றமான சொல்கள் வருகின்றது.

அதனால் பொறுப்புடன் உள்ளவருக்கு எரிச்சலூட்டும் உணர்வுகளைத் தனக்குள் படைக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரத்தில் ஏம்ப்பா…, இப்படிப் பொறுப்பில்லாமல் வேலை செய்கிறீர்கள்…?” என்று தான் சொல்ல முடியுமே தவிர தன்னுடன் இணைத்துச் சொல்லும்சொற்கள் வராது…!”

இப்படிக் கேட்டவுடனே ஏற்கனவே பொறுப்பற்ற செயலைச் செய்தவர்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் எரிச்சலான பதில் வரும்.

மேலதிகாரிகள் வரும் பொழுது அவர்களிடமும் நம்மை இந்த விஷயத்தைச் சொல்லத் தூண்டும்.

அப்போது எரிச்சலூட்டும் சொற்களைக் கேட்டவுடன் அந்த மேலதிகாரியும் எரிச்சல் பட்டு எரிச்சலான உணர்வுகள் அவர் உடலிலும் விளைகின்றது.

நல்ல உணர்வுக்குள் எரிச்சல் பட்டதனால் ரிப்பொர்ட் சொன்னதை வைத்து மேலதிகாரி நேராக அந்தப் பொறுப்பற்ற செயல் செய்தவரைக் கேட்கப்படும் பொழுது எரிச்சலான பதிலைச் சொல்கின்றனர்.

அதற்குப் பின் யார் சொன்னது…? எவர் சொன்னது…?  நான் செய்ய வில்லையே…!” என்று வெறுப்புடன் பழி தீர்க்கும் உணர்வாக விளைந்து விடுகின்றது அந்த சந்தர்ப்பம்.

நீ இவ்வளவு தூரம் மேலதிகாரியிடம் சொல்லும் அளவிற்கு வந்து விட்டாயா…?” என்ற நிலைகளில் எரிச்சல்பட்டு இவர் வெறுக்கும்படியாக அவர்களும் சில செயல்களைச் செய்யத் தொடங்குவார்கள்.

அப்பொழுது இந்தத் தொழில் செய்யும் இடத்திலே நிம்மதியற்ற நிலைகள் ஆகி பொறுப்புடன் வேலை செய்பவர் வேதனையுடனும் வெறுப்புடனும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்,

அதை அதிகமாக அவர் சுவாசிக்கும் பொழுது கை கால் எரிச்சல் கண் எரிச்சல் எரிவாதம் போன்ற நோய்கள் உருவாகி விடுகின்றது.

வேலை செய்யும் இடத்தில் இவ்வாறு நடக்கும் இந்தச் சம்பவங்களை மற்றவருடன் பேசும் பொழுது இப்படிச் செய்கிறான் அப்படிச் செய்கிறான்…” என்று எரிச்சலாகச் சொன்னவுடனே இதைக் கேட்டு அவர்களும் ஏம்ப்பா நீ இப்படி எரிஞ்சி எரிஞ்சி பேசுகிறாய்…?” என்பார்கள்.

அப்புறம் அந்த பொறுப்பான உணர்வு கொண்டவர்கள்
1.“யாரிடத்தில் போய் நியாயத்தைச் சொல்வது…!
2.எவரிடத்தில் நியாயத்தைச் சொல்வது…!
3.எல்லோருமே பித்தலாட்டக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்ற உணர்வுக்கு வந்துவிடுவார்.

இது கடைசியில் கடும் நோயாகி விடுகின்றது. வேலை செய்யும் தொழில்கள் அனைத்திலுமே இது போன்ற நிலை உள்ளது.


கூட்டமைப்பாக வேலை செய்யும் பொழுது மேலதிகாரி என்ற நிலையில் கண்கானிக்க வரும் பொழுது ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலை ஏற்படுகின்றது.

அப்பொழுது குறை இல்லாததை அதே குறை உணர்வை இவர் மேல் சுமத்தப்படும் பொழுது பொறுப்புள்ளவர் தவறே செய்யவில்லை என்றாலும் தவறு செய்யாததைத் தவறு என்று சொல்லும் பொழுது பொறுப்பாக உள்ளவருக்கு மிகவும் கொடூரமாக ஆத்திரம் வந்து விடுகின்றது.

இதனால் பெரும் வேதனைகளை அனுபவித்து அந்த உணர்வின் செயல்கள் அவர் உடல்களிலே பரவத் தொடங்கி விடுகின்றது.

அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகி வினைக்கு நாயகனாக அவர் எண்ணிய மணங்கள் அவர் ஆன்மாவாக மாறிவிடுகின்றது.

நாம் மனித உடல் பெறும் பொழுதே இளமையிலிருந்தே நஞ்சினை நீக்கி நல்ல உணர்வினை உடலாகச் சேர்த்து உடலிலிருந்து வரக்கூடிய நறுமணங்களை கெட்டதை நீக்கும் உணர்வின் ஆற்றலாக ஆறாவது அறிவாக ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும் நமது மனதில் பிறர் செய்யும் அந்த நிலையால் நமக்குள் விளைந்த உணர்வுகள் கார உணர்வுகளாக மாறி அந்த ஆறாவது அறிவைச் சரியாகச் செயல்படுத்தாது வேதனையும் வெறுப்பும் எரிச்சலும் விளைந்து கொடூரமான நோயாகி உடலை நலியச் செய்து நல்ல எண்ணத்தையே சீர்குலைத்து விடுகின்றது. அதே போல
1.ஒரு விஷச் செடி எவ்வாறு அதன் விஷத்தின் தன்மையைக்
2.காற்றிலிருந்து கவர்ந்து அது செழித்து ஓங்கி வளருகின்றதோ
3.அந்தப் பொறுப்பற்றவருடைய உடலிலே வீரியத் துடிப்பாக
4.வேகத்தின் நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையாக வளரும்.

ஒரு பாம்பின் தன்மை அது சீறிப் பாயும் பொழுது அது உடலில் உள்ள நஞ்சினைப் பாய்ச்சி மற்றவர்களுடைய பலத்தைக் குறைக்கச் செய்யும்.

ஒரு பாம்பு சீறி பாயும் பொழுது கண்ணால் பார்த்தவுடனே அந்த நஞ்சின் தன்மை ஊடுருவி நம் பலங்கள் குறைகின்றது.

அதைப் போல பொறுப்பற்றவர்களுடைய செயல்கள் பிறர் துன்பப்படுவார்கள் என்ற சிந்தனையில்லாது அவர்களுடைய செயல்களும் சொற்களும் அது வெளிப்பட்டு நாளுக்கு நாள் நஞ்சு அதிகமாகி சிந்தனையற்றவராக ஆக்கி விடுகின்றது.

அவர் உடலிலுள்ள ஆறாவது அறிவு நஞ்சினை நீக்கிடும் அறிவாக இருந்தாலும் அது மாசுபட்டுவிடுகின்றது. பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்.

மனிதனான பின் நஞ்சு கலந்ததை வினையாகச் சேர்த்து நல் வினைகள் அனைத்தையுமே சிறுகச் சிறுகக் குறைத்து தீய வினைகளுக்கு நாயகனாக உடலில் உறுப்புகள் மாற்றமடைந்துவிடுகின்றது.

மனிதனின் சொற் தொடர்கள் அனைத்தும் பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல்லாகவும் வெறுக்கும் நிலையாக அடைந்து விடுகின்றது.

இவ்வாறு வரும் வேதனைகளிலிருந்து மீள்வதற்குத் தான் அந்த அருள் ஞானியின் உணர்வுகளை உங்கள் உடலில் சக்தி வாய்ந்ததாக உபதேசித்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

அந்த ஞானிகளின் அருளை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்,  மெய் ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துப் பிறருடைய உணர்வின் தன்மை நமக்குள் ஆட்டி படைக்காத நிலையாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தீயவினைகளைத் தடுத்து நிறுத்தும் சக்திகளை மனிதர்கள் நான் வளர்த்துக் கொள்ளும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி.