ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label ஈஸ்வராய குருதேவர். Show all posts
Showing posts with label ஈஸ்வராய குருதேவர். Show all posts

August 18, 2025

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்
 
இன்று நமது வாழ்க்கையில் எத்தகைய நிலையில் இருப்பினும் அதை நாம் சீர்படுத்துவதற்குப் பல பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். மந்திரம் எந்திரம் யாகங்கள் ஆலயங்களுக்குச் செல்வது… என்று இப்படி எத்தனையோ நிலைகளைச் செய்து அதை எல்லாம் நிவர்த்தி செய்து விடலாம்…” என்ற எண்ணத்தில் தான் நாம் செல்கின்றோம்.
 
ஆனால் பண்டைய கால ஞானிகள் எவ்வாறு உயர்ந்த சக்திகள் பெற்றார்கள்…? என்பதை
1.நீங்களே உங்களுக்குள் உணர்ந்து
2.அறியாது புகுந்து தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகளை நீக்கிட முடியும் என்ற நிலையை
3.பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஸ்வராய குருதேவர் தான் இதையெல்லாம் உணர்த்துகின்றார்.
 
ஆனால் நான் அவரை அணுகிச் செல்லவில்லை. அவரே தான் எம்மை அடிக்கடி அணுகி வந்து கொண்டிருந்தார். அவர் அணுகப்படும் போது அவரிடமிருந்து விலகிச் செல்லும் நிலையே ஏற்பட்டது. அப்படி நான் விலகிச் சென்றாலும் அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாத நிலையில் என்னை அணுகியே சில நிலைகளைச் சொல்வார்.
 
அதை எல்லாம் நான் கேட்ட பின் பித்தன் என்ற நிலையில் மந்திரங்கள் தந்திரங்கள் செய்து அதில் சிக்குண்டு தவிக்கின்றார்.
1.ஆக அவரிடம் நாம் சிக்கிவிட்டால் நமக்கும் இந்தக் கதி வந்துவிடும் என்று
2.அவரை அணுகாது நான் விடுபட்டுச் சென்று கொண்டிருந்தேன்.
 
இருப்பினும் அவர் விட்ட பாடில்லை.
 
அது சமயம் என் மனைவிக்குக் கடுமையான எலும்புருக்கி நோய் வந்தது. வந்தபின் ஒட்டன்சத்திரம் ஹாஸ்பிடல் சேர்த்தோம். ஆனால் அங்கே டாக்டர்களால் ஒன்றும் முடியாத நிலை ஏற்பட்டு அவர்கள் கூட்டிச் சென்று விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
 
காரணம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த மயக்க மருந்து வேலை செய்யவில்லை. ஆகையினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
 
என்னுடைய மாமனாருக்கு ஒரே பெண் குழந்தை. வீட்டுக்கு மனைவியை நான் கூப்பிட்டு வந்த நிலையில் “இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற பின் மூர்ச்சையாகி” அவர் மரணமடைந்து விட்டார்.
 
பின் அதற்கு வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்தேன். என் மனைவி இன்றோ நாளையோ என்று ஜீவன் பிரியும் நிலையில் இருக்கின்றது. இத்தருணத்தில் பித்தரைப் போன்று இருந்த குருநாதர் இங்கே வருகின்றார்.
 
அவருடைய உணர்வுகள் என்னைக் கடுமையாகச் சாடுகின்றது. இங்கே வா என்று என்னைக் கூப்பிடுகின்றார் நான் மறுக்கின்றேன்.
 
ஏனென்றால் மாமனார் இறந்த சூழ்நிலை வேறு விதமாக இருப்பதால் நான் அவரிடம் செல்ல மறுக்கின்றேன். ஆனால் அவரோ நீ வந்து தான் ஆக வேண்டும்…” என்று போர் செய்யும் முறையில் வருகின்றார்.
 
சுற்றத்தார் அனைவரும் அங்கே இருக்கப்படும் பொழுது இவருடன் அடிக்கடி தகராறு செய்தால் மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நிலையில் சரி என்று அணுகி அவருடன் சென்றேன்.
 
காபி வாங்கிக் கொடுத்தார் குடித்தேன் குடித்த பின்பு இன்று உன்னை விடவே மாட்டேன் என்று கட்டாயப்படுத்துகின்றார். பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் நீர் இல்லாத தெப்பக்குளத்திற்குள் அழைத்துச் செல்கின்றார்.
 
அங்கே என்னுடைய வாழ்க்கை வரலாறு என் இளமைப் பருவம் சிறு வயதில் இருந்து நடந்த நிகழ்ச்சிகளை எல்லாவற்றையும் சொல்கின்றார்.
1.நான் உன்னைப் பல காலமாகப் பின் தொடர்ந்தே வருகின்றேன்.
2.என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்று சொல்கின்றார்.
 
என் வாழ்க்கையை முழுவதும் சொல்லி உன் மனைவி இறந்துவிடும் நிலையில் இருக்கின்றது. கையினால் நான் கொடுக்கும் இந்த விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும் உன் மனைவிக்குக் கொடு… எழுந்து நடப்பாள் நலமடைவள்…! என்று சொல்கின்றார்.
 
அவர் சொன்னது போன்று செய்த பின் என் மனைவி அதிலிருந்து மீண்டது. இரண்டு நாட்களில் இடுப்புக்குக் கீழ் அசைவில்லாது இருந்த கால்களில் அசைவுகள் கிடைத்தது. அடுத்து எழுந்து உட்காரும் நிலையும் வந்தது உணவு உட்கொள்ளும் நிலையும் வந்தது அதன் நடமாடும் நிலைகள் வந்தது.
 
ஒரு மாதம் கழித்து குருநாதர் மீண்டும் எம்மைச் சந்திக்கின்றார் அவரைச் சந்தித்த பின் அவருடன் சென்றேன்.
 
இப்பொழுது எனக்கு டீ வாங்கிக் கொடு என்று என்னிடம் கேட்கின்றார். வாங்கிக் கொடுத்த பின் என்னை அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்துகின்றார்.
 
ஒரு சமயம் என்னைச் சாக்கடை அருகிலே அமரும்படி சொல்கின்றார். கடைக்குச் சென்று காபி டீ வாங்கி வா என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு வந்து வைத்த பின் அங்கிருக்கக்கூடிய சாக்கடையில் இருந்து அள்ளிப்போட்ட குப்பைகளை அதிலே போடுகின்றார்.
 
அவர் டீ குடிப்பார் நான் காபி குடிப்பேன். சாக்கடையை அள்ளிப்போட்டு என்னை குடிக்கச் சொல்கிறார். நான் மறுக்கின்றேன்…! அவருக்குக் கோபம் வந்துவிட்டது.
 
நான் சொல்வதை எல்லாம் செய்கின்றேன் என்று சொன்னாயே இப்பொழுது ஏன் மறுக்கின்றாய்…? என்று மீண்டும் கேள்வி எழுப்புகின்றார்.
 
இருப்பினும் எனக்கு அந்த இடத்திலே சிரமம் ஏற்படுகின்றது அங்கே வருவோர் போவோரை எல்லாம் உற்றுப் பார்க்கின்றேன். இவரையும்  பார்க்கின்றேன்… மற்றவர்களையும் பார்க்கின்றேன்.
 
சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடையும் அள்ளிப் போட்டுக் குடிக்கச் சொல்கின்றார்… வசமாகச் சிக்கிக் கொண்டேனே…! என்று தவிக்கின்றேன்.
 
காரணம்
1.என் மனைவியை எழுப்பிய பின்… நான் சொல்வதை எல்லாம் செய்கின்றாயா…! என்று
2.சரி செய்கிறேன் என்று என்னிடம் வாக்கை வாங்கிக் கொண்ட பின் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.
 
சரி அதைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வா. வரும் பொழுது முறுக்கு கடலைப்பருப்பு பொரிகடலை வாங்கி வா என்று சொன்னார்.
 
வாங்கி வந்த பின் சாக்கடைக்குள் கோடுகளைப் போடச் சொல்கின்றார். அவர் சொன்ன முறைப்படி கோடு போட்ட இடங்களில் முருக்கையும் கடலைப் பருப்பையும் பொரிகடலையும் போட்டேன்.
 
பன்றி அங்கே வருகின்றது. சாக்கடைக்குள் அமிழ்ந்திருக்கும் கடலைப் பருப்பை நுகர்ந்து எடுத்து முதலிலே உட்கொள்கின்றது. அடுத்து முறுக்கைச் சாப்பிடுகின்றது. கடைசியில் பொரிகடலையும் சாப்பிடுகின்றது.
 
சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை எண்ணாது
1.பன்றி எவ்வாறு அதிலிருக்கும் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்கின்றது…?
2.அதற்கு அந்த நுகரும் சக்தி எப்படி வந்தது?
3.நல்லவைகளை எப்படி நுகர்கின்றது…? தீமைகளை எப்படிப் பிக்கின்றது…?
4.அதனுடைய வலிமை எப்படிப்பட்டது…? என்பதை இங்கே உணர்த்துகின்றார்.
 
கடவுளின் அவதாரத்தை அங்கு அமர்ந்தே உபதேசிக்கின்றார். வராக அவதாரம் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று சொன்னார்.
 
ஓர் உயிரணுவின் தோற்றமும் பல நிலைகளிருந்து மீண்டு காத்திடும் உணர்வுகளை ஒவ்வொரு சரீரத்திலும் நுகர்ந்து நுகர்ந்து… பரிணாம வளர்ச்சியில் பன்றியாகப் பிறந்து மற்ற தீமைகளை பிளந்திடும் உணர்வாக அந்த சக்தியைப் பெற்றுப் பெற்று கெட்டதை நீக்கிடும் வலிமை கொண்டு நல்லதை நுகரும் சக்தியும் வலுவான நிலை கொண்டு அதைப் பெற்று வளர்த்து எவ்வாறு இத்தகைய செயல்களைச் செயல்படுத்துகிறது…? என்று உணர்த்துகின்றார்.
 
1.பின் நல்லவைகள் அதற்குள் அதிகமாக நாற்றமான உணர்வுகள் தணி
2.நாற்றமான உணர்வுகளுக்குள் நல்ல உணர்வின் வலிமை அதிகமாக
3.அந்த நாற்றம் தணிந்து இந்த நாற்றத்தை நீக்கிடும் அந்த உணர்வின் சத்து அதிகமாக விளைந்து உடலைப் பிளந்து
4.அதில் விளைந்த வித்தின் உணர்வின் சத்தை அது கவர்ந்து வெளிவந்த பின் பரசுராம் என்று
5.அந்தத் தத்துவப் பிரகாரம் சமப்படுத்தும் உடலாக மனிதனாக உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
6.இதைத் தான் கடவுள் என்ற நிலையில் புழுவிலிருந்து மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்.
 
இதையெல்லாம் நீங்கள் தெளிவாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
 
கல்வி அறிவு அற்றவனாக நான் இருந்தாலும் குருநாதர் பதிவு செய்த உணர்வின் சக்தி அதை நான் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அன்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சி கணக்கிலடங்காத நிலைகளையும் அவர் உணர்த்திதை மீண்டும் நினைவு கூறும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாமும் கவர முடிகின்றது.
 
உங்களுக்கு அதை உபதேசிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்தாலும் எனக்குள் அது விளைகின்றது. சூரியனின் காந்த சக்தி கவரு போது கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.
 
பதிவை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணும் பொழுது அந்த மெய்ஞானிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ அதைப் போன்று
1.தனக்குள் விளையும் இந்த உயர்ந்த உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்
2.கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருவது.
 
ஆகவே பொறுமையான நிலைகள் கொண்டு மகரிஷிகள் அருள் உணர்வலைகளை எண்ணி எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளுமாறு எல்லோரையும் வேண்டுகின்றேன்.

June 12, 2025

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

குரு வழியில் “மாமகரிஷின் ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்


ஒருவர் திட்டினாலும் பேசினாலும் கவலையான நிலைகளாக இருந்தால் அதை எடுத்தால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. வேதனை வெறுப்பு கோபம் சலிப்பு சஞ்சலம் இது எல்லாம் உடலுக்குள் வந்தபின் இந்த உடலான கோயிலில் அசுத்தமாகின்றது நோய்கள் ஆகின்றது பல வேதனைகள் ஆகின்றது.
 
1.”கூட்டுத் தியானத்தின் மூலம்” நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உணர்வினைச் செவிகளிலே பாய்ச்சப்படும் பொழுது
3.நமது கண்கள் இந்தக் காற்றிலிருக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தைக் கவருகின்றது நம் உயிரிலே படுகின்றது.
4.இந்த உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கின்றது.
 
இந்தக் கூட்டு தியானத்தின் அமைப்பிலே இந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்துப் பழகிக் கொண்டால்
1.உயிரான ஈசனுக்கும் இந்த அசுத்தம் சேர்வதில்லை.
2.இந்த உடலான கோவிலுக்குள் தீமைகள் புகாது தூய்மைப்படுத்துகின்றோம்.
 
ஒருவன் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் எண்ணுகின்றோம். அப்போது புரையேறுகிறது. தொழிலில் எத்தனையோ இடைஞ்சல் ஆகிறது.
 
ஆனால் கூட்டுத் தியானத்தின் மூலம் த்தனை பேரும் சேர்ந்து அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியைக் கிடைக்கச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது.
 
எல்லோருடைய உடல்களிலும் அருள் உணர்வுகள் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக இருக்க வேண்டும் எங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும்… என்று
1.கூட்டு தியானங்களில் இதைப் போன்று எடுத்துக் கொண்டால்
2.உங்களுடைய வாக்கு எல்லோருக்குள்ளும் ஆழமாக இது பதிந்து நோய்களைப் போக்க முடியும்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெரிய மகானாக முடியும்
4.உங்களுடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க வேண்டும்.
5.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களை அறியாத சேர்ந்த துன்பங்களை அகற்றும்.
 
இதை நாம் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.
 
நாளைக்கு வரும் விஞ்ஞான உலகத்தால் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் பொழுது அந்த விஷங்கள் நமக்குள் சேர்ந்து
1.நமது சிந்தனையை அழித்துவிடக் கூடாது.
2.அருள் உணர்வுகளை அழித்துவிடக் கூடாது.
3.அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் வலிமை பெற வேண்டும்.
 
அதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன் உங்களால் முடியும்.
 
நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது உடனே நல்லதாகின்றது. ஏன்..? நீங்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கு நல்லதாக்க முடியும் அல்லவா.
1.அந்த அளவுக்கு நமக்குள் பெருக்கி விட்டால் காற்றிலிருக்கக்கூடிய தீமைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
2.நாட்டு மக்களைக் காக்கலாம் நல்லவர்களைக் காக்கலாம்.
3.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்க்கலாம்கைமையற்ற வாழ்க்கை வாழலாம்.
4.உயிருடன் என்றும் ஒன்றிடலாம் அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது போன்றது என்றும் நாம் வாழ முடியும்.
5.மனதை ஒன்றாக்கப்படும் பொழுது ஒளியின் சுடராக முடியும்.
 
குறுகிய காலமே நாம் வாழுகின்றோம். மனதை ஒன்றாகக் குவித்து நாம் வாழ வேண்டும் உடலில் அறியாது சேர்ந்த பகைமைகளை அகற்றிப் பண்பைக் காட்டி அன்பைக் காட்டி.. அரவணைத்து அருளைப் பெருக்க வேண்டும் என்று நமக்குள் செலுத்த வேண்டும்.
 
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.
 
இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞானத்தினால் பரவப்பட்டுள்ள நச்சுத்தன்மைகளை நாம் அனைவரும் சேர்ந்து அகற்றுவோம். அருள் வழியில் வாழ்வோம் அதை நாம் செயல்படுத்துவோம்.
 
ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை நாம் பெறுவோம். அதுதான் நம்முடைய கடைசி எல்லை. இந்த உடலுக்குப் பின் அந்த எல்லையை அடைவோம்.
 
அந்த எல்லை எங்கு இருக்கின்றது…?
1.நம் உயிருடன் ஒன்றி அந்த உணர்வைக் கூட்டினால் அவனே நம்மை அழைத்துச் செல்கின்றான்.
2.ஒளியின் உடலாக நம்மை உருவாக்குகின்றான்.
 
இல்லை எனக்குத் தீமை செய்கிறான் என்ற உணர்வை ட்டினால் தீமை செய்யும் உடலுக்குள்ளே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும். ஆக நாம் எண்ணிய நிலைக்கொப்பத் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.
 
ஆகவே நாம் அருள் வழியைப் பெறுவோம் பேரருளைக் கூட்டுவோம். யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலே படப்பட்டு நமது குருவின் உணர்வுகளை நீங்கள் பெற்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் சக்தி பெறுவீர்கள்.
 
உங்கள் வாழ்க்கையில் வந்த இருண்ட நிலையை நீக்கி அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெற்று அதை மகிழ்ந்து வாழும் உணர்வை உங்களுக்குள் ஊட்டி உங்கள் பேச்சால் மூச்சால் உலக மக்களைத் தெளிந்து வாழும் மக்களாக வாழச் செய்யுங்கள்…”
 
1.இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரவச் செய்யுங்கள்.
2.நமது குரு அருளை உலக மக்களுக்குப் பெறச் செய்யுங்கள் நீங்களும் அதைப் பெற்று வளருங்கள்.
3.நம் குரு வழியில் அவருடைய சீடர்களாக நாம் அனைவரும் ஆவோம்.
4.அவர் ஒளியின் தன்மை பெற்றார் அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஒளியைக் கூட்டுவோம்.
 
நம் பேச்சும் மூச்சும் பிறருடைய இருளைப் போக்கட்டும் மெய்ப்பொருளைக் காண்போம். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைவோம். அந்த அருள் சக்தியைப் பெறுவோம் அனைவரையும் பெறச் செய்வோம் அருள் வாழ்க்கை வாழ்வோம் மெய் வாழ்க்கை வாழ்வோம்.

February 13, 2025

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!


கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே... சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்... நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!
 
யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்...”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி... ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது
5.தாய் மூச்சு நாடியின்... சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட... இனி தடை ஏது…?
 
ஆகவே... எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”
 
சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?
 
1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து... இளைப்பாற்றி...
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.
 
சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்... எண்ணத் தேர் மனமாம் மனதில்... அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.
 
தேரின் மையம் எது தெரியுமா…?
 
“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து... சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.
 
சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க... பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.
 
வேதாள மாமகரிஷி அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.

January 24, 2025

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை

“மாமகரிஷி ஈஸ்வரர்” தன இன மக்கள் பால் கொண்டுள்ள ஆசை


விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் அதிலே அஞ்ஞான வாழ்க்கையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டு வாழ்ந்தாலும் ஞ்ஞானத்தின் வளர்ச்சியே அதிகரிக்கிறது மெய்ஞானத்தின் நிலைகள் மறைகின்றது…!
 
இதைப் போன்ற நிலையில் இருந்து மனிதர்கள் மீள வேண்டும் என்பதற்கே
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரர் தனது வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மைகளை
2.மனிதனான தன் இன மக்கள் அறிதல் வேண்டும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்
3.தன்னை அறியாது வரும் இருளை நீக்கிடும் அந்த ஆற்றல் பெற வேண்டும் என்ற இந்த ஆசையில்
4.தனக்குள் பெற்ற அருள் சக்தியை மக்கள் பெற வேண்டும் என்று அதற்கு வேண்டிய உணர்வுகளை வழி நடத்தினார்.
5.அதற்காக எம்மை அனுப்பினார்.. அவருடைய உணர்வுகளுடன் என்னை ஒன்றாக இணையச் செய்தார்.
6.உணர்வுகளை ஆழமாகப் பதியச் செய்தார் அவர் கண்ட பேருண்மைகளை எம்மையும் அறியும் படி செய்தார்.
7.அறிந்த உணர்வின் தன்மையை மக்களுக்கு நீ எடுத்துக்காட்டு என்று சொன்னார்.
 
அந்த உணர்வினை மக்களுக்கு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் ஊழ்வினை என்ற வித்துக்களாக” முதலிலே அவர்களுக்குள் பதியச் செய். அவர்கள் மீண்டும் அதை எண்ணும் பொழுது அந்த அருள் வழியில் அந்த எண்ணமே அவர்களை மீட்ட உதவ வேண்டும்.
1.உன்னை நீ நம்புகின்றாய்…!
2.அதைப் போன்று அவர்கள் அவர்களை நம்ப வேண்டும்…”
 
அருள் உணர்வின் சக்தி எதையெல்லாம் உன்னிடமிருந்து அவர்கள் கேட்டு உணர்கின்றார்களோ நல்லது என்று உணர்ந்த பின் அந்த நல்லதையே கவரும் உணர்வுகளை நீ ஊட்ட வேண்டும்.
 
அதைக் கவர்ந்தால் அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெறுகின்றார்கள்.
1.அதனை நீ செய்வாயாக…! என்று அருள் வாக்கினை வாங்கிக் கொண்டுதான்
2.எமக்குப் பல உண்மையின் உணர்வுகளை உபதேசித்தார்… ணர்வின் ஆற்றலைப் பெறும்படி செய்தார்.
 
உலக மக்கள் அனைவரும் நல்லவரே…!ன்று உலகெங்கிலும் மதம் இனம் என்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலையில் இருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்பதற்காக இதைச் சொன்னார் குருநாதர்.
 
அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

January 23, 2025

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா


மனிதன் என்றே பெயர் பெறும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து மனித குலச் சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால் சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”
 
1.உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும்…! என்று ஏற்கனவே படிப்படியாகக் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.
 
இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.
 
அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு...! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.
 
தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.
 
திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்... தாயும் தேடுகிறது...! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம் தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?
 
மகன் சிரித்துவிட்டு இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.
 
தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.
 
ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை எமது விளையாட்டு என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)
3.”நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான் உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா.
 
மறு சமைப்பைப் பற்றி வினா எழுப்புகின்றாய்
 
ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).
 
கண்டத்தில் எழுப்பும் ஒலிஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.
 
கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.
 
பரிணாம தத்துவப்படி கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.
 
1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் தன் சுவாசத்தைக் கொண்டு தன்னைத்தான் காத்துக் கொள்ளும்…”
 
அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.

January 12, 2025

ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு

ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு


மான் இனம் தனது குட்டிக்கு ஊட்டுகின்ற பாலானது அது ஊட்டுகின்ற செயலை மாற்று குணம் பொருந்திய எதிரி விலங்கினங்களைக் கண்டுவிட்டால் ஈர்ப்பின் அலை செயல் புரிந்திடும் விதமாக
1.அந்த அலையானது மானின் சுவாசத்திலே பட்டவுடன்
2.பால் ஊட்டுகின்ற சுரப்பைச் சட்டென நிறுத்தித்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றுவிடும்.
 
அதே போன்றது தான் நீங்கள் தியானத்தில் எடுக்கும் சக்தியும்அதை உங்களுக்குக் கொடுக்கும் நிலையும்.
 
அதாவதுமகரிஷிகளின் பேரருள் பேரொளி சக்தி உங்களுக்குள் பாயப் பெற்றிடும் நிலையில்அந்த மகான்களின் சப்த அலைகள் நுண் ஒலி காந்த அலைகளாகப் பரவ விட்டுச் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ஓட்ட கதியில்
1.ஈஸ்வரராய் அளிக்கப்படும் (உயிர் வழி சுவாசம்) சுரக்கும் அமுதமாகிய அருளாசி கொண்டு உரைக்கப் பெறும் அருள் உபதேசங்கள்
2.எண்ணத்தின் கூர்மை மாற்று அலையின் சிந்தனையில் சிறிது மோதியவுடன் (சந்தர்ப்பத்தில் தீமைகள் மோதும் போது)
3.காட்சியின் ஒளிப்பதிவு நிலைகள் ஒலி அலைகளாக மாறு கொண்டிடும் நிகழ்விற்கே சற்று தடங்கலும் காட்டி…”
4.இப்படியும் நிகழ்ந்தனவா…? என்ற அதிசயப் பொருளாக வினா தொடுத்தால் (ஞானத்தின் வழியில் அறியும் எண்ணம் கொண்டால்)
5.காட்சிப் புலனறிவு பதிவு பெற்ற ஒலி அலைகளை நேரிடையாக உணர்ந்து கொண்டிடும்
6.ஞான திருஷ்டி எனும் விழிப்பார்வை கொண்டு காலத்தின் நிகழ்வுகளை” எம்மால் உணர்த்தப்படும். (ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு).
 
எமது (ஈஸ்வரபட்டர்) சர்வ ஆக்ஞையில் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஞானச் செல்வங்களுக்காகக் (உங்களுக்காக) காரண காரிய செயல்முறைகள் இதிலே காட்டப்பட்டுள்ளது.

December 28, 2024

உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது

உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது


“உலகை அழிவிலிருந்து காக்கும்” அன்று பித்தனைப் போன்று இருந்த எமது குருநாதர் பல நிலைகளை எமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு மனிதனாக உருவாக்கிய நற்குணத்தினை நீ தெய்வமாக மதி.
2.உயர்ந்த உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்தால் உனக்குள் து விளையும்.
3.அந்த உணர்வின் சொல்லாக அந்தக் கடவுளுக்கு மகிழ்ச்சியான உணர்வு கொண்டு ஆராதனை செய் என்றார்.
 
ஆகவே… உங்கள் உயிரைக் கடவுளாகக் காட்டினார்… உடலைக் கடவுள் அமைத்த கோட்டை என்று காட்டினார். மனிதனாக உருவாக்கிய அந்த உயர்ந்த உணர்வின் ஆக்கச் செயல்களை தெய்வமாக மதிக்கச் சொன்னார். அதைத்தான் உங்களில் நான் பார்க்கின்றேன்.
 
இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் உங்களை அறியாது சேர்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு மகிழ்ச்சி…” என்று வாயில் எப்பொழுது சொல்கின்றீர்களோ அது தான் எனக்குப் பேரானந்தப் பெருநிலையான அந்த சொத்தின் தன்மையாக அந்த மகிழ்ச்சி எனக்குள் விளையும்.
 
தீமைகள் சுழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதிலிருந்து விடுபட நான் (குருநாதர்) காட்டிய அருள் சக்தியை
1.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவச் செய்து
2.அங்கே உட்புகுந்த தீமைகளை நீக்கச் செய்து
3.மகிழ்ந்திடும் உணர்வின் எண்ன அலைகள் அங்கே விளையச் செய்து
4.அவர்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் ஒலிபரப்பும் நிலைகளைக் கண்டு நீ ஆனந்தப்பட வேண்டும்.
 
அதைத்தான் குரு எமக்குச் சொன்னார்.
 
ஒருவர் நமக்கு எதிரியாகி விட்டால் அவன் வேதனைப்பட வேண்டும் அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தான்… அவன் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ரசிப்பார்கள்.
 
இப்படி ரசிப்பவருடைய நிலைகள் தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை எல்லாம் நஞ்சின் தன்மையாக அது அடையச் செய்துவிடும்.
 
பின் இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது எந்த நஞ்சு இங்கே விளைந்ததோ மனிதன் சிந்தனை இக்கப்பட்டு இறந்த பின் பாம்பின் ரூபமாகத்தான் நஞ்சினைப் பாய்ச்சி மற்றதை ரசித்துச் சாப்பிடும் நிலையாகச் செல்ல வேண்டி வரும். நஞ்சுகள் கூடி பாம்பினமாகத் தான் பிறக்க வேண்டும்…
1.அதிலே நீ சென்று விடாதே
2.நஞ்சினை நீக்கி அருள் ஞானிகள் உணர்வுகள் அங்கே பெற வேண்டும் என்று நீ தியானி.
3.அதனின் உணர்வின் தன்மை ஒளியான உணர்வுகளைப் பரப்பு தீமைகளைப் போக்கு அதைக் கண்டு நீ மகிழ்ச்சி பெறு.
 
குருநாதர் சொன்னது இது தான்.
 
பித்தனைப் போன்று தான் அவர் இருந்தார். உலகம் அனைத்தும் “அவரைப் பித்தன்” என்று எண்ணினார்கள். ஆனால் உலக மக்கள் பித்தராக இருக்கிறார்கள்” என்று தான் அவர் சொன்னார்.
 
உலகம் பித்தின் நிலையில் இருந்து தன்னை அறியாது பல சித்தின் நிலைகள் கொண்டு அவரவர்கள் உற்பத்தியாகும் நிலை தான் இவ்வாறு உருவாக்கிக் கொண்டுள்ளார்கள் அதிலிருந்து நீ மீள வேண்டும்.
 
என்னைப் பித்தன் என்று சொல்பவர்கள் அவர்கள் தன்னைப் பித்தன் என்பதை மறந்து விட்டார்கள்.
1.அந்தப் பித்து கொண்ட உணர்வின் தன்மை எனக்குள் எட்டிடாது
2.அந்த மகரிஷிகள் உணர்வை ஒன்றே எனக்குப் போதும் என்று
3.இந்தச் சாக்கடைக்கு மொழி பூச வேண்டாம் உடல் சாக்கடை என்று உணர்த்திவிட்டு
4.சாக்கடை அருகில் இருந்து தான் இந்த உபதேசங்களை உணர்த்தினார்.
 
இந்தச் சாக்கடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதே…! எதை எடுத்தாலும் சாக்கடை கழிவுகள் சேரும். ஆகவே… உயிராக இயக்கப்பட்ட உணர்வின் ஒளியின் தன்மை கொண்டு ஒளியின் சுடராக ஆக வேண்டும்.
 
வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்து சாக்கடைக்குள்ளிருந்து நல்ல உணர்வை எடுத்து மனிதனாக உருவாகக் காரணமானதோ அதைப் போல் அந்த மெய் ஞானிகள் உணர்வை நீ நுகர்ந்து (உனக்குள்) சாக்கடைக்குள் மறைந்து இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு அவனுடன் நீ ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு என்றும் நீ வாழ வேண்டும்.
 
அதை நீ பெற வேண்டும் என்றால் நீ சந்திக்கும் கோடானு கோடி மக்களும் அதாவது முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்… ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலைச் சிருஷ்டித்தது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு குணத்தின் அடிப்படையில் இயக்குகின்றது
1.யாராக இருந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் ருக்கச் சேர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் பெற வேண்டும் ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
3.அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி நான் உனக்குக் காட்டிய நிலைகள் கொண்டு நீ தியானி.
 
அதை நீ செய்தால் நீ அதுவாகின்றாய்… ஒளியின் சரீரமாகின்றாய். உன்னைப் பார்ப்பவர்களும் உன்னுடன் அவரும் ஒளியாக ஆகின்றார்கள் என்று இப்படித்தான் எனக்கு வழி காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.