ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label மந்திரத்தை நம்பலாமா? யந்திரத்தை நம்பலாமா?. Show all posts
Showing posts with label மந்திரத்தை நம்பலாமா? யந்திரத்தை நம்பலாமா?. Show all posts

April 18, 2025

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல

மந்திரம் தந்திரம் தெரிந்தவர்களிடம் பழக்கம் வைப்பது நல்லதல்ல


இன்றும் நமது நாட்டில் பல நிலைகள் இருக்கின்றது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் திருநெல்வேலியில் டாக்டர் இருக்கின்றார் அவர் பல நிலைகளில் சென்று வந்தவர். இருந்தாலும் குட்டிச் சாத்தான் என்ற நிலைகளை வைத்து மந்திரவாதிகளிடம் பழக்கம் உள்ளவர்.
 
ஆனால் அந்தக் குட்டிச் சாத்தான் இவர் வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போகிறது. இங்கே தபோவனத்திற்கு வந்து ஒரு வாரம்  தங்கி இருந்தார்கள்.
 
இங்கே தங்கி இருக்கும் பொழுது நகைகள் போகவில்லை. மறுபடியும் அங்கே வீட்டிற்குப் போனவுடன் நகைகள் போகின்றது.
 
நான்கு பவுன் செயின் கழுத்தில் இருந்தால் எடுக்க முடியாது. இவர் கழுத்தில் உள்ளதைக்  கழட்டி என்ன செய்கின்றார்…? தலையணைக்கு அடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு போய் விட்டது. இரவு எனக்குப் போன் செய்கின்றார்.
 
இது வரை பத்தாயிரம் நோட்டு கட்டாக அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது. குட்டிச்சாத்தான் ஏவல் தான் அது.
 
இந்த மந்திரவாதிகள் ஜீபூம்பா வரும் என்று சொல்கிறார்கள் அல்லவா.
1.நமக்குச் சொத்து கிடைக்கும் சுகம் கிடைக்கும் என்று அவர்களிடம் ஜாஸ்தி பழகியவர்.
2.இப்பொழுது பழகியவுடன் என்ன ஆகிவிட்டது…? இங்கே இருக்கும் காசு எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகின்றது.
 
சிலருக்கெல்லாம் இந்த நோட்டைக் காட்டுகிறார்கள் அல்லவா. சில தாயத்துகளை எடுத்துக் காட்டுவார்கள். வீட்டில் வைத்துவிட்டு அதை அப்படியே எடுத்து வரும்.
 
அதே மாதிரி நீங்கள் வீட்டில் நோட்டை வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும். இன்னொரு வீட்டில் லட்டு வைத்திருந்தால் அதை எடுத்துக் கொடுக்கும். ஆனால் அந்த மந்திரவாதியை லட்டைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டான்.
 
இந்த மாதிரி ஒரு குட்டிச்சாத்தான் ஒரு மனித உணர்வின் தன்மையை இப்படி முச்சந்தி மண்ணை எடுத்துக் கொண்டு போய் அதுவும் மாவாசை காலம் கூப்பிட்டோம் என்றால் அது குட்டிச்சாத்தான் என்றால் கரு கலைந்த சிதைந்த அதற்கு மேல் இதை வைத்து அதற்காக வேண்டி சில மந்திரங்களைச் செய்து இந்த உணர்வை எடுத்து அந்த ஆவியை அழைத்துக் குட்டிச்சாத்தான் ஆக வைத்துக் கொள்வார்கள்.
 
அதை மற்ற பக்கம் ஏவல் செய்யும் பொழுது அது இவன் சொல்லும் வேலையை எல்லாம் செய்யும்.
1.நகையை எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் எடுத்து வரும்.
2.ஒரு பொருளைத் தொட்டுக் கரைத்து விடு என்றால் கரைத்து விடும் ஆவியாக மாறும் அவன் கைக்கு வந்துவிடும்.
 
இந்த மாதிரி எல்லாம் இன்றைக்கு மனிதனைப் பயன்படுத்துகிறார்கள். அரசர் காலங்களில் செய்த கொடுமை. ஆனால் இனி விஞ்ஞான உலகம் ந்த பின் நாம் அறிந்து கொண்டோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.ஆக நாம் அதைத்தான் அதிகமாக விரும்ப வேண்டும்.
 
எத்தகைய நிலைகள் இருந்தாலும் ஆயுள் கால மெம்பராகச் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து என்றும் பிறவியில்லா நிலையை அடைவது தான் நம்முடைய முழு நோக்கம்.
 
ஆக அந்த அருளைப் பெற்றால் இருளை நீக்க முடியும். கையில் விளக்கை எடுத்துக் கொண்டால் என்ன செய்யும்…? அங்கிருக்கும் பொருள் தெரியும்.
1.அவ்வப்போது ஆத்மசுத்தி செய்து கொண்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கும் பொழுது
2.நாம் எப்படிச் செயல்படுவது…? என்கிற சிந்தனை வரும்.
3.அதற்குத் தக்க உபாயமும் கிடைக்கும். ஆக நாம் நல்வழிப்படுத்தி நம்மை வழி நடத்திக் கொள்ள அந்தச் சக்தி கிடைக்கும்.
 
இல்லை என்றால் நாம் கோயிலுக்குப் போய் எல்லாம் செய்து மந்திரம் செய்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கி விடுவோம் என்றால் அது நடவாது.
 
இடைஞ்சல் வந்தது என்றால் வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்து இந்த வீட்டு வாசல்படியை இப்படி இடித்துப் போடு அப்படி இடித்துப் போடு இதை மாற்று…!” என்றால் சம்பாதித்த காசைஸ் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
 
ஆசையின் நிமித்தம் இன்னொருத்தர் செய்தால் இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்பான் இன்னொரு வாஸ்து சாஸ்திரக்காரன். அப்பொழுது எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்ப்பது…?
 
ஜாதகத்தை பார்த்தாலே இன்றைக்கு எடுத்துக் கொண்டால் இன்றைக்கு ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் ஒன்று போல எல்லாம் இருக்கின்றதா…? என்றால் இல்லை.
 
கௌரி பஞ்சாங்கத்தில் ஒரு விதமா ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஒரு விதமாய் இருக்கின்றது இந்த மாதிரி பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் மூன்றையும் பார்த்தால் மூன்றும் மூன்று விதமாக இருக்கின்றது.
 
நீங்கள் எதை நம்புவீர்கள்…?
 
அவரவர்கள் எடுத்துக் கொண்ட்து இதுதான் சரி என்கின்றார்கள். அவர்கள் அதைத் தான் சரி என்கின்றார்கள் ஆனால் அவன் சொன்னது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து இது தான் பதிவாகி இருக்கின்றது இதுதான் எனக்குச் சரியாக இருக்கும் என்பான்.
 
அந்த உணர்வை எடுத்து வழிபடும் பொழுது இப்படி ஆகின்றது. அடுத்தவன் சொன்னால் இதை மோசம் என்போம்
 
ஆக இதன் வழி தான் உலகம் முழுவதற்கும் பஞ்சாங்கங்களைப் பார்த்து நடப்பதும் நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் பார்ப்பதா…?  என்று ஆகிவிடும்.
 
நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்கியவன் மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்.
 
1.மனிதனால் நல்ல நேரங்களை நல்ல காலங்களை உருவாக்க முடியும்.
2.நல்ல காலங்களை உருவாக்கக்கூடிய திறனை உங்களுக்கு கொடுத்து
3.ஆயுட் கால மெம்பராக இருப்பவர் எல்லாம் அடுத்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வேண்டும்.

October 26, 2024

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்


எண்ணற்ற காலம் முதற்கொண்டே இவ்வாவிகளை வசியப்படுத்தி செயல்படுத்திடும் பல நிலைகள், பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.
 
மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்தி செயல் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில்தான் பேய் ஓட்டுதல், மந்திரித்தல் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.
 
1.எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ
2.அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறி விடுகின்றன.
 
உதாரணமாக பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு, பல நினைவுகளுடன் இல்லத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும், இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன், தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில், அதே எண்ண நிலையில் செல்லும் பொழுது அவ்வாசை நிலை கொண்ட நிலையில், மற்ற போக்குவரத்து இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டு, அந்நிலையில் அகால மரணம் எய்தி குருதி (இரத்த) வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்த பிறகு
1.அவ்வாத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலை கொண்ட எண்ண நிலை உடையவன் அந்நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப் பட்டவுடன் இவன் உடலில் அவ்வாவி ஏறிக்கொள்கின்றது.
 
இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில் அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது…
 
தன் நிலையே, தான் மறந்து உடலில் உள்ள ஆவிக்குத் தன்னை அறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்ட நிலையில் சோர்வு கொண்ட நிலையுணர்ந்து உள்ளவர்கள் மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.
 
இந்நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால்
1.அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றொர் ஆவி ஆத்மாவின் நிலை புரிந்து பேய் ஓட்டுவதாகச் சொல்லி
2.மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
3.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.
 
இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தான் ஏவலிலிருந்து, “இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாக் காரியம்... இப்பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் என்றென்றைக்கும் அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.
 
இந்நிலையிலிருந்து தப்புவதற்கு நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.அதன் பாதிப்பால் வரும் சஞ்சலம், சோர்வு, சோர்வில் இருந்து விடுபட
2.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி மகரிஷிகள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.அந்தச் சக்தியை அந்த ஆன்மாவுக்கும் அன்பு கலந்த நிலையில் பெறச் செய்ய வேண்டும்.
 
அப்படித் தான் அதன் செயலைக் கட்டுப்படுத்த முடியும்.

October 25, 2024

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”


குருவி ஜோதிடம், எலி, அணில் இப்படிப் பல நிலைகளைச் செப்புவது எந்நிலை கொண்டு…? என்பதனை விளக்கிடுவேன்.
 
இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான்.
 
அப்பிராணிகளின் உடலில் (மந்திரவாதிகள்) கருவின் மையை ஏற்றி விடுவார்கள். அந்நிலையில் இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு, இப்பிராணிகளை வைத்து ஜோதிடம் செப்பிடும் நிலையில் உள்ளவர்களுக்கு, அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.
 
இப்பிராணியின் உடலில் உள்ள இக்குட்டிச்சாத்தான் தான் நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட எந்நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும் இவர்கள் மனநிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.
 
அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும்.
1.இவ்வுலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது
2.பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன.
3.ஆவியின் தொடர்புபடுத்தி தன் உடலிலேயே பல ஆவிகளை துர் ஆவிகளை ஏற்றுக் கொண்டு அதனை ஏவிச் சூனியம் செய்வார்கள்.
 
சூனியத்திற்கு அடிமைப்பட்டவன் அச்சூனியத்தினால் தான் அவனுடைய ஆத்மாவும் பிரியும்.
 
1.பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்து விட்டு
2.இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்
3.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் வா…” என்றவுடன்
4.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் அக்குட்டிச்சாத்தான் செய்து தரும்.
5.இவர்கள் வைத்த பொருள் தான் அங்கிருந்து வருமே ஒழிய
6.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ, புஷ்பமோ எவையுமே
7.இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.
 
இந்நிலையில் உள்ள எச்சாமியார்கள் ஆகட்டும் மந்திரவாதிகள் ஆகட்டும் அவர்கள் தன் புகழ் உயர தன் நாமத்தினால் பொருள் ஈட்டி இச்செயலையெல்லாம் செய்வித்து மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை, “தன் ஆத்மாவையே தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்…
 
சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தம்…?
 
இருக்கும் ஒரே சொந்தம் நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி, நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?
 
இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே இச்சூனியக்காரர்களினால் வந்த நிலை தான். நம் பூமியில் நாம் வாழும் இக் கண்டத்தில் நம்மை அறியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.
 
நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.
 
1.நம் பூமியில் இவ் இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகள் சப்தரிஷி பெறும் நிலையெய்திட வாழ்ந்த பூமி இது
2.அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.
 
இக் கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

August 10, 2024

வசி…வசி…! என்று வசியம் செய்யும் மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளிடமிருந்து விடுபடுங்களப்பா…!

வசி…வசி…! என்று வசியம் செய்யும் மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளிடமிருந்து விடுபடுங்களப்பா…!

 

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன...? என்று வசிய மந்திரம் ஜெபித்த ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

“வசி… வசி… வசி…” என்று எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்...?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா...! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்...? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு...?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு... தன் பசிக்கு... எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா.

நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா...!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்... தீட்சண்ய ஆவிகள்... அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்... தற்கொலை செய்த ஆவிகள்... பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்... இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் “ஜெபம் என்றால் என்ன…?” என்று எண்ணுகிறாய்...?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி...வசி...! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி...வசி...! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன…? என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியை தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா...!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் “மகான்” என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் முதலில் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியைப் புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா...! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா...!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

December 29, 2020

தாயத்து... மந்திரித்த கயிறு... கட்டுவதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக தன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். யார் மீது அவர் பற்று கொண்டு வாழ்ந்தாரோ அவர் தற்கொலை செய்ததைக் கேள்விப்பட்டு ஆ...! என்று அதிர்ச்சி அடைந்தால் போதும். அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.
 
இப்படி இந்த உடலுக்குள் வந்த பின் அந்தப் பேய் மனம் கொண்ட உணர்வுகளையே இந்த உடலுக்குள் தூண்டும். ஆனால் புகுந்த உடலில் எந்த எரிச்சல் இல்லை என்றாலும் இது (புகுந்த ஆன்மா) “எரியுதே... எரியுதே...!” என்று எரிச்சலை ஊட்டும்.
 
இந்த உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் மடியத் தொடங்கும்.
1.இத்தகைய நிலைகள் ஆன பின் தாங்காது
2.இதுவும் அதே வேலையைச் செய்யும்.

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது..?
 
ஆனால் பக்தியின் தன்மையில் நாம் இதற்கு என்ன செய்கிறோம்...? கோவிலில் போய் அர்ச்சனை செய்தால் இந்தக் கஷ்டம் தீரும். அதற்கும் முடியவில்லை என்றால் யாகத்தை வளர்த்துப் பாவத்தைப் போக்கிக் கொள்...! என்று சொல்கிறார்கள்.
 
யாகத்திலே அவர்கள் சொல்லும் மந்திரத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்கிறோம்.
1.இன்ன  மந்திரத்தையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் உனக்குத் தொந்திரவு இல்லை
2.காளி உன்னைக் காப்பாற்றும்...! என்று எந்தக் காளியை அவர் வணங்குகின்றாரோ இவ்வாறு சொல்வார்கள்.
 
உதாரணமாக புலியைக் கண்ட பின் மற்ற மிருகங்கள் எல்லாம் அஞ்சத் தான் செய்யும். பொதுவாகக் கோப உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள்... அந்தக் காளியை வணங்கத் தான் நேரும்.
 
அந்த மந்திரத்தைச் சொல்லியே வாழ்ந்து கடைசியில் அந்த ஆன்மா வெளியிலே வந்தது என்றால் அதே மந்திரத்தைச் சொல்லும் போது “காளியை (ஆனால் அது ஆவி) நான் வசியம் செய்துவிட்டேன்...!” என்பார்கள்.
 
இதற்குள் ஒரு உணர்வினைச் செலுத்தி கரு மையாக்கி உடலிலே ஒரு இரட்சையாகப் (தாயத்து) போட்டுவிடுவார்கள்.
 
போட்ட பின் புலியைக் கண்டு எப்படி மற்ற மிருகங்கள் அஞ்சி ஓடுகின்றதோ இதே போல் அந்த இரட்சையைத் தொட்ட பின் உடலில் இருக்கும் அந்த ஆன்மா (முதலில் புகுந்தது) பயந்து ஓடும்.
 
பின் இதே உணர்வின் தன்மையைச் சில காலம் சுவாசித்தால் போதும். தாயத்து கட்டி இருப்பவர்கள் பெரும்பகுதியானோர் உடலில் எல்லாம் பார்க்கலாம். கை கால் குடைச்சல் இருந்து கொண்டே இருக்கும்...! (தாயத்தில் இருக்கும் பிறிதொரு ஆன்மாவின் இயக்கம்)
 
இந்த உணர்வுகள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எதிர்நிலையாகி இடையூறு ஊட்டும்.
1.இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசித்தால் அப்புறம் இன்னொருத்தரிடம் போய் தாயத்தைக் கட்டச் சொல்லும்.
2.இன்ன இடத்தில் போய்த் தாயத்தைக் கட்டினால் நன்றாகும் என்று கேள்விப்பட்டவுடனே அங்கே போவோம்.
3.இப்படி ஒவ்வொரு மந்திரக்காரர்களிடம் நாம் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டியது தான்...!
 
நாம் இறந்த பின் என்ன நடக்கும்...? இதே மந்திரத்தைச் சொல்லி நம் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான் “இன்னொரு மந்திரவாதி...”
 
முதல் மந்திரக்காரன் என்ன வேலை செய்தானோ அதே வேலைக்கு நம்மை இவனும் பயன்படுத்துவான். யானை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி ஆக வேண்டியது தான்...!
 
நாம் நினைக்கின்றோம் உடலில் இருக்கும் பொழுது பல தொல்லைகள் என்று...! ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த நிலை ஆகின்றோம்...! என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).
 
ஆனால் விஞ்ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்கள். ஒரு தாய் கருவுற்ற பத்து நாளிலேயே அந்தக் கருவில் வளரும் சிசுவை ஒரு காந்த ஊசி கொண்டு (கதிர்கள் மூலமாக) இலேசாக எடுத்து மோதச் செய்கிறார்கள். அப்பொழுது அந்தச் சிசு வேதனையால் துடி துடிக்கின்றது...!
 
இதை எல்லாம் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர். ஏனென்றால் அன்றைய ஞானிகள் இதை எல்லாம் மிகவும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள்.
 
1.கருவுற்ற தாய் ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்துப் பயந்து அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது
2.கருவில் வளரும் உயிருக்கும் இந்த உணர்வுகள் பாய்ச்சப்பட்டு
3.தாய் பயப்படுவது போன்றே அந்தக் குழந்தையும் பயப்படுகிறது.
 
நாம் துடிப்பதைப் போன்றே கருவில் இருக்கும் குழந்தையும் துடிக்கின்றது. இதுகள் எல்லாம் கருவில் வளரும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமலே இது போன்ற தீமைகள் வருகிறது. இதை எல்லாம் மாற்றி அமைத்த அருள் ஞானிகளின் சக்தியை எடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்... உடலுக்குப் பின் ஞானிகள் வாழும் எல்லையை அடைய வேண்டும்...! என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்  (ஞானகுரு).

November 14, 2019

காயத்ரி மந்திரம் சொல்லலாமா…?


காயத்ரி என்ற உணர்வு உண்டு. “காயத்ரி ஜெபம்” செய்ய வேண்டும் என்றாலே அதற்குண்டான மந்திரங்களைச் சொல்வார்கள்.

காயத்ரி ஜெபம் என்று மந்திரத்தைச் ஜெபிக்க ஆரம்பித்தார் என்றால் இன்னொரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வைத் தான் தனக்குள் எடுத்துக் கொள்ள முடியும்.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் வேதங்கள் என்ற நிலைகளில் அந்த அதர்வண வேதத்தைத் தான் கற்றுணர்ந்து வந்துள்ளோம்.
1.அந்த மந்திரத்தின் ஒலிகளையே நமக்குள் பரப்பி
2.இந்த உடலுக்குப் பின் இன்னொருத்தன் கையிலே ஆவியாகவும் பேயாகவும் நாம் அடிமையாகிச் சுற்றிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வேதனைப்படுவோரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம் தான்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.என்னிலே அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.

இதிலே எந்தத் தியானத்தை நீங்கள் எண்ணுகிறீர்கள்…!

வேதங்கள் கூறியது போல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தோம் என்றால் “சக்தி கிடைக்கிறது…” என்று சொல்லித்தான் அதைச் செய்வார்கள். சூரியனை எண்ணி விட்டால் அது காயத்ரி என்பார்கள்.

ஆனால் அது எந்த காயத்ரி…? என்பது வேண்டுமல்லவா…!

ஒருவரிடமிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்பட்டால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

அதாவது வெப்பம்… காந்தம்… விஷம்… என்ற மூன்று நிலைகளில்
1.அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளைக் காந்தம் கவர்ந்து கொண்டால்
2.அது தன்னுடன் இணைந்த நிலையில் பரப்பிரம்மமாகின்றது.
3.அந்த உணர்வின் சத்து ஒரு அணுத் தன்மை அடையும் சக்தி பெறுகின்றது - சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது.
4.ஆனால் அதே சமயத்தில் சேர்த்துக் கொண்ட மணம் அது ஞானமாக இருக்கின்றது.
5.அந்த வேதனைப்படும் உணர்வு அது தான் காயத்ரி… காயமாகி.. முழுமையாகின்றது.
6.அதை யார் சுவாசித்தாலும் அதே வேதனைப்படுத்தும் உணர்வாகத்தான் அது இயக்கும். 
7.இப்படி அந்தப் பொருள்படும்படி “காயத்ரி” என்றால் புலனறிவு ஐந்து...!
8.அதிலே எந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ அதன் வழி தான் அது நடக்கும்… அல்லது இயக்கும் என்று
9.வேதங்களின் மூலத்தில் இது மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…! என்றால் இல்லை.

மந்திர ஒலிகளை எழுப்பும் நிலைகளிலிருந்து விடுபட்டு அந்த அருள் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டும்.

அகஸ்தியன் ஒளியின் உணர்வாக முழுமை பெற்று இன்றும் அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தப் பேரருள் உணர்வை நமக்குள் விளையச் செய்து இந்த உடலுக்குப் பின் நாம் பிறப்பில்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

December 3, 2017

பொய்க்கால் வைத்துக் கட்டிடம் கட்டுவது போல்தான்... மந்திரம் சொல்வது என்பது – மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் தான் நாம் நிலைத்த நன்மைகளைப் பெற முடியும்

இப்போது வாழ்க்கையில் எனக்கு இடைஞ்சல் செய்தவனை எண்ணுகின்றேன்.என் பிள்ளை படிக்கவில்லையே... நாளைக்கு எதிர்காலம் என்ன ஆகுமோ...!” என்று நான் எண்ணிச் சிந்திக்கின்றேன்.

அப்பொழுது இந்தச் சிந்தனை எங்கே போகின்றது?

என் பிள்ளை படிக்கவில்லை என்றால் நாளை அவன் எதிர் காலம் என்னவாகும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் என்றால் போதும்...! (ஒரு நல்ல பையனைப் பற்றிக் கூடச் சிந்திக்க மாட்டோம். நல்லது எண்ணத்திற்கு வராது.)

இவன் சொன்னபடி கேட்கவில்லை.... படிப்பு சரியாக இல்லை... என்ற இந்த நிலையில் இருந்தால்
1.அவனைப் பற்றியே எண்ணி
2.அவன் உயர்ந்தவனாக வர வேண்டும் ஆனால் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என்றால்
3.நான் இறந்த பிற்பாடு இந்த உயிராத்மா அவன் உடலுக்குள் தான் போகும்.

அவனை எண்ணியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையான நிலைகள் எனக்குள் நோயாக வந்தது. நோயாக உருவான இந்த உயிராத்மா நான் இறந்த பிற்பாடு என் பையன் உடலில் தான் போகும்.


அங்கே போய் அங்கே நல்லதை விளைய வைக்கின்றதா...? என்றால் இல்லை. அவனை வீழ்த்தச் செய்வேன்.

மந்திரங்கள் தந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள்
1.மனித உடலில் விளைந்த உணர்வு எண்ணங்களைத் தனக்குள் கவர்ந்து கொண்டவர்கள்
2.வாமன அவதாரம் என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மந்திரத்தாலே அப்போதைக்கு அப்போது அந்தந்தக் காரியங்களை ஜெயித்துக் கொண்டு வந்தவர்கள்.

அதை எல்லாம் “தெய்வப் பண்புகளிலே பார்க்கப்பட்டு...” அந்த உணர்வின் தன்மை திசை திருப்பி அன்றைய வாழ்க்கையை எப்படியோ பொழுது போக்க வேண்டும் என்று செய்வார்கள்.

வீட்டில் மாடி கட்டுவதற்கு பொய்ப் பந்தலைக் கட்டி அதன் மேலே தளம் சுவர் எழுப்பிக் கட்டுவோம். செய்து முடித்தபின் பொய்ப் பந்தலை உடனுக்குடனே எடுத்து விடுவது போல் தான் மந்திரம் சொல்வதை அது நிரந்தரமாகக் கட்டி விட்டார்கள்.

1.மனித உடலிலே விளைய வைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
2.இந்த மனித வாழ்க்கையிலே தன்னுடைய பேருக்கும் புகழுக்கும்
3.தன் சுகபோகங்களுக்கும் எண்ணி எடுத்துக் கொண்டது தான் இந்த மந்திர ஒலிகள்.

அந்த மந்திர ஒலிகள் எங்கிருந்து வந்தது?

ஒரு மனித உடலில் விளைய வைத்த அந்த எண்ணங்களைக் கவர்ந்து தனக்குள் அது உருவாக்கித் தன்னுடன் இயக்கச் செய்யும் நிலையே அது.

சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் குணம் கொண்டு ஒரு ஆன்மா நம் உடலில் எப்படி நுழைந்து விடுகின்றதோ இதைப்போல
1.செயற்கையில் ஒரு மனிதன் மந்திர ஒலிகளைப் பரப்பச் செய்து
2.அந்த மந்திரத்தை எவன் உருவாக்கினானோ
3.அந்த மந்திர ஒலி கொண்டே மீண்டும் தனக்குள் கவர்ந்து
4.இன்னொரு ஆத்மாவினுடைய செயலைத் தனக்குள் கவர்ந்து கொள்வது
5.இது தான் மந்திரம்.

கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு  சில காலம் இன்னொரு உடலுக்குள் போய்ப் பேயாகவும் அருளாகவும் தெய்வமாகவும் செயல்படுத்தி மாற்றிக் காட்டலாம்.

பல வித்தைகளைச் செய்து காட்டலாம். ஆனால் பயன் ஒன்றுமே இல்லை. அப்படிச் செய்தவர்கள் அனைத்தும் மீண்டும் விஷத்தின் தன்மை கொண்டு பாம்பாகவோ தேளாகவோப் பிறந்து தான் மீண்டும் மனிதனாக வரவேண்டும்.

இதைப்போல நாம் மந்திரம் என்ற இந்த நிலைகளில் இருந்து விடுபட்டு பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.

ஏனென்றால் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நம்மை அறியாமல் நமக்குள் சென்ற இந்த அழுக்கினைத் துடைக்கத்தான் இந்தத் தியானம்.


தியானம் என்பது வேறு என்னமோ என்று நினைத்துக் கொள்கின்றார்கள்.

நமக்கு எப்போது இடைஞ்சல் வருகின்றதோ அந்த இடைஞ்சல் நமக்குள் ஒட்டாது "ஈஸ்வரா..." என்று தன் உயிரை வேண்டி விண்ணை நோக்கி எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடல் முழுவதும் பரப்பச் செய்வது தான் இந்தத் தியானம். 

செய்து பாருங்கள்.

August 5, 2017

“எல்லா வித்தைகளையும் தெரிந்தவர்… தாய் அங்கே செயல்படுகின்றது… முன் கூட்டியே எல்லாவற்றையும் சொல்வார் என்று சொல்கிறோம்...!

நான் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டவன். தவ வலிமை கொண்டவன் அனைத்தையும் அறிந்துணர்ந்தவன் கூடு பாயும் வித்தைகளை எல்லாம் தெரிந்தவன் என்ற நிலையில் அன்றைய அரசர் காலங்களில் நிறையப் பேர் உண்டு.
1.பிறருடைய எண்ணங்களைத் தன் மந்திரத்தால் அறிந்துணர்ந்து
2.இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உடலுக்குள் நின்று
3.பலருடைய ஆற்றல்களையும் சக்திகளையும் பெற முடியும் என்று இருந்தவர்கள் பலர்.

அந்த அளவிற்குச் சென்றாலும் ஒரு உடலுக்குள் ஊடுருவி பாம்பு உடலிலோ மற்ற மனிதனின் உடலிலோ சென்றாலும் இந்த உடலில் வாழப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பத்திற்கோப்ப கடினமான நிலைகள் வந்தவுடன் என்ன ஆகின்றது?

இப்பொழுது சாதாரண மனிதன் தான் வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு அதே நிலைகளில் ஏங்கியிருந்தால் இங்கே செல்லும்.

முதலிலே கூடுவிட்டுக் கூடு பாய்ந்துவிடலாம். ஆனால் அதிலிருந்து புகுந்த உடலில் அவன் எடுத்துக் கொண்ட அசுத்த நிலைகள் மறுபடியும் கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகள் அந்தச் சக்திகள் இழந்துவிடுகின்றது.

மறு கூட்டினுடைய நிலைகள் கொண்டு எந்த உடலைப் பெறுகின்றதோ அந்த உடலின் உணர்வின் சக்தி கலக்கப்பட்டு அந்த உணர்வின் ஆன்மா தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகத்தான் ஆகின்றது.

அப்படித் தேய்ந்துதான் இன்றும் பல வித்தைகளைச் செய்கின்றது. இன்று நாம் பார்க்கலாம்.
1.பலர் அருளாடுகின்றார்கள்...,
2.பல சித்தர்கள் இவர் உடலிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று சொல்வார்கள்.

இந்த உடலிலிருந்து செயல்பட்டாலும் இந்த உடலுக்கொப்ப ஆசைகள் தூண்டப்பட்டு இன்றைய வாழ்க்கைக்குக் காலத்தை வேண்டுமென்றால் தள்ளலாம்.

அதே சமயம் “அறிதல்…” என்ற நிலைகளில் முன் கூட்டியே மற்றவைகளையும் மற்றவர்களைப் பற்றியும் அளந்தறிந்து
1.அவர்கள் துன்பத்தையோ நோய்களைப் பற்றியோ
2.அறிந்துணர்ந்து அவர்களால் சொல்லவும் முடியும்.

அப்படிச் சொல்வார்களேயானால் அவர்களுடைய உணர்வுகள் அனைத்தும் இவர் உடலில் சேர்ந்து அந்தத் தீமையான உணர்வின் சத்துகள் இவர் உடலுக்குள் விளையத் தொடங்கும்.

சொல்லும் நிலைகள் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அதே சமயத்தில் பலருடைய துன்பத்தின் நிலைகள் இவர் உடலிலே சேர்க்கப்பட்டு நஞ்சான நிலைகள் கொண்டு அடுத்து நஞ்சான உடல்களாக மாறும் நிலைகள் தான் வரும். மனிதனாகக் கூட மீண்டும் பிறக்க முடியாது.

மந்திரத்தால் மக்கள் மத்தியிலே நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்றும் அந்தத் தாய் செய்கின்றது… இந்தத் தாய் செய்கின்றது…, என்றும் சொல்வார்கள்.

அந்தத் தாய்… என்பது எது?

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியைத்தான் தாய் என்கிறார்கள். அந்தச் சக்தியின் தொடர் வரிசையின் நிலைகள் ஒரு மனிதனுக்குள் எந்த நிலைகள் வளர்த்துக் கொள்கின்றனரோ அந்தச் சக்திகள் செயல்படுகின்றன.

சாமியார் செய்வார் மந்திரம் செய்யும் ஜோதிடம் செய்யும் இயந்திரம் செய்யும் இந்தச் சக்தி செய்யும் அந்தச் சக்தி செய்யும் என்றால்
1.“எந்தச் சக்தியும் செய்யாது”.
2.அவர்கள் மனித ஆசையில் எடுத்துக் கொண்ட சக்தி
3.இந்த மனித உடலில் சிறிது நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
4.அடுத்த கணம் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

ஒவ்வொரு மனிதனும் அவரவர் ஆசைக்கொப்ப எத்தனையோ மந்திரங்களைச் சொல்கின்றார்கள்.

இந்த மனித உடலில்
1.ஒவ்வொருவருடைய ஆசை விருப்பு வெறுப்பினுடைய நிலைகள் வெளிப்பட்டு
2.அதனின் நிலைக்கோப்ப எந்தெந்தத் தெய்வங்களை எண்ணுகின்றனரோ
3.அந்த உணர்வின் அலைகளைத்தான் இயக்கச் செய்ய முடியும்.
4.அந்த நிலைகளில் தான் வாழ்க்கை அமைந்திருக்கும்.

இன்னும் அந்த நிலைகளில் தான் நாமும் இருக்கின்றோம். இதைச் செய்தால் சரியாகுமா அங்கே போனால் சரியாகுமா தர்மம் செய்தால் சரியாகுமா என்று அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம்.

யாரோ எவரோ தான் செய்வார்கள்… நம்மால் எப்படி முடியும்…! “எல்லாம் அவன் செயல்” என்று இப்படித்தான் எண்ணம் உள்ளது.

நாம் நுகர்வதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. அதைத்தான் உருவாக்குகின்றது. அவனன்றி அணுவும் அசையாது… உள் நின்று இயக்கும் நம் உயிர் தான் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்பொழுது நீ எதை வினையாக்கிக் கொண்டிருக்கின்றாய்? ஆனால் நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும் என்று அங்கே தெளிவாகவே “கேள்விக் குறி…” போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

இதைப் போன்ற உண்மைகளைத் தெரிந்த பின் நாம் எடுக்க வேண்டிய சக்தி எது என்பதை நாம் உணர்தல் வேண்டும். 

இந்த உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய வேண்டும். “அது தான் ஞானிகள் நமக்குக் காட்டியது”.