ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2018

அரசனுக்கும் டிமிக்கி கொடுத்துத்தான் தான் கண்ட மெய் உணர்வுகளைkக் கொடுத்தார்கள் மகரிஷிகள்...!

விநாயகருக்கு அருகம்புல்லைப் போடுகின்றோம். அடுத்து இலை செடிகளைப் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து சாப்பிடுகின்றோம்.

சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள்.

விநாயக சதுர்த்தி அன்று களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.

கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும் மற்றவைகளும் வைத்து பூஜிக்கின்றோம். நாம் முன் சேர்த்துக் கொண்ட வினையெல்லாம் கரைப்பதற்காக வேண்டி விநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி அந்தக் கெட்டதை நீக்கி, அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான் இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.

கொழுக்கட்டை அவனுக்குப் பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால் எனக்கு வரம் கொடுப்பார் என்றுதான் புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.

கல்யாணம் ஆகவேண்டும் என்றால் எருக்கண் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும் அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால் கொடுப்பார் என்பார்கள்.

அர்சையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள்? அதாவது ஸ்தல விருட்சத்தில் மாரியம்மனுக்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு அரசும் வேம்பும் விநாயகனுக்கு வைத்தார்கள்.

இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.

இந்த மனித வாழ்க்கையில், நல்லதை நாம் கேட்கிறோம். கஷ்டமான நிலைகளில் அவர்கள் சொல்லப்படும் பொழுது அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கின்றோம். கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன் மாரி…” அவர்கள் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது.

மாரியம்மன் இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்து சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.

மாரியம்மன் கோவிலில் அக்கினிச் சட்டி வைத்திருக்கிறார்கள்? நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதில் இருக்கக்கூடிய விஷத் தன்மையை நீக்கும்.

மாரியம்மன் கோவிலில், அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தல விருட்சம் கசப்பு. நெருப்பிலே போட்டுக் கசப்பை நீக்கு என்று பொருள்.

இந்த விநாயகருக்கு அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள். கசப்பு இல்லையென்றால் வேலை நடக்காது. கசப்பைச் சிறுத்து அந்த அரசின் நிலைகளில் நீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு என்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.

உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில் குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன் நேராக வந்து விநாயகனைப் பார்க்கப்படும் பொழுது, நாம் புல்லைத் தின்றோம்இலை செடிகளைத் தின்றோம்இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து நமக்கு வேண்டியதைப் படைத்து இந்தச் சரீரத்தைப் பெற்றோம் என்ற இந்த உண்மையை உணர்த்திய அகஸ்தியரை நாம் எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மாரியம்மன் கோவிலில் காட்டியபடி கசப்பின் நிலைகளை நாம் அக்கினியில் போட்டுப் பொசுக்கியது போல் தீமைகளை இப்படிப் போசுக்கச் சொன்னார்கள்.

ஏனென்றால் மெய்ஞானிகள் இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கி விண் சென்றார்கள். அவர்களின் உணர்வை நமக்குள் செலுத்தி வாழ்க்கையொல் வந்த கசப்பைச் சிறுக்கச் செய்தனர் ஞானிகள்.

அரசைப் போன்று அந்த உயர்ந்த எண்ணங்களை மெய் ஞானி எப்படி வளர்த்தானோ தீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த அரசாக நமக்குள் ஆட்சி புரிய வேண்டும் என்றுதான் இந்த ஸ்தல விருட்சத்தை வைத்தார்கள்.

வாழ்க்கையில் நல்லவைகளைத் தான் எண்ணினோம். ஆனால் அறியாமல் அழுக்குகள் வந்தால் அந்த அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா.

யார் துடைக்கிறார்கள்? நினைக்கவில்லையே…!

1.கோவிலில் நமக்குப் புனித நிலைகளைக் கொடுப்பதற்காக
2.அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து சாஸ்திரங்களை எழுதி வைத்து
3.நீ இப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளடா...! என்றான்
4.அரசனையும் ஏமாற்றினான் நமக்கு நல்லதைப் பெறச் செய்தான் ஞானி.

நாம் அதை விட்டுவிட்டோம்…!

அதை விட்டுவிட்டு உனக்கு அபிஷேகம் செய்தேன் என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தால் (நமக்குக் கொடுப்பான் என்று) அழுவதைத்தான் நம் உயிரான ஈசன் நமக்குள் படைப்பான்.