ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2018

இருதயத்தின் வால்வுகள் எதனால் பாதிக்கப்படுகின்றது...?

ஒருவன் நம்மைத் திட்டிப் பேசிவிட்டான் என்றால் அவனை எண்ணி எண்ணி என்னை இப்படிச் சொன்னான்…! இரு நான் அவனை ஒரு கை பார்க்கின்றேன்…! என்றுசொன்னால் அந்தக் கடுமையான உணர்வுகள் திரும்பத் திரும்ப வினைகளாக வந்து கொண்டே இருக்கும்.

நான் ஒன்றுமே சொல்லவில்லைஅதற்குள் இப்படிச் சொல்கிறார்களே…!” என்று சொன்னால் அது பகைமையான வினைகளாக வந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய வினைகள் நம் உடலுக்குள் உருவான பின் வினைக்கு நாயகனாக கை வலிக்கும், உடல் வலிக்கும் குடல் வலிக்கும் எல்லாம் வலிக்கும். இதெல்லாம் வரும்.

உதாரணமாகச் சலிப்பு சலிப்பு என்று சலிப்புப் பட்டுப் பாருங்கள், அடுத்தாற் போல குடல் புண் அல்சர்வரும்.

சலிப்பு சலிப்பு என்று எடுத்துப் பாருங்கள். தொண்டையில் என்ன செய்யும்? புளித்த ஏப்பம் மாதிரி வந்து (ஒரு விதமான பசப்பு தொண்டை வயிறு குடல்களில் பரவி இருக்கும்)  காவலாகக் காத்துக் கொண்டு இருப்பதை எல்லாம் எடுத்துவிடும்.

இரு நான் பார்க்கிறேன்இரு நான் பார்க்கிறேன்…! என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னால் இது கோப உணர்ச்சி.

1.இருதயத்தில் உள்ள இரத்த வால்வுகளை
2.அந்தப் பிஸ்டனை இழுக்க விடாதபடி எரிச்சலாகும்.
3.எரிச்சலாகி அதிகமாக வீங்கிப் போய்விட்டது என்று சொன்னால்
4.இழுக்கும் போது வெறும் காற்றுத் தான் வரும் இரத்தம் வராது.

இது காற்றை இழுத்து மறுபடியும் பம்ப் செய்தது என்றால் கிர்என்று போகும். உடலில் உள்ள நரம்பெல்லாம் பார்த்தால் டைட்…” (இறுக்கம்) ஏறும்.

இந்த உணர்வின் தன்மைகள் இரத்தத்தில் கலந்து சர்க்குலேஷன் ஆகும் போது இரத்தம் சிறு மூளைக்குப் போய் வருவதற்கு முன்னாடி தலை கின்…” என்று இருக்கும்.

தலையைப் பிடித்துக் கொண்டு என் தலையை இடுக்கிப் போட்ட மாதிரி இருக்கின்றதே…! என்று நம் சிந்தனையை இழக்கச் செய்துவிடும்.

அதே போன்று நுரையீரல்களில் இரத்தத்தை இழுத்துப் பிஸ்டன் மூலமாகப் பம்ப் செய்வதற்கு முன்னாடி இதனுடைய நுண்ணிய அலைகள் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.

1.அதனால் மூச்சுத் திணறல் ஆகிவிடும்.
2.பின் மாரடைப்பு என்ற நிலை ஆகிவிடும்.

நாம் தவறு செய்ய வில்லை. ஆனால் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வினைகள்  நமக்குள் எவ்வளவு பெரிய வேலைகளை எல்லாம் செய்கிறது…!” என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தால் வினைகள் பல சேர்ந்து வினைக்கு நாயகனாக அது உடலை இயக்குகின்றது. சதுர்த்தி…” இதை நிறுத்த வேண்டும் என்று குருநாதர் எனக்குச் (ஞானகுரு) சொன்னார்.

1.நீ சுவாசித்த உணர்வுகள் தீய வினைகளாக உனக்குள் இப்படியெல்லாம் வந்து சேர்கின்றது
2.அதை நீக்க நீ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் பாய்ச்சினால் அந்த உறுப்புகள் சீராக இயங்கும்
4.தீய வினைகள் அகலும் என்று சொன்னார்.

அதைத் தான் உங்களிடம் சொல்கிறோம்.

அதை நீங்கள் எத்தனை பேர் பதிவு செய்து கொள்கிறீர்களோ அந்தப் பதிவு செய்த நிலைகளுக்கொப்பப ஓஹோ…! இப்படி வந்து நம் உடலுக்குள் பதிந்து விடுகிறதா…!” அதை நீக்க வேண்டும் என்று உங்கள் எண்ணம் வந்தால் தான் நீக்க முடியும்.