ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2018

விண்ணின் ஆற்றலைக் கவரச் செய்யும் ஆண்டெனா பவர் “நினைவாற்றலை…” நாம் பெறுவதற்கே விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து வணங்கும்படி வைத்துள்ளார்கள் ஞானிகள்

ஒரு தையல் மிஷினிலே துணியைத் தைக்கப் பழகுகின்றோம். பழகும் போது கையையும் விரலையும் ஒன்று போல இணைத்து கால் மிதியும் ஒன்றாக்கி அதைச் சீராக்கித் தைக்கின்றோம்.

பின் ஒழுங்காகத் தைக்க முடிகின்றது. பழக்கப்படுத்தி விட்டால் மிகவும் எளிதாக நாம் தைக்க முடிகின்றது.

இதைப் போல தான் நாம் பிறந்து வளர்ந்து இன்று மனிதனாக வந்த நிலையை முழுமையாகத் தெரிந்து கொண்டு
1.மனித வாழ்க்கையில் எத்தகைய இன்னல் வந்தாலும்
2.அதை நீக்கும் பழக்கம் வர வேண்டும்.

வாழ்க்கையில் தன்னை அறியாமல் சேரும் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கிடும் உபாயங்களைச் சாதாரண மக்களும் அறிந்துணர்ந்து செயல்படுத்துவதற்காகத்தான் ஆற்றங்கரையில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதிகாலையில் விநாயகரை நாம் பூஜிக்கப்படும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏக்கத்தால் எண்ணும்போது அந்தச் சூரியனின் காந்த அலைகள் இணைந்து நம் எண்ணத்திற்கு வலு கூடுகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு மின் காந்த சக்தியால் இயங்கக்கூடிய  ஆண்டெனாவை வைத்து மிகவும் சக்தி வாய்ந்த நிலைகளை ஈர்க்கும்படி செய்கிறார்கள்.

தொலை தூரத்திலிருந்து அலைகள் வந்தாலும் அதற்குகந்த நிலைகளில் திசைகளைத் திருப்பி வைக்கப்படும் போது அதை இழுத்துக் கவர்ந்து நமக்கு சுலபமாகக் கொண்டு வருகின்றது. இதைப் போன்று தான்
1.நாம் விநாயகரைப் பார்க்கப்படும் போது
2.இதை உணர்த்திய அந்த அகஸ்தியரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
3.அதைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷிகளை எண்ணிக்
4.கூர்மையான நினைவுகளை நமக்குள் கொண்டு வரும் பொழுது
5.சூரியனின் காந்த சக்திகள் இங்கே இணைக்கப்படுகின்றது.

அதை இணைக்கப்படும் போது அந்தச் சக்தியின் தன்மை வலு பெறுகின்றது. அப்போது நம் எண்ணத்தின் நினைவலைகளுக்கு ஆண்டெனாவினுடைய பவர் அதிகமாகின்றது.

ஆண்டெனாவை எந்தப் பக்கம் திசை திருப்பி வைக்கின்றோமோ அந்தத் திசையிலிருந்து ஒலிபரப்பாகி வரும் அலைகளைச் சுலபமாக கேட்பது போல்  
1.நம் கண்ணின் ஆண்டெனா பவரைக் கூட்டச் செய்து
2.விண்ணிலிருந்து வரும் ஆற்றலை எளிதில் கவர்வதற்காக
3.அவ்வாறு செய்தார்கள் ஞானிகள்.

விண்ணை நோக்கி எண்ணி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது “பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்…” அவர் உடலில் விளைந்த அருளாற்றல்களை நாம் கவர முடிகின்றது.

ஏனெறால் அவர் தன் வாழ்க்கையில் வந்த தீய வினைகளை மாற்றி ஒளியாக மாற்றினார். அகஸ்தியர் ஒளியாக மாற்றி வெளிப்படுத்திய அந்த உணர்வின் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமி முழுவதும் படரச் செய்து கொண்டு இருக்கின்றது.

விநாயகரைப் பார்த்து அந்த அலைகளை நமக்குள் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்க்கச் செய்வதற்குத்தான் இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி வைத்தார்கள்.
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணி
4.உடலுக்குள் இந்த வினையைச் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்
5.விநாயகர் ஆலயத்தை மேற்கே பார்க்க வைத்து
6.நம்மைக் கிழக்கே பார்த்து வணங்குபடி வைத்தார்கள்.

ஆகவே விண்ணிலிருந்து வரும் ஆற்றலைக் கவரப் பழகிக் கொண்டால் நாம் எப்போதெல்லாம் எண்ணுகின்றோமோ அப்போதெல்லாம் அந்த ஞானிகளின் சக்தி
1.நமக்கு முன் படர்ந்து கொண்டு இருப்பதை நுகர முடியும்
2.நமக்குள் வரக்கூடிய தீய வினைகளை நீக்க முடியும்.