ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2024

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைக் குறைத்துக் குறைத்து… குறைத்துக் குறைத்து… விஷத்தை நீக்கிடும் உடலாக (மனிதன்) இந்த உயிரால்தான் நாம் பெற்றோம்.

அதாவது… ஒவ்வொரு உடலிலும் நுகர்ந்ததை உயிர் உருவாக்கியது
1.உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கியது
2.நஞ்சினை நீக்கிடும் உடலாக மனிதனாக உருப்பெற்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றிவிட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இருப்பினும் அதிகமான நஞ்சினை சேர்க்கப்படும் பொழுது குறைந்த நீரை வைத்து அதைச் சுத்தப்படுத்த முடியுமா…? என்றால் முடியாது.
1.அதிக அளவில் எடுக்கும் இந்த உணர்வுகள்
2.நஞ்சினை நீக்கும் சக்தி நமக்குப் போதுமானதாக இல்லை.

இந்த உடல் நஞ்சினை நீக்கும் ஆற்றலாகப் பெற்றாலும்… இந்த உடலில் இருந்து வரக்கூடிய மணம் நஞ்சு என்றும் அறிந்து கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதற்குப் பெயர் கார்த்திகேயா என்று தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றலைத் தெரிந்தும்… உணர்ந்தும்… நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலில்
1.நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் அது வெளிப்படும் பொழுது
2.புறத்திலிருந்து வரும் ஒரு வேதனைப்படும் உணர்வை இதனுடன் கலக்கப்படும் பொழுது
3.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் இருந்தாலும் நஞ்சு கொண்ட (வேதனையை) உணர்வினை நுகரப்படும் பொழுது நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைகின்றது.
4.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைந்தால்… நஞ்சினை வளர்த்திடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இருந்தாலும் மனிதனாக ஆனபின் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது… “அகஸ்தியன் - துருவ நட்சத்திரமாக ஆனது…”

கருவிலே அவன் இருக்கப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் தாவர இனங்களை எல்லாம் அகஸ்தியனின் தாய் தன் உடலிலே பூசிக் கொண்டு… நஞ்சு கொண்ட விலங்குகளிலிருந்து காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றது.

அப்போது… தாய் நுகர்ந்த அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைக் கருவிலிருக்கும் அந்த அகஸ்தியன் என்ற சிசுவும் பெறுகின்றது.
1.அவன் பிறந்த பின் நஞ்சினை வென்றிடும் சக்தி பெறுகின்றான்
2.நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்கின்றன்
3.நஞ்சின் இயக்கச் சக்தியை உணர்கின்றான்.

நஞ்சினை மற்ற பொருள்களுடன் சேர்த்த பின்… அதிலே எந்தெந்த மணம் இருக்கின்றதோ அதை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்பதை “அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் காணுகின்றான்.
1.நஞ்சு இல்லாத தாவர இனம் இல்லை
2.நஞ்சு இல்லாத கோள்கள் இல்லை
3.நஞ்சு இல்லாத அணுக்கள் இல்லை என்ற நிலைகளையும் அறிகின்றான்.

நஞ்சின் அளவுகோல் அதிகரிக்கப்படும் பொழுது… அது ஒரு பொருளை அதிக வீரியமாக மாற்றி விடுகின்றது.

நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது மிளகாயில் காரம் அதிகரிக்கிறது… நஞ்சின் தன்மை அதிகரிக்கும் பொழுது கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது. எப்பொருளில் இந்த நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்த கசப்பான உணர்ச்சிகளை ஊட்டும் வலிமை பெறுகின்றது.

நெல் வகைகளை எடுத்துக் கொண்டால் அதிலே நஞ்சின் இயக்கச் சக்தி குறைவு. ஆகவே உணர்வின் தன்மை அதற்குள் சுவைமிக்கதாக… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் நிலைகள் அங்கே விளைகின்றது.
1.இப்படி… சாந்தம் கொண்ட உணர்வுகளில் நஞ்சு கலந்தால்
2.நஞ்சினைக் குறைக்கும் நிலைகளில் தாவர இனங்களும் விளைகின்றது.

இந்த உண்மையின் உணர்வுகளை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான் அகஸ்தியன்.

தாய் கருவில் இருந்து வெளிவந்த பின்…
1.அவன் உடல் இவனிடம் நஞ்சு வராதபடி
2.”அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம்” அந்த நஞ்சையே வென்றிடும் சக்தியாக பெறுகின்றது.

“இவனின்று வெளிப்படும் உணர்வுகளோ” மற்ற நஞ்சின் தன்மை வந்தாலும் தனக்குள் அருகில் வராதபடி பாதுகாத்துக் கொள்கிறது. இந்த உணர்வின் துணை கொண்டு உலகில் நஞ்சின் இயக்க உணர்வை முழுமையாக அறிந்தான்.

உலகம் எப்படி இயங்குகிறது…? என்று அதனின் வலுவின் தன்மை அறியும் சந்தர்ப்பம் அவனுக்குள் உருவானது. அப்படி உருப்பெற்ற உணர்வு தான்
1.வானுலகில் இருந்து வரும் மின்னலாக இருந்தாலும்… அதைக் காட்டிலும் இடி மின்னலாக இருந்தாலும்
2.அவன் உற்று நோக்கினால் அது எல்லாம் அவனுக்குள் ஒடுங்குகின்றது
3.ஒடுங்கும் போது உணர்வின் ஒளியின் கதிராக அவனுக்குள் வளரும் தன்மை வருகின்றது.

ஐந்து வயதிற்குள் இதை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான்.

வானுலக இயக்க உணர்வு… நஞ்சின் மோதலால் ஏற்படும் (விஷக்கதிரியக்கத்தால் ஏற்படும்) மின் அணுக்களின் தாக்குதல் தான் மின்னல்…!

அந்த விஷத்தின் மோதலினால் அணுக்கள் பரவலாகச் சிதறும் போது மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.அந்தக் கோளின் சக்தியை இயக்கச் சக்தியாக அதற்குள் வலுவூட்டி
2.எதனுடன் எந்த உணர்வின் சத்து கலந்ததோ அதிலே இது கலந்த பின்
3.அந்த உணர்வினை இயக்கும் சக்தியாக மாறுகின்றது என்பதனை அகஸ்தியன் உணர்கின்றான்.

ஏனென்றால் அவனுக்குள் ஒரு மின்னணுவின் தாக்குதல் வரப்படும் பொழுது… அதை அடக்கி அந்த உணர்வின் சத்தை உணரும் பருவம் பெறுகின்றான்.

மின்னல் தாக்கப்படும் பொழுது தாவர இனங்கள் கருகுகின்றது மற்ற பொருள்களும் கரைகின்றது. அது விஷம் கொண்டது
1.ஒன்றுடன் ஒன்று அந்தக் கதிரியக்கப் பொறிகள் தாக்குவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்… அது இவனுக்குள் அடங்கும் சக்தி வருகின்றது.
2.நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் உற்று நோக்கி அதன் உணர்வின் இயக்கங்களை அறிகின்றான்

அப்பொழுதுதான் “துருவன்” என்று அவனுக்கு காரணப்பெயர் வருகிறது.

கவலையும் வேண்டாம்… சந்தோஷமும் வேண்டாம்…!

கவலையும் வேண்டாம்… சந்தோஷமும் வேண்டாம்…!

 

மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளும் பாவங்களும் நடைமுறையில் எல்லோருமே செய்கின்றோம். அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு “தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் அவ்வீஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு நம் ஆத்மாவிற்கு இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்டநஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து...!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

April 28, 2024

நேரத்தையும் காலத்தையும் எப்போது பார்க்க வேண்டும்…?

நேரத்தையும் காலத்தையும் எப்போது பார்க்க வேண்டும்…?

 

பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று வேண்டுகின்றோம். அதனின் உட்பொருளை நாம் உணர்ந்து அந்தப் பக்குவத்தைப் பெறுதல் வேண்டும்.

1.நம் பிள்ளையைச் செல்லமாக வளர்க்கின்றோம் என்று சொல்கின்றோம்.
2.அவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் சொல்கின்றோம்.
3.ஆனால் “அவனுடைய குறும்புத்தனம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது…!” என்று இப்படியும் சொல்லி விடுகின்றோம்.
4.அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறோமா என்றால் இல்லை…!

நம் பிள்ளை தான்…! என்ற ஆசையின் நிமித்தம் இருந்தாலும் அவன் நல்லவனாக வேண்டும் என்று சொல்வதற்கு மாறாக
1.நாம் தவறிப் பேசும் பொழுது…
2.அது நல்லதாக ஆவதில்லை…!

எல்லாருடனும் நாம் நன்றாகப் பழகுகிறோம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பக்குவமாகப் பேசத் தெரியாதபடி…
1.எதிர் மறையான உணர்வு வந்தபின் கொஞ்சம் விரக்தியாகப் பேசிவிட்டால் போதும்
2.அந்த உணர்வுகள் பகைமையாகி விடுகின்றது.
3.அவர்களுடன் நாம் பழகிய அந்த நல்ல பண்புகளும் அங்கே சீர் கெட்டு விடுகின்றது.

ஆகையினால்தான் பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நாம் இல்லாமல் அந்த பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று சொல்லச் சொல்வது.

அந்தப் பக்குவ நிலை பெற வேண்டுமென்றால்…
1.உயிரை ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கி
2.நம்மிடம் இருந்து அடுத்து வரக்கூடிய சொல்கள் சிந்தித்து செயல்படும் தன்மையாக
3.நல்ல சொல்லாக எதிர் சொற்களைச் சொல்வதும்
4.சொல்லால் அதை அடக்குவதும் என்ற இந்த நிலையில் செயல்பட்டால் பகைமை அங்கே வராது.

உதாரணமாக ஒருவர் நம்மிடம் வந்து பிறரைப் பற்றி அதிகமாகக் குறை கூறுகிறார் என்றால் உடனே நாம் “ஏம்ப்பா இந்த மாதிரிக் குறை சொல்லிக் கொண்டிருகின்றாய்…? என்று நாம் அழுத்தமாகக் கேட்டால் அங்கே பகைமை வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை வராதபடி தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சரி… என்று அவர் சொல்வது வரைக்கும் அமைதியாக இருந்து… “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் பொறுமையுடன் நாம் இருக்க வேண்டும்.

“சமயம் பார்த்து…” அடுத்து ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் பொழுது
1.அப்பா…! மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை…
2.நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா…! என்று சொல்லி விட்டோம் என்றால் அங்கே சிந்திக்கக்கூடிய தன்மை வருகின்றது.

இப்படி இல்லாதபடி… அந்தந்த நிமிடமே நான் பதிலுக்குச் சொல்லி விட்டால்
1.அவன் சொல்வதை அங்கேயே மறுத்தோம் என்றால் நம்மையும் அவன் வெறுப்பான்
2.யாரைக் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தானோ… அடுத்து நம் மீதும் இதே குற்ற இயல்புகளைச் சொல்லத் தொடங்குவான்.

ஆகவே சமயம் (நேரம்) வரும் பொழுது… அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!

ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

April 27, 2024

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும் நல்லெண்ணம் உடையவர்களும் தீய எண்ணம் உடையவர்களும் எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைத்திட வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும் பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்துவிடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

 

உதாரணமாக நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற நிலையில் அவனை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால்
1.அடுத்து நாம் அவனைப் பற்றித் திரும்ப எண்ணுவதில்லை.
2.அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
3.”அவனை நாம் திரும்ப எண்ணாததால்…” அவனுடைய வேதனை நமக்குள் வளராது தடைப்படுகிறது.

ஆனால் தொழில் செய்யும் இடங்களில் ஒரு நண்பரிடம் பற்றுடன் நாம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவருக்குக் கடுமையான நோய் வந்து விடுகிறது. அவர் மீது நாம் பற்றுடன் இருக்கும் போது அந்த உணர்வினை நான் நுகரப்படும் பொழுது வேதனையை நாம் உணர முடிகின்றது… உடனே நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்தில் கலந்த பின் அந்த நண்பனைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுதெல்லாம் அந்த வேதனை நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

ஒரு கோழி கருவுற்றால் உடனே அது கேறுகின்றது. கேறும் பொழுது அந்த முட்டையின் தன்மை வலுப் பெற்றுவிடுகிறது. முட்டை பருவமடைந்த பின் பொரிந்து குஞ்சுகளாக வெளி வருகின்றது.

குஞ்சு வெளி வந்தபின் ஆகாரத்திற்காகக் கத்துகிறது தாய்க் கோழியோ சப்தமிட்டு மண்ணைப் பறித்துத் தன் குஞ்சுகளுக்கு உணவைக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நண்பன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால்
1.அவனைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கருமுட்டையாகி விட்டால்
2.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது வளர்ச்சி அடைகின்றது.
3.வளர்ச்சி அடைந்து முட்டை வெடித்து அணுக்களாக உருவான பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகிறது
4.அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அங்கே தூண்டப்படுகிறது.

அப்போது நம் உயிர் என்ன செய்கிறது…?

கண் காது மூக்கு அவைகளுக்கு ஆணையிட்டு எந்த நண்பன் உடலில் இருந்து நோயின் உணர்வு வந்ததோ காற்றிலிருந்து அதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கிறது. அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.

நோயை உருவாக்கும் அத்தகைய அணுக்கள் பெருகிவிட்டால் நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோய் நமக்குள்ளும் அதிகமாகப் பெருகத் தொடங்குகிறது.

நம்ம அறியாமல் தான் இது நடக்கிறது. அதை மாற்றி அமைக்க நாம் எண்ண செய்ய வேண்டும்…? நோய் எப்படி உருவானதோ அதே போல் அதை நீக்கும் சக்திகளையும் நமக்குள் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

1.நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிப்பெறும் பொழுது
3.சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அணுக்கரு முட்டைகளாக வளரத் தொடங்குகின்றது
5.நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் போது அந்த முட்டை வெடித்து அணுக்களாக உருப்பெறச் செய்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அடிக்கடி தியானித்தோமோ அது நமக்குள் அணுத்தன்மை அடைந்த பின்… எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலையாக… “அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது…”

1.அப்போது நம் சிறு மூளை பாகம் அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.கண் காது மூக்கு வாய் உடல் இவைகளுக்கு ஆணையிட்டு
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் பூமியில் பரவியிருப்பதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அப்போது வரும்.

மீண்டும் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறும் பொழுது ஒளி பெறும் அணுக்களாக நம் உடலுக்குள் வளரத் தொடங்கும்.

அந்த அணுக்களை நாம் அதிகமாக வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் யாருடைய ஈர்ப்பிலும் (எந்த்த் தீமையிலும்) சிக்க மாட்டோம். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அதிகரிக்கும்… நம்மைப் பிறவி இல்லா நிலைக்கு அது அழைத்துச் செல்லும்.

April 26, 2024

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

 

யாம் உங்களுக்கு கொடுக்கும் அரும்பெரும் சக்திகளை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.. எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… அதை நீக்கும் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் நண்பர் என்று இருக்கப்படும் பொழுது நண்பனுக்கு நன்மை செய்தான்… என்றால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது… துரோகம் செய்தான் என்றால் புரையோடுகிறது.

ஆனாலும் தியானம் எடுத்துக் கொண்ட பின் யாம் உபதேசிக்கும் உணர்வுகள்… உங்களுக்குள் பதிவான அந்த அரும்பெரும் சக்தியை நீங்கள் சீராகப் பயன்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.துருவ மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
5.சர்வ நோய்களையும் நீக்கிடும் அரும்பெரும் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
6.எங்களுக்குள் அந்த நோய் நீக்கும் சக்தி விளைய வேண்டும் என்று
7.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்க வேண்டும்

கணவன்… மனைவிக்கு இது போன்று செயல்படுத்த வேண்டும். மனைவியும்… கணவனுக்கு இதைப் போன்று எண்ணி இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

கணவர் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… நோய் நீக்கக்கூடிய சக்தி அவருக்குள் வளர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்
2.அடிக்கடி இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால் இருவருமே உடல் நலத்துடன் வாழ முடியும்.

சர்க்கரை நோயோ… ஆஸ்த்மாவோ இருந்தால் “அந்த நோய்களை மறந்து விட்டு” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்…
1.நோய் நீக்கும் அருல் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும் என்று
2.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப இந்த நினைவுகளை எடுத்து உடலில் செலுத்துங்கள்.
3.நாளடைவில் நோய்கள் நீங்கும்… துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல் அதிகமாகப் பெருகும்.

இப்படிப் பெருக்கி பழகிக் கொண்டால்தான் விஞ்ஞானத்தால் இனி வரக்கூடிய நஞ்சின் தன்மையை நாம் அகற்ற முடியும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது உணர்வின் ஒளியாக மாறி அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நாம் வாழ முடியும்.

ஏனென்றால் இந்தப் பூமியில்
1.நமக்கு இந்த உடல் சதம் அல்ல… சேர்க்கும் சொத்தும் நமக்குச் சதம் அல்ல
2.சதம் இல்லாததை எல்லாம் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும்… சதமான நிலைகளைப் பெறுவதற்கு இந்த உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த உடலில் இருந்து ஓரளவுக்கு மகரிஷிகள் உணர்வுகளை முழுமையாகப் பெறும் வரையிலும் உடலையும் பாதுகாக்க வேண்டும்.

உடலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
1.அப்படி வளர்க்கப்படும் பொழுது உடலையும் அது பாதுகாக்கின்றது
2.இந்த உடலில் இருந்து அருள் ஒளி பெறும் தகுதியையும் பெருக்கிக் கொள்ள முடிகின்றது
3.இரு மடங்கு நமக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

இந்த தியானத்தை அவசியம் நீங்கள் அனுதினமும் கடைப்பிடித்துப் பழகுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் நம்மை அறியாது சேர்ந்த தீயவினைகள் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து
1.ஒவ்வொரு உயிரும் அந்த சக்தி பெற வேண்டும்
2.அந்த சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று
3.குரு வழியில் ஐக்கிய உணர்வு கொண்டு அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளேன் (ஞானகுரு).

அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தி… எதிர்காலத்தில் வரக்கூடிய தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்து… உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக நீங்கள் வளர்ந்திட வேண்டும் என்று குருவின் ஆணைப்படி நான் செயல்படுத்துகின்றேன்.

தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை

தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

April 25, 2024

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

 

என் குழந்தை திருமணமாகி எந்த வீடு சென்றாலும் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்த சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் அங்கே செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று தாய் தந்தை எண்ண வேண்டும்

அதே போன்று தன் மகனுக்குப் பெண் வேண்டுமென்றால் மகாலட்சுமி போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண்ணாக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு எண்ணினால்…
1.அதற்குத்தக்க இடத்திற்கு அழைத்துச் சென்று நல்ல மணமகனையும் நல்ல மணமகளையும் தேர்ந்தெடுக்க முடியும்…
2.அந்த சக்தி உங்களுக்குள் வளரும்.

ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால் அதற்குள் சிக்கி அதற்குத் தான் நீங்கள் அடிமையாக முடியுமே தவிர அதனால் நல்ல நிலை வரப்போவதில்லை… மெய் உணர்வை அறியச் செய்யாது.

ஆகவே அதை விடுத்து விட்டு மனம் ஒத்துச் சென்றால் அந்த உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

இருந்தாலும் மனம் ஒன்றி இருக்கிறது…
1.ஜாதகம் ஒன்றி வரவில்லையே…” என்றால்
2.இது ஆழமாகப் பதிவாகி கடைசியில் சோர்வின் தன்மை அடைந்து விடுவீர்கள்.
3.அந்தச் சோர்வுக்குத் தக்க தான் மாப்பிள்ளையோ பெண்ணோ பார்க்கும்படி ஆகிவிடும்.
4.அதன் வழியில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்த பின் “கீரியும் பாம்பும்” போன்று தான்
5.அவருடைய வாழ்க்கை அமையும்… மகிழ்ச்சி பெறும் தன்மை இழக்கப்படுகிறது.

இன்றைய வழக்கில்… ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள்… ஆயுளையுமப்படி நிர்ணையிக்கின்றார்கள். அவர்கள் ஜாதகம் பார்த்த பிரகாரம் நோய் இல்லாது வாழ்கின்றனரா…?

எல்லாப் பொருத்தமும் இருந்தாலும் அவர்களுக்கு நோய் வராது என்பார்கள் ஆனால் நோய் வராது இருக்கிறதா…? ஆகவே ஜாதகப் பொருத்தங்கள் சரியாக அமைவதில்லை…!

1.மனப் பொருத்தம் ஆகி ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
2.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் அவருடைய எதிர்காலம் சிந்தித்து செயல்படும் தன்மை பெறும்.
3.அருள் ஞானிகள் வழியில் அருள் ஒளி பெற வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலையினை விட்டுத் தள்ளுங்கள்…!

அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையில் “குடும்பத்தில் அனைவரும் மனம் ஒத்து வாழ வேண்டும்…” என்ற இந்த எண்ணங்களை கூட்டிக்கொண்டு வாருங்கள்.

பெண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவருடைய வாழ்க்கையில் நோயைப் பற்றி விசாரிங்கள்.

ஆண் என்றால் குணத்தை பற்றி விசாரிங்கள். சீரிய பண்பு இல்லை என்றால் இங்கே வந்தாலும் சரியாக வராது… இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றார்களா…? என்று பாருங்கள். அப்படிச் செயல்படும் பொழுது… முறைப்படி தியாநித்தால் அந்த நல்ல ஒழுக்கம் மீண்டும் வளரத் தொடங்குகிறது… திருமணத்திற்குப் பின் அங்கே தவறுகள் ஏற்படாது.

ஆனால் பெண் இப்படி மாப்பிள்ளை இப்படி என்று ஆசையின் நிலைகளில் உணர்ச்சிகளை ஊட்டி விடுவார்கள். அதைக் கேட்டு ஏமாந்து விட்டால் “ஏமாந்து விட்டேனே…” என்று தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளுக்கு வந்து விடுகின்றது.

துருவ தியானத்திலிருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போல வாழ வேண்டும் என்றுதான் எண்ணுதல் வேண்டும்
1.மணப்பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்…
2.மணமகனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள்.

எங்கள் குழந்தை எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் நலமும் வளமும் பெற வேண்டும். அதனுடைய பார்வை குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போல் வீட்டிற்கு வரும் மருமகளும்
1.மகாலட்சுமி போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்… மகிழ்ச்சி பெறச் செய்யும் அந்த உணர்வைப் பெற வேண்டும்.
2,அத்தகைய பெண் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து செலுத்துங்கள்

அதற்குண்டான சக்தி கிடைத்து நல்ல பெண்ணும் நல்ல மாப்பிள்ளையும் அமையும்…!.

சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாதவர்கள்… “வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்” என்று இருக்கின்றார்கள்

சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாதவர்கள்… “வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்” என்று இருக்கின்றார்கள்

 

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன...?

பார்த்தல்... சுவைத்தல்... கேட்டல்... நுகர்தல்... எண்ணல்... எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா...!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்...
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்...” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்...! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா...” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள... தன் உணவைத் தேட... ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்...?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி... ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்...
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா...!

நீங்கள் கேட்கலாம்... தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று...! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா...!

நான் சொல்வதெல்லாம்...
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக... அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்... பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு...! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை...!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா...!

April 24, 2024

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

 

எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க வரும் பொழுதெல்லாம்
1.என் குடும்பத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வரவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
4.எங்கள் தொழில்கள் சீராக நடக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்
6.எங்கல் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
7.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தைகளாக வளர வேண்டும்
8.எங்களுக்கு அந்த அருள் வேண்டும் என்று தான் வேண்டி நீங்கள் கேட்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு
1.வீட்டில் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான்… வீட்டை விட்டே சென்று விட்டான்
2.குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையும் சச்சரவும் விட்டே போக மாட்டேன் என்கிறது
3.தொழிலில் நஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது
4.கடன் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்
5.(கொடுக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்… கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்றே சொல்வார்கள்)
6.எப்போது பாக்கியைக் கேட்கச் சென்றாலும் வெறுத்துப் பேசுகின்றார்கள் என்று தான் எம்மிடம் சொல்லிக் கேட்கின்றார்கள்.

ஆக இதைத்தான் வளர்த்து வைத்துக் கொள்ள முடிகின்றதே தவிர “நல்லதைக் கேட்க முடியவில்லை…”

எல்லோரும் நலம் பெற வேண்டும்… கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…! என்று தான் எம்மிடம் கேட்க வேண்டும்.

மனைவி என்ன சொல்கிறது…? என் வீட்டுக்காரர் எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றார். அடுத்து கணவரோ… என் வீட்டில் என் பொம்பளை எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்…!

இருவருமே இப்படித்தான் சொல்வார்கள். யார் பேசுவது எவர் செய்வது என்று தெரிவதில்லை.

இந்த உணர்வு ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகி மீண்டும் அதைச் சொல்கிறது. இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வான்.

அதாவது…
1.நாம் ஒருவரைத் திட்டினோம் என்றால் பதில் அதுவே தான் வரும்…
2.ஒருவரைக் கோபித்தால் அதுதான் திரும்ப வரும்…
3.ஒருவரை வேதனைப்படும்படி சொன்னால் அதே வேதனையின் பதிலாக நமக்கு வரும்.

நாம் பேசும் உணர்வுகள் சீதாலட்சுமி ஆக மாறினாலும் நுகர்ந்த உணர்வுகள் சீதாராமனாக மாறுகின்றது. நாம் ஒருவரைக் கோபிக்கும் பொழுது சீதாலட்சுமி ஆக மாறுகின்றது.

அதை உற்றுப் பார்த்தால்… அந்த உணர்வை நுகர்ந்தால் நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… அதாவது அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.,, திட்டினால் அதுவே திரும்ப பதிலாக வரும்.

காவியங்கள் இதை நமக்குத் தெளிவாக்கியுள்ளன. அதன்படி நமது வாழ்க்கை எப்படி வழி நடத்த வேண்டும்…? மனிதரான பின் நாம் நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…? மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எம்மிடம் வந்து விட்டாலே
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
2.வாழ்க்கையில் உடல் நலம் பெறுவேன்
3.குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வோம்
4.கணவன் மனைவியும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்வோம்
5.நளாயினி போன்று மதித்து நடப்போம்… சாவித்திரி போன்று ஒன்றி வாழ்வோம்
6.எங்கள் பார்வை எங்கள் குடும்பத்தில் நலம் பெறும் சக்தியாக மாறும் என்ற உணர்வினை எடுத்து வாருங்கள்.

இது உங்களுக்குள் எவ்வளவு உயர்வைக் காட்டுகிறது…? என்று பார்க்கலாம்.

எம்மைச் சந்திக்க வந்தாலே… தலைவலியோ கை கால் குடைச்சலோ எல்லாமே குறையும்… வயிற்று வலியும் குறையும். வீட்டில் இருக்கும் பொழுது வலி இருந்தது… என்னைச் சந்தித்த பின் அந்த அருள் சக்திகளை எடுத்த பின் நிம்மதி கிடைக்கிறது என்பார்கள்.

இதை எல்லாம் உங்களுக்கு அனுபவபூர்வமாகக் காட்டினால் அதை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னொன்று மிகவும் முக்கியமானது…
1.யாரையுமே குறை கூறிப் பழகாதீர்கள்
2.குறையைக் கண்டால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலை பெற வேண்டும்
4.அருள் ஞான வழியில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவருடைய குறை நமக்குள் வளராது. அவர்கள் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் நமக்குள் இந்த வலுவின் தன்மை அவருடைய குறையான அணுக்கள் நமக்குள் அணுக்களாக விளையாது.

அவர்களும் இவ்வாறு எண்ணத் தொடங்கினால் அவர் வாழ்க்கை நலம் பெறும் சக்தியாக வளரும்.

ஆகவே எங்கே எப்படிப்பட்ட குறையைக் கண்டாலும் அடுத்த கணமே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குறை காணுவதையும் குறை சொல்வதையும் விடுத்து விட்டு இதைத்தான் ஒரு பழக்கமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் “தெய்வ சக்தி” பெறுவீர்கள்

இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் “தெய்வ சக்தி” பெறுவீர்கள்

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான்… மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா...” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய் ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து... வளர்ந்து... விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

April 23, 2024

உணவு உட்கொள்ளும் சமயத்தில் ஏற்படும் சில தவறுகள்

உணவு உட்கொள்ளும் சமயத்தில் ஏற்படும் சில தவறுகள்

 

உதாரணமாக பிறர் உங்களுக்கு உணவு கொடுத்தாலும் மனம் விரும்பி நீங்கள் அதை உட்கொண்டால் தான் உங்கள் உடல் ஆரோக்கிய நிலை பெறும்.

சில இடங்களில்… கௌரவத்திற்காக “நான் இப்போது தான் சாப்பிட்டு வந்தேன்…” என்று பொய் சொல்லித் தலையைச் சொறிவார்கள். ஆனால் பசியும் இருக்கும்…! சாப்பிடுங்கள்…! என்று சொன்னபின் “எப்படிச் சாப்பிடுவது…?” என்று கௌரவம் பார்ப்பார்கள்.

அப்பொழுது அங்கே சலிப்பான நிலைகள் தான் அவர்களுக்கு வரும்.

ஆனாலும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று சொன்ன பின் “சரி உங்களுக்காக வேண்டி நான் சாப்பிடுகிறேன்…!” என்று சொல்வார்கள்.

சலிப்பும் சோர்வும் அடைந்தபின் அது புளிப்பின் தன்மை உண்டாக்கும். இந்தப் புளிப்பு கலந்த பின் உணவைத் தட்டிலே போட்டவன்… சிறிதளவு உள்ளே போகும் பின் அதற்குப் பின் உள்ளே விடாது.

புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடும் கொஞ்ச நேரம் ஆனபின் நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
1.புளிப்பின் சக்தி வரப்படும் போது அடுத்து எதை விழுங்கினாலும் (இந்தப் புளிப்பு) அன்னக் குழாயில் உள்ள அமிலத்தைக் கரைத்து விடும்.
2.பின் உராயும் போது நெஞ்சு எரிய ஆரம்பிக்கும்
3.நம்மை அறியாமலேயே அந்த உணர்வு இத்தகைய அமிலங்களை உருவாக்கி விடுகின்றது.

இதை போன்று தான்… நாம் எண்ணி எடுக்கும் எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது… நல்ல உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

அந்த உணவை உட்கொள்ளும் பொழுது யார் உட்கொள்ளச் சொன்னார்களோ அவர்கள் மீதும் வெறுப்பு வரும். நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்… இப்படி எல்லாம் செய்தார்கள்…! என்று சாப்பாடு போட்டதற்காக அவர்கள் மீது வெறுப்படைவார்கள்.

பெண்கள் பெரும்பகுதியானவர்கள் இப்படி இருப்பார்கள். விருந்துக்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று இருப்பார்கள் முதலிலே சிறிது சாதம் போட்டிருப்பார்கள் இரண்டாவது லபக்கென்று மறுபடியும் வைத்து விடுவார்கள்… பெரிய பாறையைத் தூக்கி போட்ட மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ இப்படிப் போடுகிறார்களே…! என்று இந்த உணர்வுகள் அந்த நிலையில் பட்ட பின் அவர்கள் உடல் எப்படி இருக்கும்…? சாப்பிட முடியாது சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும்.

ஆனால் இவர்கள் சிரிப்பார்கள்…! சாப்பிடுபவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு வரும். அந்த வெறுப்பான அணுக்கள் பெருகி ஆகாரத்தைப் போட்டவர்கள் மீது “அவர்கள் வீட்டிற்குச் சென்றாலே இப்படித்தான் செய்வார்கள்…!” என்ற இந்த எண்ணங்கள் தொடர்ந்து வரும்.
1.இத்தகைய வெறுப்பின் அணுக்கள் நமக்குள் வளரப்படும் பொழுது
2.நம்மை அறியாமலேயே உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்து விடுகிறது.

வெறுப்பு கொண்டு பார்த்து… இப்படிப் போட்டு விட்டார்களே…! என்று பாய்ச்சப்படும் பொழுது சிரித்துக் கொண்டு அவர்கள் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலை வருவதில்லை.

ஆக… வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது. இப்படி வெறுப்பை உருவாக்கி விட்டால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொந்த பந்தமோ உணவை அவர்கள் சமைக்கும் நேரத்தில்… குழம்பு வைக்கும் பொழுது ஏதாவது ஒன்றை அதிலே அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

அந்த குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் வெறுக்கும் தன்மையே வரும். உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும். சீரகம் அதிகமாகிவிட்டால் உமட்டல் வரும். காரம் அதிகமானால் எரிச்சலாகி வெறுக்கும் தன்மை வரும்

இதைப் போல் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி பொருள்களை அதிகமாகச் சேர்க்க வைத்துவிடும். நம்மை அறியாமல் இயக்கும் சில நிலைகள் தான் இவை எல்லாம்.

ஆகவே… எப்பொழுதுமே பிறருக்கு உணவு படைக்கும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி அதிலே படர வேண்டும்
2.இதை உட்கொள்ளுவோர் உடல் நலம் பெற வேண்டும் அவர் மகிழ்ச்சி பெற வேண்டும் எண்ணிச் சமைத்து அதற்குப் பின் உணவு போடுங்கள்.

அதே சமயத்தில்
1.மகிழச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எவருக்கும் அதிகமாக உணவைப் போட்டு விடாதீர்கள்
2.போதும்…! என்றால் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாவது தரம் போடட்டுமா… போடட்டுமா… போடட்டுமா…! என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த உணவு மீது வெறுப்பு அதிகமாகிவிடும்.

கொஞ்சம் போல வைத்துக் கொள்ளுங்கள்…! இல்லை வேண்டாம்…! இல்லை கொஞ்சம் போல… வேண்டாங்க…! இல்லை கொஞ்சம் தான்…! என்று இப்படிப் பேச பேச…
1.அதிலே வெறுப்பு வளர்ந்து இந்த உமிழ் நீரைச் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் அஜீரணமாகத்தான் ஆகும்.
2.அஜீரணமானால் சாப்பாடு போட்டும் பயனில்லாது போய் விடுகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் அன்பால் நடக்கக்கூடிய செயல்கள்.

நாம் உணவு ருசியாக இருக்கின்றது என்று அதிகமாகச் சாப்பிட்டால் உடல் அதை ஏற்றுக் கொள்கின்றதா…? அஜீரண சக்தியை உண்டாக்கிப் புளிப்பின் தன்மை அடைந்துவிடுகிறது. அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது.

அன்றைய தொழிலும் சோர்வடையும் நிலை வந்து விடுகிறது நம்முடைய எண்ணங்களும் பிறருடன் பேசும் பொழுது சோர்வின் தன்மையே அடைகின்றது வாழ்க்கையில் இத்தகைய அணுக்கள் பெருகத் தொடங்கி விடுகிறது.

நஞ்சினை முறித்து உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ மகரிஷிகளின் உணர்வலைகள் நமக்கு முன் உண்டு. அதனைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் பேசிப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

அந்த உணர்வின் துணை கொண்டு நினைவாற்றலைக் கூட்டி நீங்கள் தான் உங்களுக்குள் பெருக்கி அதைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

நான் சொல்லி அதைக் கேட்டறிந்த பின்
1.அடுத்து உங்களுக்கு மீண்டும் அது நினைவுக்கு வரவில்லை என்றால்
2.உங்கள் உடலில் உள்ள நான் பதிவாக்கிய அணுக்களுக்கு மகரிஷிகள் உணர்வை உணவாகக் கொடுக்க முடியாது.

ஆகவே மேலே சொன்ன பழக்கங்களை எல்லாம் நாம் மாற்றி அமைத்து அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு எதையும் செயல்படுத்தப் பழக வேண்டும்.

நடந்ததும்… நடப்பதும்… இனி நடக்கப் போவதும்… நம் நன்மைக்குத் தான்..!

நடந்ததும்… நடப்பதும்… இனி நடக்கப் போவதும்… நம் நன்மைக்குத் தான்..!

 

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற... சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்... எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்... எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெற வேண்டும். மனத் திறன் என்றால் என்ன...?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா...!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக… லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்...”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி... “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது...!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைத் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா...?

1.சுவாசிக்கும் சுவாசமானது... சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் - செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா...!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்...!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே...!

சுபம்... சுபம்... சுபம்...!

April 22, 2024

பேரண்ட மகரிஷிகள்

பேரண்ட மகரிஷிகள்

 

1.”பேரண்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்…”
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்
3.இதுவரையிலும் யாம் உபதேசித்து வருவதும்… உணர்த்தி வருவதும்.

இதைப் பதிவாக்கி மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது துருவ தியானத்தின் மூலம் அனுதினமும் அதைப் பெற்று அந்த அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞான வித்துக்களைத்தான் ஊன்றுகின்றேன் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் ஏங்கிப் பெறுங்கள்.
1.பேரண்ட மகரிஷிகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நினைவுகள் கூர்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையும்படியாக நினைவாற்றலைப் பெருக்குங்கள்.

அதை உங்களுக்குள் பெருக்கினால் கூர்மை அவதாரமாக உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாறுகின்றது. அதுவே மனிதனின் கடைசி எல்லை.
1.மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.. மறவாதீர்கள்…
2.என்னால் சாத்தியமாகுமா…? என்று எண்ணி சோர்வடையச் செய்து விடாதீர்கள்.

யாகங்கள் செய்தோ வேள்விகள் செய்தோ இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

காரணம்…
1.அதிலே மந்திரங்களை ஓதி அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அது “வசியமாகி” விடுகின்றது.
2.இறந்த பின் அதே மந்திரத்தை யார் ஜெபிக்கிறார்களோ அது “கைவல்யம்…”
3.அதை மற்றவர்கள் பயன்படுத்தப்படும் பொழுது “ஏவல்…”

உலக மதங்கள் அனைத்தும் இந்த வழிப்படி தான் சென்று கொண்டிருக்கின்றது. நான் (ஞானகுரு) யாரையும் குறை கூறவில்லை. அரசன் காட்டிய வழிகள் பின் வந்தோர் பதிவு செய்த உணர்வே விளைகின்றது. அதன் வழியிலே இன்று இயங்கிக் கொண்டுள்ளது.

“இன்று வாழும் மக்களுக்கு இது எல்லாம் தெரியாது…”

மதம் என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது மனிதனைச் சீர்குலைக்கும் நிலையாகப் பகைமை உணர்வுகள் வளர்கின்றது/ மதத்திற்குள் இனம் என்று வரப்படும் பொழுது “என் இனம் பெரிது… இல்லை என் இனம் தான் பெரிது…” என்று ஒன்றை ஒன்று அழித்துக் கொன்று குவித்து அதை ரசித்துக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று வருகின்றது…

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் ஒளியைப் பெருக்கும் நிலைகள் காலத்தால் மறைந்து விட்டது. இதை அறிந்து கொண்ட நாம்
1.இனியாவது மகரிஷியின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.
2.மகரிஷிகள் உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்…
3.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம்
4.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்.

நமது பார்வையில் உலக மக்கள் தன்னைத் தான் அறிந்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று தவமிருப்போம்.

நம்மை உருவாக்கிய அன்னை தந்தையரை மறவாது அவர்களைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய அவர்களைக் கடவுளாக மதித்து… நல்வழி காட்டிய அவர்களை குருவாக மதித்து… அதன் வழியில் எண்ணியதை உருவாக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்.

நாம் எண்ணியதை உயிரே உடலாக்குகின்றது… நினைவாக்கும் பொழுது அதுவே தெய்வமாகச் செயல்படுகின்றது… மீண்டும் அதை எண்ணும்பொழுது அது குருவாக அதன் வழியிலேயே நம்மைச் செயலாக்குகின்றது. ஆகவே
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் குருவாக்குவோம்… அதனை நினைவாக்குவோம்
2.மகரிஷிகள் சென்ற பாதையில் இந்த வாழ்க்கையில் ஒளியின் சரீரம் பெறுவோம்.

எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம்

எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம்

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்... அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்...” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்... உணர்தல்... தெளிதல்... என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்...?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா...” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்...!”

April 21, 2024

இரவு முழுவதும்… வலுக் கொண்டு ஓட வேண்டிய “தியான நினைவோட்டம்”

 

இரவு முழுவதும்… வலுக் கொண்டு ஓட வேண்டிய “தியான நினைவோட்டம்”

 

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு... “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே...” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது. அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்... உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது... பல நன்மைகளும் ஏற்படுமப்பா...!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்...
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது... அதனின் வினைச் செயலை மாற்றி... நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்...!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா...! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

தீமை செய்யும் குணங்களை நுகர்ந்தால் உயிரின் துடிப்பு மாறிவிடும்

தீமை செய்யும் குணங்களை நுகர்ந்தால் உயிரின் துடிப்பு மாறிவிடும்

 

ஒரு கம்ப்யூட்டரில் மணிக்கணக்குகளைக் காட்டுகின்றார்கள். உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக அது இயங்கி... அதிலே குறித்த நிலைகள் வரும் பொழுது மணிகளை மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

ஆனால்...
1.அதிலே சிறிது தண்ணீர் பட்டு விட்டால் முழுவதும் மறைந்துவிடும்.
2.எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்யும் போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அந்தக் கரண்டின் இயக்கம் அதில் உள்ள பேட்டரியின் சார்ஜ் குறைந்தாலும் தப்பான கணக்கைத் தான் காட்டும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் இயக்கம் சீராக இருக்கப்படும் பொழுது நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் நன்றாக இருக்கும்.

1.சோர்வு வேதனை போன்ற மற்ற நஞ்சான உணர்வுகள் வந்தால்
2.அத்தகைய எண்ண அலைகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்த பின்
3.நம் உயிர் அந்த உணர்வின் தன்மையை இயக்கப்படும் பொழுது இயக்கத்தின் துடிப்பு குறைந்து விடும்.

அப்படிக் குறையும் பொழுது நம் உடலின் இயல்பான இயக்கங்களும் குறையத் தொடங்குகின்றது. நம் எண்ணும் நிலைகள் சீராக வராது ஒரு கணக்குப் பார்த்தாலும் சரியாக வராது. நம் சொல்லும் சரியாக இருக்காது.

ஏனென்றால் நம் உயிர் எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) அதை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
1.அதிலே எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்தந்த உணர்வுகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கும்.
2.அந்த மாற்றம் எதுவோ கண்களில் அந்த நிறங்கள் மாறும்.
3,சொல்லுக்குள்ளும் உணர்ச்சிகள் மாறும்… அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் நிறமும் மாறும்.

இந்த மாதிரி ஒருவரைப் பார்த்தவுடனே அவருடைய நிலைகளைச் சொல்லிவிடலாம். யாம் சொல்லும் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு இது தெளிவாகத் தெரிய வரும். தெரிந்தாலும் இதை ஜோதிடம் போன்று சொல்லி விடக்கூடாது.

1.சில நேரங்களில் உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன் (ஞானகுரு).
2.அப்பொழுது அந்தச் சமயத்தில் உங்களிடமிருந்து என்னென்ன வருகிறது…? என்று பார்ப்பேன்.
3.பார்த்த பின் அதிலே என்ன நல்ல மாற்றம் கொடுப்பது…? என்று நான் இணைத்துக் கொடுப்பேன்.

நான் வேறு விதமாக மாற்றிச் சொல்லும் பொழுது உங்களிடமிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். அப்பொழுது இந்த அலைகளைத் தொடர்ந்தவுடன் “எந்த உயர்ந்த உணர்வை உங்களிடம் கலக்க வேண்டும்...?” என்று சொல்லி உங்களிடம் கலக்கச் செய்வேன்.

1.அந்தச் சமயத்தில் நான் சொல்வதில் விஷயம் அதிகமாக இருக்கும்.
2.ஏனென்றால் குரு வழியில் அதை எதை இணைக்க வேண்டும் என்று இணைத்துத்தான்
3.உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்று அந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவது.

உதாரணமாக பள்ளியில் ஆசிரியருக்கு ஒரு மாணவன் மீது வெறுப்பாகி விட்டால் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகத் தான் சொல்லிக் கொண்டு வருவார். மாணவனுக்குள் பயம் வந்து விட்டால் ஆசிரியர் என்ன சொன்னாலும் இவனுக்குள் இது பதிவாகாது. இது எல்லாம் அந்த உணர்வின் நிலை.

பார்வை அங்கே இருட்டாகும். எதிரில் எது இருந்தாலும் அதைச் சரியாகக் காண முடியாது. அந்த உணர்வுக்குள் நஞ்சாகும்.

ஆக... விஷத்தில் எந்த நல்ல பொருளைப் போட்டாலும் சிந்தனை வராது. விஷத்தின் தன்மையின் உணர்வாகவே மாறிவிடும். அந்த நேரத்தில் என்ன பதிவு செய்தாலும் அது பதிவாகாது.

அது போல் ஆகாது... குருநாதர் கொடுத்த “கோடி கோடி” என்ற நிலைகள் கொண்டு அந்த உண்மையின் தன்மை வளர்ந்தாலும்... கோடி கோடி என்ற ஒளியான உணர்வின் தன்மையாக உங்களுக்குள் இணைத்தே கொண்டு வருகின்றேன்.
1.இணைத்துக் கொண்ட பின்
2.அது தெளிந்த அறிவை உங்களுக்கு ஊட்டும்.

ஆக... அடுத்தவர்களை நீங்கள் பார்த்த பின் கேட்டறிந்து அதைச் சொல்வதல்ல. கேட்டறிந்து நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் நானே அப்படிச் சொல்ல முடியாது.

ஆனால் திருப்பிச் சொல்லும் நிலை வந்தால் அது வெறும் பாட நிலையாகத் தான் ஆகும். ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது அந்த உண்மைகளை நமக்குள் உணர்த்தும்… அங்கிருக்கும் தீமையும் தெரியும்.

அப்பொழுதெல்லாம்...
1.அந்தத் தீமையை நீக்குவதற்குண்டான வழி எது...? என்று நாம் எடுக்க வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நமக்குள் தீமை சேராது.
3.அவர்களின் தீமைகளை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.

அந்தச் சொல்லினை அவர்கள் பதிவு செய்து விட்டால்... அவர்கள் கேட்டுணர்ந்தால்... திருப்பி அதை அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் தீமையை அவர்களே போக்க முடியும்....!

ஒருவர் வாய் திறந்து சொன்னால் போதும்… “இப்படித்தான்” என்று நமக்கு அது தெரிய வரும். நமக்குத் தெரிய வந்தாலும் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொண்டேன்…! என்று உடனே அவர்களிடம் சொல்லக்கூடாது.

1.அவர்களுக்கு நல்ல உணர்வை எப்படிக் கொடுக்க வேண்டும்…? என்ற நிலையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுடன்
3.அவர்கள் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும்... நாம் எதையும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிறிதொன்றை அவர் சொல்லும் போது நமக்குக் கோபம் வரும். ஆனால் இங்கே சொன்ன உபாயத்தின்படி எண்ணிப் பாருங்கள்.

சரி… அப்படியா…! என்று அந்த அருள் உணர்வுகளைக் கண்ணிலே பாய்ச்சிப் பாருங்கள். யாராவது குற்றமாகச் சொல்ல வரும் பொழுது இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.
1.அவர்களுக்குள் ப்ரேக் ஆகும்... நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்களை இடைமறிக்கும்.
2.குறைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் இது போய் அங்கே தடையாகும்.
3.ஆனால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது... நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்கள் தீமைகளை அடக்கச் செய்யும்.

ஏனென்றால் யாரும் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு அவர்களை இயக்குகிறது. அந்தக் குறை வளரக்கூடாது என்ற நிலையில் மகரிஷிகளின் அருள் ஒளி அங்கே படர வேண்டும்... மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இதை மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

இப்படிச் செய்வதற்கு மாறாக நாம் அவர் உணர்வை அப்படியே எடுத்துக் கொண்டால் இரண்டு பங்கு நமக்குக் கோபம் வரும். நீ பெரியவனா...? நான் பெரியவனா...! என்று சண்டை வரும்.

இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் இதை எல்லாம் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும்.

April 20, 2024

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

 

மனிதனான பின் மனிதனின் வாழ்க்கையில் நல்லது செய்யும் போதும் அறியாது எத்தனையோ சிக்கல்கள் வருகிறது…! எப்படி…?

உயர்ந்த குணங்கள் கொண்டோர் பிறருக்குப் பண்பு கொண்டும் பரிவு கொண்டும் உபகாரம் செய்தால் அதன் விளைவாக எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.

அப்போது… பண்பு கொண்ட அந்த மனிதனுக்குள் விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது இவனையும் வேதனைப்படச் செய்து… நரகலோகத்திற்கே அவனை அழைத்துச் சென்று விடுகின்றது.

1.நல்ல பண்புகளை அவன் எண்ணி ஏங்குகின்றான்…
2.நான் நல்லதைத் தான் செய்தேன்… எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்று ஏங்கி அந்த விஷத்தை வளர்த்துக் கொள்ளும் நிலையில்
3.விஷ அணுக்களை உருவாக்கிக் கொண்டு அந்த வேதனை கொண்டு அவன் மடிகின்றான்.

மடியும் பொழுது எதன் மேல்… யார் மேல் வேதனையாக எண்ணி அவன் வெளி வந்தானோ அந்த உணர்வின் நினைவாற்றல் வந்தபின் அந்த உடலுக்குள் புகுந்து
1.அங்கேயும் இந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்தி விட்டு
2.விஷமான அணுக்களைப் பெருக்கி முழுமை அடைந்து வெளிவந்த பின்
3.விஷப் பூச்சிகளாக விஷப் புழுக்களாக பாம்பினங்களாக உருமாற்றி விடுகின்றது உயிர்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகி… அதிலிருந்து மீண்டிடும் உணர்வை எடுத்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… எல்லாவற்றையும் அடக்கிடும் நிலை பெற்றவன் தான் மனிதன்.

ஆகவே… வரும் தீமைகளிலிருந்து மனிதன் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனை நான் (ஞானகுரு) அறிய… இரவும் பகலும் ஒவ்வொரு நொடியிலும் காடு மேடுகளில் எம்மை அலையச் செய்தார் குருநாதர்.

அனுபவ வாயிலாகப் பேருண்மைகளை அறியச் செய்து தீமையிலிருந்து உன்னை மீட்டுக் கொள்ளும் நிலையாக நீ எதைத் தேர்ந்தெடுக்கின்றாய்…? அதை நீ எவ்வழியில் பெற வேண்டும்…?

தீமைகளை நீ செய்யவில்லை என்றாலும் தீமை செய்வோனை நீ உற்று நோக்கினால் அந்த உணர்வினை நீ நுகரப்படும் பொழுது… அதை அறியும் தன்மை வந்தாலும்…
1.ஓம் நமச்சிவாய என்று உன் உயிர் உனக்குள் அதை ஜீவ அணுவாக… உடலாக உருவாக்கி விடுகின்றதே…!
2.மீண்டும்… சிவாய நம ஓம் அவன் இப்படித் தவறு செய்கின்றான்…! என்று நீ திரும்பச் சொல்கின்றாய்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி பெற அந்த அணுக்களும் உனக்குள் பெருகுகின்றது. மனித இனம் என்ற நிலைகளையே மாற்றி உனக்குள் உணர்வுகள் மாறுகின்றது… உருவங்கள் மாறுகின்றது மனிதன் மீண்டும் தேய்பிறையாகத் தான் போக முடிகின்றது.

1.இதிலிருந்து தேய்பிறை ஆகாது உன்னை நீ எவ்வாறு காத்திட வேண்டும்…?
2.எவ்வழியில் உன்னை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.பல அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்தார் குருநாதர்.

அதைத்தான் உங்களுக்கும் சிறுகச் சிறுக சொல்லி வருகின்றோம்.

எனக்கு குருநாதர் தொட்டுக் காட்டியது போன்று உங்கள் உணர்வுகளுக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகளைத் தொட்டு காட்டி அதை இணைத்து… அதன் மூலம் அவர்கள் பெற்ற அரும்பெரும் சக்திகளை நீங்களும் பெறும் தகுதியாக “இதைப் பதிவு செய்கின்றோம்…”

குரு வழியில் நீங்கள் இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த நன்மை… அது உங்களுக்குள் என்றுமே நிலைத்திருக்கும் நிலையாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு
2.உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் - ஆத்திரம் - ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு - விரக்தி - குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக...” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்... மூலாதாரம்.... நாபி... இருதயம்... கண்டம்... நெற்றி... தலையின் உச்சிப் பகுதி... முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது...?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு... பித்தம்... மன நோய்:-
குறுகிய மன நிலை... மருள்... பொறாமை... ஏக்கம்... உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்... தோல் வியாதி:-
மோகம்... செருக்கு... அதி ஆசைகள்... என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்...!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்... திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல...!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்... அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

April 19, 2024

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

 

குரு உபதேசித்த உணர்வுகளை நமக்குள் பெற்றுள்ளோம். இன்றைய நிலைகளில் அதை எல்லாம் எளிதாக உங்களிடம் சொல்கின்றேன். ஆனால் “அதை வழி நடத்துவதற்குண்டான சிக்கல்” எனக்குத் தான் (ஞானகுரு) அது தெரியும்.

காரணம்… எத்தனையோ இன்னல்களைக் கண்டுணர்ந்த நான் அன்பு கொண்டு பரிவு கொண்டு உயர வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் வந்து
1.உயர்ந்த சக்தி பெற வேண்டும் உணர்வுபூர்வமாக நான் ஊட்டினாலும்
2.அந்த உணர்வு பதிவான அவர்களுக்கும்… சந்தர்ப்பம் அந்த உணர்வை அவர்களுக்குள் அதை வளர விடாது தடுக்கின்றது.
3.அதனால் அவர்கள் அறியாது தவறு செய்யத் துணிவாகும் போது
4.எல்லை கடந்து சிரமப்பட்ட நேரத்தில் அவர்களுக்குள் நல்லது உருப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நான் பாய்ச்சிய பின்னும்
5.அவரை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்கிறது
6.அதனைக் கண்டு எனது மனமும் வேதனைப்படுகின்றது.
7.அந்த வேதனை உணர்வுகள் என்னையும் இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்துச் செல்லும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அன்றே குருநாதர் சொன்னார்.

“நீ உருவாக்கும் உணர்வுகள் நல்லதை மற்றவர்களுக்குப் பாய்ச்சிடும் நிலை பெற்றாலும்” தீமையின் நிலைகள் அவருடைய சிந்தனையைச் செயலற்றதாக மாற்றும்.

1.அத்தகைய வேளையில் நீ எதைச் செய்யப் போகின்றாய்…? உன்னை நீ எவ்வாறு காத்துக் கொள்ளப் போகிறாய்…?
2.உனக்கு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்
3.நீ நகருக்குள் செல்லப்படும் பொழுது எத்தனை வேதனைகளை நீ படப் போகின்றாய் என்று பார்…! என்று இதைச் சொல்கின்றார்.

பலருக்கு பல நோய்களிலிருந்து விடுபடும் அதற்குண்டான உபாயங்களைச் செயல்படுத்தினாலும் அடுத்து அவர்களுக்கு நல்லதான பின் “இவர் என்ன செய்தார்…?” என்று அவர்கள் என்னைச் சொல்லப்படும் பொழுது
1.மனதார பணம் வாங்காது அவர் நல்ல வழி பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.நல்லதான பின் நுகர்ந்தறிந்தாலும் அவர் செய்யும் தவறுகளும்…
3.வேதனைப்படுத்தும் சொல்களை அவர் சொல்லப்படும் பொழுது அந்த விஷத்தை நுகர்ந்தபின் நீ செய்த நன்மைகள் எப்படி மறைகின்றது…?
4.அந்த விஷத்தின் தன்மை உனக்குள் எப்படி ஆட்கொள்கின்றது…?
5.உன்னை அறியாமலே வெறித் தன்மை கொண்ட செயல்படும் தன்மைகள் உனக்குள் உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்

தியான வழிகளில் அமைதியும் பண்பும் கொண்டு நீங்கள் வழி நடந்து வந்தாலும் உங்களைச் சீண்டிப் பார்ப்போரும் தூண்டிப் பார்ப்போரும் துன்புறுத்தி அதை வேடிக்கை பார்ப்போரும் “இப்படி இதிலும் பலர் பெருகுவர்…!”

இதைப் போன்ற நிலைகள் இருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத்தான் “எனது குரு காட்டிய அருள் வழியினை” உங்களுக்குள் இந்த உணர்வின் சக்தியைப் பரப்பப்பட்டு இந்த உணர்வின் வலிமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இதைச் செயல்படுத்துகின்றேன்.

ஆகவே… மனிதனின் பண்புகள் சிறுகச் சிறுக மறைந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தீமையிலிருந்து எப்படி விடுபட வேண்டும்…? என்று உணர்த்தினார்… அதைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றேன்.

உங்களை அறியாது வாழ்க்கையில் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு நஞ்சினை வென்றிடும் வலிமை பெற வேண்டும்… அந்த அருள் ஞானிகள் உணர்வை நுகரும் வலிமை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராது சில தீமையின் உணர்வுகள் உருவாகி விட்டாலும்
1.உங்கள் நினைவாற்றல் அந்தத் தீமையிலிருந்து அகற்றிடும் சக்தியாக
2.உங்களைக் காத்திடும் நிலையாக வர வேண்டும் என்பதற்குத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபதேசங்களைக் கொடுக்கின்றேன்.

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ... புளிப்போ... உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்...?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்... காரியமாற்றும் நிலையிலும்...
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்... கோபம்... மோகம்... ஆவேசம்... ஆத்திரம்... பழி.... ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்...
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா...! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா...!

April 18, 2024

அதிகாலையில்… “நம் நினைவுகள் இருக்க வேண்டிய திசை”

அதிகாலையில்… “நம் நினைவுகள் இருக்க வேண்டிய திசை”


அதிகாலையில் 4:00 மணிக்கு என்னை (ஞானகுரு) விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார் குருநாதர்.
1.அதிகாலை நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள்
2.துருவப்பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை அறியும்படி செய்கின்றார்.

காரணம்… சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுவதைக் கவர்ந்து ஒளி அலைகளாகப் படரச் செய்கின்றது. அதனின் உணர்வுகள் பரவி வரும் பொழுது
1.நம் பூமியின் சுழற்சி வட்டத்தில் துருவப் பகுதி வழியாக… பூமி எவ்வாறு கவர்ந்து இழுக்கின்றது…? என்பதை குருநாதர் தெளிவாக்குகின்றார்.
2.அந்த நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பிக்கின்றார்.

விஷத்தன்மையான உணர்வுகளைக் கவரும் அந்தந்தக் கால கட்டங்களில் (சந்தர்ப்பத்தில்)
1.அந்த விஷத்தின் தன்மையை நுகரும்படி செய்து
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அந்த விஷங்களை எப்படி முறியடிப்பது…? என்ற நிலைகளையும் காட்டுகின்றார்.

ஆகவே துருவப் பகுதியை உற்று நோக்கி காலை 4 மணியிலிருந்து ஆறுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை “ஒரு வழக்கமாக” வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.

1.காலையிலிருந்து இரவு வரையிலும் பல பல தீமைகளைச் சந்திக்கச் செய்கின்றார்
2.அதை நுகரும் பொழுது அதனால் உடலுக்குள் உபாதைகள் உருவாவதையும் காட்டுகின்றார்
3.பின் காலை நான்கு மணிக்கெல்லாம் குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரப்படும்போது அந்தத் தீமைகள் ஒடுங்குகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு சுழல்கின்றது…? அதிலிருந்து வெளிப்படும் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? அதனை எவ்வாறு நீ நுகர வேண்டும்…? என்பதையும் குரு தெளிவாக எனக்குள் உணர்த்துகின்றார். அதை அறிவதற்காகச் சில சில நிகழ்ச்சிகளையும் என் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகின்றார்.

சப்தரிஷி மண்டலங்களின் சக்திகளை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது விஷத்தன்மைகள் எவ்வாறு ஒடுங்குகின்றது…? அதை வைத்து… உனக்குள் வரும் தீமைகளில் இருந்து எவ்வாறு நீ மீள வேண்டும்…? என்று இப்படித்தான் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

வாழ்க்கையில் வந்த விஷத்தன்மைகளை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலைத்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக எவ்வாறு வாழுகின்றார்கள்…? என்றும் பதினாறு என்ற நிலையில் எப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…?
1.அதனை நீ பெறுகின்றாயா…? (அல்லது)
2.மூலிகைகளைக் கண்டுபிடித்துப் பிறருடைய துன்பங்களையும் நோய்களையும் போக்கும் “வைத்தியன்” என்ற பெயர் வாங்குகின்றாயா…?

“பல பல தாவர இனங்களைக் கையில் எடுத்துக் கொண்டு” பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்களை ஒடுக்குவதும்… விஷப் பூச்சிகளிடம் காட்டும் போது அவைகள் பம்முவதும்… கடும் விஷம் கொண்ட மிருகங்களையும் அஞ்சி ஓடச் செய்வதும்… போன்ற செயல்களில் ஈடுபட்டு
1.அதன் வழி உன்னுடைய வலிமையைக் காட்டி உன்னுடைய திறமையைக் காட்டி
2.பேரும் புகழும் பெருமையும் அடையும்படி புகழ் தேடச் செல்கின்றாயா…?
3.புகழ் தேடிய பின் அதனின் உணர்வுகள் உன்னை மீண்டும் விஷத்தன்மை அடையச் செய்து அதன் வழி மடிகின்றாயா…? (அல்லது)
4.மனித உடலை மாற்றி விண் செல்கின்றாயா என்று இப்படி பல வினாக்களை எழுப்பினார் குருநாதர்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி… அந்த நெறிப்படி நடந்து உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றேன். அதே உணர்வைத் தான் உங்களுக்கும் இப்போது போதித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி... நாபி நாடி... மார்பு நாடி... கண்ட நாடி... சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி... சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி.... ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்... காது... நாசி... வாய்... கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக...
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

April 17, 2024

நெஞ்சுப் பகுதியில் “பட படக்கும் துடிப்பலைகள்”

நெஞ்சுப் பகுதியில் “பட படக்கும் துடிப்பலைகள்”

 

கோப குணத்தின் உந்துதலால் நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இரு பாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி...! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்... அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி... இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது...எது எப்பொழுது செயல்படுகிறது...? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி... மோகம்.. தாகம்...” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்... சுவாசமும்... செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்...!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்... மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்... ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி...
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்...!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே...
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்...!

உருவம் அருவம் – அருவம் உருவம்

உருவம் அருவம் – அருவம் உருவம்

 

உலகில் உள்ள அனைத்து மதங்களும்
1.தெய்வம் என்ற நிலையில் உருவத்தைக் காட்டி… அருவத்தின் எண்ணங்களைத் தனக்குள் எண்ணும் பொழுது
2.அந்த உணர்வினை உயிர் நுகர்ந்து உணர்வின் எண்ணங்களாக உருவாக்குகின்றது.
3.ஆனால் எந்த உருவத்தைப் பார்த்தோமோ அந்த உருவத்தின் உணர்வலைகளாக வருகின்றது.

இவருடைய எண்ணங்களும் அதுவும் ஒன்றாக வருகிறது. இது இரண்டும் சேர்த்துத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

பதிவாகி… பக்தி கொண்டு வாழ்ந்த பின் அந்த மனிதன் இறக்கின்றான் என்றால் அதே பக்தி கொண்ட நிலைகளில் இன்னொரு மனிதன் எண்ணி ஏங்கும்போது
1.எந்தப் பக்தியின் நிலைகளில் எந்த உருவத்தைக் காட்டினார்களோ
2.அந்த உருவத்தின் உணர்வலைகளும் அதனின் இசையின் உணர்வுகளும் கலந்து
3.அந்தச் சொல்லின் தன்மை உணர்வுகள் உணரப்பட்டு… இந்த உணர்வுகள் “ஒளிகளாக” உருவாகின்றது.

அதைப் (தெய்வத்தின் உருவை) பதிவாக்கப்படும் பொழுது இந்த நினைவுகள் இங்கே அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து வாழ்க்கையை அதன் வழி நடத்தும்படி செய்கின்றது.

அதே சமயத்தில் அவர் இறந்து விட்டாலோ… எதைக் கண் கொண்டு உணர்வின் தன்மை அலைகளாகப் பாய்ச்சியதோ… எதன் எதன் உணர்வின் எண்ணங்களை இதற்குள் பாய்ச்சியதோ… இந்த உணர்வின் அலைகள் சென்ற பின் இதே மந்திரத்தை அவர் சொல்வார் என்றால்
1.எந்த மந்திரம் இவர் உடலுக்குள் உருவாக்கப்பட்டதோ அது ஈர்க்கப்பட்டு இந்த உணர்வின் ஒளிகளை எழுப்பப்பட்டு
2.அதே ரூபத்தையும் உருவாக்கப்படும்… எனக்குக் கடவுள் காட்சி கொடுத்தான் என்று…!

நமக்குள் உள் நின்று இயக்கப்பட்ட உணர்வுகள் தான் நாம் இறந்த பின் அதே உணர்வலைகளை எழுப்படும் போது இந்த அலைவரிசையில் அவர்களுக்கு அந்தந்த மதத்தின் தன்மை கொண்டு
1.உருவம் அருவமாகி… அருவம் உருவமாகி
2.நமக்குள் அருவமாகி அந்த ஒளி அலைகளாக மாற்றும் பொழுது
3.அதை ஒருவர் நுகர்ந்தார் என்றால் அந்த உருவத்தின் உணர்வுகள் அருவ நிலையாகக் காட்சியாகக் கொடுக்கின்றது.

அந்த உணர்வு உடலுக்குள் இயக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… உடலுக்குள் அது பெருகுகின்றது. இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகின் பல நாடுகளிலும் “அவர்கள் தெய்வம்…” என்ற நிலையை உயர்த்திக் காட்டுவதற்காக ஒரு பெண்மணிக்கு மூக்கிலிருந்து “கொம்பு” வருவதாகக் காட்டுவார்கள்… இதுவே தெய்வம்…! என்பார்கள்.

இதை உற்றுப் பார்த்து… காவியப் படைப்புகள் வைத்துக் காட்டப்பட்டு… மந்திர ஒலிகளை எழுப்பி ஜெபிப்பார்கள் என்றால் அதன் வழிப்படி “அந்தக் கடவுள் நம்மைக் காப்பான்…” என்று பதிவாக்கி விடுகின்றார்கள்.

எந்தச் சிலையின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றதோ அது நுகர்வோர் உணர்வுகளில் பதிவாக்கப்படுகின்றது. அவர்கள் சொல்லும் மந்திர ஒலிகளும் இதற்குள் கூடி விடுகின்றது.

இவர்கள் இறந்து விட்டால் இதே மந்திரத்தைச் சொல்வார் என்றால்
1.எந்த சிலையின் ரூபத்தைக் காட்டப்பட்டதோ…
2.அதே சிலையின் உருவங்கள் மந்திர ஒலிகளைச் சொல்வோருக்குக் காட்சியாக அளிக்கும்.

“தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது…” என்ற நிலையும் இவர்கள் எண்ண ஒளிகளை அவர்கள் எடுக்கப்படும் பொழுது எந்தெந்த உணர்வுகள் பதிவானதோ அந்த அலைகள் அங்கே படரும்… அதை இவர்கள் அறிய வேண்டியது வரும்

ஆனால் இந்தத் தெய்வம் உன்னைத் தண்டிக்கும்…! என்று அந்த மதத்தின் கீழ் அச்சுறுத்தும் உணர்வு வந்துவிட்டால் தன்னை அறியாது செய்த தவறுக்கு இந்தத் தெய்வம் தண்டனை கொடுக்குமா…? என்ற பயம் வந்து விடுகிறது.

ஏனென்றால் நேர்மையாகச் செல்வோருக்குத் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்து விட்டால் அச்சுறுத்தும் பய உணர்வுகள் வந்துவிடுகிறது அந்த பயத்தால் “தெய்வம் என்னைத் தண்டித்து விடுமோ…!” என்ற அந்த உணர்ச்சிகள் வந்து விடுகின்றது.

ஓர் வீரிய உணர்வு கொண்டவர்கள் “நீ செய்த தவறுக்குத் தெய்வம் உனக்குத் தண்டனை கொடுக்கும்…” என்று அவரின் வலுக் கொண்ட எண்ணங்களைப் பாய்ச்சுகின்றார்கள்.

கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் இது பதிவாகி விட்டால் இதே உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வுகளாகப் பாய்ந்து
1.எந்தத் தெய்வத்தை… எந்த மதத்தின் கீழ்… எதை அடிப்படையாக வளர்த்து வந்தனரோ அவர்கள் ஏற்றிய உணர்வு வந்த பின்
2.அதே உருவத்தின் நிலைகள் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட சிலையை பார்த்த உணர்வலைகள் இங்கே உருவமாக்கப்பட்டு
3.அருவ நிலைகள் சென்றபின் அதே உணர்வு இங்கே பதிவான நிலை அதே ரூபத்தைக் காட்டும்.
4.ஆனால் “மனிதனுடைய ரூபத்தைக் காட்டாது…” எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளி அலைகளை அங்கே காட்டும்.

நாம் எண்ணி எடுப்பது தான் தெய்வமாகக் காட்டுகின்றது என்று இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.