ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2015

கஷ்டப்பட்டு சம்பாரித்துக் கட்டிய வீட்டு வாசலையும் சுவரையும் மாற்றினால் கஷ்டம் போகுமா? வாசு – வாசுதேவன் - வாஸ்து

ஒருவர் தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி வீட்டைக் கட்டுகிறார்.

அதன் பின், அவருடைய நிலையைப் பார்த்து உறவினர்களும் மற்றவர்களும் அணுகி வரும்போது சம்பாரிக்கும் செல்வம் அங்கே செலவாகிறது.

அப்பொழுது, வீட்டையெல்லாம் கட்டிவிட்டோம் ஆனால், செல்வம் தங்க மாட்டேன் என்கிறது என்று அவர் நினைக்கிறார்.

வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறவர்கள் தான் பிழைக்க என்ன சொல்கிறார்கள்?

அவரைப் பார்த்து, நீ சம்பாரிக்கும் பணமெல்லாம் செல்வாகிறது ஆகவே, உன் வீட்டில் வாசலையோ அல்லது ஒரு சுவரையோ இடித்து இப்படி மாற்றி வை என்று சொல்கிறார்கள்.

அல்லது வேறு ஏதாவது வீட்டிலிருக்கும் நிலையைச் சொல்லி இதை இப்படி மாற்றி வை என்று சொல்லிக் காசை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

ஆனால், ஞானிகள் சொன்ன வாஸ்து சாஸ்திரம் என்பதுவாசு” – “வாசு தேவன்”. அதாவது
நாம் சுவாசிக்கும் உணர்வை
உயிர் வாசுதேவனாக இருந்து
அதை அணுவாக உருவாக்குகிறது.
இந்த வாசல் வழியாக வரும் தீமைகளை மாற்றிப் பழக வேண்டும்.

ஏனென்றால், நாம் எந்த குணத்தை எண்ணி செயல்படுகிறோமோ அதற்குத்தக்க உணர்ச்சிகள் உந்தி சுவாசமாகி, மூக்கின் வழியாகச் சென்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே மோதித்தான் ஜீவன் பெறுகிறது.

உயிரிலே மோதியபின், நாம் சுவாசித்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் சென்று அணுவாக உருவாகும் கருவாக - இரத்தத்திலே உருவாகின்றது.

அப்படி உருவான அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும் நிலையில் எந்தெந்த் குணங்களையெல்லாம் சுவாசிக்கின்றோமோ அதற்குத்தக்க நம் உறுப்புகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதன் வழியில், நம் சொல்லும் செயலும் மாறுகிறது. ஆகவே, இந்த வாசலை அதாவது
நாம் ஒவ்வொரு நொடியிலும் சுவாசிக்கும் உணர்வுகள்
உடலுக்குள் செல்லும் இந்த வாசலில் மாற்றியமைக்க வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் நாம் எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் உயிரிலே மோதி அது வாசுதேவனாக மாறி தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

வாழ்க்கையில் நம் மீது மோதும் எத்தகையை தீய வினைகளோ, பாவ வினைகளோ அல்லது சாப வினைகளோ, பூர்வ ஜென்ம வினைகளோ அது நம்மை இயக்காது நமக்குள் அணுவாக உருவாகாது தடுக்கப்படும்.

ஞானிகள் உணர்த்திய இந்த சாஸ்திரப்படி நாம் வழி நடந்தால்  “வாசுவாசுதேவேன் நாம் சுவாசிக்கும் இந்த அருள் உணர்வுகள்
நம்மைத் தெளிவடையச் செய்யும்,        
தெளிவான வாழ்க்கை வாழச் செய்யும்.
சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.
இருளை அகற்றிட முடியும்.
ஒளியின் தன்மையை நாம் பெறமுடியும்.

அதை விட்டுவிட்டு நாம் நல்ல முறையில் வாழ்ந்து கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தின் துணை கொண்டு கட்டப்பட்ட வீட்டில் வாசலை இடித்து மாற்றினாலோ சுவரை இடித்து மாற்றினாலோ அது எந்தப் பலனையும் தராது.

வாஸ்து சாஸ்திரம் என்று சொல்பவர்கள் சில ஜாதகக் குறிப்புகளையும் சில மந்திர நிலைகளையும் கற்றுக் கொண்டு நம் வீட்டில் நடக்கும் நிலைகளைச் சொல்லி நம்மை எளிதில் ஏமாற்றி தனக்குச் சாதகப்படுத்திக் கொள்வார்கள்.

வாஸ்து சாஸ்திரம் பார்த்து மாற்றியமைத்த பின்னாடி எத்தனை வீட்டில் கஷ்டமோ  நஷ்டமோ இல்லை என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக, நம் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் நீக்க எதையாவது செய்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம்.

ஆனால், நாம் சுவாசிப்பதை நம் உயிரான ஈசன் உருவாக்குகிறான். உருவான அந்த நிலைப்படிதான் நம் வாழ்க்கை அமைகிறது என்ற நிலையை உணர்ந்து அருள் உணர்வின் தன்மையை உங்கள் சுவாசமாக்கி அந்த அருள் வழி நீங்கள் நடந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

நீங்கள் யாரிடமும் சென்று யோசனை கேட்க வேண்டியதில்லை.

எண்ணுவதை எண்ணியபடி நடத்தித் தரும் நாயகனான உங்கள் உயிரின் துணை கொண்டு எத்தகையை இருளையும் மாற்றிட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும்