அன்று அகஸ்தியனால் கண்டுணர்ந்த உணர்வின்
தன்மையும் இன்று அவர்கள் எடுத்த நிலைகளில் இதே போன்றுதான் தான் கண்டுணர்ந்த உணர்வும்
மனிதனுக்குகந்த உணவு வகைகளை தாவர இனங்களை
எடுத்து “சோளம் கம்பு ராகி பயிர்களும் கொய்யா…,” போன்ற கனி வர்க்கங்களையும் அகஸ்தியனால்
அன்று உருவாக்கப்பட்டது.
காடுகளில் இதெல்லாம் நிறைய உண்டு.
தான் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் எதை எதையெல்லாம் இணைத்து உண்மைகளைத் தனக்குள் உணர்ந்தான் என்ற நிலையைக்
காட்டுகின்றார் குருநாதர்.
முதலில் துருவன் என்ற நிலைகள் வரப்போகும்
போது
1.அந்தப் புவியின் நிலைகளை எப்படி வளர்கின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி வளர்கின்றது…?
3.இயற்கையிலே அகஸ்தியன் இணைத்துக் காட்டுகின்றான்.
அகஸ்தியர் உடலிலே விளைந்ததும் அவன் இணைத்த
ரூபங்களையும் பார்க்கின்றேன். அந்த அலைகளை… எப்படி அந்த உணர்ச்சிகளை இயக்கி அகஸ்தியர்
காணுகின்றார் என்ற நிலையும் பார்க்க முடிந்தது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அகஸ்தியன்
வாழ்ந்த அக்காலங்களுக்கே அழைத்துச் சென்று அந்த அலைகளை நுகரும்படிச் செய்து நேரடியாகவே
காண்பிக்கின்றார்.
நான் இங்கே இப்பொழுது சொல்வது போல் இதே
மாதிரி சொல்லாகச் சொல்லி இந்த உணர்வுகளை இயக்கச் செய்து அதன் வழியில் சந்தர்ப்பத்தில்
எடுத்துக் காட்டில் உள்ள உணர்வுகளை எடுத்துப் பார்க்கும் போது
1.அகஸ்தியருடைய ரூபமும்
2.அவர் கண்டுணர்ந்த உணர்வும்
3.அந்த உணர்வின் ஒலிகளையும் நான் காண
முடிந்தது.
அகஸ்தியர் கண்ட பேருண்மைகளை நீங்களும்
காண வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்
ஆனால் நீங்கள் எதை எண்ணிக் கொண்டு இங்கே
வருகின்றீர்கள்?
சாமியிடம் கேட்டுத் தலை வலி நீங்கினால்
போதும். தொழில் வந்தால் போதும் என்ற நிலையில் தான் வருகின்றீர்கள்.
அந்த மெய் ஞானி உணர்வுகளை நுகர்ந்தால்
வந்தால் இந்தத் தீமைகளை எல்லாம் அகற்றிவிடும். மெய்ப் பொருளை வளர்க்க முடியும். தீமையற்ற
நிலையாக வாழ முடியும் என்று சொல்கிறோம்.
இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை. இந்த
உடல் நிலையானதில்லை. ஆனால் இந்த உயிர் என்றும் நிலையானது.
அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.
அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும்
உள்ளான்….!
இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும்
நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ
அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.