ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2012

ஞானகுருவின் அருளுரைகள்

(பக்கம் 9-13)
ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று சொல்லும் பொழுது, ஓம் என்பது பிரணவம். ஆக, எனக்குள் ஜீவனாக இருந்து இயங்கும் உயிரைத்தான், “ஓம்என்று சொல்வது.
ஓம்அதாவது, அது இயங்கி, எனக்குள்ம்என்று அடங்கி, நான் எண்ணிய இயக்கங்கள் அனைத்தையும் இயக்குகின்றது, என்று பொருள்.

ஆகஓம்ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது, இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும், இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்து தசைகளுக்கும், இந்த உடலில் உள்ள எண்ணங்கள் அனைத்திற்கும், குருவாக இருப்பது நமதுஉயிர்”.

ஆகையினாலேதான், “ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று சொல்லும் பொழுது உயிரை எண்ணி ஏங்க வேண்டும். அதே சமயம், நமது குருநாதர் பெயரும்ஈஸ்வராஎன்பதுதான்.

ஆக, அவர் ஜீவன் உள்ள சக்தியாக, குருவாக நின்று,
விண்வெளியின் ஆற்றல்மிக்க சக்தியை வளர்த்து,
உயிர் எப்படி ஒளியாக நின்று இயங்குகின்றதோ, இதைப்போல, அவர் மனித உடலிலிருந்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி, என்றும் நிலையான ஒளி சரீரமாக, சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றாக ஒன்றி, இன்றும் நிலைத்திருக்கின்றார்.

அவர் உடலிலே, உணர்வை ஒளியாக மாற்றிய நன்நாள் தான்வைகுண்ட ஏகாதசிஎன்பது. ஏகாதசிஎன்பது என்றும் ஒளிமயமான நாள், துயரமற்ற நாள் என்பார்கள்.

ஆகவே, நமது குருநாதர் பெயரும்ஈஸ்வராஎன்று வருவதனால், அவருடைய நினைவையும்உயிருடன் ஒன்றி நினைத்து, நாம் எண்ணி ஏங்க வேண்டும்.

ஆக, “ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று எண்ணும் போதெல்லாம்,
வெறும் வார்த்தைகளாகச் சொல்வது பயனற்றது.

நாம் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும்போது, நம் உயிரைப் பரிபூரணமாகநினைவில் வைத்து, நமக்குள் ஈசனாக இருந்து இயங்குவதும், நம் உடலுக்குள் அனைத்து உணர்வுகளுக்கும் குருவாக இயக்கிடும் நிலை பெற்றது, என்ற நினைவு கொண்டுதான், நாம் எண்ணி ஏங்க வேண்டும்.

ஏனென்றால், பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகள், மனித உடலுக்குள் எப்படி இயங்குகின்றது என்பதைத்தான் எல்லா மகரிஷிகளும்  காட்டினார்கள்.

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வராஎன்று சொல்லும்போது,
சூரியன் விஷத்தால் தாக்கப்பட்டு,
அந்த விஷத்தின் தாக்குதல் தாங்காது,
சுழற்சியின் வேகம் அதிகமாகி,
அதனால் ஏற்படும் வெப்பத்தின் தணல்கள் இங்கே வளர்ந்து,
விஷத்தை அது வெளிப்படுத்தி,
இந்த பிரபஞ்சத்தை இயக்கும் நிலைகள் பெற்றது.

நம்மைத் தேள் கொட்டினால், துடிதுடித்து வேகத்தின் இயக்கம் நமக்குள் அதிகமாகின்றது,
இதைப் போன்றே, இந்த உயிரணுவிற்குள்
விஷத்தின் துடிப்பு அதிகமாகத் தூண்டும் நிலைகள் வரும்போதுதான்,
உயிரணுவாகத் தோன்றி,
அந்த இயக்கத்தின் ஆற்றல் கொண்டு,
விஷத்தின் தாக்குதல் தாங்காத நிலைகள் கொண்ட,
உயிரின் துடிப்பலைகள்
ஏற்படும் நிலைகளால் தான்
மற்றதை உருவாக்கும் நிலைகள் பெறுகின்றது.

ஆகவேதான், “ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவாஎன்று சொல்லுகின்றோம்.
உயிர் இவ்வாறு உயிராக இயங்குவதற்கு,
ஆதிசக்தியான விஷத்தின் உணர்வின் இயக்கச் சக்தியாக அது மாறி,
அது உயிரின் இயக்கமாக மாறுவதைத்தான்,
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா
என்று எண்ணுகிறோம்.

ஆகவே, அந்த இயக்கத்தின் தொடர்பாக, இந்த உயிரின் துடிப்பு அதிகமாகும்போது, சூரியனுக்கு எப்படி வெப்பங்கள் ஏற்படுகின்றதோ, அதைப்போல நம் உயிரின் நிலை கொண்டு, இந்த துடிப்பின் இயக்கத்தால் இயங்கும் நிலை கொண்டு, நம் உடலில் காந்தங்கள் பரவுகின்றன.

சூரியன், தனக்குள் வெப்ப காந்தங்களை உருவாக்கி, ஓர் பிரபஞ்சத்திற்குள் அனைத்துக் கோள்களையும் தனக்குள் அணைத்து, அதனின்று பெரும் சக்தியாக தனக்குள் ஒளியாக மாற்றி, தன் ஒளியின் சுடராக, அந்த காந்தத்தை உற்பத்தி செய்து, மற்றவைகளையும் இயக்கச் செய்கின்றது.

ஆக நமது உயிரும், இதைப்போன்ற நிலைகள் கொண்டு இயக்கப்பட்டு, உணர்வின் அலைகளை காந்த அலைகளாகப் பரப்பி, இந்த உடலுடன் உடலாக இயக்கச் செய்து, இந்த உணர்வின் எண்ண அலைகளாக இயக்குகின்றது. அவ்வாறு, இந்த நிலைகளில் நமக்குள் இருந்து, ஈசனாக இயக்கிக் கொண்டிருப்பது நமது உயிர்,
என்ற இந்த நிலையை, தெளிவுறத் தெரிந்து கொள்வதற்கு,
ஈசனானநமது குருநாதர்
அந்த இயக்கச் சக்தியை உணர்ந்த நிலையை உணர்த்தி,
அவர் உணர்த்திய நிலைகள் கொண்டுதான், எமக்குள் இயங்கும் உயிரை ஈசனாக மதித்து, குருநாதர் காட்டிய வழியில், யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

நமது குருநாதர், எவ்வழியில் எமக்கு வழி காட்டினாரோ, அவ்வழியை நீங்களும் பின் தொடரும் பொழுது, அந்த மெய்ஞானிகள் சென்ற வழிகளில், நாம் எல்லோரும் அங்கே செல்வதற்கு ஏதுவாகும்.

ஆக, அன்றைய ஞானிகள் காட்டிய ஒவ்வொரு உணர்வின் சக்தியும், அவர்கள் தன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்மிக்க சக்திகள், நமக்கு முன் ஒலி அலைகளாகப் படர்ந்து கொண்டுதான் உள்ளது.

யாம் இப்பொழுது பேசும் போது, இந்த உணர்வின் ஒலி அலைகளை சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து, ஆற்றல் மிக்க எண்ண அலைகளாக, அது படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று ரேடியோக்களிலோ, மற்ற டி.வி.க்களிலோ,
ஒலிபரப்புச் செய்யும் இந்த உணர்வின் சக்தியை, இயந்திரத்தில்
அதே அலைவரிசையில் வைத்து,
பட நிலைகளையும், ஒலி அலைகளையும்,
நாம் பார்க்கின்றோம், கேட்கின்றோம்.

இதைப் போன்றுதான், நாம் பேசும் சாதாரண பேச்சாக இருந்தாலும், சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. ஞானிகள், மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட இச்சக்திகள், அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய நிலைகளும், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, இன்றும் அது சுழன்று கொண்டிருகின்றது.

அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான், இந்த தியானம் என்ற நிலைகளில், நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு, இங்கே உணர்த்துகின்றோம்.

நமது உயிரின் ஆற்றலை, நமக்குள் இயக்கக்கூடிய சக்தியை, நாம் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மேக்னட்டில்,
காந்தத்தை அதிகமாகக் கூட்டச் செய்யும்போது,
அந்த சுழற்சியின்வேகத்தைக் கொண்டு,
கரண்ட் உற்பத்தியாகின்றது.

அதைப் போல, நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்டு, நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டி, அதன் வழி கொண்டு, நமக்குள் ஆற்றலின் சக்தியைப் பெருக்கச் செய்வதுதான், அந்த நிலை. ஆக, நாம் அதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும்.

குற்றம் செய்தோரை எண்ணும்போது, இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன், அந்தக் கோப உணர்ச்சிகள் எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது?
இதைப் போன்றுதான்,
நம் உயிரின் நினைவலைகளை,
அந்த மெய் ஒளி பெற வேண்டுமென்று,
ஆற்றலின் நினைவை நாம் கூட்டும்போதுதான்,
அந்த இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாகக் கூட்டி, நாம் எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

அந்த தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான், மகாஞானிகள் ஒவ்வொருவரும், அந்த இயற்கையின் உண்மையின் இயக்கச் சக்தியை எவ்வளவு தெளிவாக உணர்த்தி உள்ளார்களோ, அதையும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் உணர்கிறீர்களோ, இல்லையோஒன்றுமறியாத வாயில்லாத நாடாக்கள் (கேசட்) இப்பொழுது எப்படி பதிவாக்குகின்றதோ, இதைப் போல உங்களுக்குள் இருக்கக்கூடிய மேக்னட், நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது, உங்களுக்குள் ஈர்த்து, தனக்குள் பதிவு செய்கின்றது

புகைப் படங்கள் எடுக்கப்படும்போது,
கேமராஎப்படி அதனுடைய நிலைகளைப் பதிவாக்குகின்றதோ,
மைக்கின் முன் பேசுவதை, “மைக்ஈர்த்து பதிவாக்குகின்றதோ,
அதைப் போல, உங்கள் எண்ணங்கள் செம்மையாக, சாமி சொல்வதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், உங்கள் கண்ணின் நினைவலைகளில் ஏங்கி இருந்தாலே போதுமானது.
அதுவே பதிவாகி, மீண்டும் நினைவவலைகள் வரப்படும்போது, மெய்ஞானியின் அருள் ஒளியை, நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

ஆகவேசாமி என்னமோ சொல்கின்றார்”, ஏதோ சொல்கின்றார், சொல்கிற வரையிலும் பொருத்திருப்போம் என்று, நினைவுகளை வேறு பக்கம் திசை திருப்பாது, உங்கள் நினைவின் எண்ணங்களை, எவ்வளவு தூரம் பதிவு செய்கின்றீர்களோ, அந்தப் பதிவின் ஆற்றல் மிக்க சக்தியை, மெய்ஞானிகளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான், உங்கள் உயிரின் இயக்கத்தின் ஓட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பதை, தனக்குத்தானே தனக்குள் இயங்கும் ஆற்றலை, நமக்குள் இருப்பதை நான் அறிந்து கொள்வேன் என்றால், பிறரின் நிலைகளை அறிந்து கொள்வது மிகக் கடினம்.

நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் இயக்குவதை, நாம் கட்டுப்படுத்தாமலோ, அல்லது, நமக்குள் எண்ணிய எண்ணங்களை, அறிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவோ, நாம் இருந்தோம் என்றால், பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த
ஒரு உயிர், ஒரு உடலைப் பெற்றபின்,
பரிணாம வளர்ச்சி பெற்ற, மற்ற மிருக உணர்வுக்கும்,
நமக்கும் வித்தியாசம் இல்லாமலே சென்று கொண்டிருக்கும்.

ஆகவே மனித உடல் பெற்றபின், மெய்யுணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்து, அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்க இச்சக்தியை, ஒவ்வொன்றும் நாம் எந்த அளவுக்கு, கூர்மையாகக் கவனிக்கின்றோமோ, அந்த மெய் உணர்வின் தன்மையை, நாம் எடுத்துக் கொண்ட சுவாசமும், எடுத்துக் கொண்ட எண்ணத்தின் உணர்வும், நமக்குள் அவதார புருஷனாக மாறுகின்றது.

(பக்கம் 16-20)
சண்டை போடுபவர்களை வேடிக்கை பார்த்து, அவர்களுடைய குறைகளை, நீங்கள் உங்களுக்குள் உணர்வாக ஏற்றுக் கொள்கின்றீர்கள். அதைப்போல, யாம் சொல்லும் முறைப்படி, இந்த வாழ்க்கையில் ஏற்படும் குறைகள் நீங்க வேண்டும், மெய் ஒளி பெற வேண்டும் என்ற கூர்மையான எண்ணங்களைச் செலுத்தி, அந்த உணர்வின் ஆற்றல்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், நீங்கள் ஏங்கி இருக்க வேண்டும்.

யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மைகளை,
நீங்கள் அந்த ஏக்க உணர்வுடன்,
உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு,
நினைவைப் பதியச் செய்ய வேண்டும்.

அப்படி பதியச் செய்தால், இந்த இயற்கையின் சக்தியினுடைய நிலைகள், நம்மை எப்படி மனிதனாக வளர்த்ததோ. இதைப் போல, மனிதனாக வளர்ந்து, உணர்வை ஒளியாக மாற்றி, விண்சென்ற அந்த மெய் ஒளியின் தொடரை, நாம் தொடர முடியும்.
ஆகவே, இதை நீங்கள் நினைவில் வைத்து, யாம் சொல்லும் நிலைகள், “ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று சொல்வது, “விளையாட்டிற்கு அல்ல”, “சொல்லின் அழகிற்கு அல்ல”.

அவ்வாறு எண்ணாதபடி, நமக்குள் ஈசனாக நின்று, குருவாக நின்று, புழுவிலிருந்து மனிதனாக நாம் தோன்றும் வரையிலும், ஒவ்வொரு எண்ணச் சத்தும், தாவர இனத்தின் மணங்களையே நமக்குள் எண்ணங்களாக மாற்றி, அந்த உணர்வின் சத்தை நமது தசையாக மாற்றி, அந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பைக் கொடுத்தது, நமது உயிர்தான்.

அப்படி நமக்குள் சிருஷ்டித்து, அவதார புருஷனாக மாற்றிய, மாறிய இந்த உயிரின் நிலைகளில், மனிதனானபின், உயிரை நாம்என்று அறிந்து கொள்ள முடிகின்றது.

அதை அறிந்துணரும் சக்தி பெற்ற நாம், இந்த உடலிலே எதைச் செயல்படுத்த வேண்டும் என்று, நமது குருநாதர் எமக்கு உபதேசித்து அருளினார்.

இன்றைய விஞ்ஞான உலகில், மனிதனுடைய சிந்தனைகள் சீர்குலைந்து, சிந்திக்கும் திறனற்று, மிகவும் கொடூர விஷத் தன்மைகள்  இவ்வுலகில் படர்ந்துள்ளது. மனிதனுடைய வாழ்க்கையில், இன்று காற்று மண்டலமே நச்சுத் தன்மையின் நிலைகள் அடைந்துள்ளது.

சாக்கடைக்குள்வராகன்எப்படி நாற்றத்தை வெறுத்து, அதற்குள் நல்ல பருப்பை நுகர்ந்து, அதனுடைய பசியைத் தீர்க்க எண்ணத்தைச் செலுத்தியதோ, அதைப் போன்று, இந்த நிலையில், நாம் காற்றில் மறைந்துள்ள மகாஞானிகளின் உணர்வை நாம் நுகர வேண்டும்.

ஏனென்றால், அந்த மகாஞானிகள் தனக்குள் வளர்த்து எடுத்துஉணர்வின் சக்தியை வெளிப்படுத்திய, அருள்ஞான சக்தியான அருள்ஞான வித்துக்கள் அனைத்தும், நமக்கு முன் இந்தக் காற்றில் படர்ந்திருக்கின்றது.

அதை நுகர்ந்து எடுத்து, அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் பெற்று, அவர்கள் எப்படி உணர்வை ஒளியாக மாற்றி, விண்ணின் நிலைகளில், ஒளி சரீரமாகப் பெற்று, என்றும் நிலையான நிலைகளில் இருக்கின்றனரோ, அந்த நிலையை அடையச் செய்வதும், அந்த நிலைக்கு நாம் எண்ணியதைக் கொடுத்து, அதைப் படைப்பதும் நமது உயிரே”.

ஆக, ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா என்ற இந்த உணர்வை,
உணர்ச்சிப் பூர்வமாக எண்ணத்தில் எண்ணி,
மெய் ஒளியின் தன்மை பெற்ற நமது உயிரின் நிலைகளில்,
இதை உணர்த்திச் சென்ற
மகா மெய் ஞானியருடைய உணர்வுடன் ஒன்றச் செய்து,
அந்த உணர்வின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும்.

அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான், “ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவாஎன்பது, வெறும் வாயிலே அழகுக்காகச் சொல்லாமால், யாம் பாடும் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி, அந்த ஏக்கத்தின் நிலைகளில் பதிவு செய்கின்றோம்.

என் இசையில் நீ இசைப்பாய்”. அதாவது யாம் சொல்லும் இந்த உணர்வின் நிலைகள் அனைத்தும், எனக்குள் உயிராக இருந்து இசைப்பவனும் அவனே. ஆகையினாலேஎன் இசையில் நீ இசைப்பாய்”.

என் நினைவில் நீ வருவாய்
ஆக, என் நினைவில் நீ வருவாய் என்பது
ஈஸ்வராஎன்று நமது உயிர்,
நான் எதை நினைத்தாலும், எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய உயிரின் நினைவுகள்அடிக்கடி எனக்கு வரவேண்டும்.

எனக்குள் ஈசனாக நின்று, உற்பத்தி செய்யக்கூடிய இந்த உணர்வின் சக்தி, எனக்குள் நிலையாக இருந்து வரவேண்டும்.

நான் அறியாத நிலைகளில் தீமையைப் பார்த்தாலும், ஈசனுக்கு அந்த தீய உணர்வின் தன்மை பட்டு, அவனுக்கு எரிச்சலை ஊட்டி, அவன் தாங்காது நிற்கின்றான்.

ஆகவே, அந்த நினைவு கொண்டு, தீயதை நான் பார்த்தாலும்,
அந்த உணர்வின் சக்தி, ஈசனுக்கு அது படக்கூடாது என்ற நிலையில்
மெய் ஒளியை நான் பெற வேண்டும்”,
மகரிஷிகளின் அருள் ஒளியை நான் பெற வேண்டும்
என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து
நம் உயிருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

ஏனென்றால், நாம் தீயதை எண்ணி, நமக்குள் இருக்கும் ஈசனுக்கும், அந்தத் தீய உணர்வுகள் படும்போதுதான், நமது உடலிலேயும் அந்தத் தொல்லைகள் வருகின்றது.

ஆகையினாலேதான், “என் இசையில் நீ இசைப்பாய், என் நினைவில் நீ வருவாய், ஈஸ்வரா குருதேவா என்ற நிலைகளை, ஒவ்வொரு நிமிடமும் நாம் எண்ணி ஏங்கவேண்டும்.

நான் இல்லை, நீ இல்லா இவ்வுலகில்”, இந்த உடலில் இந்த உயிர் இல்லை என்றால், இந்த உலகத்திற்குள் எதுவுமே இல்லை.
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில்
எல்லா நினைவையும் பெற்றிடவே,
எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா”.

அந்த மெய்ஞானிகள் காட்டிய, பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை நான் பெறுவதற்கு, அருள் கூர்வாய் ஈஸ்வரா என்று, என் உயிரை, நான் கேட்டு வேண்டுகிறேன்.

எமக்கு நமது குருநாதர் காட்டிய அவ்வழி அதுவே, அதனின் வழியில், யாம் உங்களுக்கும் காட்டுகின்றோம். இதையே நீங்கள் எண்ணி,
உங்களை ஆண்டு கொண்டிருக்கும்,
உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
அந்த ஈசனை மறவாது, அவனிடம் வேண்டுங்கள்.
அதை யாம் வேண்டுவது போல், நீங்களும் வேண்டுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, உங்கள் உணர்வின் எண்ணங்களை அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கின்றோம். அதே போன்று, முதன் முதலில் ஆற்றல் மிக்க இந்த உடலின் சக்தியை, உணர்வினை ஒளியாக மாற்றி, துருவ நட்சத்திரமாகச் சென்றடைந்துள்ளார் துருவ மகரிஷி.

அதிலிருந்து வெளிப்படும், துருவ மகரிஷிகளின் ஆற்றல்மிக்க எண்ண அலைகளும், நமக்கு முன் படர்ந்திருப்பதை, அதைப் பருகும் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான், யாம் இதை உபதேசிக்கின்றோம்.
நாம் எப்படி ஒரு தேரை இழுத்து,
எல்லை சேர வேண்டும் என்று
ஒன்று சேர்ந்து அந்த எண்ணத்தைச் செலுத்தி
அந்தத் தேரை இழுத்து எல்லை சேர்க்கின்றோம்.

அதைப் போன்று, மனிதனான நாம் அனைவரும்,
நமது குருநாதர் கொடுத்த
ஆற்றல்மிக்க சக்தியின் எண்ண அலைகளை,
மெய்ஞானிகள் பெற்ற அந்த உணர்வின் சக்திகளை,
யாம் உங்களுக்குள் உபதேசித்து,
இந்த உணர்வைத் தூண்டச் செய்து,
உங்கள் உயிருடன் ஒன்றச் செய்து,
இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்து,
அந்த உணர்வுகொண்டுதான்,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று,
எல்லோருடைய எண்ணங்களையும், யாம் குவிக்கப்படும்போது,
அதை நமக்கு முன் சுழலச் செய்கின்றோம்.

ஆக, இதைப் பெறவேண்டும் என்று ஏங்கி எண்ணும் அனைவருக்கும், அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள், அப்படி சுழன்று வருவதை, உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான், இதை யாம் உபதேசிக்கின்றோம். எமது அருளாசிகள்.
(பக்கம் 25-28)
இந்த மெய்ஞானியர்களுடைய அருள் சக்தியை நமக்குள் பதிவு செய்து கொள்வதற்கு, யாம் உபதேசித்து, அந்த எண்ண அலைகளை ஓங்கச் செய்து, நாம் அனைவரும் ஒன்று திரண்டு, சிறுதுளி பெருவெள்ளமாக ஆக்கும் பொழுது, குப்பைகளையும் அசுத்தத்தையும் தள்ளி, அதைத் தன்னுடைய ஆற்றலுக்குக் கீழ், அசுத்தங்களை அப்புறப்படுத்துகின்றது.

இதைப் போன்று, நாம் எழுப்பும் இந்த அருள் உணர்வுகள் அனைத்தும், ஒருங்கிணைந்த உணர்வாக இந்த சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, இந்த உணர்வின் ஒளி அலைகள், அனைவருடைய வாக்குகளும் இங்கே படருகின்றது.

இப்பொழுது, சாதாரணமாக ஒரு மனிதன் திட்டினால் அதைக் கேட்டபின், எவ்வாறு அதையே திரும்ப எண்ணத்தில் எண்ணும் பொழுது, அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து, தீய உணர்வுகளை உண்டாக்குகின்றது.

இதைப் போன்றே, தீயவிளைவுகளை நீக்க, ஞானிகள் எவ்வாறு அருள் வாக்குகளை வெளியிட்டார்களோ, அந்த ஞானிகளின் எண்ண அலைகள் கொண்டு, நாம் இங்கே கூடியுள்ள அனைவரும், ஆயிரக் கணக்கான அன்பர்களும், இங்கு தியானமிருந்து, இங்கே தியானத்தில் அமர்ந்துள்ள அனைவருக்கும், இந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டுமென்றும், தனக்கென்று இல்லாமல், அனைவருக்கும், கிடைக்க வேண்டுமென்று,
ஒருங்கிணைந்த உணர்வின் அலைகளை எழுப்பப்படும் பொழுது,
நமது செவியின் புலனுக்குள் ஊடுருவி
ஆழமாகப் பதிந்து,
அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அப்படி உணர்ச்சிகளைத் தூண்டி, நமக்கு முன் படர்ந்திருக்கக் கூடிய மகாஞானிகளின் உணர்வலைகளை எல்லோர் உடலிலும் பதியச் செய்து, இந்த ஒளியின் தன்மை கொண்டு, எல்லோருடைய உடலில் உள்ள துன்ப அலைகளை நீக்கி, மெய் உணர்வின் தன்மைகள் உங்களில் வளரச் செய்வதற்குதான், எமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, இதை உபதேசிக்கின்றோம்.

உபதேசித்த இந்த உணர்வின் தன்மையை நீங்கள் அனைவரும் தியானிக்கும் பொழுது, தியானத்திற்குப் பின், உங்கள் சொல்லின் தன்மைகள் கேட்போரின் உள்ளங்களில் ஊடுருவி, அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகள் அவர்கள் உள்ளத்திலே பதிந்து, இந்த உணர்வின் சத்தை அங்கே வடித்துக் கொடுக்கின்றோம்”.

நாம் எப்படி ஒரு குழம்பை பலவிதமான காரம், புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, உப்பு போன்றவற்றை வைத்து, சுவைமிக்கதாக நாம் சமைத்துச் சாப்பிடுகின்றோமோ, இதைப் போல நம் வாழ்க்கையில் ஆயிரம் பேரும், ஆயிரம் விதமான கஷ்டங்களை நாம் அனுபவித்துத்தான் இங்கே வந்துள்ளோம்.

ஆக, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், என்ற ஏக்க உணர்வுடன் வரும் பொழுது, அதே உணர்வுகளை எமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, நீங்கள் எதை எண்ணி ஏங்கி வந்தீர்களோ, அந்த ஏக்கத்தின் நிலைகளில், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்களும் பெற்று, பெற்ற அந்த உணர்வின் சக்திகள், இந்தக் காற்று மண்டலத்தில் படருகின்றது.

அப்படி, இந்த உணர்வின் எல்லை கடந்த சக்திகளை
இங்கே காற்றிலே படரச் செய்வதும்,
செவிகளில் கேட்டுக் கொண்டே
இந்த ஒலிகள் உணர்வுகளைத் தூண்டச் செய்து,
அதே உணர்வை உங்களுக்குள் சுவாசிக்கச் செய்து,
இந்த ஆற்றல்மிக்க அருள் ஞானிகளின் சக்திகளை,
உங்களுக்குள் பதியச் செய்வதற்கே, இதைச் செய்கின்றோம்.

ஆக, குருவழியில் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி, அவர்கள் இந்த உடலிலிருந்து, எப்படி ஒளி நிலைகள் பெற்றார்களோ, நமது குருநாதர் அதைக் கண்டுணர்ந்த அந்த உணர்வின் சக்திகளை, எமக்கு உபதேசித்ததை உங்களுக்கு உபதேசிப்பது மட்டுமல்லாது, இதைச் செயலாக்கத்திற்கும்கொண்டுவரச் செய்கின்றோம்.

செயலாக்கும் அந்த நிலையை, நீங்கள் அனைவரும் பெற்று,
உங்களை அறியாது வரும் துன்பங்களை
உங்கள் அறியாமலேயே அதை நீக்கிக் கொள்ளும்,
அதைப் போக்கிக் கொள்ளும் அந்த நிலையைப்
பெறச் செய்வதற்காகத்தான் இதைச் செய்கின்றோம்.
எமது அருளாசிகள்
(பக்கம் 30-34)
இன்று நமது வாழ்க்கையில், நல்லதை எண்ணுகின்றோம். ஆனால், பிறர் செய்யும் குறை உணர்வுகளை, நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அவர் குறை கூறும்போது, அவர் எதை விதைத்துக் கொண்டாரோ, அந்த எண்ணத்தை நாம் நமக்குள் எண்ணத்தில் எடுக்கும்போது, இது வித்தாக வளர்கின்றது.

அதற்கு நாம் இந்த எண்ணத்தைக் கொண்டு, நீரை ஊற்றி அதை வளர்க்கப்படும் பொழுது, நமக்குள் நோயாகவும், அவர்கள் பேசிய, ஏசிய அந்த உணர்வுகளை நாமும் பேசும் நிலையும் ஏற்படுகின்றது.

அதே சமயத்தில், நம்மை அறியாமலேயே, நம் குழந்தைகளைச் சாடும் நிலையும், நம் மூச்சும், பேச்சும் நம் தொழிலிலே நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையும், நம் சொல்லின் நிலைகளில் வெறுப்பு ஏற்படும் தன்மைகள் வருகின்றது.

இதையெல்லாம் போக்கவல்ல சக்தியாகத்தான், உங்களுக்குள் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, துருவ நட்சத்திரமும், அதைப் பின்பற்றியவர்கள், தமது வாழ்க்கையில் உணர்வை ஒளியாக மாற்றி, விண் சென்று சப்தரிஷி மண்டலங்களிலிருந்து, இங்கு படர்ந்து கொண்டிருக்கும் சக்தியை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

அதை எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்று,
எல்லோருடைய உள்ளங்களையும் தட்டி எழுப்பி,
இந்த உணர்வின் ஒளி அலைகளை,
அதன் ஓசைகளை எழுப்பி, ஒவ்வொருவருடைய நிலைகளில்
செவிப்புலன் கொண்டு உணர்ச்சியைத் தூண்டி,
அச்சக்தியை பெறச் செய்வதற்குத்தான்
இந்நேரம் வரையிலும் நாம் செய்த தியானம்.

ஆகவே, இதனுடைய நிலைகளைப் பெற்று, நமது குருநாதர், “வைகுண்ட ஏகாதசிஅன்று, இந்த உடலிலிருந்து உணர்வுகளை ஒளியாக மாற்றிகல்கி யுகம்என்ற நிலையை அடைந்தார். கல்கி யுகம் என்றால், ஒளியின் தன்மை பெற்று, ஒளியான நிலைகள் பெறுவது.

மனிதனுடைய நிலைகளில் பத்தாவது நிலையேகல்கி யுகம்”, கல்கி யுகம் சென்றடைந்த நிலையை, நாம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, அடைய வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி என்பது, என்றும் ஏகும் நிலைகள் கொண்டு,
என்றும் துன்பமற்ற நாள்”,
தூங்காமல் தூங்கிய நாள் என்பார்கள்.

இன்று சூரியன் எப்படி ஒளிச்சுடராக இருந்து கொண்டு இருக்கின்றதோ, சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு மின்னிக் கொண்டிருக்கின்றதோ, அதை போல, நம் உடலின் தன்மையை இந்த உணர்வை ஒளியாக மாற்றி, என்றும் மின்னிக் கொண்டு என்றும் நிலையான நிலைகளை, அதை நாம் எல்லோரும், அந்த ஒளியின் சரீரம் பெற முடியும்.

குருநாதர் எப்படிஆத்மசுத்திசெய்துகொண்டு ஒவ்வொரு துன்பத்தையும் துடைக்க வேண்டும் என்று சொன்னாரோ, அதைத்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றோம்.
ஆகையினாலே, இங்கு புதிதாக வந்தவர்களும் சரி, சாமி என்னமோ சொல்கின்றார் என்ற எண்ணங்கள் இல்லாதபடி, சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெறவேண்டும்
என்ற எண்ணத்தை எண்ணினாலே,
அந்த நிமிடத்தில் அச்சக்தி ஊடுருவி
உங்களுக்குள் தீமையை நீக்கி,
நன்மையைப் பெறக்கூடிய தகுதி, உங்கள் எண்ணத்திற்குள் பெறச் செய்வதற்கே, இந்நேரம் வரையிலும் நாம் இந்தக் குரலை எழுப்பி, அந்த மகரிஷிகளின் உயர்ந்த சக்தியை, உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இனி எண்ணத்தால் சக்தி பெறுவது, உங்களிடம்தான் உள்ளது. ஒவ்வொரு நாளும், அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை, யாம் உங்களுக்குள் உரமேற்றிக் கொண்டே இருக்கின்றோம்.
அப்படி உரமேற்றப்பட்டு, அதன் வழிகளிலே
மெய்ஞானியைக் காணும் சக்தியையும்,
மெய்ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டுமென்றும்,
அதைத் திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பதும்,
உங்களுக்குள் பதிவின் நிலைகளை ஏற்படுத்துவதற்ககுத்தான்.

இந்தப் பதிவுகளின் மூலம், நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம், அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை, நீங்கள் எளிதில் பெற முடியும். அதைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய தீமைகளிலிருந்தும் விடுபடமுடியும். எமது அருளாசிகள்.
(பக்கம் 36-39)
தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள், கேட்டுணர்ந்தவர்கள், இந்த ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் செயல்பட வேண்டும். எப்பொழுது நாம் வீட்டைவிட்டு, வெளியில் சென்றாலும், கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக, நம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது, நமது உடல் சுருங்குகின்றது. நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு, அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது, அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று, அது உமிழ்நீராக மாறி, நம் ஆகாரத்துடன் கலந்து, நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ, அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து, நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள், கலந்துவிடுகின்றது.

அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும்கூட, அவருடைய துன்பமான உணர்வுகள், உமிழ்நீராக வடிக்கப்பட்டு, நம் ஆகாரத்துடன் கலந்து, இரத்தத்துடன் கலந்துவிடுகின்றது.

அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது, அதை நமது நுரையீரல், சுவாசப்பை எடுக்கப்படும் பொழுது, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது,
அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ,
அந்த வேதனையான உணர்ச்சிகள்,
நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.

அப்பொழுது, அதைப்போல அந்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தப் போகும்போது, கிட்னி சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல், அனுப்பும்போது, நம் உடல் முழுவதற்கும் இரத்தங்கள் செல்லும் பொழுது, நமது உடலுக்குள் அது வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது, நாம் எந்த நல்ல குணங்களைக் கொண்டு எடுத்தோமோ, அந்த நல்ல குணத்துடன், இது இரண்டறக் கலந்துவிடுகின்றது.

உதாரணமாக, ஒரு தொட்டியில் நீரை ஊற்றி, ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு, அந்த நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம், ஒரு செம்புக் கட்டியுடன், எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து, அந்த நீருக்குள் போட்டுவிடுவார்கள்.

செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டி,
தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும்பொழுது,
தங்கத்திலிருக்கக்கூடிய தங்க சக்திகள் கரைந்து, அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக், அந்தத் தங்கத்தைக் கவர்ந்து, இந்த செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும். ஆக உள்ளே இருக்கக்கூடிய செம்பு, கறுப்பதை விடுத்து, இந்தத் தங்கத்தின் முலாமாக ஆகி, அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்,
தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து,
செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்து,
செம்பை ஒரு நீருக்குள் போட்டால் என்ன செய்யும்? செம்பின் சக்தி தங்கத்திற்குள் முலாம் பூசும்போது, அடிக்கடி செம்பு கருக்கின்றதோ, அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.
உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு, நீங்கள் ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது, அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து, அது உடலுக்குள் செல்லும்போது, நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ, அந்த நல்ல குணத்தில், இது முலாம் பூசிவிடும்.

ஏனென்றால், நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும், அவர்படும் துன்பத்தின்மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி,
உனக்கு எப்படி வந்ததுஎன்று கேட்கப்படும்போது,
அந்த நல்ல உணர்வுகளுடன்,
அவரிடம் இருந்த நோயான உணர்வுகள், முலாம் பூசிவிடும்.

நமக்குள் நல்ல உணர்வான நல்ல குணங்கள், நோயற்ற நிலையும், தெளிவான நிலைகளும், உடலில் தெம்பாக இருந்தது. ஏனென்றால், தங்கம் எப்படி பளப்பளப்பாக இருந்ததோ, அதைப் போல நமது தெளிவான எண்ணங்களினுடைய நிலைகளில், அவருடைய குணங்கள் கலக்கப்படும் பொழுது, நம்மை அறியாமலேயே, இப்படிச் சோர்வின் தன்மை அடைந்துவிடுகின்றோம்.

இது நாளாக நாளாக, நமக்குள் நோயாக வந்து சேர்ந்துவிடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. ஆக, நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம். அதைத் துடைக்க வேண்டுமல்லவா?

அதைத் துடைப்பதற்குத்தான், இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின்,
உடனேஈஸ்வராஎன்று நம் உயிரை எண்ணி,
துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து, நம் உடலுக்குள் செலுத்தி, நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி தியானித்து, அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

துன்பப்பட்டவர்கள், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி, அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து, அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

(பக்கம் 39-44)
செம்பும் வெள்ளியும் கலந்து, ஒரு நகையைப் பற்ற வைக்கின்றோம். நெருப்பிலே காட்டும்போது, தங்கம் இளகுவதற்கு நேரமாகும். ஆனால்,
செம்பையும் வெள்ளியையும் கலந்து,
கொஞ்சம் பொடியாக வைத்தபின்,
அது சீக்கிரம் உருகிவிடுகின்றது. அதே சமயம்,
தங்கத்துடன் ஒட்டிக்கொள்கின்றது.

இதைப் போலத்தான், ஒருவர் துன்பமான நிலையைச் சொல்லுபோது, அது உடனடியாக நமக்குள் இயக்கச் சக்தியாகி, அந்த செம்பான நிலைகள் உருகுவது போல, நமக்குள் அவருடைய கஷ்டமான நிலைகள், சீக்கிரம் வந்து நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றது.

தங்க நகை செய்யும்போது, ஒட்டவைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் நகை ஆகின்றது. இதைப்போல, ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும்போது, அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது, நாம் கேட்டுணர்ந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

அவருக்கு வாழ்க்கையின் நிலைகளில், நாம் நன்மை செய்தால்தான், மனிதனின் நிலையும் ஆகும். நன்மையினுடைய நிலைகளை நாம் செய்தாலும், இந்த வாழ்க்கையில்,
இன்று ஒருவருக்கு நாம் உதவி செய்தால்தான்,
நாளைக்கு நமக்கு ஒருவர் உதவி செய்வார்.
இன்று உதவி இல்லை என்று சொன்னால்,
அவர் நாளைக்கு, நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்.

அவருடைய துன்பத்தை, நாம் கேட்டறியவில்லை என்றால், நம்முடைய துன்பத்தையும் அவர் கேட்டறியமாட்டார். கேட்டறிந்தாலும் எப்படி நகை செய்யும்போது, செம்பும், வெள்ளியும் வைத்து நாம் பற்றவைக்கின்றோமோ, அதைப்போல வாழ்க்கையில் இந்தக் குறைகள் நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால், இந்த வாழ்க்கை என்ற நிலைகளில் நாம் ஓட்டினாலும், அடுத்த நகை செய்யும்போது, தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி, அதைச் சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நகையைச் செய்கின்றனர்.

அதைப் போல, ஒரு நண்பன் அவருடைய கஷ்டத்தைச் சொல்லும்போது, நாம் கேட்டறியும் போது, அதைக் கேட்டுணர்ந்து அவருக்கு உதவி செய்து விடுகின்றோம்.

தங்கத்துடன், செம்பும் வெள்ளியும் சேர்ந்து கொண்டபின், எல்லாமே ஒன்றாகிவிடுகிறது. அடிக்கடி இதே நகையை, அழித்து அழித்துச் செய்யும்போது, செம்பும் வெள்ளியும் அடிக்கடி சேர்ந்தால் என்னாகும்? அந்த செம்பின் தன்மை கூடி, அந்த தங்கத்தின் தன்மை குறைந்துவிடும்.

இதைப்போல, நாம் அடிக்கடி கவலையையும், சஞ்சலத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தால், நமக்குள் நல்ல குணம் எல்லாம் குறைந்து, நமக்குள் அது நோயாக விளைந்து, நமக்குள் நல்ல குணமெல்லாம் கெட்டு விடுகின்றது.

அப்படி கெடுவதோடு மட்டுமல்லாதபடி, நல்ல உடலும் கெட்டுவிடுகின்றது. நமது நல்ல சொல்லும் கெட்டு விடுகின்றது. நமது சொல்லும்கூட, நமக்கு வெறுப்பாகத் தோன்றும்.

கஷ்டமாக இருப்பவர்கள் பிறரிடம் போய்ச் சொல்லும்போது, அந்த வேதனை கொண்டே சொல்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் நச்சு, நச்சென்றேசொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சொல்ல வந்தாலே, நாம் ஓடுவோம். ஆனால், அந்த சங்கடமான உணர்வுகள் நோயாகவும் மாறிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை கேட்டுணர்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும், பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அதைப் பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் பொழுது, அடிக்கடி நம்மையறியாமலேயே, வேதனையும், துயரமும், பயமும், உங்களுக்குள் வந்து, சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது? ஏதாவது வழி இருக்கிறதா?

அதற்குத்தான், அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை, உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்தது. இந்தக் கூட்டுத் தியானத்தில், எல்லோருடைய அருள் வாக்கும், யாம் மட்டுமல்ல, உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான், அந்த வலு கூடுகின்றது, என்று நமது குருநாதர் சொன்னார்.

உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தி கொடுத்தாலும், ஒரு விதையைக் கொண்டு போய்ப்போட்டு, அந்த விதை பல விதைகளாக விளைந்தால் தான், சாப்பாட்டிற்கு உதவும். இல்லையென்றால், “ஒரு விதை ஒன்றுக்குமே உதவாதுடாஎன்று, நமது குருநாதர் எம்மிடம் சொன்னார்.

ஒரு நெல்லை வைத்துக் கொண்டு, பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ? முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளைய வைத்து, அது பல நெல்லாக ஆன பின் தான், சாப்பிட முடியும்.

அதே மாதிரிதான், உங்ககளிடம் உள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம்.
நன்றாக இருக்கின்றேன்.
நன்றாக இருக்கின்றேன்,
நன்றாக இருக்கின்றேன்.
என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவ்வாறான சொல் வரவேண்டும்.

உங்கள் பேச்சையும், மூச்சையும் பார்த்து, மகிழ்ச்சி அடைகின்றவர்களுக்கெல்லாம் நல்லது விளைய வேண்டும். அப்படித்தான், நல்லதை விளைய வைக்க முடியும். இதைத்தான் எமது குருநாதர் சொன்னார்.

ஆக, அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தை உனக்குள் வளர்த்து, நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து, அந்த வித்தினை நீ எப்படி வளர்க்க வேண்டும் என்று சொன்னார். அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
(பக்கம் 47-50)
நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக்கொண்டு, ‘’புலி வருது, புலி வருது’’ என்று சொன்னால்,
துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்?
துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்,
சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.
‘’ஐய்யய்யோ!  புலி வருது, புலி வருது!’’  என்று, துப்பாக்கியை வைத்துக் கொண்டு, சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்? அது நம்மைத் தாக்கிவிடும்.

இதைப் போலத்தான், ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும், ‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்’’.

ஆக உதவி செய்தாலும், அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள், உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி ‘’ஆத்மசுத்தி’’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா’’ என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை  மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்டபின், கண்ணைத் திறந்து, துன்பப்பட்டவர்களிடம், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால், உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லிவிட்டு, அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது கஷ்டம், உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கியபின், அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ, அதே போல அடுத்த நிமிடமே, கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு, நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.
     
நமக்குள் தீயது சேராது தடுக்கும், இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு, நமக்குள் தியானமிருக்க வேண்டும்.
‘’தியானம்’’ என்பது எது?  
நமக்குள் கெட்டதைச் சேரவிடாது,
வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும்.
இதுதான் தியானம் என்பது.
     
பக்தியில் என்ன செய்கின்றோம்? நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால், தியானம் என்பது, நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.
     
பக்தி என்பது நல்லதை நினைப்பது.
தியானம் என்பது, உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.  இந்த சக்தி இல்லையென்றால், செயல்படுத்தமுடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும், அந்த ஞானிகளின் அருள் சக்தியை, இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்து, வாக்கின் நிலையாக,  ஆத்ம சுத்தியை கடும் ஆயுதமாக, யாம் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

நீங்கள்  எப்பொழுதெல்லாம், கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ, நுகர்கின்றீர்களோ, கேட்கின்றீர்களோ, அவைகளையெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான், இந்த ‘’ஆத்மசுத்தி’’ என்ற நிலைகள்.
                          (பக்கம் 54-64)  
நமது குருநாதரை யாம் சந்தித்தது, எதிர்பாராத சந்தர்ப்பம், எவ்வளவோ நாட்கள், நமது குருநாதரை, அவர் யார் என்றே தெரியாது. இருந்தாலும், அடிக்கடி பல சந்தர்ப்பங்களில் என்னைச் சந்தித்துள்ளார்.
அவரை நான் பித்தன் என்றேதான் எண்ணியிருந்தேன். எதைச் சொன்னாலும், அவரிடம் வெறுப்பு கொண்டு, ஒதுங்கிச் செல்வதுதான். எனது வழக்கமாக இருந்தது.

சந்தர்ப்பவசத்தால் என் மனைவி நோய்வாய்ப்பட்டு, அதனால் அவர் வைத்தியத்திலேயும், மீளமுடியாத நிலை ஏற்பட்ட, இந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியிலேதான், எமது குருநாதர் என்னை அணுகினார். அப்படி ரொம்பவும் நெருக்கமாக வரும்போது, அவரைப் பித்தன் என்ற நிலைகளில் நான் ஒதுங்கிச் சென்றேன்

அப்படி ஒதுங்கிச் சென்றாலும்கூட, அதுசமயம் எனது மனைவி, இன்றோ, நாளையோ என்ற நிலைகொண்டு இருக்கின்றது, என் மனைவியின் தகப்பானாருக்கு, ஒரே பெண் குழந்தையாக இருந்ததால், உடல் நிலை மோசமாக இருக்கின்றது என்ற ஏக்கத்தில், அவருடைய உடலைவிட்டு ஜீவன் பிரிந்தது. மாமனாரின் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்தபின், குருநாதர் என்னை அணுகி, ரொம்பவும் அசிங்கமான பேச்சுக்களைப் பேசி, நீடீகுடி என்று மிகவும் நிர்பந்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

நான் அதைக் குடிக்க மறுத்தவுடன், அவருடைய பேச்சும், ஏச்சும் மிகவும் கடினமாகவும், செவி கொண்டு கேட்க முடியாத வார்த்தைகள் கொண்டே என்னை ஏசிப் பேசினார், இருந்தாலும், அவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு முயற்சி எடுத்தேன் முடியவில்லை,

நீடீகுடித்தால்தான், நீ இதைவிட்டு நகர முடியும் என்று சொன்னார்.

அதன் அடிப்படையில்தான், நான்டீகடைக்குச் சென்றுடீகுடித்துவிட்டால் அவர் விலகிச் சென்று விடுவார், இந்த எண்ணத்தில் அவர் கொடுத்தடீயை வாங்கிக் குடித்தேன்.

இன்று நீடீகுடித்தாலும், உன்னை நான் விடமாட்டேன் என்று, மிகவும் கடினமான நிலைகளில் மீண்டும் பேசத் தொடங்கினார்.

பின்டீகுடித்தபின், அவரை எப்படியும் ஊரை விட்டு, எல்லை கடந்து அனுப்பிவிட்டு வந்துவிடலாம் என்று எண்ணி இருந்தேன். ஏனென்றால், மாமனார் அவர் இறந்த காலத்தில் எல்லோரும் வந்து குழுமி இருந்தார்கள்.

இதை அவர்களும் பார்த்து, என்னை ஏசிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, இவரை எப்படியும் கடத்தி ஊருக்கு அப்பால் கொண்டுபோய், விட்டுவிட்டு வரலாம் என்று, நான் அழைத்துச் சென்றேன்.

அங்கே (பழனியில்) பழனிக்கு பக்கம், பெரிய நாயகி அம்மன் கோவில் ஒன்று உண்டு. அதன் கீழ் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த தெப்பக்குளத்திற்குள் என்னை அழைத்துச் சென்றார்.

நான் விலகிச் செல்லலாம் என்று எண்ணும்போது, அந்த தெப்பக்குளத்திற்குள் என்னை அழைத்துச் சென்று, அப்பொழுது என் வாழ்க்கைச் சரித்திரங்கள் அனைத்தையும் சொல்லி, நான் பிறந்ததில் இருந்து, அவரைச் சந்திக்கும் வரையிலும் இருந்த நிலைகளைச் சொல்லிவிட்டு, மனைவியினுடைய நிலைகளை அனைத்தையும் சொல்லிக் கொண்டே வந்தார். அப்படி அவர் சொல்லும்போதுதான், அவர்பைத்தியம் இல்லைஎன்ற நிலையை நான் உணர முடிந்ததது.

அதன் பின், பெரும் உண்மைகள் பலவற்றைச் சொன்னபின், விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும் கொடுத்து, இதைக் கொண்டு சென்று, “உன் மனைவிக்குக் கொடு, எழுந்து நடப்பார்என்று சொன்னார்.

ஏனென்றால், ஆஸ்பத்திரியிலேயே முடியாது என்று வந்த இந்த நிலையை, இடுப்பிற்கு கீழ் ஒரு விரலும் அசையவில்லை. இன்றோ, நாளையோ என்று மிகவும் கடினமாக நிலைகளில் இருக்கப்படும்போது,
அவர் சொன்ன மாதிரியே செய்தேன்.
என் மனைவி எழுந்து, ஒரு மாதத்திற்குள் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
குருநாதரிடம் இந்த நற்செய்தியைச் சொல்லலாம் என்று, தேடிச் சென்றபோது, அவரைக் காண முடியவில்லை.

பின் திடீர் என்று, எப்படியும் சொல்லியாக வேண்டும் என்ற மகிழ்ச்சியோடு இருக்கப்படும்போது,
திடீரென்று என்னை நீ தேடினாயா”, என்று
முதுகு பக்கமாக இருந்து, குருநாதர் எம்மைத் தட்டினார்.
எப்படி வந்தார், என்ன செய்தார்? என்றே எனக்கு தெரியாது.

அவர் தட்டி எழுப்பியபின், நான் திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு, “உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன், தேடினேன் காணவில்லைஎன்று சொன்னேன்.

இப்பொழுது உன் மனைவிநன்றாக இருக்கிறாளா?” என்று கேட்டார்.

நலமாக இருக்கிறார்என்று சொன்னேன். “ஆனால் வீட்டிற்கு வரவில்லைவெளியில் இருந்துதான் இது நடக்கின்றது.

அப்பொழுது நான் சொல்கின்றதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். “என்னை நீ நம்புகிறாயாஎன்று கேட்டார்.

நம்புகிறேன்என்று நான் சொன்னேன்.

நான் சொல்வதைக் கேட்கின்றாயா?“ என்று கேட்டார்.

கேட்கின்றேன்என்று சொன்னேன்.

இதில் நீ மாறமாட்டாய், இல்லையா? என்று கேட்டார்.

மாறமாட்டேன்என்று சொன்னேன்.

அதன்பின் அவர் என்னை பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றபின், அந்த பெரிய நாயகி அம்மனை வணங்கச் செய்தார். அதன்பின், கிரிவலம் வந்தோம்.

அங்கேதட்சிணாமூர்த்திசிலை இருக்கின்றது. இந்தச் சிலை எதற்காக வைத்திருக்கிறார்கள்? என்று கேட்டார்.

எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன்.

இப்படி ஒவ்வொரு சிலையையும் காட்டி, “இந்தச் சிலையின் உட்பொருள் என்ன? என்று எல்லாவற்றையும் காட்டிவிட்டு, “துர்க்கைஎன்ற சிலை உண்டு. அந்தச் சிலைக்கு பக்கம் அழைத்து வந்தார். “இதனுடைய பொருள் என்ன?” என்று கேட்டார்.

தெரியவில்லைஎன்று சொன்னேன்.

எதைக் கேட்டாலும் தெரியவில்லை என்று சொல்கின்றாய் என்று கேட்டுவிட்டு, அதன்பின் வெளிய வந்தபின், இங்கே உன் பெயரை வைத்து வேணுகோபால விநாயகர் என்று ஒன்று உண்டு. உனக்குத் தெரியுமா? என்றார்.

எனக்குத் தெரியாது என்றேன்.

அங்கே அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றபின், அந்தச் சிலைமீது ஏறி உட்கார்ந்து கொண்டு, இதனுடையஉட்பொருள் என்ன? என்று கேட்டார்.

தெரியாது என்று சொன்னேன்”. இதை மீறிப் பேசினால் பேசுவார், என்றே விலகி இருந்தேன்.
                                        
அப்புறம் அப்படியே தொடர்ந்து வரப்படும்போது, இதனுடைய நிலைகளை ஒவ்வொரு சிலையையும் காட்டியபின்,
எறும்புக்கு யார் சோறு போடுவது?,
புழுவிற்கு யார் சோறு போடுவது?,
குருவிக்கு யார் சோறு போடுவது?
இங்கே இவர்களுக்கெல்லாம், யார் சோறு போடுகின்றார்கள்? எப்படி? என்ற நிலைகளிலே குருநாதர் என்னைக் கேட்டுக் கொண்டே வந்தார்.

எல்லாம் கடவுள் போடுகின்றார் என்றே சொல்லிக் கொண்டு இருந்தேன்.

கடவுள் என்றால் யார்? என்று கேள்வி கேட்டார்.

எனக்குத் தெரியாது என்றேன். நான் பார்க்கவில்லை என்றேன்.

பார்க்காதபடி, கடவுள் என்று எப்படி நீ சொல்லலாம்? என்று கேள்வி கேட்டார்.

இப்படி விதண்டவாதங்கள் நடந்து, ஓரளவிற்கு எல்லாம் சுற்றி வந்தபின், அந்த மனிதருடய எண்ணங்கள் எவ்வாறு செல்லுகின்றது என்ற நிலையைக் காட்டினார்.

அது ஒவ்வொன்றையும் சொல்லி ஒரு நிலைப்படுத்தி,
பிரபஞ்சம் எப்படித் தோன்றியது?
பிரபஞ்சத்திற்குள் பூமி எப்படித் தோன்றியது?
பூமிக்குள் உயிரணு எப்படித் தோன்றியது?
பூமிக்குள் தாவர இனங்கள் எப்படித் தோன்றியது? என்று வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தார்.
தெரியாது, தெரியாது என்று சொல்லிக்கொண்டே இருந்தேன்.

தெரியாது என்று சொல்கிறபோதெல்லாம்,
ஒவ்வொரு அடி கிடைக்கும்.
அடி கொடுத்துக் கொண்டே இருந்தார்.

தெரியாது என்றால், நீ எதற்குக் கேட்கிறாய்? என்றார்.

நான் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன், என்று சொன்னேன்.

தெரிந்து கொண்டபின், அடுத்து நீ என்ன சொல்லப் போகின்றாய்? என்ன செய்யப் போகின்றாய்? இப்படியே கேட்டுக் கொண்டே, என்னைப் பைத்தியக்காரத்தனமாக அடித்துக் கொண்டே இருந்தார்.

இதற்குப்பின், சூரியன் எப்படி அது உண்டானது?
அந்த பிரபஞ்சத்திற்குள் எப்படி ஒரு உயிரணு உருவாகியது?
அந்த உயிரணு உருவாகிய பின் என்ன செய்தது?
அரசர்கள் நான்தான் என்ற நிலைகளில், எப்படி இருந்தார்கள்?
அரசர்கள் பல மந்திரங்களை ஏன் செய்தார்கள்?,
அரசர்கள் ஏன் கோவில்களைக் கட்டினார்கள்?
ஞானிகள் எப்படி உண்மையினுடைய நிலைகளை உணர்ந்தார்கள்?
ஞானிகள் சொன்னதை அரசர்கள் எப்படி தன்வசப்படுத்திக் கொண்டார்கள்?
என்றெல்லாம் குருநாதர் வினாக்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி, நான் படிக்கவில்லையே, என்று சொன்னேன்.

நீ புத்தகத்தைப் படிக்காததால்தான் உன்னிடம் கேட்கிறேன்.. படித்திருந்தால், நீ என்னிடம் விதண்டவாதம் பேசுவாய், என்று சொன்னார் குருநாதர்..

குருநாதர் இப்படி, அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார், எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. இல்லையென்றால், கொச்சையான வார்த்தைகளால் பேசிக்கொண்டே இருந்தார்.
பிறகு, பேரண்டம் இருண்ட நிலைகளில் இருந்தது.
அந்த இருண்ட நிலைகள் என்பது, விஷமான சக்தி கொண்டது.
அந்த விஷமான சக்தி கொண்டு, அணுக்கள் எப்படி உண்டானது?
அந்த அணுக்களின் தன்மை, அணுக்கள் ஒன்றாகச் சேர்த்து, எப்படி ஒரு கோளாக, ஒரு பரம்பொருளாக உண்டானது?

அதாவது பல அணுக்கள் சேர்ந்து, எல்லையே இல்லாத இந்த உலகின் பேரண்டத்தில் அது எல்லையாக ஒரு சிறு பொருள் எப்படி உண்டானது? அதற்கு பெயர்பரம்பொருள்என்றும், அந்த பரம்பொருள் தன் சுழற்சியின் நிலைகளில், “தான் வளர்ந்தது எப்படி?” என்று அதைக் காட்டினார்.

அது வளர்ந்தபின் அது கோளாக மாறி, அந்தக் கோளின் தன்மை, அது எப்படி நட்சத்திரமாக மாறியது? நட்சத்திரமாக மாறியபின், சூரியனாக எப்படி மாறியது?

சூரியனாக மாறியபின், அதனின்று வெளிப்படும் அணுக்கள் அது எப்படி சூரியனின் அணுக்களின் தன்மை சேர்க்கை ஆனதோ, அந்த சேர்க்கையின் நிலைகள் கொண்டு, கோள்கள் மீண்டும் உருவாகி, அந்தக் கோள்கள் நட்சத்திரமாகி, ஆக, ஒரு பிரபஞ்சம் என்ற நிலைகள் அடைந்தது என்று சொன்னார்.

அப்படி பிரபஞ்சம் என்ற நிலைகள் அடைந்து, அதற்குள் ஒரு உயிரணு தோன்றி, தாவர இனங்கள் பூமியின் நிலைகள் பெற்று, பூமிக்குள், அது தாவர இனங்கள் உற்பத்தியாகி, அந்த தாவர இன மணத்தை ஒரு உயிரணுதான் சுவாசித்து, அது உடல் பெற்று அதன் நிலைகள் கொண்டு இந்த உயிரணு, பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனானது என்று விளக்கினார்.

சூரியன் தன் உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து, மற்ற கோள்களை உருவாக்கி, அந்த உருவாக்கிய நிலைகள் கொண்டு, ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது.

இதைப்போன்றே, ஒரு உயிரணு தோன்றி,
புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி, மனிதனானபின்
அந்த மனிதனுடைய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி,
இன்று துருவத்தை அடைந்து,
துருவ மாகரிஷியாகி, துருவ நட்சத்திரமாகி,
அதனின்று வெளிப்படும் உணர்வுகளை, தான் சுவாசித்து,
அதனின் நிலைகள் கொண்டு
சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து,
இன்று எப்படி சுழன்று கொண்டிருக்கிறார்கள்
என்ற நிலையை உணர்த்தினார்.

அப்படி உணர்த்தியபின், இதையெல்லாம் நீ காணுவது எப்போது? இதை நீ எப்போது காணப்போகின்றாய்? எதை நீ அடையப் போகின்றாய், என்ற இப்படி வினாக்களை எழுப்பிக் கொண்டே, சொல்லிக்கொண்டே வந்தார், குருநாதர்.
இதை, ஒவ்வொன்றும் குருநாதர் சொல்லிக்கொண்டு வரப்படும் பொழுது, இதையெல்லாம் நான் என்றைக்குப் பார்க்கப் போகின்றேன்? நான் கடும் தவம் இருக்க முடியாதே.

நான் குழந்தை குட்டியோடு இருக்கின்றேன். இன்றைக்கு மனைவி எழுந்து வந்திருக்கின்றது. அதற்கு ஏதாவது தொழில் செய்தால் தான், நன்றாக இருக்கும். தொழில் செய்தால்தான், சாப்பாட்டுக்குக் கொடுக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே வந்தேன். அவர் இடைமறிக்கவில்லை.
இதையெல்லாம் நான் பார்ப்பதற்குத் திறன் இல்லை.
எனக்கு இந்த ஆயுள் பத்தாது என்று சொன்னேன்.

ஆயுள் பத்தாது என்ற நிலைக்கு நீ சொல்ல வேண்டியதில்லை, நான் அல்லவா சொல்ல வேண்டும், என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு வந்தார்.

ஒருவர் திட்டினால் மட்டும், நீ கூர்ந்து கவனித்து, “இருடா, நான் பார்க்கின்றேன் என்று சண்டைக்குப் போகத் தெரிகின்றது. அவனை நீ நினைக்கும்போதெல்லாம், எப்படி உன் உடல் பதறுகின்றது?

அதே மாதிரி நான் சொல்வதை நீ கேட்டுக்கொண்டே வா.
நீ அதைப் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வா.
அந்த சக்தி உனக்குள் ஆழமாகப் பதியும்.

அதை நீ திருப்பி எண்ணும்போது, உனக்குள் எப்படி சக்தி கிடைக்கிறது என்பதை மட்டும், நீ தட்டாது கேட்டுக் கொண்டே வா என்று இதைச் சொன்னார்.

இதைத்தான், அன்றுகடவுளின் அவதாரம் பத்துஎன்ற நிலைகளைச் சொல்லி, அந்த கடவுளின் அவதாரம் என்றால், இவர்கள் சொல்கிற மாதிரி, கடவுள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்தார் என்ற நிலையைச் சொல்வதற்கு பதில்,
நமது உயிரைக் கடவுளாக வைத்து
நாம் புழுவிலிருந்து அவதார நிலைகள் பெற்று
இந்த உணர்வனைத்தையும் ஒளியாக மாற்றி
இந்த உயிர் கல்கியாக
எப்படி சென்றடைந்து என்று தெளிவாகச் சொன்னார்.
(பக்கம் 65-69)
எமது குருநாதர், உடலைவிட்டுச் சென்றபின் அவர் பித்தனைப் போன்று சொல்லிய உணர்வுகள் அனைத்தும், இந்த உடலைவிட்டு ஒளிச்சரீரமாகச் சென்றபின், அவரது உணர்வின் ஆற்றல் அது எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையை, கூர்ந்து கவனிக்கச் சொன்னார்.

அவர் சொல்லிய, ஒவ்வொரு உண்மையினுடைய நிலைகளும், எவ்வாறு அவரின் உயிராத்மா விண் சென்றடைகின்றது? அவ்வாறு விண்சென்றபின், விண்ணிலே வரக்கூடிய ஒவ்வொரு அணுக்களின் விஷத்தின் தன்மையை, இந்த உடலில் இருந்து உணர்வுகள் எப்படி அதை விலக்கிச் செல்கின்றது என்பதையும் உணர்த்துகின்றார்.

சூரியன் தனக்குள் வெப்பத்தின் தன்மை அதிகமாகும்போது, அதிலிருந்து விஷத்தின் தன்மையான, “ULTRA VIOLET” அது எப்படி படர்ந்து சென்று, அதற்குள் இருக்கக்கூடிய சூரியனின் வெப்ப காந்த அலைகள், அதைத் தொடர்ந்து அது வெப்ப காந்தமாக வெளிப்படுத்தி, இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய கோள்களை இயக்கி, அதிலிருந்து பெறுகின்றது.

இதைப் போன்று, மனிதன் மனிதனான பின், இந்த உணர்வின் ஒளி அலைகள் எவ்வாறு அதைப் பெற்று விண் செல்லுகின்றது என்ற நிலையை உணர்த்தினார். ஒவ்வொரு படியிலேயும், ஒவ்வொரு நிலைகளையும் அவர் உணர்த்திச் சென்ற நிலைதான், “வைகுண்ட ஏகாதசி நாள்”.

அவர் உயிராத்மா அவர் உடலில் இருந்து அந்த உடலையே ஒளியாக மாற்றி, வென்று சென்ற நாளை, “குரு பூஜையாக வைத்து நாம் கொண்டாடி வருகின்றோம்.
அவர் எமக்கு உபதேசித்து வந்த நிலைகளில் நமது குருநாதர் சொன்னபடி, மூன்று இலட்சம் பேரை யாம் சந்திக்க நேர்ந்தது,

ஒவ்வொருத்தரையும் சந்திக்கும்போது அவர்களுடைய கஷ்டங்கள் எவ்வாறு இருக்கின்றது? அவர்களுக்குத் துன்பங்கள் எப்படி நேருகின்றது? ஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும்போது, அந்த நல்லதை எண்ணும்போது, அவரகளை, துயரங்கள் எப்படி வந்தடைகின்றது?

அதிலிருந்து அவர் மீள்வதற்கு வழி இல்லாதபடி, பக்தி என்ற நல்லொழுக்கத்தை மட்டும் கடைபிடித்துக் கொண்டு, அந்த பக்தி என்ற நிலைகளில் இருந்தாலும், நல்லதை எண்ணுகின்றனர். நல்லதைக் காக்கும் திறன் இழக்கும் நிலையில், இன்று ஒவ்வொரு மனிதனும் இருக்கின்றனர்.

ஆனால், நல்லதைக் காக்கும் வலுவான நிலைகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் செயலிழந்து இருக்கின்றது. நல்லதைப் பெற வேண்டுமென்று, அரசர்கள் பக்தி ஒன்றைமட்டும் நமக்குக் காட்டிவிட்டு, நல்லொழுக்கத்தைக் காக்கும் திறனை, அவர்கள் விட்டுச் சென்று விட்டார்கள். அதைப் பெற முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள்.

ஏனென்றால், அந்தப் பக்தி என்ற நிலைகளில், நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தாலும், மெய் ஒளியின் தன்மை தனக்குள் உணர்ந்தால், மக்கள் அடிபணியமாட்டார்கள் என்ற நிலைகள் கொண்டு, அரசர்கள் அவர்கள் சுகபோகங்களுக்காக, உலக ரீதியிலேயே உண்மைகளை மாற்றினார்கள்.

இந்தப் பேரண்டத்தின் பேருண்மைகளின் நிலைகள், அது நம் பூமிக்குள் வந்தாலும், மற்ற சாதாரண மக்கள் பெறாத நிலைகளில் எப்படித் தடைபடுத்திவிட்டது என்ற நிலைகளிலும், இதிலிருந்து மீண்டு, நாம் எப்படி இந்த உடலிலிருந்து, இந்த உயிராத்மாவை ஒளி நிலை பெறச்செய்ய வேண்டுமென்ற இந்த நிலையைத்தான், நமது குருநாதர், அவர் கடைசி நேரத்தில், இந்த உடலைவிட்டு அந்த உயிராத்மா செல்லப் போகும்போது, முதன் நிலையாக இதைச் சொன்னார்.

அதைச் சொல்லி, இந்தப் பிரணவத்தின் தத்துவத்தை முழுமையாக, முதலில் அனுபவ ரீதியாக, அவர் இருக்கும்போதே பல அனுபவங்களை, எம்மைப் பெறச் செய்தார். அதாவது கன்னியாகுமரி முதல், இமய மலை வரை சென்று வரச் செய்தார்.

வட துருவத்திலிருந்தும், தென் துருவத்திலிருந்தும்
ஆற்றல்மிக்க சக்திகளை,
இந்த பூமி எப்படிப் பெறுகின்றது என்ற நிலையும்,
அவர் உடலோடு இருக்கப்படும்போது,
நேரடியாகவே அவர் எமக்கு உணர்த்தினார்.
நாம் எப்படி T.V.களில் இன்று பார்கின்றோமோ, இதைப்போன்ற நிலைகளை, அவர் அவருடன் எம்மை அணைத்துக் கொண்டு, அவர் உடல் எங்கே செல்கின்றதோ அவருடன் அணைத்துக் கொண்டு, ஆங்காங்கு நிறுத்தி, அதனுடைய செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது என்ற நிலையை, எமக்கு உணர்த்தினார்.

அவர் உணர்த்திய எண்ணங்களை வைத்துத்தான், எல்லோரும் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையில், நீங்கள் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையில், 12 வருட காலம் பல காடுகள், மேடுகள் அலைந்து, மற்ற உயிரினங்கள் எவ்வாறு செயல் படுகின்றது, தாவர இனச் சத்துக்கள் எப்படி தாவர இனச் சத்தை இழுக்கின்றது? தாவர இனச் சத்தை தனக்குள் எவ்வாறு வளர்கின்றது? தாவர இனச் செடிகள் எப்படி வளர்கின்றது? என்று அறிந்தோம்.

அந்த வளர்ச்சியின் தன்மை கொண்டு, பூமியின் காற்றலைகள் எப்படி மாறுகின்றது என்ற நிலையை, அவர் உணர்த்திச் சென்ற அந்த நிலையை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும், அதை உணர்வதற்கு, நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கே, அதை செய்தார்.

அப்படி, எமக்குள் பெற்று வளர்த்த, அந்த ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெறுவதற்கே, யாம் உபதேசத்தின் மூலமாக உங்களுக்குள் இதைப் பதிவு செய்கின்றோம்.

(பக்கம் 69-73)
நமது குருநாதர், விண் சென்ற நாள்தான்வைகுண்ட ஏகாதசி”. 
அவர் உடலை விட்டுச் சென்று,
எப்படி ஒளி சரீரமாக மாற்றிச் சென்றாரோ, அந்த நிலையை
நாம் அனைவரும் இந்த வாழ்க்கையிலேயே நிச்சயம் பெற முடியும்.

இதற்கென்று, நாம் யாரும் கடும் தவம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் எனக்குச் சொன்ன சுருக்கமான நிலை ஆத்மசுத்தி”.

நாம் எந்த வேலை செய்தாலும், கையில் படக்கூடிய அழுக்கை, நாம் துடைக்கின்றோம். இதைப்போல, மனித வாழ்க்கையில் துயரமான எண்ணங்களும், வேதனைப்படும் எண்ணங்களும் அடிக்கடி நமக்குள் தோன்றும்.

இந்த நிலைகளை, “ஆத்மசுத்திஎன்ற ஆயுதத்தைக் கொண்டு, அன்றன்று துடைத்து, ஒவ்வொரு நொடிக்கும் அதைத் துடைத்துக் கொண்டு, நீ இந்த மெய் ஒளியைப் பெற முடியும் என்று, நமது குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

ஆக, அந்த அனுபவபூர்வமான நிலையை, உனக்குள் ஏற்படும் சந்தர்ப்ப நிகழ்ச்சியை நீ கண்டுணர்ந்து, நான் சொன்ன இந்த ஆத்ம சுத்தியைக் கொண்டு, தீமைகளைத் துடைத்துக் கொண்டு, அந்த உணர்வை எப்படி ஒளியாக மாற்ற வேண்டும் என்று, அந்தப் பேருண்மையை உணர்த்தினார், நமது குருநாதர்.

அதன்பின், அவர் உடலைவிட்டுச் சென்றபின், அவர் உபதேசித்த உணர்வுகளை அனுபவ ரீதியாக யாம் பெற்றோம். அதைப் போன்றே, நீங்களும் சாதாரண ரீதியில் பெற முடியும் என்ற நிலைகளில்தான், உங்களுக்கும் அதை இப்பொழுது உபதேசிக்கின்றோம்.
                         
அவர் எப்படி ஒளி சரீரம் பெற்றாரோ, அதைப் போல நாமும் ஒளி சரீரம் பெற வேண்டும், முடியும் என்ற அந்த நிலையைக் கொண்டுதான், நம் குருநாதர் சென்ற வழியில், நாம் அனைவரும் இதே சரீரத்தை, நிலையான சரீரத்தை, சரீரம் ஒளியாக மாறும் நிலையை, நாம் நிச்சயம் அடைய முடியும்.

ஆகவே தான், குருபூஜை என்று வைத்து,
அவர் எப்படி ஒளியின் சரீரமாக மாற்றினாரோ,
அதே குருத்தன்மையை நாம் எடுக்கும்போது,
நாமும் அந்த ஒளி சரீரம் நிச்சயம் பெற முடியும்.
இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி, நாமும் நிச்சயம் அதைப் பெற முடியும்.
ஓம் என்பது பிரணவம் என்று, நமது சாஸ்திர விதிகள் கூறுகின்றன. நமது உயிர் என்ற நிலைகளில் நமக்குள் பிரணவமாகி, ஜீவனாக இயங்குகின்றது.

ம் என்கிற போது, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் உடலாக அமைகின்றது. அதனால்ஓம் ஈஸ்வரா”, நமக்குள் இயக்க சக்தியாக நம் உயிர் இருக்கின்றது, என்ற நிலையை குருநாதர் தெளிவாக உணர்த்தினார்.

ஆகவே, நாம்ஓம் ஈஸ்வராஎன்று
வெறும் வாயில் சொல்வதற்குப் பதில்,
நாம் எண்ண வேண்டியது நம் உயிரை,
நமக்குள் ஜீவனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும், இச்சக்தியை (“உயிரை”) நீ எப்படி நேசிக்க வேண்டும்? என்று, நமது குருநாதர் முதல் நிலையிலே எனக்கு உணர்த்தினார்.
நமக்குள் இருந்து இயக்கும் உயிர், நம்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலையைத் தெரிவதற்கு, நாம் மனிதனானபின் இந்த உயிரின் நிலைகளை, நாம் அறிந்து கொள்ளக்கூடிய நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகவே, ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும்போது, நம் உயிரை, நினைவில் கொண்டு தான், இந்த சொல்லை நாம் சொல்ல வேண்டும். நம் உயிரை நேசிக்கும் நிலையாக, அவர் சொன்ன முறைப்படித்தான், உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன், எமது அருளாசிகள்.
(பக்கம் 87-89)
வாசுதேவனுக்கும் தேவகிக்கும், சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் கம்சனைக் கொல்ல. ஆக இருளை நீக்கி, அறியாமையிலிருந்து விடுபட்டு, அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக, கண்ணன் பிறந்தான் என்று கதை எழுதுகின்றார்கள்.

ஏனென்றால், நம் குருநாதர் காட்டிய உணர்வை, எனக்குச் சொன்னதை நான் சொல்லுகின்றேன்.
நான் படிக்கவில்லை.
நான் பாடங்கள் படிக்கவில்லை.
புத்தகங்களைப் புரட்டவில்லை.
அவர் சொன்னதைத் தான், நான் சொல்லுகின்றேன்.

அந்த உணர்வுகளை எனக்குள் எப்படிப் பெறவேண்டும் என்று சொன்னாரோ, அதை நீங்களும் பெறவேண்டும் என்றும், அந்த உணர்வின் குருவாக அழைத்து, அந்த விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற, இந்த இச்சையில்தான் சொல்லுகின்றேன்.

நீங்கள் குறையில்லாது, அதைக் கூர்மையாகக் கவனித்து, அந்த உணர்வின் சக்தியைப் பெறவேண்டுமென்று அந்த ஆசையில்தான், பதிவு செய்கின்றேன்.

திரும்பத் திரும்பச் சொல்கின்றேன். சாமி சொன்னார், தெரியவில்லை என்ற நிலைக்குப் போகாதீர்கள்.

ஆகவே, இங்கே வாசுதேவனுக்கும், தேவகிக்கும் அதாவது,
வாசு என்கிற பொழுது, தேவன் என்று உருவாக்கிய இந்த உயிர்
தேவகி, தான் பசிக்காக வேண்டி ஏங்கி, தான் தவித்த அந்த சக்தி
இதற்குள் அந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து,
இந்தக் கண் தோன்றியது, கண்ணன் தோன்றினான். சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்ற நிலையை வைத்தார்கள்.

ஆனால், கண்ணுக்கு உண்டான இரு சக்தியை, கருவிழியை ருக்மணி என்றும், தான் ஈர்த்து, செயல்படும் சக்தியை சத்தியபாமா என்றும், அதை வெளிப்படுத்தினார்கள்.

ஆக, கண்ணால் நாம் பார்க்கப்படும் பொழுது, அங்கே படம் எடுக்கின்றோம். ருக்மணி, அங்கே இருக்கக் கூடிய பொருளை, எனக்குள் பதிவு செய்கின்றது.

அதே சமயம், அங்கிருந்து வெளிப்படும் அந்த சக்தியின் உணர்வை ஈர்த்து, எனக்குள் உணரச் செய்து உண்மையை உணர்த்துகின்றது. சத்தியபாமா.

தான் ஈர்த்து, பாமா, தனதாக ஆக்கிக் கொள்ளும் நிலையை, இப்படிப் பெயரை வைத்து, இயற்கையின் செயலை நாம் கண்டுணர்வதற்கு வைத்தார்கள்.

இன்று எப்படி இயந்திரங்களுக்குப் பெயரை வைத்து, இப்பொருள் இன்னதுதான் என்று, நாம் அறிந்துணர்ந்து, அது செயல்படுவதற்குச் செய்தார்களோ, இதைப் போலத்தான்,
அந்த இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்த ஞானிகள்,
இப்படி அதற்குப் பெயரை வைத்து,
நாம் அறியும் தன்மையாக வைத்தார்கள்.
ஆகவே, கண்கள் தோன்றிய இந்த நிலையைத்தான், கண்ணன் இருட்டறைக்குள் பிறந்தான் என்று உணர்த்தப்படுகின்றது.
(பக்கம் 90-98)
ஒரு புழு, அதற்குக் கண் தோன்றியபின், தன் இரையைத் தேடி கண் கொண்டு பார்த்துச் சென்றாலும், நகர்ந்து செல்லும்போது, எதிர்பாராது கடுமையான வெப்பத்தில், ஒரு பாறைமீது இருக்கப்படும்போது வெப்பம் அதிகமாகின்றது.

அந்தப் பாறைமேல் இந்தப் புழு விழுந்து விடுகின்றது. விழுந்தபின் அது துடியாகத் துடிக்கின்றது. அது துடித்து, தன் கண் கொண்டு கூர்மையாகக் கவனிக்கின்றது.

ஒவ்வொரு பக்கமும் அது பார்க்கும்போது,
அருகிலே இருக்கக்கூடிய செடி
அதற்குள் இருக்கக்கூடிய நிழல் அதிலே படுகின்றது.
இதைக் கண் கொண்டு அது பார்க்கின்றது.

கண் படமெடுக்க, அதனின்று தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வைத் தூண்டி, அது அதை எடுத்துச் சுவாசிக்கும்போது கண் படமெடுக்கின்றது.

அதனிலிருந்து வெளிப்படும் சத்தான நிலைகள்சத்யபாமா”, அந்த உணர்வை இழுத்து, அங்கே உனக்கு நிழல் இருக்கின்றது என்ற உணர்த்துகின்றது. இந்த உணர்வின் சத்து வினையாகச் சேர்க்கின்றது.

ஆனால் சேர்ந்தபின், இந்த வெப்பம் அதிகமாகும் போது வெப்பத்தின் தணல் தாங்காது, தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்ச்சியின் வேகத்தால் அது எடுத்துக் கொண்ட துடிப்பின் வேகம், இந்தப் புழுவை நகர்த்திச் சென்று, அந்த நிழல் இருக்கும் பக்கம் செல்கின்றது.

ஆனால் அதேசமயம், இது கண்ணிலே, தான் வேகமாகக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், அந்தச் செடிகள் எப்படி, சில வளைவாகவும், அது ஒரு பொந்து போல, இந்த ஆமையின் ஓடுகளில் பார்த்தால், பல கலர்கள் இருக்கும்.

இதைப் போல அதைப் பார்த்த பின் அதனின் உருவத்தைப் போன்று, அதற்குள் எடுத்து,
மண்ணிலிருந்து வரக்கூடிய வெப்பகாந்தமும்,
இந்தத் தாவர இனச் சத்தும்
இதற்குள் கலந்துணர்ந்து தான் சுவாசித்து,
இந்த உயிருடன் படப்படும்போது
அந்த உணர்வின் சத்தை அது வடித்துக் கொண்டு,
அந்த ஏக்கத்தின் தன்மை தனக்குள் உடலாகி,
அந்த உணர்வின் சக்தி விளைந்த பின்,
அது சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு,
அடுத்தததாக ஆமையாகப் பிறக்கின்றது.
இதுதான் கூர்மை அவதாரம்”.
கூர்மை அவதாரம் என்கிற போது,
இந்தக் கண் கொண்டு பார்த்தபின்,
வெயிலின் கொடுமையிலிருந்து
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால்,
அதனுடைய சந்தர்ப்பம், அதிகமான வெப்பத்தைத் தாங்கியது.

அந்தத் தாவர இனச்சத்தை எடுத்து, இந்த மண்ணிலிருந்து வரும் நிலைகளும், அதிலிருந்து சுவாசித்த உணர்வின் தன்மை, அதுஓடாகஅமைந்து, ஆமையின் தன்மை பெற்றது.

ஒரு சமயம், குருநாதர் என்னை டீ வாங்கி வரச் சொல்லி, சாக்கடையில் இருக்கும் மண்ணை எடுத்து, இந்த டீக்குள் போடச் சொல்லி, “நீ குடிஎன்றார். அதைச் சொன்னவுடனே எனக்கு எப்படி இருக்கும்?

சாமி, வாந்தி வருவது போல இருக்கின்றதுஎன்றேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாயே? “இப்பொழுது நீ இதைக்  குடிஎன்றார்.

நான் அசிங்கமாக இருக்கின்றது சாமி, என்றேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாயே, செய். இல்லையென்றால் போ என்றார். அதைச் சொன்னவுடன், கொஞ்சம் கொஞ்சமாக மறுத்துக் கொண்டு இருந்தவுடன், அப்புறம் ஓங்கி இரண்டு, மூன்று அடியும் கொடுத்தார்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று, நீ சொல்லிவிட்டு இப்பொழுது மீறுகின்றாய் என்றார்.

அதைப் பார்த்தாலே, இங்கே எனக்கு உமட்டல் வருகின்றது. சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்டிருக்கின்றார்கள். அதை டீக்குள்ளே போட்டு, குடிக்கச் சொல்கின்றார் குருநாதர். நான் என்ன செய்வது? என்ன சாமி? இப்படி சொல்கின்றீர்களே என்றேன்.

என்ன சொன்னாலும், நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய், செய் என்றார். அப்படிச் சொல்லிவிட்டு, சாக்கடைக் கழிவுகளை எடுத்துப் போட்டார். எனக்கு உமட்டலாகவே இருந்தது. பிறகு நான் குடிக்கின்றேன், நீ குடிக்கின்றாயா? என்றார்.

சரி நான் குடிக்கின்றேன் என்று சொன்ன பிறகு, அவர் குடித்தார். அப்பொழுது, அந்தச் சாக்கடையிலிருந்து எடுத்துப் போட்டு குடிக்கும்போது, அதனுடைய மணமோ நாற்றமில்லை. அதற்குள் பேரானந்த நிலைகளை, எங்கெங்கேயோ பெரு உலகத்தினுடைய நிலைகளைக் காட்டினார்.

அதற்குப் பிறகு இந்த பன்றியைக் காட்டுகின்றார். அது சாக்கடைக்குள் உள்ள கெட்டதை நீக்கிவிட்டு, அதற்குள் இருக்கும் பருப்பை எடுத்து, அந்த உணர்வைச் சுவாசித்து, அந்த வினையாக உடலுக்குள் எப்படி அது சேர்கிறது என்ற அந்த உணர்வை எடுத்து, அதைக் காட்டுகின்றார்,

அப்புறம், இதை என்னைச் சாப்பிடச் சொல்கிறார். இது எவ்வளவு ருசியாக இருக்கிறது அதனுடைய எண்ணங்கள் எப்படிச் சேர்ந்தது என்று, உணர்த்திக் காட்டினார் குருநாதர்.

ஆக, வியாசகன் எழுதியவராக அவதாரம்என்ற நிலையைக் காட்டி, வராகன் என்றால்,
கெட்டதைப் பிளந்துவிட்டு
நல்லதைத் தனக்குள் எடுத்து சுவாசித்து,
அது எப்படி செய்கிறது என்ற உணர்வை, எமக்குக் காட்டுகின்றனர்.
(பக்கம் 107-111)
இந்த இயற்கையின் உண்மையினுடைய நிலைகளை, அந்த சக்தியினுடைய நிலைகளை இந்த உணர்வின் தன்மையை நீ உணர்த்த வேண்டும் என்பதற்குத்தான், இதை உணர்த்துகின்றேன் என்றார் குருநாதர்.
நான் அடிக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
ஏசுகின்றேன் என்று எண்ண வேண்டாம்.

ஒவ்வொரு ஏச்சுக்கும் உன் உணர்வு எப்படி மாறுகின்றது? உனக்குள் நான் சொல்வதை, நான் செய்வேன் என்று நீ எண்ணினாலும், நான் பேசும் உணர்வுகள் தாக்கப்பட்டு, எப்படா விட்டு ஓடலாம்?” என்ற எண்ணம் உனக்குள் எப்படித் தோன்றுகின்றது? அந்த உணர்ச்சிகள் எல்லாம், உன் உடலுக்குள் என்ன வேலை செய்கின்றது? என்ற நிலையையும் காட்டினார்.

இதைப் போல, எம்மை எறும்புக் குழியில் உட்கார வைத்து, அந்த எறும்பு கடித்தபின், அந்த உணர்வு தூண்டியபின், நான் நசுக்க ஆரம்பிக்கும் பொழுது, அது தன்னைத் தற்காத்துக் கொள்ள, எம்மைத் தாக்குகின்றது.

அது தாக்கப்படும் பொழுது, நம்மைக் காத்துக் கொள்ள அதை நசுக்குகின்றோம். இந்த இரண்டு எண்ணங்கள் உருவாக்கப்படும் பொழுது, எறும்பு செத்தால், அந்த உயிராத்மா நம் உடலுக்குள் வந்துவிடும்ஏனென்றால், அந்த உணர்வின் சத்து கொண்டு, அது பரிணாம வளர்ச்சியில் வருகின்றது.

ஆனால், நாம் எத்தனையோ ஆண்டுகள், எத்தனையோ அடிபட்டு, இன்றைக்கு நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

எறும்பு நம்மைசுருக்என்று கடிக்கப்படும் பொழுது, நசுக்கியபின் அந்த எறும்பின் உயிராத்மா நமக்குள் வந்து, மனிதனின் சத்தை உறிஞ்சி, அதை உறையச் செய்து, மனித உருப் பெறும் கருவாக, நம் உடலுக்குள் இருந்து எப்படி வளர்கின்றது? என்பதையும் காட்டுகின்றார், குருநாதர்.

அதே சமயம், கரையானைக் காட்டுகின்றார். கரையானை நாம் கையில் தொட்டால் நசுங்கி விடுகின்றது. ஆனால், அந்தக் கரையானோ, ஒரு பனை மரத்தில் படும் பொழுது, அதன் எச்சத்தைப் படியச் செய்யும் பொழுது, இந்த எச்சம் பட்டபின், அந்த உணர்வின் சத்து, பனைமரம் வைரம் போன்று இருந்தாலும் கரைகின்றது.
அது கரையப்படப் போகும் போது, அதை எடுத்து,
அதிலிருந்து ஆவியை எடுத்து,
கரையான் தான் சுவாசித்து அதை உணவாக உட்கொண்டு,
அதன் சத்தை இது எப்படி மாற்றி அமைக்கின்றது?

மண்ணுக்குள் இருந்து பல உணர்வின் சத்து மாறப்படும் பொழுது, அதே மரமாக ஆனபின், இதனுடைய மலம் பட்டபின், அதனின் சத்தை இந்தக் கரையான் உட்கொண்டு, மண்ணின் சத்தை, அதற்குள் அந்த மரத்தை எப்படி மண்ணாக மாற்றுகின்றது? அதற்குத் திறன் அந்த மாதிரி, என்று காட்டுகின்றார்.
இதைப் போலத்தான், நாம் ஒவ்வொரு மனிதனும்,
தன் எண்ணத்திற்குள்ளும் மற்றதைக் கரைக்கும் சக்தி,
இந்த கரையானுக்கு உள்ளது போல இந்த உணர்வின் சக்தி,
எதிலே எதன் அளவு கலந்திருக்கின்றதோ,
அதன் அளவிற்குத் தக்கவாறு,
நாம் எண்ணும் எண்ணங்களினுடைய நிலைகளில்
கரைத்து மாற்றுகின்றது,
என்ற நிலையை அங்கே தெளிவுறக் காட்டினார் குருநாதர்.
இதையெல்லாம் படம் காட்டுவது போலக் காட்டுகின்றார்.

ஏனென்றால், இதையெல்லாம் இங்கே தெரிந்து கொண்டால், இன்றைய விஞ்ஞான உலகத்தில் நாம் எங்கோ போகின்றோம். அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது உதவும்.

இன்று விஞ்ஞான உலகிலிருந்து நாம் தப்பித்தாலும், இந்த விஞ்ஞானத்தால் கண்டுபிடித்த இந்த உணர்வின் தன்மை, பூமியில் வெப்பம் அதிகமாகி, இங்கே பூமிக்குள் அது ஈர்க்கப்பட்டு, அந்த வெப்பத்தின் தன்மை அதிகமாகப்படும் பொழுது, வடதுருவம் உருகி, கடலலைகளாகப் பெருகி, நாம் இருக்கும் இடங்கள் குறையும்.

அதே சமயம், மனிதனுடைய எண்ணப் பெருக்கம் அதிகமாகும் பொழுது, உணவுக்காக வேண்டி திண்டாடக் கூடிய நிலை ஏற்படும். இன்று யுத்தமே இல்லையென்றாலும், இந்த உணர்வின் சக்தி கொண்டு நாம் இருப்பிடம் இல்லாதபடி, மனிதனுக்கு மனிதன் புசித்துத் தின்னும் நிலையும் வந்துவிடும்.

இதைப் போல விஷத்தின் தன்மை தன்னைக் காத்துக் கொள்ளும், வேதனையான இந்த உணர்வுகள், இந்த விஞ்ஞானத்தின் தன்மை கொண்டு, ஒவ்வொரு நொடியிலும் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாகி, மனிதனுடைய சிந்தனைகள், என்ணங்கள், அன்று காட்டு மனிதன் எபடி இருந்தானோ, அதைக் காட்டிலும் மோசமான நிலைகள், இந்த விஷத்தன்மைகள் ஏற்பட்டபின், சிந்தனை குறைந்து, இன்று மனிதனுடைய நிலைகளை இந்த விஞ்ஞான அறிவு கொண்டு, ஒவ்வொரு செயலும், எப்படிச் செய்தனர்? என்ற நிலையையும், விஞ்ஞானக் கருவிகளையும் காட்டினார், குருநாதர்.

அவ்வாறு காட்டப்படும் பொழுது, மனிதன் தான் வாழ்வதற்காக இந்த விஷத்தின் தன்மை கலந்தபின், மனிதனுடைய சிந்தனைகள் எப்படியாகும்? மனிதனுக்கு மனிதன், விஞ்ஞான அறிவு எவ்வாறு கொல்லும்? என்று காட்டினார்.

இப்பொழுது என்ன நடக்கின்றது? தவறிப் போய் குழந்தைகள் காணாமல் போனால், கண்கள் வியாபாரம் ஆகின்றது. அவர்கள் உடலில் இருக்கக் கூடிய கிட்னி விலையாகின்றது. அதே மாதிரி, அவர்கள் உடலில் இருக்கக் கூடிய கல்லீரலை எடுத்து விலைக்கு விற்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற குழந்தைகள் காணாமல் போவதெல்லாம், இதெல்லாம் இப்படி ஆகும் என்ற நிலையை, அன்று குருநாதர் சொன்னார்.

ஏற்னவே, இதே மாதிரி சொல்லி வரப்போகும் பொழுது, மனிதனுடய சிந்தனை மிருக நிலைகளுக்கு எப்படிச் செல்கின்றது? என்ற இந்த உணர்வை உணர்த்திவிட்டு, பன்றியைக் காட்டுகின்றார்.

பன்றி, சாக்கடையிலிருந்து எப்படி நல்லதை நுகர்ந்து எடுக்கின்றதோ, அதைப் போல, நாம் இந்த விஷத்தன்மையான இந்த உலகிலிருந்து, அந்தச் சாக்கடையிலிருந்து நமக்குள் எடுப்பதற்கு, அந்த மெய்ஞானிகளின் அருள் சக்திகளை நீ எப்படிப் பெறவேண்டும்? என்ற ஒவ்வொரு நிலையையும் உணர்த்தி, நீ இதைப் பெறவேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான், எமக்கு இதைச் சொன்னார்.
(பக்கம் 111-114)
உங்களைக் காக்க இந்த எண்ணம் உதவ வேண்டும் என்பதற்குத்தான், இந்த உபதேசங்களை யாம் கொடுப்பது. ஏனென்றால் மனிதனுடைய வாழ்க்கை, இந்த மனித உடலினுடைய நிலைகள் இந்த பூமியினுடைய ஆயுளாகி, அது குறுகிய காலங்களாக இப்பொழுது வருகின்றது.

மனிதன் வாழ்க்கைக் காலம் எவ்வளவோ, அதைப் போன்று, இந்த பூமியினுடைய காலங்கள், அது மாறுபடும் நிலைகளும் மாறியே தான் ஆகவேண்டும்.

ஆனால், இந்த பூமியில் இருக்கப்படும் பொழுது, இந்த உடல் மாறாத நிலைகள் கொண்டு,
உயிர் ஒளியாக எப்படி மாறியதோ,
இதைப் போல உணர்வுகள் ஒளியாக மாறி,
இந்த உடலை நாம் ஒளிச் சரீரமாக மாற்றி,
அந்த ஞானிகள் சென்ற நிலையில்,
என்றும் நிலையான சரீரமாக அதை நிலைக்கச் செய்ய வேண்டும்.

அந்த நிலைதான், நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று, இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, உயிருடன் ஒன்றி, அவருடைய உணர்வுகள் எப்படி இந்த ஆத்மாவாகச் சுழல்கிறது என்ற நிலையை, எமக்கு உணர்த்தினார்.

குருநாதரின் ஆத்மா விண்ணுலகம் செல்லப் போகும் பொழுது,
அதை உற்றுப் பார்த்து, அதைக் கவர்ந்து,
அவர் எங்கே சென்றடைகின்றார்?
என்ற அதனுடைய நிலைகளை,
நாமெல்லாம் அடையச் செய்யும் நாள்தான்
வைகுண்ட ஏகாதசி நன்னாள்.
அது குருவாக உங்களுக்குள்ளும் கிடைக்க வேண்டும், அவர் காட்டிய அருள் நெறிகள் அனைத்தும், உங்களுக்குள் வித்தாக ஊன்ற வேண்டும். நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம், அந்த மகாஞானியுடைய அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்க வேண்டும். உங்களையறியாமல் இந்த வாழ்க்கையில் வந்த, இருள்கள் நீங்கவேண்டும். இந்த இச்சையின் ஆசை எனக்குள் ஆகின்றது.

இச்சா சக்தி, அதனுடைய நிலைகள் எனக்குள் கிரியையாக மாறி, நீங்கள் பெறவேண்டும் என்று, யாம் எண்ணும் பொழுது,
உங்களை எண்ணி, யாம் ஏங்குவதனால்,
அந்த ஞானியின் அருள் சக்தி எனக்குள் இச்சை,
கிரியையாக இயங்கி, அதனின் வழிகளில்,
இந்த சொல்லின் தன்மை ஞானமாக வெளிப்படுகின்றது.

அதை, இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, நீங்கள் இயக்கும் இந்த செவிப்புலனில் எந்த அளவிற்கு, கூர்மையான எண்னங்களைச் செலுத்துகின்றீர்களோ, இந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் அது பதிவாகி, இந்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவிக்கும் பொழுது, இது கூர்ம அவதாரம்.
ஆக, நாம் உயிருடன் ஒன்றிய அந்த ஞானிகள் சென்ற, கல்கியின் அவதாரத்தை நாம் நிச்சயம் அடைய முடியும், என்ற இந்த நிலையைத் தான், இந்த ஆசையில்தான் யாம் இந்த குரு பூஜை அன்று, நம் குருநாதர் காட்டிய நிலைகளை, இந்த சொல்லே உங்களுக்குள் நீங்கள் எண்ணமாக எடுக்கும் பொழுது, அது குருவாக அமைகின்றது.

இப்பொழுது, திட்டியவர்களை எண்ணும் பொழுது, அந்த உணர்வின் தன்மை நம்முள் பதிவானபின், அவர்களை எண்ணினால், அந்தக் குணம் நமக்குள் குருவாகி, அவருடன் சண்டையிடச் செய்யும் நிலையாக, குருவாக அது இயங்கும்.

ஒருவர் வேதனைப்பட்டுச் சொல்லும் நிலைகளை நாம் எண்ணத்தில் எடுத்துக் கொண்டால், அந்த வேதனையான உணர்வுகளை மீண்டும் நினைக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் சக்தி நமக்குள் குருவாக நின்று, அடிக்கடி வேதனைப்பட்டு, அந்த குருவின் வழி நோயை உருவாக்கும். நம்மை அந்த வழியிலே அழைத்துச் செல்லும்.

குரு பூஜை நடைபெறும் நாள், அவர் ஒளியாகப் பெற்ற நாள். உங்கள் உணர்வின் தன்மைகள் ஒளியாகப் பெறவேண்டுமென்ற இந்த ஆசையில்தான், இந்த இச்சையில்தான், இது சேர்க்கப்படும் பொழுது,
நீங்கள் எண்ணும் எண்ணங்கள் குருவாக நின்று,
உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கி
ஒளியின் தன்மை பெறச் செய்ய முடியும்.

இந்த ஆசையில், யாம் குரு பூஜை விழாவாக இதை ஆரம்பித்து, அவருடைய நிலைகளை, மீண்டும் மீண்டும் இந்தக் குரு பூஜையினுடைய தன்மையை, அந்த மெய்ஞானியின் அருள் ஒளிகள் உங்களுக்குள் குருவாக நின்று, நீங்கள் எண்ணும் இந்தக் கூர்மையான உணர்வுகளை எடுத்து, சுவாசித்து, இந்த உடலின் தன்மையை, மெய்ஞானிகள் சென்ற நிலைகளில் அந்த உணர்வின் எண்ணங்களை ஒளியின் சரீரமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசை. எனது ஆசியும் அதுவே தான்.

அந்த ஆசையில், நீங்கள் பெறவேண்டும் என்று யாம் எண்ணும் பொழுது, அந்த ஆசை எம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது.

அதை நீங்களும் எடுக்கப்படும் பொழுது, இந்த உணர்வின் தன்மை குருவாக நின்று, உங்களையும் அங்கே அழைத்துச் செல்லும்.
(பக்கம் 121-124)
ஒரு மாமரத்தை எடுத்துக் கொண்டால், பிஞ்சாக இருக்கும் பொழுது, துவர்க்கின்றது. காயாகும் பொழுது புளிக்கின்றது. ஆனால், கனியாகும் பொழுது இனிக்கின்றது. கனியானபின், அதனின் சத்து அனைத்தும் வடித்து, அதன் வித்தாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான் நம் உயிரின் தன்மை,
நாம் பிஞ்சான தாவர இனங்கள் போல அந்தச் சத்தின் தன்மை,
இன்றைக்குப் பல உயிரினங்களாகத் தோன்றி,
பிஞ்சாகும் பொழுது, பரிணாம வளர்ச்சிகள் கொண்டு மிருக நிலைகளும் மற்ற நிலைகளும் அடைகின்றோம். நாம் அதாவது காயாகும் பொழுது, மனிதனாகி விடுகின்றோம்.

இப்பொழுது நாம் இந்த மனிதனானபின், இந்த உணர்வுகள் அனைத்தும், உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ, இதைப் போல உணர்வின் தன்மை இரண்டறக் கலக்கும் பொழுது, சுவை மிக்க இனிப்பாக மாறுகின்றது. ஆக இப்படி மாறும் நிலைகளில்தான், நம் உயிர் முழுமை பெறும் தன்மை பெறுகின்றது.

சூரியன் எப்படி அங்கு பிரகாசிக்கின்றதோ, இதைப் போல உணர்வின் சத்து கொண்டு, உணர்வுகள் உயிருடன் ஒன்றி, ஒளியாக வரும் பொழுது, இது அழியாச் சரீரமாக, என்றென்றும் நிலைத்த சரீரமாக அது நிலைத்திருக்கின்றது.

சாஸ்திரங்களில் எவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு. ஆனால், இந்த சாஸ்திரங்களை மாற்றியமைத்து, அந்த உண்மையினுடைய நிலைகளை அறிய முடியாத தன்மையாக, ஆக்கிவிட்டார்கள்.

வைகுண்ட ஏகாதசி. என்கிற பொழுது, இந்த உணர்வின் தன்மைகளை, நமக்குள் நினைவுக்குக் கொண்டுவந்து, இந்த உடலைவிட்டு இந்த ஆத்மா ஒளிச் சரீரமாக பெறப்படப் போகும் பொழுது, அந்த உணர்வின் உண்மையினுடைய நிலைகளை, அங்கேயிருந்து சூட்சம சரீரம் பெற்றபின், இந்த ஓம் என்ற பிரணவத்தின் தத்துவமும், இந்த உணர்வும் அனைத்தும் ஒளியாக மாறிய நாள்.

 வைகுண்ட ஏகாதசி அன்றுதான், நம் குருநாதர் உடலைவிட்டு ஒளிச் சரீரம் பெற்ற நாள். அந்த ஒளிச் சரீரம் பெற்ற இந்த நிலையைத்தான், இன்று உங்களுக்குள்ளும் அவர் காட்டிய அந்த உணர்வுகள், உங்களுடைய எண்ணங்கள் கூர்மையாக்கப்படும் பொழுது, இந்த உணர்வின் சக்தி கூர்ம அவதாரமாக நீங்கள் எடுத்து, அந்த உயிர்தான், அந்த ஒளியின் சரீரமாக நம்மை மாற்றுகின்றது.

ஆகவேதான், நாம் ஓம் ஈஸ்வரா என்கிற பொழுது, நமக்குள் ஜீவனாக இருந்து, எனக்குள் இயக்கும் உயிரைத்தான் ஈஸ்வரா என்று இங்கு சொல்கிறோம். ஆகவே, இந்த ஏழாவது தன்மையான இந்த நிலைக்கு, அப்புறம் எட்டாவது நிலை.

எட்டாவது நிலை என்கிற பொழுது, நமக்குள் எடுத்துக் கொண்ட
எந்த ரிஷியின் உணர்வின் சக்தியை நமக்குள் எடுத்தோமோ,
அவை அஷ்டதிக்கு பாலகர்கள்”.

நாம் ஒருவனுடைய நிலைகள், ஏழாவது அறிவின் தன்மை கொண்டு, கெட்டதை நீக்கி, மெய் ஒளியின் தன்மையை நமக்குள் எடுக்கப்படும் பொழுது, எட்டாவது நிலை அடைகின்றோம்.

ஆக, எத்திசையிலிருந்தும், எத்தகைய நிலைகள் இருந்தாலும், அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டுத்திக்கிலிருந்தும், ஒரு கோவிலில் ஒரு தெய்வத்தை, அந்த பாலகர்கள்தான் அங்கே காக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள்.

ஆகவே, நமக்குள் இந்த எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்தும் வரக்கூடிய அந்த நிலையை நீக்கித்தான், கெட்டதை நீக்கி, தன் உணர்வின் சத்தை அது காத்துக் கொள்கின்றது.

ஏனென்றால், அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் அந்த நிலையை மாற்றும் பொழுது, எப்படி தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின், அதில் உள்ள செம்பும், பித்தளையும். நீக்குகின்றதோ, இதைப் போல, நாம் அடிக்கடி அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது,
நம் உணர்வின் மணம் தீயதை நாடாது,
தனக்குள் அந்த ஒளியின் சரீரமாக, காத்தருளும் சக்தி பெறுகின்றது.

ஆகவே, இதிலிருந்து எட்டாவது நிலையை அடையப்படும் பொழுது, நாம் ஒன்பதாவது நிலை. நாம் உயிருடைய நிலையில் ஒன்றி, இந்த நவமி என்ற நிலையை, நாம் எண்ணத்தின் நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும், சொல்லின் தன்மைகள் கொண்டு, ஒன்பதாவது நிலை அடைகின்றது.

இந்த ஒன்பதாவது நிலை, நமக்குள் எட்டின் நிலையில் தீயதை நீக்கி, இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, ஒன்பதாம் நிலையை அடையப்படும் பொழுது, இந்த உடலைவிட்டு மீண்டபின், பத்தாவது நிலை. அதுதான் கல்கி அவதாரம் என்பது.

இப்பொழுது, நம் உடலிலிருந்து எட்டுத்திக்கிலும் காப்பது போல,
நாம் இந்த உடலைவிட்டு, உயிராத்மா வெளியே போனபின், கல்கி.
ஆக இன்னொரு உடல், (நம்மை) அந்த உயிரை,  நாம் இழுத்திடாத வண்ணம் தடுத்திடும் நிலைதான் பத்து,

அதாவது, பத்தாவது நிலை என்ற இந்த நிலைகளைக் காட்டி, இதிலிருந்து நீ விடுபடும் நிலையே தசாவதாரம், ஆக, இந்த உயிர் பத்தாவது அவதாரமாக, ஒளியின் தன்மை அடைவதுதான் பத்தாவது அவதாரம்.
(பக்கம் 133-153)
எமக்குப் படிப்பில்லை என்றாலும், இயற்கையின் இந்த உணர்வின் இயக்கச் சக்தியினுடைய நிலைகள் அனைத்தையும், நம் குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.

விண்ணுலக ஆற்றல் மண்ணுலகத்திற்கு வந்தபின், தாவர இனச் சத்தாக மாறியபின், அந்த மணத்தை நுகர்ந்து எடுத்த உயிரணு, தனக்குள் உணர்வின் சத்தாக வடித்து, அது எண்ணத்தின் தன்மையில் செயல்பட்டாலும், எந்தச் சக்தியை நுகர்ந்து, எந்த எண்ணங்களை வடித்ததோ, அந்தச் சத்தை உணவாக எடுத்து, அது அலையப்படப் போகும் பொழுது, அதே எண்ணத்தைக் கொண்டு ஏங்கி, அது கிடைக்காதபோது, உணர்வின் எண்ணங்கள் அது மாறுபட்டு அதனின் வழிகளிலே, எப்படி இது வளர்ந்தது? என்று காட்டுகின்றார் குருநாதர்.

தான் யார்?
நான் யார்?
இந்தப் பிள்ளை யார்?
என்று விநாயகரை வைத்து, பிள்ளையார் கோவிலுக்கு நாம் போகின்றோம் என்றால், இந்தப் பிள்ளை யார்? என்று கேள்விக் குறி போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

உயிரும் உடலும் தானாகின்றது. இப்பொழுது, சாதாரணமாக நாம் ஒருவனை உதைக்கிறேன் என்று வரும் பொழுது, நானாகின்றது. இந்த உதைக்கிற எண்ணத்தை நான் எடுக்கும் பொழுது, என் உடலுக்குள் இந்த உயிரும் இந்த உடலும் தானாகின்றது.

தானின் நிலைகள், நான் அடித்துவிடுவேன் என்று, இப்படி எண்ணும் பொழுது, அவன் எப்படி வேதனைப்படுகின்றானோ, அந்த உணர்வின் எண்ணம், எனக்குள் அது, தான் -- நான் ஆகின்றது.

அவன் எப்படி வேதனைப்படுகின்றானோ, அதைப் போல எனக்குள் அந்த எண்ணம் நானாக, “ஐய்யய்யோஎன்று நான் ஆகின்றேன்.

இந்த நான், எப்பொழுது அவனை அழித்துவிட வேண்டுமென்று எண்ணினேனோ, அதே எண்ணம் இந்த மனிதனுடைய நல்ல எண்ணத்தை அழித்து, அந்த உணர்வின் தன்மையாகும் பொழுது, அங்கே நானாகின்றது.

ஆனால், அந்த மனிதனுடைய உருவை, நான் உன்னை அழித்துவிடுவேன் என்ற எண்ணம், என்னையே அது அழித்து, மனிதனுடைய நிலைகளை அது மாற்றுகின்றது.
அதாவது, உலகத்திலே மனிதனான நீ
நல்லது செய்யப்படும் பொழுது,
உனக்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பான நிலைகள் ஏற்படுகின்றது?
அதிலிருந்து உன்னை நீ காப்பது எப்படி?
என்று காட்டினார் குருநாதர்

எனக்கென்ன சாமி தெரியும்? என்றோம்.

அப்பொழுது அவர், காட்டிற்குள் அழைத்துக் கொண்டுபோய், ஒரு பெரிய மரத்தை விரலை விட்டுக் காண்பிக்கச் சொல்கிறார். இதிலிருந்து, இத்தனை அடி தூரத்திற்கு இந்த மரம் சாய வேண்டுமென்று, சில விஷயங்களைச் சொல்லி, விரலை நீட்டச் சொல்கிறார்.

இந்த மரம், அங்கே போய்ப் பறந்து விழுகின்றது. அது விழுந்தவுடன், எனக்குத் திமிர் வருகின்றது. குருநாதர் எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்திருக்கிறார் என்றவுடன், விரல் நீட்டியவுடன், அவர் சொன்னது சொன்னபடி மரம் பறந்து போய் விழுகின்றது.

பிறகு ஒரு பெரிய பாறை, அதையும் கையை நீட்டினால், ஓடிப் போய், அங்கே போய் விழுகின்றது. விழுந்தவுடன் யாராவது நம்மை எதிர்த்தால், பார்த்துக் கொள்ளலாம். என்ற இந்த எண்ணம்தான் வருகின்றதே தவிர, இந்தச் சக்தியை ஏன் கொடுத்தார்? எதற்குக் கொடுத்தார்? என்கிற நிலை தெரியவில்லை.

இந்தச் சக்தியைக் கொடுத்தவுடன், ஒரே குஷியாக இருந்தது. இது உன்னைக் காத்துக் கொள்வதற்கு உதவும் என்றார். குருநாதர் சில சக்திகளைக் கொடுத்திருந்ததனால், ஒருவரிடம் விரலைக் கொடுப்பது, விரலைக் கொடுத்தவுடன், அவர் வலுவெல்லாம் இழந்து, “ஐய்யய்யோ, ஐய்யய்யோஎன்று போய் உட்காருகின்றார்.

உடனே எனக்கு குஷி வருகின்றது. இருக்கட்டும், “யார் வந்தாலும், பார்த்துக் கொள்கிறேன்என்ற, திமிர்தான் எமக்குள் வளர முடிந்ததே தவிர, நல்லதை எம்மிடம் வளர்க்க முடியவில்லை.

இந்த மாதிரி பல எண்ணங்கள் வரப்படும் பொழுதுதான், குருநாதர் உற்சாகம் ஊட்டுகின்றார். நீ எதை வேண்டுமானாலும் செய். இன்னென்ன வழிகளில் செய்தால், வருமானம் வரும், என்று ஆசையை ஊட்டி, “நீ சூட்டும் தைத்துக் கொள், கோட்டும் தைத்துக் கொள், பேன்ட் ஒன்று தைத்துக் கொள்என்று சொல்லிக் கொண்டு, நல்ல துணியெல்லாம் வாங்கிக் கொடுக்கின்றார்.

ஜிப்பா போட்டுச் சென்றால், உன்னைக் கண்டால் மதிப்பு வரும் என்று, இவ்வாறெல்லாம் சொல்லி, ஆசையைக் காட்டுகிறார். இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது, ஆசைக்குத் தகுந்த மாதிரியெல்லாம், வளர்த்துக் கொடுக்கிறார்.

நீ சூட்டும் கோட்டும் போட்டுக் கொண்டு வந்தால்தான், உன்னை மதிப்பார்கள். என்னைப் பிச்சைக்காரன் என்று மதிக்கிறதில்லை. என்னிடம் எவ்வளவு சக்தி இருக்கின்றது. ஆனால், என்னை எவரும் மதிக்க மாட்டேன் என்கிறார்கள். ஆகையினாலே, நீ கோட்டைப் போட்டுக் கொள், சூட்டைப் போட்டுக் கொள், அப்பொழுதுதான் உன்னை மதிப்பார்கள் என்கிறார் குருநாதர்.

எம்மை எங்கோ கொண்டு, பாதாளத்தில் தள்ளுகிறார் என்ற பயம் அப்பொழுதே எமக்கு வந்துவிட்டது. இவ்வளவு சக்தியைக் கொடுத்து, அடுத்து என்ன பண்ணுவதற்கு ஆரம்பிக்கப் போகின்றாரோ? என்று தெரியவில்லை.

பல கஷ்டங்களை அனுபவித்தோம். அவை எல்லாவற்றையும் சொன்னால், நீங்கள் மனதை விட்டுவிடுவீர்கள், என்று அதைச் சொல்லவில்லை. இலேசாக மட்டும் தொட்டுக் காண்பிக்கின்றோம்.

ஆகையினாலே, இவையெல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தவுடன், எமக்கு மனது என்ன இப்படிச் சொல்கிறாரே? என்றவுடன், கூடவே எமக்குத் திமிர் வருகிறது. இவ்வாறு ஆசை வந்து கொண்டிருக்கும் பொழுது, “இங்கே வாடாஎன்று, யானைகள் இருக்கும் காட்டிற்கு கூட்டிச் செல்கிறார் குருநாதர்.

சாயங்காலம் 6.00 மணிக்கு அங்கே செல்கின்றோம். அங்கே யானைகளைப் பிடிக்க, குழி தோண்டி தொப்பம் போட்டு வைத்திருப்பார்கள். அங்கே மனிதனைக் கண்டாலே, இந்த யானைகள் கொஞ்சம் வேலை செய்யும். அந்த மாதிரி இடத்தில் கொண்டுபோய் விட்டார், குருநாதர்.

நீ இன்ன இடத்திற்குப் போய், இன்ன செடியை (மச்சம்ஒரு அடையாளம்) எடுத்துக் கொண்டு வா என்கிறார்.

சரி என்று யாமும் புறப்பட்டோம். போகப்போகும் போது, பலம் கொடுத்திருக்கிறார் அல்லவா.
யானை வந்தால் என்ன? கல் வந்தால் என்ன? எது வந்தால் என்ன?
சக்தி இருக்கிறது. இப்படி விரலை நீட்டினால்,
யானையை தூக்கி எறிந்துவிடும்.
கல்லே வருகின்றது என்றால் தூக்கி அடித்தால் தீர்ந்தது.
இரவானாலும் பரவாயில்லை என்ற, இந்த உணர்வுடன் யாம் போய்க் கொண்டிருந்தோம்.

போய்க் கொண்டிருக்கும்போது, இடைவெளியில் திரும்பிக் கூப்பிட்டார், குருநாதர். இங்கே வா என்றார். நீ எங்கே போகிறாய்? என்று கேட்டார்.

நீங்கள் சொன்ன இடத்திற்கு, மச்சத்தை எடுக்கப் போகிறேன் என்றோம்.

இல்லை இல்லை, நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்று தெரியுமா? என்று கேட்டார்.

தெரியவில்லையே என்றோம். செடி இருக்கும் இடத்தை அங்கே போய்த்தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்று குருநாதரிடம் சொன்னோம்.

இது யானைகள் வாழும் இடம், மிருகங்கள் வாழும் இடம். உன் வீட்டிற்குள், ஒரு திருடன் வந்து புகுந்தால் விடுவாயா? தெரியாத ஆட்கள் வந்தால் விடுவாயா? என்றார்.

விடமாட்டேன் என்று சொன்னோம்.

ஆகையினால், சுதந்ததிரமாக வாழும் மிருகங்கள் இருக்கும் இடத்திற்கு, நீ போய் கொண்டு இருக்கின்றாய். அவை தன்னை தற்காத்துக் கொள்ள, உன்னை உள்ளே விடுமா? என்று கேட்டார். அது அடிக்கும் அல்லவா என்று கேட்டார்.

ஆக, உனக்கு யாம் சக்தி கொடுத்திருக்கிறோம். நீ எதை எண்ணிக் கொண்டு செல்கின்றாய். மரத்தைத் தூக்கி எறிந்த மாதிரி, கல்லைத் தூக்கி எறிந்த மாதிரி, யானையையும் மிருகங்களையும் நீ தூக்கி வீசி விடலாம் என்ற எண்ணத்திலேதான், நீ போகிறாய் என்று கேட்டார் குருநாதர்.

ஆமாம் என்று, பதில் அளித்தேன்.

இந்த உயர்ந்த சக்தியை நீ எடுக்கப் போகும்போது, நீ என்ன செய்யப் போகிறாய். என்று கேட்டார். யாம் உனக்குச் சொல்லிக் கொடுத்த சக்தி என்ன?

மனித உடலில் விளைய வைத்த, அரக்க குணமான அந்த சக்தி ஆக, புழுவிலிருந்து நீ மனிதனாக வரப்படும்போது மனிதனைக் கண்டால், எல்லா உயிரினங்களும் பயப்படும்.

ஆகவே, மனிதனுக்குள் ஓங்கி வளர்ந்த அவனது சூட்சும புத்தியும், அந்த உணர்வு கொண்டு எடுத்துக் கொண்டபின் இன்னொரு ஆத்மாவின் நிலைகளில், அவன் வலுகொண்டு இப்படி இரக்கமற்ற நிலைகள் செய்தானோ அந்த உணர்வு குவிக்கப்பட்டு, அந்த சக்தியை உனக்குள் சொல்லால் இழுக்கும்போது, எடுக்கிறது.

யானை அது யதார்த்தாமாக இருக்கும் இடத்தில், “நீ இந்த சக்தியை நுகர்ந்து, இந்த சக்தி கொண்டு அதைத் தூக்கி எறிந்துவிட்டு, அங்கே போனால் முதலில் கெடுவது யார்?” என்று கேட்டார் குருநாதர்.

பழக வேண்டுமென்ற சில நிலைகளில், இயற்கையினுடைய நிலைகளை யாம் முன் காட்டினோம். ஆனால், இந்த வாழ்க்கை நிலைகளில் இதை எடுத்துச் செல்லப்படும் போது, “உனக்கு இது வந்துவிட்டதுஇந்த மனிதனுடைய வாழ்க்கையைத்தான், நீ உனக்கு பிரதானமாக எண்ணினாய்என்று இதைக் காட்டினார், குருநாதர்.

நீ போகப்போகும்போது, முதலில் அதனுடையச் செயலை இழக்கச் செய்கிறாய், அதே சமயம் அங்கே செயலிழக்கும்போது, முதலில் உன்னிடத்திலுள்ள நல்ல குணமெல்லாம் செயலிழந்து விடுகின்றது.

ஆக, செயலற்ற எண்ணம் உனக்குள் வரும்போது, உன் நல்ல குணமெல்லாம், எப்படி செயலற்றுப் போகிறது? என்று எம்மைக் கூப்பிட்டுச் சொன்னார், குருநாதர்.

என்ன சாமி”, இவ்வளவு பெரிய சக்தி கொடுத்தீர்கள். காட்டிற்குள் போகச் சொல்கிறீர்கள். இவையெல்லாம் பார்த்தவுடன், யாம் என்ன செய்வது என்று கேட்டோம்.

அது எனக்குத் தெரியாது. நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய் அல்லவா. இது இப்படிச் செய்யும். நான் சொன்னதை எடுத்துக் கொண்டு வா.
நீ நல்லதைப் பெற வேண்டுமென்றால்,
இதிலிருந்து காக்க வேண்டுமென்றால்
உனக்கு எந்த  எண்ணம் வேண்டும்
என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
நீ பார்த்து எடுத்துக் கொண்டு வா என்றார், குருநாதர்.
நான் நல்லதும் சொல்லி இருக்கின்றேன், கெட்டதும் சொல்லி இருக்கின்றேன், இதை நீ பார்த்து எடுத்துக் கொண்டு வா என்கிறார்.

சாமி, நல்லது எதுவென்று தெரியவில்லை. கெட்டது எதுவென்று தெரியவில்லை, என்றோம் யாம்.

அது எனக்கும் தெரியாது. நீ போ. நான் சொன்னதை எடுத்துக் கொண்டு வாஎன்றார்.

யாம் என்ன சொல்ல முடியும்.

ஆனால், “நான் சொன்ன இந்த அசுரத்தன்மையான இந்தச் செயலைச் செய்தால், நீ இனிமேல், இந்த மனித ஜென்மத்தில் தான் இருக்க முடியுமே தவிர, இந்த மெய் ஒளியை நீ பெற வேண்டுமென்றால் முடியாது”.

ஒன்றுஇங்கே போகிறாயாஅல்லது, “அங்கே போகிறாயா?” அந்த உடலின் நிலைகள் எப்படி இருக்கின்றது? பார், என்று கூப்பிட்டுக் காட்டுகிறார் குருநாதர்.

காட்டிற்குள் இருந்து கொண்டிருக்கிறோம், எனக்குச் சக்தி கொடுத்திருப்பதனால், “அவனை மிரட்டலாம், இவனை மிரட்டலாம்என்று, எமக்குத் திமிர் ஏறுகின்றது. பையன் இப்படிப் போய்விட்டான், பரவாயில்லை, “எப்படியோ, இரண்டு காசு சம்பாதித்து விடலாம்”.

சம்பாதித்து, கஷ்டங்களை நீக்கலாம் என்ற இந்த எண்ணம்தான் எமக்குள் ஓடிக் கொண்டிருந்ததே தவிர, அந்த நல்ல எண்ணங்கள் வரவில்லை.

அசுர உணர்வின் சக்தி எமக்குள் வரும்போது, இந்த முரட்டுத் தனமான தன்மைகள் தான் வந்தது. அதை பரிசீலிப்பதற்காகத் தான், இங்கே வந்து எமக்கு இந்த உபதேசத்தை கொடுக்கிறார், குருநாதர்.

ஆக, அங்கே அந்தக் காட்டிற்குள் கொண்டு வந்து இருக்கவிட்டு, இப்படியும் திண்டாட வைக்கின்றார். அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றவுடன் நான்கு பாதைகள் வருகின்றது.

ஏற்கனவே, நான் வேட்டைக்குச் சென்று வந்ததனால், யானைகளின் பழக்கங்கள் தெரியும். மனிதனுடைய வாசனையை நுகர்ந்தால், மிகவும் அமைதியாக இருக்கும். யானை மறைந்திருந்தால், யானைக்கு மேலே இருக்கும் இலை மட்டும்தான் அசையும். யானைக்குக் கீழே இருக்கும் அசைவதை எல்லாம் மறைத்துவிடும்.

யானை இருந்து, மேல் கிளைகள் ஆடி, கீழே எதுவும் அசையவில்லை என்றால், யானைகள் ஒளிந்திருக்கும் என்று அர்த்தம். மனிதனுடைய வாசனையைக்  கண்டால்கம்மென்றுஅசையாமல் இருக்கும். எங்களைப் பார்த்தவுடன், அமைதியாக இருக்கின்றது. வரிசையாக நான்கு, ஐந்து யானைகள் இருக்கின்றது.
இவைகள் நின்று கொண்டிருக்கும் இடத்தில், “ஒரு புறம் சுத்தமாக இருக்கின்றதே?” கூட்டமாக வந்துவிட்டதே, தொப்பம் போட்டு யானையைப் பிடிக்கும் இடம் இதுதானே, என்று பயம் வந்து விட்டது.

பயம் வந்தவுடன், குருநாதர் கொடுத்த சக்தியும் போய்விட்டது. காப்பாற்றுவதற்குச் சொன்ன சக்தியும் போயிட்டது.இனி என்ன செய்வது”, என்ற பயம்தான் வந்தது.

இந்த பயம் வந்தவுடன், எனக்கு நடுக்கம் வருகின்றது. அசையாமலே இருந்த யானைகள், அடி எடுத்து வைத்து, நெருங்கி வருகின்றது. உண்மையிலேயே, யாமும் அதன் அருகில் நெருங்கிப் போய்விட்டோம்.

நெருங்கிப் போனவுடன், என்னை அறியாமலேயே வேஷ்டியில் மலம் கழிந்துவிட்டோம். கிட்டத்தில் வரும்போது என்ன செய்வது? இவர் கொடுத்த சக்தியும் போய்விட்டது. அதுவும் போய்விட்டது.

அப்பொழுது குருநாதர், முன்னே வைத்த காலை, பின்னே வைக்காதேடா, போடாஎன்றார்.

சாமி, பக்கத்தில் வந்துவிட்டேன். முன்னாடி கால் வைத்தால் போச்சுஎன்று சொல்லிக் கொண்டே, யானையின் அருகில் போனவுடன், எமக்கு ஒன்றும் தெரியவில்லை.

அப்பொழுது, நான் குருதேவரை நினைத்தேனே தவிர, அவர் சொல்லிக் கொடுத்த, சில உண்மையினுடைய உணர்வை நான் நினைக்கவே இல்லை.
துன்பங்கள் வரும் பொழுது, யாம் உங்களைஆத்மசுத்தி செய்யுங்கள்சொல்லுகின்றோம். திடீர் என்று, யாராவது கஷ்டமாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள் என்றால், நீங்கள் அந்தப் பாசத்தில்ஆத்மசுத்திசெய்வதை விட்டுவிட்டு உனக்கு இப்படி ஆகிப் போய்விட்டதேஎன்று வேதனையைத்தான் எடுத்துக் கொள்வீர்கள்.

இதற்காக வேண்டி, யானைக் காட்டிற்குள் அந்த இடத்தில் காட்டுகின்றார், குருநாதர் எம்மிடம், உனக்குக் கொடுத்த சக்தியை, சந்தர்ப்பத்தில் நீ எடுக்க முடியவில்லை என்று சொல்லுகின்றார்.

அதே மாதிரித்தான், நீங்கள் துன்பமான செய்திகளைக் கேட்கிறீர்கள், கஷ்டமான நிலைகள் வந்துவிட்டது என்றால், யாம் சொன்னதைஈஸ்வராஎன்று பய உணர்வுடன் தான் நீங்கள் எடுக்கிறீர்களே தவிர, அந்த நல்ல உணர்வை எடுக்க முடியவில்லை.

அங்கே காட்டிற்குள் யாம் என்ன செய்கிறோம்? நம் குருதேவரை நினைத்து, வேதனையுடனும் பய உணர்வுடன் தான் எடுக்க முடிகின்றது. அப்பொழுதுதான்,
நீ முன்னே வைத்த காலை, பின்னே வைக்காதே,
முன் வைத்த காலை, பின் வைக்காதே,
என்று சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார், குருநாதர்.
குருநாதர் நினைவுபடுத்துகிறார்.
தன்னைக் காக்கக்கூடிய எண்ணத்தினுடைய நிலைகளை
எமக்குள் நினைவுபடுத்தி,
உனக்குள் நான் கொடுத்தது என்ன? என்று
எமக்குள் அந்த உதயத்தைக் கொடுக்கிறார்.

கிடுகிடுஎன்று நடுக்கமாகும்போதுதான், அந்த இடத்தில் அனுபவப் பூர்வமாகக் கொடுக்கிறார். “யானையினுடைய வாசனையை, உனக்குள் சேர்த்து இழுத்துக் கொள்என்கிறார்.

இதைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதற்கு ஒரு பரிபாஷையையும் சொல்லியிருந்தார். பரிபாஷையைச் சொன்னவுடன், யானையினுடைய வாசனை வருகின்றது.

அதை நுகர்ந்து பார்த்தவுடன், எவ்வளவு வேகமாக யானைகள் வந்ததோ, அதனுடைய நிலைகளெல்லாம் நகர்ந்து விடுகின்றது. அதை நட்பாக்கும் நிலை வரும்போது, உனக்குள் நட்பாகின்றது. அதே சமயத்தில், உன் பயத்தால் வரும்போது, என்னை (குருநாதரை) எப்படி எண்ணினாய்? என்று சந்தர்ப்பத்தில் நிறுத்தி, உணர்த்துகின்றார்.
அதாவது, அந்த யானைக்கு என்ன வாசனையோ,
அந்த வாசனை வரப்படும்போது,
அதே வாசனை, அதே எண்ண அலைகள் அதற்குள் பாயும்போது
எப்படி ஆகின்றது? என்று அதை எடுக்கச் சொன்னார்.

உள்ளே இருக்கும் உணர்வை எடுத்துக் கொண்டபின், குரு வழிகாட்டிய நிலைகள் அங்கே வருகின்றது. அதற்குத்தான், உங்களை ஆத்மசுத்திசெய்துக் கொள்ளுங்கள் என்று, யாம் அடிக்கடி சொல்வது.

எனக்கு சாமி சொல்லியிருக்கின்றார் என்றுஆத்மசுத்திசெய்யும் பொழுதும், “இப்படி இருக்கின்றதுஎன்கிறார்கள். வேதனையைக் கலந்து எடுத்தால், உங்களுக்கு பயனற்றுப் போய்விடுகின்றது.

ஆகையினாலே, அந்த இடத்தில் சக்தியினுடைய நிலைகளைக் கொடுத்தாலும், கெட்டதன் நிலைகளில் நீ எங்கே போகின்றாய்? ஆனால், உயர்ந்த நிலைகள் எடுத்து சமத்துவப்படுத்தும்போது எப்படி வருகின்றது? என்று தெளிவாக குருநாதர் உணர்த்துகின்றார்.

குழம்புடன் கலந்து இருக்கும்போது, சுவைமிக்கதாக ஆகின்றது. குழம்பில் சிறிது காரம் அதிகமாகப் போட்டால், இருக்கும் சாப்பாடெல்லாம் சாப்பிடமுடியாமல் போய் விடுகின்றது.

தனித்துக் காரத்தைச் சாப்பிட்டால், எச்சில் எங்கோ ஓடிவிடுகின்றது. ஆனால், மற்ற பொருளுடன் இந்தக் காரத்தைக் கலந்து சாப்பிட்டால், அது உமிழ்நீரைக் கூட்டி, ரசித்து சாப்பிடும் நிலையாகின்றது.

அதைப் போல, இந்த உணர்வின் எண்ணங்களும், அந்த எண்ணத்தின் நிலைகளில்,
நீ அதிலிருந்துதான் இங்கே வந்தாய்”,
புழுவிலிருந்து மிருகமாக வந்து,
அதன் நிலைகளில் நீ மனிதனாக ஆனாய்.
ஆகவே, “அதே உணர்வு உனக்குள் உண்டு”.

ஆனால் சமத்துவமான நிலைகளில் எண்ணப்படும்போது, இந்த உணர்வைநீ உன்னால் எடுக்க முடியும்என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றார் குருநாதர்.

பின், யாம் அதனுடைய உணர்வை எடுத்து சுவாசிக்கும்போது, அந்த நட்பின் தன்மை வருகின்றது. யானைகள் அனைத்தும் அமைதியாகப் போய்விட்டது.

யானைக் காட்டிற்குள் இருந்து வந்தவுடன், அமர்ந்து இரவு 12.00 மணி வரையிலும், கதையைச் சொல்லிக் கொண்டே வந்தார் குருநாதர்.

சரியாக இரவு 12 மணி ஆனது. “பளீர்என்று ஒரு வெளிச்சம் தெரிந்தது. பார்த்தவுடன் ஜெகஜோதியாக இருக்கின்றது. எமது ஆயுளில் அந்த மாதிரிப் பார்த்ததே இல்லை. பராசக்தி மாதிரி, பெரிய தேவதை உட்கார்ந்திருந்தது. அவ்வளவு அழகாக இருக்கிறது.

பார்த்தால், ஒரு கிண்ணத்தில், வைரம் இருக்கின்றது, ஒரு பக்கம் தங்கம் இருக்கின்றது, ஒரு பக்கம் வைடூரியம் இருக்கின்றது. இன்னும் என்னென்னவோ இருக்கின்றது.

இங்கே எம்மைக் கிள்ளுகின்றார் குருநாதர். “நிஜம் தான்டா, உண்மை தான்டா”, நீ கனா பார்க்கவில்லை, உண்மை தான்டா என்று எம்மைக் கிள்ளுகின்றார். நாலாபக்கமும் கிள்ளுகின்றார். “நிஜம் தான்டாஎன்று கிள்ளுகிறார்.

யானைக்குப் பலமா? எனக்குப் பலமா?” என்று எம்மிடம் காட்டியவர். யானை இவரைக் கண்டால் பயந்து ஓடுகிறது. தும்பிக்கையைப் பிடித்து நிறுத்துகிறார். யானையே பயந்து கொள்ளும் பொழுது, எம்மை அவர் கிள்ளினால் எப்படி இருக்கும்? நிஜமாகத்தான் இருக்கும் என்று, கிள்ளிக் கிள்ளிக் காண்பிக்கின்றார்.

கிள்ளிக் காண்பித்தவுடன், “இல்லை சாமிஎன்கிறேன் நான்.

இங்கே வாடா, என்று கூட்டிக் கொண்டு செல்கிறார் குருநாதர். “இதைத் தொடுடாஎன்கிறார். தொட்டால், அங்கே இருக்கக் கூடிய வைரங்களையும், வைடூரியங்களையும், “கையிலே அள்ளுடாஎன்கிறார். கையிலே அள்ளிப் பார்த்தவுடன், இவையெல்லாம் நிஜம் தானடா? என்று எம்மைக் கேட்கின்றார்.

ஆமாம் சாமி”, எல்லாம் நிஜம்தான் என்று நான் சொன்னேன்.

அதற்கு குருநாதர், இதை வாங்கினால் என்ன செய்வாய்? என்று எம்மிடம் கேட்டார்.

வாங்கினால் தர்மம் பண்ணுவேன் என்றேன். 
குருநாதர் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். வாங்கினால் தர்மம் செய்வேன் என்று யாம் சொன்னதற்காக, ஓங்கி ஒரு அறை கொடுத்தார். தலை கிறு கிறு என்று சுற்றியது. சாமியைக் காணோம், அந்தப் பொருள்களையும் காணோம். எல்லாமே மறைந்துவிட்டது.

குருநாதர் எமக்கு விளக்கம் கொடுக்கின்றார். தர்மம் என்று நீ செய்தால், நியாயமாக இருப்பவன் அருகில் வந்து வாங்க முடியாது.

சாப்பாடு போடுகிறாய், தர்மம் செய்கிறாய் என்றால், வருபவன் ஆயிரம் கஷ்டங்களைச் சொல்லி, அதை அவன் வாங்கி அது கெட்டதற்குத்தான் போகுமே தவிர, நீ நல்லதை தர்மம் பண்ணி நல்லதாக்க முடியாது. தர்மம் என்றால் என்ன?என்பதை நீ புரிந்து கொள் என்றார் குருநாதர்.

ஒருவன் சிரமப்படப் போகும் பொழுது,
நல்லதைச் செய்ய முயற்சிக்கின்றான் என்றால்,
அந்த நல்ல வழியைக் காட்டி,
நல்ல உபதேசத்தைக் கொடுத்து, நல்லதைச் செய்து,
அவனுக்குப் பொருளைக் கொடுத்தால்,
அவன் அதைக் காப்பான்.

அது இல்லாதபடி செய்தால், நீ தர்மம் செய்யப்படும் பொழுது, ஆயிரம் பொய்களைச் சொல்வான், இரக்கமாகச் சொல்வான். அதே சமயத்தில், நல்லவன் ஒருவன் இருந்தானென்றால், அவனை இப்படி இருக்கிறான், அப்படி இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு உன்னிடம் ஒண்டுவான்.

கெட்டது எல்லாவற்றையும் அவன் மேலே சொல்லி, நல்லவனைக் கெட்டவனாக்கிவிட்டு, உன்னிடம் பாசமாக நடித்து, உன்னிடம் வாங்கித் தின்பதற்கு வருவான். இதுதான் தர்மமாகிப் போகும்.

ஆக, நீ சாப்பாடு போடுவதால், என்னென்ன நிலை இருக்கிறது? தர்மத்தை நீ எப்படியடா காக்கப் போகிறாய்? இவ்வளவு சிரமப்பட்டு தர்மம் செய்தால், முன்னாடி வருபவன், நல்லவனைத் தள்ளிவிட்டுவிடுவான். நல்லவனுக்குப் போட முடியாது. ஆக நீ எந்த அளவில் தர்மம் போடப் போகிறாய்? என்று கேட்டார் குருநாதர்.

யாம் அவரிடம் அடி வாங்கியதுதான் மிச்சம். அவ்வாறு அந்த அடி வாங்கியபின் தான், தர்மம் என்றால் என்ன? என்று இந்த விளக்கத்தைச் சொல்கின்றார் குருநாதர்.
(பக்கம் 153-157)
தர்மம் செயவதைப் பற்றி அறிவதற்காக வேண்டி, குருநாதர் எம்மை இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறார். ஒருவருக்குப் பணம் வரவில்லை. அவர் எனது நண்பர். அந்த நண்பர் ஒருவருக்குக் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்த இடத்தில் இருந்து, பணம் திரும்ப வரவில்லை,

பணத்தைக் கொடுத்த, அந்த நண்பர் என்னைத் தேடி வருகிறார். நீ சாமியிடம் (குருநாதரிடம்) போய்க் கொண்டிருக்கின்றாயே, எப்படியாவது அவரிடம் சொல்லி, வராத இந்தப் பணம் வந்துவிட்டால், உனக்கு வேண்டியதைச் செய்கின்றேன், என்று எம்மிடம் சொல்கின்றார்.

அந்தப் பணத்தை அவனிடம் விடுவதற்கில்லை. இல்லை என்று சொல்லிவிட்டான். அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும். அந்தப் பணத்தை வாங்க வேண்டும். உன் குருநாதரிடம் சொல்லி வாங்கிக் கொடு, என்று எம் நண்பர் கேட்டார்.

என்னால் குருநாதரிடம் கேட்க முடியாது, இதெல்லாம் வம்பான நிலைகள். எதாவது ஆகிவிட்டால், நான் சிக்கிக் கொள்வேன் என்று, யாம் நண்பரிடம் கூறினோம்.

நண்பரோ, சும்மா உன் குருநாதரிடம் கேட்டுப்பார் என்றார்.

நான் இங்கிருந்து போனவுடன், குருநாதர் எம்மைப் பார்த்து, “நீ சரி என்று சொல்ல வேண்டியதுதானடாஎன்கிறார். பணம் அனைத்தையும் உன்னிடம் தருகிறான், “வாங்கிக் கொள்ளடாஎன்று சொல்கின்றார்.

எனக்குத் தெரியாது சாமி, என்றேன்.

தெரியாதவன் ஏன்டா இங்கு வருகிறாய்? அப்படியே எம்மிடம் வம்பு செய்து, அதைச் சொல்லி, இதைச் சொல்லி, கடைசியில் வாங்கிக் கொள் என்கிறார் குருநாதர். “கிடைக்கும்என்று அவனிடம் போய்ச் சொல் என்று, சொல்கின்றார்.

அவ்வாறு சொல்லியவுடன், அவருக்குப் போன பணம் வந்துவிட்டது. அவர் என்ன செய்கிறார்? அவர்களிடம் பணத்தை விட்டுவிடக் கூடாது. எப்படியாவது, தர்மத்திற்காவது செய்து விடுவேன். விடக்கூடாது என்ற எண்ணத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டு, நேராக எம்மிடமே கொண்டு வந்தார்.

கொண்டு வந்தவுடன், குருநாதர், சீட்டைக் கையில் கொடுத்து, பழனியில் எத்தனை சாமியார்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கெல்லாம் சீட்டைக் கொடு என்கிறார்.

சீட்டைக் கொடுத்து நீ சொல்லும் பொழுது, இலவசமாக இரண்டு வேஷ்டி, அதில்ரூபாய், முழுச் சாப்பாடு, அவர்களுக்கு வேண்டிய பலகாரம், பாயாசம் இதெல்லாம் உண்டு என்று சொல்ல வேண்டும் என்றார்.

ஆக, ஒரு இலைக்கு ரூபாய் 6 முதல் 8 ரூபாய் வரை ஆனது. எல்லாவற்றையும் இலை போட்டு, பந்தி போட்டுக் கொடுக்கச் சொன்னார். சுமார் 4000 பேர், பழனியில் பிச்சை எடுப்பவர்கள், சாமியார்கள் இருந்தார்கள்.

இவ்வளவு பேருக்கும் சாப்பாடு தயாராகிவிட்டது. அனைவருக்கும் டிக்கெட் கொடுத்து, எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்துவிட்டார் குருநாதர்.

அங்கே பழனி தேவாஸ்தான சத்திரத்தில் ஓட்டல் ஒன்று உண்டு. சாப்பாடு வந்தவுடன் முழுவதுமாகப் போட்டு விடவேண்டும். ஆனால், எல்லோரையும் ஒரே நேரத்தில் சாப்பிட வைக்க வேண்டும் என்று, அங்கே உள்ளவரிடம் குருநாதர் சொல்லிவிட்டார்.

வேஷ்டி, துண்டு எல்லாம் வாங்கிவந்து வைத்துக் கொண்டு, வரிசையாக வரச் சொல்கின்றார். டிக்கெட்டும் கொடுத்துவிட்டோம். எல்லோரும், “ஓம் ஈஸ்வரா”, ஒம் நமச்சிவாயஎன்று சொல்லிவிட்டு, சாப்பிட வேண்டும் என்றார் குருநாதர்.

சாப்பிடும் பொழுது, வேஷ்டி, துண்டு, ரூபாய், எல்லாவற்றையும் அவர்களிடம் கொடுக்கச் சொன்னார். எல்லோரும் வரிசையாக நிறகும் பொழுது, அங்கிருந்து ஒருவன் ஓடி வந்தான், முதலில் வந்தான். அவனை உள்ளே விட்டு விடச் சொன்னார் குருநாதர்.

விட்டுவிட்டோம். அவனை விட்டவுடன், மற்றவர்களெல்லாம் முதலில் இருப்பவரை விலக்கிவிட்டு, கிடுகிடு என்று எல்லோரையும் தள்ளிவிட்டு, காசு துணிமணி போனாலும் பரவாயில்லை, நாம் அங்கு உட்கார்ந்து கொள்ளலாம், என்று வேகமாகத் தள்ளிவிட்டு, திமு திமு என்று சென்று, சாப்பாட்டை எல்லாம் மிதித்துவிட்டார்கள்.

பார்த்தாயாடா? தர்மம் தலைகாப்பதைஎன்று குருநாதர் எம்மிடம் சொன்னார். அவன் சாப்பாட்டிற்கும், துணிக்கும் தான் இந்த நிலை. சாப்பாட்டைப் பற்றி அவன் நினைக்கவில்லை. வேஷ்டி, துண்டை விற்றால், நாளைக்குக் கஞ்சா அடிக்கக் காசு கிடைக்கும் என்று, இப்படிச் செய்கின்றார்கள்.

அவன் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல்
தவறான நிலைக்குப் போய்த்தான்,
இந்த நிலைக்கு வந்திருக்கின்றான்.
அவனுக்கு அறிவு இல்லையென்றால்,
நீ தர்மம் கொடுத்துப் பிரயோஜனம் இல்லை என்றார், குருநாதர்.

அவனுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும். ஆக, நீ முதலில் அறிவைக் கொடுத்து, பின் உணவைக் கொடுத்தால், அந்த உணர்வின் தன்மை இருக்கும் என்று, அந்த தர்மத்தைப் பற்றிக் கூறினார் குருநாதர். முதலில், அங்கே அடி கொடுத்ததற்குப் பதில், இங்கே அதைச் செய்தே காட்டுகின்றார்.

யாருக்கும் அறியாத சந்தர்ப்பம், முதலில் தீய நிலைகளில் இட்டுச் செல்கிறது. ஆனால், அவனறியாமலேயே அந்த வலைகளில் சிக்குகின்றான்.
அவனை மீட்டும் நிலைகளில்,
நீ எண்ணத்தைக் கொண்டு,
நல்லறிவை அவனுக்குப் புகட்டு.
அதன்பின், நீ கொடுக்கும் பொருள் அவனிடத்தில் வளரும் என்று, தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
(பக்கம் 157-161)
ரோட்டில் ஒருவன், “ஐயா பசிக்கின்றதேஎன்று கேட்கின்றான். உணர்வின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவரப்படும் பொழுது, அவன் எத்தனை வேதனைப்பட்டானோ, நாம் இரக்க உணர்வுடன் பார்க்கப்படும் பொழுது, “ஐயாஎன்கிற பொழுது, இரக்கத்துடன் உதவி செய்கின்றோம்.

இந்த உணர்வுகள், நமக்குள் எப்படிப் பதிவாகின்றது? பதிவானபின், தர்மம் செய்கிறவனுடைய நிலைகளில், பின்னாட்களில் எப்படி அவஸ்தைப் படுகின்றார்கள்?

 நோய்வாய்ப்படுகிறார்கள். இத்தனை தர்மத்தைச் செய்தேன். எனக்கு இப்படியெல்லாம் நோயாகிறதே என்பார்கள். அவர்கள் இரக்க குணம் இப்படி ஆகின்றது.

இரக்கப்பட வேண்டும். அதை எப்படிச் செய்ய வேண்டும்?
ஆனால், இரக்கம் எந்த நிமிடம் இருக்க வேண்டும்?
எத்தனை நிமிடம் இருக்க வேண்டும்?
அந்த இரக்கத்தை மாற்றி, அந்த இரக்கத்தை அறிந்து கொண்டாலும், இதை மாற்றி, உயர்ந்த எண்ணங்கள் கொண்டு, தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்? ஆக, இதைக் காப்பதற்கு நாம் எதை வைத்துக் கொண்டிருக்கின்றோம்?

இன்று, நல்லவர்கள் பெரும்பகுதியானவர்கள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு, அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் என்னென்ன வழிகளில் அவஸ்தைப் படுகிறார்கள்? அதிலிருந்து காப்பது எது? ஆக, எவ்வளவு பெரிய சக்தி கொண்டு, இரக்கமான நிலைகள் கொண்டு,
தர்மம் செய்தேன் என்று வரப்படும் பொழுது,
அவருக்கு நல்ல உணர்வும்
நல்ல நிலையும் கொடுக்கவில்லை என்றால்,
அதைக் காக்கும் நிலை இல்லை.
எந்த நிலை அடையும் என்று இதை உணர்த்தினார், குருநாதர்.

அப்பொழுதுதான், இந்த உணர்வுகளைச் சொல்லி ஒவ்வொன்றுக்கும் நாம் இரக்க உணர்வுடன் மற்றவர்களுக்குத் தர்மம் செய்யப்படும் பொழுது, அவனுடைய ஏக்கமான உணர்வுகள் இங்கே வருகின்றது.

நமக்குள், அவனுடைய துன்பத்தை நுழைய விடாதபடி, செய்யவேண்டும். அப்பொழுதுதான், இந்த ஆத்ம சுத்தி என்று, நீ ஒவ்வொரு நொடியிலேயும் நான் கொடுத்த இந்த உணர்வை ஈஸ்வராஎன்று உயிரை வேண்டி, இந்த ஏக்க ஓட்டத்தை அதிகமாகக் கூட்டு, என்கிறார் குருநாதர்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று, வானை நோக்கி ஏங்கி எண்ண வேண்டும் என்று சொல்கின்றார் குருநாதர். அவ்வாறு வானை நோக்கி, அந்த உணர்வின் சக்தியை உனக்குள் எவ்வாறு செலுத்த வேண்டுமென்று இந்த நிலையைச் சொல்லி, மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணச் சொன்னார்.

நாம் ஒருவருக்குத் தர்மம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவர் மரணமடையும் பொழுது, என்ன செய்கிறார்?
அவர் குழந்தைகள் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை.
ஆனால், நான் காப்பாற்றி இருக்கிறேன்.
மரணமடையப்படும் பொழுது என்ன எண்ணுகிறார்?
அந்த மகராசன் நல்லது செய்தார்.
என் (அவருடைய) பிள்ளைகள் தொல்லை கொடுத்தால்,
அவர்கள் மேல் வெறுப்பும்,
நம் மேலே பாசமும் கொள்ளும் பொழுது,
அந்த உயிராத்மா உடலை விட்டு வந்தபின்,
அது நேராக என் நினைவுடன் வருகின்றது.

நம்மிடம் ஒருவர்உனது நண்பர் போய்விட்டார்என்று சொன்னால் போதும், “நல்ல மனிதன்”, அவருக்கு உதவி செய்தேன் என்று எண்ணினால் போதும். நான் எங்கேயும் போகவில்லை, நேராக உன்னிடம் வந்து விடுகிறேன் என்று, நேராக இங்கே வந்துவிடும்.

நீ தர்மத்தைச் செய்தாய். அதே உணர்வு இயக்கப்படும் போது, நீ அறியாத நிலைகளில் பாசத்தை செலுத்தினாய்”. “ஆக செய்தும் இந்த மாதிரி ஆகிவிட்டதேஎன்ற ஏக்கம் வரும்போது அந்த ஆத்மா இங்கே வந்துவிடுகிறது.

அந்த ஆத்மா இங்கே வந்தபின், அவன் எந்தத் துயரப் பட்டானோ, அது இங்கு வந்துவிடுகின்றது. ஆனால் மனித இயல்பு, தர்மம் ஒன்றை மட்டும் தான் செய்யச் சொல்லியிருக்கிறார்களே தவிர, நம்மைக் காப்பதற்கு என்ன சொன்னார்கள்?
அதற்குத்தான், இந்த விநாயகரை எப்படி வைத்தார்கள்? விநாயகரை வைத்ததின் நிலைகள் -- ஏன்? என்ற கேள்விக்குறி போட்டு, இந்த தர்மத்தின் எல்லைகளை தெளிவாக அங்கே உணர்த்துகின்றார். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

மகரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டும். என் உடல் முழுவதும் படர வேண்டும், என் ஜீவாத்மா பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

இப்பொழுது செம்பும் வெள்ளியும் வைத்து, அதை இணைத்து ஒரு நகையைச் செய்கிறோம். அடுத்த நகை செய்யும் போது, திரவகத்தை விட்டு அதை நீக்கிவிட்டு, அதைச் சுத்தப்படுத்தி அடுத்த நகையைச் செய்கின்றோம்.

அதே மாதிரி, ஒருவரிடத்தில் இரக்கமான உணர்வுடன் பட்டாலும், அவர் உடலின் நிலைகளை இழுத்து, சுவாசிக்க நேருகின்றது. அந்த உணர்வின் சக்தி நம் உடலுக்குள் பட்டு, அது இயங்கி, அதனுடைய செயலுக்கு நாம் செல்லுகின்றோம்.

அவர் உடலில் விளைய வைத்த உணர்வின் சத்து, எனக்குள் விதைக்கப்பட்டு எனக்குள் எவ்வாறு  நோயாக வருகின்றது. அதை உடனுக்குடன் காட்டினார்.

ஒவ்வொருவருக்கும் தர்மம் செய்யப்படுபோது, ஒவ்வொரு உணர்வின் நிலைகள் எப்படி வருகின்றது? அந்த உணர்வு உனக்குள் எப்படி பாதிக்கின்றது? இதை நீ எப்படி மாற்றவேண்டும்? என்று உணர்த்துகின்றார் குருநாதர்.

மனிதனான நாம் நல்லதைத்தான் எண்ணுகின்றோம்.
நல்லதைக் காக்கும் திறனற்றவர்களாக இருக்கிறோம்.
நல்லதைக் காக்கும் திறன் அந்த சக்தி நமக்குள் உண்டு. அதை நாம் தட்டியெழுப்ப வேண்டும்.

அதற்குத்தான், யாம் இப்பொழுது குருநாதர் காட்டிய அருள் உபதேசமும், தியானமும், அந்த அருள் உணர்வுகளையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம். எமது அருளாசிகள்.
(பக்கம் 162-166)
உங்களை அறியாமல் வந்த தீமைகளை நீக்க, உங்களுக்குள் இருக்கக் கூடிய திறனைக் கொண்டுதான், உங்கள் எண்ணத்தாலேதான் முடியுமே தவிர,
சாமியார் காப்பாற்றுவார்,
ஜோசியம் காப்பாற்றும்,
ஜாதகம் காப்பாற்றும்,
மந்திரம் காப்பாற்றும்,
யாசகம் காப்பாறும்
என்றால், யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.

ஆக, கடனுக்காக நான் செய்தேன் என்ற நிலைதான் வருமே தவிர, உங்களுக்குள் ஈசனாக வீற்றிருக்கும் இந்த உணர்வின் தன்மையும், உங்களுக்குள் மறைந்திருக்கும் இந்த உயர்ந்த உணர்வின் சக்தியை, நாம் தட்டியெழுப்ப வேண்டும்.

அப்படித்தான் நமது குருநாதர் தட்டியெழுப்பி, அந்த நல்ல உணர்வின் தன்மையைத் தூண்டச் செய்து, நமக்கு முன் படர்ந்திருக்கக்கூடிய மெய் ஒளியைத் தனக்குள் எடுத்துச் சுட்டுப் பொசுக்கி அதிலே விளைந்த வாக்கின் தன்மை கொண்டு, பிறரிடத்தில் நீ நல்லதாக வேண்டுமென்ற எண்ணத்தில் நீ சொன்னால், அங்கே நல்லதாக வேண்டும் என்று எமக்குச் சொன்னார்.

இதற்கு பரிச்சாந்திரமாக, நீ இன்னென்ன எடுத்து, இந்த நிலைகளில் நீ செய்யும் பொழுதுதான், உன் வாக்கின் தன்மை நல்லதாக வேண்டும். நீ சாதாரணமாகச் சொன்னால்கூட, உன் சொல்லின் வாக்கின் தன்மை, அங்கே நன்மையாக்க வேண்டும். அப்பொழுது, அந்தச் சொல்லின் தன்மை உனக்குள் வளர்கின்றது.

அதனால்தான், தியானத்திற்கு யாரும் வந்தார்கள் என்றால், ஆத்ம சுத்தி செய்துவிட்டு, மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள், நன்றாக ஆகிவிடும், என்று சொன்னால் அங்கே நல்லதாகி விடுவதைப் பார்க்கலாம்.
அப்பொழுது, அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மகராசன், நீங்கள் சொன்னீர்கள், நான் நன்றாக இருக்கிறேன்.
ஆக, வரம் எங்கே வாங்குகின்றோம்?
ஒரு துன்பமற்ற உடலிலிருந்து வாங்குகிறோம்.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான், அப்பொழுதுதான் இங்கே போகரைக் காட்டுகின்றார். போகன் ஒவ்வொரு நிலையையும் நுகர்ந்தான். அந்த உணர்வின் சக்தியை, தான் அறிந்தான். அவ்வாறு, ஒவ்வொரு சக்தியையும் தனக்குள் நுக்ர்ந்து, தனக்குள் எடுத்துக் கொண்டபின், துன்பப்பட்டவனுடைய உணர்வுக்குள் பாய்ச்சி, இந்த உணர்வை அங்கே பாய்ச்சினான்.

தனது எண்ணத்தையும் வாக்கையும், அவனுக்குள்ளே செலுத்தி, தனக்கு நன்றாகிவிட்டது என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி, அவனிடத்திலிருந்து வரக்கூடிய நல்ல மூச்சின் நிலைகளை அவன் போகித்து, தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் அறிந்து, தன்னை அறியாது வந்த தீய வினைகளை நீக்கினான்.

அவ்வாறு நீக்கிய இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியாக்கி, அவன் மகிழ்வதைக் கண்டு, இவன் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து, இந்த உணர்வின் தன்மை கொண்டு, தனக்குள் ஒளியாக மாற்றினான், போகன்.
அவன் சொல்லின் சக்தி கொண்டு, தனக்குள் நுகர்ந்து எடுத்துக் கொண்ட சக்திதானே தவிர, அன்றி வேறு எதுவும் எடுக்கவில்லை, என்று நமது குருநாதர் காட்டியருளினார்.

ஆக, இந்த தர்மத்தின் நிலைகள் கொண்டு,
அன்று போகன் எப்படி, தனக்குள் மோகித்தான், அதை போகித்தான்,
ஒவ்வொரு நிலைகளில் தனக்கு போகித்து எடுத்து
தனக்குள் இருக்கக்கூடிய துயரை நீக்கி,
அந்தத் துயரத்தை நீக்கும் எண்ணத்தை
தனக்குள் எண்ணமாக வடித்து,
இந்த உணர்வின் தன்மை கொண்டு,
ஒவ்வொன்றையும் தான் நுகர்ந்து,
அதற்குண்டான பிணியை நீக்கி, அங்கு தீமையை நீக்கி,
நாம் எப்படி கருணைக் கிழங்கை வேக வைத்து, அதனுடைய விஷத்தை நீக்கி, நாம் இரசித்துச் சாப்பிடுகின்றோமோ, இதைப் போன்று
ஒரு மனிதன் துயரப்படும் நிலைகளை அங்கே நீக்கி,
அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கி,
அந்த உணர்வின் தன்மையை தான் போகித்து,
அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து,
அந்த உணர்வை ஒளியாக மாற்றி
விண் சென்றான் அந்த போகமாமகரிஷி.
(பக்கம் 177-181)
நமக்குள் கெட்டது சேராது, கெட்டதைத் தடுக்கச் செய்வதுதான் தியானம். ஆக, நாம் இருக்கும் இந்தத் தியானம் சிறிது நேரம்தான். இந்த தியானம், ஆலயங்களில் விநாயகன் என்ற நிலைகளில் காட்டப்படுகின்றது.

விநாயகரை எடுத்துக் கொண்டால், புல்லைப் போடுகின்றோம். அடுத்து, இலைளையும், செடிகளையும் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கடை செய்து சாப்பிடுகின்றோம்.

சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு, நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள், சதுர்த்தி.

விநாயக சதுர்த்தி அன்று என்ன செய்கின்றோம்? களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.

வருடத்திற்கு ஒரு தரம், களிமண்ணால் விநாயகரைச் செய்கிறோம். கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும், மற்றவைகளும் வைத்துப் பூஜிக்கின்றோம்.