ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2018

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அது எந்தத் திசையிலிருந்து எத்தகைய நிலைகள் வந்தாலும் நம்மைக் காக்கும்

வைகுண்ட ஏகாதசிஅன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்றார்.

அவர் எப்படித் தன் உடலை விட்டு ஒளிச் சரீரமாக மாற்றிச் சென்றாரோ அந்த நிலையை நாம் அனைவரும் நம் வாழ்க்கையிலேயே நாம் நிச்சயம் பெற முடியும்.

அதற்காகக் கடும் தவம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவர் சொன்ன சுருக்கமான நிலைஆத்ம சுத்தி”.

நாம் எந்த வேலையைச் செய்தாலும் கையில் அழுக்குப் படுகின்றது. அடுத்துக் கையில் இருக்கக்கூடிய அழுக்கை நல்ல நீரை விட்டுத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல மனித வாழ்க்கையிலும் துயரமான எண்ணங்களும் வேதனைப்படும் எண்ணங்களும் அடிக்கடி தோன்றும்.

இந்த நிலைகளைஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தைக் கொண்டு இதை அன்றன்று துடைத்து ஒவ்வொரு நொடிக்கும் அதைத் துடைத்துக் கொண்டு இந்த மெய் ஒளியைப் பெற முடியும்.

ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை ஒளியாக மாற்றும் பொழுது ஏழாவது நிலை. அப்புறம் எட்டாவது நிலை.

எட்டாவது நிலை என்கிற பொழுது எந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியை நமக்குள் எடுத்தோமோ அவை அஷ்டதிக்கு பாலகர்கள். நாம் ஏழாவது அறிவின் தன்மை கொண்டு கெட்டதை நீக்கி மெய் ஒளியின் தன்மை நமக்குள் எடுக்கப்படும் பொழுது எட்டாவது நிலை அடைகின்றோம்.

அஷ்டதிக்கு பாலகர்கள் எட்டுத் திக்கிலிருந்தும் கோவிலில் உள்ள தெய்வத்தைக் காக்கின்றார்கள் என்று காட்டுகின்றார்கள்.

எந்தத் திசையிலிருந்தும் எத்தகைய நிலைகள் இருந்தாலும் தன்னை அறியாதபடி வரும் நிலைகளை இந்த எட்டாவது அறிவான நிலைகள் கெட்டதை நீக்கித் தன் உணர்வின் சத்தை அது காத்துக் கொள்கின்றது.

நாம் அடிக்கடி அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் உணர்வின் மனம் தீயதை நாடாது தனக்குள் அந்த ஒளியின் சரீரமாக்க் காத்தருளும் சக்தி பெறுகின்றது.

ஒன்பதாவது நிலையாக உயிருடன் ஒன்றி ஒளியாகி உடலைவிட்டு மீண்டபின் பத்தாவது நிலை. அதுதான் கல்கி அவதாரம் என்பது.

நம் உடலிலிருந்து எட்டுத் திக்கிலும் காப்பது போல இந்த உடலைவிட்டு உயிராத்மா வெளியே போனபின் கல்கி. இன்னொரு உடல் நம்மை இழுத்திடா வண்ணம் தடுத்திடும் நிலைதான் பத்து.

“தசாவதாரம்...!” இந்த உயிர் பத்தாவது அவதாரமாக ஒளியின் தன்மை அடைவதுதான் பத்தாவது அவதாரம். 

பத்தாவது நிலையாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் எப்படி ஒளியின் சரீரமாக ஆனாரோ அதே குருவின் தன்மையை நாம் எடுக்கும்போது நாமும் அந்த ஒளிச் சரீரம் நிச்சயம் பெற முடியும்