ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2016

பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர்

இயற்கையின் நிலைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அந்தச் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறி வருகின்றது என்ற நிலையை பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வந்தார் குருநாதர்.

இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்வது என்பதைத் தான் கேள்விக் குறி போட்டு ஒவ்வொரு நிலைகளையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார் குருநாதர்.

புலியோ மிகவும் கடினமானது, ஆக்ரோஷமானது. அதே சமயத்தில் இதைக் காட்டிலும் தன் வலு கொண்ட நிலை கொண்ட பன்றியும் உண்டு.

ஒரு சமயம் காட்டிலே நான் போகும் பாதையில் ஒரு ஆண் பன்றி கொம்புடன் இருந்தது. மனிதனைப் பார்த்தாலே எதிர்த்து அடிக்க வரும். ஆனால், குருநாதர் என்னைத் தனித்துப் போகச் சொன்னார்.

தனித்துப் போகும் போது அந்தப் பன்றி ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருக்கின்றது. மூலையில் உட்கார்ந்து இருப்பதை என்ன..,? என்று  பார்த்தவுடனே ஒரு புலி பார்த்து இதைத் தாக்க எண்ணுகின்றது.

இது இரண்டும் ஒன்றை ஒன்று குறி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இரண்டுக்கும் இடையில் செடி மறைத்திருக்கின்றது.

முதலில் இது இரண்டிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. தெரியாத நிலைகளில் நான் போய்க் கொண்டிருந்தேன்.

அப்புறம் தான் குருநாதர் இந்த உணர்வை ஊட்டி நன்றாக உற்றுப் பார் என்று இந்த உணர்வின் அலைகளை நுகர்ந்து பார் என்று சொல்கின்றார்.

நுகர்ந்து பார்க்கும் பொழுது இதை அடித்துக் கொல்ல புலி விரும்புகின்றது. பன்றி அதை எதிர்த்து நிற்கப் போர் செய்கின்றது.

அந்தப் பன்றியோ மண்டி போட்டிருக்கின்றது. அப்பொழுது இந்தப் புலி பதுங்கி வந்து அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், பின்புறம் வந்து தாக்காதபடி பன்றி எதிர்மறையாக இருக்கின்றது.

புலி வரப்படும் பொழுது பன்றியும் பம்மிக் கொண்டு பேசாமல் இருக்கின்றது. அடித்துக் கொல்ல விரும்புகின்றது புலி. பன்றியோ தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்புகின்றது.

அப்பொழுது நெருங்கி வந்து புலி தாக்க வந்த பின் பன்றி தன் முன்னால் உள்ள கொம்பைக் கொண்டு “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது.

புலி தூக்கி வீசப்பட்டு வெகு தூரத்தில் பந்து மாதிரி விழுகின்றது. புலியின் ஒரு பக்க உடலை அப்படியே கிழித்துவிட்டது.

புலி விழுந்தாலும் மீண்டும் அதிக ரோசம் வருகின்றது. அடிபட்டுவிட்டோம் என்ற அந்த ரோசத்துடன் மீண்டும் வந்து தாவுகின்றது.

மறுபடியும் பன்றி “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது. கழுத்துப் பக்கம் அடித்தபின் புலி கீழே விழுந்தது.

மூன்றாவது தடவை புலி வேகமாக வந்து தாக்க வருகின்றது. மீண்டும் தாடையில் அடித்தது பன்றி. அடித்தவுடன் கீழே விழுந்தது. பார்த்தால் புலியை இரண்டாக வகுந்து விட்டது.

அந்தப் பன்றிக்கு அவ்வளவு வீரியம் வந்துவிட்டது. இதைக் காட்டினார் குருநாதர்.

ஆக, ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ள இந்த உணர்வின் வலிமை அதற்கிருந்தாலும் அதனிடம் இருக்கும் சிறு கொம்பைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதனுடைய வலிமையை எப்படிப் பயன்படுத்துகின்றது என்று பார் என்று குருநாதர் காட்டினார்.

அந்த உணர்வுகள் இங்கே வெளிப்படுகின்றது. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இது அலைகளாகப் படர்கின்றது.

இதே உணர்வுகள் தன் இனத்தின் தன்மையும் தன் இனத்திலிருந்து வந்த நிலையை இதனுடைய இனங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது அதன் அறிவாக வருகின்றது என்றார் குருநாதர்.

ஏனென்றால், தன் இனத்தின் தன்மை காக்கப்பட வேண்டும் எனும் பொழுது எந்த இனம் தன் வலிமை கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதோ அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

கவரப்படும் பொழுது அது எப்படி அலைகளாகப் படர்கின்றது? அதனுடைய இனங்கள் “இதே வேலையை எப்படிச் செய்கிறது?”

ஆகவே, அது ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பின் நிலை வருவதை இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் வழி காட்டிக் கொண்டு போகும் பொழுது உணர்வின் இயக்கங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படியெல்லாம் செய்கிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.

September 29, 2016

மார்க்கம் + கண்டவன் - மார்க்கண்டேயன் – எந்தக் குழந்தை வேண்டும்...?

(அகஸ்தியன்) துருவன் தன் ஐந்தாவது வயதில் மகா சித்து பெற்றான் என்று சொல்வார்கள்.

ஏனென்றால், அந்த ஐந்தாவது வயதில் துருவனின் தாய் தந்தையர் இறந்த பின் அவன் துருவத்தை நோக்கித் தவமிருந்தான் என்றும் சொல்வார்கள்.

அதே சமயத்தில் அவன் பதினாறாவது வயதை எட்டப்படும் பொழுது அக்கால மக்கள் அவனுக்குத் திருமணத்தை முடிக்கின்றார்கள். ஆக, வசிஷ்டர் அருந்ததி என்பார்கள். அதாவது அருந்ததி என்ற மனைவியைத் தனக்குள் இணைக்கின்றான்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் கண்டாலும். அந்தப் பதினாறாவது வயதிலிருந்து கணவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்த்து தன் மனைவிக்கும் அது பெறவேண்டும் என்று எண்ணிப் பாய்ச்சுகின்றான்.

அவனின் மனைவியும் இந்தச் சக்தியைத் தனக்குள் பெற்று மீண்டும் அது தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுகின்றது.

இப்படி அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உயர்ந்த நிலைகளில் எண்ணி வரப்படும் பொழுதுதான் “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்..,” எனும் நிலையாகப் பிறவியில்லா நிலையை அடைந்தனர்.

அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி, இரு மனமும் ஒன்றாகி, இரு உயிரும் ஒன்றான நிலைகள் கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதற்காகத்தான் சிறு குட்டிக் கதைகளைப் போட்டுக் காட்டி மார்க்கண்டேயன் என்று காட்டுகின்றார்கள்.

(விண் செல்லும்) “மார்க்கத்தைக் கண்டவன்” - மார்க்கண்டேயன்.

உனக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்று கேட்கப்படும் பொழுது எனக்கு என்றும் பதினாறு என்ற நிலைகளில் (விண்ணிலே ஒளியாக வாழும்) அந்தக் குழந்தைதான் வேண்டும் என்ற நிலைகளை காவியப் படைப்பில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

நாம் தெரிந்து கொண்டோமா..,? சற்று சிந்தியுங்கள்.

இவ்வாறு பதினாறாவது வயதில் அவர்கள் இருவரும் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் கணவனும் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ மகரிஷி என்ற நிலை அடைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

ஆகவே, என்றும் பதினாறு என்று இளமைப் பருவமாக வளர்ந்து கொண்டேயிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

அந்த அகஸ்தியனை[ப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவருமே என்றும் பதினாறு என்ற நிலையில் இன்றும் வளர்ச்சி பெற்றுக் கொண்டேயுள்ளார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியமாமகரிஷி வாழ்ந்த காலங்களில் அந்த மலைப் பகுதியில் பெற்ற மக்கள்தான் பெரும்பகுதியானோர் அவருக்குப் பின் சப்தரிஷி மண்டலத்தை அடைந்தார்கள்.

அதற்குப் பின் சிறுகச் சிறுகக் குறைந்து அங்கே போவதே நின்றுவிட்டது. அந்த எல்லையை அடையும் “மார்க்கங்களைத்தான்” நமது குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

September 27, 2016

"நல்லது நடக்க வேண்டும்" என்ற எண்ணத்தில் நாம் கோபப்படுகின்றோமா...?

நாம் ஒரு பொருளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அது மற்றவர்களால் கிடைக்காமல் தடைப்படும் பொழுது அவன் வேண்டுமென்றே செய்கிறான் அவனைத் தடைப்படுத்தவேண்டும் என்ற உணர்வை எடுத்தவுடன், அவன் பகைவன் என்ற உணர்வை எடுக்கிறோம்.

அப்பொழுது நாம் நல்ல பாதையில் போவதற்கு மாறாக அவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் தாக்கும் நிலை வருகின்றது.

அப்படி எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் வீரியம் அடையும் பொழுது அவன் நம்மை எப்படிக் கெட்டுப் போகவேண்டும் என்று எண்ணுகின்றானோ அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் எடுத்து நம் உடலும் கெடுகிறது.

இப்படி அவரின் குறையான உணர்வை நமக்குள் வலு சேர்த்துவிட்டால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. நமக்கு நாமே நல்ல குணங்களை மாற்றியமைத்து அந்த உணர்வின் வழி ஏற்று நடந்துவிடுகிறோம்.

அடிக்கடி கோபம் கொள்வோர்களை நாம் பார்க்கலாம். “என்னை இப்படிச் சொன்னார்கள்.., எப்படிச் சொல்லலாம்? அவர்களை விடலாமா..,?” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் அது கலந்து நம் நல்ல அணுக்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. 

நான் (ஞானகுரு) திட்டினேன் என்றால் அவர்களிடம் உள்ள “கெட்டது போவதற்காகத்தான்..,” திட்டுவேன். அவர்கள் “கெட்டுப் போக..,” திட்ட மாட்டேன்.

ஏனென்றால் நான் திட்டுவது உடலில் இன்னொரு ஆவி இருந்தது என்றால் அதைத்தான் சாடுவனே தவிர அவரைத் திட்டுவதில்லை. அதனால் அந்த உணர்வின் தன்மை ஆவி ஒடுங்கும். அந்த மனிதனை நல்லதைப் பேசவிடும், நல்லதைச் செய்யவிடும்.

நீங்கள் திட்டினீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? நேரடியாகத் திட்டுவீர்கள். அந்த ஆள் தான் செய்கிறார் என்று நினைத்து அந்த ஆளைத் தான் திட்டுவீர்கள்.

நான் உள் நின்று இயக்கும் உணர்வை அறிந்ததனால் நான் அதைச் செய்கின்றேன்.

ஆகவே, ஈஸ்வரா.., என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி  நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்று அவர்கள் உணர்வை நமக்குள் வராதபடி தடுத்துவிடவேண்டும்.

அவ்வாறு தடுத்துவிட்டு, சரி., அவர்கள் செய்தார்கள் அவர்களாகவே உணர்வார்கள் என்று விட்டுவிட்டால் இந்த உணர்வு அவர்களுக்குள் சென்று தீயதை மாற்றி நல்லதாக அவர்களுக்குள் விளையும்.

ஏனென்றால், நம் உயிர் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உருவாக்கும்.  

September 21, 2016

கடவுளை நான் எங்கே தேட விரும்புகின்றேன்...?

நீங்கள் சும்மா ஒரு பக்கத்தில் உட்கார்ந்து பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களுக்கு. உங்கள் மனதில் என்னென்ன உணர்வுகள் நினைவலைகள் ஓடுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

வெறுப்பாகச் சொன்னவர்கள், சண்டை போட்டவர்கள், இடைஞ்சல் செய்தவர்கள், இவர்களைப் பற்றியெல்லாம் நினைப்பு தொடர்ச்சியாக வரும்.

நினைக்காமல் உட்கார்ந்து பாருங்கள். என்னென்ன சிந்தனைகள் வருகின்றது என்று..,?

எனக்கு அவன் இந்த மாதிரி இடைஞ்சல் செய்தான், நான் அவனுக்கு இவ்வளவு உதவி செய்தேன் அவன் இப்படிப் பண்ணுகின்றான், கடன் வாங்கியவன் காசைத் தர மாட்டேன் என்கிறான், வீட்டில் இப்படியெல்லாம் என்னைப் பேசுகின்றார்கள்.., இப்படி நடந்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? என்ற புலம்பல் தன்னாலே (உங்களுக்குள்) வரும்.

ஏனென்றால், இப்பொழுது தானே புதிதாக இந்தத் தியானத்தைச் செய்கின்றோம். இதற்கு முன்னால் எத்தனயோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அது அது அந்த அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

அவ்வப்பொழுது இந்த உணர்வுகள் தோன்றினாலும் அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தால் சட்டையில் அழுக்குப் பட்டால் அதனின் நிலைகள் தெரிவதில்லை.

இதைப் போன்று தான் உங்கள் உயர்ந்த குணங்கள் ஒவ்வொன்றிலும் மறைத்திருக்கும் இத்தகையை தீமைகளை நீக்குவதற்கு மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால், யாம் பதிய வைத்த உணர்வை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்தில் இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு “இப்படி ஆகிவிட்டதே..,” என்று வேதனையாக எண்ணவே கூடாது. வேதனை என்பதே விஷம்.

உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று குருநாதர் இட்ட கட்டளைப்படி சதா நான் தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் கதவை மூடிவிட்டால் என்ன செய்வது? நீங்கள் கதவை அடைத்துவிட்டு எங்கேயோ போய்விட்டீர்கள் என்றால் உள்ளுக்குள் வர முடியாதே.

நான் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பரப்பிக் கொண்டேயிருக்கின்றேன். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்தில் இருந்தால் அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

ஆகையினால், எனது வேலை கடவுளை நான் எங்கேயும் தேடவில்லை. உங்கள் உயிரைத்தான் கடவுளாக்கச் சொன்னார் குருநாதர்.

அவன் அமைத்த கோட்டை உங்கள் உடல் என்றும் பல ஆயிரம் ஆண்டுகள் இதனின் உணர்வுகளைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கியுள்ளது என்று உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.

அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து இந்த மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆராதனை செய்கின்றேன்.

தெளிந்து கொண்ட அறிவு கார்த்திகேயா என்று தெரிந்து கொண்ட இந்த அறிவின் தன்மை கொண்டு நீங்கள் அருள் ஞானிகளாக மெய் ஞானிகளாக உலகைக் காக்கும் அரும் பெரும் சக்திகளாக உருவாக வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இது தான் என்னுடைய தவம்.

கண் என்ன செய்யும்...? உயிர் எதைச் செய்யும்....? உடல் எதை இணைக்கும்...? – "தியானத்தின் நுணுக்கம்"

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் இந்த உலகத்துடன் ஒத்து வாழ்கின்றோம். அதிலிருந்து பிரிந்து வாழ முடியாது. நன்மையோ, தீமையோ அவைகளைக் கேட்டுணர்ந்துதான் நாம் செயல்படுகின்றோம்.

தீமையை நுகர்ந்து தீமை என்று நாம் உணர்கின்றோம். ஆனால், அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் விளையக் கூடாது.

அப்படி என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒருவரிடம் பழகிய பின்பு எதிரியாகிவிட்டால் நமக்குள் அந்த உணர்வின் பதிவு இருக்கும். திடீர் என்று சந்தித்தோம் என்றால் “ஐயோ.., போகிறான் பார் அயோக்கியப் பயல்..,” என்று பயமோ, கோபமோ, ஆத்திரமோ வந்து அவன் செய்த தவறை உணர்த்தும்.

அப்பொழுது, அந்த வழியில் உருவான அணு தன் இரையை அந்த நேரத்தில் எடுக்கிறது என்று பொருள்.

அதே மாதிரி அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் பொழுது அதை நாம் கேட்க நேரும். மற்றவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் பொழுது அந்தத் தவறின் உணர்வை (நமக்குள் உருவான) அந்த அணு சாப்பிட்டு அது வளர ஆரம்பிக்கும்.

ஏனென்றால், ஒருவன் தவறு செய்கின்றான். அதைப் பார்த்துணர்ந்ததை நம் கண்ணின் கருவிழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ பார்த்த உணர்வின் அலைகளை நம் ஆன்மாவாக (காற்றாக) மாற்றுகின்றது.

ஆன்மாவிலிருந்து மூக்கின் வழி அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகளாக இயக்கிக் காட்டும். அந்த உணர்ச்சிகள் வாயிலே உமிழ்நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் இணையும். ஆகாரத்திலிருந்து இரத்தமாக மாறி பின் ஜீவ அணுக்களாகி உடலுடன் இணையும்.

ஆகவே, நம் கண் அது வழி காட்டும். நம் உயிரோ இயக்கிக் காட்டும், உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும். மீண்டும் நினைவுக்கு வரப்படும் பொழுது அதை அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி எந்தெந்த சந்தர்ப்பத்தில் அவைகள் நமக்குள் வளரத் தொடங்கினாலும் உடனுக்குடன் “ஈஸ்வரா..,” என்று நம் உயிரிடமே வேண்ட வேண்டும்.

உருவாக்கும் உயிரான ஈசனிடம் தான் தீமையை மீட்டிடும் நிலைகளைக் கேட்க வேண்டும். ஏனென்றால் நாம் எண்ணுவதை அணுவாக உருவாக்குவது நம் உயிர் தான். அவனின்றி அணுவும் அசையாது.

ஏனென்றால், கருவிழி பார்த்துப் பதிவாக்கி, காந்தப் புலன் ஆன்மாவாகக் கவர்ந்து நாம் சுவாசித்தபின் உள்ளுக்குள் சென்று அது எதனால் வளர்க்கப்பட்டதோ அந்த அணுவிற்கு உணவாகக் கொடுப்பது நம் உயிரின் வேலை. (நாம் எண்ணுவதை எல்லாம் ஜீவ அணுவாக மாற்றுவது நம் உயிரின் வேலை தான்).

நம் உயிர் சூரியனாக இருந்து அணுக்களை உருவாக்குவதும் அவைகளுக்கு இரையைக் கொடுப்பதும் அதனதன் நினைவுகளைக் கவர்ந்து தனக்குள் செயலாக்கும் நிலையாக இயக்கிக் கொண்டுள்ளது.

உடலில் விளைந்த உணர்வை தன்னுடன் இணைத்துக் கொண்டு அதற்கொப்ப அடுத்து மறு உடல் பெறச் செய்கின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

ஆகவே, நம் வாழ்க்கையில் மற்ற தீமையான உணர்வுகளை எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதைப் போல அந்த மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவான மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழகினாலும் அது தனித்து நிற்காது. எல்லா எண்ணங்களிலும், நினைவுகளிலும், உணர்வுகளிலும், அணுக்களிலும் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கொடுக்கும் சக்தியை வைத்து “ஈஸ்வரா” என்று உங்கள் புருவ மத்தியில் இருக்கும் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்து அந்த தீமைகளை நமக்குள் குறைக்க வேண்டும்.

தனியாக ஒரு மிளகாயைக் கடித்தால் “ஆ..,” என்று காரமாகின்றது. ஒரு விஷமான பொருளைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகின்றது.

அதே சமயத்தில் அந்த விஷமான சக்தியை மருந்துடன் சேர்த்து அதனின் கலவையைச் சிறுக்கப்படும் பொழுது மருந்தை நன்மையாக்குகின்றது. நோயை நீக்க உதவுகின்றது.

இதைப் போலத் தான் தீமையானவற்றைக் கேட்டுணர்ந்தாலும் அதை நுகர்ந்து இயக்கப்படும் பொழுது “இடைமறித்து...,” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதனுடன் இணைக்க வேண்டும்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் அணுவாக மாறுகின்றது. இதைக் கலந்த அணுவாக மாறும் பொழுது தீமையை அடக்கும் நிலைகளாக நமக்குள் உருப்பெறுகின்றது.

இந்த வலுப்பெறும் பொழுது தீமையான உணர்வை இங்கே பிளக்கின்றது. இப்படித் துடைத்துப் பழக வேண்டும். இதைத் தான் உங்களுக்குச் சக்தி வாய்ந்த ஆயுதமாக “ஆத்ம சுத்தி” என்று கொடுக்கின்றோம்.

சர்வ தீமைகளிலிருந்து விடுபடுவீர்கள், மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

September 20, 2016

"தீமைகள் தொலைய வேண்டும்" என்று தான் சொல்ல வேண்டும்...!

வீடடில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம். அதிலே ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம். அந்த வேதனையான உணர்வுகள் வீடெல்லாம் பரவும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வீடெல்லாம் பரவும்பொழுது நம்முடைய எண்ணங்களும் மாறுபட்டுவிடுகின்றது. பிறகு “சடார்...,” என்று இவன் தொலைந்து போகவேண்டும், அவன் தொலைந்தால் பரவாயில்லை” என்ற எண்ணம் தான் வரும்.

அதற்குப் பதிலாக அவனுக்குள் இருக்கும் “அந்தக் கெடுமதி தொலைய வேண்டும்..,” என்ற எண்ணம் வராது.

இங்கே திடீரென்று நான் கோபிக்கின்றேன் என்றால் அவர்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போகவேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வேன்.

ஆனால், சாதாரண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு “இப்படிப் பண்ணுகிறானே இவன் இங்கிருந்து தொலைந்தால் தான் நல்லது..,”””” என்ற இந்த உணர்வு தான் வரும்.

இந்த எண்ணத்திலே இப்படி இரண்டு பிரிவு இருக்கின்றது.

ஆகவே, யார் மேல் நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்த உணர்வுகள் அவர்கள் உடலில் பட்டு அவர்கள் உடலிலுள்ள தீமையான செயல்கள் மறையவேண்டும். அவர்கள் அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று இந்த முறைப்படி நாம் எண்ணினால் அவர்கள் தீமைகள் நமக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில் அங்கே அவர்களையும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

அதனால் தான் யாம் சில நேரங்களில் கோபிப்பது. சாமி என்ன இப்படி நம்மைக் கோபித்துப் பேசுகின்றார் என்று சிலர் நினைப்பார்கள்.

ஆக, அவர்களிடம் உள்ள “தீமைகள் குறைய வேண்டும்” என்ற உணர்வுக்கு “அழுத்தம்” கொடுப்பேன். . அப்பொழுது யாம் கோபமாகச் சொல்லும் அந்த நிலைகள் அங்கே நன்மை பயக்கும்.

சாதாரண நிலைகளில் இருக்கும் பொழுது ஏதாவது தப்பு என்று கோபம் வந்தால் அதைக் கெடுக்க உதவும். தன்னயும் கெடுத்துவிடும். அவர்களையும் கெடுத்துவிடும்.

ஏனென்றால், இதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பமும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மை எப்படி மாற்றுகின்றது என்று இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் கொடுத்தார் குருநாதர்.

நாம் பலவீனமான எண்ணங்களை எண்ணும் பொழுது அங்கே குளிர் தாக்கும் பொழுது என்ன செய்யும்? என் இதயமே “கிர்..,” என்று இரைகின்றது. கூடக் கொஞ்சம் நேரம் அதிகமானால் மூச்சு நின்றுவிடும்.

அந்த மாதிரி இடத்தில் என்னை இருக்கச் சொல்லி அனுபவமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

நன்மை தீமை இருந்தாலும் தீமையை மாற்றுவதற்காக ஞானிகளின் உணர்வை எப்படிப் பெறவேண்டும்? ஞானிகளின் உணர்வுகள் வந்தால் தீமைகள் வராது நாம் எப்படி இருக்க முடியும் அந்த இடத்தில் வைத்துப் பயிற்சி கொடுக்கின்றார். குருநாதர்

கொடுத்த உணர்வுகளைத் தெரிந்து எடுத்துக் கொண்டபின் படிப்படியாக உங்களுக்குச் சொல்லி வருகின்றோம்.

அந்த ஞானிகள் கண்டுணர்ந்த மெய்ஞானத்தின் மூலக் கூறுகளை துணுக்குத் துணுக்காக உபதேசமாகக் கொடுக்கின்றோம். அதே சமயத்தில் அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்குண்டான நினைவுகளையும் கொடுக்கின்றோம்.

ஏனென்றால், எதிர்காலம் மிகவும் மோசமான காலமாக இருக்கின்றது. இதிலே நாம் சிக்கிவிடக் கூடாது.

ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் வரிசைப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

எந்தெந்த சந்தர்ப்பத்தில் எது எது வருகிறது? என்ற நிலையில் குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேசத்தின் மூலமாகவே உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

சண்டை போட்டவர்கள், சங்கடப்பட்டவர்களைப் பற்றிப் பதிவு செய்து கொண்டால் அவர்களுடைய எண்ணங்கள் நமக்குள் வந்து நம்மையும் துயரப்படச் செய்கின்றது, நம்மையும் சோர்வடையச் செய்கின்றது, நம் காரியங்கள் தடைபடுகிறது.

இதைப் போலத்தான் குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை உங்களுக்குள் இணைக்கின்றோம்.

இதை இணைத்துக் கொண்டபின் உங்களுக்குள் சங்கடமான உணர்வுகளோ, வேதனைப்படும் நிலைகளோ வரும் பொழுது அதை மாற்றி அமைக்கும் உணர்வுகள் தோன்றும்.

அப்பொழுது இதை வைத்து அந்த ஞானிகளின் உணர்வை எடுத்தீர்கள் என்றால் உங்களால் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். எப்படிச் செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் உதயமாகும்.

அதன் வழியில் உங்கள் வாழ்க்கையில் தெரிந்து தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ முடியும். மகிழ்ந்து வாழ முடியும். உங்கள் பார்வையால் மற்றவர்களின் தீமையையும் போக்கும் ஆற்றல் நீங்கள் பெறுவீர்கள்.

September 19, 2016

குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களையும் பெறச் செய்கின்றோம்

குருநாதர் எம்மை இமயமலையில் கேதார்நாத்துக்குப் போகச் சொன்னார். அங்கே பனிப் பாறைகளுக்கு மத்தியில் அவர் சொன்ன பாதையில் போனேன்.

பார்த்தால் ஒரு பட்டாளமே படையே அந்த வழியில் போயிருக்கின்றது. அதிலே ஒரு 300, 400 பேர் இருப்பார்கள். அரசர்கள் போகிற மாதிரி சப்பரம் டோலி, குதிரைகள் எல்லாமே இருக்கிறது. அப்படி அப்படியே மடிந்து கிடக்கின்றார்கள்.

(நான் அங்கே போய்விட்டு வந்தபின் தான் பேப்பரில் எல்லாம் இதை வெளிப்படுத்தினார்கள்)

ஆக, அந்தச் சரீரங்கள் எதுவும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது. அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வைரங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றது.

அதைப் பார்த்தவுடன் ஆசையும் வருகின்றது. நாம் இங்கே வந்தது யாருக்குத் தெரியப் போகிறது, இரண்டை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொள்ளலாம் என்ற இந்த எண்ணம் வருகின்றது.

ஏனென்றால், குருநாதர் இந்தப் பாதையில் போகச் சொல்கின்றார். ஆசையைத் தூண்டுகின்றார்.

இரண்டு நகையை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகும் பொழுது வீட்டில் கொடுத்தால் அவர்கள் கஷ்டமெல்லாம் போகும் என்று இப்படி என்னுடைய உணர்வுகள் சொல்கிறது.

ஒவ்வொருவர் உடலிலேயும் அவ்வளவு நகைகள் இருக்கின்றது. அப்படியே படுத்துக் கிடக்கின்றார்கள். அவர்கள் முக அமைப்பைப் பார்த்தால்  நேபாளிகள், சைனீஸ் மாதிரி அந்த அரச வம்சமாகத் தெரிகின்றது.

குருநாதர் சொன்னபடி (பழனியிலிருந்து) இவ்வளவு தூரம் வந்ததற்கு இதை எடுத்துக் கொண்டு வீட்டில் கொடுக்கலாம் என்ற எண்ணம் வருகின்றது.

ஏனென்றால், குருநாதர்  பழனியில் வைத்து எம்மிடம் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன நிலையில் இந்தச் செல்வம் இருந்தால் நமக்கு மதிப்பு வரும் அல்லவா என்ற இந்த உணர்வுகளும் அங்கே தூண்டுகின்றது.

எடுப்பதா.., வேண்டாமா..,? என்று எனக்குள் எண்ணங்கள் வந்தது. அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.

இது “நிஜமாகத்தான் இவர்கள் படுத்திருக்கின்றார்களா..,?” அல்லது குருநாதர் இப்படிப் படுக்க வைத்திருக்கின்றாரா.., என்ற எண்ணம் வந்தது.

“இது நம்மை ஏதோ சோதிக்கின்றார்.., இது வேண்டாமப்பா..,” என்று அதிலிருந்து விடுபட்டு வந்தேன்.

நான் முதலில் வந்த பாதை அந்தப் பனிப் பாறை இடிந்து விழுந்துவிட்டது. அப்புறம் வேறு பாதையைக் காட்டி சுற்றிக் கீழே வந்தேன்.

வரும் பொழுது இந்திய எல்லையில் இந்தப் பக்கம் இருந்து டெலெஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“பாருடா…, உன்னைப் பார்க்கின்றான் பாருடா..,” என்று குருநாதர் அதையும் காட்டுகின்றார். அப்புறம் எப்படியோ இங்கே மங்களூர் வந்து சேர்ந்தேன்.

ஏனென்றால், குருநாதர் எமக்கு இத்தனை ஆசையும் ஊட்டி அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

குருநாதர் சக்தி கொடுக்கிறார் என்றால் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த ஆற்றலை என்ன என்ன செய்யலாம் என்ற நிலையில் கொடுத்துள்ளார்.

நெருப்பை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்?

வெளிச்சம் தேவை என்றால் நெருப்பைத் தீபமாகவும் பயன்படுத்துகின்றோம். சமையல் செய்யவும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம். அதே  சமயத்தில் ஒரு இரும்பை உருக்க வேண்டும் என்றால் அதற்கும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம்.

அதைப் போன்று தான் நம் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாகவும் மாற்றலாம். அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம்.

ஆக, இதை எந்த வழியில்? என்ற வகையில் அந்தச் சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி? என்று எமக்குத் தெளிவாக உணர்த்துகின்றார்.

ஏனென்றால், மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் எப்படித் தூண்டுகின்றது? முதலில் இதை அழித்துப் பழக வேண்டும். அந்த மெய் ஒளியை வளர்த்துப் பழக வேண்டும்.

இமயமலையில் அந்த இடத்தில் வைத்து எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆகவே, நம் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்தை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுத்துப் பழக வேண்டும்.

கஷ்டமோ, நஷ்டமோ, மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ பார்த்தோம் என்றால் அதை நாம் நுகர்ந்து அறிகின்றோம்.

அடுத்த நிமிடம் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் எடுக்க வேண்டும். எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“அந்தச் சக்தியைத் தான்” உங்களைப் பெறச் செய்கின்றோம்.

அவர்களில் ஒருவர் நமக்குக் கெடுதல் செய்கிறார் என்றால் “தொலைந்து போகட்டும்..,” என்று சொன்னால் கெட்டுப் போகின்றார்கள்.

ஆனால், தொலைந்து போக வேண்டும் என்று சொன்ன உணர்வு நமக்குள் விளைகின்றது. அவரும் கெடுகின்றார், நம் வளர்ச்சியின் தன்மையும் கெடுகின்றது.

ஆனால், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த அருள் உணர்வுகள் எங்களுக்குள் விளைய வேண்டும், நமக்கு கெடுதல் செய்தவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் இது நமக்கு நன்மை பயக்கும்.

ஒரு போக்கிரி வருகின்றான், நமக்கு ஏதாவது ஒன்றைக் கெடுதலாகச் செய்கின்றான் என்கிற பொழுது நம்மிடம் சக்தி இருக்கின்றது என்ற வகையில் அவனை வீழ்த்த நாம் பதிலுக்குச் செய்தோம் என்றால் என்ன ஆகும்?

ஏனென்றால், நாம் ஒரு கடுமையான ஆயுதத்தை எடுத்து அதைப் பயன்படுத்தும் பொழுது நம் நல்ல குணங்களை அது அடக்குகின்றது.

நாம் நமது நல்ல குணங்களை அடக்கித்தான், அந்த வீழ்த்தும் உணர்வை நமக்குள் விளைய வைத்துத்தான் அங்கே போக்கிரியின் மேல் பாய்ச்சுகின்றோம். அப்பொழுது அங்கே கெடுதல் வருகின்றது.

இங்கே விளைந்த பிற்பாடுதான் அங்கே போகின்றது. ஆகவே இங்கே நமக்குள் முதலில் கெட்டது விளையாமல் தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை நமக்குள் “காப்பாக” பாதுகாப்புக் கவசமாக உருவாக்க வேண்டும். இந்த உணர்வின் தன்மையை இங்கே வளர்த்து அந்தத் தீமைகளை களைகளை நீக்க வேண்டும்.

குருநாதர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு பல அனுபவங்களைக் கொடுத்தார். பல சிரமங்களை ஏற்படுத்தினார். அது எவ்வாறு இயக்குகின்றது அதிலிருந்து மீண்டிடும் மார்க்கம் என்ன? என்பதையும் உணர்த்தினார்.

தீமைகளிலிருந்து என்னை மீட்டிடவும் செய்தார். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை பெறும்படியும் செய்தார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையில்தான் இதை உபதேசித்து வருகின்றோம்.

September 18, 2016

தீமைகளை நம்முடன் அடங்கி இயக்கச் செய்யும் “வாழ்க்கையே தியானம்”

துருவ தியானத்தில் கொடுத்த இந்தச் சக்தியின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எங்கினால் அதை நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

கையில் அழுக்குப்பட்டால் நந்நீரை விட்டுக் கையைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் பல தீமைகளைக் காணும் பொழுதும், கேட்கும் பொழுதும் இது நமக்குள் ஊடுருவி நம்மை அறியச் செய்தாலும், அந்த உணர்வின் வளர்ச்சிகளை அதை நமக்குள் வளராது தடைப்படுத்தி “நம்முடன் அடங்கி இயக்கச் செய்ய வேண்டும்”.

அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். கடுமையான தீமைகளைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இணைத்து இந்த வலுவைக் கூட்டிட வேண்டும்.

இன்று நாம் குழம்பு வைக்கும் பொழுது காரம், புளி, உப்பு என்று கலந்து தான் வைக்கின்றோம்.

காரம், புளி, உப்பு ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டு அதனுடைய வீரியச் சத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை நாம் “பக்குவப்படுத்திச் சம அளவு கொண்டு வரும் பொழுது” சுவையாக வருகின்றது.

இதைப் போலத்தான் உலகில் இன்று கடுமையான நிலைகளும் வேதனைப்படும் நிலைகளும் துயரப்படுத்தும் செய்திகளும் நம்மை அறியாமலே பல நிலைகளில் வந்து கொண்டேயுள்ளது.

ஆக, நம் வாழும் காலங்களில் இத்தகையை “எதிர்மறையான உணர்வுகள்” வரும் பொழுது வெறுப்பின் தன்மை அடைந்து பிரித்திடும் தன்மையும் அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்துவிடுகின்றது.

அப்பொழுது நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் நாம் நுகர்ந்த இந்த வெறுப்பி  உணர்வுகளுக்கும் இரண்டும் போராகித் தீமையை விளைவிக்கும் அணுக்களாக உருப்பெற்று நம் நல்ல உணர்வுகளை அழித்துவிடுகின்றது.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலில்லாது அவைகளை நம்முடன் இணங்கி இயக்கிடும் நிலையைச் செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வருகின்றதோ உடனடியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து இந்த உணர்வினை இணைத்துவிட்டால் இந்த எண்ணம் தான் “கல்யாணராமன்” என்பது.

நாம் “எத்தகையை தீமைகளையும் பகைமையாகக் கருதாது” அது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து எப்படி ஒரு குழம்புக்குள் புளிப்பும் காரமும் இணைந்து சுவையாக உள்ளதோ இதைப் போல மாற்றிக் கொள்ள முடியும்.

நாம் வாழ்க்கையில் காணும் தீமைகள் யாவையாகினும் கடும் நோயாக இருந்தாலும் ஆக, நம் பார்த்துணர்ந்து அதிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும் என்று நுகர்ந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்திடாது அது வலுப் பெறாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து இணைத்து ஒவ்வொரு நொடிகளிலேயும் நாம் இணைத்தே வாழ வேண்டும்.

இது தான் “வாழ்க்கையே தியானம்” என்பது.