
”நான் உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை
நாம் ஒரு பாம்பைக் கொன்றால்
பாம்பின் உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது. ஆனால் ஒரு பாம்பு நம்மைத் தீண்டி விட்டால் அந்த
விஷம் உடல் முழுவதும் பரவும் பொழுது பாம்பின் நினைவே
நமக்குள் வருகின்றது. அந்த விஷம் அதன் நினைவுக்கே அழைத்துச்
செல்லும்.
எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதன்
உணர்வு… நம் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது.
1.உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்புக்குள் சென்று
2.நாம் பாம்பாகத்தான் பிறக்க நேரும்.
எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்று வந்திருந்தாலும்
1.இத்தகைய விஷத்தை வென்ற… விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த
நிலைகளை நாம் நுகர்ந்தோமென்றால்
3.பாம்பின் நினைவு மறந்து நஞ்சை வென்ற நினைவு வரும்.
அந்தப் பாம்பினத்திற்குள்
செல்லாது தடைப்படுத்த நம் உணர்வின் நினைவலைகளும்
1.கண் எதைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு நாம் விண்ணுக்குச் செல்ல முடியும்.
அதனால் தான் கண்ணன் முதலில் பார்த்தசாரதி. பின்… எதன் வலுவைப் பெற்றதோ அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது பாம்பின்
உணர்வு வலுவாகிவிட்டால்… நாம் கூர்மையாக
உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் எது தன்னைத் தீண்டியதோ அந்த உணர்வும் அந்த
விஷத்தின் தன்மை பட்டபின் அதன் வலுவின் தன்மை கொண்ட பின்… இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.
அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச்
சென்றான். கண்களின் நினைவு… அதாவது அந்தப் பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை
ஆகிவிட்டால் அர்ஜுனன்.
அந்தப் பாம்பிடமிருந்து தப்பிக்க நம் கண் எத்தனை உபாயங்களைச் சொல்கின்றது. இருப்பினும் இந்தக் கண் அந்தப் பாம்பின் உணர்வை வலுவாக்கி விட்டால் அர்ஜுனன் ஆகின்றது.
அர்ஜுனன் ஆனபின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இது தீண்டினாலும் அதன் உடலுக்குள் சென்ற
பின் அது பாதுகாப்பு தருகின்றது.
1.ஆகவே கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ
2.அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று அதன் வழியிலே நம்மைப் பாதுகாக்கின்றது.
மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தது
துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும். இதைப் போன்று ஒன்று தீண்டி விட்டால் அந்த வலுக்கொண்ட
எண்ணத்துடன் நாம் அதை எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் பாய்ந்தாலும் நஞ்சின் உணர்வு
இதற்குள் கலந்தாலும்
2.நாம் பாதுகாப்பான இடங்களை (துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும்) எண்ணும் பொழுது
3.அந்த
உணர்வின் தன்மை வலுப் பெற்று உடலை விட்டு வருகின்றோம்.
உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அந்த உணர்வுக்கு நம்மை அழைத்துச்
செல்லும். இங்கே
நஞ்சினை ஒடுக்குகின்றது.
1.ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.அதன் அருகிலே (ஈர்ப்பு வட்டத்திற்குச்) செல்கின்றோம்.
நஞ்சின்
உணர்வுகள் கரைகின்றது மனிதன் என்ற உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது.
அது தான் “பிறவி இல்லாத நிலை…”
எந்தச்
சந்தர்ப்பத்தில் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.இந்த வலுவை இழக்கச் செய்து “அருள் ஒளியின் உணர்வை” நாம் பெறும் தகுதியைப் பெற
வேண்டும்.
அந்தத் தகுதியை
நாம் காலையில் துருவ தியானத்தில் நாம் வலுப்பெறச் செய்ய
வேண்டும்.
நாம் எப்படி எந்த நிலையில் ஒளியின் உணர்வை எடுத்தாலும் ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க
அந்த ஒளி பட்டு “இந்த உடலும்” கரையத்தான் செய்யும்.
1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற
முடியும்.
2.”நான்
இந்த உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.
3.அவன்
எதனின் உணர்வு கொண்டு உடலை விட்டுச் சென்றானோ
ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.