ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2012

கடவுளின் பத்து அவதாரங்கள் -- விஜயதசமி

சாமி புத்தகம்  கடவுளின் பத்து அவதாரங்கள் விஜயதசமி
 (பக்கம் 8-11)

சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் பராசக்தி என்றும், அதனிடம் இணைந்து வெளிப்படும் சக்தி காந்தம் லட்சுமி என்றும் பெயர் வைத்தனர் ஞானிகள். அதனுடன் வெளிக்கடந்து, சூரியனிலிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினைக் கவர்ந்து, நமது பூமிக்குள் வரப்படும் பொழுது, மூன்று நிலையாக வருகின்றது.

விஷம்   இயக்கம்,
காந்தம்   இணைத்தல்,
வெப்பம் உருவாக்குதல்,
என்ற நிலைகள் கொண்டு, நம் பூமிக்குள்  வரப்படும் பொழுது, அது நம் பூமியிலே வந்து, ஒரு ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால், காந்தம் தனக்குள் கவர்ந்து, தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பொழுது, வெப்பமான நிலைகளிலே இது மோதியவுடனே, வெப்பமாகின்றது.

அப்பொழுது, அது இரண்டறக் கலந்து, அந்த ரோஜாப்பூவின் மணமாக,
இந்த சூரியனில் இருந்து வந்த, காந்தப்புலன் இயங்குகின்றது. அப்பொழுது அந்த மணம், ஞானம் சரஸ்வதி. ஆகவே, அந்த அணுவிற்கு
(1) வெப்பம் - உருவாக்கும் சக்தியாகவும்,
(2) காந்தம்  - தனக்குள் அணைக்கும் சக்தியாகவும்,
(3) மணம்    - அறியும் சக்தியாகவும்,
அதனுடன் இணைந்துள்ள
(4) விஷத்தின் தன்மை - இயக்கச்சக்தியாகவும்,
அனைத்தும் இணைந்து இருந்தால்,
(5) உணர்வு, இயக்கம் என்று, ஐந்து புலனறிவாக மாறுகின்றது.
மூன்று சக்தியாக இயங்குகின்றது. (1) பராசக்தி   வெப்பம், உருவாக்கும் சக்தி  (2) லட்சுமி    - காந்தம், அணைக்கும் சக்தி(கவரும் சக்தி)  (3) சரஸ்வதி  -ஞானம், மணத்தின் சக்தி,  என்று  ஒரு அணுவின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்குத்தான், மூன்று படங்களையும் வைத்து, ஒரு அணுவிற்குள் உருவாக்கும் சக்தியும், அணைக்கும் சக்தியும், மணத்தின் சக்தியுமாக அது இயங்குகின்றது,  என்ற நிலையை மனிதனாக இருக்கும் நாம் புரிந்து கொள்வதற்காக, ஆயுத பூஜை என்று ஞானிகள் வைத்தார்கள்.

‘’ஆயுதம்‘’  என்றால் என்ன?  இப்பொழுது எந்த குணத்தை எண்ணுகின்றோமோ,  அந்த குணத்தின் சக்தியாக நாம் எண்ணி, அதையே ஆயுதமாக எண்ணி, நாம் செயல்படும் தன்மை, ஆயுத பூஜை.

இப்போது நாம் ஒரு பொருளை உருவாக்க வேண்டும் என்றால்,  அதை எண்ணி, நாம் எண்ணத்தால் செயல்படுத்தும் நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக,  ஆயுத பூஜை என்று வைத்தது.

நாம் ஏதாவது செய்யவேண்டும் என்றால், ஞானம் வேண்டும் என்பதற்காகத்தான் ஆயுத பூஜை என்றும், நாம் எண்ணியதை காந்தம் அணைத்து, அந்த உணர்வாக செயலாக்கும் நிலைதான் லட்சுமி. இவை அனைத்தும் நமக்குள் எண்ணியதை, இந்த எண்ணத்தை உருவாக்கியது, ‘’பராசக்தி’’ என்ற இந்த  உண்மையினை நாம் அறிவதற்காகத்தான்,  (ஒரு அணுவிற்குள் உள்ள ஆயுதங்கள்) “ஆயுத பூஜை என்றும், லட்சுமி பூஜை என்றும், பராசக்தி பூஜை என்றும் கொண்டாடப்படுகின்றது,

 இன்று வட இந்தியாவில் எடுத்துக் கொண்டால், துர்கா பூஜை என்றும், காளி பூஜை என்றும் அதை வணங்குகின்றனர். அன்று துர்கை மாதிரி சிலைகளைச் செய்து, பத்து நாள் கொண்டாடி, அதன்பின் துர்கையைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைப்பது வழக்கம்.

ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலும், ஆயுத பூஜை என்று நாம் வைத்து, முறைப்படி இங்கு வணங்குகின்றோம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
என்று சொன்னதைப் போல, தென்னாட்டிலே தோன்றிய அகத்திய மாமகரிஷி இதைக் கண்டுணர்ந்து, இந்த உண்மைகளை வெளியிட்ட நாள் தான் விஜய தசமி.

இதிலிருந்துதான், உலகம் முழுவதற்கும் விண்ணுலக ஆற்றலின், ஒரு அணுவின் இயக்கத்தை வெளிப்படுத்தியது.

(பக்கம் 13-21)
கொலுவில், முதலில் நாம் பார்க்கும் பொழுது, செடி கொடிகளை வைத்திருப்பார்கள்.  அதில், காளானிலிருந்து மற்ற செடி வகைகள் வரை வரிசைப்படுத்தி, யாவும் நமது பூமியில் உருவானது என்றும், அடுத்து சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி என்று பராசக்தியை மையமாக வைத்து, அதன் அருகிலே, லட்சுமியும், சரஸ்வதியும் வைத்து ஒரு அணுவின் தன்மை இவ்வாறு உருவானது என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காகச் சிலைகளை வைத்திருப்பார்கள்.

ஆக, இதைப்போல முதலில் காளானாகிப் பல பொருள்கள் இணைந்து, செடி கொடிகளில் வளர்ச்சியின் தன்மையைக் காண்பிப்பதற்காகக் காளான், புல், தாவர இனங்கள். மற்றும் கொடிகளை வைத்து, வரிசைப்படுத்திக் கொண்டு வருவார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய  வெப்பம்  ‘’பராசக்தி’’,  ஈர்க்கும் காந்தம் ‘’லட்சுமி’’,  அதனுடன் கடந்து வெளி வரப்படும்பொழுது , ‘’அல்ட்ராவயலட்” இது ஆதிசேஷன்,  இந்த மூன்று நிலைகள் கொண்டு,  பூமியில் இயங்கினாலும்,  பூமிக்குள் வந்து ஒரு செடியின் சத்தைத் தன்னுடன் இணைக்கப்படும் பொழுது, மணம் ஞானம் ‘’சரஸ்வதி"

அதே நான்கும் ஒன்றாகச் சேர்த்து,  ஒரு புது இயக்கமாக எந்த மணத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றதோ,  இது ஐந்தாவது நிலை,  அதற்குப் பெயர் ‘’காயத்ரி’’.  எந்தச்செடியின் சத்தை அது கவர்ந்து கொண்டு இயக்குகின்றதோ,  வெப்பம் பராசக்தி;  காந்தம் லட்சுமி; அடுத்தது ஆதிசேஷன்(விஷம்); மணம் சரஸ்வதி(ஞானம்);

அதே சமயம், இந்த நான்கும் ஒன்றாகச் சேர்த்து, 
எந்த மணமோ அதனின் சக்தியாக,
தன் மணத்தால் காத்துக்கொள்வதும்,
தன் மணத்தால் மற்றொன்றைத்
தன் உணர்வின் சத்து எதனுடன் இணைந்ததோ,
அந்த இனத்தின் சக்தியைத் தனக்குள் வளர்க்கும் திறன் கொண்டது.

காயத்திரி, அதனின் வலு கொண்டு அது இயங்கும். ஒரு வேப்ப மரத்தின் கசப்பைத் தனக்குள் எடுத்து, அது காயத்திரி ஆகும் பொழுது, அதனின் வலுக் கொண்டு, மற்றச் செடியின் சத்தைத் தனக்குள் வராதபடி, பாதுகாத்துக் கொள்ளுகின்றது.

ஆனால் அதே சத்து, ஒரு செடியுடன் இணைந்து, அது இயக்கப்படும் பொழுது, தன் உணர்வான சத்தை வலுக்கொண்டு, தன் இனத்தை வளர்த்துத் தனக்குள் வளர்வது என்பது உணர்வு என்ற இந்த நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு, அன்று ஞானிகள் இவ்வாறு பெயரை வைத்துப் பரப்பிரம்மம் என்றும், அதனின் வளர்ச்சியின் தன்மை, தாவர இனங்கள் என்று வைத்தார்கள்.

இவ்வாறு, தாவர இன வளர்ச்சியை அடுக்கடுக்காக வைத்து, முதலில் சிறு கல், மற்ற பாறையின் நிலைகள், நமது பூமியின் இயக்கத்தை அறிந்து கொள்ள, பாறைகளை வைத்துச் செடி கொடிகளை ஒரு பக்கம் வரிசையாக வைத்திருப்பார்கள்.

அதிலிருந்து, மற்ற எத்தனை வகையான மரங்கள் வந்ததோ, அவையனைத்தையும் வைத்துக்  கீழ் இருந்து, மேல் வரையிலும், எவ்வாறு வளர்ந்தது? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காகக்  கொலு வைத்தார்கள்.


நமது உயிர், எவ்வாறு நமக்கு வருகின்றது? இப்பொழுது, எவ்வாறு ஒரு அணுவின் தன்மை வெப்பம், காந்தம், விஷம், மணம், நான்கும் சேர்த்து ஒரு இயக்கமாகி, ஐந்து நிலையை அடைகின்றது, இது, புலனறிவு என்று பொருள்.
அதே மாதிரி,  ஐந்து பூதங்கள்
உயிரணுவின் இயக்கம் ஈஸ்வரன் என்றும்,
இயக்கத்திற்குள் ஒன்றுடன் ஒன்று, மோதி
வெப்பமாவதை விஷ்ணு என்றும்,
அது மோதும் நிலைகள் தனக்குள் ஈர்க்கும் சக்தியாக வரும்பொழுது, விஷ்ணுவின் மனைவி, லட்சுமி என்றும் பெயரிட்டனர் ஞானிகள்.

அந்தக் காந்தம் இந்த உயிரின் நிலைகள் கொண்டு ஈர்த்து, ஒரு செடியின் சத்தை இது கவர்ந்து, உயிருடன் இணைக்கச் செய்யும் பொழுது,  ,  ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு நெருப்பு வைத்துக் கொதிக்கச் செய்யும் பொழுது எவ்வாறு கொதிக்க ஆரம்பிக்கின்றதோ,  இதைப் போலத்தான், அந்தச் செடியின் சத்து இதனுடன் சேர்த்து இணைந்து, அந்த உடலாகும் இந்தச் சந்தர்ப்பத்தால், அது ஜீவனாகி (ஓ) ம் என்று சிருஷ்டியாகி உடலாகின்றது.


எந்தச் செடியின் சத்தோ, அது உடலாகும் பொழுது சிவம். ஆனால், சிவத்திற்குள் எந்த மணத்தின் சத்தோ, அது இயக்கும் சக்தி, சிவனின் மனைவி பராசக்தி என்று, தெளிவுறக் காட்டப்பட்டது. ஏனென்றால், ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அந்த வெப்பம் உண்டு. அந்த வெப்பம்தான் பராசக்தி என்பது.


உடலுக்குள் சிவமானாலும், இந்த வெப்பத்தின் தன்மை கொண்டுதான், அணுவிற்குள் உயிருக்குள் விஷ்ணுவாக இருந்தாலும், ஒரு அணுவிற்குள் இங்கு பராசக்தியாக இயங்குகின்றது.

ஆக, உயிரின் இயக்கம் விஷ்ணு என்றும், அந்த விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும், அந்தக் காந்தம் இழுத்துத் தன்னுடன் இணைத்து, என்று இயங்கி ம் என்று உயிருடன் இணைவது பிரம்மம் என்றும், இணைந்த மணம் சரஸ்வதி என்றும், உணர்த்தினார்கள்.

உதாரணமாக, ஒரு கடலைச் செடியை அது நுகருமேயானால், அந்தக் கடலைச் செடியை அது நுகர்ந்தபின், அந்த உயிரிலே பட்டவுடன், என்ற அந்த மணம் ம் என்று, அந்த மணத்தின் சக்தி, கடலைச் செடியின் சத்து இந்த உயிருடன் ஒன்றி, உடலாக மாறுகின்றது. இது சிவம்.

சிவத்திற்குள், விஷ்ணுவும், லட்சுமியும் இயக்கமாக இருக்கின்றது. அதே சமயத்தில், கவர்ந்து கொண்ட கடலைச் செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால், அதிலே பராசக்தி, அதனுடன் இணைந்த காந்தம், இதனுடைய மணம் இந்த மூன்று நிலைகள் கொண்டு, இந்த உயிருக்குள் பட்டவுடன், மூன்று நிலையாக, அது இயங்கத் தொடங்கிவிடும்.
மணம், ஞானம் --  கடலைச் செடியின் மணத்தைக் கொண்டு,  அது இயக்கும்.
காந்தம் -- அந்தக்  கடலைச் செடியின் மணத்தைக் கவர்ந்து,  இயக்கும்.
அதற்குள் இணைந்த அந்த பராசக்தி --  அந்தச் செடியின் சத்தை வளர்க்கும்,
என்ற இந்த நிலைகள் கொண்டு,
இந்த உயிர்  கடலைச் செடியின் மேல் பட்டவுடனே, அந்தக் கடலைச் செடியின் சத்தை நுகர்ந்தவுடனே,  ஓம் பிரணவம், முதன் முதலில் அந்த உடலாகின்றது.


ஆனால், அந்தக் கடலைச் செடியின் சத்து, புழுவாக உடலால் சிவமானாலும், அந்தப் புழுவிற்குள் அந்தக் கடலைச் செடியின் மணமே ஞானமாகின்றது. அந்தக் கடலைச் செடியின் தன்மைக்கொப்ப, அந்த மணமே வினையாகின்றது. அந்த உயிரணு உடலானாலும், அந்தக் கடலைச் செடியின் மணமே வினை, விநாயகா.

மூஷிகவாகனா, இதன் உண்மைப் பொருளை நாம் அறிந்து கொள்வதற்காக, விநாயகர் சிலையை வைத்து, அதற்கு முன் எலியை வைத்தார்கள். ஆக, இந்த உயிரணு, தான் எடுத்துக் கொண்ட வினைக்கொப்ப நாயகனாகி, அதனின் எண்ணங்கள் தோன்றியது என்று உணர்த்தினர்.

அவ்வாறு வைத்த அந்த விநாயகன், சிவன், இந்த நிலைகளை வைத்து, அடுத்தாற்போல சிவமாகும் பொழுது, சிவத்திற்குள் வினையாக நின்று இயங்குவது, மூஷிகவாகனா, என்று நாம் ஒரு உருவின் தன்மையைக் கண்டுணர்வதற்காக, எலியை முன் வைத்தார்கள்.

விஜயதசமி என்று கொலு வைக்கின்றோம் என்றால், முதன் முதலாக உடல் பெற்ற புழுவின் உருவத்தை வைத்து வரிசைப்படுத்தி, எவ்வாறு நாம் இந்த மனிதப் பிறவிக்கு வந்தோம்? என்று காட்சியாகக் கொலு வைத்தனர்.

உடல் சிவம். நாம் இந்தப் படங்களைக் கண்ணால் பார்க்கின்றோம் என்றால், 
உருவத்தை நாம் அறிந்து கொள்வதற்காகச் சிவனாக உருவாக்கி,
மனிதன் எவ்வாறு சிவமானது?
என்ற நிலையை அறிந்து கொள்வதற்காக இந்த உடல்,
தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, உடலுக்குள் இருந்து,
எண்ணங்கள் எவ்வாறு இயங்குகின்றது?
அந்த வினைக்கு நாயகனாக
இந்த உடல், எவ்வாறு உருவானது?
என்ற இந்த நிலையைத் தெளிவுறத் தெரிந்து கொள்வதற்குத்தான்,  
விஜய தசமி என்று கொலு வைத்தது. 

(பக்கம் 21-23)

இப்பொழுது, விண்ணிலே தோன்றிய உயிர், பூமிக்குள் விஜயமாகி முதல் உடலாகப் பெறுகின்றது. ஆனால், முதல் உடலாக இது பிறந்தாலும், இங்கே சிவம், தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, அந்த எண்ணங்கள் வருவதை, இங்கே சிவக் குடும்பத்தில் காட்டப்படுகின்றது.

செடியின் சத்து மணமாகி, இந்த உயிர் தனக்குள் கவர்ந்து, இது எண்ணமாகின்றது. ஆக நமது உயிர் நமது பூமிக்குள் வரும் பொழுது, தனது இரண்டாவது நிலையான விஷ்ணு, மூன்றாவது நிலையான தாவர இனச் சத்தைத் தனக்குள் நுகர்ந்து, மூன்றாவது நிலை அடைகின்றது.

ஆக, மூன்றாவது நிலைதான் இராமன் (எண்ணம்) என்றும்,
நமக்குள் எண்ணம் தோன்றும் நிலை அடைகின்றது,
அதைத்தான், அன்றைய ஞானிகள் திரேதாயுகத்தில்,
ஸ்ரீமன் நாராயணன், பூமியிலே இராமனாகப் பிறக்கப் போகின்றான் என்று கூறினார்கள்.

விண்வெளியில் இருந்து வந்த நிலையாக,
இந்த உயிர் விஜயமானாலும்,
எண்ணங்கள் கொண்டு, உடலை இயக்க ஆரம்பிக்கின்றது.  மூன்றாவது நிலை அடைகின்றது.

ஆக, இவ்வாறுதான் நாம் வந்தோம் என்ற நிலையை, அடுத்து, இராமன் சீதையைக் கொலுவாக வைத்தார்கள். ஆக, வெப்பம் என்ற நிலைகள் விஷ்ணுவை வைத்து, அடுத்து விண்ணிலிருந்து வந்த உணர்வின் சக்தியை, நாம் அறிந்து கொள்வதற்காக,
சீதா சுவை, அந்தச் சக்தியின் துணை கொண்டுதான்
எண்ணங்கள் வந்தது என்று 
சீதா ராமா  என்றனர் ஞானிகள்.

இராமன் காட்டுக்குள் 14 வருடங்கள் சுற்றினான் என்று சொல்வது. காட்டிலிருந்துதான் மணங்கள் ஆகி, எண்ணங்கள் நிலைகள் கொண்டு, காட்டுக்குள் இராமன் சீதையைத் தேடி, சதா சுற்றினான் என்று காவியங்களாகத் தீட்டினார்கள்.

ஆக, தாவர இனச்சத்தின் தன்மை கொண்டுதான்,
இந்த உயிரணு சுவாசித்து, அதனின் நிலைகள் பெற்றது
என்று நாம் உணர்ந்து கொள்வதற்காக
இங்கு சீதா ராமா என்று மூன்றாவது நிலையாக,
ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அவ்வாறு காட்டில் திரிந்து வந்தாலும், தாவர இனங்களின் சத்தை இந்த உயிரணு, அந்த உயிர் தன் நிலைகளில் சேர்த்துக் கொண்டாலும்,
தான் எண்ணத்தில் எண்ணி,
பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும்
என்ற எண்ணத்தால் அந்த உணர்வுகளை எண்ணி,
அது சுவாசித்து, அந்த உணர்வுகள் சிறுகச் சிறுக உடலுக்குள் விளைந்து,  துவாரகயுகம்,  அந்த நாராயணன்,  இந்த துவாரயுகத்தில்  கண்ணனாகப் பிறந்தான்    நான்காவது நிலை.

இந்த உயிரணு, நம் பூமியிலே தோன்றி, நான்காவது நிலையாக அடைந்ததைக் காட்டுவதற்குத்தான், இங்கு கொலுவில் எடுத்துக் கண்ணனாக வைப்பார்கள். நாம் பிறந்ததிலிருந்து வந்த நிலையை, உயிரணுவின் தோற்றமும், அதனின் நிலைகளைக் கண்டுணர்வதற்காக, நான்காவது மேடையாக அமைத்து, கண்ணனைக் கொலு வைப்பார்கள்.

(பக்கம் 23-26)

கண் வந்தபின், அதன் நிலைகள் கொண்டு கூர்ம அவதாரம். இப்பொழுது புழுவாகத் தோன்றியபின், அந்தப் புழு உடலிலே கண்கள் தோன்றுகின்றது. துவாரகாயுகத்தில் கண்கள் தோன்றினாலும், கண் கொண்டு பார்த்து, தன் உணவிற்காகத் தேடிச் செல்கின்றது. தான் நுகர்ந்த உணர்வின் தன்மை சீதா, சுவை, தன் சுவையின் மணங்களை எண்ணி, தான் சுவாசித்து, அந்தச் செடி எங்கு இருக்கின்றதோ, அங்கே,  இந்த மணம் அழைத்துச் செல்கின்றது.

ஓர் மரம் அல்லது செடி, தான் இருந்த இடத்திலேயே தன் உணர்வின் ஆற்றலால், காற்றுக்குள் இருக்கும் தன் இனமான சத்தை அது நுகர்ந்து, அது ஒரு செடியாகின்றது, உணவாக எடுத்து விளைகின்றது. இது எந்தச் செடியின் சத்தை உணவாக எடுத்ததோ, அந்த உணர்வின் தன்மையைத்தான், முதலில் மணத்தால் நுகர்ந்தறிந்து செல்லுகின்றது.

பின், தான் பசியெடுக்கும்போது, அந்த மணம் -- "சீதா" சுவையின் எண்ணமாக உடலை இயக்கி, கண்களால் பார்க்கும் பொழுது, தன் உணவை எண்ணி ஏங்குகின்றது. அவ்வாறு ஏங்கி, அது மற்ற பக்கம் தன் உணவுக்காகத் தேடிச் செல்லும் பொழுது, பாறை மீது நகர்ந்து செல்லுகின்றது.

போகும் பொழுது, நிழலாக இருந்தது. சூரியனின் வெப்ப காந்த அலைகள், பாறையின் மீது தாக்கப்பட்டுப் பாறைகள் வெப்பமாகின்றது. அந்த வெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, கூர்மையாகத் தன் எதிரிலே காணும் செடி கொடிகளையோ, மற்றதையோ, கண் கொண்டு பார்க்கின்றது.

நிழலுக்காக அதை ஏங்கி,
நிழலில் போய் அமரவேண்டும் என்ற நினைவில்
அதைக் கண் கொண்டு, கூர்மையாகக் கவனித்து,
அதை சுவாசித்து,
அந்த உணர்வின் சத்தை அது நுகர்ந்து,
அங்கே செல்கின்றது. இதுதான் கூர்மை அவதாரம் என்பது.

ஆக, இந்தப் புழு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செடியின் நிழலைப் பார்த்து, அங்கே செல்கின்றது. ஆனால், அதே சமயம் அங்கே பாறைகளும், மற்ற நிலைகளும் உள்ள அதற்கு இருப்பிடமான அந்த இடத்தை நாடிச் செல்கின்றது. இதற்குப் பெயர் கூர்மை அவதாரம்.

ஆக, இந்தக் கண்கள் அங்கே இருக்கும் நிழலான இடத்தை, அது காட்டுகின்றது. இதனுடைய எண்ணம், அங்கே இருக்கக் கூடிய நிலைகளை நுகர்ந்து, சத்தியபாமா கவர்ந்து, இது இழுக்கின்றது.

அப்போது, இது நகர்ந்து செல்லும் பொழுது, போவதற்கு முன்னால், வெயிலின் வெப்பமான நிலை இந்தப் புழுவின் உடலுக்குள் அதிகமாகி,  அதனின் வேகம் கொண்டு, அந்த நிழலுக்குள், குகை போல உள்ளதை, இந்தக் கண்களுக்குத் தெரிவதைப் பார்த்து, அது படமெடுத்து, அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் விளைய வைக்கின்றது.

இதனுடைய கண்களுக்கு,
எவ்வாறு அங்கே தெரிந்ததோ,
அந்த உணர்வின் சத்தை, இங்கே படமாக்கி,
இதே உணர்வின் சத்து அதற்குள் விளைந்து,
இந்த வெப்பத்தால், தாங்க இயலாத நிலையில்
இதற்குள் விளைந்த இந்த உணர்வும், வெப்பமும்,
வினையாகச் சேர்ந்து, விளைகின்றது.

இவ்வாறு விளைந்தபின், புழுவான இந்த உயிரின் உடலுக்குள்
எடுத்துக் கொண்ட உணர்வின் சத்துடன்
அந்த உயிரான்மா வெளியில் சென்று,
அந்த உணர்வுக்குத் தக்கவாறு,
இந்த உயிர், காற்றிலே இருக்கும் உணர்வின் சத்தைக் கவர்ந்து, கூர்மை அவதாரம்  என்று, ஆமையின் உடலைப் போட்டிருப்பார்கள்.

ஆமையை நீங்கள் தீயிலே போட்டால், அந்த ஆமைக்கு வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கின்றது. தான் கூர்மையாகப் பார்த்து, புழுவாக இருந்தது, தன்னைப் பாதுகாக்கும் நிலைகள் கொண்டு, அத்தகைய உணர்வு கொண்டதால், ஆமை ஓட்டில், வரி வரியாக இருக்கும்.

ஒரு மலைக் குகையைப் பார்த்தால், அந்த உணர்வின் சத்து பாறை போன்று, மலையின் குகை போன்றே அமையும். சில ஆமைகளுக்கு இவ்வாறுதான் அது உருவானது.

கண்ணன் நான்கு, அடுத்து கூர்மை அவதாரம் என்கின்ற பொழுது ஐந்து. ஆகக் கூர்மையாகப் பார்த்து, இதைப் போல சரீரங்களைப் பெற்று, ஒவ்வொன்றையும் கூர்மையாகப் பார்த்து, இதை நாம் தெரிந்து கொள்வதற்குத்தான், கண்ணனுக்கு அடுத்து, ஐந்தாவது படியில் ஆமையைக் கொலுவாக வைப்பார்கள்.

 (பக்கம் 26-31)
உதாரணமாக நரி இருக்கின்றது என்றால், அது மற்ற பிராணிகளைக் கொன்று, உணவாக உட்கொள்ளும் நிலைகள் பெற்றது. ஆமை, அந்த நரியைப் பார்த்தவுடனே, கூர்மையாகக் கவனித்து நரியின் உடலை இது படமெடுத்துக் கொள்கின்றது.

ஆமையின் கண், நரியின் உடலிலிருந்து வெளிப்படும், (ஆமையை) உணவாக உட்கொள்ளும் மணத்தை இது நுகர்ந்து, அதன் அருகிலே வரப்படும் பொழுது, பார்த்தவுடனே, சுருக்கிக் கொள்கின்றது.

அதற்கடுத்து, அதே எண்ணமாக, நரியிடமிருந்து காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்து உடலுக்குள் வினையாகச் சேருகின்றது. இவ்வாறு வந்ததுதான், கூர்ம அவதாரம். ஒவ்வொரு நிலையிலும்,  கண் மற்றொன்றைக் கூர்மையாகப் பார்த்து, அதனின் அவதாரமாகப் பிறக்கின்றது, என்ற நிலையைக் காட்டப்படுகின்றது.
 
இந்த ஆமையின் கண்கள், நரியைப் பார்த்து
அந்த நரியின் உருவைத் தனக்குள் பதிவு செய்து,
அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து,
அந்த உணர்வின் சத்து தனக்குள் விளைந்த பின்,
இந்த ஆமை அதனிடம் சிக்கவில்லையென்றாலும், தலையை உள் இழுத்து, மீண்டும் அதைப் பார்த்துப் பார்த்து, அந்த உணர்வின் தன்மை வந்தபின், இந்த ஆமை இறந்துவிட்டது என்றால், எந்த நரியின் உணர்வு இதற்குள் வந்ததோ, அந்த நரியின் மணம் கொண்டு, இந்த உயிரான்மா நரியின் உடல் ஈர்ப்புக்குள் சென்று, பின் நரியாக உருபெறுகின்றது.

முதலில் புழுவாக இருந்தது. நிழலைப் பார்த்து அதனின் நிலைகள் கொண்டு, ஆமையாகப் பெற்றது. அதற்கு வெப்பத்தைத் தாங்கமுடியாத நிலைகள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ளும் நிலையாகி, உடலும் உணர்வும், உணர்வின் சக்தியும் பெற்றது என்ற நிலையை, நாம் தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த ஆமை.

இன்று என்ன சொல்வார்கள்? ஆமை புகுந்த வீடு ஒன்றுக்கும் உதவாது என்பார்கள். ஆமை புகுந்த அந்த வீடு, குட்டிச்சுவர்.
சாஸ்திரங்கள் என்ன சொல்லுகின்றது?
கூர்மை அவதாரத்தின் உட்பொருள் என்ன?
தீயதிலிருந்து, தனக்குள் பாதுகாக்கும் நிலையாக எண்ணி, அதனின் வலுக் கொண்டு, தன்னைக் காத்திடும் நிலையாக வளர்ந்து கொண்டது. ஆக இவ்வாறு கூர்மை அவதாரமாக, பல சரீரங்களிலே வளர்ந்து கொண்டது.

இப்போது காளானாக முளைத்து, செடியின் சத்தை ஒன்றாக்கி, இப்படிப் பலவிதமான செடிகள் உருவாகி, நமது பூமிக்குள் எண்ணிலடங்காத செடி கொடி மரங்கள் உருவாகின்றன.

பலவும் கலந்து, ஒவ்வொன்றும் இணைந்த சந்தர்ப்பத்திற்கொப்ப, பல செடி கொடிகள் வளர்வது போல, இந்த உணர்வின் எண்ணங்கள்,
எந்த எந்த தாவர இனச்சத்தை அது எடுத்ததோ, அந்த உணர்வும்,
அதே சமயத்தில், ஒரு உடலை வளர்த்து,
அந்த உடலுக்குள்ளிருந்து, இதை விழுங்கவேண்டும்
என்ற எண்ணத்தின் நிலைகள் கொண்ட மணமும்
இந்தத் தாவர இனத்தை உணவாகக் கொண்ட
இந்த உணர்வின் தன்மை, தனக்குள் இரண்டற இணைத்து,
அந்த உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு விளைந்தது? என்ற நிலைதான் கூர்மை அவதாரம்.

கெட்டதை நீக்கி, நீக்கித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நிலையாக வந்தது, என்ற நிலையைத்தான், இங்கே நரி, ஆடு, மான் என்று வரிசையாகக் கொலு வைத்து இருப்பார்கள்.

ஊர்வனவலிருந்து, பாம்பு இனங்களை வைத்து, பறப்பன என்ற நிலைகள் வைத்து, அதற்கடுத்து மிருகங்களை வைத்து,
நாம் ஒவ்வொன்றிலும், ஒவ்வொன்றிலிருந்து தப்பிக்க
நாம் எவ்வாறெல்லாம் உருவாகி, இன்று மனிதனாக வந்தோம்?
என்று உணரச் செய்வதற்குத்தான். விஜய தசமி அன்று கொலு வைப்பது.

அதை யாரும் செய்வதில்லை. தெரியாது. கொலு வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அந்த உண்மையான நிலைகளை, இவ்வாறு வரிசைப்படுத்தி, இவ்வாறு நாம் பத்தாவது நிலை அடையும் மார்க்கங்களை, உணர்த்தினார்கள் ஞானிகள்.

ஆறாவது நிலை அடையும் நிலையை பன்றியை கொலுவாக வைத்துக் காட்டினார்கள்.எத்தனையோ கோடி சரீரங்களிலே, ஒவ்வொன்றும் தன்னுடைய வலுவை எடுத்து, வலுவின் தன்மைக் கொண்டு, நுகர்ந்து, நுகர்ந்து, தன் வலுவைக்கூட்டி, அது தனக்குள் விளையவைத்து, பன்றியாகப் பிறக்கின்றது.

அந்தப் பன்றி என்ன செய்கின்றது? சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நிலையையும், மண்ணுக்குள் இருக்கக் கூடிய பொருளை, தான் எத்தகைய உணவை உணவாக எடுத்துக் கொண்டதோ, நுகர்ந்து பார்த்து, மண்ணைப் பிளந்து, கிழங்கைச் சாப்பிடுகின்றது, அதே சமயம், நாற்றமான பொருளில் உள்ள, நாற்றத்தைப்  பிளந்துவிட்டு, நல்ல பொருளைப் பன்றி எடுக்கின்றது.

எத்தனையோ கோடி சரீரங்களில், தான் வாழ வேண்டும் என்று, கெட்டதிலிருந்து நீக்கி, நீக்கி நல்லதைப் பெற்றது. இப்பொழுது, ஒரு மாடு, தான் எந்த எந்த உணவை உட்கொள்ளுகிறதென்றால், தன் தாய் எந்த உணவை எடுத்து இருந்ததோ, அதே உணவைத்தான் கன்று எடுக்கின்றது.

அந்தக் கன்று, தாய் ஈன்றபின், தாய் மாடு எடுத்த ஆகாரத்தைத்தான்,
தான், நுகர்ந்து நுகர்ந்து, பார்க்கின்றது.
அதற்கு, மாறானவைகளை நுகர்ந்து பார்க்கும்பொழுது,
வேண்டாம் என்று ஒதுக்குகின்றது.

இதைப்போல, தனக்கு வேண்டாம் என்பதை நுகர்ந்து ஒதுக்குவதுதான் வராக அவதாரம் என்பது. அதை நீக்கி, நீக்கி, அந்த வலுவின் தன்மை கொண்டு, பன்றியாக இந்த உயிர் அந்த உடலுக்கொப்ப உடலை அமைக்கின்றது, அமைத்தது என்று தெரிந்துக் கொள்வதற்குத்தான், இதைக் கொலுவாக வைக்கின்றார்கள்.

ஆக, இந்த  ஞானம் -- சரஸ்வதி,
லஷ்மியைக்  கொலு வைத்திருப்பார்கள்.
சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்ப காந்தமும்,
ஒவ்வொரு சரீரத்திலிருந்து வரக்கூடிய
அந்த மணத்தின் தன்மை கொண்டு,
இது நுகருமேயானால், அந்த மணம் இதன் ஞானமாகி,
தன் உடலின் மணத்தால்
மற்றதை வேண்டாம் என்று ஒதுக்கி,
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஞானமாக வருகின்றது.

அதற்குத்தான் இந்த அணுவின் ஆற்றலும், இந்த ஆயுத பூஜையும்,
நாம் எதை வளர்க்க வேண்டும்? என்றும்,
கூர்மையாக எதை எண்ண வேண்டும்? என்றும், கூர்மை அவதாரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றது.

இத்தகைய நிலைகளைத்தான், அன்றைய மகாஞானிகள், இந்த உயிர் எவ்வாறு நம்மை மனிதனாக உருவாக்கியது? என்ற நிலையை, சாதாரண மக்களும் அறிந்திடும் வண்ணம், விஜயதசமி என்று உணர்த்தி, தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

(பக்கம் 32-39)

வராகன், தான் எவ்வாறு கெட்டதை நீக்கி நீக்கி, நாற்றத்தை நீக்கி, நல்ல உணர்வினைத் தனக்குள் எடுத்தது? என்று ஞானியர்கள் சொன்னார்களோ, அதைப்போல, இப்பொழுது உங்கள் எண்ணங்களை, மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக்  கூர்மையாகக் கவர, உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே, இந்த உபதேசம்.

ஆகவே, இந்தக் கூர்மை அவதாரம் என்பது, நாற்றத்தைப் பிளந்துவிட்டு, சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருளைப் பன்றி நுகர்ந்து எடுக்கின்றது. மண்ணைப் பிளந்துவிட்டு, தன் உணவின் தன்மையைத் தன் நுகரும் ஆற்றலால், அது எடுத்து உணவாக உட்கொள்கின்றது. அப்படித் தீமையை நீக்கி, நல்லதை உட்கொண்ட உணர்வின் சத்து, அதே ஞானமாக அதை எண்ணிய நிலைகள் கொண்டு, எதை எண்ணியதோ, அது காந்தம் லட்சுமி, இதைக் கவருகின்றது.

தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு,
நல்லதைப் பெறவேண்டுமென்ற
ஞானத்தின் எண்ணங்கள் அங்கே அது கவருகின்றது.
இவையனைத்தையும், எடுத்துக் கொண்ட தன் உணர்வான
வெப்ப காந்தங்கள் படைக்கின்றது
என்ற இந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குத்தான்,  இந்த மூன்று உணர்வுகளின் நிலைகள், ஆயுதங்களாக ஒவ்வொரு உடலிலும் இயங்கியதை, அதை உணர்த்த,  ஆயுத பூஜை என்று வைத்தது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்து, உபதேசித்தார். இப்பொழுது, நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை. நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள். எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத்தான், உபதேசம் கொடுத்தார்.

அந்த மகிழ்ச்சியான எண்ணங்களில், இந்த உணர்வை எண்ணி, நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக யாம் சொல்லுகின்றோம். அன்று பைத்தியத்திடம் சேர்ந்து, சாக்கடையில் உட்கார்ந்து இருக்கின்றேன், என்று எம்மைக் கிண்டல், கேலி செய்தார்கள்

சாக்கடை உபதேசத்தில், எம்மை டீ, காபி வாங்கிவரச் சொல்லி, சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டுக் குடி என்கிறார் குருநாதர்.

அய்யய்ய என்று யாம் மறுக்கின்றோம்.

இந்தக் கூர்மை அவதாரம், வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்? நீ கூர்மையாக நாற்றத்தை எண்ணுகின்றாய். அந்த உணர்வின் சத்து, உனக்கு நாற்றமாகின்றது. அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்? என்று எண்ணுகின்றாய், அந்த உணர்வின் சத்து உனக்குள் வருகின்றது.

ஆக, இந்தப் பன்றியானது என்ன செய்கின்றது?
நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது.
அது நாற்றத்தை எண்ணவில்லை.
நீ நாற்றத்தை எண்ணுகின்றாய்.
அடுத்தவன் என்ன சொல்லுகின்றான்? என்று எண்ணுகின்றாய்.

இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா?
அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா?
நீ உயர்ந்த நிலையைச் சேர்த்துக் கொள்கின்றாயா?
அல்லது நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா?
நாற்றத்தை எண்ணியவுடனே, நீ எதை எண்ணுகின்றாயோ, அதை உன் உயிர் படைக்கின்றது, அதுவாகின்றாய்.

கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று உணர்த்தப்பட்டுள்ளது. அய்யய்ய என்று கண்ணில் பார்க்கின்றேன். நாற்றம் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது எந்த எண்ணம் வரப்படும் பொழுது, கண்ணன் என்ன சொல்கிறான்?

நாற்றம் என்கிற பொழுது,
நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது. அதை (என் கண்கள்) இழுத்தவுடனே, நாற்றம் என்றவுடனே அதிகமாகிவிடுகின்றது. அந்த நாற்றம், உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். இந்த நாற்றத்தை நீக்கி, நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால், நீ அதுவாகின்றாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.

அதைப்போல, என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ?
என்று அவர்களைப் பார்க்கின்றேன், 
நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்? என்று
எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான், நமது குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

சாக்கடை அருகில் உட்கார்ந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? பாரு, எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய், சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள் வேண்டிப் போவதற்காகச் செல்கின்றார்கள். ஏனென்றால், அந்தச் சித்து, இந்தச் சித்து, தங்கம் செய்வது, வெள்ளி செய்வது, என்றுதான், சாமியார் பின்னால் போகின்றார்கள்.

மனிதனுடைய வாழ்க்கையில் இப்பொழுது,
கூர்மை என்ன செய்கின்றது?
அவர்கள் என்ன நினைப்பார்கள்?
இவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று
அதை வலுவாக எடுக்கும் பொழுது, வராக அவதாரமாக மாறிவிடுகின்றது.  இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.

வராகன் என்ன செய்கின்றது என்று இவ்வாறு, பல நிலைகளில் என்னை அல்லல்பட வைத்து, எண்ணங்கள் உருவாகி,
உன் உடலுக்குள், உணர்வுகள் எதைக் காட்டுகின்றது?
அந்த உணர்வை எடுத்தவுடன்
உனது ஆன்மாவாக எவ்வாறு மாறுகின்றது?
ஆன்மாவிலிருந்து சுவாசித்தவுடன், உயிரில் எவ்வாறு படுகின்றது?
அந்த உயிர், நீ சுவாசித்ததை இயக்கி, அய்யய்ய நாற்றம் என்று
இந்த உடலை அழைத்துச் செல்கின்றது. இது கூர்ம அவதாரம்.

ஆக அதே சமயத்தில், கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றோம். அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால், வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு, நாற்றம் நாற்றம் என்று நீ போகின்றாய்.

அவ்வாறு சென்று, கூர்மை அவதாரத்திற்கும், வராக அவதாரத்திற்கும், இரண்டுக்கும் இணை சேர்த்து, அதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ, அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன், ஈசனான உயிர், அதை வலுவாக்கி, அதனின் நிலைகள் கொண்டு, அதே எண்ணத்தை எண்ணும் பொழுது, இந்தக் கண் என்ன செய்கின்றது? இதையே எடுத்து, நுகர்ந்து, அய்யய்ய என்கிற பொழுது, விலக்கிச் செல்லும்.

நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய்.  இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால், எடுத்துக் கொண்ட உணர்வே, இங்கே சாக்கடையாக உள்ளே நுகர்கின்றது,  என்ற இந்த நிலையை அங்கே பக்குவப்படுத்துவதற்காக, அந்தச் சாக்கடைப் பக்கமே, இவ்வளவு உபதேசம் கொடுக்கின்றார் குருதேவர்.

இதே மாதிரிப் பார்த்துவிட்டு, எனக்குக் காபி, அவருக்கு டீ, இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து, அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட, குப்பை இரண்டைப் போட்டு, என்னைக் குடி என்கின்றார் குருதேவர்.

அப்பொழுது என்னுடைய பார்வை என்ன செய்கின்றது? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன், ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது என்றும் என்ணுகின்றேன்.

இதைத்தான் கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்றது. இப்பொழுது, அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே, எவ்வாறு குடிப்பது என்று விலக்கிச் செல்கின்றது.

ஆக இந்த எண்ணத்தால், அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.

அப்பொழுது நான், நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்பொழுதுதான், உணர்வின் இயக்கங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் இயக்கி, உடல் முழுவதும் பரவச் செய்து, தன் இனத்தை எவ்வாறு எண்ணுகின்றோமோ, அதே இனம் நமக்குள் நின்று, அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.

அப்பொழுது, அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்று பார்த்தேன், முடியவில்லை.

சரி, நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா என்றார் குருதேவர்.

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால், வாங்கவா செய்வார்கள்? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள்.  டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

அப்பொழுது, நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா, என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன். சாக்கடை அருகில், ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார். முதலில் பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக, முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக, நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே, ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. அப்பொழுது, பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

அடுத்து, முருக்கு, வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்துப் போகின்றது. அந்த முறுக்கை எடுக்கின்றது.

அடுத்து, எண்ணெய் வாசனை இருக்கின்றது. கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத் தான் நுகர்ந்து எடுக்கின்றது.

சாக்கடைக்குள் பார்த்தாயா? என்றார் குருநாதர்.
அது நாற்றத்தை எடுக்கவில்லை,
நீ எதை எடுக்கின்றாய்? என்றார்.
காபி இருக்கின்றது, நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை,
உன் உடல் நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே,
சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை,
உன் உடல் பிரித்துவிடுகின்றது.

உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது. நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை? என்று கேட்கின்றார் குருநாதர். நான் என்ன பதில் சொல்வது?

இந்த உணர்வின் இயக்கங்கள், நீ சாப்பிடும் ஆகாரம், ருசியாகச் சாப்பிடுகின்றாய். அதிலே இருக்கக் கூடிய நஞ்சு, அதில் இருக்கக் கூடிய நாற்றத்தையெல்லாம், மலமாக மாற்றிவிடுகின்றது, உன் உடலில் இருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு.

அப்பொழுதுதான்,  வராக அவதாரமும், கூர்மை அவதாரமும், எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ, அதனின் வலுக்கொண்டு, அதனின் வலிமையாக,  அடுத்த உருவை உருவாக்குகின்றது  என்ற நிலையை அங்கே காட்டுகின்றார் குருதேவர்.


(பக்கம் 39-43)

பன்றி சாக்கடையை நீக்கி,
இந்த உணர்வின் சத்தைத் தனக்குள் நுகர்ந்து,
அது சேர்த்துக் கொண்ட இந்த வினைக்கு நாயகனாக
அடுத்து, பரசுராம் மனிதனாக உருவாக்குகின்றது.

மனிதனானபின், நாம் என்ன செய்கின்றோம்? நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினை மாற்றிவிட்டு, நல்ல உணர்வாகச் சமப்படுத்துகின்றது, என்ற இந்த  நிலையைப் பரசுராம் அவதாரம் என்று காட்டப்பட்டு, சமப்படுத்தும் அந்த எண்ணங்கள் இயங்குகின்றது, என்ற நிலையை உணர்த்துகின்றனர் ஞானியர்.

இது ஏழாவது அவதாரம். இதற்குப் பெயர்தான், ஆறாவது அறிவாக இந்த பரசுராம் என்கிற பொழுது, நாம் நஞ்சினை நீக்கி, நம் உடலுக்குள் ஆறாவது அறிவாக ஆக்கப்படும் பொழுது, முதலில் சிவம். இரண்டாவது, நாம் அதிலே சேர்த்துக் கொண்ட உடலின் அமைப்பு என்றும், அந்த எண்ணத்தின் நிலைகள் என்றும், அங்கே வைக்கப்பட்டு, அதனைத் தெளிவுறத் தெரிந்து கொள்வதற்காக, பரசுராம் அவதாரம், கோடாலியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

ஆக, ஆறாவது அறிவு கெட்டதை நீக்கி, நல்லது செய்யக் கூடிய பண்பு பெற்றது இப்பொழுது, நாம் ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டாலும்,  பல பொருள்களை இணைக்கின்றோம். ருசியாக மாற்றிச் செயல்படுத்துகின்றோம். இதற்குப் பெயர் பரசுராம்.

அதே மாதிரி, சில மரங்கள் இருக்கின்றது, அதைச் சமப்படுத்தி, நமக்கு வேண்டிய நிலைகளாக உருவகப்படுத்தி, அதற்கு வேண்டியதை நாம் செயல்படுத்துகின்றோம். இவ்வாறு எல்லாவற்றையும் சமப்படுத்தும் நிலைகள். இப்பொழுது மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகள் தோன்றுகின்றது. அந்தக் குறைபாடுகளை நிவர்த்திக்கும் நிலை பெற்றது, பரசுராம் சமப்படுத்தும் நிலை.

நாம் எதைச் சமப்படுத்த வேண்டும்? என்று உயர்ந்த நிலைகளை எண்ணுகின்றோமோ, இப்பொழுது எவ்வாறு பன்றி, வராகன், கெட்டதை நீக்கும் வலுவான எண்ணம் கொண்டு, தன்னுடைய எண்ணத்தைக் கூர்மையாக எதிலே செலுத்தியதோ, அதனின் அவதாரமாக, கூர்மை அவதாரமாக, இப்பொழுது மனித உடலுக்குள் கெட்டதை நீக்கி,
நல்லதை உருவாக்கும் நிலைகளை,
சப்தரிஷி ஏழாவது நிலைகள், சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

இவ்வாறு பெற்றவர்தான் அகத்தியர்.
அணுவின் ஆற்றலை அறிந்துணர்ந்து,
அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு,
ஏழாவது, ஒளியாக
ஒரு மறைந்த பொருளுக்குள் இருக்கக் கூடியதை,
தான் அறிந்துணர்ந்து,
இந்த உணர்வினைச் செயலாக்கிய நிலைகள் கொண்டவர்தான்,
அகத்தியர்.  அவர், அன்று தெளிவுபடுத்திய நிலைகள்தான் பரசுராம்.

இந்தப் பரசுராம் என்ற சமப்படுத்தும் நிலைகள் கொண்டு, உருவானதுதான் சப்தரிஷி. நாதங்களாக, ஏழாவது நிலையாக உருவானவர் அகத்தியர். தனக்குள் அணுவின் அணுவை உணர்ந்து, உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு, கெட்டதெல்லாம் நீக்கி, அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றினார். இதுதான் பலராம்.

நாம் எத்தகைய நிலைகளில் இருந்தாலும், சமப்படுத்தும் நிலைகள் கொண்டு, மனித வாழ்க்கையில் எத்தனையோ விதமான எண்ணங்கள் கொண்டு வருகின்றனர். இதைக் காவியங்களில் காட்டியிருக்கின்றார்கள். 




பலராமன், கண்ணனிடத்திலே அவலைக் கொண்டு போய்க் கொடுத்தவுடனே, வாயிலே முழுமையாகப் போட்டுவிட்டால், இவன் குபேரனாகி ஆகிவிடுவான்  என்று கதையைக் காட்டுவார்கள்.

இந்தக் கண்ணனின் நிலைகள் கொண்டு,
எதனின் தன்மைகளைத்
தனக்குள் எடுத்து விழுங்க வேண்டும்,
எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றானோ,
அதனின் உணர்வின் ஆசையாக, அங்கே வளர்க்கும்
என்ற நிலையை எடுத்துரைப்பதற்காக, பலராமன் கண்ணனைத் தேடிச் சென்றான் என்று சின்னச் சின்னக் குட்டிக் கதைககளைச் சொல்லி, விளக்கம் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

ஆகவே, இந்தக் கண்ணின் நிலைகள் கொண்டு,
அந்தப் பலருடைய எண்ணங்கள்,
நமக்குள் பலவாறு ஆனாலும், நம்முடைய எண்ணங்கள்
கெட்டதை நீக்கும் நிலைகள் கொண்டு,
கூர்மை அவதாரமாக நாம் விண்ணை நோக்கி ஏகி,
அந்த வலுவின் நிலைகள், ஞானிகள் எவ்வாறு கெட்டதை நீக்கி, ஒளியாக மாற்றிச் சென்றனரோ, அவை அனைத்தையும் நாம் பெற முடியும்.

எத்தகைய நிலைகள் இருந்தாலும், அந்த ஞானிகளின் உணர்வலைகள், அவர்கள் வாழ்க்கையில் தீமைகளை வென்ற நிலையை,  பலராமன் என்றால்,  பலருடைய எண்ணங்களை, அதை நீக்கி, ஒளியின் சிகரமாகப் பெறமுடியும்  என்ற தன்னம்பிக்கையைக் காட்டுவதற்குத்தான், பலராமன் அவதாரம்.

அவ்வாறு, அந்தப் பல நிலைகளையும் அறிந்துணரும் எண்ணத்தால் நாம் எவ்வாறு ஆகவேண்டும் என்பதைத்தான் இந்தச் சிலைகளைக் கொலுவாக வைத்துக் காண்பித்துள்ளார்கள்.

(பக்கம் 43-51)

சிலைகளைக் கொலுவாக வைக்கப்படும் பொழுது, கண்ணன் (கண்), அடுத்து கூர்மை (ஆமை), அதற்கடுத்து வராகன், அதற்கெல்லாம் அது உணவாக எடுத்துக் கொண்டதையும், அதனின் நிலைகள் நுகர்ந்து கொண்டதையும் வைத்து, ஏழாவது மனிதன், ஒரு பொருளின் தன்மையை, நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதற்காக வைரங்களை வைத்தார்கள்.

வைரம் எவ்வாறு தன்னிச்சையாக ஒளியாகின்றதோ, வைரம் எப்படி நஞ்சினை அடக்கி, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியதோ, இதைப் போலத்தான் மனிதன், இந்த வராக அவதாரத்திற்குப்பின், இந்த ஆறாவது அறிவின் தன்மையாக முருகனை வைத்து, படைக்கத் தெரிந்தவன் என்ற நிலையில், மயிலும் அதன் காலடியில் விஷமும் வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது, கருணைக் கிழங்கை வேக வைத்து, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, அதனுடன் பல பொருள்களை இட்டு, நஞ்சினை அடக்கி, சுவைமிக்கதாகச் செய்து, உணவாக உட்கொள்கின்றோம். ஆக, கெட்டதை நீக்கி, நாம் மகிழ்ச்சியான நிலையில் உணவை உட்கொள்கின்றோம்.

ஆனால், அந்தக் கருணைக் கிழங்கில் இருக்கக்கூடிய நஞ்சு அது அடக்கப்படுகின்றது, என்ற நிலையை உணர்த்துவதற்காக, இந்த ஆறாவது அறிவை, முருகன் என்று அதை வைக்கின்றனர்.

ஆக, இந்த உடலின் தன்மை வரப்படும்பொழுது,
இங்கே முருகனின் தன்மையை வரிசைப்படுத்தி,
மற்றதைப் படைக்கத் தெரிந்தவன்,
பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்,
உருவாக்கத் தெரிந்தவன் என்று
ஞானிகள் தெளிவுற உணர்த்தியுள்ளார்கள்.

இவ்வாறு, முருகன் உருவாக்கத் தெரிந்தவன் என்ற நிலையைத்தான், ஆக, தெரிந்து கொள்ளும் நிலையை, நஞ்சினை அடக்கத் தெரிந்தவன் என்ற நிலையை, மயிலையும், பாம்பையும் வைத்து, அதனருகில் வைரக்கல்லை வைப்பார்கள், கடந்த காலங்களில்.

வைரம் எவ்வாறு நஞ்சினை அடக்கி, ஒளியின் தன்மை வீசுகின்றதோ, இதைப் போலத்தான், அந்த மகரிஷிகள் தன் உணர்வின் தன்மையால், இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கி, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, இன்றும் "பெருவீடுபெருநிலை" என்ற நிலையில், அழியா ஒளிச் சரீரம் அடைந்து வாழ்கின்றனர். இதற்குப் பெயர்தான் சப்தரிஷி.

ஆகவே, இதைப் போல நாம் தெரிந்து உணர்ந்து செயல்படும் தன்மையை, நாம் உணர்ந்து கொள்வதற்காக, விஜய தசமி என்ற நிலையை வைத்தார்கள் ஞானிகள்.

இன்று நாம் ஒன்பதாவது நிலையில் இருக்கின்றோம். அடுத்து, பத்தாவது நிலையை எவ்விதம் அடைவது? என்பதைக் காட்டுவதற்காக, இந்த ஆறாவது அறிவைக் கொண்டு, மனித வாழ்க்கையில் நரசிம்ம அவதாரம் என்று வைத்திருப்பார்கள்.

நரசிம்ம அவதாரம் என்கிற பொழுது, நரசிம்மன் எங்கே அமர்ந்திருக்கின்றான்? வாசல் படியில் அமர்ந்து, மடிமேல் வைத்து, இரண்யனைப் (அசுரச் சக்தியைப்) பிளக்கின்றான். நமது உயிர் நர நாராயணனாக அமைந்து, இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு, நாம் கெட்டதைப் பிளந்திட வேண்டும்.

வராகன் எவ்வாறு நாற்றத்தைப் பிளந்ததோ, இதைப் போல
மனிதன் கெட்டதை நீக்கி, நஞ்சினை நீக்கிவிட்டு,
நல்ல உடலினை ஆக்கிய,
அந்த உடலிலிருந்து தோன்றும் இந்த எண்ணத்தால்,
நாம் எவ்வாறு கெட்டதைப் பிளக்க வேண்டும்?
என்பதைக் காட்டுவதற்குத்தான், நரசிம்ம அவதாரம் என்று ஞானியர்கள் காட்டியுள்ளார்கள்.

நர நாராயணன் நமது உயிர்,
இந்த உடலுக்குள் பேரண்டத்தின் சக்தி அனைத்தும்,
அங்கே, நாராயணனாக இருக்கின்றான்,
இந்த மனித உடலுக்குள் போகும் பொழுது,
நர நாராயணனாக மாறுகின்றான்,
என்ற உண்மையினைக் காட்டியுள்ளார்கள்.

நம் உடலுக்கு, நம் மூக்கு வாசல்படி.
நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ,
அந்த உணர்வின் சத்து நமது ஆன்மாவாக மாறுகின்றது.
ஆக, இந்த ஆன்மா நமக்கு மடி.

இப்பொழுது, உதாரணமாக நான் நல்ல மனம் கொண்டு, பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது, அவர் வாழ்க்கையில் துயரப்பட்டு, வேதனைப்பட்டு, வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் சொல்வதை என் காதிலே கேட்டபின், என் உடல் உணர்வுகள் அனைத்தும் மாறி, என் கண்ணின் பார்வைக்கும், அதே போல் வருகின்றது.

இப்பொழுது அவர் உடலில் இருந்து வரக்கூடிய, அந்தக் கசப்பான, அவர் வாழ்க்கையில் எவ்வளவு வெறுப்பான உணர்வுகள் இருந்ததோ, அதை நுகர்ந்து பார்த்தவுடனே, நுகர்ந்து என் ஆன்மாவாக மாற்றுகின்றது. அவரைக் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது, கூர்மை. அந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்யும் பொழுது, ஊழ்வினை.

ஆக, அவரைப் பார்த்தபின், அந்த உணர்வின் ஆன்மா எனக்குள் ஆன்மாவாக மாறுகின்றது. நமது பூமி ஓர் பரம். அவர் பேசும் உணர்வுகள் அனைத்தும் வெளி வந்தபின், சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, பரமாத்மாவாக மாற்றுகின்றது.

ஆனால், நாம் அந்த மனிதனைப் பார்த்து, அவர் கஷ்டப்படுவதைச் சொல்லும் பொழுது, அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட உண்மை நிலை, இந்த பரமாத்மாவில் கலந்தாலும், அதனின்று கலந்து, என் ஆத்மாவாக மாற்றுகின்றது.

அவர் கஷ்டப்பட்ட உணர்வின் சத்தை, நான் எடுத்துக் கொண்டபின், என் உயிருடன் இணைக்கப்பட்டு, அந்த உணர்வை அறிந்துணர்ந்தாலும், எனக்குள் பதிவு செய்தது, ஊழ்வினையாகின்றது.

ஆனால், அவர் கஷ்டப்பட்ட நிலையை, எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணத்துடன், இங்கே எண்ணிய உணர்வு நான் கண்ணிலே பார்த்து, இந்த உணர்வின் தன்மை இரக்கப்பட்டு, செவியின் புலனில் உணர்த்தப்பட்டபின், இரக்க உணர்வு கொண்டு அவரைப் பார்க்கின்றேன். அந்த உணர்வின் ஆன்மா, அந்த வெளிப்பட்ட நிலையை பரமாத்மா ஆகியதை, எனது ஆத்மாவாக, என் உடலின் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றது.

அவ்வாறு ஆன்மாவாக மாறியதுதான் இங்கே மடியாகின்றது. அவர் எவ்வளவு வேதனைப்பட்டாரோ, அந்த உணர்வின் தன்மை, இங்கே என் சுவாசத்தில் கலந்து, என் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து விடுகின்றது. இதைத் தடுக்க வேண்டுமல்லவா? அதைத் தடுக்கும் நிலைதான் நரசிம்மா.

நர நாராயணன், வாசல் படி மீது அமர்ந்து, மடிமீது இரண்யனை வைத்து இரண்யனைப் பிளந்தான். அதாவது, "ஓம் ஈஸ்வரா" என்று புருவ மத்தியில், நம் உயிரை எண்ணி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், என்ற நினைவினைத்
துருவ நட்சத்திரத்தின்பால்,
விண்ணை நோக்கிச் செலுத்தி, ஏங்கி அதைச் சுவாசித்து,
நம் உடல் முழுவதும் பரவச் செய்யும் பொழுது,
வேதனையான சுவாசம் ஆன்மாவில் படர்ந்திருப்பதை,
மூக்கின் வழி, நம் உடலுக்குள் செல்லும் நிலையைத் தடுக்கின்றது.

அதே சமயம், நாம் புருவ மத்தி வழியாக சுவாசித்த, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், நம் உடல் முழுவதும் சென்று,
உடலிலிருந்து வெளிப்படும் அந்த மணம்,
நம் ஆன்மாவில் படர்ந்துள்ள, வேதனையான உணர்வுகளை,
நம் ஈர்ப்பைவிட்டுத் தள்ளிவிடுகின்றது.
நாம் ஈர்க்க மறுக்கும், அந்தத் தீமையான உணர்வுகளை, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து சென்றுவிடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமடைகின்றது. இதுதான் நரசிம்ம அவதாரம்.

இவ்வாறு, நம்மை அறியாமலே, நம் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள், நம் சுவாசத்திலே கலந்து கொண்டே இருக்கின்றது. நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்,  நாம் அனைவரும், ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்வோம்.

நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவோம்.  இவ்வாறு, இந்த உலகில் உள்ள நாம் அனைவரும் செய்வோம் என்றால்,  இந்தப் பூமியும் பரிசுத்தமடையும்.  அத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெற எமது அருளாசிகள்.

(பக்கம் 58-64)

ஆறாவது அறிவின் தன்மையாக, முருகனைக் காட்டப்படும் பொழுது, கதையாக எழுதி, பிரம்மாவைச் சிறை பிடித்தான் ஆறாவது அறிவிற்குள் எண்ணங்கள் எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையை முருகனைக் காட்டுகின்றனர். அவனுக்கு முன், வாகனமாக வைத்திருப்பது மயில் (மகிழ்ச்சி) மகிழும் தன்மை (மயில்) என்று இருந்தாலும், விஷத்தை அடக்கி,
தன் கூர்மையான ஆயுதம், சக்திவேல்.
முனை கூர்மையாக இருந்து
அடி பெருத்து, நுனி சிறுத்து,
தன்னுடைய கூர்மையான சக்தியால், எவ்வாறு விளைய வேண்டும்? என்ற நிலையை, துவைதம் -- உருவ நிலைகளாக, அமைத்துக் காட்டினார்கள், மெய்ஞானிகள்.

அதைத்தான் துவைதம், உருவ நிலைகளில் இருந்து,
நமக்குள் மறைந்த சூட்சும நிலையை,
நாம் அறிந்து கொள்வதற்காக,  
விஜய தசமி என்ற நிலைகளை, அன்று வியாசக பகவான்,
மனிதனாக பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், பரிணாம வளர்ச்சியில்
தான், இந்த மனித வாழ்க்கைக்கு எவ்வாறு வந்தோம்? 
பத்தாவது நிலையை, மனிதர்கள் எவ்வாறு அடைய வேண்டும்?
என்று வியாசகரால் உணர்த்தப்பட்ட நன்னாள்தான், விஜய தசமி.

இந்த உயிரின் தன்மை கொண்டு, நாம் இயங்கப்படும் பொழுது, இந்த பத்தாவது நிலையை நாம் எவ்வாறு அடைய வேண்டும்? என்ற மார்க்கத்தினை,
சூட்சுமத்தில் நடந்து கொண்டிருக்கும் இயல்பான அந்தச் செயலை,
உருவமாக அமைத்து வைத்து, அந்த எண்ணத்தால் நுகர்ந்து அறிந்து,
தன்னை அறியாது சேரும், தீமைகளை நீக்கக் கதைகளாக எழுதி,
அந்தக் கதையின் உணர்வின் எண்ணங்களை,
நாம் எண்ணும் பொழுது,
அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் எவ்வாறு இயங்குகின்றது?
என்ற நிலையைத் தெளிவுற எடுத்துணர்த்துவதற்கு,
உண்டான நன்னாள் தான் விஜயதசமி.

ஆகவே, இந்த கண் (கண்ணன்) கண்ணனுடைய நிலைகள், நமது உடலுக்குள் இருக்கக் கூடிய உறுப்புகள் அனைத்தும், உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தும் எவ்வாறு இயங்குகின்றது? என்று காட்டுவதற்குத்தான். இந்த மனித உடலிலேயே, தீய வினைகளை வென்று, சக்தி வாய்ந்த நிலைகள் பெற்றவர்கள் ரிஷிகள், என்ற இந்த நிலையைக் காட்டி, இந்த அசுரனை நாம் எவ்வாறு வெல்ல வேண்டும்? என்ற இந்த உணர்வைக் காட்டுவதற்குத்தான், நரசிம்ம அவதாரம் என்றும் ஞானிகள் உணர்த்தியுள்ளனர்.

நமது உயிர் புருவமத்தியில் இருந்தாலும், நமது மூக்கு வாசல்படி, நாம் எடுத்துக் கொண்ட உடலின் நிலைகள் ஆன்மா, இது மடி என்று, இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

இன்று விஜயதசமி என்றால், ஒன்பதாவது நிலைகளில் இருக்கும் நாம், பத்தாவது நிலையை எவ்வாறு அடைய வேண்டும் என்ற நிலையாக, இந்த உயிர் இங்கே வந்தபின், நம்முடைய நிலையைத் தெளிவாக்குவதற்கு, இதைப்போல உபதேசித்து, ஒவ்வொரு வருடமும்
தன் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் எவ்வாறு ஆனது, 
மனிதனுக்குள் நோயாக எப்படி ஆனது? என்றும்
நாம் சந்தர்ப்பத்தால் பிறருடைய நோய்களைக் கேட்டறிந்தபின்,
அது நம் உடலிலே நோயாக மாறியதும், நம் நல்ல உணர்வுகள்
எவ்விதம் மாற்றம் அடைந்தது? என்ற நிலையையும்,
இதை நாம் நீக்கும் மார்க்கங்களாக
ஒவ்வொன்றும் தெளிவாக எடுத்து, இதைப்போல அன்று உபதேசித்து
மனித வாழ்க்கையில் தீமையை நீக்கி,
தீமையை நீக்கிடும் ஒன்பதாவது நிலையை,
நாம் உணர்ந்து, தீமையை நீக்கியபின், உணர்வின்
பத்தாவது நிலையை அடைய வேண்டும், என்ற மார்க்கங்களை  நினைவு கூறும் நன்னாள், விஜயதசமி.

 ஆனால், இன்று நாம் எதைச் செய்கின்றோம்? ஆயுத பூஜை அன்று, வீட்டையும், கடையையும் சுத்தப்படுத்த்தி விட்டு, சாமான்களத் துடைத்து விட்டு, இரண்டு சுண்டல் பொரிகடலை கொடுத்தால் சரியாகப் போகும் என்கிறோம்.

நமக்குள் எது ஆயுதம்?
நமக்குள் உயர்ந்த எண்ணங்களை ஆயுதங்களாக்கி
நமக்குள் தீமையை விளைய வைக்கும் அசுத்தங்களை நீக்கி
இந்த ஆயுதத்தைச் சுத்தப்படுத்த,
இந்த உண்மையை உணர்த்திய
அந்த மகரிஷியின் அருள் உணர்வை, நமக்குள் செலுத்தி
நமக்குள் ஒவ்வொரு எண்ணங்களையும் சுத்தப்படுத்தி
அதை நமக்குள் எடுத்து,
சரஸ்வதி ஞானம் அதை சுத்தப்படுத்தும் ஞானமாக,
லெஷ்மி, தனக்குள் வளர்க்கும் நிலையாக
பராசக்தி, கொடுப்பதைப் படைக்கும் நிலைகளை
நாம் உயர்ந்த நிலைகளில் எது எடுக்க வேண்டும்?
எந்த ஆயுதத்தை நமக்குள் சுத்தப்படுத்த வேண்டும்? என்ற நிலையை நாம் இது வரையிலும் அறிந்து கொள்ளவில்லை.

அத்தகைய உணர்வின் எண்ணங்கள், எவ்வாறு ஆயுதங்களாக இயங்குகின்றது? என்ற நிலையை, இன்று நாம் அறிந்துணர்ந்து, ஆயுத பூஜை அன்று தராசுகளைச் சுத்தப்படுத்தி, கடையைச் சுத்தப்படுத்தி, படியைச் சுத்தப்படுத்தி, மாலைகளையும் மற்றவைகளையும் வைத்து அலங்காரம் செய்வது போல,
நம் உணர்வுக்குள் இருக்கும் எண்ணங்களில்
நல்ல குணங்கள் கொண்டு வாழ்க்கையில் பார்த்தாலும்.,
பிறருடைய தீமைகளை நாம் எண்ணி,
இந்த உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் கலந்து,
நம் நல்ல நிலைகளைச் செயல்படுத்தவிடாது,
அந்த எண்ணங்களைச் செயல்படுத்தாது
மழுங்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையை
அது சுத்தப்படுத்த வேண்டும்.

அதே சமயத்தில் கூர்மையான எண்ணங்கள், நாம் படிக்கும் நிலையின் நிலைகளை சரஸ்வதி, இந்த ஞானத்தின் நிலைகளை, நமக்குள் வைத்து நாம் நினைவு கூர்ந்து, இப்பொழுது நாம் உபதேசிக்கின்றோம் அல்லவா?

இதைப் போல ஒவ்வொருவரும், அந்த மாமகரிஷி வியாசக பகவான் கண்டுணர்த்திய மறைந்த நிலைகளை, அத்வைதம். ஆக, உருவ நிலைகள் கொண்டு, அதனைக் கதையாக எழுதி உணர்த்திய உண்மைகளை நாம் கவர்ந்து, அதை நமக்குத் தெளிவு படுத்தும் நிலையாகக் காட்டிய, அந்த நன்னாளை நாம் போற்றிக் காத்து, ஒவ்வொரு நிமிடமும் நினைவு கொள்ள வேண்டும்.

விஜயதசமி, நமது எண்ணங்களைப் பரிசுத்தப்படுத்தும் நாளாக இதை ஆயுதமாக வைத்து, ஆயுத பூஜையாக இன்றைய நிலைகளில் வைத்தது. ஆகவே, அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்தக் கண்ணன் இவ்வாறு காட்டுகின்றான். மெய்ஞானியின் உணர்வை நாம் கண்டு உணர்வதற்காக, இந்த மனித வாழ்க்கையிலேயே நஞ்சினை நீக்கி, உணர்வினை ஒளியாக மாற்றி, இன்றும் பெருவீடு பெருநிலை என்ற நிலையில், உயிர் ஒளியாக வந்தது அதே சமயம் இந்த மனித நிலைகளில், உணர்வுகள் அனைத்தும் பத்தாவது நிலையாக உயிர் எவ்வாறு ஒளியானதோ, அவ்வாறே ஒளியின் சரீரமாக ஆக்குவதற்குத்தான், விஜயதசமி.

அந்த ஞானிகளும், மகரிஷிகளும், பத்தாவது நிலையை எவ்வாறு அடைந்தனரோ அதைப்போல,  அவர்களின் உணர்வை நமக்குள் சேர்த்து, அந்தப் பத்தாவது நிலையை அடையும் நினைவின் உணர்வலைகளை,  நமக்குள் சேர்ப்பிக்கும் நன்னாள்தான் விஜயதசமி. எமது அருளாசிகள்.

 (பக்கம் 73-78)

பிறர் துயரப்பட்ட உணர்வுகlளை, நாம் கேட்டு நுகர்ந்தது அனைத்தும், நம் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் பட்டோமோ, அத்தனை குணங்களும் நமக்குள் உண்டு.

அவ்வாறு, துயரப்பட்ட உணர்வின் தன்மைகள், பிறரைப் பார்த்துக் கேட்டறிந்த நிலைகள், ஊழ்வினையாக நமக்குள் பதிவான நிலைகள் கொண்டு, ஒவ்வொன்றையும் ஆன்மாவாக நாம் எடுத்துவைத்த இந்த நிலைகளிலிருந்து, அவைகளை நம் ஆன்மாவிலிருந்து அகற்றும் நிலையைத்தான், மடிமீது இரண்யனை வைத்து, நரசிம்மன் பிளந்தான் என்றது.
அந்த மகரிஷியின் அருள்சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி,
அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை
நம் உடல் முழுவதும் பிரணவமாக்கி, ஜீவன் பெறச் செய்து,
நம் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தைத்தான்
மடிமீது இரண்யனை அமர்த்தி, 
நம் உடலுக்குள் செயலாக்கும், அந்த தீய சக்திகளை
உட்புகாது பிளந்தான், நர நாராயணன்.

நம் உடலுக்குள் அந்த ஞானியின் சக்தி கொண்டு, அவன் எப்படி இருளை வென்றானோ, அந்த உணர்வின் சக்தியை, நமது உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுதுதான் கலகப்பிரியன்,
நமக்குள் பல எண்ணங்கள், பல ஆசைகள் இருந்தாலும்,
என்னை இவ்வாறு செய்தானே, இரு அவனைப் பார்க்கிறேன் என்று இந்த நிலையையும்,
என்னை இப்படிச் செய்தோரை இரு பார்க்கிறேன் என்றும்,
அதே சமயத்தில் பிள்ளை மேல் உள்ள பாசத்தால், இப்படித் தொல்லை கொடுக்கின்றான் என் பிள்ளை என்று, எண்ணமாகும் இந்த உணர்வுகளையும்,
அந்த மகரிஷிகளின அருள் உணர்வின் சக்தியை நமக்குள் செலுத்தி,
இந்த உணர்வின் தன்மை மடிமீது வைத்து,
இந்தச் சக்தியைப் பார்க்கச் செய்யும் பொழுதுதான்,
நாரதன் கலகப்பிரியன்,
கலகமோ நன்மையில் முடியும்
என்று தெளிவுற எடுத்து உரைத்தனர், மகாஞானிகள்.

இதை நாம் தெளிவுற எடுத்து உரைத்தும், நாம் அதை கதைகளாக கண்டுணர்ந்தோமே தவிர, மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகளை நாம் அறியவில்லை. ஆனால், மெய் உணர்வின் ஆற்றலை, நாம் எவ்வாறு பருக வேண்டும் என்று உணர்த்தினார் வியாசகர்.

அதற்குமுன், அகத்தியர். சந்தர்ப்பவசத்தால் துருவத்தின் ஆற்றலைத்  தனக்குள் பெற்று, வளர்த்து, துருவத்தின் நிலைகளை அடைந்தார். அதைப் போலத்தான், வியாசகரும் விண்ணின் ஆற்றலைப் பெற்றார்.

வியாசகர் கல்வி கற்றவர் அல்ல. கடலில், மீன்களை வேட்டையாடிக் கொன்றும், புசித்தும், அதை விலை பேசித் தின்றவர்தான் வியாசகர். ஆக எதைக் கொன்று, புசித்து அவர் வாழ்ந்தாரோ, அவர் வாழ்ந்த நாளில், அவர் கடலுக்குள் செல்லும் பொழுது, அலைகடலில் புயல் அடித்து, அவர் கடலுக்குள் வீழ்ந்துவிடுகின்றார்.

இன்று டால்பின் மீன் என்று சொல்லுகின்றோமே, மனித உணர்வு கொண்டு, மனிதனைப் போன்று அது வளர்ந்தது. மற்ற உயிரனங்களுக்கு இரக்கம் காட்டி, அது செயல்படும் தன்மை கொண்டது.

நாம் பூமியிலே எவ்வாறு உயர்ந்த நிலைகள் பெற்றோமோ, இதைப் போலத்தான், கடலில் இருந்து உயிர் வாழ்ந்து, அந்த மீன் இனம் அது இறந்த பின், அந்த உணர்வின் உயிரணு அது மேலே எழுந்து, தரை மார்க்கத்தில் வரும்பொழுதுதான், இதை மச்ச அவதாரமாகக் காட்டினார் மெய்ஞானி.

அவர் அலைகடலில் வீழ்ந்து, அதிலிருந்து தத்தளித்துக் கொண்டு இருக்கும்பொழுது, கடலில், அவர் எந்த மீனைக் கொன்று புசித்தாரோ அதே மீன் இவரைக் காத்துக் காப்பாற்றியது. டால்பின் மீன்தான் இவரைக் கரை சேர்த்தது.

அப்பொழுதுதான், எதைக் கொன்றேனோ, எதை இம்சித்தேனோ, அந்த மீனே, தன்னைக் காத்தது என்று, தனக்குள் இருக்கும் தீமைகள் அனைத்தையும் மறந்துவிட்டு, விண்ணை நோக்கி ஏகி, அந்தக் கதிரவனை எண்ணி ஏங்கி,
நான் என்னவென்று சொல்வேன்,
மனித அறிவு கொண்டு, நான் கொன்று புசித்தேன்.
ஆனால், அந்த மீன் என்னைக் காத்தது என்ற,
அந்த மெய்யுணர்வின் தன்மையில்,
தனக்குள் இருக்கக்கூடிய தீமையை மறந்து,
மெய் உணர்வின் தன்மையை,
விண்ணை நோக்கி ஏகினார், அந்த வியாசகர்.

அப்பொழுதுதான், மேரு என்ற மலையை மத்தாக வைத்து, வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து, பாற் கடலிலே கடைந்தான் என்ற  நிலையை, அந்த நாரயணன் செயல்பட்டான் என்று தத்துவத்தைக் காட்டினான்.

மேரு என்று சிறுசிறு அணுக்களாகச் சேர்த்து, மலையாக ஆனது நமது பூமி. அதனுடன், சூரியனில் இருந்து வெளிப்படும் அணுவிற்குள், நஞ்சின் தன்மை இருந்தது. இதனுடைய எதிர்ப்பின் நிலைகளைக் கொண்டு, பூமி சுழன்றது.

விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து, அதனின்று கடைந்த நிலைகள் கொண்டு, உயிர் அணுக்களின் தன்மை ,அதனதன் விழுங்கிய நிலைகள் கொண்டு, அதனதன் உணர்வுகளின் உருவமாக உடல் பெற்றது என்று, அன்று
அகத்தியர் காட்டிய, தெளிவுற உணர்த்திய உணர்வின் நிலையை,
தன்னை மறந்து, தான் காக்கப்பட்ட உணர்வின் தன்மையையும்,
தனக்குள் உயிர் அணுக்களின் நிலையை எண்ணி,
விண்ணை நோக்கி ஏகும் பொழுதுதான்,
அந்தக் காந்தப்புலனின் அறிவுகள்,
இவனுக்குள் தெளிந்த உணர்வின் சத்தாகக் கூடி,
அதனின் துணை கொண்டு,
விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து
நாம் தெளிந்திடும் நிலையாக, இதைக் காட்டினார் வியாசக பகவான்.

அந்த வியாசகர் காட்டிய நிலைதான் விஜயதசமி. சாதாரண மக்களும் அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றலை, பத்தாவது நிலையை, நீ எவ்வாறு அடையவேண்டும் என்ற அந்த நிலையை உணர்த்துவதற்குத்தான், அவர் காட்டியதுதான், கண்ணன் என்ற நிலையும்.

ஆகவே, அந்த மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி விட்டு, இந்த உணர்வின் ஆற்றல்களை நமக்குள் எடுத்து, நஞ்சினைப் பிளந்து,
அந்த உணர்வை நாம் உயிருடன் இணைத்து,
கூர்மை அவதாரமாக,
கூர்மையாக விண்ணை நோக்கி ஏங்கி எடுத்து,
அந்த நாரதர் என்ற மெய்ஞானியின் உணர்வின் தன்மைகளை,
நமக்குள் நுகர்ந்தறிந்து (வராகன்),
வலுக் கொண்ட நிலையாக நஞ்சினைப் பிளந்து,
அந்த மெய்ஞானியின் உணர்வாக
பத்தாவது நிலை அடையும் நிலைகளை, அன்று தெளிவாகக் காட்டினார், வியாசக பகவான்.

(பக்கம் 92-96)

நிறையப் பேர் சொல்லுவார்கள். நாங்கள், சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு சாகாக்கலை தெரியுமா? என்று எம்மிடமே கேட்கின்றார்கள்.

போகர் சொன்னாராம், சாகாக் கலையைப்பற்றி. சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு, அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில், சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன். ஆகையால், அந்த மருந்தெல்லாம் போட்டு, மந்திரங்களைச் சொல்லி, போகர் காட்டிய வழியில், நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன். உங்களுக்கு என்ன தெரியும்?

இவ்வாறு,  நான் சாகமாட்டேன் என்று சொன்னவர், சீக்கிரம் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால், என்னமோ, எதிலோ குறையாகி விட்டது, எனக்கு இப்படி வந்துவிட்டது என்பார்கள். இது சாகாக் கலை.

இப்பொழுது, யார் இதை உணர்த்தினாரோ, அவர் இறந்த பிற்பாடு, இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு, இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வில் எண்ணிவிட்டு, அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு இவர் போவார்.
அங்கு போனவுடன், சாகாக் கலையில் அவரும் இதே கதியா,
அதைச் செய்தேன், இப்படியாகி விட்டதே
என்று பைத்தியம் பிடித்த மாதிரி,
இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே,
இருக்கின்றவனைப் பைத்தியமாக்கி விடும்.

அவர்களிடம், மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் என்ன ஆவார்கள்? இதைக் கண்டுபிடித்தேன் என்று கடைசியில், நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில், மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக, நீயும் வாயேன் என்று இழுத்துக் கொண்டு போகும். இது சாகாக் கலை.

நாம் இப்பொழுது உபதேசிப்பது,
விஜய தசமி என்பது பத்தாவது நிலை.
அடுத்து ஒளியாகி விட்டது.
இனிப் பிறவி இல்லை. இது வேகாக்கலை

ஒரு மனிதன், எவ்வளவு முழுமையாக இருக்கட்டும். தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது? அணுகுண்டு போட்டுக்கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம். 
பாறைக்குள்ளிருந்து கதிரியக்கம், கதிரியக்கத்தினால்தான்
தன் சக்தி, எந்தப் பாறை மண்ணுக்குள் இருக்கின்றதோ,
எண்ணி இழுத்து, தன் இனமான சத்து,
எதனுடன் கலந்து இருக்கின்றதோ,
அந்த உணர்வைத் தனக்குள் எடுத்துப் பாறையாக விளைகின்றது.

அதற்குள், தன் இயக்கத்தின் வலுக்கொண்டு, அதனுடன் எது விளைந்து உருவானதோ, அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது. இதுவே, அந்த நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து, மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது, அந்த அணுவின் தன்மையைப் பிளந்து, கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.

அந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துச் சேமித்து, மீண்டும் வெடிக்கச் செய்யப்படும்பொழுது, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, தன் இனமான நிலைகள் எதுவோ, அதிலெல்லாம் மோதும். அது மோதியபின், புயலைப் போன்று, தான் எதனை உருவாக்கியதோ, அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டு, தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து, சத்தை ஒளியாக எடுத்துக்கொள்ளும். ஆக, இது கதிரியக்கச் சக்தி.

இதைப் போன்றே அணுவைப் பிளந்து,
அணுவின் தன்மை கொண்டுவந்தாலும். இதைப்போலத்தான்
மெய்ஞானிகளின் உணர்வலைகளைக் கொண்டு வரப்படும் பொழுது,
உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்துவிட்டு, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி, எத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் வந்தாலும்,
இந்த உணர்வின் தன்மை பிளந்து,
உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது
இதுவே வேகாக்கலை.

இப்பொழுது, தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால், தீயிலே கருகிவிட்டாலும், அணுகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்து, அதனின் உணர்வு, தசைகளைக் கருகச் செய்தாலும்,  அந்த உடலில் இருக்கும்,
உயிரை ஒன்றும் செய்யமுடியாது. 
ஆக, உயிர் வேகாக் கலை பெற்றது.

அதனின் உணர்வு கொண்டு, நமது உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை, அணுவைப் பிளந்து அணுவின் தன்மை ஒன்று சேர்த்து, அதனை வெடிக்கச் செய்யும் பொழுது, தன் இனத்தைப் பெருக்குவது போல,
அந்த மெய்ஞானி தன் உணர்வின் சக்தியை,
உணர்வின் எண்ணங்களை மாய்க்கச் செய்து,
உணர்வின் தன்மையை தன் ஒளியாக மாற்றி,
இந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு,
வேகாக்கலையாக இன்றும்,
எதனின் நிலையாக நஞ்சுகள் வந்தாலும், அதனைப் பிளந்து
உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி, என்றும் பதினாறு என்ற நிலையில், வேகாநிலை அடைந்து, சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அணுகுண்டை வெடித்தபின், எந்த உலோகத்திற்குள் இருந்தாலும் அதை பிளக்கச் செய்து, தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது. இதைப்போலத்தான், அந்த மெய்ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை
இந்த உணர்வுக்குள் இருப்பதை, இதைப் பிளந்து,
உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து,
அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.

மெய்ஞானிகள் அனைவரும், உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து, வேகாக்கலை என்ற நிலையை அடைந்தவர்கள்.
எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது,
எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும்,
தீயில் இட்டாலும், அவர்களைப் பாதிக்காது.

அவ்வாறு, உணர்வின் தன்மை ஒளிச்சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும், அதனின் துணை கொண்டு, நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற, நினைவு கூறும் அந்த நன்னாள்தான் விஜயதசமி.

பத்தாவது நிலை பெறுவதை நினைவு படுத்தும் நன்னாள், எதனையும் பிளந்து, வேகாக்கலையான நிலைகள் பெறும் நன்னாளே. நினைவு கூறும் நன்னாள்தான் விஜயதசமி. ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான், பத்தாவது நிலை அடையமுடியும்.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர், எமக்கு உபதேசித்து அருளியதை, யாம் உங்களுக்கு உபதேசித்து, இந்த உணர்வைக் கேட்டறிந்த அனைவரும், அடுத்து நாம் கூட்டுத் தியானங்கள் இருந்து, இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும், தகுதி பெற்றவர்கள் ஆகின்றோம்.

அதாவது, இந்த விஜயதசமி உபதேசத்தைக் கேட்டுணர்ந்து, நாம் அனைவரும் சேர்ந்து கூட்டு தியானங்கள் இருந்து, துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் நிலை அடைகின்றோம்.

(பக்கம் 101-105)
நாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது, அது நன்கு வலுப்பெறுகின்றது.

இவ்வாறு, நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான், விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும், கூர்மை அவதாரம், வராக அவதாரம் என்பது. அந்த வலுப்பெற்றச் சக்தியின் துணை கொண்டு, அந்த ஞானிகள் எவ்வாறு  ஒளிச் சரீரம் பெற்றார்களோ, அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து, வராக அவதாரமாக, நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ, அதன் நிலையாக, நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக, ஒளிச்சரீரம் பெற முடியும்.

இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து,
விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை
நாம் பருகினால்தான் விண் செல்ல முடியுமே தவிர,
இல்லையென்றால், இன்று நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி இந்தத் தெய்வம் செய்யும், அந்தத் தெய்வம் செய்யும், இந்த மனிதர் செய்வார், அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால், நாம் உடலுக்குள் இது சாகாக கலையாக, இந்தப் பூமியிலேதான் சுழல முடியும்.

ஆனால், இன்று வள்ளலார் கூறியது போல, வேகாக்கலை என்றும், போகாப்புனல் என்ற நிலையை அடைய வேண்டுமென்று வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார். ஆக,
அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை,  நமக்குள் செலுத்தினால்,
வேகாக்கலை அடைந்து,
னி, பிறவியில்லா போகாப்புனல்
இன்னொரு பிறவியில், நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.

இந்த விஜய தசமி உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும், குரு காட்டிய அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெற்று, இன்று எந்த நிமிடமும், ஓம் ஈஸ்வரா என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி, விண்ணிலே நினைவைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி, 
அதை உயிர்வழி கவர்ந்து,
அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை
நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது,
இதற்கு ஆத்மசுத்தி  என்று பெயர். 
அதே சமயம், அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.

ஆகவே, இதைக் கவனமாக வைத்து, இந்த நூல்களைப் படிப்போர் அனைவருமே, உங்கள் வாழ்க்கையில் எத்தகைய
துயரங்களோ, வேதனையோ, சலிப்போ, சஞ்சலமோ,
சங்கடமோ, வெறுப்போ, பயமோ, ஆத்திரமோ, அவசரமோ,
இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம், நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்,  நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும், உணர்வுகளிலும்  அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை, சக்தி வாய்ந்த அந்த உணர்வுகளை, நாம் அடிக்கடி, சேர்த்து வரவேண்டும்.

அப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால், வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால், அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து, எவ்வாறு மணிமுத்துக்களை விளையச் செய்கின்றதோ, அதைப் போன்று, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து, நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு, நீங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு, மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால், அது வலுப் பெற்று
அந்த ஒளியின் முத்தாக,
உங்கள் உணர்வுகள் விளைந்து,
உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாகப்
பெருவீடு பெருநிலை என்ற நிலையடைந்து,
அதாவது கல்கி அவதாரம்,
பத்தாவது நிலையை அடைவது, திண்ணம்.

ஆகவே, இன்று அழியா ஒளிச்சரீரம் பெறும் மார்க்கமாக, வேகாக்கலை என்ற நிலையும், போகாப்புனல் என்று வள்ளலார் பாடியது போல, நீங்கள் அனைவரும் அடைய முடியும், என்று உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே, அடுத்து தபோவனம் வருபவர்கள், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும், இதற்குமுன், உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ, மனக்கவலையோ, மனவேதனையோ, இதைப் போன்ற நிலைகளிலிருப்போர், இந்தத் தியான மண்டபத்தில் ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படரவேண்டும் என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.

ஆக, இது வலுப் பெற்றதாகி, இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய, உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும், உங்களை விட்டு விலகிவிடும்.
நீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து,
உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும்
வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி,
உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும்,
உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும்.
அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும்
அடையச் செய்வதற்குத்தான்,
இந்த தியான மண்டபத்தை அமைத்தது.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில், அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம். அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான், உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.

ஆகவே,  நாம் கூட்டமைப்பாக இருந்து, கூட்டுத்தியானங்கள் செய்யும்பொழுது, அதன் வழியாகத்தான்  அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றோம்.

எல்லா மகரிஷிகளின் அருள்சக்தி, உங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்,  யாம் தவம் ருக்கின்றோம். எமது அருளாசிகள்.

(பக்கம் 106-111)
நாம் தனித்து ஒருவர் தியானமிருந்து, இந்த சக்திகள் அனைத்தையும் பெறுவோம், என்றால் அது சாதாரண மனிதனுக்கு அத்தகைய வலுவில்லை, மகரிஷிகளின் அருள்சக்தி பெறும் தகுதியில்லை.

ஆக, இன்று நாம் தனி மனிதனாக அமைந்தாலும்,
நாம் கூட்டுத் தியானங்களில் இருந்து,
அதன் துணை கொண்டு,
வலுவான எண்ணத்தின் உணர்வு கொண்டு,
வலுவான பின்தான்,
நாம் ஒவ்வொரு நிமிடத்திலும், நாம் எண்ணும் எண்ணங்கள்,
மகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும், என்று எண்ணினால்,
அந்த நிமிடமே கவரும் தன்மை வருகின்றது.

ஆகவே, ஒரு சமயம் கூட்டுத் தியானத்தில் இருந்து, அடுத்து நாம் பெறுவோம் என்ற  நிலைகள் இல்லாதவாறு, அடுத்தடுத்து வாரத்தில் ஒரு நாள், இந்த கூட்டுத் தியானங்கள் செய்து, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் செருகேற்றும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில், ஒரு தரம் கூட்டு தியானத்தில் இருந்தோம், அடுத்து நாம் எல்லாச் சக்தியும் பெறுவோம் என்று, நாம் இதன் துணை கொண்டு, விலகிச் செல்லாது, நாம் ஒவ்வொரு வாரத்திலும், ஆங்காங்கு இதே தியானவழி அன்பர்கள் பத்து பேரானாலும், இருபது பேரானாலும் கூட்டுத் தியானங்கள் செய்து பழகிக் கொள்ளுங்கள்.

அதே சமயத்தில், மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி அன்று, இங்கே தபோவனம் வருபவர்கள், இங்கே கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளலாம். இங்கே வர இயலாதவர்கள், தன் அருகிலே பத்து, நூறு பேர் இருந்தாலும், (குறைந்த பட்சம் நூறு பேராவது) அங்கே பௌர்ணமியன்று ஒரு கூட்டமைப்பாக இருந்து, இதே போல் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும்.

அவ்வாறு கூட்டுத் தியானமிருந்து, உங்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அந்த உடலை விட்டுப்பிரிந்து சென்ற உயிரான்மாக்களை, உங்கள் வலுக்கொண்ட எண்ணத்தை அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு, விண் செலுத்த முடியும்,

அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தினால்தான் உங்கள், எண்ணம் துரித நிலைகள் கொண்டு, விண்ணை அடைந்து, ஆனால்,
விண் சென்ற, அந்த மகரிஷிகளின் உணர்வலைகள்
பூமியில் படர்ந்திருப்பதை எளிதில் கவர்ந்து,
நமக்குள் அந்த உரமாகச் சேர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு நமது வாழ்க்கையில், இந்த மனித வாழ்க்கையில், ஏற்படும் தீமைகளை அகற்றி, அகற்ற “அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெற வேண்டும்” என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து, நமக்குள் செலுத்துவோம் என்றால் அந்தத் தீமைகள் அகலுகின்றது. அதே சமயம், நம் எண்ணம் விண்ணைக் கூர்மையாக எண்ணிச் செல்கின்றது. அதே சமயம், நமது உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி, உரமாக வலுப் பெறுகின்றது.

இவ்வாறு, நாம் இருக்கும் இந்தச் சிறிது காலத்திலேயே 
இந்த உடலுக்குள், நாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியை
வலுப் பெற்றதாக ஆக்கிக் கொண்டால்,
இந்த உடலை விட்டு இந்த உயிரன்மா சென்றால்
எந்த மகரிஷியின் எண்ணங்களை, நாம் அடிக்கடி எடுத்தோமோ,
அவர் ஒளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்
அந்த ஒளி நட்சத்திர, சப்தரிஷி மண்டலங்களுடன்
நம் உயிரான்மா இணைந்து
இன்னொரு உடல் பெறும் உணர்வலைகள் கரைந்து,
அந்த ஒளியுடன் ஒளியாக, நாம் என்றும் நிலைத்து நின்று,
பத்தாவது நிலையான, கல்கியின் நிலையை அடைகின்றோம்.

ஆகவே, இந்த விஜயதசமி உபதேசத்தைக் கேட்டுணர்ந்த அனைவரும், இதை நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து, உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப் பெறச் செய்து என்றும் அழியாப் பெருவீடு பெருநிலை என்ற ஒளிச்சரீரம் பெறும் நிலையை, நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி, ஒளி பெறும் உணர்வை வளர்க்கும் சக்தியை, நீங்கள் பெற வேண்டும் என்று, இந்த நூல் வடிவில், உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

இதைப் போல, சொல் வாயிலாக யாம் உபதேசித்ததை, எழுத்து வடிவில் வரும்பொழுது, எழுத்து வடிவிலே கொடுத்ததற்கும், சொல் வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதனால், யாமே இதை எழுத முடியாததனால், நம் தியான வழி அன்பர்களை வைத்து இதை எழுதுவதினால், சிறிது மாற்றங்கள், குறை இருந்தாலும், இதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் போது, இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.
ஆகவே குறையை எண்ணாது,
நீங்கள் மீண்டும், மீண்டும், இந்த நூலைப் படிக்கும் பொழுது,
இதில், இடைவேளையில் விடப்பட்ட சிறு குறையும்,
உங்கள் உணர்வுக்குள் தோன்றி,
அந்த உணர்வை, நிறைவு செய்யும் நிலையை அடைகின்றீர்கள்.

இதை நீங்கள் படிக்கும்போது எத்தகைய குறை வந்தாலும், மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால், அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து, இந்தப் புத்தக ரூபத்தில் வரும்பொழுது, சில குறைபாடுகள் இருந்தாலும், அந்த குறையின் மூலப் பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து, உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப்போல நீங்கள் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில், அந்த மகரிஷியின் அருள் சக்தியைச் சேர்த்துப் பாருங்கள். சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த புத்தகத்தில் எழுத்து வடிவிலே சில மாற்றங்கள் இருந்தால், மறைந்திருந்தாலும் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் ஏற்படுவதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, விண்ணின் ஆற்றல் நீங்கள் பெற்று, இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி, இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி, நீங்கள் விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து, என்றும் அழியாத ஒளிச்சரீரமாக, சரீரத்தை மாற்றும் நிலை பெறும் நிலையே, நாம் இப்போது இருக்கும் தியானத்தின் அற வழிகள்.

ஆகவே, ஒவ்வொரு நாளும் இதைத் தெளிவாகத் தெளிந்து, கடைப்பிடித்து, இந்த வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில், நீங்கள் மகரிஷிகளின் அருட்சக்தி பெற்று, அதே உணர்வின் சக்தியாக, ஒளியாக மாறும் சக்தி பெற்று, ஆக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று, உங்கள் வாழ்க்கையில், அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில், உங்கள் நினைவலைகள் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

தபோவனத்தில் வெளியிடப்படும் அனைத்துப் புத்தகங்களையுமே, நீங்கள் படித்துணர்ந்து, மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டுமென்று, யாம் உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம். 

கூட்டு தியானம் இருப்போம்; மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்; ஆத்ம சுத்தி செய்வோம்; அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருட் சக்தியால், இம்மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம். பொன்னான இந்த மனித சரீரத்தில், மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்.

நாம் பார்க்கும் அனைவரும், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும், என்று சதா பிரார்த்திப்போம். நாம் பார்ப்போர் எல்லாம், நலம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.

தபோவனம் வரும் அன்பர்கள், தியான மண்டபத்தில் நீங்கள் நலம் பெற வேண்டுமென்று தியானித்தால், நலம் பெறும் சக்தியைப் பெறுகின்றீர்கள். எமது அருளாசிகள்.
மகரிஷிகளின் அருள்சக்தி பெறுங்கள்.
நலம் பெறுங்கள்
வளம் பெறுங்கள்