ஒரு வேப்ப மரத்தின் வித்தை இங்கிருந்து கடந்து வேறொரு பக்கம்
வைத்தாலும் அந்தக் கசப்பின் தன்மையைத் தான் அது எடுத்துக் கொள்ளும்.
இதைப்போல எந்தச் செடியாக இருந்தாலும் அதை வேருடன் எடுத்து
வந்து வேறொரு இடத்தில் நாம் வைத்தாலும் அதன் நிலையிலேயே முளைத்து விடுகின்றது.
வேர் இல்லாது கொம்புகளை வெட்டி மற்ற பக்கம் ஊன்றினாலும் தன்
சத்தினைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தினை வளர்த்து விழுதுகள் ஓங்கி விளைகின்றது.
இதைப் போன்று தான் நாம் பிறருடைய எண்ணங்களை எடுத்து அதைச்
சுவாசித்து நமக்குள் சேர்த்துக் கொண்ட பின் விழுதுகளாக ஊன்றி உடலில் வளர்ந்து கொள்கிறது.
இப்படி நமக்குள் தீயவினைகளாக விளைந்த அவைகளை நாம் நிறுத்த
வேண்டும் என்பதற்காகத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று காட்டினார்கள் ஞானிகள்.
விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் என்கிற போது நமது வாழ்க்கையில்
தீயதை நுகராது அதை அகற்றிடும் நிலையாக எண்ணத்தைச் செலுத்தி மகரிஷிகளின் கவர்தல் வேண்டும்.
1.நமக்குள் “தீய வினைகள் வராது…”
2.எவரையும் “தவறாக எண்ணாது…”
3.நமக்குத் தீமை செய்தவர்களைத் “தீமைகள் செய்தார்கள் என்று
ஆத்திரப்படாது…”
4.நம் குழந்தைகள் மீது உள்ள பாசத்தால் “சரியாகப் படிக்கவில்லையே
என்ற வேதனைப்படாது…”
5.நம் குடும்பம் “நலிந்து கொண்டிருக்கிறதே… குடும்பத்திற்குள்
தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறானே என்று எண்ணாது…”
6.”சதுர்த்தி என்ற நிலையில் நிறுத்தி..” இத்தகைய எண்ணங்களை
நிறுத்த வேண்டும்.
இதை நிறுத்திவிட்டு யார் யார் மீது பகைமை கொண்டோமோ அந்தப்
பகைமையான உணர்வுகள் அனைத்தையும் நீக்கவேண்டும். இது தான் விநாயகர் சதுர்த்தி.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு)
உபதேசிக்கும் இந்த உணர்வின் எண்ணங்களைக் கேட்டறியும் பொழுதும் இதைப் படிக்கும் பொழுதும்
அந்த மெய் ஞானின் உணர்வுகள் உங்களுக்குள் ஞான வித்துக்களாகப் பதிவாகின்றது.
அதன் துணை கொண்டு ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வுகளை எண்ணத்தால்
பருகி அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
அதைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
1.ஞானிகளின் உணர்வுகள் விளையத் தொடங்கும் பொழுது
2.தீய வினைகள் அனைத்தும் நல் வினைகளாக மாறும்.
மகரிஷிகள் பெற்ற அருள் சக்திகளை நமக்குள் சேர்த்தால் தான்
1.தீய வினைகளாக தீய அணுக்களாக நம் உடலில் விளந்ததை
2.நல் வினைகளாக நல்ல அணுக்களாக மாற்ற முடியும்.
அகஸ்தியன் தீய வினைகள் அனைத்தையும் இந்த மண்ணுலகில் அகற்றி
விண்ணுலகம் சென்ற நாள் தான் விநாயகர் சதுர்த்தி.