ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2017

ஒரு அணுவின் “முகப்பில்” நல்லது இருந்தால் அது நல்லது செய்ய வைக்கும் அதே அணுவின் முகப்பில் கெட்டது இருந்தால் கெட்டது செய்ய வைத்துவிடும் – முகப்பில் படும் கெட்டதைத் தூய்மை செய்ய வேண்டும்

நாம் நல்ல சுத்தமான கையைக் கொண்டு அசுத்தமானப் பொருளை அப்புறப்படுத்துகின்றோம். அப்படி அப்புறப்படுத்தும்போது கையிலே அந்த அசுத்தம் ஒட்டிக்கொள்கின்றது.

கையில் ஒட்டிக்கொண்டதைத் துடைக்க வேண்டுமல்லவா?

சுத்தப்படுத்தாமல் அந்த அசுத்தமான கையுடனே உணவை உட்கொண்டால் என்னவாகும்? நல்ல பொருளும் அசுத்தமாகும் சுவையும் கெடும்.

இதைப்போலத்தான் இந்த வாழ்க்கையில் யாருக்கு எந்த நன்மை செய்தாலும் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்த அசுத்தத்தை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதை மறவாது செய்து பழக வேண்டும்.

பிறர் கஷ்டங்களோ துன்பங்களோ தவறுகளோ இதைப் பார்க்கப்படும்போது அறிகின்றோம். அடுத்த நிமிடம் அது நமக்குள் ஜீவனாக வளரக்கூடாது.

நம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போதுதான் அதன் முகப்புகளிலே இது (தீமை செய்யும் உணர்வுகள்) வட்டமிடத் தொடங்குகின்றது.

இந்த உணர்வைக் கவரும்போது தீமைகளைக் கவர்ந்துதான் செயல்படும் தன்மை வரும்.
1.இது உள் நின்று
2.அந்தத் தீமையான அணுக்கள் வளர்ச்சிக்கு வரும்.

இது உள் நின்று அந்த அணுக்கள் வளர்ச்சியாகிவிட்டால் அந்தத் தீமையின் அணுவாகவே அது மாறிவிடும்.

நல்ல அணுவாக இருந்து தீமையின் அணுவாகிவிட்டால் தனக்குள் இதனின் தன்மை நோயாக உருப்பெற்று விடுகின்றது. இதை நாம் மாற்றுதல் வேண்டும்.

ஒருவர் உங்களைத் திட்டிவிட்டால் அதைப் பதிவாக்கி விட்டால் பகைமையாகி அவர்களை எண்ணும்போதெல்லாம் பகைமை உணர்ச்சிகள் நமக்குள் தூண்டும்.

அவரைப் பற்றித் தவறின் நிலைகளுக்கு இழுத்து வந்துவிடும்.

பின் நாம் திரும்பிப் பார்த்தால் “இப்படி நினைத்தேன், இப்படி வந்துவிட்டது” என்போம்.
1.தவறு செய்தவனின் உணர்வு வரப்படும்போது
2.நாமும் இங்கே தவறு செய்யும் நிலையே வந்துவிடுகின்றது.

நாம் செய்யும் தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது ”ஐந்தாறு பார்த்தாய்… போய்யா…, என்பார்கள்”.

“தவறு செய்தவர்களிடம்…” நீங்கள் சொல்லிப் பாருங்கள். உடனே பயங்கரமாகக் கோபப்படுவார்கள்.

கொஞ்சம்… “பொறுமையாகப் பாருங்கள்” என்று சொன்னால் “எனக்குப் புத்தி சொல்ல வந்துவிட்டான்… போய்யா…” என்றுதான் சொல்வோம்.

இந்த வேகம் சிந்திக்கும் தன்மையைச் செயல்படுத்தவிடாது,

அப்பொழுது அதைச் சொல்கிறார் என்ற நிலையில் தவறு செய்யும் உணர்வை நாம் பார்த்தபின் நாம் என்ன செய்ய வேண்டும்?

“ஈஸ்வரா…” என்று அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து இதைச் சுத்தப்படுத்தும் அந்த அருள் ஞானத்தை நாம் பெற்றோமென்றால் தீமைகளைத் தடுக்கும். நம் சிந்தனையைச் சீராக்கும்.

இல்லையென்றால்
1.நல்ல அணுவின் முகப்பில் வரப்படும்போது,
2.உணர்வின் அறிவாக ஊட்டும் “அதை” மறைத்துவிடும்.
3.நம்முடைய நினைவாற்றலும் மறைந்துவிடும் மறந்துவிடும்
4.தவறின் நிலைகளை நமக்குள் வளர்த்துவிடும்.

தவறான அணுக்கள் வளர்ந்துவிட்டால் பின் நோயாக உருவாகும். சிந்தனை குறையும் உடலில், அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டித் தசைகளைக் குறைக்கும்.

இதை எதற்கு உங்களுக்குச் சொல்கிறோம் என்றால் சந்தர்ப்பம் நம்மை எப்படியும் எந்ததெந்த வகையிலும் இது கலந்தபின் நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றும்.

ஆகவே இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும்.

அன்று அகஸ்தியன் தம் இளமைப் பருவத்தில் தான் கற்றுணர்ந்த உணர்வும் அண்டத்தைக் கண்டுணர்ந்த உணர்வும் அவனிலே விளைந்த நிலைகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது.

அவன் வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளில் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இருளை நீக்கி ஒளியைக் காணும் நிலைகள் பெற்றான்.

இது என்றைக்கும் இன்றைக்கும் சதா கிடைத்துக் கொண்டே உள்ளது.
1.“அகஸ்திய மாமகரிஷியின் உணர்வைக் கவர்தல் வேண்டும்”.
2.அதை நாம் பெறவேண்டும் என்ற இந்த ஆசையைக் கூட்ட வேண்டும்.
3.நம் உடலுக்குள் அதைப் பரப்புதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் அடிக்கடி நாம் திருடவேண்டியது அதுவாகத் தான் இருக்க வேண்டும்.

September 29, 2017

சனிக் கோள் புயலை உருவாக்கி அனைத்தையும் கவர்ந்து சென்று பெரும் மழையாகக் கொட்டுவது போல் பேரருள் உணர்வுகளைப் பேரொளியாகப் படரச் செய்து நமக்கு முன் படர்ந்திருக்கும் நச்சுத் தன்மைகளை புயலென அகற்றிடுவோம்

ஒரு புயல் காற்று எப்படி வீசுகின்றதோ அதைப் போல் தான் சனிக்கோளின் இயக்க நிலைகள்.
1.சனிக் கோளிலிருந்து உமிழ்த்திய ஒவ்வொரு வட்டமும்
2.அது முதுமை அடைந்தவுடன் கழன்று வெளியிலே வரும்.
3.அதனின் அலையின் தொடர் எப்படிச் சக்கரமானதோ எதிர் நிலையாகும் பொழுது சுழற்சியாகின்றது.

ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட பம்பைப் (MOTOR PUMP) போட்டவுடன் (சுழலும்போது) தண்ணீரை எப்படி உறிஞ்சுகின்றதோ இதைப் போல
1.சனிக்கோள் மற்ற உணர்வின் தன்மையைத் தன் இனமான சத்தை அது கவர்ந்து கொள்ளும்போது
2.மற்றதுக்குள் இந்த சுழற்சியின் தன்மை கொண்டு மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்.

இது தான் “புயல்” என்பது.

ஆகவே அது எந்த அட்சரேகைப் பக்கம் இந்த முழுமையான வட்டச் சுடர்கள் வந்ததோ அந்தப் பகுதியில் இந்தப் புயல் செல்லும். இதை விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரத்தின் துணையால் கண்டு கொள்கின்றனர்.

இன்றும் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

அன்று மெய்ஞானி சனிக் கோளின் இந்த நிலைகள் எவ்வாறு இங்கே மாற்றித் தன் உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.இதனைச் சுழல் காற்றாக மாற்றி
2.அது மழை மேகங்களை எப்படிச் செயல்படுத்துகின்றது?
3.பெரும் மழையாக எப்படிக் கொட்டுகிறது? என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

அதைப் போலத்தான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அந்த ஞானியின் உணர்வை நமக்குள் எடுத்துப் புயல் போல் பேரருள் பேரொளியைப் பரப்பப்படும் பொழுது
1.தீமை செய்யும் நிலைகள் அனைத்தும் மறைந்து
2.நமக்கு முன் சுழலும் நச்சுத் தன்மைகள் அகன்று ஆன்மா சுத்தமாகின்றது.

ஆகவே அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை மறைக்கும் “நச்சுத் தன்மையைச் செயலிழக்கச் செய்து” அதற்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்துவதே “கார்த்திகை ஜோதி கார்த்திகை தீபம்”.

மெய்ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தி அந்த உணர்வு மிக்க ஆற்றலை நமக்குள் பெருக்கச் செய்வது தான் தீப நாள் - கார்த்திகை ஜோதி என்பது.

இந்த நாளில் முருகனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “முருகு…” நாம் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து உணர்வு ஒவ்வொன்றையும் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும். நம் எண்ணத்தின் நிலைகள் ஒவ்வொன்றும் ஒளிச் சுடராக மாற்றவேண்டும்.

நாம் எந்த எண்ணங்களை எண்ணினாலும் பிறர் குறையின் தன்மைகளைக் கண்டபின் எப்படி வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் இருள் மறைந்து பொருள் தெரிகின்றதோ இதைப் போல கார்த்திகை ஜோதி அன்று நம்முடைய எண்ணங்கள் நாம் எண்ணும் பொழுதே பிறருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.

மற்றவர்கள் சொன்னாலும் அதைப் பிளந்து அந்த உணர்வுக்குள் இருக்கும் “மெய்ப் பொருளைக்” கண்டுணர வேண்டும்.

அந்தத் தீமைகள் இயக்காதபடி அதைப் பிளந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் கொண்டு உண்மையை அறிந்து கொள்வதும் அதற்குத் தகுந்தவாறு நாம் செயல்படும் தன்மைதான் திரு அண்ணாமலை தீபம் என்பது.

முருகன் வீற்றிருக்கும் இடங்கள் அனைத்திலும் கார்த்திகை நந்நாளைக் கொண்டாடுகின்றோம். கார்த்திகை மாதத்தில் தீபங்களை வீடு முழுவதும் பரப்பி வைக்கின்றோம்.

இங்கே தீபங்களைப் பரப்புவதில் பயனில்லை.

இருளை அகற்றிட அந்த பேரருள் பேரொளியான உணர்வை நமக்குள் பரப்ப வேண்டும் என்று நமக்குள் நினைவு கூறும் நாள் தான் கார்த்திகை ஜோதி என்பது.

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு எண்ணங்களையும் அது தெளிவான நிலைகள் கொண்டு தெளிந்திடும் எண்ணமாகச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையைக் காட்டியது தான் கார்த்திகைத் தீபம்.

“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று எல்லோரும் சேர்ந்து “அடிக்கடி” சொல்லச் சொல்கிறோம் ஏன்?

“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…,” என்று நாம் அடிக்கடி எல்லோரும் சேர்ந்து ஐக்கியமாகச் சொல்கிறோம்.

அப்படிச் சொல்லும் பொழுது சிலருடைய குரல் வித்தியாசப்பட்டாலும் சுருதி பேதங்கள் இருந்தாலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும்
1.அது மற்ற குரலுடன் இணைந்து
2.தனித்துப் பிரித்துக் காட்டாதபடி
3.சிறிது தொனியைக் குறைத்தால் இனிமையாக இருக்கும்.

ஒருவர் பாடுகிறார் என்றால் அதனுடன் இணைந்து மற்ற வாத்தியங்கள் வாசிக்கும் போது பலவிதமான நாதங்கள் வெளிப்படுகின்றது. அவை அனைத்தையும் “ஒருங்கிணைத்து” இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.

அதைப் போல பலவிதமான நிலைகளில் நாம் வந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்லும் பொழுதே
1.எல்லோருடைய எண்ணங்களும்
2.நாம் எழுப்பும் குரல் ஒன்றி இருக்க வேண்டும்.

“ஓ..ம்” என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிரைக் குறிப்பிடுகின்றோம்.

நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர். ஜீவனான பின் உடலாக இணைக்கச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ..ம் ஈஸ்வரா.

“ஈஸ்வரா..,” என்பது இயக்கச் சக்தி.

“குருதேவா…” நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நலம்.

ஒவ்வொரு சமயமும் யாம் உபதேசிக்கும் பொழுது இதைச் சொன்னாலும் கூட அடுத்தாற்போல் “ஓ..ம்” என்ற பிரணவத்தின் தன்மை என்ன என்று திருப்பிக் கேட்பார்கள்.

“ஓ..ம்” என்றால் எங்கேயோ எண்ணி பிரணவம் என்று எதையோ எண்ணிக் கொண்டுள்ளோம். அப்படிப் பழக்கப்பட்டதால் இப்பொழுது யாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் கூட அதை மனதில் பதிய வைக்க முடியவில்லை.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.நாம் எதைப் பதிவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் இணைக்க வேண்டும்…? என்பதை அறிந்து
3.அதற்குத்தக்க சரி செய்து கொள்ள இது உதவும்.

யாம் இங்கே உபதேசிக்கின்றோம் என்றால் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் இந்த “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.

இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் எண்ணும் பொழுது (அல்லது சொல்லும்போது) நம் உயிரின் இயக்கம்
1.மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
2.அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
3.நம்முடைய எண்ண ஏக்க அலைகள்
4.உபதேசத்தின் வாயிலாக வரும் ஞானிகளின் உணர்வுகளை
5.எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

ஏனென்றால் ஒருவர் நம்மைத் திட்டினால் அதை நாம் கூர்மையாக எண்ணினால் அந்தத் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்டவுடனே வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

இந்த வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அதன் வழிகளில் தான் நடக்கின்றோம்.

அடுத்து அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடலில் அது மற்ற உணர்வுடன் படரச் செய்யப்படும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் அதைச் சரியாக இயக்க முடியாத நிலைகள் செயல்படுத்திவிடும்.

இதைப் போன்று “எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு.

1,அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு
2.மெய்ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான்
3.நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக
4.“ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

வெறுமனே சொல்வதால் பலன் இல்லை.

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.

மெய் ஞானத்தைப் பற்றி “நான் பேசுகின்றேன்…” என்று யாரும் எண்ணிவிடாதீர்கள் – மகரிஷிகளின் உணர்வலைகளே ஒலிகளை (உணர்ச்சிகளை) எழுப்பிக் கொண்டுள்ளது

இது  வரையிலும் உபதேசித்த உணர்வின் தன்மை கொண்டு நம் குரு அருள் அது உணர்த்தியது. ஏனென்றால்
1.நான் பேசுகின்றேன் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள்.
2.மகரிஷிகளின் உணர்வலைகளே
3.அந்த உணர்வின் ஒலிகளை அது எழுப்பிக் கொண்டுள்ளது,

நாடாக்களில் “காந்த ஊசியின்…” நிலைகள் கொண்டு எப்படிப் பதிவு செய்து கொள்கின்றோமோ மீண்டும் அதை இயக்கினால் பதிவானது மீண்டும் பேசுகின்றதோ அதைப் போல
1.நமது குரு அருள் எனக்குள் பதிந்த நிலைகளே பேசுகின்றது.
2.அவர் (எனக்குள்) உள் வந்து அல்ல.

சிலர் என்ன நினைக்கின்றார்கள்…? குருநாதர் என் உடலுக்குள் வந்து செயல்படுகின்றார் என்று எண்ணுகிறார்கள்.

அவர் என்ன…! இங்கே நரக லோகத்திற்குள்ளேயா வருவார்…!

அவர் உயர்ந்த நிலை பெற்றதை எனக்குள் பதிவாக்கினார். பதிவைத்தான் மீண்டும் அதை நினைவாக்கி அந்த உணர்வின் தன்மை நீங்கள் பெறவேண்டும் என்று இதைச் செய்கின்றேன்.

அவர் உடலை விட்டு அகன்ற பின் ஒளியின் நிலைகள் பெறவேண்டும் என்றார். ஒளியின் நிலைகள் பெறும் உணர்வின் தன்மை எனக்குள் நாடாக்களில் பதிவு செய்தது போல் என் உடலுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து அதை நினைக்கும் பொழுது அது வினைக்கு நாயகனாக இயங்குகின்றது.
1.நானும் பெறுகின்றேன் உங்களையும் பெறச் செய்கின்றேன்.
2.இது தான் இதில் உள்ள விஷயம்.

இந்த உணர்வுகள் பதிந்த உணர்வுகள் அவர் கண்டுணர்ந்த உணர்வுகள்தான் “இங்கே இசையாக…” மாறுகின்றது.

ஆக நான் உங்களிடம் பேசுகின்றேன் என்றால் அந்த அருள் ஞானத்தை எனக்குள் அடக்கி வைத்துவிட்டால் நுகரும் தன்மையே இல்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள் 1, 2, 3 என்ற படி வரிசையில் தான் அவர் தொடச் சொன்னார்.

அந்த உணர்வின் தன்மை அந்த இசையை அவர் எந்த வழியில் பதித்தாரோ அந்த உணர்வின் தன்மை தான் இயக்கப்படும் பொழுது நானும் பெறுகின்றேன் உங்களைப் பெறும்படியும் செய்கின்றேன்.

“இவ்வளவு தான்….”

அதில் பெறும்படி செய்த
1.யார் ஒருவர் பெற்று
2.அதில் நீங்கள் மகிழ்கின்றீர்களோ
3.அந்தப் பேரானந்தத்தை நீ நுகரு.., என்றார்
4.அந்த ஆனந்த நிலைகள் உனக்குள் வளரும் என்று சொன்னார்.

இதைக் கேட்டுணர்ந்தோர்… படிப்போர்… இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் அவ்வாறு பதிந்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது இது (குருநாதர் கண்டுணர்ந்தது அனைத்தும்) வரும்.

1.நீங்களும் நுகர்கின்றீர்கள்
2.சொல்லைக் கேட்போர் வழிகளில் அவருக்கும் உணவாகக் கிடைக்கின்றது
3.அவர்களும் மகிழும் தன்மை பெறுகின்றார்கள்.

என்னைக் குருநாதர் காடு மேடெல்லாம் பல காலம் அலையச் செய்து அப்பொழுது அங்கே எனக்குள் ஆழப் பதிந்த நிலைகள் “கூர்ந்து கவனித்த உணர்வே… எனக்குள் பதிவானது”.

அவரிடம் எல்லாம் “சரி…” என்று சொல்லிவிட்டு “காசுக்காக வேண்டி என் எண்ணத்தை இணைத்திருந்தேன்…,” என்றால்
1.காசு பெறும் தன்மை தான் வந்திருக்கும் இந்த உடலுக்கு.
2.மெய்ஞானத்தை நான் பெறும் தகுதியும் மற்றவர்களைப் பெறச் செய்யும் நிலையும் வந்திருக்காது.

September 28, 2017

உங்கள் நினைவாற்றல்…” ஞானிகளின் பால் இருந்தால் ஞானிகள் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை எளிதில் காண முடியும்

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
1.புலனறிவுகள் ஐந்திலும்
2.கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி
3.உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.

அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.

ஆனால் வேறு பக்கம் எண்ண அலைகளைப் படரவிட்டு எண்ணிக் கொண்டிருந்தால் யாம் உபதேசிப்பதைக் கவராது உங்கள் ஈர்ப்பினுடைய நிலைகள் தடையாகும்.

உதாரணமாக பேசும் பொழுது மைக்கை (MIC) அந்தப் பக்கம் திருப்பி வைத்துவிட்டால் சப்தம் குறையும். அதைப் போல
1.மற்ற உணர்வின் நிலைகளை நமக்குள் நினைவுபடுத்தும் பொழுது
2.நமது உணர்வுகள் நாம் பேசும் உணர்வலைகள் ஒன்றுக்கொன்று மாறுபடப் போகும் பொழுது
3.”அரத்தங்கள்…” உங்களுக்குள் பதிவாகாது
4.இதைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இதற்குப் பின் “ஞாபக சக்தியும்” வராது.

அதனால் அர்த்தமற்ற உணர்வின் நிலைகளாகிப் போய்விடும்.  நீங்கள் தியானமிருக்கும் பொழுது இதை எண்ணினாலும் அந்தச் சக்திகள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.

ஏனென்றால் காற்றிலிருப்பதைச் சமப்படுத்திய நிலைகள் கொண்டு, உங்களுக்குள் பதியச் செய்திருந்தால்தான் நீங்கள் இதை “இயக்க…” முடியும்.

யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.

அருள் ஞானிகள் தமக்குள் வளர்த்த அந்தச் சக்தி வாய்ந்த ஆற்றல்களை அந்த ஞான வித்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞான வித்து உங்களுக்குள் வளர்ந்தால் அந்த ஞானிகள் எதைச் செய்தார்களோ அதை நீங்களும் செய்வீர்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒவ்வொருவரும் தமக்குள் பெருக்கச் செய்ய வேண்டும். அதை உடலுக்குள் அணுக்களாக விளையச் செய்ய வேண்டும்.


விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உயிருடன் ஒன்றிய நிலையாக என்றுமே ஒளியின் சரீரம் பெறலாம்.

September 27, 2017

நம் உயிருக்குள் ஏற்படும் துடிப்பின் நிலை என்ன? “உயிரின் துடிப்பினைக் கூட்டி” ஆற்றல் மிக்க சக்திகளை நாம் எப்படிப் பெறுவது?

நமது பூமி சுழலும் பொழுது பிரபஞ்சத்திற்குள் காந்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அந்தக் காந்த அலைகள் மோதும் பொழுது தான் நம் பூமிக்குள் காந்தங்கள் உற்பத்தியாகின்றது.

அப்படி பிரபஞ்சத்திற்குள் உள்ள காந்தங்களின் அதீத மோதலினால் ஏற்படக்கூடிய வெப்பமும் அதில் ஏற்படக்கூடிய காந்தங்கள்தான் பூமிக்குள் மற்ற அணுக்களை இயக்கச் செய்கின்றது.

இதைப் போலத்தான் பூமி ஓடும் பாதையிலே அதன் இயக்கங்கள் அது ஓடிக்கொண்டே இருப்பதால்… “உராயும் சக்தி” கிடைக்கின்றது.

நாம் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றடிக்கின்றோம். பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது அதிலுள்ள பிஸ்டன் இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல
1.நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது
2.அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”

அந்த ஈர்ப்புச் சக்திக்குத் தக்கவாறு நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்தக் குணங்கள் ஒரு காந்த அணுவுக்குள் ஒரு வேப்ப மரத்தின் கசப்பின் தன்மை பட்டிருந்தால் அந்தக் கசப்பிற்குத் தகுந்த மாதிரி நம் உணர்ச்சிகள் தூண்டுகின்றது.

அதைப் போல மிளகாயினுடைய காரச் சக்தியினுடைய தன்மையை ஒரு வெப்ப காந்தம் இழுத்திருந்து அந்தக் குணத்தின் நிலைகள் கொண்டு நாம் சுவாசித்தோமேயானால் அது உயிரில் பட்டவுடன் நம் வாயிலே மிளகாயைப் போட்டால் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றதோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நம் உடலிலே தூண்டச் செய்யும்.

ஏனென்றால், நாம் சுவாசிக்கும் உணர்வினுடைய நிலைகள் நாம் எந்தெந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் இந்த உணர்வின் நிலைகளை நாம் சுவாசிக்க முடிகின்றது.

1.அவ்வாறு சுவாசித்த நிலைகள் நம் உயிருடன் சுழற்சியாகி
2.அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புகளுக்குள் மோதி
3.அதனுடைய நுண்ணிய அணுக்கள்
4.சுவாசித்த உணர்வினுடைய நிலைகளை உணரச் செய்கின்றது.

அந்த உணர்வின் அலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்து தன் இனமான நிலைகளை அது இயக்கச் செய்கின்றது.

ஆகவே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.

அப்பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்யும் பொழுது
1.ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும்,
2.அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது
3.நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.
4.இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.

புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது
1.எந்தப் பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ
2.அந்த உணர்வின் நிலைகள் கூடி
3.அதற்குள் ஊடுருவிச் செல்லும் நிலைகள் இருக்கின்றது.

நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. இவ்வாறு நம் உயிரின் துணை கொண்டு ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற முடியும். நமக்குள் விளைய வைக்க முடியும். 

துருவ நட்சத்திரம் நஞ்சை ஒளியாக மாற்றுவது போல் நாமும் ஒளியாக மாற்ற முடியும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

உங்கள் மனக் குழப்பத்தை அகற்ற “ஆத்ம சுத்தி” என்ற ஆற்றல் மிக்க ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் – அது பனிரெண்டு வருடம் காடு மேடெல்லாம் அலைந்து உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமாகும்

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து நோய் போய்விடும் என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும், நிவர்த்தி செய்ய முடிந்தது.

அப்படி நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன்.

அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினை பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு…, உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்”.

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய்ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.
ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன் கீழே இருக்கக் கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் “அலைபாயும் பொழுது… தெளிவாகத் தெரிவதில்லை”.

நன்மையான நிலைகளை நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் அந்த நேரத்தில் மெய்ஞானியின் உணர்வின் அலைகளை நமக்குள் செலுத்தப்படும் பொழுது
1.பல உணர்வின் அலைகள்
2.அலைந்து கொண்டிருக்கும் நிலையை
3.அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.

அந்த அருள் ஒளியின் தன்மை நமக்குள் உயிரான தன்மை கொண்டு “ஒளியாக வீசிக் கொண்டே இருக்கும்… வளர்ச்சியாகும்”.

அவ்வாறு அந்த உணர்ச்சியின் நிலைகள் பெற்று வாழ்க்கையிலே மகிழ்ச்சி என்ற நிலையில் இந்த உடலை விட்டுச் சென்றபின் நம் உயிராத்மா ஒளியாக மாறி மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்ல முடியும்.

“அந்த மகரிஷிகள் வேறல்ல… நாம் வேறல்ல…” என்ற நிலையை ஒவ்வொருவரும் எய்த முடியும்.

September 26, 2017

கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருக்ஷேத்திரப் போர் துவங்குகிறது – விளக்கம் – உயிரில் நாம் எதை உராயச் செய்ய வேண்டும்?

ஒரு நாடாவில் பதிவு செய்து கொண்டிருக்கும்போது, இடைமறித்து மற்ற தேவையில்லாத சப்தங்கள் பதிவாகிவிட்டால் அந்த இடம் வந்தவுடன் “கரா…புரா…!” என்று வரும் எதிர்மறையாகும்.

இதே போலத்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் எண்ணும் எண்ணங்களும் உணர்ச்சிகளும் சுவாசத்தின் மூலமாக நம் உடலுக்குள் அலை அலையாகப் பதிவாகிக் கொண்டேயுள்ளது.

அந்தப் பதிவின் அலைகள் கொண்டு நாம் நுகரும் ஆற்றல்களுடன் மாறுபட்ட எண்ணங்களும் உணர்வுகளும் நமக்குள் இடைமறித்து வந்துவிட்டால் உயிரில் மோதப்படும்போது அந்த உணர்ச்சியை மாற்றும். அது சீராக வராது.

1.ஏனென்றால் “காந்த ஊசிபோன்று
2.உராயும் உணர்வுகளைத்தான் உயிர் ஒலிகளாக எழுப்புகின்றது.
3.பதிவாக்கிய பின்பு அதனுடன் சேர்ந்த காந்தப்புலன் அதைக் கவருகின்றது.

உயிருடன் உராயச் செய்யும் நிலையைத்தான்… “கண்ணன் சங்கநாதம் ஊதியபின்… குருக்ஷேத்திரத்தில் போர் துவங்குகின்றது…” என்பார்கள். நமது உயிரிலே பட்டவுடன் ஒலிகளை எழுப்புகின்றது. இந்த உடலிலே இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

அப்பொழுது ஏற்கனவே நமக்குள் பதிவான நல்ல உணர்வுக்குள் மாறுபட்ட நிலைகள் (உதாரணமாக) பகைமை உணர்வுகள் நமக்குள் வந்தபின் நமக்குள் அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது?

குருக்ஷேத்திரப்போர் ஆகின்றது.

இந்த உடலைக் காக்க
1.நல்லவைகளுக்கு குருவாக இருப்பதும் உயிரே
2.கெட்டவைகளுக்கு குருவாக இருப்பதும் உயிரே
3.உருவாக்கிய நல்லவை கெட்டவை அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதுவே குருவாக வந்து அதன் செயலாக நம்மைச் செயலாக்கும்.

அதனால் தான் கீதா உபதேசத்தில் இந்த கண்ணின் செயலாக்கங்களை நமக்குள் உணர்த்தியுள்ளார்கள். கண்கள் நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.

பாதுகாக்கும் உணர்வு வந்தாலும் தீமையின் உணர்வை எடுத்தால் அந்த உணர்வு கொண்டு தீமையைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ச்சியாகும். அதே தீமையை நினைவாக்கும்.

தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அருள் ஞானியின் உணர்வை நுகர வேண்டும். நுகர்ந்தால் பாதுகாக்கும் நிலைகள் வந்து தீமைகளை அகற்றும்.

அதை நாம் குருவாகச் செயலாக்க வேண்டும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ஏனென்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்தவர்கள். மனிதனானபின் தீமையை அகற்றிய துருவ மகரிஷியின் உணர்வை நீங்கள் பெற அந்தத் தகுதியைப் பெறும் நிலைகளுக்குதான் இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

1.எதிர்நிலைகள் உங்களை எப்படித் திருப்புகின்றது…?
2.இதிலிருந்து நீங்கள் எப்படி விடுபட வேண்டும்…? என்ற
3.மெய்யுணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

நீங்கள் பள்ளியில் பாடங்களைப் படித்தாலும், பயிற்சியின் நிலைகளுக்கு (PRACTICAL) என்று தனியாகக் கொடுப்பார்கள்.

இயந்திரத்தைச் செய்யக் கற்றுக் கொள்வார்கள். இயந்திரத்தை இயக்கும் நிலைகளுக்கும் கொண்டு வருவார்கள். எல்லாம் கற்றுக் கொள்வோம்.
1.இயந்திரம் தவறாகி விட்டால் அது என்னென்ன வழிகளில் தவறாகும்?
2.இதனுடைய தவறுகளை எப்படிச் சரி பண்ணுவது? என்று விஞ்ஞானிகள் கொடுப்பார்கள்.

பாட நூல்கள் கொண்டு ஒரு இயந்திரத்தைச் செய்வதற்காக நீங்கள் செயல்பட்டாலும் அதனுடைய செயலாக்கங்கள் வரப்படும்போது இதிலே தவறுகள் இழைக்கப்படும்போது
1.தவறுகளை எப்படி நீக்குவது? என்ற நிலையை அறியாவிட்டால்
2.உருவாக்கினாலும் பயன் இல்லை.

அதைப் போன்று உங்களுக்குள் சீரும் சிறப்பும் பெறக்கூடிய தகுதி இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இடைமறித்துத் தவறாகி விட்டால் அந்தத் தவறு எப்படி இயக்குகிறது…? என்று அந்த உணர்வுகள் தெரியவரும்.

சாமி சொன்னார். அவர் பெறுவார். “நாம் எப்படிப் பெறமுடியும்…!” என்று எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குள் ஒவ்வொன்றாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.        

உயர்ந்த ஞானத்தைப் பெற்றாலும் அவ்வப்பொழுது இடைமறித்துத் தீமை செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த அருள்ஞானத்தை நீங்கள் பெருக்குதல் வேண்டும்.

அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்றால் நம் கண்களின் நினைவைக் கூர்மையாக விண்ணை நோக்கிச் செலுத்தி துருவ மகரிஷியின் உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும்.

அவனால் உருவான உணர்வின் தன்மை இன்றும் ஒளிச்சுடராக வருகின்றது.
1.துருவ நட்சத்திரம் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
2.அதை நுகரப்படும்போது இளம் நீல நிறமான ஒளி வீசும்.
3.விஷத்தின் தன்மை ஒடுங்கிய பின் அதன் உணர்வின் ஒளியாகத்தான் காட்டும்.
4.கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்றுதான் தெரியும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய விஷத்தின் தன்மையையும் ஒடுக்கி நாம் ஒளியாக மாற்றும் திறன் கொண்டவர்கள் என்று அறிதல் வேண்டும்.

துருவ மகரிஷியின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வினை நமக்குள் செலுத்துதல் வேண்டும். அதை அதிகமாக எடுத்தால் அதன் அவதாரமாக உயிர் ஒளியாக மாறும். இதில் ஒன்றும் சிரமப்பட வேண்டியதில்லை. 

எமது அருளாசிகள்.