ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label விநாயகர் தத்துவம். Show all posts
Showing posts with label விநாயகர் தத்துவம். Show all posts

October 16, 2025

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி


நாம் கெட வேண்டும் என்று யார் எண்ணினார்களோ அவர்களை நாம் எதிரியாகக் கருதும் பொழுது எதிரியைத்தான்…” உடலுக்குள் வளர்க்கின்றோம்.
 
இதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் காட்டிய விநாயகர் தத்துவத்தின்படி
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நல்ல குணங்களுக்கு ஊக்கச் சக்தியைக் கொடுப்பதும்
2அவர்கள் தீமையான உணர்வுகளைச் சொல்லும்போது மகரிஷிகள் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும் என்றும் சொல்வது.
 
காரணம் கண்களிலே பார்த்தது நமது ஆன்மாவாகின்றது. சுவாசித்த பின் உயிரிலே படுகின்றது அந்த உணர்வு இயக்கப்படும் பொழுது ஜீவணுவாக மாறுகின்றது.
 
முதல் அணு உருவாகி விட்டாலும் அடுத்த நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
 
ஏனென்றால்
1.கண் இப்படி முன்னாடி வருவதை எடுத்து அதன் வழி நேரடியாகப் பேசுகின்றது.
2.ஆனால் கண்களால் மகரிஷிகள் உணர்வை எண்ணி அதை எடுத்து இடைமறித்து உயிரிலே (புருவ மத்தியிலே) இணைக்க வேண்டும்.
 
ஏனென்றால் இதையெல்லாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். காரணம் என்ன என்றால் மறந்து விட்டுத் தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று தெரியவில்லை என்று திரும்பக் கேட்பாரும் உண்டு.
 
அதனால்தான் ஞாபகப்படுத்துவது…!
 
வாழ்க்கையில் வரும் தீமைகளை இடைமறித்து அருள் ஞானிகள் உணர்வை உள்ளே செலுத்தப்படும் பொழுது தீமைகளை அகற்ற முடிகின்றது.
 
தங்க நகைகளைச் செய்கின்றோம் செம்பு வெள்ளியை அதனுடன் இணைத்துத்தான் செய்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோம்.
 
1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிய “அந்த வலுப்பெற்ற உணர்வுகள் மகரிஷிகளுடையது…”
2.அதை நாம் நுகர்வதற்குத் தான் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானம்…”
 
அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இது தியானம். மகரிஷிகள் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்தச் செலுத்த உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது உரம் ஆகின்றது.
 
1.பிறர் செய்த தீமைகள் நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்பு அந்த மகரிஷியின் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.தீமையான அணுவாக அது வளர்வதற்கு முன் அந்த அணுவையே…” நமக்குச் சாதகமான நிலைகளாக மாற்றிவிடும்.
3.தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்யும் பொழுது ஒவ்வொன்றிலும் நமக்கு வலுப்பெறுகின்றது…”
 
இரண்டு தரம் கெட்டதைக் கேட்டோம் அல்லது சொன்னோம் என்றால் நல்லது செய்வதை அது தடைப்படுத்துகின்றது. ஆனால் அதே சமயத்தில் அது போல் ஆன பின் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை இணைத்து விட்டால்
1.அந்த அணு நம் வழிக்கே இணைந்து வருகின்றது.
2.அப்பொழுது நம்மைக் காக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது.
 
அதற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் நமக்குள் எதை வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இயக்க வேண்டும்…? என்று கேள்விக்குறி போட்டுக் காண்பிக்கின்றார்கள்.
 
உதாரணமாக வேதனைப்படும் நிலையாகி விட்டால் அது வேதனையை அதிபதியாக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது. அந்த அணுவின் செயலாக்கங்களையே கொண்டு வருகின்றது.
 
அதே சமயம் இதை அடக்கிய மகரிஷிகள் உணர்வை அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அந்த அணுவிற்குள் ஞானியின் உணர்வுகள் அதிபதியாகத் தொடங்கி விடுகின்றது.
2.பின் ஒளியான அணுக்களாகவே உருப்பெறத் தொடங்கி விடுகின்றது.
 
ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் நாம் அந்த மெய்ஞானியின் உணர்வை வினையாக்க வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
1.நாம் யாரையுமே எதிரியாக ஆக்குவதில்லை.
2.நமக்குள் எதிர்மறையான அணுக்களும் உருவாகாது
3.ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் உருவாகின்றது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

September 2, 2025

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை


இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.
 
காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக இருடா நான் பார்க்கின்றேன் என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.
 
அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.
 
அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.
 
1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.
 
உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.
 
இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.
 
இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.
 
அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
 
புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.
 
இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றதுஅதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.
 
இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.
 
ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.
 
வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.
 
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
 
விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?
 
ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.
 
இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.
 
எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள் அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
 
ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
 
அதுவே மனிதனின் கடைசி எல்லை…!

March 14, 2025

எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்குத் தான் விநாயகர் தத்துவம்

எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்குத் தான் விநாயகர் தத்துவம்


நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும். எவ்வாறு…?
 
அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மகரிஷிகளின் உணர்வுகள் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவை விண்ணை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி அந்த நினைவலைகளை உள்ளே பரப்ப வேண்டும்.
3.இப்படிப் பரப்புவோம் என்றால் ந்த உணர்வு வேகமாக உடலில் பரவிவிடும்.
 
உதாரணமாக நோயாளியைப் பார்த்த உணர்வுகள் நமக்குள் இருந்தால் ந்த மகரிஷிகள் உணர்வுகள் வலு ஆனபின் அந்த நோயாளியின் உணர்வைத் தள்ளிவிடும்.
 
சந்தோஷமாக இருக்கும் பொழுது மம் ஜாஸ்தியாக இருக்கும் ஒருவர் வேதனைப்படும் நிலைகளைச் சொல்லி அதை நாம் கேட்டால் சந்தோஷமான மனதில் பட்டவுடன் அப்போது வேதனை தான் தோன்றுகின்றது.
 
வேதனையாக இருக்கப்படும் போது சந்தோஷமாக யாராவது சொன்னால் அதைத் தள்ளி விடுகின்றது. ஏனென்றால் விஷத்திற்கு வலு அதிகம். ஆனால்
1.இதையெல்லாம் வென்றவன் மகரிஷி
2.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லிவிட்டு
4.எந்த நோயாளியைப் பார்த்தீர்களோ மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்
5.உன் உடல் நோய்கள் சீக்கிரம் நீங்கும் நீ இதன் வழிப்படி மகரிஷிகளை எண்ணி பார்.
6.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் பட வேண்டும்
7.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று சொல்லி அதனைங்கிப் பெறு
8.உன் உடல் நலம் பெறும் நீ நலமாவாய் என்று இந்த வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
 
நீங்கள் சொன்னதை அவர்கள் பின்பற்றத் தொடங்கினால் அவருடைய எண்ணம் அங்கே போகின்றது தீமைகளை நீக்க அந்த அருள் உணர்வுகள் அவருக்கு உதவுகிறது.
 
அதே சமயத்தில்
1.நமக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றதனால் தீமையை ஈர்க்கும் சக்தி குறைந்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகக் கூட்டிக் கொள்கின்றோம்.
3.அந்தத் தீமையை அப்பொழுது அடக்கி விடுகின்றோம்.
 
இப்படிச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவத்தை வைத்தார்கள்.
 
வேதனைப்படுபவர் உணர்வை நுர்ந்து விட்டால் என்ன நடக்கின்றது…? உதாரணமாக எலி என்ன செய்கின்றது…? தரையிலே வங்கு போடுகின்றது நல்ல மனம் கொண்டு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து விட்டால் உங்கள் நல்ல மனதை அது வங்கு போட்டு விடுகின்றது.
 
ஆனால் அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இந்த வேதனைப்படும் அந்த மனிதனின் உணர்வை அடக்கி விடுகின்றது.
 
வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டபின் நல்ல குணத்தை அது அடக்குகின்றது. அதற்குத் தான் எலியைப் போட்டது.
 
ஆகவே வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டபின் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை அடக்குதல் வேண்டும்.
 
அதற்குத்தான் வேம்பையும் அரசையும் போட்டு
1.மனித வாழ்க்கையில் நீ நல்லவன் “நல்லவனாக இருக்க வேண்டும்
2.நீ அறிந்து நல்லதைச் செய்து… உனக்குள் அந்த நல்லது நிலைத்திருக்க வேண்டும்
3.பிறருடைய தீமை உன்னை ஆட்கொள்ளக்கூடாது அவன் வழியில் நீ சென்று விடக்கூடாது.
4.அருள் ஒளி நீ பெற வேண்டும் அறியாது வரும் இருளை நீக்கும் சக்தியை நீ அவனுக்குள் ஊட்ட வேண்டும் என்பதற்குத்தான்
5.விநாயகர் தத்துவத்தில் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
காலை துருவ தியானத்தில் மொத்தமாக நாம் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் தொழில் செய்யும் இடங்களில் அந்த நண்பர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று எல்லோரையும் நினைத்து இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.
 
1.இதை எண்ணினால் நாமும் நலமடைகின்றோம்… அவர்களும் நலமடைகின்றார்கள்.
2.எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவம்.

August 27, 2024

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

 

பரிணாம வளர்ச்சியில் தாவர இனங்கள் எப்படி உருமாறி குணங்கள் மாறியதோ இதைப்போல தான் ஒரு உயிரணு தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு மற்ற உடலிலே விளைந்த அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலைகள் வந்தது.

அப்படி வந்தாலும்…
1.இந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து உயிர் அதனின் உணர்வாக விளையச் செய்து
2.முதலிலே பெற்ற உணர்வுக்கும் இரண்டாவது மற்றொன்று இதற்குள் சேர்த்தவுடனே நோயாக வந்து
3.சுழிக் காற்று அடிப்பது போல இதனுடைய மணங்கள் பெருகச் செய்து
4.கவர்ந்த உணர்வுகள் ஒன்றாகி… உயிருடன் ஒன்றும் பொழுது
5.முதலிலே உருப் பெற்ற உடலைப் பிரித்துவிட்டு
6.இணைந்து கொண்ட உணர்வுகள் தனியாக விளைந்து அதனின் நிலைகளில் வந்த உணர்வு கொண்டு தான்
7.இந்த உயிர் மற்ற மற்ற உடல்களை உருவாக்கியது என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அகஸ்தியன் இதைத் தெளிவாக எடுத்துரைத்தான். அதாவது இந்தப் பிள்ளை யார்…? என்று அவன் கேள்விக்குறி போட்டு நம்மைத் தெளிவாகச் சிந்திக்கும்படி செய்துள்ளான்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நாம் எவ்வாறு மனித உடல் பெற்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வலிமை பெற்றது தான் மிருகங்கள். மிருகங்களாக இருக்கும் போது தன்னைக் காத்திடும் உணர்வுகள் பெற்றுப் பெற்று… அந்த உணர்வால் ஈர்க்கப்பட்டு நமது உயிர் மனிதனாக உருவாக்கியுள்ளது.

தன்னைக் காத்திடும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
1.தன்னைக் காத்திடும் அங்கங்களும் தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ணங்களும் அது விளையச் செய்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உயிர் ஒளியாக எப்படி ஆனதோ
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது தான் இந்த மனித உடல்.

நமது உயிரே அதை உருவாக்குகின்றது.

1.ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட எண்ணங்களை இந்த உயிரே அது இணைக்கின்றது
2.எடுத்துக் கொண்ட எண்ணத்தை நமது கண்களே வழிகாட்டி
3.அதனின்றி தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் அதைக் கவர்ந்து அதனின் வலுவை இதற்கு உணர்த்தி
4.அதனின் நிலைகளிலேயே உணர்வுகள் மாறி உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
5.உடலின் தன்மை மாற்றமானது என்ற நிலையை தெளிவாக எடுத்துரைத்தான் அந்த அகஸ்தியன்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை மகரிஷிகள் சாதாரண நிலைகளில் விநாயகர் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

நாம் எதை எதை எல்லாம் சேர்த்துக் கொண்டோமோ அந்த வினைக்கு நாயகனாக… ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வு “எது அதிகமோ” அதற்கு நாயகனாக அந்த உணர்வுகள் நம்மை இயக்கி… அந்த உடலை உருவாக்கி… அந்த எண்ணத்தால் தன்னை எவ்வாறு காத்துக் கொள்கின்றது…? என்பதைத்தான் அன்று அகஸ்தியன் “விநாயகர் தத்துவத்தில்” எடுத்துக் காட்டினார்.

July 20, 2024

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”

 

விநாயகரை “ஞான முதல்வனே” என்று சொல்கிறோம். ஞான முதல்வனே என்பதன் பொருள்
1.ஞானத்திற்கும் ஞானோதயத்திற்கும்
2.நம்முள்ளே வரும் எண்ணத்திற்கும் முதல்வன் விநாயகனே.

விநாயகனின் குணம் எல்லாம் அச்சக்தியின் முதல் குணமாக மனிதன் எண்ணத்தில் உதிப்பதற்கே பகர்ந்தப்பா…! விநாயகனின் குணங்களில் மிக நிதானத்தன்மையும்… எண்ணி ஆற்றல் படும் சித்தமும் உள்ள குணம் தான் விநாயகனின் குணம்.

விநாயகரை முதல் தெய்வமாக வணங்குவதும் உன் சித்தத்தை நிதானப்படுத்திப் பணிவுடன் பணியவே விநாயகனை முதலில் பணிவது.

ஈஸ்வர சக்தியின் முதல் அருளே விநாயகனை நினைத்து வணங்கவே தான் விநாயகனின் தன்மையில் உன் மனதை அமைதிப்படுத்திடவே அருள் செய்கின்றார் சிவ சக்தியின் முதல் சக்தி.

முதல் சக்திதானப்பா விநாயகர்…! ஆண்டவனைப் பணிவதற்கு முதலில் அடக்கமும் அமைதியும் வேண்டுமப்பா. அவ்வருளைப் பெற்றிடவே “முதலில் விநாயகனை வணங்குவதெல்லாம்…”

இப்பொருள் தெரியாதவர்களுக்குத் தான் “எல்லாமே கல்… இக்கல்லைக் கும்பிட்டால் என்ன…? அக்கல்லைக் கும்பிட்டால் என்ன…?” என்ற எண்ணம் வருகிறது.

முதலில் விநாயகரை வணங்குவதற்குப் பொருள் புரிந்த்தா…?

விநாயகரை நினக்கும் போது உன் நினைவில் பெரும் அமைதி குடி கொள்ளுமப்பா. சக்தியின் சொரூபத்தில். “துதிப்போர்க்கு வல்வினை போம்,,, துன்பம் போம்,,,” என்னும் பொருள் விளங்கிடுமப்பா.

பகர்ந்திட்டேன் சக்தியின் முதல் சொரூபத்தை…!

1.சூட்சுமத்தில் உள்ள நான்… “வந்திடுவேன் உன்னுடனே…”
2.இனி ஒரு போதும் மாற்றிடாதே உன் வழியை.
உன் வழியில் முன் இரவில் வந்த எண்ணமெல்லாம் ஊன்றிவிடுமப்பா.

உன் நினைவில் ஜெயித்து விடுவாய்…!
1.வந்திடுவேன் உன்னுடனே… வந்திடுவேன் உன்னுடனே
2.எந்நிலையிலும் வந்திடுவேன் உன்னுடனே.

உன் இசையில் இசைத்திடப்பா… வந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும் காட்சி அருளுகின்றேன்.

April 2, 2024

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

 

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது).

அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)...!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” - பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி… சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

March 31, 2024

“நாவின் சுவைக்கு...” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்

 

“நாவின் சுவைக்கு...” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா...? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன...?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்...! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா...?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது... என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்...”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன...?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே...!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே...!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்...
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்...” என்ற பாச உணர்வினால் தானப்பா...!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்...” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா...?

அறிந்து கொண்டிருக்கும்... அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்... அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்... அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்... “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்...!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே...!

“உணவின் மாறுபாடும்...” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு...” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு...” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்...” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

March 29, 2024

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும்… அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும்… மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்... பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி... அறிவொழிந்து...! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்...! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை...!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி... ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு... பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்... பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்... அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்...!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்...!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த... தான் பெற்ற தன்மை கொண்டு... ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது...” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை...” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே...” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…” என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்...!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி...”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

January 26, 2024

மகரிஷிகள் காட்டிய உண்மைகளை உணர்ந்து கொண்டால் போதும்…!

பல கோடிச் சரீரங்களில் உயிர் கடவுளாக நின்று எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதாவது

1.பரமாத்மாவாக மாறுவதைத் ஆன்மாவாக மாற்றித் தனக்குள் ஜீவான்மாவாக மாற்றுகிறது
2.அதுவே உள் நின்று கடவுளாக ஒவ்வொரு உணர்வுகளையும் உறுப்புகளையும் நமக்குள் உருவாக்குகிறது

இவ்வாறு உருவுக்கு உறுதுணையாக நம் உயிரின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தான் அன்று வியாசகன்

ஆதியில் அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பகுத்தறிந்து உணர்வின் செயலால் சாதாரண தன் இன மக்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று இந்த 4000 ஆண்டுகளுக்குள் மிகத் தெளிவான நிலைகள் வியாசகன் கொடுத்தான்.

ஆனால் இதையெல்லாம் சாங்கிய சாஸ்திரமாக மாற்றப்பட்டு… மனிதனின் முழுமையின் உண்மை நிலைகளை அறியாதபடி…
1.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலை தடுமாறி
2.கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் நம்மைக் காப்பாற்றுவான் என்றும்
3.அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தால் அவன் மகிழ்ந்து எனக்கு உதவி செய்வான் என்றும்
4.இத்தகைய எண்ணங்களைத் தான் நமக்குள் உருவாக்கி விட்டார்களே தவிர
5.மனிதன் மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் எடுத்தால் தீமையான உணர்வுகளில் இருந்து மீள முடியும்
6.அந்த மகரிஷிகள் சென்ற இடத்தை நாம் அடைய முடியும் என்று உணர்த்தவில்லை.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள்…
1.அவர்கள் சொன்னது அனைத்தையும் உங்களுக்குத் தினசரி பதிவாக்கி தெளிவாக்கி
2.அதன் உணர்வை நினைவாக்கி உங்களைக் காப்பதும்
3.உங்கள் மூதாதையர்களை விண் செலுத்திக் காப்பதும்
4.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவத்தின் வாயிலாக இந்த உணர்வின் இயக்கங்களை எம்மை அறியச் செய்து எல்லோருக்கும் உணர்வைப் பதிவு செய்யும்படி சொன்னார்.

அந்த அருள் வழிப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றித் தீமையற்ற உணர்வைத் தன்னில் விளைய வைக்க முடியும்.

வான்மீகி படித்தவன் அல்ல வியாசகரும் படித்தவர் அல்ல. அதைப் போன்று தான் கிராமத்தில் வாழக்கூடிய படிப்பறிவில்லாத மக்களாக இருந்தாலும்
1.எம்முடைய உபதேச உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால் போதும்
2.இந்த நினைவு உங்களைக் காத்திடும் எண்ணமாக வரும்.

எத்தகைய தீமையாக இருந்தாலும்… உங்களைக் காத்து மற்றவர்களைக் காத்தாலும்… அந்தத் தீமைகள் உங்களைச் சாடாது “உங்களைக் காக்கும் வலுவான எண்ணங்களை நீங்கள் பெற முடியும்…” என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

“எத்தகைய தீமையை உருவாக்குபவரை” நீங்கள் உற்றுப் பார்த்தாலும் அதன் உணர்வை நுகர நேர்ந்தாலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்த தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து விடாது.

அதே சமயம் அந்த மகரிஷியின் உணர்வால் உங்களைக் காத்திட முடியும். தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அந்தத் திரவகம் அதில் சேர்ந்த செம்பையும் பித்தளையும் ஆவியாக நீக்குகின்றதோ… இதைப் போன்று
1.உபதேசம் கேட்கும் அனைவருக்கும் இந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் எம்மால் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டு
2.எப்போது எந்த நிமிடத்தில் பிறருக்கு உதவி செய்கின்றீர்களோ
3.அவர்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களுக்குப் பரிவான நிலைகள் கொண்டு உதவி செய்தாலும்
4.ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லி விட்டால்
6.திரவகம் போன்று இருக்கும் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தீமையைக் கேட்டறிந்தத் தூய்மைப்படுத்தும்.

அதைத் துடைத்து விட்டு… தீமையில் வாடுபவர் அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் அவர் நோய் நீங்க வேண்டும் அவர் எதிர்காலம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் படைத்திடல் வேண்டும் (இது முக்கியம்).

இந்த உணர்வின் செயலாக வெளிப்படுத்துவதை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
1.எவர் கேட்டுணர்ந்தாலும் அவர் உடலிலும் புகுந்து
2.அந்தத் தீமையை அகற்றிடும் சக்தியாக விளையும்.

விநாயகர் தத்துவத்தில் இத்தகைய நிலையைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.தன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்…?
2.தன் வாழ்க்கையில் வரும் நன்மைகளை எவ்வாறு காக்க வேண்டும்…?
3.பிறருடைய தீமைகளிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…?
4.தீமையில் வாடுவோருக்கு நாம் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்…?
5.தீமையான நிலைகள் தன்னைப் பற்றிடாது எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்…? என்ற இந்த நிலையை
6.சாதாரண பாமர மக்களும் அறிந்துணர்ந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டப்பட்டது ஞானிகளால்…!

May 21, 2023

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை

உயிர்:-
நாம் எண்ணியதை நமக்குள் பதிவு செய்வதும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அதை இயக்குவதும் உயிருடைய வேலை.

கண்;-
நாம் எண்ணியது எதுவோ நமது கண் இந்த உயிரின் இயக்கத்தின் ஓட்டத்தை அது வழிகாட்டுகின்றது நல்லவை கெட்டவை என்று கவர்ந்து உயிருடன் இணைத்து உடலாக மாற்றுகின்றது.

உடல்:-
எது இயக்கியதோ அதைத் தன்னுடன் வரவேற்று அணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை. ஆகவே சிவன் அனைத்தையும் சிவமாக்கித் தனக்குள் சக்தியாக இயக்கச் செய்வது தான்.

எல்லாவற்றையும் இயக்குவதும் உருவாக்குவதும் தான் உயிரின் வேலை.
1.அதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான் பிரம்மாவோ உருவாக்குகின்றான் என்று சொல்வது.
2.நாம் எண்ணியதை நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி
3.ஜீவ அணுவாக ஆனபின்… எந்த எண்ணமோ அதை மீண்டும் உருவாக்குவது தான் பிரம்மாவின் வேலை.

நாம் எண்ணியது அனைத்தையும் தனக்குள் ஜீவ அணுவாக மாற்றுவது தான் உயிரின் வேலை. நாம் எண்ணியதைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை.

ஒருவர் நல்ல சொல்லைச் சொல்கின்றார். அதை நாம் கேட்கும் பொழுது உடனே உயிர் ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

மீண்டும் அந்தச் சொன்னவரை நாம் நினைக்கின்றோம்
1.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட அலைகள் இங்கே உண்டு
2.அதை மீண்டும் கவர்ந்து நாம் சுவாசித்து “உயிரின் வழி தான்” அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் (முடியும்).
3.உயிர் அதை இயக்கிக் காட்டி இந்த உணர்வினை உடலுக்குள் பரப்புகின்றது.
4.அவர் சொன்னது உடலில் ஜீவ அணுவாக இருக்கும் பொழுது அந்த நல்ல அணுக்களுக்கு இது உணவாகப் போய்ச் சேர்கின்றது
5.அந்த நல்ல அணுக்கள் விளையத் தொடங்குகிறது.

உயிரின் வேலையையும் அதனின் இயக்கத்தையும்… உடலின் வேலையையும் உடலாக ஆவதைப் பற்றியும்… அறிந்து கொள்வதற்கே இதை உணர்த்துகின்றோம்.

ஆதியிலே இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அந்த அகஸ்தியன்… அவன் வாழ்க்கையில் தான் கண்டறிந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் விண்ணிலே மின்னிக் கொண்டிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்ற அனைவருமே பிறவி இல்லா நிலை அடைந்து பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டே உள்ளார்கள். இந்தப் பேரண்டத்தில் மனிதனாகி ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் என்றுமே அதற்கு அழிவில்லை.

சூரியன் அழியும்… மற்ற பேரண்டங்கள் எவையாக இருப்பினும் அவைகளும் அழிந்து விடும். ஆனால்
1.உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி… ஒளியின் சரீரமாக மாறிவிட்டால் அதற்கப்புறம் பிறவி இல்லை… அழிவே இல்லை…!
2.அதிலிருந்து உருப்பெரும் உணர்வுகள் உயிரணுக்களுக்கு வழிகாட்டியாக அமைந்து
3.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளில் ஒளியாக உருவாக்கிக் கொண்டே இருக்கும்

விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

December 4, 2020

“சிவனுக்கு முந்தியவனாக...” விநாயகன் எப்படி ஆகின்றான்...

“உயிர் தான் ஈசன் என்றும்... கடவுள் என்றும்... உள் நின்று அவன் தான் இயக்குகிறான்...! என்றால் நம்புகின்றோமா...? என்றால் அது எப்படிக் கடவுள் என்று கேட்கிறோம்...!
 
இப்பொழுது நான் (ஞானகுரு) இங்கே பேசுகின்றேன். இந்த உணர்வுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது… வினையாக மாறுகின்றது.
1.இதை நீங்கள் நுகர்ந்து அறிந்தால் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.இந்த உணர்வுகளை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாறுகிறது உயிர்.
 
சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… சிவனின் பிள்ளை விநாயகன்...!
 
நான் சொல்லாகச் சொல்லும் உணர்வுகள் (வினை) இது முந்தியது… விநாயகன். உயர்ந்த உணர்வின் சக்தியை இப்பொழுது சொல்கிறேன். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டு நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாகி உடலானால் இது சிவமாகின்றது.
 
ஆகவே சிவனின் பிள்ளை விநாயகன். இவ்வளவு தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
 
1.நான் சொல்லும் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது அது சிவனுக்கு முந்தியது (அந்த வினை – விநாயகன்)
2.இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவானால் அது சிவனின் பிள்ளை விநாயகன்…!
3.உடல் சிவமாகிறது… இந்த உணர்ச்சிகள் வினை இயக்குகிறது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.
 
இப்படிப் பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றோம் கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! கணங்களுக்கு அதிபதி கணப்தி…! என்று உயிரை வணங்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள்.
 
நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வினை உடலாக மாற்றி நமக்குள் தெளிவாகிறது.
 
ஆகையினால் தான் இதைத் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அங்குசபாசவா…!
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதனை அடக்கும் வல்லமை பெற்றது என்று
2.விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்துள்ளார்கள்.
 
விஷத் தன்மை கொண்ட ஒரு கொசு என்ன செய்கிறது…?
 
மனிதனாக உருவாவதற்கு முன் விஷத் தன்மை அதிகம். யானையின் உடல் மேல் உள்ல தோல் மிகவும் வலுவானது..
 
ஆனால் இந்தக் கொசு அந்த யானைத் தோல் மீது அமர்ந்து தன் உடலில் உள்ள விஷத்தை அங்கே பாய்ச்சி அந்தத் தோலை அப்படியே விரியச் செய்து அதனின் இரத்தத்தைக் குடிக்கிறது.
 
யானை உடல் வலுப் பெற்றது. இருந்தாலும் தன் எண்ணத்தின் வலு கொண்டு அதிலிருந்து தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டு எண்ணத்தின் வலுப் பெறுகின்றது.
 
மண்ணை வாரித் தன் மீது வீசிக் கொள்கிறது.. வாலால் அடிக்கிறது… கொசுவிடமிருந்து தப்ப…!
 
இப்படிப் பல கோடிச் சரீரங்களில்…
1.”தீமையிலிருந்து விடுபட வேண்டும்..” என்ற வலுவான உணர்வுகள் கொண்டு எண்ணி எடுத்து
2.மாற்றியமைத்த உடல் தான் இந்த மனித உடல் என்று காட்டுவதற்கு
3.சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்கு யானையின் தலையை மனித உடலில் போட்டு விநாயகா என்று காட்டுகின்றார்கள்.
 
விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு வைத்துள்ளார்கள். உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்து அவரின் உணர்வினை நுகர்ந்தால் மூஷிகவாகனா (மூச்சு).
 
அந்த உணர்வு ஆன பின் அதே உணர்ச்சிகளைத் தூண்டி அவருக்குத் தக்க உதவிகளைச் செய்யச் செய்கின்றது.
 
நுகர்ந்தறிந்த உணர்வுகள் கொண்டு அவருக்கு நாம் உதவி செய்தாலும் அவரின் வேதனை உணர்வுகள் நம் நல்ல குணங்களை வங்கிட்டு விடுகிறது. அதனால் தான் அங்கே எலியைப் போட்டு வைத்துள்ளார்கள்.
 
ஒரு குளவி கொட்டினால் புழுவின் உடலின் அணுக்களுக்குள் அந்த விஷம் எப்படிச் சேர்கிறதோ அதைப் போல்
1.இந்த வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி விடுகிறது
2.அது வங்கிட்டுக் கொள்ளும்.. அதற்குள் குடியிருந்து கொள்ளும்
3.இதைக் காட்டுவதற்குத் தான் எலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் வளர்த்துக் கொண்ட நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்பதற்கே ஞானிகள் அருவத்தின் செயலை ரூபமாகக் காட்டி இப்படித் தெளிவாக்கியுள்ளார்கள்.

October 23, 2020

ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலமாக அண்டத்தையே அளந்தறியும் சக்தியை எடுக்கச் சொன்னார்கள் ஞானிகள்.. எடுக்கின்றோமா…?


 
விஞ்ஞானிகள் எந்தக் கோள் எங்கே… எந்தத் திசையில் செல்கின்றது…? என்ற உணர்வினை தொலைநோக்கிகள் மூலம் கவர்ந்து பதிவாக்குகின்றார்கள் ஒரு கம்ப்யூட்டரில். பின் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றார்கள்.
 
பெருக்கிய பின் என்ன செய்கின்றனர்…?
 
இந்த உணர்வின் அதிர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டபின் எந்த கோளின் உணர்ச்சிகள் (FREQUENCY WAVES) வருகின்றதோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
 
1.நாடாக்களில் பதிவு செய்து
2.இராக்கெட்டை உந்து விசையால் விண்ணிலே உந்தச் செய்து அதனின் முகப்பில் வைக்கின்றான்
3.திசை… எல்லை… பாதை… எதுவுமே அமையாமல் இருக்கும்போது
4.எந்த கோளின் உணர்வலைகள் அங்கே பரவிக் கொண்டுள்ளதோ
5.அந்த திசைப் பக்கம் வந்தபின் அழுத்தமானபின் இராக்கெட் அதனுடன் சேர்ந்து செல்கின்றது
6.அதன் உணர்வின் ஒலி அதிர்வுகள் ஆனபின் தரை மார்க்கத்தில் இருந்து எடுக்கின்றான்.
 
இதைப் போலத்தான் அன்று மெய் ஞானி தனது மனிதனின் வாழ்க்கையில் நாம் எதை எப்படிப் பெற வேண்டும்… என்று உணர்ந்து மனிதன் இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவாக்கினான்.
 
இந்த உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனை எப்படி உருவாக்கியது…? என்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்க்கும்படி செய்து நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தான்.
 
விநாயகருக்கு முன்னாடி எலியை வைத்தான்... மூஷிகவாகனா..! (சுவாசநிலை).
1.நாம் சுவாசித்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் நடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும்
2.கணங்களுக்கு அதிபதியாகி இன்று பரிணாம வளர்ச்சியாகி நாம் மனிதனாக வந்தோம்
3.நாம் உணவுகளை எப்படி உட்கொள்கின்றோம்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
4.இந்தப் பிள்ளையார் (பிள்ளை யார்…?) என்று கேள்விக்குறி வைத்து நம்மைச் சிந்திக்கச் செய்கின்றனர்.
 
காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆற்றிலே குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம்… துணி அழுக்கைப் போக்குகின்றோம். அன்றைய கால நிலையில்…!
 
கரையேறி வந்தபின் விநாயகரை உற்றுப் பார்த்து… ஆதிமூலம் என்ற (நம்) உயிர் பல பல உணர்வின் தன்மைகளை இந்த உயிர் ஈசனாக இருந்து மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? என்ற உண்மையை அறிவதற்காக இந்த கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று உயிரை வணங்கச் செய்கின்றனர்.
 
பின்… இந்த உலக உண்மைகளை எல்லாம் உணர்ந்த அன்று வாழ்ந்த அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியுமாக இரண்டறக் கலந்து விண்ணுலகை உணர்வினை ஒளியாக மாற்றி…
1இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதை நினைவாக்கிப் பதிவாக்கிக் கொள்ள
2.நம் நினைவினை விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார்.
 
இந்த உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கி அந்த அகஸ்தியன் நஞ்சினை எப்படி வென்றானோ அதே வழியில் நாம் வெல்லும் சக்திக்காக விநாயகரை இங்கே வைத்தான்.
 
அதாவது… டி.வி. ரேடியோவில்…
1.எப்படி எந்த ஸ்டேஷன் வேண்டுமோ அந்த அலைவரிசையில் நாம் அதைத் திருப்பி வைக்கின்றோமோ
2.அதைப் போல் பதிவின் எண்ணமாக்கி நஞ்சை வென்றிடும் சக்திகளை நாம் நுகரும்படி வைத்தான் ஞானி.
 
ஆகவே காலை எழுந்தவுடனே அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று அவனிடம் வேண்டி அந்தச் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.
 
ஏனென்றால் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வை நம் கண்டிருப்போம். அதன் வழி தொடர்ந்து நம் உறுப்புகளில் இந்த அணுக்கள் சேர்ந்திருக்கும். ஏனென்றால் நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தான் உணர்வின் தன்மையை மற்ற அணுக்கள் பகிர்ந்து கொள்கின்றது.
 
நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த விஷத்தின் தன்மை இங்கே வராதபடி நமக்குள் நட்பின் தன்மை வர வேண்டும் என்பதற்குத்தான் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நேரடியாகச் சேர்க்கச் சொல்கிறோம்.
 
ஆக இராமன் காட்டிற்குள் செல்லும்போது எப்படிக் குகனை நண்பனாக்கிக் கொண்டானோ அது போல்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது
2.நமக்குள் பகைமை உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு
3.உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.
 
இத்தகைய சுவையின் உணர்வுகளை ஒளியின் தன்மையை மனிதன் தனக்குள் எப்படி உருவாக்க வேண்டும் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரம்.
 
அந்த இராமாயணத்தில் உள்ள மூலங்களை இது போல் தெரிந்து கொண்டால் மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்ற உண்மையை உணர முடியும்.

இவ்வாறு மனிதர்களான நாம் இனி எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைப்படுத்திக் காட்டினான் அருள் ஞானி.