ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள். Show all posts
Showing posts with label ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள். Show all posts

September 9, 2025

உலகம் உருவாகும் விதமும்… ஒளியான உலகை உருவாக்கும் விதமும்…!

உலகம் உருவாகும் விதமும்… ஒளியான உலகை உருவாக்கும் விதமும்…!


சந்தர்ப்பத்தில் மிகவும் வேதனையான உணர்வு நமக்குள் வருகின்றது. அப்பொழுது எதை நினைக்கின்றோம்…? அதை நிவர்த்திக்க
1.எத்தனை தெய்வங்களை நினைத்தோமோ எத்தனை கடவுள்களைப் பற்றிச் சொன்னார்களோ
2.அங்கே தான் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
 
வேதனையான உணர்வுகள் வந்த பின் உடலுக்குள் என்ன நடக்கின்றது…? தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சிகள் மேலோங்குகின்றது. அந்தக் காப்பாற்றும் உணர்ச்சி தூண்டப்படும் பொழுது உயிருக்குத் தான் தெரிய வருகின்றது அங்கே தான் அறிவாகின்றது.
 
உடலுக்குள் சென்றபின் பிரம்மமாக உருவாகின்றது. அப்பொழுது சிவன் என்ன சொல்கின்றான்…! நான் என்ன செய்வேன்…? விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்ஆகவே விஷ்ணுவிடம் கேட்போம் என்று அழைத்துச் செல்கின்றார்.
 
அதாவது இந்த உடலின் உணர்ச்சிகள் எல்லாம் உயிரிடமே எண்ணும் எண்ணங்களை இயக்குகின்றது என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
 
உயிரான விஷ்ணுவே எனக்கு வரம் தான் கொடுக்கத் தெரியும்…! என் மகனான பிரம்மா அதனால் உருவான இந்த அணுக்கள் அவனுக்குத் தான் அது தெரியும்எனவே பிரம்மனிடம் செல்வோம்…” என்று அழைத்துச் செல்கின்றார்.
 
ஆனால் பிரம்மனோ என் தந்தை சொல் தட்டாது நான் இதை இயக்குகின்றேன். அதன்படி உருவாக்கவில்லை என்றால் உலகம் உருவாகாது. விஷ்ணு வரம் கொடுக்கவில்லை என்றால் உலகத்தில் உருவாகும் தன்மை எதுவும் இருக்காது.
 
உருவாகும் உணர்வுகள் அது அணுவானால் உடலான சிவன் அரவணைக்கவில்லை என்றால் ஒரு உருவின் தன்மை வராது. மும்மலம் என்ற நிலையில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.
 
எல்லோரும் சேர்ந்து இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வேதனையிலிருந்து நிவர்த்திக்க கூடிய வழி எவருக்கும் தெரியவில்லை.
 
1.விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான்
2.உள்ளே சென்ற பின் பிரம்மன் அணுவாக உருவாக்கி விடுகின்றான்.
3.அணுவின் மலம் உடலாகின்றது சிவன் அரவணைத்துக் கொள்கின்றான் என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
 
இப்பொழுது என்ன செய்வது…? என்று உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்…! என்று உணர்வின் ஒலியை எழுப்புகின்றார்கள்.
 
உடலின் வழி உயிருக்கும் உயிரின் தன்மை பிரம்மனுக்கும் எட்டப்படும் பொழுது இதுவெல்லாம் யாருக்குத் தெரியும்…? யாரிடம் கேட்டால் வேதனையை நீக்குவதற்குண்டான வழி கிடைக்கும்…? என்று விஷ்ணுவும் பிரம்மனும் சிவனும் கூட்டுச் சேர்ந்து ஆலோசனை செய்கின்றார்கள்.
 
கண்ணனுக்குத் தான் இது எல்லாமே தெரியும்
1.கண்ணுக்குத் தான் எல்லாம் தெரியும்…!
2.கண்ணால் பார்த்து அதன் வழி தான் உணர்வின் தன்மை பதிவானது.
3.ஆகையினால் அவனிடம் போவோமா…? என்று கேட்கின்றார்கள்.
 
கண்ணனிடம் சென்று எல்லோரும் முறையிடுகின்றார்கள்.
 
அப்பொழுது கண்ணன் கேட்கின்றான். விஷ்ணு நீ வரம் கொடுக்கவில்லை என்றால் இந்தத் தொல்லை வராது அல்லவா. அது எப்படி…? நான் வரம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் உருவாகாதே என்று விஷ்ணு சொல்கிறான்.
 
பிரம்மனிடம் கேட்கின்றான் நீ உருவாக்காமல் விட்டுவிடலாம் அல்லவா என்று. என் தந்தை சொல்படி நான் உருவாக்கவில்லை என்றால் உலகம் எதுவும் உருவாகாது என்று பிரம்மன் சொல்கிறான்.
 
கண்ணன் சிவனிடம் கேட்கின்றான். வேதனையை உடலுக்குள் வராதபடி அரவணைக்காதபடி நீ விட்டு விட்டால் தொல்லை வராதல்லவா. உடலுடன் அரவணைக்கும் போது தானே தொல்லை வருகின்றது தெளிவாகக் கேட்கின்றான்.
 
வருவோரை நான் அரவணைக்கத்தான் தெரியும் அதுதான் என்னுடைய வேலை என்று சிவன் சொல்கிறான். இப்படி மூன்று பேரும் மூன்று வேலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.
 
வேதனையிலிருந்து விடுபட ஏதாவது வழி வேண்டும்…? என்று எல்லோரும் கண்ணனிடம் கேட்கின்றார்கள்.
1.அதாவது கண்ணிலே இந்த எண்ணங்கள் வருகின்றது சிறிது நேரம் யோசிப்போம் என்று கண்ணன் சொல்கின்றான்.
2.சிறிது நேரம் வானை நோக்கிப் பார்க்கின்றான். யார்…? இந்தக் கண்கள்.
3.அப்படிப் பார்க்கும்போது அதோ வருகின்றான் ரிஷியின் மகன் நாரதன்நாராயணனின் அபிமான புத்திரன் அவனிடம் கேட்போம் என்று சொல்கிறான்
 
ரிஷி என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெற்றது துருவ நட்சத்திரம். அது தான் ரிஷி.
 
ஏனென்றால் எல்லாவற்றையும் சிருஷ்டித்துக் கொண்டது உயிர்தான்.
1.ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கிடும் உணர்வு கொண்டு ஒளியாகி ஒளியின் சரீரம் பெற்றது ஏழாவது நிலை பெற்றது சப்தரிஷி.
2.சப்தரிஷி என்றால் உணர்வின் நாதங்களால் இயக்கப்பட்டு
3.அந்த நாதத்தின் இயக்கமாகத் தீமைகள் தனக்குள் வராதபடி இயக்கும் சக்தி பெற்றது என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
 
நம்முடைய காவியத் தொகுப்புகளில் தவறில்லை.
 
வேதனைப்படும் உணர்வைச் சூரியன் அந்த நாராயணன் வெப்பம் காந்தம் விஷம் என்று இயக்க அணுக்களை அனுப்பி அதைக் கவர்ந்து தனக்குள் எடுத்து இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.
 
வேதனைப்படும் உணர்வினை எடுக்கும் பொழுது அந்த வேதனையின் தொடர்கள் நமக்குள் வருகின்றது. ஆனாலும்
1.அந்த வேதனையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியவன் துருவ நட்சத்திரம்.
2.அதிலிருந்து ஒளி அலைகள் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.
3.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அதைக் கவர்ந்து கொண்டால் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக இயக்கும் இயக்க அணுவாக அது மாறுகின்றது.
 
இதையும் தெளிவாக்குகின்றது நமது சாஸ்திரங்கள்.
 
அதோ வருகின்றான் நாரதன் என்று கண்ணன் சொன்னபின் மற்ற எல்லோரும்
1.ஐயோ அவன் கலகப் பிரியன் ஆயிற்றே…! பல தொல்லைகள் கொடுப்பானே…!
2.அவன் பரிசீலனைக்கெல்லாம் நாங்கள் தப்ப வேண்டுமே…! என்ன செய்வது…? என்று இந்த மூன்று பேரும் சொல்கின்றார்கள்.
 
கலகம் நன்மையில் தானே முடிகின்றது என்று கண்ணன் சொல்கின்றான்.
 
ஓருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நாமும் வேதனைப்படுகின்றோம்.
 
வேதனை உணர்வுகள் நமக்குள் போன உடனே உயிரிலே படும் போது குருக்ஷேத்திரப் போராக மாறுகின்றது.
 
அதாவது உயிரிலே படும் பொழுது விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் சென்ற பின் அது அணுவாகப் பிரம்மம் ஆகி விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை சிவமாகி விடுகின்றது.
 
அவன் எப்படி வேதனைப்பட்டானோ அந்த உணர்வு நம் உடலாக மாறும் பொழுது
1.வேதனை எப்படி இயக்குகின்றது…? என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.
2.இது எல்லாம் ஞானிகளால் நமக்குக் கொடுக்கப்பட்டவை தான். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்…?
 
கண்களால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று கண்ணனிடத்தில் கேட்ட பின் சொல்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.கண்களால் தான் அறிந்து தப்பும் உணர்வுகளைக் கொடுத்து தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியது
2.அதனால் தான் கண்கள் அதோ வருகின்றான் நாரதன் என்று சுட்டிக் காட்டுகின்றது.
 
தியானத்தில் நாம் என்ன செய்கின்றோம்…?
 
சூரியன் காந்த சக்தி கவர்ந்து வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமது குரு காட்டிய வழியில் அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்று  கண்களால் ஏங்கப்படும் பொழுது அந்த உணர்வு இங்கே பதிவாகின்றது.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அந்த வேதனையை மாற்றி அமைக்க முடிகின்றது.
 
வேதனைப்பட்டவனையோ நோய்வாய்ப்பட்டவனையோ பார்த்தால் நாம் என்ன சொல்கின்றோம்…? நல்ல மனிதன் இப்படி ஆகிவிட்டானே வேதனைப்படுகின்றானே…” என்று சொல்கின்றோம்.
 
 அதே சமயத்தில் ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகிறான் என்றால் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் பாவி…” என்று அவன் மீது விடாப்பிடியாக இருப்போம்.
 
நல்ல மனிதன் கஷ்டப்படுகின்றான் என்று
1.அந்த வேதனையைத் தான் சொல்ல முடிகின்றதே தவிர
2.அதை மாற்றியமைக்கும் உணர்வு நமக்குள் வருவதில்லை.
 
அதை மாற்றுவதற்குத் தான் இந்தத் தத்துவத்தைச் சொல்வது. அதோ வருகின்றான் நாரதன்…” என்று சாஸ்திரங்கள் நமக்கு வழிகாட்டுகின்றது.
 
ஆதன் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் அங்கே இணைத்து விட்டால் தீமை என்ற உணர்வுகள் உள்ளே போகாது அது தடுத்து விடுகின்றது. தடுத்தபின் வேதனை உணர்வுகள் நிறுத்தப்படுகின்றது.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் செலுத்தப்படும் பொழுது எல்லா அணுக்களுக்கும் அதை இணைக்கப்படும் பொழுது நாரதன்…! தீமை உள்ளே புகாதபடி எல்லா அணுக்களும் வலுவாகின்றது.
 
சிறிது நேரம் இவ்வாறு எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது உடலுக்குள் வேதனையை ஈர்க்கும் சக்தி அங்கே குறைகின்றது…” அப்பொழுது நமக்கு முன் இருக்கும் அந்த தீமை அனாதையாகின்றது…”
 
அனாதையாக இருப்பதைச் சூரியனுடைய காந்த சக்தி அது தன் ஈர்ப்பால் கவர்ந்து இழுத்துச் சென்று விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது
2.ஆன்மா நலமாகும் பொழுது உடலும் நலமாகின்றது
3.உயிரான்மாவும் புனிதம் (ஓளி நிலை) பெறுகின்றது.

September 8, 2025

மாரி

மாரி


நமது சகஜ வாழ்க்கையில் பண்பும் பரிவும் அன்பும் பாசமும் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நோயுடன் வேதனைப்படுகிறார் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்து உணர்ந்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம்.
 
அவ்வாறு உதவி செய்யப்படும் பொழுது
1.அவர் உடலில் இருந்து விளைந்த நோயை நாமும் நுகர்ந்தறிவதனால் அதே உணர்வின் சக்தி நமக்குள் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
2.அது மாறி (மாரி) நமக்குள் தாயாக வந்து விடுகின்றது.
 
நாம் அடிக்கடி அந்த நண்பனை (நோயாளியை)ண்ணும் பொழுது நமக்குள் அந்த உணர்வின் வளர்ச்சி ஏற்பட்டு நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் சக்தியாக வந்து விடுகின்றது.
 
அது தான் மாரியம்மாள்…!
1.ஏனென்றால் அவர் கசந்த வாழ்க்கை வாழ்ந்தார்
2.அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையையும் கசந்த வாழ்க்கையாக உருவாக்கி விடுகின்றது.
3.ஆகையினால் தான் மாரியம்மன் கோவிலில் வேப்ப மரத்தை ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள்.
 
கசந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நோயாளியைப் பார்த்தபின் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியின் உணர்வை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமையான உணர்வுகளைக் கருக்கிடல் வேண்டும்.
 
அந்த நோயாளிக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்த உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
 
இது போன்று
1.நமக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளை கேட்டறிகின்றோம்.
2.அதை நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் மாறி (மாரி) தீமைகள்  நமக்குள் விளையாயாது தடுப்பதற்குத் தான்
3.மாரியம்மன் ஆலயத்தில் அக்னி குண்டத்தை வைத்திருப்பார்கள்.
 
பகைமையான உணர்வை நுகர்ந்தால் நமக்குள் அது தீமையாக விளைந்துவிடும். அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…? என்பதனை உணர்த்துவதற்குத் தான்
1.இந்த வாழ்க்கையில் தீமையோ துன்பங்களோ நோயோ அதையெல்லாம் கேட்டறியும் பொழுது
2.அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது தடுப்பதற்கு அன்றைய ஞானிகள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறும்படி செய்கின்றனர்…”
 
இதன் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் நாம் எவரைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி என்ற உணர்வை உருவாக்குதல் வேண்டும்.
 
இல்லை என்றால் பிறருடைய தீய உணர்வுகள் அது மாறி(ரி) நமக்குள் நோயாக வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் தடுக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் காட்டி அருள் வழியில் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கினோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபடலாம்நம்மையும் காத்திடலாம் என்று இந்தப் பொது விதிகளை அமைத்தனர்.
 
நம் சகஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் நோய்களைப் பற்றியோ பகைமைகளைப் பற்றியோ கேட்டறியும் பொழுது நுகரப்படும் பொழுது அது வளர்ந்து விடுகின்றது.
 
பகைமை கொண்டால் அவரை அழிக்க வேண்டும் என்றும் கொடூர நிலை கொண்டு கொலை செய்வதும் போன்ற கொடுமைகள் செய்யும் உணர்வுகளாக உருவாகி விடுகின்றது.
 
இத்தகைய தவறான நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் மாரியம்மன் ஆலயத்திற்குள் வரப்படும் பொழுது அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சந்திப்போர் அனைவரது உடல்களிலும் படர வேண்டும்
2.எங்களை அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகள் மாற வேண்டும்
3.அருள் ஒளி எங்களுக்குள் பெருக வேண்டும்
4.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் பேரின்பம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் செய்தால்
5.நாம் எடுத்துக் கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது… நமக்குள் வந்த தீமைகளைப் பொசுக்குகின்றது.
 
அதற்குப் பின் இந்த ஊரும் உலகமும் உலக மக்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணி நாம் பரவச் செய்தல் வேண்டும்.
 
எங்கள் தெரு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் ஊரில் படர்ந்துள்ள பகைமை உணர்வுகள் மாற வேண்டும் சகோதர உணர்வுகள் வளர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.
 
எங்கள் தெரு மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும். மத பேதம் இல்லாது இன பேதம் இல்லாது மொழி பேதம் இல்லாது அரசியல் பேதம் இல்லாது வாழும் அந்தச் சகோதர உணர்வுகள் எங்கள் ஊர் முழுவதும் உலகம் முழுவதற்கும் படர வேண்டும் என்று அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரப்புவோம் என்றால்
1.நமக்குள்ளும் அந்த வளர்ச்சி பெறுகின்றது
2.கைமை உணர்வை நீக்கிடும் ஞானமும் கிடைக்கின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமையும் பெருகுகின்றது.
4.தன்னை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.
 
பாலிலே பாதாமைப் போட்டால் அது நல்ல சத்தாக மாறுகின்றது. ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டால் பாதாமினுடைய சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.
 
இது போன்று நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் பகைமைணர்வுகள் உள்ளே புகுந்து விட்டால் அது தீமையான உணர்வின் அணுக்களாக விளைந்து விடுகின்றது.
 
அதை மாற்றுவதற்காக… ஏகோபித்த நிலைகள் கொண்டு சமுதாயத்தில் மக்கள் அனைவரும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
இதைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.அவர்தம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி
2.வாழ்க்கையில் பேரின்பம் பெரு வாழ்வு பெற எமது அருளாசி உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

September 5, 2025

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா


ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம் அந்த வேதனையான உணர்வை நுகர்ந்தோம் என்றால் உயிரான விஷ்ணு உள்ளே புக வரம் கொடுக்கின்றான்…”
 
ஆனால் உள்ளே சென்ற பின் வேதனைப்படுத்தும் அணுவாக உருவாகி விடுகின்றது. அந்த வேதனைப்படும் உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.மனிதனை உருவாக்கி அணுக்களுக்குள் அது கலந்து விடுகின்றது.
2.மனிதனை உருவாக்கிய அணுக்கள் தான் தேவாதி தேவர்கள் என்பது.
 
மனித உடலை உருவாக்கிய தேவர்கள் வேதனை என்ற உணர்வைக் கண்ட பின் எங்களால் எதையும் செயல்படுத்த முடியவில்லை…” என்ற வேதனையுடன் சிவனிடம் வருகின்றனர்.
 
இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து எங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் எங்களைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்…!” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றார்கள்.
1.வேதனையான உணர்வுகளை நுர்ந்தால்
2.முதலில் உடலிலே தான் அந்த வேதனை தெரிய வரும்.
 
மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் தேவாதி தேவர்கள் என்று நாம் அறியும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.
 
சிவனிடம் எல்லோரும் வந்து முறையிடும் பொழுது நான் என்ன செய்வேன்…? வருவோர் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய செயல்…”
 
வை அனைத்தும் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான். நாம் விஷ்ணுவிடம் கேட்போம் என்று எல்லா உணர்வுகளும் சேர்த்து உயிரான விஷ்ணுவிடம் வேண்டும்படி வருகின்றார்கள்.
 
விஷ்ணுவிடம் கேட்டாலோ எனக்கு வரம் கொடுக்கத் தான் தெரியும் பிரம்மன் அல்லவா உருவாக்குகின்றான் அவனிடம் கேட்போம்…!” என்று அங்கே வருகின்றார்கள்.
 
பிரம்மாவோ என் தந்தை சொல்படி நான் உருவாக்கித் தான் ஆக வேண்டும்.
1.அப்படி உருவாக்கவில்லை என்றால் உலகம் எப்படி உருவாகும்…?” என்று
2.நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு காரணப்பெயர் வைத்து இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.
 
இருப்பினும் இதிலிருந்து விடுபட யாரிடம் கேட்பது…?
 
விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் மூன்று பேரும் சேர்ந்து இந்த உடலுக்குள் இருக்கும் தேவாதி தேவர்கள் மனித உடலை உருவாக்கிய அனைத்து உணர்வும் ஒன்று சேர்த்து யாரிடம் கேட்பது…? என்ற நிலைகளில் எண்ணி ங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
கண்கள் தோன்றிய பின்பு அந்தக் கண்களால் தான் உற்றுப் பார்த்துப் பல தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருப்பவன் துருவ மகரிஷி.
 
தீமைகளை எல்லாம் அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால்
1.அது “ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!”
2.அவனிடம் கேட்டால் வழி கிடைக்கும் என்று நம் கண்கள் (கண்ணன்) உணர்த்துவதாகக் காட்டுகின்றார்கள்
 
வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம்… நமக்குள் அந்த வேதனை வருகின்றது. இதை நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்தால் வேதனை என்ற அந்த விஷத்தை நீக்க முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.
 
அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்தப்படும் பொழுது
2.வேதனையான உணர்வு வராது தடுக்கும் நம்மைச் சிந்திக்கும்படி செய்யும்.
 
உடலுக்குள் வரும் வேதனையை அடக்கி எந்த வேதனையான உணர்வுகளை உற்று நோக்கிக் கவர்ந்தோமோ அவர்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனைப்படும் அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.
 
ஆகவே… வேதனையை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.
2.உடலுக்குள் அது சென்று தீமையை வென்றிடும் பிரம்மனாகி விடுகின்றது.
3.தீமையை அகற்றிடும் உணர்வின் வலுவாகும் பொழுது சிவனான உடலுக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.
 
இதனைத் தெளிவாக்குவதற்குத் தான் குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று காட்டினார்கள்.
 
குரு விஷ்ணு நம் உயிர் எல்லாவற்றிற்கும் குருவாக இருக்கின்றது. குரு பிரம்மா நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அந்த குணத்தின் தன்மைகள் குருவாக இயக்கும். குரு சாட்சாத் மகேஸ்வரா எல்லாவற்றையும் உருவாக்கும் அந்தச் சக்தி மனித உடலுக்குள் உண்டு என்பதை
1.மனிதனானவன் அவன் தன்னைத்தானே தான் வணங்கி தனக்குள் எவ்வாறு உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும்…? என்று
2.குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று இதைத் தெளிவாக்கி நாம் தெரிந்து கொள்ளும் சக்தியாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
 
இதன் வழி உங்கள் வாழ்க்கையில் உங்களை நீங்கள் அறிந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வளர்ந்து தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற எது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

December 23, 2024

நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்

நமக்குள் மறைமுகமாக செயல்படும் இயக்கங்கள்


கண்ணுக்குப் புலப்படக்கூடியது அனைத்துமே துவைதம்… அதிலே மறைந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது அத்வைதம்
1.ந்த உணர்வலைகளை நாம் கவர்ந்து விட்டால் விசிஷ்டாத்வைதம்.
2.எதனின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோமோ
3.அந்த உணர்வு நம் உடலுக்குள்ளேயே இருந்து மறைந்திருந்து செயல்படுத்துகின்றது.
 
சந்தர்ப்பத்தில் ஒரு வேதனைப்பட்ட நிலைகளைப் பார்த்தோம்… அது சூட்சமமாக இருக்கின்றது அது.
 
அவர்கள் வெளிப்படுத்திய அந்த வேதனை உணர்வலைகள் அத்வைதம். அதை நாம் இப்படி செய்கின்றாரே என்று நுகர்ந்தறியப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். கவர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது.
 
பின் என்ன செய்கின்றது…?
 
1.என்னை அறியாமலே அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை வருகின்றது.
2.வேதனை வருவது ஏன்…? என்று நமக்குத் தெரிவதில்லை நம்மை அறியாமலே அப்பொழுது புலம்புகின்றோம்.
 
ஆகையினால் தான் இதை விசிஷ்டாத்வைதம் என்று காண்பிக்கின்றார்கள்.
 
1.நீ கவர்ந்து கொண்ட உணர்வு எவ்வாறு உன்னை இயக்குகிறது…? என்பது
2.சாஸ்திர விதிகளில் தெளிவாக இப்படிக் காட்டப்பட்டு இருக்கின்றது.
 
ஆனால் அத்வைதம் வேறு விசிஷ்டாத்வைதம் வேறு என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொண்டு சண்டை இட்டுக் கொள்கின்றார்கள். இது தான் உண்மை இல்லை இதுதான் உண்மை என்று சொல்கின்றார்கள். மறைமுகமாக இயக்குகிறது என்று சொல்கின்றது நீங்கள் எப்படி நேரடியாக இயக்கும் என்று சொல்லலாம்…? அவர்களுக்குள் ஒரு போர் முறை.
 
வியாசகரால் கொடுக்கப்பட்டது தான் இந்த உண்மைகள்…! அதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டிருக்கின்றோமா…? என்றால் இல்லை. அதை அறியும் பக்குவமாவது இருக்கிறதா…? என்றால் இல்லை.
 
மற்றவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகள் அத்வைதம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதை லைகளாக வைத்துள்ளது. அதே சமயத்தில் அந்த உடலைப் பார்த்து அதே உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.
 
தனக்குள் கவர்ந்து கொண்ட நிலைகள் தன்னை அறியாமலேயே மறைமுகமாக செயல்படுகின்றதுவிசிஷ்டாத்வைதம் என்று தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
 
இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா…!
 
விநாயகர் தத்துவப் பிரகாரம் வங்கப்படும் பொழுது நம்மை அறியாது இயக்கும் இந்த நிலைகளை மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்ற இந்த உணர்வை
4.தனக்குள் மறைமுகமாகவே தீமைகளை அகற்றும் நிலையாக உருவாக்குவது - விசிஷ்டாத்வைதம்.
 
ஞானிகள் உணர்வைத் தனக்குள் சேர்த்துத் தீமை வராதபடி இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கும் மார்க்கமாக இதை நீ வினைக்கு நாயகனாக ஆக்கு விநாயகா…”
1.அருள் உணர்வுகளுக்கு நாயகனாக நீ இரு
2.அந்த உணர்வின் செயலின் எண்ணத்தை உனக்குள் உருவாக்கு…! என்று தெளிவாக ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
 
ஆகவே அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் உணர்வுகளை நுகர்ந்தபின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் எல்லோரும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று
1.இப்படி எண்ணும்படி தான் ஆலயங்களைக் கட்டி
2.அதிலே மறைமுகமாகவே நமக்குள் பல உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

December 13, 2024

ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?

ஓ..ம் நமச்சிவாய என்றால் அபாயம் ஒன்றுமில்லை என்று ஏன் சொன்னார்கள்…?


மனித உணர்வில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாக விண் சென்ற அவனை நாம் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.
 
இந்தப் பூமியில் வாழும் பொழுது
1.அவன் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த உணர்வின் சக்தி
2.எனக்குள் ஜீவன் பெற்று நாமும் ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
3.இது தான் ஓம் நமச்சிவாய
 
ஆனால் அவனின் நினைவலைகளை யாரும் நமக்குச் சொல்லவில்லை. இதை ம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று சொன்னால் உனக்கு அபாயம் ஒன்றும் இல்லை…” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
1.எதைச் சிவமாக்க வேண்டும் என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.
2.அதை யாரும் நாம் பெறவில்லை.
 
தவ யோகிகளும் கொடுத்திருப்பார்கள் சினிமாப் படங்களிலும் கொடுத்திருப்பார்கள்ம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய. அவன் எதைத் தனதாக… சிவமாக ஆக்க வேண்டும் என்று சொன்னான்…? என்று யாராவது எண்ணுகின்றார்களா…! என்றால் இல்லை.
 
சிவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்றால் அந்தச் சிவன் யார்…? நம் உடல் தான் சிவம்.
1.நாம் எண்ணியதை எல்லாம் உயிர் ஜீவனாக்கிச் சிவமாக மாற்றுகின்றது என்ற நிலையை
2.இந்த உண்மையைக் கண்டு சொல்லி இருந்தாலும் அதை நாம் உணரவே இல்லை
3.யாரும் உணர்த்தவும் இல்லை உணரும்படிச் செய்யவும் இல்லை.
 
காவியமாகப் படைத்து விட்டார்கள் நாடக மேடையில் வேஷம் போட்ட மாதிரி நம்மை அலைய விட்டு விட்டார்கள்.
 
உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக நாம் பரிணாம வளர்ச்சியில் எப்படி வளர்ந்தோம்…? என்று அந்த ஞானிகள் சொன்ன இயற்கையின் உண்மையினை நாம் அறிதல் வேண்டும்.
 
ஓர் புழு ஒரு உணர்வைச் சுவாசித்தால் ஓம். எந்தச் சத்தை சுவாசித்ததோ அந்த உணர்வின் சத்து அதன் உடலாக மாறுகின்றது ஓம் நமச்சிவாய.
 
ஆதியிலே ஓர் உயிர் அது தோன்றிய நிலையில் உயிருக்குள் துடிப்பின் இயக்கம் இருந்தால் தன் அருகில் இருக்கக்கூடிய செடியின் சத்தை இந்த உயிருக்குள் துடிப்பின் ஈர்ப்பான காந்தம் ழுத்து அந்த உயிருடன் இணைக்கச் செய்யும்போது ஓ ம்… ஓம்…! என்கிற பொழுது ம் என்பது பிரம்மம்.
 
1.சுவாசித்த உணர்வுகள் அதற்குள் ஜீவனாகி அது உடலாகின்றது
2.இந்த உயிரான ஒளி இயக்கப்படும் பொழுது மின்னுகின்றது
3.ஆனால் ழுத்து அந்தச் சத்தான நிலைகள் இதனுடன் இணைக்கப்படும் பொழுது
4.ஒளி மறைக்கப்பட்டு உடலாகின்றது… சிவமாக மாறுகின்றது.
 
அந்த நந்நாளைத் தான் நாம் சிவன் இராத்திரி என்று சொன்னார்கள். உயிர் முதன் முதலில் தாவர இன த்தை நுகர்ந்து அது உடலாகி உடலுக்குள் ஒளியின் சிகரமாக இருக்கின்றது.
 
எந்தத் தாவர இன த்தை இந்த உயிர் இணைத்து உடல் ஆனதோ அந்த மம் தான் வினை - விநாயகா. விநாயகன் பிரணவத்திற்கு உரியவன் என்றும் சொல்வார்கள்.
 
எந்த மத்தை நாம் சுவாசிக்கிறோமோ அது எனக்குள் பிரணவமாகி இயங்கி ஜீவனாகின்றது. உயிர் இருக்கும் பொழுது தான் எண்ணியது அனைத்தையும் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றதுசதா சிவமாக ஆக்கிக் கொண்டே உள்ளது.
 
1.ஆகவே… அருள் ஞானிகளின் உணர்வை நாம் சதா சிவமாக உடலாக ஆக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான்
2.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று தெளிவாக ஞானிகள் நமக்கு உணர்த்திச் சென்றார்கள்.

October 26, 2024

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”

தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”


மனித வாழ்க்கையில் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளையும் சித்திரை (சிறு திரை) மறைத்துக் கொள்கின்றது. புது வருடத்தில் (வெளிச்சத்தை மறைக்கும் இருளைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காண வேண்டும் என்பது
 
புது வருடம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் விசேஷத்தை வைத்ததின் நோக்கங்கள் 12 ராசி என்றும் வைப்பார்கள்.
1.இந்தப் 12 மாதத்திலும் ஒவ்வொரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…?
2.ராசியின் தன்மை எவ்வாறு விளைய வேண்டும் என்று நான் 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள்.
 
ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதை எதைச் செய்ய வேண்டும்…? என்ற நிலையில் சித்திரை பிறக்கும் பொழுது நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.
 
வருடம் பிறந்து விட்டதுநமது வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறைக் கண்டுனர்ந்தாலும் அச்சித்திரையை
1.உத்தராயணம் என்ற இந்த ஒளி கொண்டு இருளைப் போக்கிப் பொருள் கண்டு
2.புது வருடம் நாம் நடக்க வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி நமக்குத் தத்துவத்தைக் கொடுத்தார்கள் மாதங்களையும் அமைத்தார்கள்.
 
ஆனால் அதை எல்லாம் யாரும் நமக்கு விளக்கமாகச் சொல்வதற்கு இன்று இல்லை. யாம் இப்பொழுது இதைச் சொன்னால் புதிதாக ஏதோ சொல்கிறார்…” என்று எம்மைச் சொல்கின்றார்கள்.
 
ஏனென்றால் இன்று ஒவ்வொரு மாதத்திலும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று எத்தனையோ ஐதீகங்களையும் சாங்கியங்களையும் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
 
காரணம் காலத்தால் இந்த உண்மைகள் மறைந்து விட்டதுமறைத்து விட்டார்கள்.
 
சித்திரை ஒரு கனி விளைந்த பின் அது எப்படித் தன் வித்தாக ஆகின்றதோ இதைப் போன்று
1.பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் கனியாகும் பொழுது
2.அதனின் வித்து ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக விளைந்தது.
 
இதைப்போல்
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வே விளைந்தது
2.அந்த விளைந்த நிலைகள் கொண்டு உயிரான நிலைகள் மனிதனின் நிலைகள் வரும் பொழுது கனியாகின்றது.
 
ஒரு மாங்கனி தன் இனத்தின் வித்தை அது உருவாக்கிக் கொள்கிறது. இதைப் போல் தான் உயிரான நிலைகள் கொண்டு பல கோடி உணவை உணவாக உட்கொண்டாலும் அவை அனைத்திலும் ஒருக்கிணைந்து ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வாக வந்த இந்த ஒளியின் சுடராக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விளைந்த நிலைகள் கார்த்திகேயா…”
 
அதனின் உணர்வு கொண்டு மனித வாழ்க்கையில் வரும் சித்திரையை (குறைகளை) புது வருடம் நீக்க வேண்டும்
1.இருளை நீக்கி மறைந்த பொருளைக் காண வேண்டும்
2.எவ்வாறு தீமையிலிருந்து மீள வேண்டும்…?
3.எவ்வாறு ஒளியாக மாற வேண்டும்…? என்ற தத்துவத்தைத் தான் மெய் ஞானிகள் நமக்குத் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

June 15, 2024

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

 

நம்மைத் திட்டுபவர்கள்… சாபம் இடுபவர்கள்… இவர்களை எல்லாம் ஓட்டுக் கேட்டுக் கொண்டே இருப்போம். அதற்காக வேண்டித் தான் கருப்பணசாமியை வைத்து மோப்ப நாயையும் பக்கத்தில் காட்டி இருப்பார்கள்.

ஏனென்றால்
1.ஒட்டுக் கேட்டவுடன் நம் நல்ல புத்தியெல்லாம் இருண்டு விடுகிறது.
2.இருண்டு போன பின் நாம் எப்படித் தவறு செய்கின்றோமோ அதே போன்று
3.அந்த உணர்வுகள் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகிறது.
4.நீ நுகர்ந்து பார்த்த உணர்வுகள்… உன் நல்ல குணங்களை இப்படிக் கொன்று விடுகின்றது…! என்பதைத் தான்
5.சிலையை வைத்து மோப்ப நாயையும் அருகே வைத்து ஞானிகள் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பண்ணசாமிக்கு ஆட்டை வெட்டி அவனுக்குப் படையல் செய்தால் தன்னைக் காப்பான்… அது காவல் தெய்வம்… என்று சொல்லி அதற்குப் பலியிட்டு அதை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆவேச உணர்வு கொண்டு என்ன செய்கின்றோம்…? அங்கே ஆட்டைப் பலி கொடுத்தேன் என்ற நிலையில் நாம் செய்த அந்த உணர்வுகள் இங்கே வந்து பிறரை இரக்கம் இல்லாதபடி துன்பப்படுத்தச் செய்யும்.

உதாரணமாக… கொலை செய்பவனைப் பார்த்தோம் என்றால் அவன் அரக்கத்தனமாகத் தான் போவான். அவனுக்கு எந்த நோயும் வராது. ஆனால் பல கொலைகளைச் செய்வான்… தெம்பாக இருப்பான்.

யாரையும் பற்றி அவன் அஞ்சுவதில்லை… அவனுக்குக் கொலை செய்வது தான் வேலை.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் பொழுது அவன் எப்படி அந்த வலுப்பெற்றானோ இதைப் போல நமக்குள் இந்த அரக்க உணர்வுகள்… பலியிட்ட உணர்வுகள்… அதிகமாகி விடுகின்றது.

இறந்த பிற்பாடு என்ன செய்வேன்…?
1.நாம் பலியிட்டுக் கும்பிட்டது போன்று அடுத்தவர்கள் கருப்பணசாமிக்குப் பலியிட்டுக் கும்பிடுகிறார்கள் என்றால்
2.அந்த உடலுக்குள் புகுந்து… ஆவியாகப் போய்ச் சேர்ந்து விடுவேன்.

ஆனால் அவர்கள் ஆட்டைப் பலி கொடுக்கவில்லை என்றால் “எங்கடா ஆட்டைக் காணோம்…? ஏண்டா பலி கொடுக்கவில்லை…? பார்… உன் குடும்பத்தையே தொலைத்து விடுகின்றேன்…! எனக்கு ஆடு இப்பொழுதே வேண்டும்…! என்று சொல்லி இந்த உடலுக்குள் வந்த ஆவி அவனையும் ஆடச் சொல்லி ஆடைக் கேட்கும்.

இப்படித்தான் மனித உடலில் விளைய வைத்த உணர்வுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருளை போக்க நாம் பிறரின் வேதனைகளை கேட்டறிந்தோம். ஆனால் அது நம் நல்ல குணங்களை இருளச் செய்து நம்மை அறியாமலே தவறு செய்ய வைக்கின்றது. அசுர செயல்களைச் செய்ய வைக்கின்றது.

அதே உணர்வு நம் நல்ல குணத்தை எப்படித் தாக்குகிறது என்பதைத் தான் இவ்வாறு சித்தரித்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதற்கு மாறாக நாம் செய்யும் பொழுது மனித உடலில் எதை விளைய வைத்தோமோ அதனின் செயலாகத்தான் அடுத்து இருண்ட நிலையாக அந்தத் தெய்வமாக உருவாக்கி விடும்… அதே பலியைத் தான் இது கேட்கும்.

கருப்பணசாமி என்ற நிலைகளில் “அருளாடி” சொல்லும் பொழுது பேயை அங்கே ஓட்டலாம் என்று சொல்வார்கள். பேய் பிடித்தவர்களின் குடுமியைப் பிடித்து ஆட்டி… இரண்டு உதையைக் கொடுக்கும்.

ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்கு அந்த ஆட்டம் குறைந்திருக்கும்.

அடுத்து பார்த்தோம் என்றால் அங்கே சென்று என்னை நீ அடக்கினாயா…? உன்னை நான் என்ன செய்கிறேன்…? என்று மீண்டும் ஆடத் தொடங்கும்.

1.இது தான் நாம் கண்ட பலனே தவிர
2.ஞானிகள் காட்டிய தீமைகள் இந்த விடுபடும் அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்கவில்லை

இதை எல்லாம் அறிந்து கொள்வதே மிகவும் நல்லது.