ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label தியானிக்க வேண்டிய முறை. Show all posts
Showing posts with label தியானிக்க வேண்டிய முறை. Show all posts

June 6, 2026

நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி

நம் ஆன்மாவிற்குள் கொண்டு வர வேண்டிய சக்தி


வீட்டில் பெண்கள் கோலமிடுகின்றார்கள். கோலமிடும் போது புள்ளிகளை வைத்து இணைக்கப்படும் போது
1.எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
2.இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தில் உற்றுப் பார்த்து
3.இந்த உணர்வுகளை அந்தக் கோலத்திலே பதிவாக்க முடியும்.
4.ஏனென்றால் அந்தக் கோலப் பொடியிலும் மேக்னெட் உண்டு.
 
ஆகவே குடும்ப ஒற்றுமைக்காக உயர்ந்த எண்ணங்களை எண்ணி அருள் ஞானம் பெருக வேண்டும் நல் வாழ்க்கை வாழ வேண்டும். குடும்பத்தில் எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை எல்லாம் எண்ணிக் கோலமிடலாம்.
 
நமக்குள் இது பதிவாகிறதுநல்ல இயக்கச் சக்தியாக மாற்றுகிறோம். நீங்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள். இங்கே வந்து அவருடைய கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சொல்ல ஆரம்பிப்பார்கள். நாம் உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம்.
 
எந்த இடத்தில் நின்று பேசினோமோ அந்த இடத்திலே பதிவாகிவிடும் இருவர் உடலிலும் பதிவாகிவிடும்.
1.அடுத்தாற்போல் அந்த இடத்திற்கு மீண்டும் வந்தாலே அந்த வாசனை இயக்கி
2.உங்களை அறியாமலே ஏதோ சங்கடமாக இருக்கின்றது…” என்ற நிலையில்
3.அந்த கவலையாகப் பேசிய அதே இடத்திலே அமர்ந்து மீண்டும் எண்ணி அதை வளர்க்கும்படி செய்யும் (பதிவு அப்படி இயக்கும்).
 
அதே போல ஊரிலிருக்கும் குறைகளைப் பற்றிப் பேசியிருந்தால் வேறு பாதையில் செல்ல மாட்டார்கள். ஒற்றைக்காலில் நிற்கக்கூடிய இடமாக இருந்தாலும் கூட அங்கே தான் செல்லும்படி அதை எல்லாம் கவரும்படி இந்த உணர்வு இயக்கும்.
 
இந்த நினைவுகள் அவ்வாறு தான் இயக்கும். அதே எண்ணத்துடன் வீட்டிற்குள் வந்தால் வீட்டிற்குள்ளும் இது வரும்.
 
அதாவது
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மனிதனுக்குள் இருக்கக்கூடிய நிலைகள் எப்படி உருமாறுகிறது…?
2.நம்மை அறியாத செயல்கள் சூட்சுமத்தில் எப்படி நடக்கிறது…?
3.இதையெல்லாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
4.எல்லாம் நேரடியாக அனுபவித்துச் சொல்கின்றேன் புத்தகத்தைப் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.
 
குருநாதர் காட்டிய வழிப்படி இந்தியா முழுவதற்கும் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலும் சுற்றித் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இதை எல்லாம் சொல்கின்றோம்.
 
ஒரு மனிதன் அவன் தெரிந்து தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் சூழ்நிலை தான் அவனைக் குற்றவாளியாக்குகின்றது. அதே சந்தர்ப்பம் சூழ்நிலை அவனை நோயாளியாக மாற்றுகின்றது அதே சந்தர்ப்பம் சூழ்நிலையால் தான் குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்களும் வருகின்றது…!
 
1.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்பதைத்தான் கோவிலில் வைத்து ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.
2.ஆனால் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைகளுக்கு இன்று அது மாறிப் போய்விட்டது.
 
இயற்கையின் உண்மை நிலைகளை நாம் நுகர்ந்தால் நமது உயிர் என்ன செய்யும்…? நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்கிக் கொடுக்கும். அதற்குத் தான் அதிகாலையில் அந்த பிரார்த்தனையைச் செய்யும்படி எல்லோருமே சொல்கின்றார்கள்.
 
ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் தான் இருக்கின்றது.
1.அந்த அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள் குளிக்க வேண்டாம்…!
 
ஆனால் குளித்துவிட்டு மறுபடியும் நீங்கள் ஆடைகளை அணிந்து பாருங்கள். குளித்த வியர்வை வெளியில் வரும். ஆடையை இரண்டவது தரம் நுகர்ந்து பாருங்கள். ஆடையில் நாற்றம் வரும்.
 
ஆனால் அதிகாலை விழித்தவுடன் படுக்கையிலே எழுந்து அமர்ந்து
1.அல்லது படுக்கையிலேயே துருவ நட்சத்திரத்தை எண்ணி நினைவுகளை அங்கே செலுத்தித் தியானித்த பின்
2.ஐந்து நிமிடம் கழித்து உங்கள் ஆடையை நுகர்ந்து பாருங்கள்.
 
நல்ல வாசனையாக இருக்கும். அந்த அருள் மணங்கள் தீமைகளை அகற்றும். ஆகஆடையில் படிகின்றது.
 
இதை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து
1.நம் எண்ணத்தால் உயர்ந்த சக்திகளை நம் ஆன்மாவிற்குள் கொண்டு வரக்கூடிய பழக்கத்தை அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
2.நம் ஆன்மாவை வலுவாக்க வேண்டும் தீமைகள் புகாது தடுக்க வேண்டும்.

June 3, 2026

“சாமி மாதிரி பெரிய சக்தி பெற்று…” உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்

“சாமி மாதிரி பெரிய சக்தி பெற்று…” உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்


உதாரணமாக… வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தால் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் சண்டை வருகிறது. தொழில் செய்யும் இடங்களில் நிம்மதி இல்லை.
 
ஆனால் நாம் அருள் உணர்வுகளைப் பெற்று வளர்த்தால்
1,நாம் போகும் இடமெல்லாம் அனுசரனையாக நம்மைப் பாதுகாக்கும் நிலையாக வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெற்றோமென்றால் அதுவே நமக்கு ஒரு பெரிய பாதுகாப்பாக…” வருகின்றது.
 
சந்தர்ப்பத்தால் தடைகள் வருகிறது என்றால் ஓரளவுக்கு அதிலிருந்து நம்மை மீட்டிடும் நிலையாக
1.“ஏதாவது ஒரு ரிமோட் பண்ணி…” வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்
2.அதற்கு தகுந்தாற் போல் ஒளியாக மாற்றக்கூடிய சக்தி கிடைக்கும்.
 
ஆகவே… உங்களை நீங்கள் நம்புங்கள்.
 
எல்லாமே சாமி தான் என்று எண்ணுவதற்குப் பதிலாக சாமியைப் போன்று பெரிய சக்தி பெற வேண்டும்…!” என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் அகல வேண்டும் அனைவரும் நன்மை பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து வளர்த்து வாருங்கள்.
 
இந்த அருள் உணர்வுகள் உலகம் முழுவதற்கும் பரவும்.
 
உங்களைத் தெளிவாக்கி எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தான் சதா தியானம் இருக்கின்றேன். அருள் வழியில் நீங்கள் தயாரானால் அனைவருக்கும் இது நல்லதாகும்.
 
இந்த உடல் தான் நாம் செய்யும் தொழில் தான் சொத்து தான் என்று இல்லாதபடி இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே நமக்கு அழியாச் சொத்து என்பதை உணர்ந்து அதன் வழி வளர்வோம்.
 
1.துருவ நட்சத்திரத்தினை மறந்து விடாதீர்கள்ந்த நிமிடமானாலும் தனின் சக்தியை எடுங்கள்
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள் எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
 
இதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது அதன் வழி உங்களைக் காக்கின்றது, அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.
 
எல்லோருக்கும் நன்மையைத்தான் நான் செய்தேன்… இப்போது இப்படி ஆகிவிட்டது என்று வேதனையாக எண்ணினால் நாம் அதுவாகி விடுகின்றோம்.
 
னால்… அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் நாம் அதுவாகின்றோம்.
 
எல்லோருடைய உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது எல்லோரையும் காக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது. அதை நாம் அனைவரும் இணைந்து செயல்படுத்துவோம்.
 
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்…. உலகத்தைக் காப்போம் என்ற நிலையில்
2.நீங்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் உங்கள் ஊரிலும் இந்த உணர்வுகள் நல்ல சக்தியாக மாறும்.
3.அது உங்களையும் காத்து ஊரையும் காக்கும்.
4.நீங்கள் உங்களைச் சாதாரண மனிதனாக எண்ண வேண்டாம்.
5.உலகையே காக்கும் திறன் உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

May 8, 2026

நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை

நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை

 

மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளை நாம் பதிவாக்கி வைத்துள்ளோம். கோபப்பட்டவரை வேதனைப்பட்டவரை நோய்வாய்ப்பட்டவரை இது போன்று எத்தனை வகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோமோ அவையெல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய... என்று நம் உடலாக மாறிவிடுகின்றது.

இருந்தாலும் அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அலைகளாக நம் புமியிலே பரவுகின்றது.
1.அவ்வாறு பரவி இருப்பது நம் உடலில் அணுக்களாக மாறிவிட்டால் அது உணவுக்காக நம் உடலில் உணர்ச்சிகளை உந்தும்.
2.அப்படி உணர்ச்சிகளை உந்தினால் நம் முன் இருப்பதை அது கவரும்.

அதாவது செடி கொடிகள் தன் சத்தினை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்ந்தால் நாம் சுவாசிக்க நேர்கின்றது.
1.சுவாசித்தால் அவர்கள் என்னென்ன சங்கடப்பட்டார்களோ அது எந்தெந்த நிலையோ நம்மை அறியாதபடியே சோர்வடையும் நிலைகள் வரும்.
2.அத்தகைய சோர்வடையும் நிலைகள் வந்தால் இரத்த நாளங்களில் கலந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.
3.இப்படி நம்மை அறியாமலே சில நேரங்களில் சிந்தனை இல்லாதபடியே இது போன்ற சிந்தனைகள் வரும்... தியானம் செய்யும் பொழுது.

சிலரிடம் அதிகப் பற்றுடன் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் அவர்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அதை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து விட்டால் நாம் தியானிக்கும் நேரத்திலே நம்மை அறியாமலே அவருடைய எண்ணங்கள் நமக்குள் வரும்.

வியாபாரத்தில் ஏமாற்றி இருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகளை நாம் பதிவு செய்திருப்போம். அப்படிப் பதிவு செய்திருந்தால் நமக்குள் ஏமாற்றம் அடைந்த உணர்வுகள் இருப்பினும் இந்த உணர்வுகளுக்கு எல்லாம் வலு அதிகம்.

தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலும்... இந்த விஷம் கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது "நம் ஆன்மாவில் அதிகமாகச் சேர்கின்றது..."

அதைச் சுவாசித்தோம் என்றால் நம்மை அறியாமலே இயக்கும். நாம் நினைப்பது துருவ மகரிஷி என்று...! ஆனால் அவருடைய உணர்வுகள் தான் அதிகமாக வரும்.
1.அந்த மாதிரி நினைவு வந்தாலும் கண்களை மூடித் தியானித்துக் கொண்டிருக்கிருக்கும் பொழுது உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவை இணைக்க வேண்டும்.
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று அப்படியே கண்களை மூட வேண்டும்.

இப்படி அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துவிட்டால் மற்றவருடைய உணர்வுகளை இழுப்பது குறையும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் போது இத்தகைய நிலை வந்தால் இதைப் போன்று நாம் சமாளித்துப் பழக வேண்டும்.

தீமை விளைவிக்கும் உணர்வுகளுக்கு நாம் நுகர்ந்த உணர்வு ரத்த நாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து... அதாவது
1.நம் உடலில் உள்ள வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அந்த அணுக்களுக்கு
2.இரத்த நாளங்களில் துருவங்கள் நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியைக் கலக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும்.

நல்ல குணங்களுக்கொ மற்ற நிலைகளுக்கோ பிற உணர்வு நம்மைத் தடைப்படுத்துவது போல நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை கண்ணைத் திறந்து ஏங்கி சிறிது நேரம் உள்ளே செலுத்தினோம் என்றால்... ரத்தங்களிலே கலந்த பின் அந்த அணுக்களின் செயலை இந்த வலுவான நிலைகள் அதைத் தடைப்படுத்தும்.

இப்படி நாம் மாற்றிப் பழக வேண்டும்.

பலருடைய உணர்வுகள் இருக்கும் பொழுது இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின் அந்த அலைகளை எடுத்து நமக்குள் ஆன்மாவாக ஆனபின் இதுதான் முன்னணியில் வருகின்றது. நாம் தியானிக்கும் நிலையை மாற்றிவிடும்.

நாம் தியானித்துக் கொண்டே இருப்போம். திடீரென்று திசை மாறிச் சென்றுவிடும்.

இதே போலத் தான் நம் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தினோம் என்றால் அதனுடைய உணர்வுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கிவிடும்.
1.இப்படி நாம் அதை ஒடுக்கி ஒடுக்கி அருள் உணர்வுகளை பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.தியானம் செய்யும் பொழுது நாம் பழக வேண்டியது முக்கியமான பயிற்சி இது.
3.தீமை செய்யும் அணுக்கள் அனைத்தும் நல்லதாக மாறத் தொடங்குகிறது.

April 22, 2026

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை


பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக இன்று நாம் வந்திருக்கிறோம். இனி நாம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை அறிதல் வேண்டும்.
 
1.அகஸ்தியனும் பரிணாம வளர்ச்சியில் வந்தவன் தான்.
2.அகஸ்தியன் கதிரியக்கங்களை தனக்குள் நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றி உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டிருப்பவன்.
4.மனிதனில் அவன் வளர்ச்சி பெற்றவன்.
 
அவ்வாறு ஆன அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நேரத்திலும்… அதாவது வெறுப்போ வேதனையோ சலிப்போ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகள் வரும் போதெல்லாம் அந்தத் தவறின் உணர்வுகள் இயங்குவதைத் தடுத்து அதனை அடக்க வேண்டும்.
 
காரம் புளிப்பு உப்பு என்று தனித்தனித் தன்மையாக இருக்கும்போது அந்தந்த உணர்ச்சிகளைது ஊட்டுகின்றது, அதனதன் வழியில் செயலாக்குகிறது. இவை அனைத்தையும் மனிதனின் ஆறாவது அறிவு ஒன்றாகச் சேர்த்து கலவையாக்கிச் சுவையா உணவாக்கி அதை உட்கொள்கின்றோம்.
 
ப்படிப்பட்ட அந்தச் சுவையாக மாற்றும் தன்மையை நம் வாழ்க்கையில் நாம் பெறுதல் வேண்டும்.
 
நாம் நமது வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பகைமை உணர்வு வருகின்றதோ அதை அடக்க உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.
 
1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை யாம் பதிவு செய்தை அதன் நினைவு கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும்.
2.நினைவு கொண்டு எடுத்தால் உங்களைக் காக்க அந்த உங்கள் எண்ணம் உதவும்.
 
திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின் அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகின்றது. அதன் வழி   எண்ணும் பொழுது அவனை வெறுக்கும் தன்மை, வருகின்றது.
 
அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி அது தடையாக வருகிறது.
 
த்தகைய தடைகள் வருவதைத் தடுப்பதற்கும் அந்த உணர்வின் தன்மையை அடக்குவதற்கும் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வது.
 
அப்பொழுது இந்த உணர்வை எடுத்தால் அந்தத் தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.
 
என்னுடைய ஜெபமே என்னுடைய தியானமே யார் யார் இதைக் கேட்டறிந்தனரோ
1.அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
2.அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்வின் வலுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றேன்.
3.இதை நீங்கள் எடுத்து வளர்ந்தால் தான் நாட்டுக்கும் நல்லதுநம் அனைவருக்கும் நல்லது.
 
னென்றால் நாளை வரும் எதிர்காலம் மிகவும் விஷத்தன்மையாக மாறும் பொழுது அதைக் கழித்து வடித்துநாம் இந்த உடலில் வளர்ச்சியான நிலைகள் கொண்டு… எந்த நிமிடம் அது நடந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று விடலாம். 
 
இல்லையென்றால் இந்தப் பூமியில் மாற்றங்கள் துரித நிலைகள் ஆகிப் பூமி கொஞ்சம் நகர்ந்தால் ஐஸ் பாறையாக மாறிவிடும். அந்த ஐஸ் பாறையாக மாறியபின் விஞ்ஞான அறிவில் உள்ளவர்களும் சிலர் தப்பலாம்.
 
ஆனாலும் இங்கே அசுத்தமான நிலைகள் பனிப்பாறைகள் மூடி உள்ளுக்குள் சென்று விட்டால் யார் காப்பாற்றுவது?  அந்த நிலைகள் சீக்கிரம் வரத்தான் செய்யும்.
 
அதற்குள் நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
1.பூமியை விட்டுத் தப்பிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.நாமும் உடலை விட்டுச் செல்லும் பொழுது (துருவ நட்சத்திரம்  சென்று பழகும் தன்மை வர வேண்டும். 
 
இன்றைய உலக சூழ்நிலையில் எந்த நிலையானாலு சரி இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றும் தன்மை பெற வேண்டும்,
 
அதற்குத்தான் இந்த உபதேசமே…!
 
நான் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும் இதைச் செய்தேன் என் பிள்ளை இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளையின் தவறின் உணர்வை நாம் வளர்த்தால் தவறின் உணர்வுகள்தான் நமக்குள் விளைகின்றது.
 
அவன் செய்யும் தவறின் தன்மை வீரியத்தன்மை பெற்றது, இப்படிச் செய்கிறான் என்று, பாசத்தால் நுகரப்படும்போது இங்கே நல்ல குணங்கள் அனைத்தையும் வீழ்த்தி விடுகின்றது. 
 
நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து அவன் உணர்வு நம்மை இயக்கிடாது…”
1.அவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவனுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும்; அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று
3.அவன் உடலிலே இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அவனை மாற்றி அமைக்க வேண்டும்.  
 
சிந்தித்துப் பாருங்கள் பிற தீமைகளின் உணர்வுகள் நம்மை இயக்கிவிடக் கூடாது. ஏனென்றால் உங்களைப் பக்குவப்படுத்துவதற்காகத் தான் யாம்  தைச் சொல்வது.
 
ஆகவே
1.நமக்குள் இதைப் பேணிக்காக்கும் திறன் வர வேண்டும்.
2.அந்தப் பேணிக் காக்கும் திறன் இருக்கும் போது தான் ஞானிகள் மற்றவர்களுக்கு இதைக் கொடுப்பார்கள். 
 
அவ்வாறு இந்த அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் வளர்த்து… அதைப் பேணிக் காக்கும் திறன் பெற்றிட எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருக்கும்.

April 6, 2026

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்

தீமை தரக்கூடிய அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற வேண்டும்


ஒருவன் தீமையைச் செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார் நமது குருநாதர்.
 
தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும் மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். இன்றைய விஞ்ஞானம் அதை நிரூபிக்கின்றது.
 
அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.
 
1.மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி
2.அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றித் தம்முள் நல்லுணர்வினை  வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.
 
அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது ஒருவன் நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.
 
மகரிஷிகளின் அருளுணர்வுகள் நமது உடலில் கலக்கப்படும் பொழுது
1.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்
2.அவைகளை நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.
 
உதாரணமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.
 
எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ அந்த விஷம் ஊடுருவி இந்த நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.
 
நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது மருந்துடன் கலந்துள்ள விஷம்.
 
இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில் அருள் ஞானியின் உணர்வை நம் எண்ணத்துடன் கலந்து கொண்டே வர வேண்டும். அதனால்
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ அதனுடன்
2.மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து ம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
3.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.
 
இந்த உண்மைகளை எமது குருநாதர் எமக்கு உணர்த்தி எம்முள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து எமக்குள் இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து துருவ மகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு…” என்றார்.
 
யாம் காட்டினுள் இருந்த பொழுது பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும் மற்றவைகள் அஞ்சி ஓடுவதும் சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு யாம் அச்சப்படும் நிலை உண்டானது.
 
அவைகள் செய்த துயர நிலைகளால்
1.துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது…? என்றும்
2.இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்றும் எமக்கு குருநாதர் உபதேசித்தார்.
 
மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வை உன்னிடத்தில் வளர்த்துக் கொண்டால் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள் உன்னைப் பார்த்தாலும் உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு அது அஞ்சி ஓடும்.
 
அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.
 
1.எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும் பொழுது
2.வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு.
3.இதனை நுகரும் உயிரினம் இவன் நம்மை அடக்கி விடுவான் என்ற உணர்வு கொண்டு
4.அது அஞ்சி ஓடும்…! என்ற நிலைப்படுத்தி அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.
 
ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
 
நமக்குள் இருக்கும் துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன் மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி அருள் மகரிஷிகளின் இனங்களைக் கவர்ந்திடும் நிலை வருகின்றது.
 
இப்படி மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது.
1.நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது.
2.தெளிந்த மனதின் தன்மை நம்மில் உருவாகின்றது.

April 3, 2026

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்


தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம் சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.
 
தியானம் என்பதே உயர்ந்த எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது தான்.
 
நம்மிடம் யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்று எண்ணுவது இது தியானம் தான்.
 
அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.
 
காரணம்
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.ண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.ண்ணியதை உடலுக்குள் விளைய வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.ண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.
 
நாம் எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.
 
1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி காட்டும்.
 
தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது என்று ஜீவனாக்கி உடலுக்குள் ம் என்று பதிவு செய்தால் திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.
 
நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.
 
ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் தை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.
 
உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும். உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
 
மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும் உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.
 
கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர வேண்டும்.
 
1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.