ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label துருவ நட்சத்திரம். Show all posts
Showing posts with label துருவ நட்சத்திரம். Show all posts

April 26, 2026

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி


விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமா…!
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி
2.தனதன் எண்ணங்களை இயக்குகின்றது என்பது காவியத்தின் முக்கியத் தொகுப்பு.
3.அதாவது எந்தச் சுவையோ அதைப் போல் ஜீவ அணுக்களாக” உயிர் உருவாக்குகின்றது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.
 
நட்சத்திரங்களுடைய சக்திகள் பூமியில் மண்ணுடன் கலந்து புவியின் ஈர்ப்பால் சிறுகச் சிறுக விளைந்து வைரமான பின் வெடித்துத் தனித்தன்மையாக வெளிவந்து விடுகிறது.
 
அதைப் போல் நம் உயிரால் உருவாக்கப்பட்ட ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது
1.அறிவின் வளர்ச்சி அறிந்திடும் வளர்ச்சி இங்கே வருகின்றது.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அதற்குள் பொருள் தெரிவது போல நமது ஜீவணுக்களின் துணை கொண்டு
3.நம் கண்ணின் வளர்ச்சி கொண்டு அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.
 
நட்சத்திரங்களுடைய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக மாறி பூமியிலே பட்டபின் சிறுகச் சிறுக வைரமாக விளைகிறது. அது ஜீவ அணு அல்ல ஒளியின் உடலாகப் பெறுகின்றதுநட்சத்திரம் எப்படி மின்னுகின்றதோ தைப் போல.
 
நமது உயிரோ மின்னணு போன்று அது இயங்கிக் கொண்டே இருக்கின்றது அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின்னணுவின் துணை கொண்டு இயங்குகின்றது.
 
எப்படி மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை நம் வீட்டிற்குள் எந்தெந்த இணைப்புகளுடன் சேர்க்கின்றோமோ அந்த மின் அணுக்கள் அதை இயக்கி அதன்வழி நாம் பயன்படுத்துகின்றோமோ இதைப் போல
1.சூரியன் இயக்கத் தொடரில் நாம் ளர்ந்தாலும் நம் உயிரே சூரியனின் தொடர்பு கொண்டு தான் அதுவும் இயங்குகின்றது.
2.நாம் எப்படி ஊருக்கு ஒருப்ஸ்டேசனை வைத்திருக்கின்றோமோ அதைப் போன்று நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
3.சூரியன் துணை கொண்டு அந்த மின் கதிர்கள் உடலில் உள்ள அணுக்களை அது இயக்குகின்றது.
 
இருப்பினும் பல உணர்வின் தன்மையை அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டு மனித உடலில் வந்த விஷத்தை வென்றவன் அகஸ்தியன்.
 
அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனதாகி அருள் மம் பெற்று உயிரைப் போன்றே உயிரணுக்களை வளர்த்து விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று” ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.
 
27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது,தனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்டு அந்த விஷங்கள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.
 
அந்த வைரத்தை நாம் உட்கொண்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும் அவ்வளவு கடுமையான விஷம்.
1.ஆனால் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாகக் காண முடிகிறது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
2.இதைப் போன்று தான் விஷத்தை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரம் இருக்கின்றது.
 
விஷமே உலகை இயக்குகின்றது. சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு அது இயக்குகின்றது.
 
நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால் தான் துடிப்பின் தன்மை ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதைப் போல் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்ணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
 
1.ஆறாவது அறிவால் ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்தப் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நாமும் இந்த விஷத்தை ஒளியாக மாற்ற முடியும்.
 
இருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும்  பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.
 
1.நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடிந்தது.
2.நமது குரு அந்த விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
3.ஆகவே தான் உங்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படிச் செய்து…
4.விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்..
 
நாம் ஒவ்வொரு நாளும் உயிரின் முகப்பில்ஈர்க்கப்படும் பொழுது  துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது.
 
இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பில்… உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது… அதாவது
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
2.நாம் அனைவரும் ஒளியின் சரீரம்பெறும் தகுதி பெறுகின்றோம்.

April 20, 2026

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை


வேதனைப்படுபவரை நாம் சந்தித்தால்… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவாக்கி அந்த வேதனைப்படும் உணர்வைத் தள்ளிவிட்டு
1.அந்த வேதனைப்படுபவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற உணர்வைக் கலந்து எடுத்துச் சொன்னால் இந்த உணர்வு வீரியமடைந்து
2.அவருடைய செவிகளில் பட்டு காது வழி உணர்ச்சிகளைத் தூண்டி மூக்கு வழி நுகர்ந்து
3.இந்த உணர்வு உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி அவருடைய நோயைக் குறைக்க உதவும்.
 
இதை அவர்கள் பின்பற்றினால் வளர முடியும்.
 
குருநாதர் காட்டிய வழியில் யாம் உங்களை ஆசிர்வதிக்கும் பொழுது உடனடியாக நோய் இறங்குகின்றது. அந்த அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் தீமை வராது தடுத்துக் கொள்ள முடியும். நமக்கு அந்தச் சக்தி உண்டு.
 
1.ஆகவே வேதனப்படுவோரிடம் துருவ நட்சத்திரத்தினைப் பற்றிச் சொல்லி…
2.அந்தச் சக்திகளை வர்களுக்குப் பாய்ச்சப்படும் போது அதைப் பெற்றுத் தீமைகளை அவரும் போக்க முடியும்.
 
அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம்.
 
ஒருவருக்கு மன நோயோ அல்லது கடுமையான உடல் நோயோ இருந்தால் கூட்டுத் தியானங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் ரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் பரவி… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற
1.இந்த உணர்வின் ஒலியை எழுப்பி செவி வழி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால் அதை நுகர்ந்து உயிரிலே பட்டு
3.உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து நல்ல அமிலங்களாக மாற்றப்பட்டு
4.அவர் உடலில் இருக்கக்கூடிய நோயை நீக்க இது உதவும்.
 
அவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்…! நாம் வெறுமனே சொன்னால் பொருள் இல்லை.
 
யாம் மற்றவருக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் போது பாருங்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் வேறு எண்ணத்தில் இருப்பார்கள்.
1.இப்போது உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கின்றதா…? என்று கேட்டால்
2.இல்லை…! என்று சொல்லிவிடுவார் ஒன்றுமே தெரியவில்லை தெரியவில்லை என்று சொல்வார்கள்.
 
காரணம்… சையின் நோக்கம் வேறு…! அதைக் கேட்கும் நிலை வேறு…!
 
ஆகவே து போன்ற நிலைகளை விடுத்து விட்டு சொல்லும் போது (காதிலே கேட்கும் போது) அந்த அருள் சக்திகளை எடுக்கப் பழகும் ஒரு பயிற்சிக்கு வர வேண்டும்….”
 
1.நோயால் வேதனைப்பட்டு அவர் சொல்லும் போது நாம் அதைக் கேட்டால்
2.அவருடைய வேதனை நம் உடலுக்குள் வருகின்றது… அதனின் வலிமை நமக்குள் செயல்படுகிறது,
 
இதைப் போன்று தான் வேதனைகளை நீக்கிய ஞானிகள் உணர்வை நாம் பெற்று… அதைச் சொல்லாக சொல்லி அவரைக் கேட்க வைத்தால் ந்த நோயை நம்மால் போக்க முடியும்.
 
தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைச் சீராகக் கடைப்பிடித்துச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

March 26, 2026

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்


எல்லாவற்றையும் உருவாக்கிய.. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளினால் தான் இயற்கையின் உண்மைகளை எல்லாம் நான் அறிந்து கொண்டேன்.
 
ஆகவே…
1.நாம் எல்லோரும் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும் அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்.
2.இந்தச் சொல் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும். அந்த அருள் உணர்வுகளை நாம் பெறுவோம்.
3.குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து நாம் இந்த வாழ்க்கையைக் கொண்டு சென்றோம் என்றால்
4.என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கிறோம்… இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.
5.நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழையைப் பெய்யச் செய்யலாம்.
6.கொடிய நோய்களையும் நாம் வாழும் இடங்களில் வராது தடுக்க முடியும்.
7.எத்தனையோ வகையான மற்ற தீமைகளை அகற்றும் சக்தி நாம் பெறுகின்றோம்.
 
பகைமை வந்தால் அதை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும். ஊரில் இருப்பவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். பகைமையற்ற நிலைகள் வரவேண்டும்.
 
1.எல்லா உயிரும் கடவுள்
2.எல்லா உடலும் கோவில்
3.எல்லா டலும் சிவம்
4.எல்லோருடைய கண்களும் கண்ணன்
5.எண்ணும் எண்ணம் இராமன்.
6.அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.
 
எண்ணங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் உணர்வாக வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம் வளர்வோம். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற இந்த உறுதியை எடுத்துக் கொள்வோம்…”
 
அந்த அருள் பெற வேண்டும் என்று வாழ்வோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம் குரு வழி வாழ்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பெறுவோம்.
 
அதன் வழி எல்லாம் ஒளி என்ற உணர்வுடன் ஒன்றுவோம். துருவ நட்சத்திரமாக ஆவோம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலங்களாக வளர்வோம். ஒன்றுடன் ஒன்று ஒன்று துணையாகித்தான் ஒன்றின் நிலை வளர்கின்றது.
 
விஜயதசமி…! விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த உயிர் பத்தாம் நிலை அடையக்கூடிய ஒளியின் சரீரமாகும். ஆகவே அருள் ஒளியைப் பெற்று என்றுமே நாம் பிறவில்லா நிலை அடைய பிரார்த்திப்போம். பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளியை நாம் அடைவோம்
 
1.உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்திற்கே இப்பொழுது அழைத்துச் சென்றது.
2.இந்த உணர்வை நீங்கள் அனைவரும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

March 16, 2026

இயற்கையின் மாற்றங்கள்… “வளர்ச்சிக்கு எப்படிச் செயல்படுகிறது…?”

இயற்கையின் மாற்றங்கள்… “வளர்ச்சிக்கு எப்படிச் செயல்படுகிறது…?”


நம் பூமியில் ஒவ்வொரு மரமும் செடியும் எதை எடுத்து உருவானதோ அதைத்தான் காற்றிலிருந்து எடுத்து வளர்கின்றது.
 
வேப்பமரம் அதன் சத்தை எடுக்கின்றது. அதிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அலைகளாகப் பர்கின்றது. இதே போன்று ரோஜாப்பூவின் மமும் விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணமும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாகப்டர்கின்றது.
 
ஆனால் இவைகள் ஒன்றுடன் ஒன்று சந்தித்து மோதும் பொழுது அந்த அளவுகோலுக்குத் தக்கப் புது வித்தாகிறது.
 
வேப்பமரம் 100% ரோஜாப்பூ 10% விஷச் செடியின் சத்து 1% எல்லாம் சேர்ந்து இரண்டு கலவைகளாகும் போது கருவேப்பிலையாகிறது.
1.அதற்கு நாதங்களைப் பற்றிக் குருநாதர் காட்டுகின்றார்.
2.மரம் ரிக். வேப்பமரத்தின்ம் சாம இசை. வேப்ப மரத்தின் மணத்தை நாம் நுகர்ந்தால் ஓய்…” என்று சப்தம் வருகின்றது வாந்தி வருகின்றது.
3.ரோஜாப் பூவின் த்தை நுகர்ந்தால் ஆகா..ஹா… என்று சொல்லி ஆனந்தப்படுகின்றோம்.
4.விஷச் செடியின்த்தை நுகர்ந்தால் உச்..உச்..உச்..உச்… என்று சொல்கின்றோம்.
5.அந்த இசைக்குத் தக்க உச்..உச்… என்பது இழுக்கக்கூடிய சக்தி அதிகமாகின்றது.
6.ஆனால் வேப்பமரம் உந்தித் தள்ளும் சக்தி அதிகமாக இருக்கின்றது.
7.ரோஜாவின் மணம் ஆகா… என்று சொன்னாலும் அதுவும் ழுக்கும் சக்தி பெறுகின்றது.
 
இது இரண்டும் விஷச் செடியின் மத்தை எடுத்த பின் உச்..உச்… என்கிற பொழுது இந்த மங்களைச் சேர்த்துச் “சுழலின் தன்மைக்கு வருகின்றது.
 
சுழலின் தன்மை வந்த பின் வேம்பின் சத்தைச் சேர்க்கின்றது. மூன்றும் ஒன்றாக இணைகிறது. இணைந்து கொண்ட பின் கருவேப்பிலையாக மாறுகின்றது.
 
செடி கொடிகளில் இப்படி மாற்றங்கள் ஆகி வளர்ச்சிக்கு வருகின்றது.
 
அதே போல் உயிரணு தோன்றிய நிலையில் மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விதமான உணர்வை எடுத்து உயிருக்கு தக்க உனர்வுகள் எடுத்து ரூபங்கள் மாறி வந்தது.
 
முதலில் சொன்ன மாதிரி கருவேப்பிலையாக எப்படி மாறியது…?
1.கசப்பு நல்ல மம் அந்த அரிப்பு… மூன்றும் சேர்ந்து அது உருவாகின்றது.
2.கருவேப்பிலையைத் தேய்த்தால் அரிப்பு வரும்.
3.ஆனால் மற்றொன்றுடன் சேர்த்தபின் ருசி வருகின்றது என்பதை உணர்த்துகின்றார் குருநாதர்.
 
இதே போல் தான் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரும் சத்தினைக் கோள்களும் சூரியனும் கவர்ந்து அதனுடைய கலவைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்…”
 
மலை உச்சிக்கு அழைத்துச் சென்று எத்தகைய மறைப்பில்லாத இடத்தில் வைத்து அதைக் காட்டுகின்றார். யாம் கண்டது அனைத்தும் நீங்களும் காண முடியும் அறிய முடியும்…! வரிசைப்படுத்தி எடுத்து வளர்த்துக் கொண்டால்…!

January 28, 2026

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்


நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் நடக்கின்றது. நான் போனேன் போகும் போது “அந்த இடத்தில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
 
உடனே…! என்று அதிர்ச்சியோடு நாம் கேட்போம். இந்த உணர்வுகள் நமக்குள் பப்பட்டு
1.“அவர் எந்த வகையில் அந்த விபத்து ஏற்பட்டது…” என்று சொன்னாரோ
2.தே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம்மை அறியாமல் அது இயக்கும்.
3.ரோட்டில் நடந்து சென்றால் அறியாமலே நம்மை நடுரோட்டிற்கு அழைத்துச் சென்று விடும் ஓரத்தில் ஒதுங்கிச் சென்றாலும் கூட…!
 
ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாதபடியே இவ்வாறு அழைத்துச் சென்று விடும்.
 
இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் பெற வேண்டும்…” என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழக வேண்டும்.
 
ஏனென்றால் நல்ல குணத்துடன் நாம் பார்க்கும் பொழுது தான் பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.
 
மனக் கவலையும் மனக் குழப்பமும் இனி எப்படி வாழ்வது…? என்ற நிலைகளில் பல திசைகளுக்கு நம்மை ஆளாக்கி விடுகின்றது.
 
ஆனால் உடனடியாக நாம் ஆத்ம சுத்தி செய்தோம் என்றால்
1.ந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொண்டே இருக்கின்றோம்.
2.அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.
 
இது ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் அத்தகைய அணுக்கள் நமக்குள் வளர்ந்து விட்டால் நம்மை அறியாமலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சொல் வரும்…”
 
உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டே இருக்கின்றோம். அது ஆழமாகப் பதிவாகி விட்டால் பாடல் தொடர்ச்சியாக சரியாக வரும்.
 
ஆனால் பாடிக் கொண்டிருந்தாலும் டைமறித்து அதிலே ஒன்றை தனியாகச் சொல்ல வேண்டும் என்று குறுக்காட்டினால் இரண்டாவது தடவை அது சரியாக நினைவுக்கு வராது.
 
மீண்டும் முதலில் இருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.
 
ஏனென்றால்
1.வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது அதனுடைய தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கிவிட்டால் அந்த நினைவு நமக்குள் வராது.
3.காரணம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அடுத்தடுத்து அந்த அடுக்குகளிலேயே அது வருகின்றது.
 
இதனால்தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. சந்தர்ப்பத்தால் நாம் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி விழித்திருந்து பழகுதல் வேண்டும்.
 
இதைத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.
 
பிறருடைய கஷ்டங்களும் நஷ்டங்களும் எப்பொழுது பார்த்தாலும்
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.நம் நல்ல குணங்களை வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

December 18, 2025

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்


ஒரு வித்து முளைத்து அதனுடைய நுனி வெளி வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும் எடுக்காது தொடரையும் எடுக்காது.
 
இதைப் போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள் ணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த முடியும்.  
 
ஏனென்றால்
1.வாழ்க்கையில் டைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக ஆக்கும்
2.அது போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 
தொழிற்சாலைகளில் பிட்டர்களை (FITTER) வைத்திருப்பார்கள்.
 
தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் பிட்டர் வந்து அதை சரி செய்து தருவார் இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!
 
அதைப் போன்று தான் அந்த ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.
 
அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ட்டும்.
 
நம்மை உருவாக்கக்கூடிய சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.
 
தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் ங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.
 
அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது
 
குறைகள் என்று வந்துவிட்டால்
1.“சாமி சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான் மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது நினைவுபடுத்துவது நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்து.
 
அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச் சீர்படுத்தும் சக்தியாக வரும்.
 
அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
இயந்திரம் கோளாறாகிய பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம் ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.
 
ஆகவே உங்களுக்குள் அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை பதிவாக்குகின்றேன்.
 
அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த உணர்வு உங்களுக்குள் ஞானமாக இக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை அறியாது வரும் இருளைப் போக்க வழி வகுக்கும்.
 
அதற்குத்தான் இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.
 
அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.

October 7, 2025

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்


1.பிற மண்டலங்களிலிருந்து (2000 சூரியக் குடும்பம்) வரும் சக்திகளை நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள் தான் கவருவதும்
2.நட்சத்திரங்களிலிருந்து துகள்களாக மாறுவதும் பிரபஞ்சத்தில் பரவுவதும் கோள்கள் கவர்வதும் அதிலிருந்து வருவதைச் சூரியன் ஈர்ப்பதும்
3.வான்வீதியின் உணர்வுகளை வான மண்டலத்தின் அதிசயங்களை உங்களுக்குள் நுகரும் ஆற்றலாக அறிந்து
4.இதைப் புலறிவுகளில் காட்சிகளாகக் காண முடியும்.
 
அதிலிருந்து வரும் பல வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல வகையாக அவை மாறிக் கொண்டே இருப்பதையும் காணலாம்.
 
கேது:-
நட்சத்திரத்திங்களுக்கு அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை எவ்வாறு கவர்கின்றது…? என்பதையும் விஷமான அணுக்கள் மோதும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் ஊடுருவி மின்னல்கள் தாக்குவது போன்று ஒளிக் கதிர்களாக ஊடுருவிப் பாய்வதைக் காணலாம்.
 
இராகு:-
கேதுவின் அருகிலே இருக்கும் ராகுக் கோள் இந்த விஷத்தின் தன்மை வான் வீதியின் ஒளித் தன்மையைத் தனக்குள் கவர்ந்தாலும் அந்த விஷத் தன்மை தாக்கப்படும் போது கரும் நீமாக…”து உருமாறுவதைக் காணலாம்.
 
சனி:-
இதனின் தாக்குதலில் மற்ற நட்சத்திரங்களில் வரும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று பல பொறிகளாக மாறி மோதலில்வியாக மாறுவதும் டையற்ற நிலையில் மாறுவதை உறைனியாக சனிக்கோள் தனக்குள் எடுத்து உறை வட்டங்களாக மாற்றிக் கொள்கின்றது.
 
எப்படி மலைப் பிரதேசங்களில் உறைனியாக மாற்றுவது போன்று தன்னுடைய சுழற்சி வட்டத்தில் உறைவிடமாக மாறுகின்றதுது தான் “சனியின் வளையங்கள்…” என்று சொல்வது. அவைகள் மீண்டும் கரைந்து இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது
 
வியாழன்:-
மின் அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து அதைச் சனிக்கோள் தனக்குள் எடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடியதையும் மற்ற விஷத்தின் தன்மை தனக்குள் கவர்வதும் அதை வியாழன் கோள் கவர்ந்து அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்வதும் மின்னலின் கதிர்களைக் கதிரியக்கப் பொறியாக…” வியாழன் மாற்றுவதையும் காணலாம்.
 
வெள்ளி:-
மின் அணுவின் தன்மை தனித்தன்மையாக ஆன பின் அந்த ஒளி அலைகளை வெள்ளிக் கோள் தனக்குள் கவர்ந்து “மிகச் சக்தி வாய்ந்த ஒளியின் சுடர்களாக…” வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம்.
 
புதன்:-
சூரியன் அருகில் இருக்கும் புதன் கோள் சூரியனின் எதிர்நிலை கொண்ட தாக்குதலால் அதைக் கவரும் புதன் கோள் ஒரு பகுதி வெப்பமும் தான் பிரபஞ்சத்தில் ஈர்க்கும் மற்ற நிலையில் லோகத் தன்மையாக மாற்றிக் கொண்டிருப்பதையும்…” காணலாம்.
 
செவ்வாய்:-
உலோகத் தன்மை வாய்ந்த்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது சூரியனின் ளிக்கதிர்கள் வரப்படும் பொழுது அதனின் காந்தப்புலனறிவு இதனுடன் மோதுண்டு பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும் அதைச் செவ்வாய்க் கோள் கவர்ந்து ஓசைகள்…” வருவதைக் காணலாம்.
 
அதனுடன் மோதப்படும் பொழுது அந்த ஒலிகள் எழுப்புவதைக் காணலாம். ஒன்றுடன் ஒன்று மோதும் போது சிகப்பு நிறமாக…” அந்தக் கோள் காணப்படும். ஒன்றுடன் ஒன்று மாறி புகை மண்டலமாகவும் மற்ற நிலை வரும் போது  ஒளியின் தன்மைக்குள் சிகப்பு நிறமாகத் தோற்றுவிக்கும்.
 
திங்கள்:-
இவை பிரபஞ்சத்தில் கலந்து பரவிக் கொண்டிருப்பதை நமது பூமி தனது ஈர்ப்பில் வரப்படும் பொழுது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் திங்கள் தனக்குள் கவர்ந்து கொண்டிருப்பதையும் அதிலே மிதப்பதையும் அது கவரப்படும் பொழுது திங்கள் கோளில் தூசிகளாகப் படர்வதைக் காணலாம்.
 
பூமி:-
மற்றவை அனைத்தும் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்து உள்ளே ஈர்க்கும் பொழுது கோழி முட்டை வடிவில் உருண்ட நிலையாகவும் நீண்ட நிலைகளாக “நம் பூமி சுழல்வதைக் காணலாம்…”
1.துருவப் பகுதியில் ஈர்க்கும் தன்மையை
2.நாம் இருக்கும் எல்லையிலிருந்தே அதைக் காண முடியும்.
 
வியாழன் கோள் தான் பெருகுவதற்கு அதன் உபகோள்கள் அது எவ்வாறு கவருகின்றது…? அதிலிருந்து உமிழ்த்தும் தூசிகள் வியாழன் கோளைச் சுற்றிப்டர்வதும் அது நுகர்வதும் தனக்குள் மாற்றம் ஆவதும்… அந்தற்புத நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.
 
அதே போல் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்த்தில் உபகோள்கள் வளர்வதும் அது கவர்ந்து தூசிகளாக வெளிப்படுவதை… அவை உமிழ்த்தும் உணர்வுகளைச் செவ்வாய்க் கோள் தனக்குள் எடுத்து மற்ற கலர்கள் ஆவதையும் காணலாம்.
 
வான மண்டலத்தில் பல பல நிறங்களும் அணுக்கள் மாற்றமாகி அகண்டு செல்வதும் அது ஒவ்வொன்றும் பரவி அந்த நிறங்கள் மாறிக் கொண்டே செல்வதைக் காணலாம்.
 
1.நம் பூமியின் துருவத்தின் வழி வரக்கூடியதைத்
2.துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளி அலைகளாக மாற்றுவதைக் காணலாம்…”
 
நம் பூமிக்குள் பரவி வருவதை பூமியின் பரப்புகளில் தூசிகளாகப் பரவுவதும் பூமிக்குள் ஊடுருவி பூமியின் வெப்பத் தணல் கூடுவதும் கலர்கள் மாற்றமடைவதையும்
1.அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளை உங்கள் நினைவாற்றல் கொண்டு பூமியின் நடு மையத்தையும்…” நீங்கள் உணரலாம்.
2.அங்கே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.
 
அண்டத்தில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் இந்தப் பிண்டத்திற்குள் உணர்வின் நிறங்கள் மாறிச் சுவாசத்திற்குள் சென்று ஒவ்வொரு உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் பரவி அதன் நிலைகள் பூமிக்குள் எவ்வாறு மாற்றம் அடைகின்றதோ உடலுக்குள்ளும் அந்த அணுக்கள் கவர்ந்து அதன் வளர்ச்சியின் தன்மை எதுவோ… உடலுக்குள் பல வர்ணங்கள் மாறுவதும் பல வண்ணம் கொண்ட உணர்வுகளை எடுப்பதையும்…” காணலாம்.
 
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்வதைப் பார்க்கலாம்.
2.அந்த உணர்ச்சிகள்… உதாரணமாக குருவிக் குஞ்சுகள் அது எப்படி உணவுக்காக ங்குகின்றதோ…?
3.அதனுடைய துடிப்பின் உணர்வுகள் எப்படி வருகின்றதோ தைப் போன்று
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டி
4.அது பெறும் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உணரலாம்.
 
துருவ நட்சத்திரத்தின் ணர்வுளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்படும் பொழுது மெர்குரி போன்று…” உங்கள் உணர்வுகள் மகிழ்ச்சி பொங்கும் தன்மையை ஈர்த்து உங்கள் உடலுக்குள் ஒளியின் தன்மை அடைவதை உணரலாம்.
 
ஒவ்வொரு அணுக்களிலும் இதனுடைய மாற்றங்கள் ஆவதை நீங்கள் காணலாம்.
 
இப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
1.உங்களை அறியாது சேர்ந்த விஷத்தன்மை கொண்ட அணுத்தன்மைகள் மறைவதும்
2.உடல் நோய்… அந்த விஷத்தன்மை ஆவியாக மாறுவதையும்… உடல் இலகுவாகுவதையும் உணரலாம்.
 
இப்பொழுது உங்கள் நினைவினைப் பிற மண்டலங்களிலிருந்து கவரும் 27 நட்சத்திரங்களுடன் இணைத்து அங்கே உங்கள் நினைவாற்றலைச் செலுத்துங்கள்…”
 
வாமண்டலத்தில் பல வர்ணங்கள் மாறி மாறி மாற்றம் அடைந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள்.
1.அவை நம் துருவப் பகுதிக்கு வரப்படும் பொழுது
2.துரு நட்சத்திரம் அதைக் கவர்ந்து அதை எவ்வாறு ஒளியாக மாற்றுகிறது…? என்ற நிலையினை உங்களால் உணர முடியும்
3.அதிலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதையும் காணலாம்.
 
இவை அனைத்தையும்
1.உங்கள் புருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி அதன் வழி தான் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புதல் வேண்டும்.
2.அதன் வழி தான் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற வேண்டும்.
 
நம் பூமிக்கு வருவதை டைமறித்து
1.துருவ நட்சத்திரத்தின் ர்ப்பு வட்டத்தில் அதனுடைய மாற்றங்களை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது…? என்ற நிலையை நீங்களும் உணர்ந்து
2.உங்கள் உடலுக்குள் அதைப் பெறும் சந்தர்ப்பமும் இப்பொழுது கிடைக்கின்றது.
 
அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி ஒவ்வொரு அணுக்களிலும் அது படர்ந்து மகரிஷிகளின் அருள் ஒளியைக் காணும் திறன் பெறுவீர்கள்…” இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வுகள் உங்கள் உடலிலே விளையும்.