ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. Show all posts
Showing posts with label நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. Show all posts

February 24, 2025

காற்றோலம்… வாயோலம்…!

காற்றோலம்… வாயோலம்…!


காற்றோலம் வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.
 
காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் ன்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது அலை கடலெனப் பொங்கி நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.
 
அதே போன்று மனிதனின் வாய் ஓலம் அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.
 
நீரின் கரைகள் உடையாது இருக்க அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல் என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல் எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.
 
மரத்திலே காயும் உண்டு கனியும் உண்டு அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே வேதாள மகரிஷியின் நிலை…”
 
1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”
 
ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.
 
சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!

January 18, 2025

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற விஷஜந்துக்களும் உள்ளிட்ட சாகரம் தான் மனித வாழ்க்கை நிலை

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற விஷஜந்துக்களும் உள்ளிட்ட சாகரம் தான் மனித வாழ்க்கை நிலை


உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் ஈஸ்வர அனுபூதியால் பெற்று வளர்த்துக் கொண்டிட்தனித்துவ மெய்ஞானச் சுடராக
3.மற்றவர்களுக்கு வழி காட்டிடவும் வேண்டும்.
 
பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?
 
ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.
 
1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய் நினைக்கின்ற மனிதன் பித்து நிலை பெற்றவனப்பா…”
 
அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.
 
தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!
 
வள்ளுவச் சித்தன் உரையே பிறவிப் பெருங்கடல் அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.
 
நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.
 
நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும் நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (தி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”
 
உவர் அமிலம் என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.
 
திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராகச் செயலுறுங்கால் ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்ர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.

December 14, 2024

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது

சூரியனின் சக்தியை எடுத்துத் தான் தாவரங்கள் செழித்து வளர்கின்றது


ஜீவ ஜெந்துக்களுக்குத்தான் உண்டு கழிக்கும் குணமுண்டு. இயற்கைக்கு ஜீவன்களைப்போல் உண்டு கழிக்கும் தன்மையில்லை.
1.எல்லாத் தாவரங்களுமே அதற்குகந்த வளர்ச்சிக்கு வேண்டிய சத்தை மட்டும் சூரியனிலிருந்து நேராக எடுத்து வாழ்கின்றன
2.ஆனால் தாவரங்கள் பிறகுதான் ஜீவசக்தி பெறுகின்றன.
       
எல்லா மண்டலங்களின் சுழற்சியின் கூட்டுடன் சூரியனின் ஒளி அலையை அமிலத் தன்மையைப் பெறும் ஆரம்ப உயிரணு திடமாய் இப்பூமியின் ஈர்ப்பில் படர்ந்து தாவரமாய் வேர் ஊன்றி அதன் தன்மை மாறுபட்டு ஆவியாய் அமிலம் பெற்று மீண்டும் மீண்டும் அதன் வளர்ச்சி நிலை சுழற்சியில் ஏற்படும் உயிரணுக்கள் அதன் சக்தியைக் கொண்டு பூமியின் ஈர்ப்பிற்குச் செல்ல முடியாமல் மற்ற ஜீவனின் கர்ப்ப நிலையில் உண்டு கழிக்கும் வளர்ச்சிக்குகந்த ஜீவிதத்திற்குத்தான் வருகிறது.
 
இடியிலும் மின்னலிலும் ஏற்படும் அதிர்வினால் பூமியின் ஈர்ப்புத் தன்மையில் வான மண்டலத்திலுள்ள அமில குணங்கள் படர்ந்து காளானாய் புல் பூண்டாய் இன்னும் எப்பலனும் தராத பல தாவர வர்க்கங்களாய் வளர்கிறது.
 
அதற்குப் பிறகு அதன் நிலை
1.மாறு கொண்ட அமில குணங்களினால் வளரும் தாவரத்தில் இருந்து புஷ்பம் தரவல்ல நிலை பெற்று
2.அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தின் நிலை மீண்டும் வளர்ச்சியுற்றுப் பல பலன் தரத்தக்கக் கனி மரங்களாகின்றன.
 
பல தாவரங்கள் எப்பலனும் தராத நிலையில் இவற்றின் வளர்ச்சியினால் எப்பலன் நாம் பெறுகின்றோம் என்று எண்ணுகின்றோம். ஒன்றிலிருந்து ஒன்றாகத் தான் வளர்ச்சி நிலை கூடி ஜீவஜெந்து வந்து மீண்டும் தாவரங்களின் நிலையிலிருந்தே நம் ஜீவனுக்கு உணவாகவும் எடுத்துக் கொள்கின்றோம்.
 
காளானாய் புல்லாகி, பூண்டாகி, பூவாகி, கனியாகி ஜீவன் பெற்ற நாம் மீண்டும் நம் ஜீவனுக்கு அதையே உணவாக உண்டு கழித்து அக்கழிவினால் பல வித இன வர்க்கங்கள் புழுவாய், வண்டுகளாய், கொசுக்களாய் வளர்கிது.
 
இவற்றின் தொடர் வட்ட வளர்ச்சியில் மாற்ற குணங்கள் பல ஏற்பட்டு ஏற்பட்டு ஒன்றிலிருந்து ஒன்றாகி இச்சுழற்சி வட்டத்தில் எண்ணிலடங்கா சக்தியுடன் வாழும் நாம் நமக்கு இச்சக்தியை அளித்துள்ள சூரியனின் ஒளி அலையை நம் சுவாசத்துடன் எடுக்கும் எண்ணம் கொண்டு ஈர்த்து வாழும் வழி பெற்றால் நம் சக்தியின் நிலை‌ கூடும்.
 
இல்லங்களில் இருந்து கொண்டும் தன்னிச்சையில் வாழும் பொழுதும் சூரியனின் ஒளி அலை ஒன்றின் மேல் பட்டு அது வெளிப்படுத்தும் எதிரலையில் வாழும் நாம் எல்லாமில் எல்லாமுமாக வளர்க்கும் சூரியனின் ஒளி அலையை நாம் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசத்தில் ஈர்த்து நல் சக்தியை நமதாகப் பெறும் சக்தியை எடுக்கலாம்

November 27, 2024

“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்

“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்


ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத் தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில் அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.
 
ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்களுண்டு. இவ்வமில குணத்தை எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ அதிலிருந்தே இப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர் ஆத்மாவும் அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.
 
1.ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப் பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்
2.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும் வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
3.தனக்குள் உள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.
 
மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற பிறகு தான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.
 
இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எரு மற்றொரு தாவரம் ஏற்பதில்லையோ அதைப் போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் ஒவ்வோர் இன வளர்ச்சியும் வளர்கின்றது.
 
இப் 12 வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப் பெறுகின்றது. இம்மனித உருவில் அக்குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித் தொடரிலேயே செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடி விடுகிறது. அதன் தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக்கூடிய சக்தி ஆற்றல் உண்டு.
 
1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல் ஆத்மாக்கள்
2.இவ் ஏழு ஜென்மத்திற்குள் இப் 12 வகையின் குண அமிலத்தை உரமாக்கிச் சூட்சுமம் கொண்டு
3.என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.
 
இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து கரை சேராத நிலையில் உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின் சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.
 
மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு அடுத்த வளர்ச்சியில் அதி விரைவில் மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.
 
சில ஆத்மாக்களின் நிலையில் இவ் 7 ஜென்மத்திற்கு செல்வதற்குள்ளேயே தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராதபடி பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு அவ்ஆத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி வட்டத்திலும் மனித இனம் பெற வேண்டிய இப் 12 வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள் சென்று விடுகின்றன.
 
இம்மனித ஆன்மாக்களுக்கு மனிதனாக வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை உணராமல் தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?
 
இப் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா. மனித உருப் பெறவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.
 
பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப் போல் அறிவு வளர்ச்சியுற்ற செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை. நாம் எதனை உணர்ந்தோம்…?
1.இன்று இருக்கும் நிலை நாளை இல்லை
2.நேற்று நடந்த நிலை இன்று கனவு தான்
3.இன்றைய நடைமுறை நாளைய கனவு என்பதையே மறந்து
4.நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி கால வெள்ளத்தை விரயம் செய்து
5.வீண் சஞ்சலமான வட்டத்திற்குள் நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலை தான் இன்று நாம் வாழ்ந்திடும் நிலை.
 
சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் வாய்ந்த மரமாய் தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ இதைப் போல் நம் ஆத்மாவை வைரம் வாய்ந்த ஞான வட்டத்தின் சுழற்சியாக்கி…” அச்சழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் வழித் தொடரில் செல்ல வேண்டும்.
 
அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்று விட்டால் அதன் தொடரில் பல சக்தி நிலையை நாம் உணரலாம். அவ்உணர்வின் சக்தியை உண்மையாக்கித்
1.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
2.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ் ஆனந்தத்தில் தான் அகிலமே கலந்துள்ளது.
 
இந்நிலையில் தான் பெற்ற நிலையைச் சிதறவிட்ட ஆன்மாக்களும் பல உண்டு. நான் என்ற நிலை ஏற்பட்டு பெற்ற சக்தியை நானாக்கிக் காட்டினால் அச்சக்தி நிலைத்திடுமா…?
 
ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன. பல காலம் சேமித்த ஞான சக்தியையே நான் எந்த நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.
 
சிதறவிட்ட பிறகு அவ்ஆத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன் கீழ் நிலைக்குத்தான் திரும்பவும் சென்று விடுகின்றன.

November 10, 2024

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்


இந்நூலின் வாயிலாய் இப்பாட நிலை புகட்டிய நாள் தொட்டே யான் உணர்த்திய உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான் மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.
 
இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றில் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியில் இருந்து
1.இச் சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் அன்பெனும் ஆயுதத்தினால் தான் செயல்படும்.
2.இவ் அன்பினாலே தான் எச்செயலையும் நிலை நாட்ட முடியும். அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாகி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.
 
நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல் கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும். நாம் அன்பு செலுத்துகின்றோமே அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.
 
பிறரின் அன்பிற்காக ஏங்காதீர். நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும். பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்.
 
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்…' என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைபிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.
 
மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத் தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவினையும் எழுப்புகின்றனர்.
 
எம்மதமாயினும் எச்செயலாயினும் அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான் சிறந்த மதம்‌.
 
இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும்தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல் கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.
 
ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகள் உண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர்அவரவர்கள் மதம் சிறந்தது என்று.
 
எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.
 
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழிமுறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.
 
இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர்.
 
இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படிஅவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறு கொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல்அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.
 
கிறிஸ்து மதத்தில் பரம பிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித் தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்தி விட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.
 
நம் இந்து மத வழிபாட்டில் தான் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி, ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும் முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்இந்து மதச் சட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றோம்.
 
தன் செயலுக்குகந்த சாதகப்படி நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால் மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதகப்படுத்தி நமக்குகந்த சத்திய நிலையைக் காலப் போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.
 
இந்து மதத்தின் பிறப்பு நிலை அறிந்தார் இல்லை. ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானது தான் கிறிஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.
 
1.இந்து மதத்தின் நெறிமுறை என்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்று இல்லை
2.இந்து மதத்தின் நிலையிலிருந்து தான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள்.
3.ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.
 
மதங்களில் சிறந்தது எது…? என்பதை எம்மதமாயினும் அச்சத்தியை நியதியைக் கடைபிடித்துச் செயல்படுமாயின் அதுவே சிறந்தது…!
 
மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே எண்ணத்தை அடிமை கொள்ளாமல் எல்லாம் ஒன்றே ஒருவனே தேவன் அத் தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

October 22, 2024

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்

பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்லவும் முடியும்


சூரிய மண்டலத்திற்குச் சென்றிட முடியாது. உஷ்ணக் கோளம் என்று விஞ்ஞானத்தில் உணர்த்துகின்றனர்.
 
சூரியனின் கோளம் பெரியது. அதில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையும் எம் மோதும் அமிலத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை உடையது. உருவ நிலையிலும் வளர்ந்து கொண்டே சுழன்று ஓடும் பெரிய மண்டலமாம் நம் சூரிய மண்டலம்.
 
முந்தைய ஆராய்ச்சியில் சூரியன் மையம் கொண்டு ஒரே இடத்தில் சுழன்று கொண்டுள்ளதாகவும் அதனைச் சுற்றியுள்ள சூரியக் குழந்தைகள் தான் அதனைச் சுற்றி ஓடுவதாகவும் உணர்த்தினர்.
 
சூரியனின் யாம் அறிந்த உண்மை நிலை
1.அது தன்னைத்தானே சுற்றி ஓடிக்கொண்டு அதன் ஈர்ப்பில் உள்ள இந்த 47 மண்டலங்களையும் தன்னுடனே தன் ஈர்ப்பில் 
2.அது அது சுழன்று கொண்டும் ஓடிக்கொண்டே உள்ளன.
3.இவ்வண்டமும் மற்ற எல்லா அண்டங்களுமே ஓடிக்கொண்டே தான் உள்ளன. எதுவும் நிற்பதில்லை
 
ஒரு நிலையில். ஜீவன் பெற்று திடப்பொருள் கொண்ட பிறகுதான் ஓடும் நிலை ஒவ்வொன்றிற்கும் வருகின்றது.
 
இம்மனித மண்டலமே ஓடிக்கொண்டே தான் உள்ளது. பிம்ப உடல்தான் ஒரு நிலையில் எண்ணம் கொண்டு செயல் கொள்கின்றது. மனித மண்டலத்திற்குள்ள எல்லா அவயங்களுமே தன்னிச்சை நிலையில் செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளன.
 
இதே போல் ஜீவனுள்ள எல்லா ஜீவராசிகளும் மண், கல், நீர் அனைத்திற்கும் ஜீவத் துடிப்பின் ஓட்டம் இருந்து கொண்டே உள்ளது.
 
பல பல ஆராய்ச்சிகளைச் செய்விக்கின்றனர். மனிதனுக்கும் ஜீவராசிகளுக்கும் உயிர்த்துடிப்பு நிலையை உணருகின்றனர்.
1.ஆனால் கல்லிற்கும் மண்ணிற்கும் உயிர்த்துடிப்பும் ஜீவன் உண்டு.
2.ஜீவன் இல்லாவிட்டால் கல்லிற்கும் மண்ணிற்கும் வளர்ச்சி இல்லை.
3.அததற்குகந்த உஷ்ண அலையும் உண்டு.
 
மண்ணாய் உள்ள நிலையிலிருந்து மணலாகி, உருண்டு கல்லாகி, பெரும் பாறையாய் உருப் பெறுகிறது. அந்தந்தப் பூமியின் நிலைக்கொப்ப மண்ணின் நிறங்கள் மாற்றம் கொள்கிறது அல்லவா…?
 
நீர் நிலைகள் பாய்ந்து வரும் வேகத்தில் எவ்விடத்தில் அந்நதி உற்பத்தியாய் பாய்ந்து வந்தாலும் அந்தந்த நிலைக்கொப்ப பூமியின் மேல் படும்பொழுது இப்பூமியின் சுவை குணத்தை ஈர்த்தே ஓடுகிறது. இந்நீருக்கு ஜீவன் பூமியின் நிலையில் இருந்து பெற்ற ஓடுகிறது.
 
நம் பூமியிலேயே பல பாகத்தில் பல நிலைகள் உண்டு. ஒன்றின் கலப்புடன்தான் தொடர்நிலை கொண்ட அமில சக்தியை வளர்த்த நிலை கொண்டு வாழ்கின்றது நம் பூமியே.
 
1.நம் பூமியிலிருந்து வெளிப்படும் மணம் ரம்மியமான ஆனந்தமான மணமாய்ப் பரிமளித்த காலம் ஒன்றிருந்தது.
2.இன்று நம் பூமியின் மணமே மாறு கொண்டு விட்டது.
3.இந்நிலையில் விஷத்தன்மை பரவிடும் நிலையும் வந்துள்ளது.
4.பல காலம் வாழ்ந்த பெரியோர்கள் இம் மணத்தின் மாறுபட்ட நிலையை அறிவர்.
 
நம் பூமியில் உறையும் தன்மை உப்புக் கலந்ததாய் உள்ளதினால் கரையும் நிலையும் துரிதமாய்ச் செயல் கொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரியனின் சக்தி மிகவும் அதிகம் கொண்டது.
 
சூரியனின் நிலைத்தன்மையை முன் பாடத்திலேயே உணர்த்தியுள்ளேன்.
 
1.இன்று சூரியனுக்குச் செல்லவும் முடியும்
2.சூட்சுமத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்தாலும் சூரியனுக்குச் சென்றிடலாம்.
 
நம் பூமிக்கும் நம் பூமியைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரனுக்கும் உஷ்ண அலையை ஆராய்ந்து நம் பூமியிலிருந்து காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலைப் பகுதியைத் தாண்டி அதைப் போலவே சந்திரனுக்குச் செல்லும் ஏவுகணையை அனுப்பி உள்ளார்கள்‌‌.
 
நம் பூமியில் இருந்து இக்காற்று மண்டலத்தைத் தாண்டி உஷ்ண அலை மண்டலத்தைத் தாண்டி பிறகு இவர்களுக்கு வேறு செலவினங்கள் இல்லாமல் எவ்அலையை வைத்து சந்திரனின் உஷ்ண அலை வரை தானாகவே இவ் ஏவுகணை ஓடுகின்றது…?
 
1.இவ் உஷ்ண அலை மண்டலம் (சந்திரனுக்குச் சொந்தமானது) வந்த பிறகுதான்
2.இவர்கள் ஏவுகணையை இயக்கச் செய்யும் சாதனத்தின் ஜீவன் செயல்திறன் கொள்கின்றது.
 
பொதுவானது பால்வெளி மண்டலத்தின் உஷ்ண அலை. இந்நிலை இருக்க நம் பூமியிலிருந்து சந்திரனுக்கு ஏவுகணையை அனுப்பியவர்கள்நம் சூரிய மண்டலத்திற்கு நமக்கு அருகாமையில் உள்ள அந்த மண்டலத்திற்கு அருகில் சென்று இவர்கள் விஞ்ஞானத்தை ஏன் செயலாக்கவில்லை…?
 
சூரியன் நம் பூமியைக் காட்டிலும் இரண்டு மடங்கு சுழற்சி சக்தி கொண்டது. இங்கு ஒரு நாள் 24 மணி நேரம்; அங்கு 12 மணி நேர விகித நிலையில் தன்னைத்தானே சுழன்று ஓடுகிறது.
 
விகித நிலை என்பது கூட அதன் சுழலும் சக்தி கொண்டு யாம் அறிந்த நிலை தானே ஒழிய அதற்கு இரவு பகல் என்ற மாறுபட்ட நிலை இல்லை.
 
அதைச் சுற்றி ஓடும் 47 மண்டலங்களின் ஈர்ப்பின் சக்தியையும் தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்திச் சுழன்றிடும் நிலையில் அதன் உஷ்ண அலையின் (47 மண்டலங்களின்) நிலை பெற்றுச் சுழலுகின்றது.
 
இந்த 47 மண்டலமுமே சூரியனைச் சுற்றி வட்டமாய்த் துரித கதியில் ஓடவில்லை. இவற்றிலுமே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று பங்கு பெற்று அச்சக்தியின் அமிலத் தொடர் அதற்குச் சென்றடைகிறது.
 
உதாரணமாய்:-
இங்கு இந்நிலையில் காட்டியுள்ள நிலைப்படுத்தி இம்மண்டலங்களின் தன்மை உள்ளது. இதற்கும் தாண்டிய நிலையில் இவ் ஆறு மண்டலம் அல்லாமல் 48 மண்டலத்திலேயே பாக்கியுள்ள மண்டலங்கள் இதற்கும் சிறியவை…. உஷ்ண அலைகளைக் குறைவாய் பெற்றுள்ள மண்டலங்கள்.
 
இவர்கள் நாமகரணத்தில் உள்ள சனி மண்டலத்திற்குக் குளிரும் நிலை அதிகம். உறையும் தன்மை கொண்ட அமிலத்தை வளர்த்துள்ள மண்டலம் சனி மண்டலம்.
 
சனியின் நிலையில் இவ்வமில சக்தி நிறைந்துள்ளதினால் அது சுழலும் நிலை கொண்டு அதன் பக்கத்திற்கு இப் பெரிய மண்டலம் செல்லும் காலங்களில் அதன் அமில நிலையின் சக்தி இவற்றிற்கு அதிகமாய்க் கிடைக்கின்றது.
 
நம் பூமியில் இக்கால நிலை மாற்றம் கொண்டு
1.கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாய்க் கிடைக்கப் பெறுவதும்
2.நம் பூமி சனியின் கோளத்திற்கு அதன் ஈர்ப்பின் நிலையில் வரும் கால நிலையில்தான் இக்குளிர் அமில சக்தியும் நம் பூமிக்கும் கூடுகின்றது.
 
இதைப்போல் தான்
1.பங்குனி, சித்திரை மாதங்களில் கடும் வெயிலைக் காணுகின்றோம்.
2.சூரியனின் உஷ்ண அலையுடன் நமக்கு அருகாமையில் நம் பூமியின் ஈர்ப்பிற்கு ராகுவின் நிலைக்குச் செல்கின்றது.
 
ஒரு வருடத்திற்குள் சூரியனை மையப்படுத்தி ஓடிடும் நிலையில் நம் மண்டலத்துடன் ஈர்ப்பிற்கு வரும் இந்த 48 மண்டலங்களின் தொடர்பைக் கொண்டு நம் பூமிக்குக் காலநிலை உருவாகிறது.
 
அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்திற்குமே இக்கால நிலையும் செயல்படுகின்றது.

October 16, 2024

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை

உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை


இவ்வுலகமே
1.இக்காற்றுடன் பால்வெளி மண்டலத்தில் உள்ள அமில சக்தியையும்
2.இப்பூமியின் மேல் மட்டத்தில் இப்பூமி சுழலும் வேகத்தில் அதன் ஈர்ப்பில் சூரியனிலிருந்து வெளிப்படும் அமில சக்தியையும்
3.மற்ற மண்டலங்களின் சக்தியையும் தன் சுவாசமுடன் உணவாய் ஈர்த்து
4.அதன் சக்தியைத் தன் மண்டலத்திற்கு வேண்டிய அமிலத்தைச் சேமித்துத் தான்
5.பூமியின் கழிவான உஷ்ண அலைகள் வெளிப்பட்டுப் பல நிலைகள் ஏற்படுகின்றன.
 
இம்மனித உடலுக்கு நாம் உண்ணும் உணவு எப்படி அமிலமாய், ஆவி நிலை கொண்டு நம் உடம்பில் உள்ள இரத்த நாளங்களில் அச்சக்தி மோதி இவ் ஆவியான அமில உணவே உதிரமாய் உருப்பெற்று நம் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களின் செயலுக்கும் அவ் உதிரமே பல அணுக்களாய் அவற்றிலிருந்து எடுக்கும் சக்தியைக் கொண்டுதான் நம் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் அததற்கு வேண்டிய அமில உணவை உண்டு எலும்பாகவும் மயிர்க்கால்களாகவும் நகங்களாகவும் வளர்ந்து கொண்டே உள்ளன.
 
எலும்பின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தால் நம் உருவ அமைப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா…? ஆனால் குறிப்பிட்ட கால வயதுக்குப் பிறகு இவ்வளர்ச்சியின் நிலை மாறு கொள்ளுகின்றது.
 
குழந்தையின் எலும்பின் உறுதித் தன்மைக்கும் வளர வளர முதியோர்களான பிறகு உள்ள எலும்பின் உறுதிக்கும் மாற்றம் உள்ளது.
1.எப்படி யானையின் தந்தம் வயதான பிறகு அதனுடைய உறுதி கூடுகிறதோ
2.அந்நிலை போன்று தான் எலும்பின் வளர்ச்சி நிலையும்.
 
குறிப்பிட்ட வயது வரம்பிற்குப் பிறகு உடல் வளர்ச்சி மாற்றம் கொள்ளும் நாளிலிருந்து வெளி வளர்ச்சிக்கு மேல் நம் (மனிதனின்) உள் உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டு.
 
நாம் உண்ணும் உணவிலிருந்து சுரக்கும் அமில சக்தியின் ஆவி நிலைதான் நம் உடலிற்கு சக்தி தரும் நிலை.
 
நம் பழக்க வழக்கப்படி நம் உடலை எந்நிலையின் உணவை உண்டு பழகியுள்ளோமோ அவ்வமில சக்தியின் வளர்ச்சியின் நிலைகொண்ட நிலையைத் தான் நம் உடல் ஏற்கிறது.
 
பட்டுப்புழு முசுக்கொட்டைத் தளையை மட்டும் உண்டு அதிலிருந்து எடுத்த ஆவியின் அமிலத்தினால் எப்படிப் பட்டை எடுக்கின்றோம்…?
1.அப்பட்டுப்புழுவிற்கே முசுக்கொட்டைத் தளையைத் தவிர வேறு உணவை உண்டால் அதன் நிலையில் இப்பட்டை நாம் எடுத்திட முடிந்திடாது.
2.அதைப்போல் தான் ஒவ்வொன்றின் நிலைக்கும் செயல்நிலை நடக்கின்றது.
3.மனிதனின் நிலையும் அதுவே… மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும் அதுவே.
 
உணவில்லாமல் எச்சக்தியும் செயல்படுவதில்லை.
 
ஒன்று உண்டு அது வெளிப்படுத்தும் கழிவில் இருந்து மற்றொன்றின் வளர்ச்சி ஏற்படுகின்றது.
 
இவ் உடல் கோளத்திலேயே பல உயிரணுக்கள் வாழ்கின்றன. அவை அவை உண்டு வெளிப்படுத்தும் அமிலத்தில் இருந்து தான் மற்ற நிலைகள் ஏற்படுகின்றன.
 
நாம் உண்ணும் உணவு ஆவியாய் அமிலமாய் உதிர சக்தி பெறுகின்றது. அவ்வாவியான பிறகு நாம் உண்ட உணவின் தன்மை அதன் சக்கை மலமாய் வெளிப்படுகின்றது.
 
இவ்வாவி அமில உதிர சக்திதான் அதில் வளரும் உயிரணுக்களின் நிலையைக் கொண்டு நம் உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் வளர்ச்சி பெறுகின்றன.
 
ஒவ்வொரு முடியும் வளர்வதற்கே அவ் உயிரணுக்களின் நிலையில் இருந்தால்தான் வளர்ந்திடும்.
1.இந்நிலையை வைத்துத் தான் முன் பாடத்தில் நம் ஆத்மாவுடன் நம் உயிர் மட்டுமல்ல
2.பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.