
சதுர்த்தி
சதுர்த்தி
என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள்.
ஒரு தவறு நடக்கின்றது என்று பார்த்து என்ன… ஏது…? என்று அதை
நுகர்கிறோம் என்றால் உடலுக்குள் அணுவாக உருவாகதபடி அதை
நிறுத்திப் பழக வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்தி
விட வேண்டும்.
1.இந்த
ரத்தம் தான் உடலில் உள்ள எல்லா உறுப்புகள் முழுவதும் சுற்றி
வருகின்றது.
2.துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
அனைத்தும் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள்
முன்னக்கூடியே செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு அணுவின்
முகப்பிலும் அந்தக் காந்தப்புலன்
இருக்கும். இதன் துணை கொண்டு அங்கே எண்ணப்படும் பொழுது ரத்தத்தில் இந்தச் சக்தி கலக்கின்றது.
உடலில்
இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் ரத்தத்தின் வழி தான் உணவை எடுத்து வாழ்கிறது.
1.காற்றில் இருக்கும் தன் இனமான சத்தைச் செடி கொடிகள் எப்படி எடுத்துக் கொள்கிறதோ
2.அதே மாதிரி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் இரத்தத்தின்
வழி தன் உணவை எடுத்துக் கொள்கின்றது.
இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின்
சக்தியை எடுத்து நாம் முன்னக்கூடியே அந்த
அணுக்களுக்குச் செலுத்தி விடுகின்றோம்.
நாம் முதலில்
நுகர்ந்த தீமை சிறிதளவு தான்
உள்ளே சென்றிருக்கும். அதே சமயத்தில்
1.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லும்
பொழுது…
2.முதலில் புருவ மத்தியில் தடுத்தது போல
உள்ளேயும் நாம் தடுத்துக் கொள்கின்றோம்.
அதற்குப்பின்
கண் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண
வேண்டும். கருமணி தான் நாம் பார்ப்பதையெல்லாம் படமாகப்
பதிவாக்குகின்றது.
அதனுடன்
இணைந்த நிலையில் தான் நரம்பு மண்டலம் உள்ளது அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
நாம் சுவாசிக்கும்
உணர்வின் செய்திகள் கண் கருமணி வழி… அதனுடன்
தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் வழி தான் எல்லா அணுக்களுக்கும் செல்கின்றது.
1.அந்தக் கண் கருமணியுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம்
முழுவதும்
2.துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி இணைக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியை
எல்லோரும் நீங்கள் எடுக்க முடியும். ஒன்றும் சிரமம் இல்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திரும்ப எண்ணுகின்றோம் அதே போல இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் தீமை நமக்குள் வராது தடுக்க
முடியும்.
துருவ நட்சத்திரத்தின்
பேர்ருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து… அதை உருவாக்கிய அணுக்கள்
அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
இதை நீங்கள்
செய்து பழகுங்கள்…
தீமைகள் வராதபடி நாம் தடுக்கின்றோம்… அது தான்
விநாயகர் சதுர்த்தி.
ஒவ்வொரு நிம்டமும் நாம்
நுகர்வது உடலுக்குள் வினையாகின்றது. ஆனால் தீயவினை உருவாக்காதபடி அதை நாம் நிறுத்திப்
பழக வேண்டும்.
நாம் யாரும்
தவறு செய்யவில்லை. அறியாமல் தான் அத்தகைய உணர்வுகள் தீயவினைகள் நம் உடலுக்குள் நுழைந்து எத்தனையோ கலாட்டா செய்கின்றது.
அதை நாம்
தடுத்துப் பழக வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்திட
அருள்வாய் ஈஸ்வரா. சுண்ணாம்புச் சத்தை எல்லாம் எடுத்து எலும்பாக மாற்றிக் கொள்கின்றது. அதற்குள் இருக்கக்கூடிய
அணுக்கள் ஆகாரமாக எடுக்கிறது.
ஆனால் வேதனை
அதிகமானால் அந்த விஷம் எலும்பை உருவாக்கிய அணுக்களை உணவாக எடுக்கத் தொடங்குகிறது. டி.பி. என்று சொல்வார்கள்.
அந்த விஷமான
உணர்வுகள் எலும்புகளைத் தாக்கி விடாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு இணைத்து விட
வேண்டும்.
இவ்வாறு…
1.நம் உடல் உறுப்புகளை
உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களிலும் நாம் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைச் சேர்த்து
2.தீமைகள்
புகாத வண்ணம் ஒரு அடைப்பாக… அணைப்பாக…
நாம் போட்டுக் கொள்ள வேண்டும்.