ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2026

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்


பொங்கல் நாளில் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.
 
இருளை நீக்கிடும் அருள் நாளாக அது அமைந்து அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலில் சேர்த்து அருள் உணர்வுகளை பொங்கச் செய்து இருளை அகற்றி நம் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாகவும் நமது குடும்பங்களில் அருள் உணர்வுகளைப் பொங்கி அருள் வழி வாழ்ந்து மகிழ்ந்து வாழும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்ப்போம்.
 
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இருளை நீக்கிடும் நிலையாக எப்படி வளர்க்கின்றதோ இதைப் போல்
1.ம் உடலுக்குள் இருக்கும் எத்தனையோ கோடி உணர்வுகளையும் (அணுக்களில்)
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு நமக்குள் சுவைமிக்க உணர்வின் ஞானத்தைப் பொங்கும்படி செய்து
3.அருள் வழி வாழும் பிறவி இல்லா நிலை அடையும் அருள் உணர்வுகளை நாம் பொங்குவோம்.
 
இன்றிலிருந்து…
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்
2.அருள் வழியில் வாழ்வோம்
3.இருளை அகற்றுவோம்
4.மெய்ப்பொருளைக் காண்போம் மெய் வழி வாழ்வோம்
5.னைவரையும் அரவணைத்து வாழ்வோம்
6.அன்புடன் வாழ்வோம் பண்புடன் வாழ்வோம்
7.பரிவுடன் வாழ்வோம் என்ற இந்த உணர்வுடன் நம் மனதை நிறைவுபடுத்தி அருள் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.
 
இந்த நாளை அருள் ஞான நாளாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பொங்கும் மங்களமாக என்றும் நமக்குள் அது வளர்ந்து அருள் மம் தவழும் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.
 
நம் பேச்சும் மூச்சும் கேட்போரை மகிழ்ந்து வாழச் செய்வோம்.
1.நமது குரு அருள் நமக்குள் பரவி
2.அந்த உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.
 
உலக மக்கள் அருள் ஞான வழியில் அருள் வழியில் வாழ்ந்திடும் மலரைப் போன்ற மன மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தியை நாமும் பெறுவோம்.
 
நம் உடலில் அதை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரையும் அதைப் பெறச் செய்வோம். அவர்களை மகிழச் செய்வோம் உலக மக்களை மகிழ்ந்து வாழச் செய்வோம் என்று உறுதிப்படுத்துவோம்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்குவோம்… பொங்கச் செய்வோம்.
1.எல்லோருக்குள்ளும் அதைப் பொங்கச் செய்வோம்
2.அந்த அருள் மத்தை எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்வோம்.
 
நாம் இதையே தியானிப்போம் தவமிருப்போம்…!