
நம்மை இயக்கும் ஆன்மாக்களால் வரும் தீமைகள்
(1)
ஒரு முறை யாம் குருதேவருடன் சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று
கொண்டிருந்தோம். அப்பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய
உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.
நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் உறவினர்களிடம் “தண்ணீர் கொடு… அது கொடு… இது கொடு…!” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி “உணவோ தண்ணீரோ ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது” என்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… “அடப்பாவிகளா…! எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா…?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.
உறவினர்கள் நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.
அங்கே இரயிலில் உடன் வந்தவர்கள்…
அந்த நோயான பெண்மணியைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.
அதற்கு உறவினர்கள் “ஏனம்மா…! என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா…? நீ ஏன் கேட்கிறாய்…?” என்று சொன்னவுடன் நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட திட்டுகிறார்களே…” என்று எண்ணுகின்றார்.
சந்தர்ப்பம்… இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது.
குருநாதர் இதைக் காண்பித்தார்.
ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.
1.மருத்துவர் கூறிய அறிவுரையை உறவினர்கள் கடைபிடிக்கிறார்கள்
2.எதற்காக…? நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று…!
ஆனால் நோயான பெண்மணியோ “இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே…! கொஞ்சம்கூட இரக்கம் இல்லையே…?” என்று எண்ணுகின்றார்.
இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.
இதனால் நோயான பெண்மணி… “நாம் இவர்களுக்கு எத்தனை செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே…!” என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது.
இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!
இரயிலை விட்டு இறங்கியவுடன் நோயான பெண்மணியின் வீடு வரை எம்மை சென்று வரச் சொல்லிவிட்டு
குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.
யாம் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம்.
மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.
இரயிலில் வரும் பொழுது…
1.நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்களுடைய நினைவு
2.இந்த நோயான பெண்மணிக்கு சாகும்
தருவாயில் வருகிறது… “மகராசி…! எனக்கு
உதவி செய்தாளே…” என்ற எண்ணம் வந்தது.
ஆனால் உறவினர்களை நினைத்து என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு “துரோகம் செய்தார்களே…” என்று சாபமிட்டது.
இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில் சாப உணர்வுகள் விளைந்து பெருகி அவர்கள் குடும்பத் தொழில் நசுங்கியது.. குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.
இதையெல்லாம் பார்க்கும்படியாக…
1.குருநாதர் எம்மை “48 நாட்கள்” அந்த
வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார்.
2.ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.
அதே சமயத்தில் நோயான பெண்மணிக்கு யார் பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து
பார்த்தவுடனே நோயான பெண்மணியின் உயிராத்மா, இவருடைய உடலுக்குள் புகுந்து விட்டது.
புகுந்த பின்… தான் அது எப்படியெல்லாம்
நோயால் அவஸ்தைப்பட்டதோ அதே வேதனையின் உணர்ச்சிகளை புகுந்து
கொண்ட உடலுக்குள் ஊட்டுகின்றது.
குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்…! ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது… இவரை
எப்படிச் சிரமப்படுத்துகின்றது என்று…!
தொடர்ந்து அவருடைய வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகி வியாபார மந்தம் தங்களை அறியாமலே குழந்தைகளிடம் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது சங்கடங்கள் போன்ற பல இயக்கங்க நடப்பதை எல்லாம் அங்கே எம்மைக் கண்டுணரும்படி
செய்தார்.
இயற்கையின் இயக்கத்தில்…
1.சந்தர்ப்பம், மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நோய் எப்படி
விளைகின்றது…? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக்
காண்பித்தார்.
(2)
கோலமாமகரிஷி… ரிஷி நிலை எப்படிப் பெற்றார்…? என்று அறிவதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் தியானமிருந்து
வந்தோம்.
அதற்காக மங்களூரில் நண்பர் வீட்டில்
தங்கியிருந்தோம். அப்பொழுது அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு
குருநாதர் கூறினார். அங்கு போனோம்.
அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால்
பையனுடைய அப்பா இறந்து போனார். அப்பா இறந்தவுடன் பையனுடைய அம்மா வேதனை கொள்கின்றார்.
பையனுக்கு ஏற்கனவே மூத்த சகோதரி இருக்கிறார்.
அந்த “இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டுத் தன் கணவர்
இறந்து விட்டாரே… இரண்டு குழந்தைகளையும் என்ன
செய்வது…?” என்று அம்மா எண்ணினார்கள்.
இப்படித் தன் கணவருடைய உணர்வையே எடுத்துக் கொண்டபின் சிறிது நாட்களில் பையனுடைய அம்மாவும் இறந்து போனார்கள்.
இந்தப் பையனுடைய அம்மாவின் அம்மா… அதாவது பையனுடைய பாட்டி தான் தொழில் செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பாட்டி தன் பேரனைப்
பார்த்து, “நாசமாகப் போகிறவன்…! இவன் பிறந்தான் இரண்டு பேரைக் கொன்று விட்டான்…! தொலைந்து போடா நாசமாகப் போகிறவனே…!” என்று பேரனைக் கண்டாலே விரட்டினார்கள்.
பையனுடைய அக்காவோ… “அவன் என்ன செய்வான் பாட்டி…? அவர்கள் இறந்து போனால் இவன் என்ன செய்வான்…! இவனா அவர்களைக் கொன்றான்…?” என்று பையனுடைய சகோதரி தன் சகோதரனை அரவணைத்துப் பேசினாள்.
ஆனால் பாட்டி… “அவனுக்குச் சோறு போடாதே…! வெளியே தள்ளிவிடு… எங்கேயாவது பிச்சையெடுத்துச் சாப்பிடட்டும்…!” என்று சொல்கிறது.
ஆனால் பையனுடைய அக்கா “தம்பி என்ன செய்வான்…?” என்று கூடுமான வரையில் தன் தம்பியைப் பாதுகாத்து வளர்த்து
வந்தாள்.
பாட்டியோ… “பையன் பிறந்தவுடன் அப்பா இறந்தார், மூன்று வருடங்களில் அம்மாவும் இறந்தார். வியாபாரமும் கெட்டது… இருக்கின்ற சொத்தும் போனது…!” என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தன் பேரனை “வெடுக்…வெடுக்…” என்று கடுமையாகத் திட்டிப் பேசினார்கள்.
1.தன் பேரன் மேல் பாட்டிக்கு வெறுப்பு
அதிகமான அதே நேரத்தில் தன் பேத்தி மீது அதிகமான பாசத்தைக் காண்பித்தார்கள்.
2.இதனின் தொடர் கொண்டு பாட்டி
இறந்த பின்… பாட்டியின் உயிராத்மா அந்தப் பேத்தியின் உடலுக்குள் சென்றுவிட்டது.
பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா
சென்றபின் என்ன நடக்கிறது…?
பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் சகோதரியும்…
1.தன்னுள் பாட்டியின் உயிராத்மா
இணைந்துள்ள நிலையில்
2.தம்பியைப் பார்த்து, “தோலைந்து போடா… நாசமாகப் போடா…” என்று சொன்னாள்.
அதன்படியே தம்பியையும் விரட்டினாள்.
ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு
உடலுக்கு மாறுவதும் இதனின்
உணர்ச்சிகள் வந்ததும் செயலாக்கங்கள் எப்படி அமைகின்றதென்றும் யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை மங்களூருக்கு அனுப்பினார்.
அதற்கான இடத்தைக் காண்பித்து
1.“இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… அதனை நீ பார்…” என்று சொல்லியிருந்தார் குருநாதர்.
2.அவர் சொன்னது போன்றே நடந்தது.
இதன் தொடர் கொண்டு பெண் பிள்ளையின் உடலில் வேதனை உணர்வுகள் வளர்ந்து நோய் வந்து பையனின் சகோதரியும் மடிந்து விட்டது.
பையனோ… ஒதுக்கப்பட்ட நிலைகளிலிருந்து மற்றவர்களால் காக்கப்பட்டு அவன் தொழிலில் பெரியவனாக வளர்ந்து விட்டான்.
ஒதுக்கப்பட்டாலும்
1.தன் மீது பற்று கொண்டு தான் எப்படியும் வளர வேண்டும்
என்று மற்றவர்களின் அன்பைப் பெற ஆரம்பித்தான்.
2.‘பாவம் பையன் என்ன செய்வான்…!” என்று எண்ணிய உணர்வு கொண்டு மற்றவர்கள் அவனுக்கு உதவிகள்
செய்தனர்.
அவன் சிறந்த விஞ்ஞானியாகவே ஆகிவிட்டான்…. அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் அனாதையாக இருந்தாலும் தன் உணர்வின் வேகத்தைக் கூட்டித் தன்னைக் காக்க வேண்டுமென்ற உணர்வை எடுத்து விஞ்ஞானி என்ற நிலை பெற்று விட்டான்…!
இது நடந்த நிகழ்ச்சி…!