
கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்
துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க
வேண்டும்… ரத்தங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள்
அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் அடிக்கடி கண்ணின்
நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
அதாவது மற்ற உணர்வுகள் நம் உடலுக்குள்
அணுவாக உருவாகாதபடி முந்தி இதைச் செய்ய வேண்டும்.
1.காரணம் உடலுக்குள் உருவான
அணுக்கள் அனைத்துமே கண்கள் பதிவானது தான்…
2.கண்கள் வழி நுகர்ந்து தான் உடலில் அணுக்கள்
உருவானது.
அதே கண்ணின் நினைவு
கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
ரத்தங்களிலே இணைக்கப்படும் பொழுது அது வலுவாகின்றது.
1.கண்கள் மூலம் எளிதில்
அந்த அணுக்களுக்கு அந்த ஆற்றலைப் பாய்ச்ச முடியும்.
2.ரத்தத்தில் துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகள் வட்டமாக வலுவாக அமைத்து
விடுகின்றது.
ஞானிகள் கண்ட உண்மைகள் இது.
பின்… தீமையான உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் பொழுது உடலுக்குள்
இருக்கும் அந்த அணுக்களும் ஈர்க்க மறுத்தால் தீமைகள் அனாதையாகி விடுகின்றது. அனாதையாகி
விட்டால் சூரியன் கவர்ந்து செல்கின்றது.
2000 சூரியக் குடும்பங்களில் “ஒதுங்கிய தூசி மண்டலம்” வால் நட்சத்திரமாக ஆவது போன்று நம் உடலில்
இந்த மண்டலங்கள் ஏற்பட்டு ஒதுங்குகின்றது… அதைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து கொண்டு சென்று விடுகின்றது.
நம் ஆன்மா பரிசுத்தம்
ஆகின்றது… ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும்
பரிசுத்தம் அடைகின்றது. ஜீவான்மாக்கள் பரிசுத்தமானால் பரிசுத்தமான ஜீவணுக்களாக உருவாகி உயிரான்மா
ஒளியாக ஆகிறது.
உயிருடன் ஒளியான உணர்வுகள் ஆன்மாவாகும் பொழுது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஒளியான அணுக்களாக
ஆன்மாவாக மாறியதோ
2.உயிர் வெளியே சென்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வலைகளைப் பெருக்கினோமோ அது பெருகி
3.துருவ
நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.
அங்கே சென்றபின்
தொக்கியுள்ள விஷத்தைக் கரைக்கின்றது… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலை கொள்ளச் செய்கின்றது.
பிரபஞ்சத்திலும் சரி பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகளும்
சரி… பூமியின் துருவத்திற்கு நேராக
வரும் அவைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து
ஒளிமயமாக மாற்றி விடுகிறது. உயிரைப் போன்றே
ஜீவணுக்களை உருவாக்கி ஒளியாக மாற்றி
விடுகின்றது.
மனிதன் ஒருவன் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
வளர்க்க முடியும்.
1.குருநாதர் எனக்குள்
இதைப் பதிவு செய்தார்.
2.எனக்குள் எடுக்கப் பழக்கச் செய்தார்… எடுத்து எனக்குள் வளர்க்கச் செய்தார்
3.அதன் உணர்வைத் தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும்
பதிவாக்குகின்றேன்.
அந்தப் பதிவை
நினைவாக்கி உங்களுக்குள் வளர்த்து அந்தப் பேரருள் பேரொளியாக நீங்கள்
அனைவரும் உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.