ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2018

நாம் செய்யும் தியானம் தீமையான கனவுகளை எப்படித் தடுக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்...! - (நடந்த நிகழ்ச்சி)


1.தூக்கத்திலே நம்மை (உடலை) யாரோ அழுத்துவதாகவோ
2.எழுந்திரிக்க நினைக்கின்றோம் முடியவில்லை என்றாலோ
3.கையைத் தூக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன் முடியவில்லை என்றாலோ
4.மனதில் நினைப்பது எதையும் உடலில் இயக்க முடியவில்லை என்றாலோ
இதெல்லாம் நாம் சுவாசித்த அல்லது நம் உடலில் ஏற்கனவே உள்ள ஜீவான்மாக்களின் அதனுடைய கடைசி நேர உணர்ச்சிகள்.

அதாவது உடலை விட்டுப் பிரியும் நேரம் அது சுவாசித்த உணர்வுகள் தான் நம் உயிரிலே படும் பொழுது அந்த (இறந்த) உணர்ச்சிகளாகத் தெரிகின்றது.

எனக்கு இதைப் போல அனுபவம் ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ தடவை வந்திருக்கின்றது. தியான ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகம். சமீப காலங்களில் அதிகம் இல்லை. எப்பொழுதாவது வரும்.

ஒரு சமயம் என்னுடைய தூக்கத்திலே வெள்ளையாக ஒரு ஆன்மா என் மூக்கின் வழியாக உள்ளே செல்வதாக உணர்வு. படமாகக் கனவாகத் தெரிகின்றது. (ஆனால் என் கண்கள் மூடியிருக்கின்றது)

அப்படி வந்ததும் என்னை அறியாமலே புருவ மத்திக்கு நினைவு செல்கிறது. தூக்கத்திலேயே வாயைத் திறந்து ஓ...ம் ஈஸ்வரா...... என்று தியானத்தில் ஒலியை எழுப்புவது போல் ஒலி எழுப்புகிறேன்.

ஓ...ம் ஈஸ்வரா... என்று ஒலி ஆரம்பமானதுமே அந்த உருவம் ஓடியே விட்டது. ஆனால் சப்தம் முடிந்த பின் தான் என் கண் திறந்தது. அப்பொழுது தான் எனக்குச் சுய நினைவு வருகின்றது.

பக்கத்தில் படுத்திருந்தவர் என்ன என்ன..? என்று அவர் பயப்படுகின்றார். இப்படிக் கேட்டதும் எனக்கு முழு நினைவும் வந்து “எனக்குள் என்ன நடந்தது...!” என்றும் முழுவதும் தெரிந்தது.

உடனே எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர்களிடம் “ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணினேன் உடனே தூக்கமும் வந்தது. என்னை அறியாமலே தூங்கி விட்டேன்.

பின் காலையில் எழுந்த பின் நடந்ததை முழுவதும் உணர முடிந்தது.
1.சரி...! நாம் எடுத்த மெய் ஞானிகளின் உணர்வுகள் உடலிலே விளைந்து
2.தூக்கத்திலும் அந்த உணர்வுகள் விழிப்பாக இருந்து
3.நம் சுவாசத்தின் வழியாகத் தீமைகள் புகாது நேரடியாகத் தடுக்கின்றது என்று அறிந்து கொண்டேன்.

அந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இது நடந்து 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்னாடி இருக்கும்.

நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்கு என்றுமே பாதுகாப்பாக இருக்கிறது என்பதை எனக்கு மிகவும் தெளிவாக உணர்த்தியது இந்த அனுபவம்.

இது தியானத்தின் ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சி. 1988 என்று நினைக்கின்றேன். ஊருக்கு வெளியே காட்டுக்குள் ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது பகலில் எனக்கு இது முதல் அனுபவமாகக் கிடைத்தது.

அங்கே ஒரு சாமியார் இருக்கின்றார் என்று சொன்னார்கள். அவரைப் பற்றியும் ஏதோதோ சொன்னார்கள். அந்த இடமே பார்த்தால் எனக்குப் பயங்கரமாகத் தெரிந்தது.

சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன். அன்று இரவே பயமான கனவு. நான் பார்க்காத அந்தச் சாமியார் என்னைப் பயமுறுத்துவது போன்ற உணர்வு.

பிறகு அருகிலே நெருங்கிப் போய்ப் பார்க்கின்றேன். பயமுறுத்தும் சாமியார் உருவத்தில் நம் ஞானகுரு தெரிந்தார். உடனே பயமும் விலகியது. தைரியமும் வந்தது.

ஞானகுருவிடம் நேரடியாக இதற்கு விளக்கம் கேட்ட பொழுது “குரு உணர்வு உங்களுக்கு என்றுமே பாதுகாப்பாக வரும்...!” என்று அன்று சொன்னார்.

நீங்கள் தீமையான உணர்வைச் சுவாசித்தாலும்
1.உங்கள் பற்று மெய் ஞானிகளின் அருளைப் பெறவேண்டும் என்ற
2.அந்தப் பதிவு வலுவாக இருந்தால் இது அதனுடன் இணைந்து வந்து
3.நமக்குத் தக்க பாதுகாப்பாக வரும் என்று சொன்னார்.
4.நான் அங்கே வந்து காக்கவில்லை.
5.நீங்கள் எடுத்துக் கொண்ட மெய் உணர்வு (குருவிடம் விளைந்த மெய் உணர்வு) அந்த நேரத்தில்
6.உங்களுக்குள் பாதுகாப்பாக வருகின்றது என்று தெளிவாக்கினார்.