ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2018

ஏகோபித்த நிலையில் மக்களை மகிழ்ச்சியாக வாழச் செய்யும் "விஜய தசமி"

மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற்று ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி பெறவேண்டும்.
1.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது
2.நம்மிடம் ஒளியான உணர்வுகள் வளர்கின்றது.
3.நாமும் ஒளியாகின்றோம். 
4.அப்பொழுது மற்றவர்கள் செய்கின்ற தவறு நமக்குள் வராது.

ஆனால் தவறு செய்பவர்களையும் குற்றம் செய்பவர்களையும் திரும்பத் திரும்பப் பதிவாக்கினோம் என்றால் “இரு நான் பார்க்கின்றேன்.. உதைக்கின்றேன் உன்னை..” என்ற இந்த எண்ணங்கள் தான் வரும்.

அந்த உணர்வு இரு நான் பார்க்கின்றேன் என்ற நிலையில் நமக்குள் ந்து என்ன செய்யும்? நம்மிடம் உள்ள நல்ல குணங்களை இருளச் செய்யும்.

இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான் அன்று விஜயதசமி வைத்தார்களே தவிர சுண்டலையும் பருப்பையும் கொடுத்துவிட்டு... இவ்வளவு செலவு செய்தேன்...! அவ்வளவு செலவு சேய்தேன்...! என்ற நிலைக்கு அல்ல.

ஏன் என்று கேட்டால் கடையில் எடை போடும் தராசு நிறையச் சம்பாதித்துக் கொடுத்தது அதற்காக வேண்டி அந்தத் தராசுக்கு ஒரு பூஜை.

கணக்குப் போட்டதை எல்லாம் திருத்தி எழுதினேன். அரசாங்கத்தை ஏமாற்றினேன்... மற்றவர்களையும் ஏமாற்றினேன்... அதனால் பணம் வருமானம் நிறைய வந்தது என்பதற்காகக் கணக்குப் புத்தகங்கள் பணம் எல்லாவற்றையும் வைத்து  இலட்சுமிக்கு பூஜை.

அதனால் உன்னை நான் வணங்குகிறேன் என்று இப்படித்தான் நாம் வணங்குகின்றோம் எப்படியென்றாலும் சரி... பணம் தேவை. ஆகையினால் உனக்குப் பணத்தை வைத்து இலட்சுமி பூஜை செய்கின்றேன்.

இலட்சுமிக்குப் பணத்தை வைப்பது; படைக்கிற சக்திக்குப் பொங்கலை வைப்பது; ஞானத்தைக் கொடுக்கும் சரஸ்வதிக்கு ஆயுதங்களை வைப்பது இப்படித்தான் நாம் பூஜை செய்கிறோம்.

ஏனென்றால் நான் சொல்லக்கூடிய இந்த மெய் ஞானம் தான் ஆயுதமாக உங்களைத் தாக்குகின்றது.

ஆயுத பூஜை என்பது இந்த சரஸ்வதி பூஜை தான். நாம் எந்தெந்த குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ  அது தான் ஆயுதமாக வந்து உங்களைப் பேச வைக்கின்றது.

நான் பேசுவது என் உடலை இயக்குகின்றது. நான் சொல்லக் கூடியதை நீங்கள் கேட்கின்றீர்கள். அது உங்களை இயக்குகின்றது.  இது தான் ஆயுத பூஜை.
1.உணர்வு..
2.மணம்...
இது தான் அந்த ஆயுதங்கள்.

நாம் எதை ஆயுதமாக எடுக்க வேண்டும்?

ஒரு பென்சிலை எடுத்துச் சீவினால் எழுதுவதற்கு உதவும். அந்தப் பென்சிலைச் சீவுவதற்குப் பதில் கையைச் சீவினால் அல்லது விரலைச் சீவினால் எழுதுவதற்கு உதவுமோ...?

இதைப் போல
1அருள் ஞானத்தை நாம் எடுத்து
2.எதைக் கொண்டு... எதைச் சீவ வேண்டும்...? என்ற நிலை இருக்கின்றது.
3.அது தான் ஆயுத பூஜை.

அதை நாம் பக்குவப்படுத்துவதற்காக வேண்டி அன்றைக்கு ஞானிகள் நம் உணர்வுகளில் கலக்கும் அழுக்கை எப்படித் துடைக்க வேண்டும் என்று ஆயுத பூஜையாகக் காட்டினார்கள்.

உணர்வுகளைத் தூய்மைப்படுத்தும் அந்த அருள் ஞானங்களை எடுக்கும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் எனக்குள் சுத்தப்படுத்தும் நிலையாக வருகின்றது.

வீடு கடையை மட்டும் சுத்தப்படுத்தினால் பத்தாது. இதைச் சுத்தப்படுத்தும் போது ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் எண்ணம் வருகின்றது.

வியாபாரம் செய்யும்போது  எப்படி எண்ண வேண்டும்?
மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்தெந்த நிலைகளில் எந்தெந்தத் தெய்வங்கள் நல்லது செய்கின்றது என்று எண்ணுகின்றோமோ
1.அந்தத் தெய்வ குணங்கள் எல்லாம் நாங்கள் பெற வேண்டும்.
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்.
3.ங்கள் உடலில் நல்ல நறுமணங்கள் வர வேண்டும்.
4.ங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மணங்கள் தோன்ற வேண்டும்.
5.நறுமணங்கள் அவர்களுக்கு வளர வேண்டும்.
6.ங்கள் வாடிக்கையாளர் நலம் பெற வேண்டும்.
7.ங்கள் சொல்லிற்குள் இனிமை பெற வேண்டும்.
8.நாங்கள் பார்ப்பது எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எல்லாரும் ஏகோபித்துச் சொன்னால் எப்படி இருக்கும்?

அனைவரும் இதைப் போல சொல்லும் போது மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நாமும் பெறுகின்றோம் மற்றவர்களையும் பெறச் செய்கிறோம். 

இதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் விழாக்களை வைத்தார்கள் ஞானிகள்.