அன்றைய சித்தர்கள் பாஷாணத்துடன் சில பொருட்களைச் சேர்த்து அதை அடக்கி மருந்தாக்கி
“ஒரு உரை… இரண்டு உரை…” என்று கொடுத்து அன்றைய மனிதர்கள் உடலில் வந்த கடுமையான நோய்களைப்
போக்கினார்கள்.
சித்தன் அந்தப் பாஷாணத்தைக் கையிலே தொடுகின்றான் என்றால் அதை முறிக்கும் ஆற்றல்
கொண்ட தாவர இனச் சத்தைத் தன் கைக்குள் தேய்த்துக் கொண்டு அதை நுகர்ந்து அவன் செயல்படும்
போது ஒன்றும் செய்யாது.
அதே சமயத்தில் அது அவனுக்குள் சாடி விட்டால் கிட்னியை (சிறுநீரகம் - KIDNEY)
ஒன்றும் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக வேண்டி இந்த விஷத்தை முறிக்கும் எருமை மாட்டினுடைய
சாணத்தைக் காலிலே போட்டு விறு...விறு… என்று உச்சிக்குச் சேர்க்கப்படும் போது இந்த
நீர் குளிரும் போது அதைச் சுத்தப்படுத்தி விடும்.
எருமை மாட்டின் சாணத்தில் விஷத்தை முறிக்கும் ஆற்றல் உள்ளது. இது சித்தன் கண்டு
கொண்ட நிலைகள். அதை நாம் தெரியாதபடி அவன் பாஷாணத்தைக் கையில் வைத்திருக்கின்றான் என்று
நாமும் தொட்டோம் என்றால் இந்த வாசனை பட்டவுடனே நோயாக வந்து நம்மைச் சீக்கிரம் சுருட்டிவிடும்.
ஏனென்றால்
1.இந்த வாசனை பட்டவுடனே கிட்னியைச் செயல்படுத்தாதபடி
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வை மண்ணாக்கி அது தொலைத்து விடும்.
3.ஆகவே அன்று சித்தன் எதை எதை எல்லாம் பக்குவமாகச் செய்தானோ அதைப் போன்று நாம்
செய்து கொள்ள வேண்டும்.
ஒரு எலக்ட்ரிக்கில் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நெகட்டிவ் பாசிட்டிவ்
எது என்று தெரியும். இங்கே தொட்டால் ஒன்றும் செய்யாது என்று அவர்களுக்குத் தெரியும்.
1.ஆனால் அவர்கள் தொட்டார்கள்… “ஒன்றும் செய்யவில்லை…!” என்று நாம் தொட்டால்
என்ன செய்யும்?
2.நம்மை அறியாமல் “ஷாக்” அடித்துத் தூக்கி எறிந்துவிடும்.
இதைப் போன்று ஒவ்வொன்றும் அவரவர்கள் அறிந்து கொண்ட உணர்வின் தன்மைக்கொப்பத்தான்
அதனுடைய இயக்கங்கள் உண்டு.
நெருப்புக்குள் இருக்கும் ஒரு பொருளை கை கொண்டு நாம் தூக்கினால் நம்மைச் சுட்டு
விடும். அது போல மிகக் கடுமையான வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கப்படும் போது
“ஐயோ பாவமே...! இப்படி இருக்கின்றானே...!” என்று அவன் படும் வேதனையை நாம் நுகர்ந்து
சுவாசித்தால் உயிருக்குள் பட்டு நம் நல்ல உணர்வை வீழ்த்தி விடுகின்றது.
1.நம் நல்ல உடலைக் கொண்டு நாம் அவரைக் காப்பாற்றி விடுகின்றோம்.
2.ஆனால் நாம் சுவாசித்த அவரின் வேதனையான உணர்வோ நம்மைப் பலவீனப்படுத்தி விடுகின்றது.
அடுத்தவர்களைப் பார்த்து ஐயோ பாவமே...! என்று இரக்கப்பட்டு அவர்களுக்குத் “தர்மத்தைச்
செய்தால் உனக்கு நல்லது வரும்...!” நீ நல்லதைச் செய் நல்லது கிடைக்கும்…! என்று அன்றைய
சித்தர்களும் ஞானிகளும் சொல்லியிருக்கின்றார்கள்...! என்று அவர்கள் கஷ்டத்தை நாம் நுகர்ந்தால்
நம்மிடம் இருக்கும் நல்ல குணம் எல்லாம் விஷமாக மாறிப் போகும்.
ஆகவே பாதுகாப்பான நிலைகள் கொண்டு மற்றவர்களுக்கு நன்மையைச் செயல்படுத்தும் முறைகளைத்
தான் ஞானிகள் அன்று ஆலயங்களிலே காட்டினார்கள். ஆனால் அரசர் காலங்களில் அதை நாம் பெறுவதற்குண்டான
தகுதியை நாம் பெற முடியாத நிலைகளாகவே உணர்த்தி விட்டார்கள்.
ஆகவே மனித வாழ்க்கையில் ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் அவரைக் காக்க நாம்
எந்த மாதிரியான ஆயுதத்தை எடுக்க வேண்டும்..? அந்த மெய் ஞானிகள் கண்ட அருள் வழிப்படி
1.நம் மனித வாழ்க்கையில் நாம் எதைச் செய்ய வேண்டும்...?
2.எப்படி நாம் செயல்படுத்த வேண்டும்...? என்ற நிலைகளை நாம் அறிந்து கொள்வது
மிக மிக அவசியம்.
அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று முதலில் இந்த உணர்வுகளை
நமக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் மகரிஷிகளின் மூச்சலைகளைக் கண்ணுக்குள் பாய்ச்சி அவர் மகரிஷிகளின் அருள்
ஒளி பெற வேண்டும்... அவர் நலம் பெற வேண்டும்...! என்ற எண்ணத்தில் அவருக்கு உபகாரத்தைச்
செய்தீர்கள் என்றால் உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.
அவர்களுக்குப் பாய்ச்சிய உணர்வுகளை அவர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்களும் அந்த
மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார்கள். அவர்கள் துன்பம் அகலும் சந்தர்ப்பமாக
அது அமைகின்றது. அவர்களும் காக்கப்படுகின்றார்கள்.
1.கோவிலுடைய தத்துவமே “நல்லதைச் செய்…!” என்பது தான்.
2.ஆனால் நல்லதை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் காலத்தால்
மறைந்து விட்டது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மறைந்த அந்த உண்மைகளைத்தான்
இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.