ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2026

விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்

விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்


விஷத்தால் தாக்கப்படும் பொழுது தான் நகர்ந்து ஓடும் நிலை பெறுகின்றது வெப்பமும் காந்தமும் உருவாகின்றது. மூன்று சக்தியாக இயங்குகின்றது
1.வெப்பம் காந்தம் விஷம் மூன்று தான் ஆதியிலே உருவானது.
2.இயக்கத்திற்கு மூலம் வெப்பம் உருவாவதற்கு மூலம் விஷம் தான்.
 
அதே சமயத்தில் விஷம் வெப்பமாகி வெப்பமாகும் போது உணர்வின் சுழற்சியாகும் போது சூரியனாகி விஷத்தைப் பிரிக்கின்றது. அது மற்றதுடன் கலந்து ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
 
இதைப் போன்று தான் விஷத்தின் தாக்குதலால்…” ஏற்பட்டது தான் உயிர்.
 
நாம் நுகரும் உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷம் உண்டு.
1.விஷத்தின் இயக்கம் தான் என்றாலும் உணர்வின் சத்து அதிகரித்து
2.அதன் உணர்வின் உணர்ச்சியின் எண்ணங்களைத் தூண்டச் செய்யும் நிலைதான் இது.
 
சூரியனால் கவரப்பட்ட வெப்பம் காந்தம் விஷம் என்று இருந்தாலும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும்ணர்வைக் கவர்ந்து கொண்டால்
1.இந்த விஷ இயக்கத்தை அடக்கிய உணர்வுகள் அடக்கும் உணர்ச்சியை நமக்குள் கூட்டுகின்றது.
2.கவர்ந்து கொண்ட காந்தம் லட்சுமி அதனுடன் இணைக்கப்படும் பொழுது அதைப் பிரிக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஏனென்றால் முக்கியமாக உங்களுக்குள் நுண்ணிய உணர்வுகளைப் பதிவாக்குகின்றேன்.
 
சிந்தனை கொண்டு…” உங்கள் வாழ்க்கையில் உங்களைக் காக்கும் உணர்ச்சிகள் வர வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்குள் இதை இணையச் செய்து அதைப் பதிவாக்குகின்றேன்.
 
சந்திக்கும் சந்தர்ப்பங்கள்
1.அதிலே இக்கட்டான நிலை வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதிலிருந்து விடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும்.
 
ஆகவே ஒளியின் சரீரம் பெறக்கூடிய நிலையில் ஆயுள் மெம்பராக நாம் இருக்கப்படும் பொழுது அதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
 
ம்மைச் சங்கடப்படுத்தியவர்கள் வேதனைப்படுத்தியவர்கள் சலிப்புப் படுத்தியவர்கள் நம்மிடம் சண்டையிட்டவர்கள் இவர்களைப் பற்றித் தான் அதிகமாக எண்ணம் வருகின்றது.
 
ஏனென்றால் அதனுடைய “அழுத்தம்…” அதிகம்…!
 
இதையெல்லாம் மாற்றும் சக்தி கொண்டது தான் துருவ நட்சத்திரம். அதை உங்களுக்குள் இணைக்கின்றேன். அப்படி இணைக்கப்படும் பொழுது ஒவ்வொரு உணர்விலும் சேர்ந்து கொள்கின்றது.
 
பல சரக்குகளைப் போடுகின்றோம் அதிலே காத்தை இணைத்த பின் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சுவைமிக்கதாக அந்த உணர்ச்சியை எப்படிக் கூட்டிக் கொண்டு வருகின்றதோ இதைப் போன்று
1.விஷத்தை அடக்கிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்க வேண்டும்
2.எப்போது தீமையைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியானத்தில் அதை மீண்டும் மீண்டும் உங்களை எண்ணி எடுக்கும்படி சொல்கின்றோம்.