ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2018

பெளர்ணமி தியானம் என்பது என்ன..? அன்று இரவு நிலா வெளிச்சத்தில் பண்ண வேண்டுமா...?


கேள்வி:-
ஐயா வணக்கம். பெளர்ணமி தியானம் என்பது என்ன? அன்று இரவு நிலா வெளிச்சத்தில் பண்ண வேண்டுமா? அல்லது வீட்டினுள் இருந்தே பண்ணலாமா...? கொஞ்சம் விளக்கம் தரவும்.

பதில்:-
நம்முடைய சகஜ வாழ்க்கயில் நாம் பூமிக்குள் பூமி சுவாசித்து வெளிப்படுத்தும் காற்றையே சுவாசிக்க நேர்கின்றது. அதாவது புவியின் ஈர்ப்புக்குள் இருக்கும் உணர்வை மட்டும் தான் சுவாசிக்க நேர்கின்றது.

அதை மாற்றி உடல் பெறும் உணர்வுகளை அறுத்துச் சென்ற மெய் ஞானிகளைப் போன்று விண்ணுலக ஆற்றலைப் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் பௌர்ணமி தியானம். 

பௌர்ணமியை நாம் இரவு ஏழு மணிக்கு எளிதாகப் பார்க்க முடியும். அதை நேரடியாகப் பார்த்து எடுக்க முடிந்தால் மிகவும் நல்லது. ஒரு இரண்டு மணி நேரம் கூடத் தியானிக்கலாம். 

அந்த இரண்டு மணி நேரம் சப்தரிஷி மண்டல அலைகளை நாம் நேரடியாகக் கவரும் சந்தர்ப்பமாகின்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நம் எண்ணங்களுக்கு விண்ணை எட்டும் வலு துரித கதியில் கிடைக்கின்றது.

ஆரம்பத்தில் நம் சாமிகளும் நேரடியாகப் பார்த்து எடுக்கும்படி பௌர்ணமி தியானம் செய்தார்கள். 

நானும் 1987லிருந்து 1998,99 வரையிலும் மொட்டை மாடியிலோ அல்லது ஊருக்கு வெளியிலோ கூட்டமாகவும் தனியாவும் பௌர்ணமியைப் பார்த்துத் தான் தியானம் செய்திருக்கின்றேன். 

அதனுடைய பலன்கள் எவ்வளவோ உண்டு. முன்னோர்களை விண் செலுத்த முடிந்தது. அதனுடைய பரிணாமம் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்ற அமைப்பும் உருவானது. 


இங்கே இருப்பதை விட விண்ணுக்குப் போக வேண்டும் என்ற பேராசையும் இப்பொழுது வந்துவிட்டது, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.