ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2018

பணிவுடன் வாழ சகிப்புத் தன்மையுடன் வாழ உற்சாகமாக வாழ எப்படித் தியானிக்க வேண்டும்...?


கேள்வி:-
ஐயனே """ பயம் போக வியாச மகரிஷி """"ஆணவம் போக பிருகு மகரிஷி ""உணர்வு பெற அருளினீர்கள் """மிக நன்றி """அமைதி காக்க """சொற்கள் கவனமாகக் கையாள """உற்சாகமாக இருக்க """பணிவுடன் வாழ """சகிப்புத் தன்மை """பெற எந்தெந்த மகரிஷிகளின்உணர்வைப் பெறுவது """என்று விளக்குங்கள்.


பதில்:-
ஞானகுரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடமிருந்து அனுபவபூர்வமாகப் பெற்ற அனைத்து ஆற்றல்களும் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஈஸ்வரபட்டரிடமும் ஞானகுருவிடமும் நினைவினைச் செலுத்தினால் பணிவும் சகிப்புத் தன்மையும் நிறையக் கிடைக்கும். 

ஏனென்றால் ஞானகுரு பல வகைகளில் குருநாதரிடம் அனுபவம் பெற்று அதை உலக மக்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது குருநாதரிடம் பெற்ற இன்னல்களைக் காட்டிலும் எத்தனையோ நான் சிரமப்பட்டேன். என்று கூறியுள்ளார்,

என்னைச் சந்திக்க வரும் அத்தனை பேரும் கஷ்டம்... நஷ்டம்... தொல்லை... துன்பம்... துயரம்... வேதனை...! என்று இப்படியே தான் கேட்கின்றனரே தவிர “அதிலிருந்தெல்லாம் நாங்கள் விடுபடும் சக்தியைக் கொடுங்கள்...!” என்று யாரும் கேட்கவில்லை என்று பல முறை சொல்லியுள்ளார்,

இப்படி மற்றவர்கள் இதைச் சொன்னாலும் அதை வெறுக்காதபடி குருநாதர் இட்ட ஆணைப்படி ஒவ்வொருவரின் உயிரையும் கடவுளாக மதித்து அபிஷேகம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். அந்த மெய் ஞானிகளின் ஆற்றலை ஒவ்வொரு உயிரும் பெறவேண்டும் என்று “உங்களிடம் தான் நான் வரம் கேட்கின்றேன்...!” என்று உணர்த்தியுள்ளார்.

ஞானகுரு உணர்த்திய இந்த உணர்வுப்படி நாமும் உயிருக்குச் செய்யும் சேவையாக எடுத்துக் கொண்டால் பணிவும் சகிப்புத் தன்மையும் கண்டிப்பாகக் கிடைக்கும்.

அமைதி வேண்டும்... சொல்லும் செயலில் தெளிவும் புனிதமும் வேண்டும்...! என்றால் போகமாமகரிஷிகளை எண்ணித் தியானித்தால் போதும். 

கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த ஆற்றல்களை அவர் சந்தர்ப்பத்தால் பெற்றிருந்தாலும் இப்பொழுது தற்சமயம் தான் அவர் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தது.

இவ்வளவு காலமும் அவர் இந்த உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் முருகா என்று உள்ளபூர்வமாக அவரின் அருளைப் பெறவேண்டும் என்ற ஏக்கம் கொண்டோருக்கெல்லாம் அந்த அருளைப் பாய்ச்சிக் கொண்டிருந்தார். மக்கள் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் போகர். மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்கே முருகனின் சிலையை அவர் பிரதிஷ்டை செய்தார். 

எவ்வளவு கொதிப்படைந்த நிலைகளை நாம் சந்தித்தாலும் அவரை எண்ணி அவர் அருளைப் பெறவேண்டும் என்று ஏங்கி எடுக்கும் பொழுது அமைதியும் நல்ல சொல்லும் கண்டிப்பாக வரும்.

உங்கள் வாழ்க்கையில் உற்சாகமாக என்றுமே இருக்க வேண்டும் என்றால் ஈஸ்வரபட்டரை எண்ணி அவரின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் அவர் இந்த மனித வாழ்க்கையை அப்புறப்படுத்திவிட்டுத் தான் மெய் ஒலி/ஒளி பெறவேண்டும் என்ற அந்த ஒன்றை மட்டும் எண்ணி ஒரு பைத்தியம் போன்று பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார்.

அந்தப் பைத்தியமாக வாழும் நிலையில் அவர் யாரையும் பார்ப்பதில்லை... யாருடைய குற்றத்தையும் அல்லது அவர்கள் ஏன் அப்படி இருக்கின்றார்கள் என்ற எந்தவிதமான எண்ணத்தையும் அவர் எண்ணுவதில்லை. அதைத் தெரிந்து கொள்ல வேண்டும் என்ற நிலையில் அறியவும் முற்படுவதுமில்லை.

என்றுமே ஏகாந்தமாகத் திரிபவர் அவர். ஆனால் தன் காரியம் எதுவோ அதைச் சாதிக்கக்கூடிய “காரியப் பைத்தியம்...!” அவர். அவரை எண்ணி அவர் அருளைப் பெற்றால் நாம் என்றுமே உற்சாகமாக இருக்க முடியும்.

(என்னுடைய அனுபவத்தில் ஈஸ்வரபட்டரின் இந்த உணர்வை எடுத்துத்தான் என்றுமே உற்சாகமாக இருக்கின்றேன்)