ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2018

ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...! இதை எப்படி உச்சரித்து அந்தச் சக்தியைப் பெறுவது...?


ஈஸ்வரா...! என்பது நமக்குள் ஜீவனாக இருப்பது அதாவது ஓ...” என்று இயக்கி நாம் எணணியதை “ம்...” என்று உடலாக மாற்றி
1.இயக்கும் சக்தியாக இருப்பது... உற்பத்தி ஆக்குவது... அது தான் “ஓ...ம்...” ஈஸ்வரா...
2.பிரம்மாவும் நீயே... உருவாக்குவதும் நீயே... என்று உயிரை எண்ணுவது தான் ஓ...ம் ஈஸ்வரா...!
3.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளுக்கும் குருவாக இருப்பது நமது உயிரே... ஆகவே ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா...!

ஆகையினால் நம் உயிரை இப்படி எண்ணி இந்த நிலைகளில் ஏங்கிச் சொல்லுங்கள். வெறும் வாயிலே ஓம் ஈஸ்வரா குருதேவா... ஓம் ஈஸ்வரா குருதேவா... என்று சொல்ல வேண்டாம். உணர்வுடன் நம் உயிரை எண்ணுதல் வேண்டும் (இது முக்கியம்).

அதே சமயத்தில் நமது குருவின் பெயரும் அந்த ஈஸ்வரா தான். ஏனென்றால்
1.அவர் சர்வ சக்தியும் உருவாக்கக்கூடிய நிலைகள் அந்த உடலிலே பெற்றார்.
2.அவருக்கு “ஈஸ்வரா” என்று பெயரை வைத்தார்கள்.

அவரே குருவாக இருந்து அவர் உடலிலே விளைய வைத்த உணர்வை எனக்குள் (ஞானகுரு) கொடுத்தார். அதையே எண்ணச் சொன்னார்.

1.உன் உயிரைக் குருவாக நீ எண்ணு.
2.அந்த உயிரின் தன்மையை ஈசனாக எண்ணு.
3.அந்த உணர்வின் சக்தி அது உனக்குள் செயலாக்கும்...! என்று சொன்னார்.
4.அதைத்தான் உங்களிடமும்  இப்போது நான் சொல்வது.

ஆகையினால் உங்கள் உயிரை மதித்து உங்கள் உயிரை ஈசனாக எண்ணி உங்கள் உயிரைக் குருவாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் இந்தச் சொல்லைச் சொல்லுங்கள்.

அப்படிச் சொல்லும் போது உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றி விண்ணிலே துருவச் நட்சத்திரமாகவும் சபதரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்கள் ஈர்ப்புக்குள் (உயிருக்குள்) வரும்.

ஆகவே ஓ...ம் ஈஸ்வரா குருதேவா...! என்பது மந்திரச் சொல் அல்ல.
1.உயிருடன்... ஈசனுடன்... நம் குருவுடன்..
2.என்றுமே எப்பொழுதுமே ஒன்றி வாழும் நிலை தான் அது.