ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2018

சமமான நிலை என்றால் என்ன...?


கேள்வி:-
சமமான நிலை என்றால் என்ன...?

பதில்:-
வாலி என்பது விஷம். விஷத்துடன் நாம் சண்டை போட முடியாது. போடவும் கூடாது. அதனால் தான் இராமன் மறைந்திருந்து அவனைத் தாக்கினான். 

அதாவது சுக்ரீவன் தான் வாலியுடன் சண்டை போட்டான். இராமன் மறைந்திருந்து வேடிக்கை பார்த்தான். அது போல நாம் விஷமான எந்த இயக்கம் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முன்னாடி அனுப்ப வேண்டும், நாம் அதன் மறைவில் இருக்க வேண்டும். 

இன்னும் சொல்லப் போனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நஞ்சை என்ன செய்கிறது.என்று நன்றாக வேடிக்கை பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் சமப்படுத்தும் நிலை என்பது. 

நாம் சண்டைக்குப் போனால் நாம் தான் வேடிக்கைப் பொருளாக இருப்போம். நம் சம நிலை முழுவதும் போய்விடும். இது எல்லாக் குணங்களுக்கும் பொருந்தும். அடுத்தவர்கள் செய்யும் தவறுக்கும் பொருந்தும். 

சரியாகச் சொன்னால் நம்மை அறியாது இயக்கும் எந்தத் தீமைகளும் நாம் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை. 

எது நடந்ததோ நன்றாக அது நடந்தது. எது நடக்கப் போகின்றதோ அதுவும் நன்றாகவே ந்டக்கும் என்ற இந்தச் சிந்தனை தான் வேண்டும்..? 

இல்லையே...! அது எப்படி..? சும்மா பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி..? என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது....! எனக்குப் பிடிக்காது..! பதிலுக்கு நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று இந்த மாதிரி எந்தக் கணக்கைக் கூட்டினாலும் மன அமைதி சுத்தமாகப் போய்விடும்.

நமக்கு முன்னாடி வாழ்ந்தவர்கள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் யாரும் இன்று இல்லை. நாமும் இருக்கப் போவதில்லை. யாரும் சாதிக்காததை நாம் மட்டும் எப்படிச் சாதிக்க முடியும். 

நம் உயிராத்மாவை ஒளியாக்கும் உணர்வு முன்னாடி இருந்தால் நாம் நம் வேலையைச் சரியாகச் செய்வோம். நம் உயிராத்மா ஒளியாக வேண்டும் என்றால் நாம் பார்க்கும் அனைத்தையும் நல்லதாகத்தான் பார்க்க வேண்டும். 

அப்படி நல்லதாகப் பார்க்கும் நிலைக்குத்தான் மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் சொல்கிறோம். அதை முன்னாடி அனுப்பச் சொல்கிறோம். அதன் பினனாடி நாம் சென்றால் நாம் எடுக்கும் நல்ல உணர்வவே நமக்குப் பெரிய பாதுகாப்புக் கவசமாக இருக்கும். 

நமக்கு வேண்டியது பாதுகாப்புக் கவசம் மற்றவரைத் தாக்கு ஆயுதம் இல்லை. நம் கவசம் வலுவாக இருந்தால் எந்தத் தீமையும் நமக்குள் வராது. இது தான் என்னுடைய அனுபவம்...!