ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2018

ஈஸ்வரபட்டர் சொன்னது – நல் மூச்சு நல் மனது என்பது என்ன..?


நல் மனதைப் பெறுங்கள்… நல் மூச்சையே விடுங்கள்…! என்பதல்லாம் அந்த நிலையில் உள்ள பூக்களின் நறுமணங்களையும் மற்ற நறுமணங்கள் கொண்ட பொருள்களளையெல்லாம் தேடுகின்றீர்கள். ஆனால் அந்த நிலையிலிருந்து வருவதல்ல நல்ல மூச்சு என்பது

நல் மூச்சு என்பதன் பொருளே உங்கள் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலிருந்தும் வருவது தான். உங்கள் மன நிலை மகிழ்ச்சியாக உள்ள நாளில் அந்த இடத்தில் உள்ள அசுத்தமான காற்று உங்களை வந்து அண்டாது. அந்த நிலையில் உங்கள் சுவாச நிலையும் அந்தத் தீமையான மணத்தை ஏற்றுக் கொள்ளாது.

ஆனால் உங்கள் மனதிலும் சுவாச நிலையிலும் சோர்வு வந்துவிட்டால் உங்கள் சுவாச நிலைக்கு எந்த நறுமணமும் வராது.

நல்ல மூச்சை விடுங்கள்… நல் சுவாசமே எடுங்கள்…! என்பதெல்லாம் உங்கள் மன நிலையில் உள்ள எண்ண அலைகளில் உங்கள் சுவாசத்தின் அலைகள் எல்லாம் நல்ல அலைகளாகவே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

நல் மனத்தில் உள்ள தன்மையில் உங்கள் உடலில் உள்ள சிறு வியாதியும் பெரு வியாதியும் உங்கள் மனதிற்குப் பாரமாகத் தெரிந்திடாது.
1.தன் நிலையில் சந்தோஷமாக உள்ளவனுக்கு
2.நல் மூச்சை விட்டு நல்ல சுவாசத்தை இழுப்பவனுக்கு வியாதியும் பிணிகளும் அண்டாது.
3.தன் நிலையில் சோர்வு உள்ளவனுக்குத்தான் வியாதியும் பிணியும் வந்து அணுகும்.

வியாதி வந்தவன் ஜோசியக்காரனிடம் செல்கிறான். அவன் சொல்கிறான் அஷ்டமத்தில் சனி இருக்கிறது என்று. அஷ்டமத்தில் சனி ஏழரை நாட்டான் சனி என்பதெல்லாம் இந்தச் சுவாச நிலையில் மாறுபட்டவனுக்கு வந்தடைவது தான்..!

உங்கள் சுவாச நிலையை மாற்றுவதற்காகத்தான் இந்த உபதேசமே…!