ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2018

நம் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும் பூஜை...!


ஆயுத பூஜை என்றால் அதனின் அர்த்தமேஇப்பொழுது வேறுவிதமாக இருக்கின்றது

படங்களை எடுத்து வைப்பது புத்தகங்களை எடுத்து வைப்பது அரிவாள்மனையை எடுத்து வைப்பது கோடாலியை எடுத்து வைப்பது ஆட்டை அறுப்பவன் கத்தியை எடுத்து வைப்பது என்று இதற்கெல்லாம் பூஜை செய்வது. ஆட்டை அறுத்தவன் இந்தக் கத்தியை வைத்து இத்தனை ஆடுகளை நான் அறுத்தேன் அதனால் எனக்கு வருமானம் வந்தது என்று அவனும்கத்தியை வைத்து ஆயுத பூஜை செய்கின்றான்.

பார்க்கலாம் நீங்கள்...,” ஆடு அறுக்கும் கடையில் அல்லது வீட்டில் கத்தியை வைத்துப் பூஜை செய்கின்றான். கத்தியால் ஆட்டை அறுத்து அதைக் கொன்று விற்று நான் சாப்பிட்டேன். அதனால் இது நல்ல முறையில் இருந்தால் இன்னும் எத்தனையோ ஆட்டை இதை வைத்து அறுப்பேன் என்று அவனும் இப்படிப் பூஜை செய்கின்றான்.

ஆயுத பூஜை அன்று இந்த வேடிக்கையெல்லாம் பார்க்கலாம். அதே சமயத்தில் நான் ஏமாற்றி எல்லாவற்றையும் விற்றேன்  என்று தராசுகளையும் மற்றவைகளையும் வைத்துப் பூஜை செய்வார்கள்

தன்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும் கொடுத்த காசு திரும்ப வரவேண்டும் என்று எண்ணினால் பரவாயில்லை.

ஆனால் அப்படி எண்ணுவதில்லை. தராசைச் சுத்தப்படுத்தி வைத்துவிட்டால் போதும். எத்தனையோ வகையில் ஒருவருக்கு அளவுகோலைக் குறைத்துக் கொடுத்திருப்பேன். இப்படியெல்லாம் எனக்கு நீ சம்பாரித்துக் கொடுத்தாய் சரஸ்வதி பூஜை என்று சொல்லிவிட்டுதராசை வைத்துப் பூஜை செய்வார்கள்.

ஏனென்றால் திருடுவதற்கு அந்த ஞானத்தைக் கொடுத்தாய் என்று சொல்லி அந்தப் பூஜை செய்கிறவர்கள் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள். நன்றாக யோசனை செய்து பாருங்கள் சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை அன்று நாம் என்ன செய்கிறோம்? பெரும்பகுதியானவர்கள் இப்படித் தவறு செய்யும் நிலையாக உள்ளார்கள்.

செய்யும் தவறை நீக்குவதற்கு யாராவது எண்ணுகிறார்களா..., என்றால்இல்லை…” மனித வாழ்க்கையில் நம்மை அறியாது சேர்ந்த தீமைகளையும் தீய செயல்களையும் நாம் அறியாது செய்த தவறுகளையும் நீக்க வேண்டும் என்றுஇந்த ஞானத்தை எடுக்க வேண்டும்.

இதை நாம் கவர்ந்தோம் என்றால் வசிஷ்டர் அந்த உணர்வின் தன்மை நம் உடலாகும் பொழுது பிரம்மம். ஆக அதன் சக்தியாக அருந்ததியாக நம்மை இயக்கும். நாங்கள் நல்லதைச் செய்ய வேண்டும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். எல்லோரும் நல்லவராக வேண்டும். எங்கள் தொழில் சீராக அமைய வேண்டும். பொய் சொல்லாத நிலை வேண்டும். தவறு செய்யாத நிலைகள் வேண்டும் என்ற இந்தக் குணங்களை.., “இந்த ஆயுதத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்.

எத்தனை பேர் இந்த மாதிரிச் சுத்தப்படுத்துகின்றோம்...! யாருமே இப்படி நினைப்பதில்லை. இந்த ஆயுதத்தைச் சுத்தப்படுத்தும் நிலைக்குத்தான் ஆயுத பூஜை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். தொழிலில் என்னை அறியாது எத்தனையோ ஏமாற்றியிருப்பேன். ஏமாற்றும் நிலைகள் மாறி சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்

என் தொழில் சீராக வேண்டும். என்னிடம் பொருள் வாங்குபவர்கள் மனம் நோகக்கூடாது. மனம் நோகும்படி என் செயல் இருக்கக்கூடாது. மனம் நோகும்படி என் சொல் இருக்கக்கூடாது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கக்கூடிய வழியில் நம் எண்ணங்களை இந்த ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.எத்தனை பேர் சுத்தப்படுத்துகின்றோம்?

ஆயுத பூஜை அன்று சுண்டலை அவித்து எல்லோருக்கும் கொடுக்கத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆயுத பூஜை அன்று இப்படியெல்லாம் படைத்துப் பூஜை செய்தால் கடையில் நன்றாக வியாபாரம் ஆகும்

கடையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு சுண்டலை இனாமாகக் கொடுத்தால் கடையைத் தேடி வருவார்கள். இப்படிக் கொடுத்தால் இந்தக் கடையில் இந்தச் சரக்கு இருக்கின்றது என்று தேடி வருவார்கள் என்று இது விளம்பரப்படுத்துவதற்காகச் செய்கின்றார்கள்.

படிக்கும் குழந்தைகள் என்ன செய்கின்றார்கள்? கல்வியில் ஞானம் பெறவேண்டும் என்ற உணர்வின் கூர்மையை அது தூய்மைப்படுத்துகின்றார்களா...? தூய்மைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களா...?

தாய் தந்தையரின் அருள் நாங்கள் பெறவேண்டும் அருள் ஞானம் பெறவேண்டும் அருள் சக்தி பெறவேண்டும் இருளை அகற்றும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். மகரிஷிகள் உபதேசித்த உணர்வுகள் நாங்கள் நடக்க வேண்டும் அவர்கள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்த அந்த ஒளியான நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்றுஇப்படி நுகர்ந்தால்... மனத் தூய்மை ஆகின்றது.

நம் உடலிலுள்ள அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றியமைக்கின்றோம். அந்த ஞானத்தின் வழி நமக்குள் சேர்க்கும் பொழுது எதை நுகர்கின்றோமோ அது...” என்று பிரம்மமாகின்றது. இந்த உணர்வுகளை நாம் கவர்ந்து கொள்கின்றோம்

கவர்ந்து கொண்ட உணர்வுகளை நுகரப்படும் பொழுது உடலாகின்றது. அருந்ததி தன்னுடன் இணைந்து அந்தச் சக்தியாக நமக்குள் வேலை செய்கின்றது. ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திங்கள் இதுதான்.