ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2018

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைச் சுவாசிக்க வேண்டிய சரியான நேரம்

ஞானிகள் கொடுத்த மகாபாரதம் இராமாயாணம் இதில் எல்லாம் அவ்வளவு மூலக்கூறுகள் இருக்கின்றது.

அதை நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாதபடி காலம் காலமாக மாற்றி அமைத்து விட்டார்கள். அகஸ்தியரைப் பற்றியும் அவர் துருவ நட்சத்திரமாக ஆனதையும் சுத்தமாகவே மறைத்துவிட்டார்கள்.

உண்மையைப் பொய் என்றும் பொய்யை உண்மை என்று மாற்றுகின்றனர். நாம் உண்மையைச் சொன்னால் பொய் என்கின்றனர். பொய்யைச் சொன்னால் மெய் என்கின்றனர்.

பொய் தான் மெய் என்று ஆகி அந்தளவிற்கு மனிதனின் உணர்வில் வளர்ச்சி அடைந்து விட்டது.

மனித உருவை உருவாக்கிய உயிரான ஈசனை நாம் மதித்தல் வேண்டும். அந்த மதிக்கும் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை சுவாசித்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசித்து நம் உடலிலே கலக்கச் செய்ய வேண்டும்.

எத்தனை தீமைகள் எத்தனை வேதனைகள் இருந்தாலும் சரி எவ்வளவு நேரம் அவைகள் இருந்தாலும் சரி “கொஞ்ச நேரமாவது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் கலந்து கொண்டே வாருங்கள்.

என்னென்னமோ சொல்கின்றார்கள். எனக்கு அதெல்லாம் தெரியவில்லை…! ஒன்றும் தெரியாது.
1.என்னால் என் மனைதை நிலை நிறுத்த முடியவில்லை…!
2.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்று
3.ஒன்றையும் நீங்கள் நிறுத்த வேண்டாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இதை எடுத்துக் கொண்டே வந்தால் போதும்.
1.எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் கலக்க வேண்டும் என்று
3.அதைச் சர்குலேசன் (CIRCULATION) செய்து சுத்தம் செய்து கொண்டு வந்தால் போதும்.

உங்கள் உடலில் எப்போதெல்லாம் குறைபாடுகள் வருகின்றதோ மற்றவர்கள்  குறைகளைப்பற்றிச் சிந்தித்து மீண்டும் குறைகளைப் பேசுகின்றீர்களோ அந்த மாதிரி நேரங்களில் எல்லாம்
1.அந்தக் குறைகள் வராதபடி உடலுக்குள் வளராதபடி தடுக்க
2.அந்தத் உங்களுக்குள் கலக்கச் செய்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் உங்கள் உடலில் அறியாது சேரும் தீமைகளை நீங்களே அகற்றிடும் வலிமை பெறுகின்றீர்கள்.

துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் ஏக்க உணர்வுடன் வேண்டி அந்த உணர்வைப் பெருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் சீரான அமைப்பை உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

தீமை செய்யும் உணர்வுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலக்கச் செய்து அவைகளை நன்மை பயக்கும் சக்தியாக நமக்குள் மாற்றச் செய்வதே துருவ தியானத்தின் சிறப்பு.

அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப உங்களுக்குள் இவ்வளவு நேரம் உபதேசிப்பது,