ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! எனக்குள் நீ ஈசனாக இருக்கின்றாய். உன்னை என்றுமே மறவாத
நிலைகள் நான் பெறவேண்டும். உன்னை மகிழச் செய்யும் உணர்வின் நினைவு என்னில் வர வேண்டும்.
1.மகிழ்ச்சி என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் உணர்வினை நான் நுகர்ந்து
2.ஈசனான உன்னை நான் எப்போதுமே மகிழச் செய்யும் தன்மை பெற வேண்டும்
3.உன்னால் அமைக்கப்பட்ட என் உடலான இந்த உடலையும் மகிழச் செய்யும் அந்த உணர்வின்
சக்தி எனக்குள் வர வேண்டும்.
ஆறாவது அறிவை உருவாக்கிய நீ என்னை அறிவதும் உலகை அறிவதும் உன்னை அறிதலும் என்ற
உணர்வினை எனக்கு ஊட்டினாய்.
1.எனக்குள் இருந்தே நீ என்னை இயக்குகிறாய்.
2.நீயே நான் என்றும் நானே நீ என்றும்
3.எனக்குள் அந்த அருள் உணர்வின் தன்மையை ஊட்டு.
நீ ஒளியாக இருக்கின்றாய். அனைத்தும் அறியச் செய்கின்றாய். ஆறாவது அறிவு கொண்டு
அனைத்தும் அறிந்திடும் நிலை கொண்டு தீமை என்ற நிலைகளை அகற்றிடும் அருள் சக்தி என்னைப்
பெறச் செய்வாய் என்று இப்படி நம் உயிரிடம் வேண்டிடல் வேண்டும்.
1.நீ எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றாய்.
2.நீயே என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றாய்.
3.நீயே என்னை இயக்கச் செய்து கொண்டு இருக்கின்றாய்.
4.ஆகவே எப்போதுமே உன் நினைவு எனக்குள் வர வேண்டும்.
5.என்றுமே உன்னை மறவாத நிலையாக அந்த அருள் ஞானம் நான் பெற வேண்டும்.
நான் இல்லை… நீ இல்லா இவ்வுலகில்… “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய்
ஈஸ்வரா…! அதாவது உயிரான நீ இல்லை என்றால் இந்த உடலான உலகில் நான் இருக்க முடியாது.
அதே சமயத்தில் புழுவிலிருந்து மனிதனாக வருகின்ற வரையிலும் எத்தனையோ கோடி இன்னல்களிலிருந்து
மீள வேண்டும் என்று நான் நுகர்ந்ததை எனக்குள் நீ உருவாக்கினாய்.
1.இன்னலிலிருந்து நீக்கிடும்… நீக்கிடும்… நீக்கிடும்… நீக்கிடும்… உணர்வின்
தன்மை எனக்குள் உருவாக்கினாய்.
2.இன்னலை நீக்கிடும் அருள் உணர்வு பெற்று அதற்குத்தக்க என் (மனித) உடலை நீ அமைத்தாய்.
3.தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகளை எனக்குள் அறிவாக இயக்கினாய்.
4.தீமை என்று உணர்ந்து தீமையை அகற்றும் அருள் சக்தி எனக்குள் கொடுத்தாய்.
5.அதன் வழியில் என்னை மனிதனாக உருவாக்கினாய்.
6.நான் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு
நல்ல உணர்வினைத் தெளிவாக தெரிந்திடும் அறிவாக எனக்கு ஊட்டினாய்.
6.மெய் ஞானிகளின் அருள் சக்திகளை நான் அறிந்திடும் உணர்வையும் எனக்குள் நீ தான்
இயக்குகிறாய்.
7.உன்னால் நான் அறியும் அந்த அருள் உணர்வும்
8.என்னால் நான் அறிந்துணர்ந்து
9.என் செயலாக உன் செயலாக நான் இயக்குதல் வேண்டும்.
தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் பல கோடிச் சரீரங்களிலிருந்து எடுத்து
நான் மனிதன் ஆனேன். இனிமேல் என்னை எதிர் நோக்கும் தீமையிலிருந்து விடுபடும் நிலைகளை
எனக்குள் நினைவில் கொண்டு என்னை நீ தான் இயக்க வேண்டும்.
ஏனென்றால் “நான் அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்…!” என்று வெறும் பாடலைப் பாடி
விட்டுப் பல நினைவில் நான் இருந்து கொண்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் நீ தான்
என்னைப் பரிபக்குவ நிலைப்படுத்த வேண்டும்.
நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதே சமயத்தில் எதிர்பாராத ஒரு தீமையான
உணர்வை நுகரப்படும் போது அந்த நன்மையை மறந்து தீமையின் உணர்வே நமக்குள் வளரத் தொடங்குகின்றது.
ஆகவே உன் நினைவு எனக்குள் இருக்கும் போது அத்தகைய தீமைகளை அகற்றிடும் அருள்
சக்தியை நீ தர வேண்டும். பேரருள் பெறும் அந்த அருள் உணர்வை எனக்குள் நீ வளரக்க வேண்டும்
ஈஸ்வரா…!
எதை எதையோ பெற வேண்டும் என்ற “அந்த ஆசை” எனக்குள் வரக் கூடாது. எப்போதுமே உன்
அரவணைப்பில் நான் இருக்க வேண்டும்.
1.நீ எப்படி ஒளியாக இருந்து அனைத்தையும் எனக்குள் தெரிவிக்கின்றாயோ
2.பகைமை தீமை என்ற நிலையை உணர்த்துகின்றாயோ இதைப்போல
3.நான் நுகரும் ஆசையில் தீமை என்ற உணர்வுகள் வராது
4.நன்மை என்ற உணர்வுகளை அறிந்திடும் அந்த ஆசையை
5.அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும் என்ற ஆசையை நீ எனக்குள் உருவாக்க வேண்டும்
நீ என்னை உயிராக நின்று இயக்குகின்றாய் ஒளியாக நின்று இயக்குகின்றாய். அந்த
ஆசை தான் என்னுள் வேண்டும். இந்த உடலின் ஆசை என்னுள்ளே என்றும் வளர்ந்திடக் கூடாது