ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2018

யானையின் தலையை விநாயகருக்குப் பொருத்தியதன் காரணம் என்ன…?

விஞ்ஞானி தன் எண்ணத்தின் வலு கொண்டு விமானத்தைப் பறக்கச் செய்தான். ராக்கெட்டையும் பறக்கச் செய்தான். எந்தத் திசையிலே இயக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ இங்கிருந்து திருப்புகின்றான்,

பெரிய கல்லை நம்மால் தூக்க முடியவில்லை. ஆனால்
1.பல ஆயிரம் டன் எடை கொண்ட ராக்கெட்டைத் தன் எண்ணத்தின் வலு கொண்டு
2.விண்ணை நோக்கித் தூக்கிச் செல்லும் நிலைகளில் உருவாக்கினான் விஞ்ஞானி.

இதைப் போல மனிதனின் எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்ற நிலையைக் காட்டி அந்த எண்ணத்தின் வலிமை கொண்டு நாம் எப்படிச் செய்வது…? என்ற நிலையை நமக்கு உணர்த்துவதற்குத்தான் யானையின் தலையினை மனிதனின் உடலிலே பொருத்தச் செய்து விநாயகரைக் காட்டினார்கள் ஞானிகள்.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் வலுவான நிலைகளை நுகர்ந்து யானையாக உருவாக்குகின்றது உயிர். யானையாக இருக்கும்போது உடல் வலுவால் எது வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கும் எண்ண வலுவைப் பெறுகின்றது.

இவ்வாறு தப்பிக்கும் எண்ண வலுவைப் பெறும் பொழுது அந்த உணர்வின் தன்மை உடலில் விளைகின்றது. இவ்வாறு உடலில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் பெறுகின்றது.

உயிர் தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகஇந்த மனித உடலைத் தந்தது…!” ஏனென்றால் மிருகங்களிலே யானை மிக வலிமை கொண்டது போல மனிதனாகப் பிறந்தவன் “எண்ணத்தில் மிக மிக வலிமை கொண்டவன்…” என்று நாமெல்லாம் புரிந்து கொள்ள கோவில்களில் விநாயகரைச் சிலையாக வைத்துக் காட்டினார்கள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப ஆரம்பத்தில் புல்லைத் தின்றோம் மண்ணைத் தின்றோம் தாவர இனத்தை உணவாக உட்கொண்டோம். இன்று நாம் அறுசுவையாகப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் என்ற உண்மையை விநாயகரைப் பார்த்தவுடன் தனக்குள் உணரும்படி செய்கின்றார்கள்,

 அறுசுவையாகப் படைத்து உணவைச் சாப்பிடுவது போல இந்த மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சுவை கெட்ட உணர்வுகளை நீக்கி சுவைமிக்க உணர்வாகத் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

1.மிருகங்களிலே யானை மிக வலிமை கொண்டது போல
2.மனிதனாகப் பிறந்தவன் எண்ணத்தில் மிக மிக வலிமை கொண்டவன்.
3.தன் எண்ணத்தின் ஆற்றலை விண்ணை நோக்கி ஏகி
4.அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அண்டத்தையே ஆட்டிப் படைக்கும் சக்தியாகவும்
5.தன் உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் மகா ஞானிகள்.
4.அத்தகைய ஆற்றல் பெற்ற அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.

மனிதனாக வாழும் இந்த வாழ்க்கையில் வேதனை கோபம் ஆத்திரம், சலிப்பு சோர்வு போன்ற உணர்வுகளை மாற்றியமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணி அது எங்கள் உடலுக்குள் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று நம் உடலிற்குள் சேர்க்கச் செய்தார்கள் ஞானிகள்.

ஆகவே மனிதனானபின் எதையும் உருவாக்கி இருளை நீக்கி ஒளி என்ற உருவை உருவாக்கும் எண்ணத்தின் வலிமை கொண்டவர்கள் என்பதை நாம் உணர்ந்து உயிரோடு ஒன்றிய ஒளிச் சரீரமாகப் பெற்று அகஸ்தியன் சென்ற எல்லையை அடைவோம்.