ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2018

நம் உடலிற்குள் இருக்கும் இயக்கச் சக்தி எப்பொழுதெல்லாம் குறைகிறது...?


உதாரணமாக பெரும் கொண்ட மிளகாயைப் பார்க்கலாம். ஆனால் “செக்கச்செவேல்...!” என்று இருக்கும். அதற்குள் விஷத்தின் தன்மை கம்மியாக இருக்கும். ஆனால் அந்த மிளகாயில் காரம் இருக்காது.

அதே சமயம் இன்னொரு மிளகாயை எடுத்துக் கொண்டால் வாயில் வைத்தவுடனே “சுரீர்...!” என்று காரம் உடல் முழுவதற்கும் ஊடுருவும்.  ஆனால் அதில் விஷம் அதிகமாக இருக்கும்.
1.விஷம் அதிகமாக இருப்பதால் அந்த மணத்தை வேகமாகத் தூக்கிச் சென்று
2.அதை இயக்கவல்ல ஆற்றலாகச் செயல்படுத்துகின்றது.

இதைப்போல தான் ஒவ்வொன்றிலேயும் இருக்கும் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப அதனின் ஆற்றலை நாம் காணலாம்.

சாந்த குணத்தை எண்ணுகின்றோம் என்றால் அதில் விஷம் கம்மி. நாம் கோபமான நிலைகளை எண்ணினால் அதிலே விஷத்தின் ஆற்றல் அதிகம். பயத்தின் நிலைகள் அதிகமாக எடுக்கின்றோம். அதிலும் விஷம் ஜாஸ்தி.

அதை அதிகமாக எண்ணிச் சுவாசிக்கும் போது இந்த விஷத்தின் தன்மை நம் உடலை வேகமாக இயக்கச் செய்து நம்மை ஆபத்தில் இருந்து நம்மை காக்கவும் செய்கின்றது. ஆனால்
1.ஆபத்திலிருந்து காத்தாலும் நம் உடலின் சக்தியை அதிகமாக இயக்கப் போகும் போது
2.நாம் எடுக்கும் இந்தக் குணத்தை ஈர்க்கும் நிலைகள்
3.நம் உடலில் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி அது பலவீனமடைகின்றது.

உதாரணமாக ஒரு மோட்டாரில் மேக்னட் இருக்கின்றது. மோட்டார் சுழன்று ஒரு ரைஸ் மில்லிலே அது இயக்குகின்றது. நெல்லை அரைக்கும் பொழுது அதிலே நெல்லை அதிகமாகக் கொட்டி விட்டால் அரைக்கும் திறன் குறைந்து “மோட்டார் சூடாகிவிடுகின்றது...!”
1.ஆக அது சூடாகும் போது அதில் (WINDING) இருக்கக்கூடிய காந்த சக்தி குறைகின்றது.
2.இப்படி மோட்டாரில் இருக்கும் காந்தம் குறைந்து விட்டால்
3.அடுத்து சிறிதளவு நெல்லைப் போட்டாலும் அதனின் அரைக்கும் திறன் குறைகின்றது.
4.மோட்டார் வலு குறைந்துவிட்டது (WEAK) என்று சொல்கிறோம்.

இதைப்போல தான் விஷத்தை முறியடிக்கும் உணர்வின் சத்து நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக இருந்தாலும் அடிக்கடி நாம் எடுக்கும் கோபமும் வெறுப்பும் பயமும் வேதனையும் ஆத்திரமும் அதிகமாகி விட்டால் நமக்குள் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி குறைந்து விடுகின்றது.

அதனால் நாம் சுவாசிக்கும் உணர்விற்குள் வரும் விஷத்தின் சத்தை வடிக்கும் திறன் இழக்கப்பட்டு நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் கோபம் பயம் வேதனை என்ற குணங்களின் “விஷம்” கலந்து விடுகின்றது.

சத்தான பாலாக நாம் குடித்தாலும் சத்தான சுவையான ஆகாரம் என்று சாப்பிட்டாலும் அதற்குள் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் அந்த விஷம் அதிகமாகி அது உட்கொள்பவரை மாய்த்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணம் அனைத்தும் காந்தப்புலனின் தன்மை குறைக்கப்படும் போது இந்த விஷத்தை நீக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நாம் சுவாசித்த உணர்வுக்குள் வரும் விஷத்தைக் கழிக்க முடியாததால் நம்மை மனிதனாக இயக்கச் செய்யும் அறிந்துணர்ந்து செயல்படும் நற்குணங்களின் ஆற்றல் அனைத்தும் குறைந்து விடுகின்றது.

ஆரம்ப நிலைகளிலே மிருகங்கள் எப்படி விஷத்தின் தன்மையைத் தன் உடலாக மாற்றிக் கொண்டதோ அதைப் போன்றே நல்ல குணங்கள் அனைத்திற்குள்ளும் விஷம் புகுந்து அதிலே ஆக்கிரமித்துக் கொள்ளும்.

இப்படித்தான் நம் நல்ல குணங்கள் பாழாகின்றது. நல்ல குணங்களால் உருவான நல்ல உடலிலும் நோயாகின்றது. பின் குறுகிய காலத்திலேயே மடிந்து பின் மனிதனல்லாத உடலுக்குள் தான் சென்று பிறக்க நேரும்.

இதைப் போன்ற நிலைகளைத் தடுப்பதற்காகத் தான்
1.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று
2.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிய
3.அந்த மகா ஞானிகளின் உணர்வை உங்களைப் பெறச் செய்கின்றோம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டே வந்தால் நம் நல்ல குணங்களுக்கு அது ஊட்டச் சக்தியாகி விஷத்தைக் கழிக்கும் வீரிய சக்தியாகப் பெறுகின்றது.

அதாவது நாம் சுவாசித்த கோபம் பயம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களை இயக்கும்
1.விஷத்தின் சக்தியை நாம் அடக்குகின்றோம்.
2.அடக்கி நல்ல குணங்களை இயக்கும் வீரிய சக்தியாக மாற்றுகின்றோம். அவ்வளவு தான்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய விஷம் வந்தாலும் அதை உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையில் உள்ளது.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.