ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2018

தாய் தந்தையருக்குத் தன் பிள்ளைகள் மீது வெறுப்பு எதனால் வருகின்றது…? வெறுப்பை நீக்க எந்த முறையைக் கையாள வேண்டும்…?


நாம் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தான் தாய் தந்தையர்கள் அனு தினமும் வளர்ப்பார்கள். அதே சமயத்தில் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஏதோ காரணத்திற்காகத் தாய் தந்தையர் வெறுக்கிறார்கள் என்றால்
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வு தான் அவர்களை வெறுக்கச் செய்கின்றதே தவிர
2.தாய் தந்தையர்கள் உண்மையிலேயே நம்மை வெறுப்பதில்லை.
3.நாம் பிறருடன் கலந்திருப்போம். நல்லவர் என்று பழகி இருப்போம்.
4.ஆனால் அப்படி நல்லவர் என்று பழகியவர் உடலிலுள்ள தீய ஆவிகளில் ஒன்றின் உணர்வலைகள் நம் மீது பட்டிருந்தால்
5.அந்த மணமே நமக்கு முன்னாடி நின்றுவிடும்.

அந்தத் தீமையான மணம் முன்னாடி இருக்கும் போது நமது தாய் தந்தையர் நம்மைப் பாசமாகப் பார்க்கும் போது நம்மை அறியாமலேயே வெறுப்பான உணர்வுகளை அங்கே தோற்றுவித்துவிடும்.

நம்மைக் காணும் போது வெறுப்பு வரும். ஆனால் நமது தாய் தந்தையர்கள் வேண்டும் என்றே நம்மை வெறுக்கவே மாட்டார்கள். சந்தர்ப்பவசத்தால் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்து விடுகின்றது.

இதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு வாரத்தில் ஒரு நாளாவது உங்கள் வீட்டிலே கூட்டுக் குடும்பத் தியானம் இருந்து அம்மா அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தாய் தந்தையர்கள் எங்கள் குழந்தைகள் மகரிஷியின் அருள் சக்தி  பெற்று உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று ஆசி வழங்க வேண்டும். அடுத்து…
1.நீங்கள் எந்தெந்த உயர்வான எண்ணங்களை எண்ணுகின்றீர்களோ
2.அதையெல்லாம் உங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று சொல்லாகச் சொல்லி
3.அந்த நல்ல வாக்குகளையெல்லாம் கொடுத்துப் பழக வேண்டும்.
4.அதே போல் குழந்தைகளும் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்து
5.நல்ல வாக்குகளை ஆசீர்வாதமாகத் தினசரி வாங்க வேண்டும்.

வீட்டில் குடும்பத்திற்குள் பல எண்ணங்கள் இருந்தாலும் தாய் தந்தையர்களை வணங்கும் முறைக்கு இப்படிப் பிள்ளைகள் அனைவரும் வந்து விட்டால்
1.வெறுப்பு விருப்பு என்ற நிலைகள் அங்கே கண்டிப்பாகக் குறையும்.
2.குடும்ப ஒற்றுமை வளரும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் என்றும் நிலைத்திருக்கும்.