நம் குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள் என்றால் அவர்களைக்
குல தெய்வங்களாக நாம் எண்ண வேண்டும். அவர்கள் உயிராத்மா
1.இனிப் பிறவா நிலை பெற வேண்டும் ஒளி நிலை பெற வேண்டும் என்று
2.அவர்களை உந்தி விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.
முதலில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் உடலில் சக்தியைக்
கூட்டி வலுவாக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவது நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த
உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்திற்குள் எண்ணி முன்னாடி தள்ள வேண்டும்.
இப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் சீக்கிரம் தள்ளி விட்டு விடலாம் அப்பொழுது
அவர்கள் பிறவா நிலை பெற்றுச் சூட்சம சரீரமாக ஒளி நிலை பெறுவார்கள்.
இது எப்படி சாத்தியம் என்று எண்ணாதீர்கள்…! ஏனென்றால் விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
1.ரிமோட் கண்ட்ரோல் (REMOTE) வைத்து உங்கள் டி.வி.யை இயக்குகின்றீர்கள் (இதைக்
காட்டிலும் இன்று எத்தனையோ வந்துவிட்டது…!)
2.அதே ரிமோட் கண்ட்ரோலினுடைய பவரை வைத்து மேலே இருக்கக்கூடிய விமானத்தை இயக்குகிறான்.
3.அதே மாதிரி பல இலட்சம் மைல்களுக்கு அப்பால் சூரியனைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்ற
மற்ற மண்டலங்களுக்கும் இதே ரிமோட் கண்ட்ரோல் வைத்து மனிதன் இன்று இயக்குகின்றானா இல்லையா…?
அதே மாதிரி நம் எண்ணத்தை வலுக் கூட்டிக் கொண்டு எத்தனையோ ஒளி ஆண்டுகளுக்கு
(LIGHT YEAR) அப்பால் இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும்
நாம் ஒவ்வொருவரும் தொடர்பு கொள்ள முடியும். “நம் முன்னோர்களின் உயிரான்மாக்களையும்
அங்கே இணைக்க முடியும்…!”
அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன பிற்பாடு அவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு
அவன் உணர்வுடன் அதே ஈர்ப்புடன் சென்றவர்கள் வட துருவத்தில் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி
இன்றைக்கும் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டு இருக்கின்றார்கள்.
பூமி சுற்றுகிறது என்றால் ஒவ்வொரு காலத்திற்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தினுடைய
நிலைகளைப் பார்க்கலாம்.
1.பிரபஞ்சத்திற்கும் நம் பூமியின் நிலைகளுக்கும் மாறுபட்டு என்றுமெ அழியாமல்
வாழ்ந்து கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரதின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கின்ற சப்தரிஷி மண்டலத்திற்குள்
போய்ச் சேர்வதா……!
3.இல்லாமல் போனால் எனக்கு இப்படி எல்லாம் செய்தானே அவனை அப்படியே விடுவதா…?
என்று அவன் உடலில் புகுந்து விஷத்தைச் சேர்த்து அடுத்துத் தேளாகவோ பாம்பாகவோ பிறக்கிறதா…?
என்று
4.நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ராஜ யோகம் என்கிறார்கள்… குண்டலினி யோகம் என்கிறார்கள்... மூலாதாரத்தைத் தட்டி
எழுப்ப வேண்டும்..! அது… இது…! என்று என்னென்னமோ சொல்கின்றார்கள்.
மெய் ஞானியின் உணர்வுகளைப் பெற வேண்டும். அந்த மெய் வழியில் செல்ல வேண்டும்.
சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இதைத்தான்
சொன்னார்.
1.நாம் எதைப் பற்றுடன் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் நினைவலைகள் வரும் போது “கூர்மை…!”
2.அந்த உணர்வுகளை நம் உடலிலே சேர்க்கும் போது “அவதாரம்…!”
3.ஆகவே அவதார புருஷர்களாகத்தான் ஞானிகள் எல்லாம் அங்கே போனார்கள்.
4.அவர்கள் உணர்வைப் பெற வேண்டும் என்ற கூர்மையான எண்ணத்தைச் செலுத்தினால் நாமும்
அவர்களைப் போன்றே அவதாரமாகப் போகிறோம்.
மனிதன் எண்ணக்கூடிய நிலையில் தான் இது எல்லாமே இருக்கின்றது…!