
நாட்டுக்கு நாடு போர் செய்யும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியது
இன்றைய
நிலையில் பூமியில் வாழும் நாம்
மிகவும் சிரமமான காலகட்ட்த்தில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.
அதே சமயம் மனிதனுடைய
எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு மனித உடலில் விளைய வைத்த இந்த
உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் மீள வேண்டும்.
நாம் அனைவரும்
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப்
பெற்று அவர்கள் அருள் வட்டத்தில் இணைந்து நம்மையறியாது
சேர்ந்த தீமைகளை நீக்கி நம்முடைய
மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக உருவாக வேண்டும்.
1.நாம்
எண்ணும் அந்த உயர்ந்த உணர்வுகள் தீமையை அடக்கும்
சக்தியாகவும்
2.நம்முடைய
உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை
வளர்த்திடும் நிலையாகவும்
3.உலக மக்களுக்கு நன்மை பயக்கும் சொல்லாகவும் செயலாகவும் அது வளர்ந்திட வேண்டும்.
1.அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு பேரன்பு கொண்டு ஒருவருக்கொருவர்
கலந்து உறவாடினார்களோ
2.அதே
போன்று நாம் வெளியிடும் அனைத்து உணர்வுகளும் பேரன்பு
கொண்ட உணர்வாகப் படர வேண்டும்.
நமக்குள் ஆகாத
உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்து
அதைப் பகைமையற்றதாக ஆக்க வேண்டும்.
நாம் தனித்த
சரீரங்களாக இருந்தாலும் சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும் உணர்வாக
1.நாம்
இடும் அத்தகைய மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன்
வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப்
பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து மக்களும் “மெய் வழி பெறும் நிலைகள் ஏற்படும்…”
நாம் எந்தத்
தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ… இந்த
மனித உடலுக்குள் எண்ணிய அருள் மகரிஷிகளின் உணர்வலைகள் சூரியனின்
காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து…
1.நாம்
செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
2.நஞ்சு
கொண்ட தாவர இனமே வளராது… மனிதனை வீழ்த்திடும் நிலையைத்
தடுக்கும்.
3.நீங்கள்
இடும் அந்த மூச்சலைகள் மூலம் தாவரங்களும் சத்தான நிலைகளில் வளரட்டும்
4.அதை
உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமையட்டும்.
5.கேட்டுணர்ந்த
உணர்வுகள் இங்கே படர்ந்து மெய் உலகைப் படைக்கும் உணர்வாக உங்களுக்குள்
விளையட்டும்
6.நீங்கள்
இடும் மூச்சலைகள் உலகில் உள்ள பகைமைகளை
நீக்கி மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலரட்டும்.
7.எல்லாம்
வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் உங்கள் அனைவரின்
எண்ணங்களும் செல்லட்டும்…!
அதன் வழிகளிலே
தீமையை நீக்கி நல்வினைகளைச் சேர்த்து… நல் வினைக்கு நாயகனாக மெய்ப்பொருள்
கண்டுணர்ந்த அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் உலக மக்கள்
அனைவரும் இணைவோம்.
என்றும்
நிலையான பெரு வீடு பெரு நிலை என்ற நிலையடைந்து… என்றும் மங்காத
ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.
நமது குருநாதர்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற ஆசையினால்தான் இதை உபதேசிக்கின்றோம்.
நம் குருநாதர்
காண்பித்த உணர்வுகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்து
1.அதை
நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷியின் அருள்
சக்தியைப் பெற்று
2.உங்களை
அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும்
அத்தகைய நிலை அனவரும் பெற
வேண்டும் என்று பிரார்த்தித்து… அதனின் சத்தை “ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்…” என்று வேண்டிக் கொள்கிறேன்.